​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 3 March 2025

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!









வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் தனி நபர்களுக்கு உரைக்கும் வாக்குகளிலும் பல்வேறு ரகசியங்களை உரைக்கின்றார்.

அதில் தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து விட்டு பொதுவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் 

இன்னும் மனிதர்களுக்கு தெரியாத தெய்வ ரகசியங்களை இயற்கை மருத்துவ குறிப்புகள் எல்லாம் குருநாதர் வெளிப்படுத்தும் பொழுது அவை அனைவரும் அறிந்து கொள்வதற்கும் பதிவு செய்யப்படுகின்றது!

சமீபத்தில் விஷ்ணு பக்தர் ஒருவருக்கு அவருடைய புண்ணியத்தின் பலனாக காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளை உரைத்த பொழுது!! கூறிய 

நாராயண ரகசியம்!!

அப்பனே நல்விதமாக ஆசிகள் அப்பா!! இறைவன் அருளால்தான் நீ செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்பேன் அப்பனே. 

இனிமேலும் நாராயணன் உன்னை நகர்த்துவான் (இயக்குவார்) என்பேன்
அப்பனே!! நாராயணன் அருள் பரிபூரணம்!!


அப்பனே நாராயணன் அருள்  பரிபூரணமாக இருக்கின்றது !!!

அப்பனே நிச்சயம் இவை என்று அறிய அறிய நிச்சயம் ஏழுமலையான் உன்னை அழைப்பான் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது அப்பனே சந்திரனின் அப்பனே எவை என்று கூட இன்னும் அதிகரிக்கும் பொழுது.. இன்னும் அப்பனே மனநிலைகள் அப்பனே பின் எவ்வாறு என்பது கூட மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

அப்பனே பின் நிச்சயம் பின் சந்திரன் உன்னை அங்கு அழைப்பான். 

அப்பனே நிச்சயம் சந்திரனும் நாராயணனும் அப்பனே சுக்கிரனும் அனைவரும் ஒன்றே!!!

அப்பனே சந்திரனும் கூட சுக்கிரனும் கூட அப்பனே ஒன்றாக இணைந்தது தான் அப்பனே நாராயணனே!!! 

அப்பனே சந்திரனும் சுக்கிரனும் இணைந்தது அப்பனே புதன்!!

அப்பனே புதன் தான் அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் பெருமான்(ள்).

(புதன் கிரகத்தின் அதிபதி மகாவிஷ்ணு) 

அப்பனே இவ்வாறு நிச்சயம் இருக்கும் பொழுது நாராயணன் அருள் பரிபூரணமாக இருக்கும் பொழுது கவலைகளை விடு நன்மைகளாகவே முடியுமப்பா!!

இதனால்தான் அப்பனே மனிதர்களை புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்றெல்லாம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!!

தாம் தன் செய்த புண்ணியங்களுக்கு ஏற்பது யாங்கள் சித்தர்கள் அழகாகவே வந்து காத்து அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே. 

ஆசிகள்!! ஆசிகளப்பா!!

குஜராத்தைச் சேர்ந்த ஒரு அகத்தியர் பக்தர் ஒருவருக்கு குருநாதர் கூறிய 

 ஏக முக ருத்ராட்ச ரகசியம்

பக்தர்: குருவே ஒருமுக ருத்ராட்சம் என்ற பெயரில் முந்திரி பருப்பு வடிவத்தில் இன்று சமூகத்தில் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றது. ஒரு முகம் ருத்ராட்சம் உருண்டை வடிவில் இருப்பது எங்கு கிடைக்கும்???

அப்பனே எதை என்று அறிய அறிய உந்தனுக்கு அதெல்லாம் தேவையில்லை என்பேன் அப்பனே!!

யான் எங்கு இருக்கின்றது என்று சொல்லிவிடுவேன் ஆனாலும் நீ அங்கு செல்ல மாட்டாய் என்பேன் அப்பனே. 

அதனால் யான் சொல்லியும் செய்யவில்லை என்றால் அதுவும் பாவமாக ஏற்படும் என்பேன் அப்பனே!!!

(குருநாதரிடம் ஒரு விஷயத்திற்காக கேட்டு அதை குருநாதர் சொல்லி அதை பின்பற்றாவிட்டால் பாவங்கள் ஏற்படும்) 

ஆனால் நிச்சயம் சொல்வேன் ஆனால் நீ செய்யப் போவதில்லை என்பேன் அப்பனே அதனால்.. எத்தனை முகம் ஆனாலும் சரி ஏதாவது ஒரு ருத்ராட்சத்தை பயன்படுத்து மீதியை யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே. 

குருவே நான் ஒருமுக ருத்ராட்சத்தை அணிய விரும்புகின்றேன் அது எங்கு கிடைக்கும்??

குருநாதர் அகத்திய பெருமான். 

அப்பனே அதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர... நிச்சயம் அது யார் கையிலும் இல்லையப்பா!!

(இதுவரை உண்மையான ஒரு முக ருத்ராட்சம் எவருக்கும் கிடைக்கவில்லை) 

அப்பனே எவை என்று அறிய அறிய அப்படி இருந்தாலும் அப்பனே ஈசனே அதை மறைத்து விடுவான் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் பின் அதை அதாவது அவ் ருத்திராட்சம் கைக்கு வந்து விட்டால் இவ்வுலகத்தையே வசியப்படுத்தி விடலாம் என்பேன் அப்பனே.

ஒரு அடியவருக்கு குருநாதர் கூறிய வாக்கில் அவரது குடும்பம் முழுவதும் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருக்கின்றது அதற்கு தீர்வாக குருநாதர் கூறிய வழிமுறைகள். 

அப்பனே நல்முறையாக இல்லத்தில் பைரவனை வளர்ப்பது சிறந்தது. 

வீட்டில் கருங்காலி கட்டையை ஏதாவது ரூபத்தில் வைத்து விடு அப்பனே

அப்பனே ஏலக்காய் பச்சை கற்பூரம் அப்பனே கிராம்பு இவற்றை நசுக்கி (பொடியாக்கி) அப்பனே வெற்றிலை பாக்கில் வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொண்டால் இவையெல்லாம் வராதப்பா!!! துணியில் சுற்றி எடுத்து கொண்டு செல் அப்பனே!!

(ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு இவற்றை பொடியாக்கி வெற்றிலை பாக்கில் வைத்து மடித்து ஒரு சிறிய துணியில் கிழி போல சுற்றி வெளியே செல்லும் பொழுதும் தொழில் மற்றும் எல்லா காரியங்களுக்கும் செல்லும் பொழுதும் தன்னுடன் வைத்துக்கொண்டு சென்றால் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அண்டாது..

தினமும் இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.. ஆற்றிலோ குளத்திலோ இவற்றை எறிந்து விட வேண்டும்)

அது மட்டும் இல்லாமல் பேய் விரட்டிம் மூலிகையும் கூட வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே

அது மட்டும் இல்லாமல் அடிக்கடி உணவில் வெண்பூசணியை சேர்த்துக் கொண்டே வந்தால் அப்பனே கண்திருஷ்டி அண்டாதப்பா!!!

உடலில் நோய் நொடிகள் வராமல் உடல் சீராக இருப்பதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய ரகசியம் 

அப்பனே ஏதாவது பழமையான சிவாலயங்களுக்கு சென்று அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை குடித்து வந்தாலே போதுமானதப்பா...

அப்படி இல்லை என்றால் அப்பனே பஞ்ச லோகத்தினால் ஆன சிவலிங்கத்தை வீட்டில் பூஜித்து அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை அருந்தி வரவேண்டும் என்பேன். அப்பனே இதனால் பல குறைகள் தீரும் என்றும் அப்பனே..

உடலில் யூரிக் ஆசிட் அதிகப்படியாக உற்பத்தி ஆவதால் உடல் பருமன் மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய மருத்துவ ரகசியம் 

அப்பனே நல்முறையாக அனுதினமும் உணவில் சுரைக்காயை சேர்த்துக்கொள் அப்பனே. இதை தன் உணவில் சேர்த்து வந்தாலே இதற்கு நல்ல தீர்வு கிட்டும் என்பேன் அப்பனே... அனுதினமும் நிச்சயமாக நீ சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் மாறும் அப்பனே.

குருவே நான் சுரைக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் ஏற்படுகின்றது குருவே !!

அப்பனே நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய அறிய அவை தன் (சுரைக்காய்) கூட எடுத்துக் கொண்டே வா!!

அப்பனே கவலைகளை விடு!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட இதற்கு (ஜலதோஷத்திற்கு) பதிலாக பின் திரிகடுகம் எடுத்துக் கொள்!!;;

ஒரு அடியவர் சில தவறான தீய பழக்கத்தினால் அவருடைய வயிற்றில் பிரச்சனை உறக்கமின்மை கல்லீரல் வீக்கம் அடிக்கடி கட்டுப்பாடு இன்றி சிறுநீர் கழித்தல் போன்ற குறைபாடுகள் இருக்கின்றது.. அதற்கு குருநாதர் கூறிய தீர்வு 

அப்பனே முதலில் பாகற்காய் சாற்றினை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே இதனால் பல கழிவுகள் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறும் என்பேன் அப்பனே. முதலில் இதைச் செய்..அப்பனே....உன் பழக்கங்களை எல்லாம் உடனடியாக நிறுத்து அப்பனே!!!!...

ஒரு பெண் அடியவருக்கு மாந்திரீகத்தால் சில தேவையில்லாத உணவுப் பொருட்கள் கொடுத்து அது உடலில் சேர்ந்து விட்டது அது அவருக்கு பல வகையிலும் துன்பத்தையும் தூக்கமின்மை துர் சொப்பனங்கள் அதாவது கெட்ட கனவுகள் உளர்ச்சோர்வையும் நல் முறையாக பக்தியை செலுத்த முடியாமல் செய்தும் பல கஷ்டங்கள் அந்த பெண்மணிக்கு.. குருநாதர் அகத்திய பெருமான் இதற்கு கூறிய தீர்வு 

அம்மையே அனுதினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அதாவது ஒரு மாதம் தொடர்ந்து முள்ளங்கி சாற்றினை பருகி வரவேண்டும்!!!

இதனால் சில சில பின் எவை என்று அறிய அறிய பிற அழுக்குகளும் கூட பின் உடலில் எதை என்று கூட தானாகவே வெளியேறும் அம்மையே தொடர்ந்து இதை நீ நிச்சயம் பருகி வர வேண்டும் என்பேன்!!

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி அவருடைய இளம் வயது மகனும் இதே உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் இருவரும் உடல் பருமன் உடையவர்கள் குருநாதரிடம் உடன் பருமன் மற்றும் மிக ரத்த அழுத்தத்திலிருந்து (blood pressure)மீண்டு வர இதற்கான தீர்வினை கேட்டபொழுது

இதனால்தான் அனைவருக்குமே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் கோபம் கொள்ளாதீர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று... எதை என்று நிச்சயம் கோபத்தையும் கூட நீ கட்டுப்படுத்த வேண்டும் அம்மையே.. அனுதினமும் தியானங்களை மேற்கொள்ள வேண்டும் அம்மையே.. பின் அமைதியாக இரு!!
 நிச்சயம் தன்னில் கூட. 

அம்மையே பின் நிச்சயம் நடைபயிற்சியை விட்டு விடாதே!!!!

அனைவருக்குமே சொல்கின்றேன் அறிந்தும் கூட இதனால்.. நிச்சயம் அமைதியாக இருங்கள். 

குருவே கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு வழி தாருங்கள் 

அம்மையே யான் சொல்லிவிட்டேன் அம்மையே ஏற்கனவே.. இருந்தாலும் அம்மையே கற்களில் மீது நட!!

(கூழாங்கல் அதாவது ஆற்று படுகையில் இருக்கும் உருண்டை கற்கள் மீது அனுதினமும் காலில் செருப்பு அணியாமல் 20 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.. இதனைப் பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார்!

சிலருக்கு நரம்பு பிரச்சனை உடல் பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் உடல் வலி கால் வலிகளுக்கு குருநாதர் தீர்வாக இதனைப் பற்றி தெரிவித்து இருக்கின்றார்

 இதனால் ரத்த ஓட்டம் சீராகி உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். தற்போது பூங்காக்களிலும் இதுபோன்று கற்களைக் கொட்டி நடை பயிற்சியை மேற்கொள்கின்றனர்)

குருவே உலகத்தில் தற்போதைய காலகட்டத்தில் இன்னும் பல பேர் பிளட் பிரஷர் நோயால் அவதியுறுகின்றனர்

அறிந்தும் கூட இதற்கு சிறந்த பின் அதாவது நிச்சயம்... மிதிவண்டி மிதித்தல் நிச்சயம் தன்னில் கூட ஓடுதல்!! நடத்தல்!!

குருவே உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து கொள்ளலாமா 

தாராளமாக செல்லலாம்!!

உயிர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு எந்த? மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் குருநாதா!!!

அம்மையே நிச்சயம் ஒரு வாரம் என் தொடர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் முள்ளங்கி எனும் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தி வா... சில கழிவுகள் உள்ளே இருக்கின்றது அதை முதலில் வெளியே அனுப்ப வேண்டும். 

இதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் குருவே 

முதலில் இதைச் செய்யுங்கள் இதன் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும் என்பேன். 

குருவே என்னுடைய மகனுக்கு இளம் வயதிலேயே இந்த உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டது இதற்கு தீர்வு வேண்டும் அருளுங்கள்!!

(அவருடைய மகன் துரித உணவு எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு கடைகளில் கிடைக்கும் உணவு வகைகளை செயற்கை உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் உடையவர்)

அப்பனே நீ உண்ணுவதெல்லாம் நிறுத்த வேண்டும்.. பின் கீரை வகைகளை உட்கொள்ள நன்று!!!

அதாவது அப்பனே பொன்னாங்கண்ணி கரிசலாங்கண்ணி காசினிக்கீரை மணத்தக்காளி எனும் மூலிகைகளையும் கூட கொள்ளு எனப்படும் அப்பனே எதையென்று அறிய அறிய யான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன் அப்பனே பல உரைகளிலும் கூட!!

பச்சை காய்கறிகளையும் கூட கீரைகளையும் கூட அப்படியே உண்ண வேண்டும் அப்பனே நல்விதமாகவே. 

இதனால்தான் சொல்கிறேன் அப்பனே சில செயற்கையானதை உணவுகளை விட்டுவிடு அப்பனே!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... அனைத்தும் எண்ணெயில் தான் உள்ளதப்பா!!! அவையெல்லாம் என்பேன் அப்பனே!!! இதற்கு தன் எண்ணையையும்  குறைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!(எண்ணெய்களில் பொறித்த வறுத்த உணவுகள் oily foods)

சரியாகவே அப்பனே சில காலம்.. பின் அதாவது தேங்காய் எண்ணெய்... அப்பனே சமைத்து உண்ணுதல் அதிசிறப்பு தரும்!!

குருவே நாங்கள் தேங்காய் எண்ணெயில் பழக்கம் இல்லை இயற்கையாக ஆட்டி எடுக்கும் கடலை எண்ணெயை பயன்படுத்தலாமா??

அப்பனே இதையும் உட்கொள்ளலாம். 

குருவே உடல் முழுவதும் சுத்தப்படுத்துவதற்கும் உடலில் உள்ள குறிப்பாக வயிறு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு என்ன செய்வது???

அப்பனே அறிந்தும் கூட ஒன்றைச் சொல்கின்றேன்!!! அதிகாலையிலே எழுந்து முருங்கை இலைகளை கூட கசக்கி அப்பனே அதாவது பின் நல்விதமாகவே அப்பனே நிச்சயம் அப்படியே நிச்சயம் கரைத்து அப்பனே பின் அருந்த நன்று!!! என்பேன் அப்பனே.. இதை நாளை பொழுதிலிருந்தே இவன் செய்ய வேண்டும். (முருங்கை இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து அதை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்) 

குருவே என்னுடைய மகளுக்கும் தோலில் கைகளில் தோல் உரிதல் அலர்ஜி பிரச்சினை இருக்கின்றது 

அப்பனே இதற்கும் காரணம் எண்ணைய் தானப்பா!!! உணவில் எண்ணெயை குறைத்துக் கொண்டாலே நோய்கள் வராதப்பா. செயற்கையை நாடி நாடி அனைத்தையும் மனிதர்கள் நோய்களை வரவழைத்து கொள்கின்றார்கள் என்பேன் அப்பனே!!

யான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புற்று மண்ணை.. உடம்பில் பின் அதாவது ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள்.. பூசி ஊறவைத்து நிச்சயம் தன்னில்.. கூட... அவை மட்டும் இல்லாமல் வேம்பு (வேப்பிலை அரைத்து உடலில் பூசி) இலைகளையும் கூட பின் நன்முறையாகவே அறிந்தும் கூட அதை தன் கூட ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் பின் உடம்பில் பின் அதாவது.. கசக்கி அதாவது பின் அதாவது ஊறவைத்து நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகளால் ஆன.. பொடிகளை!!

 (ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு பொடி துளசி பொடி வில்வ பொடி வேப்பிலை பொடி பயத்த மாவு கடலை மாவு பூலாங்கிழங்கு உள்ளிட்ட ஸ்நான பொடி) 

நீரில் விட்டு நீராடி வந்தாலே நிச்சயம் பின் நீராடி வந்தாலே போதுமானது. 

பின் இதை ஏற்கனவே உரைத்தேன்... நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல் சூரியன் பின் அதாவது சூரிய வெளிச்சத்தில் நிச்சயம் அதாவது அனுதினமும் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டே வந்தால்.. இதனால் நிச்சயம் தன்னில்  கூட மாற்றங்கள் ஏற்படும் என்பேன்... அதிகாலையில் எதை என்று சூரியன் முன்பு நின்றால்  அம்மையே!!! சூரியனின் வெளிச்சத்தில் இருந்து வரும் சக்திகள் தோலில் படும் பொழுது அவை மாறும்!! என்பேன்!! அதிகாலையில் சூரியனை பார்த்து நின்று வந்தாலே போதுமானது. அம்மையே அதுமட்டுமில்லாமல் இது அனைத்து நோய்களுக்கும் பின் தீர்வு. 

சொல்லிவிட்டேன். 

குருவே!!! என் மகளுக்கு அடிக்கடி கண்திருஷ்டி தோஷம் ஏற்படுகின்றது!! இதற்கு தீர்வினை தாருங்கள்!! 

யான் ஏற்கனவே அதாவது வெள்ளை பூசணிக்காயை கூட.. நல்விதமாக அதாவது அனுதினமும்... முடியாவிடிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது.. நிச்சயம் தன்னில் கூட பின் இதை தன் அதாவது அதன் சாற்றினை... அதாவது அப்பனே வெள்ளை பூசணி யின் சாற்றை அருந்தி வர சிறப்பு தரும்  என்பேன்.

யான் கூறியதை கடைபிடித்தாலே போதுமானது என்பேன் அப்பனே...குறைகளே வராதப்பா .. நிச்சயம் தன்னில் கூட...... ஆனாலும்  யான் சொல்லியதை.. சில விஷயங்களை கூட அதாவது சிலவற்றைக் கூட மறந்து விடுகின்றார்கள் கடைப்பிடிப்பதில்லை அப்பனே.. அதனால்தான் நிச்சயம் நீண்ட வாக்குகள் யான் செப்புவதில்லை அப்பனே... இதனால் இதை செய்திட்டு வந்தால்.. என்னென்ன? ஏது? என்றெல்லாம் பின் யான் செப்பி உயர வைப்பேன் அப்பனே..

ஆசிகள்!! ஆசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. நன்றி அகத்தியர் ஐயா மற்றும் அக்னிலிங்கம் அன்பரே 🙏

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மிகவும் நன்றி அய்யா

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete