​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 27 March 2025

சித்தன் அருள் - 1822 - அன்புடன் அகத்தியர் - கந்தக் குறவள்ளி மலை வாக்கு - 4!









கந்த குற வள்ளி மலைவாக்கு பாகம் 4.. தொடர்கின்றது 

வணக்கம்  அடிவர்களே

கந்த குற வள்ளி மலை வட்டமலை. 
தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம்.635001. 

இந்த மலையில்.. திரு. காவி சுப்பிரமணிய சுவாமிகள்... ஒரு அறக்கட்டளையை நிறுவி இந்த மலையில் ஆலயம் எழுப்புவதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டு வருகின்றார். 

2016 வரை சுயம்பு வழிபாடு அதாவது உருவ வழிபாடு இல்லாமல் மலைக்குறவர் இன மக்களால் குலதெய்வ வழிபாடாக தலைமுறைகளாக வழிபாடுகளும் பூஜைகளும் செய்யப்பட்டு வந்தது. 

2017 ஆம் ஆண்டு முதல் கட்டமாக வள்ளி அம்மனின் சிலையை நிறுவி திருவிழாக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.

2020 ஆண்டில் முருகர் சிலை சிவலிங்கம் பைரவ மூர்த்தி ஆஞ்சநேயர் நந்தி மயில் விக்கிரகங்களும் அமைக்கப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் நடந்து வருகின்றது.

குருநாதர் இந்த ஆலயத்தில் வந்து வாக்குகள் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விண்ணப்பம் வைத்து அதன்படி குருநாதர் உத்தரவு தந்து அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா இந்த மலைக்கு சென்று வாக்குகள் படித்தார். 

அப்பொழுது இந்த ஆலயத்தை அமைப்பதற்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கும் முதன்மை பொறுப்பாளராக இருந்து துறவறம் பூண்டு சேவை செய்து வரும்... காவி சுப்பிரமணிய சுவாமி இவருக்கு குருநாதர் தந்தருளிய வாக்கு...

ஆனாலும் யாங்கள் இருக்கின்றோம் அப்பனே சரியாகவே அப்பனே கந்தனும் இங்கு இருக்கின்றான் அப்பா!!

கவலையை விடு அப்பனே!!!

முனீஸ்வரன் கூட அப்பனே உன் மேல் இறங்குவான் அப்பா வாக்குகளும் சொல்வானப்பா 

இப்பொழுது ஒரு வாக்கைச் சொல்!!!!

(குருநாதர் அகத்தியர் பெருமான்... அவரிடம் சுவடியில் அவருக்கு அப்பொழுது ஒரு உத்தரவை கொடுத்தார் உன் உடம்பில் முனீஸ்வரன் இறங்குவான் இப்பொழுது உன் வாயால் ஒரு வாக்கை சொல்ல வேண்டும் என்று குருநாதர் உத்தரவிட்டார்) 

அந்த அடியவரும்...... குருவே நமஸ்காரம்.... அடியவன் உடம்பில் வால் முனி... எனும் முனீஸ்வரன் அடிக்கடி இறங்குவார் அவ்வப்பொழுது வாக்குகளும் சொல்வார்.... என்று கூறிவிட்டு 

அனைவரையும் பார்த்து நீங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அம்மாவின் பரிபூரண ஆசிகள் என்று கூறினார். 

ஆனால் குருநாதர் அகத்திய பெருமான்

அப்பனே அறிந்தும் கூட அப்பனே இவை இல்லை ... இன்னும் சொல்!!!!

அடியவர்.

மௌனமாக முனீஸ்வரனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை நீ சுமக்கின்றாய்? என்பேன் அப்பனே.... நிச்சயம் இங்கு ஒருவன் இருக்கின்றானப்பா!!! தரித்திரம் பிடித்தவன்... அவனை நீ முதுகில் ஒரு அடி அடிக்க வேண்டும் நீ அப்பனே 

(மலையில் குருநாதர் வாக்கு நல்கும் பொழுது அந்த மலையைச் சேர்ந்த பக்தர்களும் ஆலய அறக்கட்டளையை சேர்ந்த நபர்களும் இருந்தனர்.... காவி சுப்பிரமணிய சுவாமிகள் பார்த்து உங்கள் கூட்டத்தில் ஒருவன் தரித்திரம் பிடித்தவன் இருக்கின்றான் அவனை உன் கையால் ஒரு அடி அடிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்) 

அப்பனே அதாவது உன்னிடத்தில் இருந்து அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எதை என்று அறிய அறிய பார்!!!

(அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் பக்கத்தில் இருப்பவரை சரியாகப் பார் என்று குருநாதர் கட்டளை) 

அடியவரும் ஒரு மனிதரை அதாவது பக்கத்தில் இருந்த ஒரு மனிதரை மெதுவாக ஒரு அடி அடித்தார். 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே இதை யான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை!!!

அடியவரும் அந்த மனிதரை மீண்டும் அடிக்க!!!

குருநாதர் அகத்தியர் பெருமான்

அப்பனே அப்படி இல்லை!!! அப்பனே நிச்சயம் எழுந்து நில் அப்பனே!!!

அப்பனே கயிறை எடு !!

(அவரிடம் இருந்த சாட்டை கயிற்றை )

எப்படி அடிக்கின்றாயோ அப்படி  போடு!!! அவன் மீது!!!அவனை அடி!!... தீய சக்திகளெல்லாம் அவன் மேல் இருக்கின்றது அவையெல்லாம் போகட்டும் அடி!!!

அவரும் அருகில் இருந்த மனிதரை படார் படார் என்று பலமாக அடித்தார்!!!

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... இதை யான் இங்கு உனக்கு ஏன்  சொன்னேன் என்றால்... அவனை அடிக்கச் சொன்னேன் என்றால்  அப்பனே அறிந்தும் எவை என்று... அறிய அறிய அப்பனே.... இவந்தனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்படப் போகின்றது என்பேன் அப்பனே.... இன்னும் ஓர் நவ தினங்களுக்குள்...

இதனால் அப்பனே அவை ஒழியட்டும் என்று தான் அப்பனே அடிக்கச் சொன்னேன் அப்பனே இதனால் அப்பனே....

(முனீஸ்வரர் வள்ளி முருகன் அருள்  பெற்ற அவர் அடித்ததன் மூலம் விபத்து ஏற்படவிருந்த விதி தரித்திரம் ஒழியட்டும் என்று அவரை அடித்ததால் இவருக்கும் புண்ணியம்)

இதன் மூலம் கூட உந்தனுக்கு புண்ணியமப்பா!!!!! நிச்சயம் அப்பனே உன் பிள்ளைகள் நன்றாகவே இருப்பார்கள் அப்பனே.... அதாவது எதை என்று கூட பின் இவ் முருகனே பார்த்துக் கொள்வான்.. உன் இல்லத்தில் அழகாகவே முருகன் இருந்து பார்த்துக் கொள்வான் அப்பா... கவலையை விடு...

இது போலத்தான் அப்பனே சிலசில புண்ணியங்கள் யானே சொல்வேன் என்பேன் அப்பனே!!!

அப்பனே கவலைகள் இல்லை அதனால் (ஆலயம் ). நீ நினைத்தவாறே அமையுமப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் நாள் நிச்சயம் அப்பனே இங்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது வீடு வீடாக சென்று அப்பனே நிச்சயம் பின் நிச்சயம் முருகனுக்கு அதாவது அன்னத்தை அளிக்க போகின்றோம் என்றெல்லாம் நிச்சயம் அப்பனே பின் தர்மம் ஏந்து!!! என்பேன் அப்பனே... முருகனுக்கு செய்!!! என்பேன் அப்பனே!!

(சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று முருகனுக்கு அன்னப்படையல் இடுகின்றோம்!! அனைவரும் ஏதாவது தாருங்கள் என்று தர்மம் ஏந்தி அதன் மூலம் கிடைப்பதை கொண்டு முருகனுக்கு படையல் இடச்சொல்லி அவருக்கு குருநாதர் உத்தரவு தந்தார்) 

முருகன் வந்து அழகாக... இங்கு இருக்கின்றான் அப்பா!!! கஷ்டத்தை பார்ப்பான் அப்பா!! இறைவனே அனைத்தும் பின் அதாவது கர்மாக்களையும் கூட நீக்கிவிட்டு... உந்தனுக்கு பக்க பலமாக இருந்து அப்பனே அனைத்தும் செய்து கொள்வான் அப்பனே இறைவனே!!

இதனால் அப்பனே... நீ ஒரு மனித கருவியாக மட்டும் நில்!! போதுமானது!! அப்பனே!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே!!

""""" ஈசனும் !!!! பின் பார்வதி தேவியாரும்!!!... நன்றாகவே அப்பனே இருக்கின்றார்கள் அப்பனே!!!

இன்னும் இன்னும் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே கவலையை விடு!! அப்பனே!!! உன் எண்ணத்திற்கு தகுந்தவாறே மெதுவாக நடக்குமப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது..

.யான் சொன்னேனே அப்பனே பின் அதாவது ஒரு காவலாளி வந்து அதாவது அப்பனே பின் அதாவது வள்ளியை அப்பனே கத்தியை எடுத்தானே ஒருவன் வள்ளியை வெட்டுவதற்கு... அவன் நீ தானப்பா!!!

(மன்னன் கட்டளைப்படி வள்ளி தேவியை வெட்ட வந்த பின் உறைந்து நின்ற காவலாளி!

 இப் பிறவியில் காவி சுப்பிரமணிய சுவாமிகள்)


இப்பிறவியில் அவள்தனுக்கே (வள்ளி தேவிக்கு) பின் சேவை செய்ய படைத்துள்ளாளப்பா!! அவ்வளவுதான்!!

இதனால் அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே... இப்பொழுதும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் அப்பனே அக் கத்தியின் ஞாபகம் வந்துவிடும்...

(அவருக்கு இப் பிறப்பிலும் அந்த வாளின் ஞாபகம் அடிக்கடி வந்து விடும்)


(காவி சுப்பிரமணிய சுவாமிகள் 

எனது வீட்டில் ஒரு வாள் இருக்கின்றது... ஆனால் அதை தற்போது நான் தொடுவதில்லை விட்டுவிட்டேன் என்று கூறினார் வாக்கியத்திற்கு இடையே)

அப்பனே கவலையை விடு அப்பனே சில சில தவறுகள் ஆயினும் அப்பனே முருகனே அதையெல்லாம் நீக்கிவிட்டு அனைத்தையும் சரி செய்வான் அப்பனே 


அப்பனே நல் முறையாகவே ஆகட்டும் என்பேக அப்பனே 

இதனால் அப்பனே பின் அனைத்து தெய்வங்களும் கூட பின் இங்கு வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... சந்தோசமாக  இவ் மலைகளில் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.

எதை என்றும் புரிய அப்பனே (இறைவன்கள் வந்து விளையாடும்) அவ் நேரங்கள்... உந்தனுக்கு சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் அழகாகவே நடக்குமப்பா!!

அப்பனே நன்முறையாக ஆசிகள் இதனால் எக்குறைகளும் இல்லை அப்பா பரிபூரணமாக அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய... இன்றைய நாளில் அப்பனே முருகனுக்கும் அப்பனே சந்தோசம் என்பேன் அப்பனே. 


அப்பனே பின் குறைகள் இல்லை என்பேன் அப்பனே அதனால் அப்பனே நல் முறையாகவே அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் உங்கள் பின் குலங்களை நிச்சயம் கடை நாள் வரையிலும் காப்பான் அப்பா!!

அப்பனே அவள் மட்டுமில்லாமல் அப்பனே முருகனுக்கு பின் சேவை செய்யவே பின் உன் பிள்ளைகள் அப்பனே முருகனே கொடுத்தானப்பா 

அதனால் எவ் வேலை செய்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அவர்களுக்கு எங்கும் வேலை கிடைக்காது அப்பா... முருகனே அனைத்தையும் ஏற்பாடு செய்வான் கவலைகள் இல்லை 


அப்பனே நலன்கள் ஆகவே குறைகள் இல்லை என்பேன் அப்பனே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும் எம்முடைய ஆசிகள் அப்பா ஆசிகள்...கடைநாளும்!!! யானும் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே யானும் செய்கின்றேன் அப்பனே கவலையை விடு..!!!

அப்பனே இன்னும் இன்னும் பலமாகவே உண்டு உண்டு என்பேன் அப்பனே... அப்பனே அதிக முயற்சி செய்து அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பல வழிகளிலும் கூட கஷ்டங்கள் பட்டு திருத்தலம் அமைத்தால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் யுகங்கள் யுகங்களாக போற்றப்படும் என்பேன் அப்பனே!!!

திடீரென்று அமைந்து விட்டாலும்...!?!?!?!?!?!?!?!...........


அதனால்தான் அப்பனே பின் திருத்தலத்தை அமைக்க கடுமையாக மனிதர்கள் போராடுகிறார்கள் என்பேன் அப்பனே 

அப்பனே இதனால் கவலைகள் இல்லை அப்பனே முருகனே அமைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அழகாகவே பின் ஓடி விளையாடிக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே...

அவை மட்டும் இல்லாமல் அப்பனே... பிள்ளையோனும் (கணபதி) அழகாகவே இங்கு எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே!....

அதனால் அப்பனே ஒரு முறை நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட பின் அனைவருமே (இறைவன்கள்) இங்கு வந்துவிட்டனர் என்பேன் அப்பனே!!

ஆனாலும் பிள்ளையோனே நிச்சயம் அறிந்தும் கூட அதாவது.... முருகன் சந்தோஷமாக இருக்கும் பொழுது... பிள்ளையோனை மறந்து விட்டான்  மறந்துவிட்டான். 

ஆனால் பிள்ளையோன்!!

முருகா!!!
என்னை நீ மறந்து விட்டாயா??!! என்று ... 

என்று பிள்ளையோன் நினைத்ததை முருகனுக்கு கேட்டு விட்டது...

இதனால் நிச்சயம் உடனடியாக அறிந்தும் கூட பின் மயில் வாகனத்தை அங்கு அனுப்பி அதன் மேலே வா என்று... அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய திருத்தணிகை மலையில் இருந்து இங்கு வந்தானப்பா !!

இங்கு அழகாக இந்த இடம் பிள்ளையோனுக்கு பிடித்தது.. (பிடித்துவிட்டது) இங்கு அவன் அமர்ந்து விட்டானப்பா!!

ஏது குறை??

அப்பனே ஆசிகள்!! ஆசிகள்!!

அங்கு கூடி இருந்தவர்கள் கோயில் எழுப்புவதை பற்றி கேள்வி எழுப்பிய போது 

அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் சொல்லி விட்டேன் அப்பனே 

முருகனின் விளையாட்டு போகப் போக புரியுமப்பா!!!!

ஆசிகள்!! ஆசிகள்!!

ஆலய கூகிள் மேப் 

https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. GURUVE SARANAM SARANAM. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  3. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்


    வணக்கம் அடிவர்களே

    கந்த குற வள்ளி மலை வட்டமலை.
    தேவ சமுத்திரத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    கட்டிக்கானப்பள்ளி பஞ்சாயத்து.
    கிருஷ்ணகிரி மாவட்டம்.635001.

    ஆலய கூகிள் மேப்

    https://maps.app.goo.gl/2mujCJfM4baf7u3F7

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. ஓம் சிவாய நம ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete