​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 23 March 2025

சித்தன் அருள் - 1819 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு!





15/9/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: கந்த குற வள்ளிமலை கிருஷ்ணகிரி.

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலன்கள்!!!

அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் அப்பனே மனிதர்களுக்கு தரித்திரம் தான் என்பேன்!!

இதனால் அப்பனே நிச்சயம் பலமாக பின் இறைவனை பின் பிடித்து பிடித்து சென்றால்தான் அப்பனே பின் வெற்றி நல்கும். 

அப்பனே ஆனாலும் அப்பனே பின் தன் சுயநலத்திற்காகவே இறைவனை பின் வணங்குவார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!

இதனால் அப்பனே  பின் அன்பும் அப்பனே நிச்சயம்""""இறைவா நீதான் அனைத்தும் !!!! என்று அப்பனே பின் வணங்கி வந்தாலே போதுமானதப்பா. 

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் பின் அக்கிரமங்கள் பின் அநியாயங்கள் இன்னும் இன்னும் அப்பனே நீண்டு போகுமப்பா!!!

இதனால் அப்பனே பின் ஏன்? எதற்கு? பின்  எவை என்று அறிய அறிய இவ் மலையில் பின் முருகன் அழகாகவே பின் அனைத்து தெய்வங்களும் கூட பின் குடிகொண்டு எவை என்று அறிந்தும் கூட!!!

ஏன்? எதனால்? என்பதையெல்லாம் அப்பனே இப்பொழுது யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!

இதையென்றும் அறிய அறிய அப்பனே!!! இவ் நிலத்தை அப்பனே பின் சில ஆண்டுகளுக்கு முன்பே அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பே அப்பனே ஒரு அரசன் ஆண்டு வந்தானப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட இதனால் பின் அவ் அரசன் அப்பனே அனைத்து மக்களையும் கூட தன் வசப்படுத்தினான். 

யான் என்ன சொல்கின்றேனோ!!!!!  அனைவரும் அதைத்தான் கேட்க வேண்டும் மக்கள் என்றெல்லாம்!!!! 

பின் இறை பக்தியும் பின் அதாவது அன்பும் ஆதரவும் அதாவது இன்னும் இன்னும் பின் முருகன் மீது பக்திகள் இங்கெல்லாம் (அந்த நாட்டில் மக்கள் அனைவரும் முருகன் மீது பக்திகள்) அப்பனே!!!!

இதனால் அப்பனே பின் அதாவது மன்னனுக்கு சில கர்வம் ஏற்பட்டது!!!

பின் அதாவது முருகனை பின் அறிந்தும் கூட யான் இங்கு இருக்கின்றேன் . 

எங்கு இருக்கின்றான்??? முருகன்!!! என்றெல்லாம்

(அதாவது அந்த அரசன் நான் தான் இங்கு இருக்கின்றேன் நான்தான் உங்களுக்கு கடவுள் முருகன் எங்கு இருக்கின்றான் என்றெல்லாம்) 

ஆனால் மக்கள் அனைவருமே பின் மலைகளில் ஏறி ஏறி முருகா முருகா என்றெல்லாம் அழைக்கின்றார்கள் 

ஆனாலும் இப்படியே பின் முருகனை வணங்கினால்???

ஆனால் நம்தனை மறந்து விடுவார்கள்... மீண்டும் பின் அறிந்தும் கூட. 

அதனால் நிச்சயம் அறிந்தும் கூட யான் தான் பின் இறைவன் என்றெல்லாம் நிச்சயம் அறிந்து அவ் மன்னனும் கூட. 

இதனால் தளபதியாரை அழைத்து... நிச்சயம் பின் அதாவது முருகனை அனைவரும் வணங்குகின்றார்கள் அல்லவா!!!!

நிச்சயம் தளபதியாரே!!! இப்படியே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் நம் தன்னை அனைவரும் மறந்து விடுவார்கள்!!!

நிச்சயம் பின் அதாவது உலா வந்து அனைத்து மக்களிடமும் எதை என்று கூட சொல்!!!

மன்னன் தான் இனிமேல் பின் இறைவன்...

பின் முருகனை எல்லாம் வணங்கக்கூடாது!!! என்று மன்னன் உத்தரவிட்டான்!!

இதனால் அறிந்தும் கூட பின் அனைத்து இடங்களிலும் கூட அதாவது இங்கும் இதன் பக்கத்தில் சார்ந்துள்ள இடங்களில் எல்லாம் சென்று பின் அறிந்தும் கூட பின் அதாவது பம்பை (தண்டோரா)அடித்து அறிந்தும் கூட இனிமேல் பின் முருகனை யாரும் வணங்க கூடாது!!

அப்படி வணங்கி வந்தால் நிச்சயம் அனைவருக்கும் மரண தண்டனை தான் பின் மன்னனும் கொடுப்பான்.

அதனால் மன்னன் தான் இங்கு இறைவன்... பின் அதாவது மன்னன் என்ன? சொல்கின்றானோ!? அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றெல்லாம்! 

நிச்சயம் அதாவது ஏற்கனவே அவந்தனுக்கு கர்வம் அதிகம். 

இதனால் நிச்சயம் அவ் மன்னனும் கூட அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இப்படி ஒரு கட்டளையை இட்டான்.

இதனால் நிச்சயம் அறிந்தும் கூட மக்கள் பின் எப்படி? அறிந்தும் கூட அதாவது பின் மனிதனை எப்படி? தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடியும்???? என்றெல்லாம்!!

இதனால் அவ் மன்னனும் கூட பின் பல ஊர்களிலும் கூட சென்று சென்று என்னை மட்டும் வணங்க வேண்டும் 
இதனால் நிச்சயம் பல பெண்களையும் கூட காயப்படுத்தி மனதை காயப்படுத்தி எதை எதையோ பேசினான்.

அதாவது பெண்கள் அனைவருமே எந்தனுக்கு அதாவது அறிந்தும் கூட பின் கால்களுக்கு அபிஷேகங்கள் செய்ய வேண்டும்... அப்படி செய்யாதவர்கள் அங்கேயே பின் அறிந்தும் கூட மரண தண்டனை என்று. 

இதனால் பின் அறிந்தும் கூட அனைவரும் பின் வந்து வந்து வந்து நிச்சயம் பின் அதாவது இறைவனை நீங்கள் எப்படி வணங்குகின்றீர்களோ... அதேபோலத்தான் எந்தனுக்கும் கூட ஆராதனைகளும் கூட.. அதாவது பாதாபிஷேகங்கள் கூட செய்ய வேண்டும் என்று நிச்சயம் அறிந்தும் கூட. தளபதியாருக்கு உத்தரவிட்டான்.

அதேபோல் மக்கள் அறிந்தும் கூட பின் அதாவது இங்கெல்லாம் பின் அறிந்தும் கூட பல திருத்தலங்களில் முருகன் அறிந்தும் கூட. 

அங்கெல்லாம் அந்த திருத்தலங்களுக்கெல்லாம் தடையிட்டான் (திருத்தலங்களுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்தான்) எவை என்று கூட காவலாளிகளை கூட காவலுக்கு வைத்தான்... முருகன் இடத்திற்கு பின் செல்பவர்களை எல்லாம் அங்கேயே நிச்சயம் அடித்து உதைத்து பின் மரண தண்டனையை கொடுங்கள் என்றெல்லாம். 

இதனால் பின் அச்சப்பட்டனர் மக்கள். 


திருத்தலங்களுக்கு செல்வதற்கு பதிலாக மன்னனிடம் தான் செல்ல வேண்டும்.. மன்னனுக்கு தான் அபிஷேகங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம். 

இதனால் மன்னனும் இன்னும் கர்வம் கொண்டான். 

பின் அதாவது முருகா!! அறிந்தும் எதை என்றும் அறிய அறிய..... உன்னை வணங்கினார்களே.... நிச்சயம் மக்களை எங்கு வந்து நீ காப்பாற்றினாய்?????

அதாவது நீ எங்கு இருக்கின்றாய்???

பார்த்தாயா!!!! யான் அரசன்!!! அறிந்தும் கூட எந்தனுக்குத் தான் இப்போது அபிஷேகங்கள் செய்கின்றார்கள்!!! அப்பொழுது நிச்சயம் நீ எங்கு இருக்கின்றாய்???
யான் இங்கு இருக்கின்றேன் என்று..


ஆனாலும் இதைப் பார்த்த நிச்சயம் அறிந்தும் கூட பின் வள்ளி!!! எதை என்று கூட நிச்சயம் இதை என்றும் அறிந்தும் கூட கோபமுற்றாள்!!!

பின் அதாவது முருகனை அதாவது அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிந்தும் கூட திருத்தணிகை மலைதனில் நின்று எதை என்று அறிய அறிய... பின் இதை என்று கூட 

முருகனைப் பார்த்து வள்ளி!!

அன்பானவனே!!! உன்னை நோக்கி அதாவது நீ எவ்வளவு சக்தி என்பதையெல்லாம் பின் யான் அறிவேன்!!!

ஆனாலும் இப்படிப்பட்டவன் ஒருவன் இருக்கின்றான் அல்லவா!!! இவனை முதலில் பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய.... இவந்தனைக் கொன்றால் தான் மக்களுக்கு பின் தீர்வுகள்!!! அதாவது பின் நல்படியாகும்!!

ஆனால் முருகனோ!!!!

பின் வள்ளியிடம் நிச்சயம் பின் வள்ளியே!!!!! சிறிது நில்லும்!!!!

உடனடியாக தண்டனைகள் கொடுத்து விட்டால் பின் நிச்சயம் அவந்தனுக்கு ஒன்றுமே தெரியாமல் போய்விடும். 

அதனால் சிறிது சிறிதாக பின் தண்டனை கொடுப்போம் என்று!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் இதை என்றும் புரிந்தும் கூட!!! 


வள்ளி தேவி முருகனைப் பார்த்து

அதனால் நிச்சயம் அன்பானவனே!!!! இப்படி எல்லாம் நீ பேசக்கூடாது!! நிச்சயம் பின் அதாவது உனை நிச்சயம் இப்படி பேசுபவனை யானே தண்டிக்கின்றேன் என்று நிச்சயம் அதாவது... முருகா நீ அமைதியாக இருந்தாலும் யான் நிச்சயம் செல்வேன் என்று கோபமுற்று நிச்சயம் அறிந்தும் கூட வள்ளி அதாவது அறிந்தும் இதை என்று கூட பின் அதாவது திருத்தணிகை மலையில் இருந்து பின் எதை என்று அறிய அறிய ஓடோடி இங்கு வந்து விட்டாள். 

அறிந்தும் கூட இதனால் பின் அவ் மன்னனும் கூட கொடுமைப்படுத்தினான் பெண்களை. 

நிச்சயம் பின் அறிந்த இவைதன் கூட.... அதாவது அனுதினமும் நிச்சயம் பின் அதாவது மன்னனும் யான் முன் சொன்ன மாதிரி உத்தரவிட்டான் அறிந்தும் கூட 

பெண் இதனால் அதிகாலையிலே பெண்கள் அனைவரும் வந்து அதாவது மன்னனின் கால்களுக்கு அபிஷேகம் செய்ய பின் அனைத்தும் பின் இறைவனுக்கு எப்படி எல்லாம் செய்கின்றீர்களோ அப்படியே செய்ய வேண்டும் யான் தான் இறைவன் என்று.

இதனால் அதாவது பின் பெண்களோடு வள்ளியும் நின்றாள் வரிசையில் கூட.

அறிந்தும் கூட எதை என்றும் கூற இவை என்று கூற அப்பனே... ஒன்றும் ஒன்றும் கூற இதனால் நிச்சயம் இன்னும் இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் அப்பனே.

இப்படித்தானப்பா கலியுகத்தில் கூட செய்து கொண்டிருக்கின்றார்கள் பல மனிதர்கள்...

அப்பப்பா!!! இறைவனுக்கு அப்பனே அதாவது இறைவனின் நிலையை அறியாமல் அப்பனே பின் மனிதன் தான் தெய்வம் என்று நினைத்துக் கொண்டு பல பேர் இருக்கின்றார்களப்பா!!!!

இது எவ்விதத்தில் நியாயம்??? எவ் விஷயத்தில் சேரும்???? இதனால் அப்பனே எங்கு போய் முடியும்???

அப்பனே இதற்கு இறைவன் என்ன தண்டனை ?? என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே... அதாவது தம் தன் குடும்பம் எப்பொழுதுமே பின் முன்னுக்கு வர முடியாதப்பா!!!

எப்பொழுது?? பின் மனிதனை தெய்வமாக பின் யார் ஒருவன்? ஏற்றுக்கொள்கின்றானோ? அவந்தனுக்கு எப்பொழுதுமே ஆசிகள் இல்லையப்பா!!! இவ்வுலகத்தில் எப்பொழுதும் கூட.... சொல்கின்றேன் அப்பனே!!!

இதனால் மனிதன்! மனிதன்!! தான்!!

தெய்வம்! தெய்வம்!! தான்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே மனிதனுக்கு பல வழிகளிலும் கூட அப்பனே மரியாதைகள் இன்னும் அப்பனே கால்களுக்கு அபிஷேகங்கள் அப்பனே!!!

இவையெல்லாம் அப்பனே மனிதனின் தரித்திர செயல்கள் என்பேன் அப்பனே!!

ஆனாலும் சித்தர்கள் இவைதனை ஏற்றுக்கொள்ள முடியாதப்பா!!!

அறிந்தும் கூட!!!

எதை என்று கூட!!!.... ஆனாலும் அப்பனே சரியாகவே  வரிசையில் நின்று நிச்சயம் வள்ளியும் கூட அறிந்தும் கூட நின்றாள்!!!

நின்றாள் !!அப்படியே!!

பின் அதாவது இவள்தன் புதுமையாக புதிதாக இருக்கின்றாளே!!!

 யார் இவள்???? என்று நிச்சயம்!! உன் பெயர் என்ன??? என்று வள்ளியை பார்த்து மன்னனும் கேட்டான்!!

அதற்கு வள்ளியும் கூட முழித்தாள்!!!! அறிந்தும் கூட அதாவது அமைதி காத்தாள்!!!

பின் அதாவது (அரசபையில் அரசன் சேவகனை அழைத்து) புலவனே!!! வா!!!  

இவள் ஒருத்தி மட்டும் எப்படி? தைரியமாக நிற்கின்றாள் ஒரு பெண்ணானவள்... இவளை பின் சிறையில் அடையுங்கள் என்று...

நிச்சயம் அப்படியே செய்வதற்கு வந்தபோது 




என்னை தொடாதீர்கள் என்று வள்ளியும் கூட!!!

இதனால் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய இப்பொழுதும் கூட வள்ளியை சிறையிட்ட அவ் மலை.... இவ் மலையின் மறுமுனையிலே இருக்கின்றதப்பா!!!

(கந்த குற வள்ளி மலையின் நேர் எதிரே இருக்கும் மற்றொரு மலையில் உள்ள குகையில் தான் பெண்ரூபத்தில் வந்த வள்ளி தேவியை சிறையில் அடைத்திருந்தான் மன்னன்)


இதனால் அப்பனே அங்கு ஒரு குகை.... பின் அறிந்தும் கூட வள்ளியினை கூட அப்பனே பின் அடைத்து விட்டனர் குகையில் கூட அப்பனே 

இதையென்று அறிந்து அறிந்து.... இதனால் முருகனும் கூட பின் அப்பனே அறிந்தும் எதை என்றும் உணர்ந்தும் கூட 
முருகனும் கூட அமைதி பொறுத்தான். 

இதனால் பின் வள்ளியும் கூட இங்கிருந்தே பின்...

முருகா!!!!! என்று அறிந்தும் பின் எதை என்று அறிய அறிய!!

முருகன்
பின் அதாவது பின் நீ என் சொல் பேச்சு கேட்கவில்லையே என்று...

ஆனாலும் வள்ளிக்கும் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட சக்திகள் இருக்கின்றது...

ஆனாலும் ஏன்!!?? இங்கு பின் அவ் சக்திகளை காட்டவில்லை என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட.... பார்ப்போம் என்று!!!

இதனால் அப்பனே எதை என்று கூட உணர்ந்து உணர்ந்து. 

ஆனாலும் மன்னனும் அப்பனே பின் மாலை வேளையில் கூட அப்பனே...... சிறையில் ஒரு பெண் இருக்கின்றாளே.... அவள் தனக்கு என்ன கர்வம்??!! பின் யான் தான் கடவுள் என்று சொன்னேன்!!!! வணங்கச் சொன்னேன்!!!

ஆனால் என்னையும் வணங்கவில்லை பின் கால்களுக்கு அபிஷேகங்கள் செய்யச் சொன்னேன்.. பின் அறிந்தும் கூட அவள் செய்யவில்லை... அவளுக்கு எவ்வளவு கர்வம்??? என்று நினைத்துக் கொண்டு! பின் அவளிடத்தில் சென்றான்!!(குகைக்கு மன்னன் சென்றான்) 

சென்று பின் மெதுவாக பெண்ணே!!! நீ யார்?? உன் பெயர் என்ன??? அறிந்தும் கூட ஏன் அனைத்து பெண்களும் என் கால்களில் பின் விழுகின்றார்கள்!! விழுந்து வணங்குகின்றார்கள். 

 ஆனால் நீயோ எதை என்றும் புரியாமல் இருக்கின்றாய்... இதனால் உந்தனுக்கு நாளையே யான் மரண தண்டனை ஈய (தர) போகின்றேன் என்று!!!!

கந்தக் குறவள்ளி மலை வாக்கு பாகம் இரண்டில் தொடரும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. OM SRI SARAVANA BAHVAYA NAMO NAMAHA. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  3. OM SRI SARAVANA BAHVAYA NAMO NAMAHA. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


    வணக்கம் அடிவர்களே

    கந்த குற வள்ளி மலை வட்டமலை.
    தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
    கிருஷ்ணகிரி மாவட்டம்.635001.

    ஆலய கூகிள் மேப்

    https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete