வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானின் திருவருளாலும், உங்கள் அனைவரின் வேண்டுதல்/பிரார்த்தனையினாலும், மறுபடியும் நலமாகி, குருவின் பாதையில் வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி!
சமீபத்தில் அகத்தியர் அடியவர் ஒருவர், குருநாதர் உத்தரவின் பேரில் வீட்டில் 9 விளக்கு ஏற்றுவது பற்றி வினவியிருந்தார். அவர் கேள்வியும், அதற்கான குருநாதரின் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
"அகத்தியர் அய்யா உத்தரவுப்படி, நவகிரக தீபம், மாசி மாசம் கடைசிவரை, செய்யச் சொன்னார். நாளைக்கு பங்குனி மாசம் பிறக்கிறது அய்யா! ஏதேனும் தகவல் (குருவிடமிருந்து) உண்டா?
"கிரகங்களால் உங்களுக்கு அதிக தொல்லை வராமல் இருந்ததற்கு, சிறப்பாக விளக்கேற்றி, கோளறு பதிகம் பதினமும் படித்து வந்ததால் தான். இனி வரும் காலங்களில் நிறைய தொல்லைகள் தான் கிரகங்களால் இவ்வுலகத்துக்கு வரப்போகின்றது. ஆகவே, விளக்கேற்றி கோளறு பதிகம் வாசிப்பதை இன்னும் நீட்டிக்கலாம், அதுவே நல்லது" என்கிறார் அகத்தியர்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடர்கிறது!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஅகத்தியர் ஐயா திருவருளால உடல் நலம் பெற்று திரும்பிய செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அய்யா... அகத்தியர் ஐயாவுக்கு நன்றி
ReplyDeleteசரிங்க ஐயா... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
உங்களுக்கு வெற்றி அருளும் கோளறு பதிகம் ரகசியங்கள். திருத்தலங்களில் சென்று படியுங்கள்.
Youtube link:
https://www.youtube.com/watch?v=LwWkKgVNqRE
கோளறு பதிகம் குறித்து குருநாதர் உரைத்த வாக்குகள் :-
சித்தன் அருள் - 1813 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!
சித்தன் அருள் - 1388 - அன்புடன் அகத்தியர் - அனந்த் நாக் மார்தண்ட் சூரியனார் கோயில். ஜம்மு காஷ்மீர்.
சித்தன் அருள் -1805 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - 2!
சித்தன் அருள் - 1812 - மறுபடியும் குருவின் பாதையில்!
சித்தன் அருள் - 1338 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 4
சித்தன் அருள் - 1682 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை!
வாக்கு சுருக்கம் / விளக்கம்
வணக்கம் அடியவர்களே, நவகிரகங்களின் துகள்கள் மனித உடம்பில் இதயத்தில் இருக்கின்றது. கோளறு பதிகத்தைப் பாடிக் கொண்டே இருக்கும் பொழுது, நிச்சயம் மனித உடம்பில் இதயத்தில் உள்ள நவகிரகங்களின் துகள்கள் அவை அசைகின்ற பொழுது, உங்கள் உடம்பில் இதயத்தில் உள்ள நவகிரக துகள்கள் மூலம் நேரடியாக விண் வெளியில் உள்ள நவகிரகங்களின் மீது எதிரொலிக்கும் தன்மை உண்டாகும். இதனால் நவகிரகங்கள் உங்களை தாக்காமல் அப்படியே விலகி நிற்கும். இதனால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இனி வரும் காலங்களில் நிறைய தொல்லைகள் கிரகங்களால் தான் இவ்வுலகத்துக்கு வரப்போகின்றது. நவகிரகங்களால் உங்களுக்கு அதிக தொல்லை வராமல் இருப்பதற்கு , சிறப்பாக அனுதினமும் ஆதி ஈசனாரை மனம் உருகி அன்புடன் திருத்தலங்களில் கோளறு பதிகம் படித்து, அத்துடன் அன்புடன் ஜீவராசிகளுக்குக் கட்டாயம் அன்ன சேவைகள் செய்து வர வர , இறை அருளால் நல் வாழ்வு உண்டாகும். அனைவர்க்கும் இயன்றவரை எடுத்து சொல்லிப் புரியவைத்து அவர்களையும் புண்ணியத்தில் இறக்கிவிடுங்கள். இவை அனைத்தும் புண்ணிய பாதையில் சென்றால் மட்டுமே நன்மை உண்டாகும். புண்ணியங்கள் செய்க. புண்ணியங்கள் செய்க. புண்ணியங்கள் செய்க. அனுதினமும் புண்ணியங்கள் செய்க.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !