​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 24 March 2025

சித்தன் அருள் - 1820 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு - 2!



கந்த குற வள்ளிமலை வாக்கு பாகம் 2.

ஆனாலும் பின் வள்ளியோ!!! அறிந்தும் கூட மடையனே!!! பின் அதாவது மன்னனாக இருக்கின்றாயே!!!! ஆனால் உந்தனுக்கு புத்திகள் இல்லையே!!!! ஆனால் உன் நேரம் நெருங்கி விட்டது என்று!!

ஆனால் மன்னனுக்கும் கோபம் அறிந்தும் பின் எதை என்றும் அறிந்தும் கூட பின் அப்படியா???

ஏன் எதை என்று அறிய அறிய பின் உன்னை என்ன செய்யப் போகின்றேன்!!!! என்று!!!
புலவர்களே வாருங்கள் சேவகர்களே வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம் நிச்சயம் அழைத்தான்... அனைவரையும் இங்கே வர சொல்லுங்கள் என்று...
இதனால் எதை என்றும் புரிந்தும் கூட புரியாமலும் கூட 

ஆனாலும் வள்ளியும் கூட பின் மன்னனே சற்று பொறும்!!!!!

கர்வம் வேண்டாம்!!!

இறைவன் இறைவன் தான்!!!
மனிதன் மனிதன் தான்!!!

நிச்சயம் பின் எப்பொழுதும் நீ அதாவது எவ்வளவு பக்திகள் செலுத்தினாலும் நிச்சயம் நீ இறைவன் ஆக முடியாது!!!
நிச்சயம் அறிந்தும் கூட!!

இதனால் பின் நிச்சயம் அனைவரிடத்திலும் கூட மன்னனே நீ மன்னிப்பு கேட்டு விடு... நிச்சயம் அறிந்தும் கூட. 

மன்னனே!! நீ செய்த செயல்களுக்கெல்லாம்!!! (பிராயசித்தம்!)

அனைத்து பின் முருகனின் திருத்தலங்களுக்கும் சென்று அதாவது பின் முருகனை வணங்கச் சொல்... என்றெல்லாம் அப்பனே வள்ளி!!! அறிந்தும் உண்மைதனை கூட. 


மன்னன் 

ஆனாலும் பெண்ணே!!! நீ ஒரு பெண்ணாக இருந்து இப்படியா??? என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட உன்னை யான் என்ன செய்யப் போகின்றேன் என்று பார்!!!

என்று அப்பனே அதாவது வில்லையும் அம்பையும் அப்பனே எடுத்து எதை என்றும் அறிய அறிய இவை என்று கூற அப்பனே அப்படியே பின் அதாவது சரியாக வள்ளியை பார்த்து.... உன்னை தொட்டாலே பாவம் என்று அதாவது தூரத்திலிருந்தே அம்பை விடுகின்றேன் பார் என்று வில்லில் அம்பையும் கூட!!! 

(வில்லில் அம்பை பொருத்தி நாணேற்றி வள்ளியை பார்த்து குறி பார்த்தான் மன்னன்)


அப்பனே அப்பொழுது திருத்தணிகை மலையில் இருந்து கூட முருகன் பார்த்தான் அப்பனே... அறிந்தும் கூட!!!


மன்னன் 

இதனால் சரியாகவே பின் அதாவது நிச்சயம் பெண்ணே என்னை விட நிச்சயம் கர்வமா நீ??? என்னை விட கர்வமா?? உந்தனுக்கு??? அதாவது இதை என்றும் அறிந்தும் கூட! 

இதனால் அப்பனே அங்கிருந்து வில் அம்போடு அவள் நெற்றியில் கூட குறி பார்த்தான் அப்பனே 


இதனை பின் முருகன் திருத்தணிகை மலையில் இருந்து ஒரு வில் அம்பை எடுத்து அப்பனே பின் முருகனும் கூட அப்பனே சரியாகவே அப்பனே இங்கு விட்டானப்பா!!! அம்பை எய்தான் அப்பா!!

இதனால் அவ் வில்லிலிருந்து வந்த அம்பு கூட.... இங்கு மன்னன் கைகளில் இருந்த அம்பையும் வில்லையும் தடையாக்கிற்று!!!!(தட்டிவிட்டது)

இதனால் பின் மன்னனுக்கு அதிசயம்!!!

பின் எங்கிருந்து??? அந்த அம்பு வந்தது??? அறிந்தும் அறிந்தும் கூட !!

அதாவது!! வள்ளி பின் அறிந்தும் கூட பலமாக சிரித்தாள்!!!!!

பின் அதாவது மடையனே!!!! மடையனே!!! அதாவது அறிந்தும் கூட மன்னனே!!! மடையன் மன்னனே!!! உன்னால் என்ன செய்ய முடிந்தது????

 பார்த்தாயா??!!!!

இதற்கு நீ நிச்சயம் அதாவது இதற்கு பதிலளி !!முதலில்!!!(பதில் சொல்) 

எங்கிருந்து வில் அம்பு??? அதாவது எங்கிருந்து வந்தது?? அதனை நீ முதலில் கண்டுபிடி!!!

பின்பு நீ எந்தனை திட்டுவாய்!! என்ன வேண்டுமானாலும் செய்வாய் என்று!!!


ஆனால் மன்னன் முழித்தான்!!!


வள்ளி 

மீண்டும் மடையன் மன்னனே நிச்சயம் நீ இதனை முதலில் செப்பு!!! பின்பு அதாவது நீ தன்னைத்தானே இறைவன் என்று சொல்கின்றாய் அல்லவா!!!

எங்கிருந்து இந்த அம்பு முதலில் வந்தது என்று நீ சொல்!!!.... என்றெல்லாம்!!

இதனால் அப்பனே பின் திகைத்தான் அரசன்!! அதாவது என்ன சொல்வது?? என்று கூட! 

இதனால் அங்கே அனைவரும் கூடி விட்டார்கள்... இதனால் பெண்களும் அங்கு ஓடோடி வந்து விட்டார்கள்..

ஆனாலும் பெண்கள் அனைவருமே முருகா!! முருகா!! என்று கூச்சலிட்டனர்!!
முருகா முருகா என்றெல்லாம் இது நிச்சயம் முருகனின் லீலைகளே என்று நிச்சயம் அறிந்தனர்.


ஆனாலும் மன்னனுக்கு இச்செயல்கள் நிச்சயம் பொறுக்கவில்லை... மீண்டும் பின் அறிந்தும் கூட நிச்சயம் யாராவது முருகன் என்று சொன்னால் அப்படியே கொன்று விடுங்கள் என்று நிச்சயம் பின் அறிந்தும் கூட.. இதனால் நிச்சயம் தளபதியாருக்கு கட்டளையிட்டான். 

தளபதியாரும் அறிந்தும் கூட நிச்சயம் இனிமேல் முருகா முருகா என்று சொல்லாதீர்கள் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இனிமேல் சொன்னால் நிச்சயம் அறிந்தும் எவை என்றும் நிச்சயம் கொன்று விடுவோம் என்றெல்லாம் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் இதை என்றும் அறிந்தறிந்து கூட நிச்சயம் அதாவது பின் அதாவது மன்னனும் அமைதியாக அதாவது மௌனம் காத்தான். 

எதை என்று அறிந்தும் கூட பின் அனைவரையும் புலவர்களையும் காவலாளிகளையும் அழைத்து...

எங்கிருந்து இந்த அம்பு வந்தது?????

அதாவது அறிந்தும் பின் எதை என்றும் அறிந்தும் கூட....

யாராவது இங்கு வில் அம்பு செய்கின்றார்களா??? என்று ஊர் ஊராக சென்று திரிந்து பாருங்கள்... என்றெல்லாம் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட 

அதனால் காவலாளிகளும் அப்பனே அங்கும் இங்கும் திரிந்தனர். அவ் வில்லம்பை... யாராலும் அதாவது பின் எதை என்று கூட யாரும் விற்கவில்லை இதை யாரும் செய்யவும் இல்லை!! என்று பின் அறிந்தும் இதை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே அதிசயம் அனைவருக்குமே!!!

அம்பு எங்கிருந்து??? வந்தது?? எங்கிருந்து?? வந்தது??? என்றெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே பின் அதுவும் கூட அப்பனே அப்படியே மன்னனின் கைகளில் இருந்த வில் அம்பினை தட்டிச் சென்று... அப்பனே பின் ஒரு மலையில் மோதியதப்பா!!! (முருகன் எய்த)

அப்பனே அவ் வில் அம்பும் கூட இப்பொழுதும் கூட அப்படியே நிற்கின்றது அப்பனே!!! சூட்சுமமாக அப்பனே!!!

அவைதனை பற்றி இப்பொழுது யான் சொல்வதற்கில்லை அப்பனே எங்கிருக்கின்றது அது? என்று அப்பனே!!!

ஆனாலும் சரியாகவே அப்பனே பின் வருங்காலத்தில் அவை தன் பின் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் தெரியும் அப்பா. அவ் மலையானது அப்பனே... ஒரு பொக்கிஷமாகவே திகழ்கின்றது என்பேன் இப்பொழுதும் கூட அப்பனே... அங்கு மறைமுகமாக அப்பனே தற்பொழுது இருக்கும் கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் பெரிய மனிதர்களும் கூட வணங்கி அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் பெரிய மனிதர்களாகவே ஆகி கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 

இதனால் அப்பனே சூட்சுமம் இங்கு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

பின் பெரிய பெரிய ரகசியங்களை எல்லாம் வரும் வரும் காலங்களில் எடுத்துரைக்கும் பொழுது... அதை சரியாகவே பயன்படுத்திக் கொள்ளும் பொழுது... நீங்களும் வெற்றி அடையலாம் என்பேன் அப்பனே. 
இதனால் அப்பனே அறிந்தும் கூட...


 இதனால் வள்ளியும் கூட பின் மௌனமாகவே பின் இங்கிருந்தே பேசினாள் அப்பனே முருகனிடத்தில். 

முருகா!!! அறிந்தும் கூட பின் திருத்தணிகை மலையில் இருந்தே... முருகனும் அறிந்தும் கூட..

இதனால் இப்பொழுது தான் தொலைபேசி என்கின்றார்கள் அப்பனே!!!

இவைதன் அப்பனே முன்பே இருந்ததப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் கூட அப்பனே இறைவன் திருவிளையாடல்களே அப்பனே 

ஆனால் மனிதன் அதை தன் அதாவது பல சுவடிகளையும் எடுத்து அப்பனே... அதில் இருந்ததை எல்லாம் அப்பனே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் இப்பொழுது!!!

இதனால் அப்பனே!!

பின் அதாவது இமய தன்னில்  அப்பனே பேசினால் அப்பனே அறிந்தும் கூட... அதாவது பின் ஈசன் அப்பனே... பின் அதாவது திருச்செந்தூரிலே அப்பனே நிச்சயம் அப்பனே பின் தந்தையே என்று அழைப்பான் அப்பனே!!


(இமயமலையில் இருந்து ஈசன் முருகா என்று குரல் கொடுத்தால் திருச்செந்தூரில் இருந்து முருகன் தந்தையே!!!!! சொல்லுங்கள் என்று பதில் அளிப்பார்) 


சித்தன் அருள் 1460 ல் திர்கேஸ்வரி சக்தி பீடவாக்கில் கௌகாத்தி அசாம்..

மார்க்கண்டேய மகரிஷி இந்த ஆலயத்தில் அமர்ந்து கொண்டு பிரம்மபுத்திரா நதியில் பிரம்மனின் கோபத்தில் இருந்து அந்த நாட்டை காப்பாற்ற திருக்கடையூரில் இருக்கும் அபிராமி அம்மாவிடம் அங்கிருந்து கொண்டு அனுதினமும் பேசிக்கொண்டு இருப்பதை ஏற்கனவே அபிராமி அன்னையிடம் உரையாடிக் கொண்டு ஆலோசனை பெற்று காப்பாற்றி வரும் நிகழ்ச்சியை ஏற்கனவே தூரத்திலிருந்து பேசும் வல்லமையை குறித்து வாக்கில் கூறியதை உங்களுக்கு இங்கு நினைவு படுத்துகின்றோம்)




பின் ஆனால் அப்பனே இதுதான் அப்பனே 

இதனால் அப்பனே.....இன்னும் இன்னும் பல சுவடிகள் அங்கங்கே பின் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!! அவையெல்லாம் அப்பனே எடுத்து வந்து அப்பனே பின் நிச்சயம் அவரவர் பின் எதை என்றும் அறிந்தும் கூட..... 




இதனால் அப்பனே இப்பொழுதெல்லாம் சுவடிகளை வைத்துக்கொண்டு அப்பனே மனிதருக்காகவே அதாவது பின் அவை இவை என்று பரிகாரங்கள் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றம் தான் மிச்சம் என்பேன் அப்பனே 

ஆனாலும் யாங்கள் எழுதியது உலகத்திற்காகவே என்பேன் அப்பனே...

உண்மை பொருளை கூட அப்பனே பின் எடுத்து வருவோம் என்போம் அப்பனே 

இதை என்று அறிய அறிய இதனால் அப்பனே பொய்யானவற்றையெல்லாம் அப்பனே பின்பற்றி அப்பனே இருப்பின் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே

அதாவது கலியுகத்தில் அப்பனே இப்படித்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய கலியுகம் அப்பனே அதாவது தர்மம்... அப்பனே தலைகீழாக போய்க் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே... ஆனால் அப்பனே பின் மேல் நோக்கி யாங்களே நடக்க வைப்போம் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே மனிதன் எப்பொழுதும் கூட அப்பனே நிச்சயம் ஞானியும் எவை என்று கூட ஆக முடியாது.. அப்பனே சித்தனும் ஆக முடியாது பின் ரிஷியும் ஆக முடியாது என்பேன் அப்பனே 

பின் சொல்லிக் கொள்ளலாம் அப்பனே பொய் சொல்லிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.... யான் சித்தன்!!! யான் மகான்!!!! யான் ரிஷி என்று அப்பனே 

ஆனாலும் ஒரு அப்பனே அதாவது பின் ஒரு வேலையும் அவனால் செய்ய முடியாதப்பா!!
அப்பனே இது கலியுகம் என்பேன் அப்பனே... வரும் வரும் காலங்கள் என்பேன் அப்பனே.... எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!


 இன்னும் அதாவது பின் வள்ளியும் அதாவது அறிந்தும் இவைதன் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட இதனால் எதை என்று அறிய அறிய...

அதாவது முருகன் அங்கிருந்து!!!!

வள்ளி!!!!!!.................

நீ சென்றாய் அல்லவா!!!! நீயே பார்த்துக்கொள்!! என்று!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் கூட இதனால் நிச்சயம் அப்பனே

இதனால் பின் நிச்சயம் வள்ளியும் கூட 

முருகா!!!! எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட.... அதாவது நீ அங்கேயே இரு!!! (திருத்தணி மலையிலேயே)

நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட அதாவது உந்தனுக்கு பல வகையிலும் கூட... பின் அகத்தியன் கற்றுக் கொடுத்தானே.....

(முருகனுக்கு குருவாக இருந்து அகத்தியர் பெருமான் கற்றுக் கொடுத்த வித்தைகள்!!


( ஏற்கனவே சபரிமலை வாக்கில் ஐயப்பனுக்கும் குருநாதர் அகத்தியர் பெருமான் தான் குரு ஆக இருந்து கற்று கொடுத்ததை சித்தன் அருள் 1163 ல் வந்துள்ளதை நினைவு படுத்துகின்றோம்)



அகத்தியனை யான் இங்கு வரவழைக்கின்றேன் என்று வள்ளியும். 

அதனால் பின் எதை என்றும் புரிந்தும் கூட இதனால்... வள்ளியும் கூட நிச்சயம் பின் என்னை.. இந்த மலைக்கு அழைத்தாள்! 


யானும்  இங்கு வந்தேனப்பா!!!


வள்ளி!!!
மாமுனிவரே!!! 

எதை என்றும் அறிந்தும் எதை என்று அறிய அறிய அதாவது பின் நிச்சயம் என்னிடத்திலும் அதாவது சுவடியை கொடு!!! அதில் கூட பல மர்மங்கள் எதை என்றும் அறிந்தும் கூட!!

அதனால் யான் எவை என்று செய்வது? என்பதை கூட!!!! 

(வள்ளி தேவி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் சுவடியில் கற்றுக் கொள்கின்றேன் நீங்கள் முருகனுக்கு கற்றுக் கொடுத்ததை போல் எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்று குருநாதர் இடம் கேட்டார்)


 அதனால்.... முருகன் என்ன சொல்கின்றானோ!!!!! அதைத்தான் நான் கேட்பேன்!! ஆனாலும் நிச்சயம் பல வழிகளிலும் கூட நிச்சயம் முருகனுக்கு பின் அனைத்தையும் நீ கற்றுக் கொடுத்தாய்!!! அல்லவா சுவடிகள் மூலம்!!!

அச் சுவடியை நிச்சயம் எந்தனுக்கும் கொடு!! என்று!!



குருநாதர் அகத்தியர் பெருமான் 


ஆனாலும் பின் யானும் எதை என்றும் அறிய அறிய பின் முருகனிடம் கேட்டு தான் சொல்வேன் என்று அறிந்தும் கூட. 

முருகா!! என்று!! அழைத்தேன் பின் யானும்!!!

ஆனாலும் முருகனும் பின் மாமுனிவரே!!!! அறிந்தும் கூட பின் அனைத்தும் பின் நீ என்ன நினைக்கிறாயோ!!!... அப்படியே ஆகட்டும் என்று!!!

இதனால் பின் வள்ளியிடம் பின் யான் அதாவது இதை வைத்து அதாவது இச்சுவடியை வைத்துக்கொள்!!! இது எப்பொழுதும் உந்தனுக்கு உதவிகரமாக இருக்கும் என்று!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட பின் சுவடியை கொடுத்தேன்.. பின் வள்ளியிடமே!!!

இதனால் எப்படி?? எதை என்று அறிய அறிய எப்படி வாழ வேண்டும்????
எப்படி இருந்தால்?? பின் உலகம் அறிந்தும் கூட!!... எதை என்று அறிய அறிய!!

 ஆனாலும்!!

ஒரு நொடியில் எதை என்று அறிய அறிய அனைத்தும் பின் முருகனால் செய்ய முடியும்!!!

ஏன்?? இங்கு செய்யவில்லை?? என்று!! யோசித்தீர்களா!!!!!!

எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் அறிய அறிய.... பக்திக்கு பின் நிச்சயம் வந்து விட்டாலே!!!! அன்பு தான்... மிக மிக பின் பலம்..... அறிந்தும் கூட வேறு எதுவுமே பலமில்லை!!!!

அப்படி பின் அங்கு வேறு ஏதாவது பலம் இருந்தால் அவ் பலத்தை இறைவனே அகற்றி விடுவான்...

ஆனால் மன்னனும் பின் போக போக கவலையுற்றான்!!! அறிந்தும் கூட!!!

ஒரு பெண் இப்படி செய்து விட்டாளே!! என்று!! அறிந்தும் அறிந்தும்!!!

இதனால் நிச்சயம் இதை என்றும் புரிந்தும் கூட... இதனால் வெவ்வேறாகவே வந்து வந்து வலங்கள்!!

இதனால் அவ்வரசனும் அதாவது பின் எதை என்றும் புரிந்தும் கூட இதனால் நிச்சயம் முருகனையும் கூட யாரும் வணங்கவில்லை என்று... எதை என்று புரிய 

இதனால் நிச்சயம் அதில் (வள்ளி தேவியிடம் இருக்கும் சுவடியில்) சில சில விஷயங்கள் யான் எழுதினேன்!!!

ஆனாலும் கையில் மட்டும் பிடித்துக் கொண்டாள் வள்ளி சுவடியை.... அவ்வளவுதான்...

மீதி எல்லாம் முருகா!!! அறிந்தும் கூட பின் அதாவது பின் நீயே என்று கூட!! நீயே வா!! என்று கூட!!! யான்!!

(வள்ளி தேவி சுவடியை பிடித்துக் கொள்ள குருநாத ரகசிய பெருமான் முருகா நீயே இங்கு வரவேண்டும் என்று எழுதினார்)



இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் மீண்டும் பின் மன்னனும் பின் புலவர்களையும் கூட பின் காவலாளிகளையும் கூட அழைத்து நிச்சயம் அறிந்தும் கூட பின் நிச்சயம்... அதாவது எந்தனுக்கே திருத்தலங்கள் அமையுங்கள் என்றெல்லாம்..

அதாவது பின் யான் தான் இருக்க வேண்டும் இங்கெல்லாம்... வேறு எவரும் இருக்கக் கூடாது என்று..

இதனால் பின் வள்ளிக்கும் அறிந்தும் எதை என்றும் கூட கோபம்.... எதை என்று புரிய..


ஆனால் நிச்சயம் பின் அரசனுக்கு எதிரே நின்றாள்!!!

பின் மன்னனே!!!!... வேண்டாம்!!!!

யான் அறிந்தும் கூட அதாவது வேண்டாம்... எதை என்றும் அறிய அறிய நிச்சயம்... ஒரு பொழுதும் பின் நிச்சயம் மனிதனால் நிச்சயம் எதை என்று எதையும் செய்ய முடியாது. 

அதாவது சாதாரணமாக பின் இறைவனை நீ அதாவது நீதான் இறைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய் அல்லவா!!!!

நிச்சயம் பின் உன்னால்... என்னை என்ன செய்ய முடியும்??? என்று கூறு!!

அதாவது பின் மன்னனுக்கும் கோபம் வந்தது..... பின் இப்பொழுது உன்னை அழிக்கின்றேன் இங்கே என்று!!!

பின் அதாவது யாருமே வேண்டாம்... காவலாளியை வைத்து உன்னை அடிக்கின்றேன்... என்று நிச்சயம்... அறிந்தும் கூட.... காவலாளிக்கு பின் அதாவது உத்தரவிட்டான். 

இவள்தனை பின் அதாவது கொன்றுவிடு என்று...

பின் அதாவது கத்தியை பின் வீசினான் காவலாளி!!!!

ஆனால் காவலாளியின் கைகள் பின் அப்படியே நின்று விட்டது!!!!

ஆனாலும் அனைவருமே வந்து விட்டனர் அறிந்தும் கூட எதை என்றும் புரிந்தும்... எதை என்று கூட யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

(அனைவரையும் உறைந்து நிற்கச் செய்து விட்டார் வள்ளி தேவி)


மீண்டும் வள்ளி மன்னனை பார்த்து 

மடையனே... அதாவது மன்னனே... பின் யார்?? என்று அறிந்தும் கூட... அதாவது பின் உன் மக்களை(மன்னனின் ஆதரவாளர்கள்) அறிந்தும் கூட இங்கேயே... யான் நிற்கின்றேன்!!! அதாவது உன் காவலாளிகளும் சரியில்லை!!! நிச்சயம் யாரும் சரியில்லை!! என்று!! 

அதனால் அங்கங்கே நிற்க வைக்கின்றேன் என்று!!!


(அரசனின் ஆதரவாளர்கள் அனைவரையும் அப்படியே உறைந்து போக செய்துவிட்டார் வள்ளி தேவி)




மன்னனே அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் மன்னன் மட்டும் அங்கே நின்றான்..

மன்னா???... நான் தான் இறைவன் என்று சொன்னாயே!!! உன்னால் என்ன செய்ய முடிந்தது??? இப்பொழுது பார்!!! என்று!!

அதனால் பின் நிச்சயம் பொதுமக்கள் அனைவரும் ஓடோடி வந்தனர்... அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட.. பின் அதாவது எதை என்றும் அறிந்தும் கூட இதனால் 

மன்னா!!!!.... உன் வாயால் சொல்லிவிடு!!!!
நிச்சயம் இறைவன் தான் பெரியவன் என்று!!!


பின் அதாவது மன்னனும் யான் சொல்ல மாட்டேன் என்று. 

வள்ளி தேவி 
ஆனாலும் இன்னும் அதாவது தரைமட்டமாக போகின்றது உன் அரண்மனை என்று!!! சொல்லி பின் மன்னனின் அரண்மனையை தரைமட்டம் ஆக்கினாள்..... நிச்சயம் வள்ளி!!

இதனால் மன்னன் மட்டும் தனியாக அறிந்தும் கூட இதனால் அனைவரும் ஒன்று கூடி விட்டனர்...

ஒரு பெண் அதாவது வள்ளி தான்... என்று யாரும் பின் அறிந்தும் கூட பின் சொல்லவில்லையே என்று அறிந்தும்... தெரியவில்லையே என்று... என்றெல்லாம் 

 நிச்சயம் வந்து இதனால் நிச்சயம் முருகன்தான் இங்கு எதை என்றும் அறிய அறிய அனைத்து விளையாட்டையும் என்று 

இதனால் நிச்சயம் மன்னா!!!
அறிந்தும் எதை என்றும் புரிந்தும்... இவை என்று கூட இதனால்... இறைவன் தான் மிகப்பெரியவன் என்று ஒத்துக் கொள்கின்றாயா??? என்ன!!!
அப்பொழுதுதான் பின் நிச்சயம் என்று 

ஆனால் மன்னனும் பின் மௌனம் காத்தான் !!! இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டான்! 

இதனால் மீண்டும் மக்கள் அனைவருமே.... முருகா முருகா என்றெல்லாம் பின் ஓடோடி வந்தார்கள்.... மலையின் மீதெல்லாம் ஏறி ஏறி பின் முருகனை வணங்கத் தொடங்கினார்கள். 

இதனால் பின் முருகனும் அறிந்தும் எதை என்றும் அறிந்தும் கூட இதனால்... இன்னும் மலைகளில் ஏறி ஏறி நிச்சயம் அப்பனே எதை என்று அறிய முருகனும் பின் காட்சியளித்தான்... நிச்சயம் பெருமான் போலே!!!!(முருகன் பெருமாளை போன்று தரிசனம் கொடுத்தார்) 

இதனால் அனைவரும் மக்கள் மனதில் முருகனும் பெருமானும் ஒன்றே என்று!!! பின் அவரவர் விருப்பப்படி பின் அறிந்தும் கூட வணங்க தொடங்கினார்கள்! 

ஆனால் வந்த பெண் யார்?? என்று கூட !!! பின் வள்ளி என்று கூட யாருக்கும் தெரியவில்லை.... உடனே வள்ளியும் மறைந்தாள்!!!

இதனால் எங்கு அந்தப் பெண் என்று தேடினார்கள்....

பின் அழகாகவே அறிந்தும் கூட.... அறிந்தும் கூட இவ்மலையில் வந்து நின்றாள் அப்பா!!!

(கந்தக்குறவள்ளி மலை எதிரில் இருந்த சிறையில் அடைத்திருந்த மலையிலிருந்து இந்த மலைக்கு வள்ளி தேவி வந்து விட்டார்)

கந்தக்குற வள்ளி மலை வாக்கு பாகம் மூன்றில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  4. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


    வணக்கம் அடிவர்களே

    கந்த குற வள்ளி மலை வட்டமலை.
    தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
    கிருஷ்ணகிரி மாவட்டம்.635001.

    ஆலய கூகிள் மேப்

    https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete