சிவராத்திரி காசியில் ஈசனார் பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு பாகம் 2
பார்வதி தேவியார்:
நிச்சயம் மணாளனே நில்லும்!!!
அதை நீங்கள் கற்க வைக்கலாமே???!!! என்று!!
ஈசனார்:
ஆனாலும் பின் அனைத்தையும் ஒரு நேரத்தில் யான் உணர வைக்கின்றேன்! தேவியே!!!!
ஆனாலும் நிச்சயம் தேவியே!!! அனைத்தும் மனிதனிடத்தில் கொடுக்கின்றேன்...
ஆனால் அதை வைத்துக் கொள்வதும் நிச்சயம் வைத்துக் கொள்ளாததும் மனிதனுடைய கர்மாவே!!!!
ஆனால் இங்கு கர்மா பற்றி யான் பேசவில்லை!!! அதனைப் பற்றி பின் மைந்தன் அகத்தியன் அழகாக எடுத்துரைக்கும் பொழுது அறிவியல் மூலமாகவே தெரிந்து கொள்வீர்கள்!
ஏன்? எதற்கு? இவையெல்லாம் என்று!!!
நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!
காகபுஜண்டர் மகரிஷி:
தந்தையாரே!!! நிச்சயம் அனைத்தும் உண்மை!! அறிந்தும் இன்னும் எவ்வாறு? ஞானிகள்!!!
மக்கள் நிச்சயம் எதன்??? பின்னாலே செல்கின்றார்கள் என்று பார்த்தால்!!?!?!?! எதன் பின்னால் செல்கின்றார்கள் என்றால் நிச்சயம் மாயையின் வழியே!!!
பார்வதி தேவியார்:
பின் நில்லும்!!! நில்லும்!!! புசுண்டனாரே!!!
நிச்சயம் கூட அவ் மாயையும் கூட நிச்சயம் ஏற்படுத்தியவர் இவர்தானே!!!! அதாவது உன் தந்தை ஈசன் தானே!!!
கேளும் நீயும் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட!!!
காகபுஜண்டர் மகரிஷி:
அதாவது தாயே!!! அறிந்தும் நிச்சயம் எதற்காக ?? மாயையை நிச்சயம் அறிந்தும் ஏற்படுத்தி இருக்கின்றார் என்றால் !!!......
நிச்சயம் அதாவது... இரவு என்றால் பகல்... நிச்சயம் பின் நன்மை தீமை..
ஏன் பின் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிந்து பின் நடந்து இவை தீர நிச்சயம் தன்னில் கூட பகலெல்லாம் உழைத்து விட்டு இரவில் இரவு தன்னில் யோசிக்கவே!!! நிச்சயம் தன்னில் கூட பின் உறங்குகின்ற பொழுது... இதனால் அப்பொழுது யோசித்து விட்டால் நிச்சயம் மனிதன் உயர்ந்தவன் ஆகிவிடலாம்.
(இரவில் உறங்குவதற்கு முன் நன்மை எது தீமை எது உண்மை எது மாயை எது என்று யோசிக்க வேண்டும் அப்படி யோசித்தால் உண்மை நிலை புரிந்து உயர்ந்து விடலாம்)
ஆனால் யோசிப்பதில்லையே!!!
அதனால்தான் பின் எம் தந்தையும் இரவும் பகலும் கூட!!!
(படைத்திருக்கின்றார்)
பின் ஆனாலும் மனிதன் இன்னும் கூட புத்திகள் இல்லாமல் சுற்றி ! சுற்றி!!
அறிந்தும் எதை என்றும் புரிய!!!
அதனால்தான் நிச்சயம் பின் பக்தர்களையும் கூட!!!
அவர்களுக்கு அள்ளி கொடுத்து ஆனந்தத்தில் சில பக்குவங்களை புகுத்தி நிச்சயம் நின்றால்!!! அனைத்தும் மாறும்.. கலியுகம் அறிந்தும்.. அறிந்தும் அறிந்தும்.
ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் இதன் உண்மையை கூட!!
இதனால் மனிதனை விட்டுக் கொண்டே இருந்தால் இன்னும் நிச்சயம் நோய் பின் அறிந்தும் எதை என்று அறிய சில சில நுண்ணுயிர்களையும் கூட மனிதனே ஏற்படுத்தி இருக்கின்றான்.
பார்வதி தேவியார்:
பின் அறிந்தும் ஏன்? எதற்கு? இவை தன் கூட மனிதனின் கண்டுபிடிப்புகள்!!!
ஆனால் இதனையும் பின் அழித்து விட்டால் அறிந்தும் உண்மை நிலை எவ்வாறு? என்று புரிகின்றதா???
காகபுஜண்டர் மகரிஷி:
நிச்சயம் பின் தாயே!!!
அதாவது என் தந்தை நிச்சயம் எவ்வளவு பின் அறிவாளி!!!! அறிவாளிகளை எல்லாம் பயன்படுத்தி பின் அதாவது அறிவாளிகளாக நிச்சயம் பின் நல் புத்திகளை கொடுத்து நிச்சயம் தன்னில் கூட உலகத்திற்கு அனுப்புகின்றான்.
பின் அதாவது அவ் புத்தியை சரியாக பயன்படுத்துவதே இல்லை
அதனால்தான் அழிவுகள்.
புத்தியை அதாவது ஏன்? எதற்கு? வரும் காலங்களில் அழிவுகள் என்றால்... மனிதன் பின் நுண்ணுயிரிகளை கண்டுபிடித்துள்ளான்.
(மனிதனே மனிதர்களை அழிக்க சில செயற்கையான கிருமிகளை உருவாக்கி வைத்துள்ளான்)
அதை எப்படியாவது பின் அதை விட்டால்!?!?!?!?!?
ஆனால்... அதைக் கூட ஓரிடத்தில் வைத்திருக்கின்றான்!.
நிச்சயம் பின் அதாவது இதை தன் சோதனை!!
(மனிதர்களிடத்தில் பரப்பி)
செய்து பார்ப்போமா??? என்று!!
ஆனாலும் நிச்சயம் அவனை அங்கேயே தட்டி நிச்சயம் பைத்தியக்காரனாக ஆக்கி அறிந்தும் எதை என்றும்!!!
(செயற்கையாக கிருமிகளை உருவாக்கி மனிதர்கள் மீது ஏவி விட்டு சோதனை செய்து பார்க்க நினைத்த மனிதனை அடித்து அவனை பைத்தியம் போல் ஆக்கிவிட்டார்)
புரிகின்றதா ஏன்? எதற்கு? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!
அறிந்தும் அறிந்தும் பின் நிச்சயம் பின் என் தந்தையார் கருணை மிகுந்தவர்!!!
அனைத்தும் கொடுக்க வல்லவர்.
எதை என்று ஏன்? நிச்சயம் தன்னில் கூட.. பின் தந்தையானவர் அனைத்துமே கொடுக்கின்றார்.. நிச்சயம் தன்னில் கூட!!!
அதாவது மனிதன் அனைத்தும் செய்துவிட்டு மீண்டும்.. தந்தையை வந்து தொழுகின்றான்!! இது எவ்வாறு நியாயம்??
அறிந்தும் மீண்டும் அழிக்கின்றான்!!.
இதனால் நிச்சயம்... நிச்சயம் நிச்சயம் தாயே!! தாயே!! நிச்சயம் சில திருத்தலங்கள் இருக்கின்றது...
அங்கு செல்ல நிச்சயம்.. செல்லச் சொல் பார்ப்போம்!! நிச்சயம் தண்டனைகள் உண்டு!!
பின் அதாவது அதே திருத்தலத்தில் கூட பாவம் கரைந்து புண்ணியம் !!! அறிந்தும் கூட.
(பாவம் செய்த மனிதர்கள் சில திருத்தலங்களுக்கு செல்ல முடியாது அவர்கள் செய்த பாவம் அங்கு செல்ல அனுமதிக்காது.... அவர்களுக்கு தண்டனை உண்டு!
அத்தகைய திருத்தலங்களுக்கு சென்றால் பாவங்கள் தீரும் புண்ணியம் ஏற்படும்... ஆனாலும் ஆலயங்களுக்கு செல்வதற்கும் புண்ணியங்கள் வழி விட வேண்டும்)
பார்வதி தேவியார்'
நில்லும்!!! நில்லும்!! பின் நிச்சயம் அன்பான மணாளனே.... அறிந்தும் பாவம்!! பின் எப்படி? நிச்சயம் புண்ணியம்!!! எப்படி மனிதனுக்கு ஏற்படுகின்றது??
நிச்சயம் விளக்கமாக எடுத்துரையுங்கள்!!!
பின் மணாளனே!!! இதற்காகவது பதில் அளி!!
அனைத்தும் சொல்லவில்லை!!! இதோ புசுண்டன் இருக்கின்றானே..!!!!!!!
பின் அடிக்கடி உள் நுழைந்து நிச்சயம் தன்னில் கூட... என் மனதை கூட மாற்றி விட்டான்.
காகபுஜண்டர் மகரிஷி:
பின் தாயே!! தாயே!! நிச்சயம் அப்படி எல்லாம்.. கூறாதீர்கள்... பின் உங்களுக்கும் நிச்சயம் நீங்களும் கூட கருணை உள்ளவர்தான்.. பின் அதாவது தந்தை ஏதாவது கொடுத்தாலும் நீங்கள் தடுத்து பின் நிறுத்தி நிச்சயம்... இதோ !! இதோ!! நிறுத்து!! நிறுத்து!! என்கின்றீர்கள் அல்லவா !!!!
நிச்சயம் உங்களுக்கு இணை யார்??? என்று பின்!!
பார்வதி தேவியார்:
எதை எடுத்தாலும் நிச்சயம் புசுண்டரே.. ஏதாவது ஒன்றை சொல்லி விடுகின்றாய்... பின் நிச்சயம் அறிந்தும்... இவை என்று அறிய அறிய இன்னும் பின் அதாவது நிச்சயம் பின் அன்பானவரே!!! எடுத்துரை!!!
பின் பாவம் என்ன?? புண்ணியம் என்ன???
ஈசனார்:
நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... பாவம் புண்ணியம் ஏன் ? எதற்கு? என்பவை எல்லாம்... அதாவது இவையெல்லாம் பின் அகத்தியனே!!! ஏற்கனவே மீண்டும் எடுத்துரைத்து விட்டான்.
மீண்டும் நிச்சயம் யான் எடுத்துரைக்கின்றேன்.
இங்கு பாவம் புண்ணியம் என்பதையெல்லாம் நிச்சயம் பின் அதாவது இட்டு இட்டு... அதாவது ஒருவனுக்கு நிச்சயம் தன்னில் கூட... யான் எதுவுமே கொடுப்பதில்லை நிச்சயம் அதாவது பாவம் புண்ணியம்... பிரம்மா அழகாகவே இட்டு அனுப்புகின்றான்.
ஆனாலும் பிரம்மாவோ!!???
இரு!!
யான் அனுப்புகின்றேன்.. இவன் என்னென்ன செய்கின்றானோ??? அதற்கு தகுந்தாற்போல் ஏற்கனவே மிச்சம் இருக்கின்றதே (முற்பிறவிகளில் செய்த பாவங்கள் புண்ணியங்கள்) அதை அனுப்பிவிடு!!! என்று!!
ஆனால் பின் யான் மனதில் எண்ணி எண்ணி !! நன்றாக அனுப்புவேன்!!!
பாவம் புண்ணியம் எதுவுமே இல்லாமல்... !!
யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று!!!
ஆனால் அவன் வளர வளர.. அவன் செய்கின்ற செயல்கள் என்னவென்று??? கூற... !?!?!
அதனால் பிரம்மாவும் வந்து அறிந்தும்... ஈசனாரே!!! பார்த்தாயா?? என்று!!!
நிச்சயம் பின் இங்கு யான்!?!?!?!?!?!....
அறிந்தும் அதனால்.. கருணை கொண்டவர்களே இங்கு தோல்வி அடைந்து விடுகின்றார்கள்... அறிந்தும் உண்மைதனை கூட!!
(அதாவது ஈசன் தன்னை தானே கருணை கொண்டு அனைத்தும் மனிதர்களுக்கு செய்தாலும் மனிதர்கள் அதை புரிந்து கொள்ளாமல் தவறான வழியில் நடப்பதை கண்டு அந்த இடத்தில் அவர் தாம் தோல்வியுற்றதாக எண்ணிக் கொள்கின்றார்)
இதனால் மீண்டும் பிரம்மாவே!!! மீண்டும் உள் புகுத்தி!!!!
அதனால் அறிந்தும் மாற்ற வல்லான்!!!
விதியையும் கூட பின் சென்று சென்று பிரம்மாவும் கூட அறிந்தும்... சுற்றிக்கொண்டே!! சுற்றிக்கொண்டே!! புவி தன்னில்.. அறிந்தும் பின் அதாவது சுற்றிக்கொண்டே!!!!!!
நிச்சயம் தன்னில் கூட பின் கண்களால் பார்த்தால் நேர்கோடு (விதி தலையெழுத்து) ஆகும் என்றெல்லாம்!!!!
நிச்சயம் அப்படி பின் குனிந்து சென்றால்????
(விதியை.. எழுதி மனிதர்களை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று பூமியில் வந்து பிரம்மா சுற்றிக்கொண்டு அனைவரையும் பார்க்கும் பொழுது புண்ணியங்களை செய்து கொண்டிருந்தால் பாவங்களை செய்யாமல் இருந்தால் தலையெழுத்தை மாற்றி நேர்கோடாக மாற்றி விதியே மாறும்.
ஆனால் மனிதர்கள் புண்ணியங்களை செய்யாமல் பாவங்களை செய்து கொண்டிருப்பதால் பிரம்மா நேரடியாக யாரையும் பார்க்காமல் தலை குனிந்து செல்வதால்... யாருக்கும் விதி மாறுவதில்லை இந்த உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை)
அதனை அறிந்தும் உண்மைதனை கூட எடுத்துரைக்க ஆள் இல்லையே!!!!!
ஆள் இல்லையே!! தேவியே!!!
கேளும் !கேளும் !இன்னும் இன்னும்!!
பார்வதி தேவியார்:
நிச்சயம் பின் இவ்வாறெல்லாம் அறிந்தும் நிச்சயம் இதை என்று புரியும் வண்ணம் கூட சரி!!!
அழகாக பின் மகிழ்ச்சி!! அறிந்தும் இன்னும் ஏன் எப்படி? மனிதனை காக்க போகின்றாயா??? இல்லையா???
நிச்சயம் கூறும் மணாளனே!!!
ஈசனார்:
நிச்சயம் காத்துக் கொண்டே இருக்கின்றேன்.
ஆனால் அவனவன் செய்கின்ற செயலால்தான் நிச்சயம் பின் அவனே நிச்சயம் தோல்வியடைந்து என்னிடம் வருகின்றான் மீண்டும்.
அவந்தனுக்கும் ஏதாவது ஒன்றை செய்து செய்து அனுப்புகின்றேன்.
மீண்டும் அத்தவறுகளையே செய்து கொண்டு..!!!
இறைவன் கண்டு கொள்ளப் போகின்றானா??
(செய்யும் தவறுகளை எல்லாம் இறைவன் காணவா?? போகின்றான் என்று)
என்றெல்லாம் நிச்சயம் வந்து வந்து!!!
ஆனாலும்.. இருப்பினும் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாகவே சென்று கொண்டிருந்தால் பின் அறிந்தும் உலகம் அறிந்தும் எதை என்று கூற!!!
இன்னும் இன்னும் அறிவியல் வழியாகவே பின் நம் மைந்தன் அகத்தியன்.. உரைக்கின்ற பொழுது தெரியும்.
இவ்வுலகத்தில் என்னென்ன ஏது? எங்கு பிளவுகள்??
இன்னும் சூரியன் சந்திரன் எங்கு?? அறிந்தும் பூமி பின் இரண்டாக பிளக்கும் போது யார் மீது? தவறு என்பதை எல்லாம் நிச்சயம் அகத்தியன் வரும் வரும் வாக்குகளில் பின் எடுத்துரைக்கும் பொழுது பின் புரியும் தேவியே!!!
அதற்காக நிச்சயம் தன்னில் அவனவன் செய்த பின் அதாவது பாவமும் பின் புண்ணியமும்!!
ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது தாய் தந்தையை மதியுங்கள். என்று. பின் விளக்கமாகவே பின் ஞானிகள்!!
யான் படைத்த ஞானிகள் பின் கூறிவிட்டார்கள்..
ஆனால் நிச்சயம் இல்லையே மதிக்கவில்லையே!! கேட்கவில்லையே..!! மதிக்கப் போவதில்லையே..!!!
இன்னும் எதை என்று ஒழுக்கமாக வாழுங்கள்!! என்று அழகாக யான் படைத்த ஞானிகள்...
ஆனாலும் இல்லையே!!!
கோபம் கொள்ளாதீர்கள்!! பிறரை பற்றி குறை சொல்லாதீர்கள்...!! அன்பாக இருங்கள்!!. என்று!!!
ஆனால் இன்னும் இன்னும் பின் எத்தனை ஞானிகள் பின் வந்தால் இவர்களை காக்க முடியும் ???!? என்று தெரியவில்லை!!!
ஆனால் இன்னும் யான் பெரியவன்.. அவன் சிறியவன்... இன்னும். மத கலவரங்கள்!!... இன்னும் இன்னும் என்னென்ன?! ஏமாற்று வேலைகள் என்னென்ன??
ஆனால் மனிதன் வாழ்கின்றானோ ??? என்னவோ???
ஆனாலும் சரியான ஏமாற்றுக்காரன்.. அதுவும் கூட!!!
அதாவது இறைவன் பின் அதாவது அழகாக யான் நிற்கின்றேன்..
ஆனால் இறைவன் பார்க்கவா? போகின்றான் என்று மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்ற பொழுது!!!....
பார்வதி தேவியார்:
நில்லுங்கள் அறிந்தும் எதை என்று நிச்சயம் என் மணாளனே.. மணாளன் தானே பின் அதாவது நீர் தானே படைத்தீர்!!
இப்படியா???
ஈசனார்:
நிச்சயம் பின் நில்லும்!! நிச்சயம் யான் படைத்தேன்!! ஆனால் நிச்சயம் இப்பொழுது மனிதன் செய்கின்ற தவறுகளுக்காக யான் தலை குனிகின்றேன்.
நிச்சயம் இங்கு யான் தான் தலைகுனிய வேண்டும்!!
ஆனாலும் நிச்சயம் அதாவது தண்டனைகள் அதிகப்படுத்தினால் தான் நிச்சயம் மனிதன் திருந்துவான்.
வரும் காலங்களில் தண்டனைகள் அதிகமாக தான் யான் கொடுக்கப் போகின்றேன்... நிச்சயம் அப்பொழுது தான் நிச்சயம் மனிதன் திருந்துவான்.
கருணை உள்ளவனாக இருந்தால் இன்னும் இன்னும் அறிந்தும் எதை என்று அறிய.
இதனால் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய!!
பார்வதி தேவியார்:
நிச்சயம்... அதாவது இன்றைய காலகட்டத்தில் மணாளனே அறிந்தும் நோய்கள் அதிகமாக உள்ளது!!
அதற்கு ஏதாவது பதில் உரைக்கலாமே நீங்கள்!!!
ஈசனார்:
நிச்சயம் தேவியே!!! அறிந்தும் ஆனால் நோய்கள்.. எதற்கு வருகின்றது என்று பார்த்தால்!!
நிச்சயம் யான் அழகாக உடலை கொடுத்து அனுப்புகின்றேன்!!
ஆனாலும் என்னென்ன தவறுகள்?? செய்து செய்து அவ் உடம்பை பாழாக்குகின்றான். மனிதன்.
இதனால் தான் நிச்சயம் நோய்களே வருகின்றது!!
அதாவது பின் நிச்சயம் அறிந்தும் சரியாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை எல்லாம்... இன்னும் இதிகாசங்களில் ஞானிகளால் பின் தள்ளி!! (எழுதி அனுப்பி) தள்ளி.. நிச்சயம் பின் ஏற்படுத்தினேனே!!!
ஏன் இவை அறிந்தும் கூட!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட...
என்னுடைய வாகனமானது
(நந்தி யான காளை பசுமாடுகள்) அனைவரும் அறிந்தும் எதை என்று அறிய அறிய... கொல்கின்றார்களே!!!!.. இதற்கு பின் நிச்சயம் புற்று நோய்கள்... பின் அதிலிருந்து நிச்சயம் அதிகமாக பரவும் வரும் காலத்தில்!!
அதனால் பின் நிச்சயம் அதை யான் நிறுத்தி விடுவேன்!!! எப்படி ?ஏது? நிறுத்துவது என்பதை எல்லாம் யாம் அறிவோம்!!
ஆனாலும் மனிதன்.. அதை நிச்சயம்!!.... அதில் கூட நுண்ணுயிரிகள் இருக்கின்றது பின் அதாவது கழுத்தில்!!!
(பசுமாடுகளின் உடலில் நுண்ணுயிரிகள் இருக்கின்றது குறிப்பாக கழுத்து பகுதிகளில்)
அதை வெட்ட!!... அறிந்தும் கூட அது பரவி பரவி மனிதனை கொன்று கொண்டே இருக்கின்றது!! அதிகமாக !! அதிகமாக!!
நிச்சயம் பின் வாயில்லா ஜீவராசிகளை எப்பொழுது கொல்கின்றார்களோ!?! அதாவது என்னுடைய உயிர்களை எப்பொழுது கொல்கின்றார்களோ!?!?!
அப்பொழுதெல்லாம் மனிதனுக்கு நோய்கள் வந்து கொண்டே இருக்கும்... இதை இதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது!!
எங்கு சென்றாலும் எத்திசையில் சென்றாலும் தப்பிக்க இயலாது!!
என்னிடத்தில் வந்தாலும் தப்பிக்க இயலாது!!
அதனால் பின் அழகாகவே பின் உனக்கு.. என்ன தேவையோ அதை யான் கொடுத்துக் கொண்டே மனிதனுக்கு..
அதாவது தேவியே!!!
நிச்சயம் மனிதனைப் பார்த்து சொல்கின்றேன்.. அழகாக உந்தனுக்கு அதாவது நீ என்ன கேட்கின்றாயோ? அதை யான் கொடுக்கின்றேன். அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் ஒரு குறையும் இல்லை.
தவறாக பயன்படுத்தினால் அதை உந்தனுக்கு கொடுத்தேனே!!!.... அதுவே அழகாக உந்தனுக்கு பதில் சொல்லும்.
அறிந்தும் உண்மைதனை கூட... இதை தெரிந்து கொண்டால் நன்று.
நிச்சயம் தன்னில் கூட!!!
அன்பானவளே!!! அழகானவளே!!! புரிகின்றதா?!
பார்வதி தேவியார்:
நிச்சயம் எதையெதையோ கேட்க வந்தேன்.... ஆனால் எதை எதையோ.. என் மூளையை கசக்கி மனதையும் கூட மாற்றி பின் கேள்விகளை கேட்க விடாமல் செய்து விட்டீர்கள்.
ஈசனார்:
நிச்சயம் தேவியே!!
நிச்சயம் அனைத்தும் அறிந்தவள் நீ... நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய
காகபுஜண்டர் மகரிஷி:
நிச்சயம் பின் அழகாக இன்றைய நாளில் அறிந்தும்...
தேவாதி தேவனே!!! பரிசுத்தமானவனே!!!! வெற்றிகளை கொடுப்பவனே !! தாயே!! மகிழ்ச்சி!!
நீங்கள் இருவரும் பேசியதில் மகிழ்ச்சி!!!
ஆனாலும் யானும் இடையிடையே நுழைந்து குழப்பியும் விட்டேன்.
பார்வதி தேவியார்:
இல்லை இல்லை என் மைந்தன் நீ.. அதனால் நிச்சயம் நல்லதை தான் சொல்வாய் நீ!!! என்பதையெல்லாம் பின் அதாவது...நீ பல உலகங்களை பார்த்தவன்!!
இன்னும் உலகத்தைப் பற்றி மக்களுக்கு தெரிவி!!!
புசுண்டனாரே!!!! பல உலகங்கள் இன்னும் இருக்கின்றதல்லவா நிச்சயம் அதனைப் பற்றி தெரிவி!!! மனிதர்களுக்கு!!
அதாவது தெரிவித்தால் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் வெளியே வந்து விட்டால் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள்.
காகபுஜண்டர் மகரிஷி:
நிச்சயம் தாயே!!! பின் வணங்குகின்றேன்!!! வரும் காலத்தில் மனிதனுக்கு செப்புகின்றேன் பல வழிகளிலும் கூட மூடநம்பிக்கைகளை ஒழிக்கின்றேன் நிச்சயம் பின்
அதாவது... தலை வணங்குகின்றேன்.
தந்தையே!! தாயே!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!