அகத்தியர் அறிவுரை!
Wednesday, 31 July 2024
சித்தன் அருள் - 1655 - அன்புடன் அகத்தியர் - திருக்கோணேஸ்வரம்/ சக்தி பீடம், திரிகோணமலை
Sunday, 28 July 2024
சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா.
ஆதி மூலனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!!
அப்பனே அவை மட்டுமில்லாமல் வரும் வரும் காலத்தில் அப்பனே மனிதனுக்கு துன்பங்கள் தான் அப்பனே மிஞ்சி காணப்படும் என்பேன் அப்பனே!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் எதை செய்வது??? எதை என்று தெரியாமல் பின் அறியாமலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே வருத்தத்துடனே மனிதன் வாழ்வான் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இன்னும் அப்பனே அதாவது ஆன்மாக்கள் அப்பனே அதாவது சொந்த பந்தங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது யான் பல வாக்குகளிலும் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!
அதாவது முன்னோர்களின் ஆன்மா அப்பனே அறிந்தும் கூட அப்பனே முக்தி பெற வேண்டும்.
அப்பனே அவ்வாறு முக்தி பெறவில்லை என்றால் அதாவது ஆன்மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே தரித்திரம் தான் மிச்சம் என்பேன் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் கஷ்டங்கள் அப்பனே பொங்கி வழியும் அப்பா
அப்பனே இது எதை என்று அறிய அறிய இவ்வாறே அப்பனே மனிதனிடத்தில் பின் சிறு சிறு அணுக்கள் அப்பனே இருக்குமப்பா!!!
ஆனாலும் அப்பனே அது தன் அதாவது உயிர் பிரியும் பொழுது அப்பனே அறிந்தும் கூட அப்பனே அது தனியாக போய்விடும் ஆனாலும் அப்பனே பின் உடம்பு தனியாக பிரியுமப்பா
அவ் அணுக்கள் அப்பனே அலைகின்ற பொழுது!!!!... ஆனாலும் அப்பனே இங்கு இறைவன் காந்தம் என்று கூட அப்பனே பல பல வழிகளிலும் கூட பல வாக்குகளிலும் கூட யான் உரைத்து விட்டேன் அப்பனே!!!
அதை அப்படியே இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அதேபோலத்தான் அப்பனே இவைதன் அப்பனே ஆன்மாக்கள் அப்பனே அவ்வணுவானது அப்பனே எதை என்று புரிய புரிய அனைத்தையும் சேகரிக்கும் திறன் கொண்டது என்பேன் அப்பனே
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் ஆனாலும் அப்பனே சிறு சிறு துகள்களாக பின் பரவி கிடக்கும் பொழுது இன்னும் அப்பனே பின் அதாவது மனிதன் மனிதன் பின் அதாவது பின் பின் பிறக்கும் பொழுது பிறக்கும்போது அவையெல்லாம் அப்பனே துகள்கள் பின் சேரும் பொழுது சேரும் பொழுது அப்பனே நிச்சயம் அறிகின்ற பொழுதும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று யான் சொல்ல???
இதனால் அப்பனே அப்படியே பின் நீளுமப்பா!!!
ஆனாலும் அப்பனே இவையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இங்கு தான் அப்பனே அவை முடியும் அப்பா!!!
அப்பனே சொல்லிவிட்டேன்!!!
ராமேஸ்வரத்தில் இருந்து அப்பனே இங்கு வரை அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே இன்னும் ஆன்மாக்கள்!!!!
ஏன்?? எதற்கு??? எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பல பல சூட்சும முறைகள் உண்டு!!!
அப்பனே அதனால் ராமேஸ்வரத்திற்கும் கூட இங்கு எதை என்று அறிய அறிய இவை தன் போக அப்பனே தனுஷ்கோடியில் இருந்து மீண்டும் அதாவது அப்பனே தனுஷ்கோடியில் இருந்து அப்பனே சிறிது அதாவது 15 மைல் தொலைவில் அப்பனே ஒரு ஆழம் அறிந்தும் கூட அப்பனே எப்பொழுதும் அது சுழன்று கொண்டே இருக்கும் அப்பா
அதாவது அப்பனே வேகமாக சுழலுமப்பா!!!
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே அது வேகத்துடன் சுழலும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது இங்கிருக்கும் அணுக்கள் கூட அங்கு தான் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட எதை என்று அறிய அறிய ஈர்க்கும்...
அவ்வாறு பின் சுழலும் நீர் அடியிலே அப்பனே பின் எவை என்று புரியப் புரிய அப்பனே சுழல்கின்ற பொழுது அப்பனே ஆன்மாக்கள் பின் அனைத்தும் ஓடோடி வரும் அப்பா!!
இதனால் எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் செல்ல முடியவில்லையே என்றெல்லாம் ஏங்கும் அப்பா!!!
அதாவது காந்தத்துடன் நிச்சயம் ஒட்ட முடியாத அப்பா!!! எதை என்று அறிய அறிய அவ் அணுக்களால்!!
இதனால் எதை என்று கூட அவர் சுழற்சி இன்னும் இன்னும் அதிகரித்தால் இன்னும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே அறிந்தும் கூட இன்னும் கடல் நீர் எதை என்று அறிய அறிய அப்படியே பின் எதை என்று அறிய அறிய பின் அப்படியே மூடும் அப்பா
ஆனாலும் நாங்கள் விடவில்லை அப்பனே!!!
எவ்வளவு விஞ்ஞானிகள் அப்பனே எதை என்று அறிய அறிய கண்டு எதை என்று கூற ஆனாலும் அப்பனே இவை எல்லாம் பின் முடியாதப்பா!!!
ஏனென்றால் இறைவனின் அப்பனே ரகசியம் இவையெல்லாம் சூட்சுமங்கள்.
ஆனாலும் என் பக்தர்களுக்கு இவையெல்லாம் நிச்சயம் தெரிந்து கொண்டால் தான் அப்பனே நிச்சயம் வாழ முடியும் இப் புவி தன்னில்!!
(அதாவது நம் குருநாதர் ஏற்கனவே ஆன்மாக்கள் ராமேஸ்வரத்திலும் தனுஷ்கோடியில் தங்கி நிற்கும். என்று வாக்குகளில் கூறியிருக்கின்றார்.ஸ்ரீலங்காவில் இருக்கும் இந்த நகுலேஸ்வரன் ஆலயம் இலங்கையின் வடக்கு பகுதி கடல் ஓரத்தில் உள்ளது ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து நேராக கீழே கடல் மார்க்கத்தில் உள்ளது.
தனுஷ்கோடியில் இருந்து கடலில் 15 மைல் தொலைவில் கடலுக்கு நடுவே ஒரு ஆழமான பகுதி அங்கே ஒரு சூழல் வேகமாக சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆன்மாக்கள் மேலே இறைவன் என்னும் காந்தத்தின் மேலே சென்று ஒட்ட வேண்டும். ஆனால் ஆன்மா துகள்கள் கடல் சூழலில் சிக்கி அடியில் பாதாளத்தை நோக்கி செல்லக் கூடாது. அவ் சுழல் சுழன்று மூடி விடக் கூடாது. அணுக்கள் அதில் சிக்கிவிடக்கூடாது. அதற்காகத்தான் குருநாதர் அகத்தியர் பெருமான் சித்தர்கள் அதை தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த கடலில் உள்ள ரகசியம் எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடித்ததில்லை கண்டுபிடிக்கவும் முடியாது.)
இதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே..
தெரிந்து வாழுங்கள் தெரிந்து வாழுங்கள் என்று!!!
பின் தெரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே நிச்சயம் மோட்சமும் கிடைக்காதப்பா!!!
நிச்சயம் அதனால்தான் இறைவன் எங்கு இருக்கின்றான்?? இறைவன் எப்படிப்பட்டவன்?? நிச்சயம் எப்பொழுதெல்லாம் அருள்வான்?? என்றெல்லாம்!!!! அதனால்தான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் ராமேஸ்வரத்திலும் கூட அப்பனே!!!
ஆனாலும் அப்பனே இவ் மாதத்தில் ( ஆடி மாதம்) இன்னும் அதிகரிக்கும் அப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!
அதாவது சுழற்சி வேகம் அதிகரிக்கும் பொழுது அப்பனே இன்னும் அப்பனே அவ் ஆன்மாக்கள் அப்பனே அய்யய்யோ!! என்றெல்லாம் பின் அலைகின்ற பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் யான் சொல்லிவிட்டேன்...எள்ளிலும் கூட எதை என்று அறிய பரிசுத்தமாக!!!!
(எள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே ஸ்ரீ ராம ஜென்ம புண்ணிய பூமி அயோத்தி. சரயு நதிக்கரை.
சித்தன் அருள் 1566 ல் வெளிவந்துள்ளது.
அப்பனே !! """"""" எள் """"" எதற்கு??????
( சோற்றுப் பிண்டத்தில் எள் கலந்து தர்ப்பணம்)
எதை என்று அறிய அறிய!!!
அவ் செல்களை ஈர்க்கும் திறன் அப்பனே அவ் எவை என்றும் புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
எள்ளுக்கு தான் உண்டு அப்பனே!!!!!
(நதிகளில் தர்ப்பணம் செய்யும் பொழுது நதிகளில் மிதந்து அடித்து செல்லப்பட்டு கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அதாவது செல்கள் நாம் தர்ப்பணம் செய்யும் பொழுது அந்த எள் சோற்று பிண்டம் ஈர்க்கும்)
எதை என்று புரிய புதிய அப்பொழுது அப்பனே இவை தன் கொடுக்கின்ற பொழுது (பிண்டம்) அப்பனே எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அச் செல்கள் அருகிலே வருமப்பா!!! என்று ஏற்கனவே வாக்குகள் உரைத்திருக்கின்றார்)
ஆனாலும் அங்கு அதாவது ராமேஸ்வரத்திலும் இங்கும் (நகுலேஸ்வரம் ஸ்ரீலங்காவில்) எதை என்று அறிய அறிய பின் அதாவது பின் கடல் நீர் பின் பக்கத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் தங்கி நிற்கின்றதே அவ் அணுவானது எதை என்று கூட அதாவது பின் ஒவ்வொரு உடம்பிலும் இருக்கும் அப்பா... அதனால் இங்கு சென்று வந்தால் அப்பனே அவ் சுழற்சி வேகம் எதை என்று அறிய அறிய ஈர்க்கும் பொழுது அப்பனே மனிதனிடத்தில் உள்ள அணுவும் பின் இப்படி ஈர்க்கும் அப்பா
இதனால் அப்பனே அவை தன் அப்பனே இன்னும் அடியில் செல்லாதப்பா!!!!
ஆனாலும் அப்பனே அவ் சுழற்சி வேகம் அதிகரிக்க அதிகரிக்க அடியில் சென்று விட்டால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா!!
அப்பனே பிறவி எடுக்க வேண்டும்... பிறவிகள் முழுவதும் கஷ்டம் தானப்பா சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய
அதனால்தான் அப்பனே எதை என்று கூட கஷ்டங்கள் ஏன் வருகின்றது??? எதற்காக என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரியாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றான் மனிதன் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஏன்?? எதற்கு?? அப்பனே இவ்வாறு பின் திதி கொடுக்கின்றோம் என்பதெல்லாம் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!
நிச்சயம் இவைதன் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே இவ் மாதத்தில் கூட அப்பனே
(ஆடி மாதத்தில் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்)
அப்படியே அப்பனே இன்னும் இன்னும் பின் ஆடி, ஆவணி மீண்டும் அப்பனே சுழற்சி வேகம் சற்று குறையும் அப்பா
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே குறைந்து அப்பனே மீண்டும் வேகம் எடுக்கும் அப்பா பின் ஆடி மாதத்தில் விட எதை என்று அறிய அறிய புரட்டாசி மாதத்தில் அப்பனே இன்னும் வேகம் எடுக்கும் பொழுது அப்பனே மீண்டும் அப்பனே அது பின் படு குழியில் (கடல் ஆழத்தில்) போகும் அப்பா!!!
ஆனால்????!!... போக விடக்கூடாதப்பா!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே
அதனால் எதை என்று அறிய அறிய பின் ஈசனை வணங்கி எதை என்று கூட பின் எதை என்று புரிய புதிய புரிய அம்பாளை (தேவியை) வணங்கி நிச்சயம் அறிந்தும் கூட தன்னால் முடிந்தவரை அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் கடல் ஓரத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நிச்சயம் தானங்கள் தர்மங்கள் செய்கின்ற பொழுது அப்பனே இவ் அணுக்களானது அவை தன் ஈர்க்கும் பொழுது அப்பனே அப்பனே அப்படியே சமநிலைப்படுத்தும் அப்பா!!!!
சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன்!!! அப்பனே
அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே பின்பு எவை என்று அறிய அறிய அப்பனே
ஐப்பசி தன்னில் எதை என்று அறிய அறிய சரியாகவே வேகம் சற்று குறையும் அப்பா
(கடல் ஆழத்தில் ஆன்மா அணுக்களை இழுக்கும் சூறாவளி சுழற்சி)
இதனால் அப்பனே இவ்வாறாகவே மார்கழி திங்களில் அப்பனே அவைதன் முக்தி பெற அப்பனே நீங்கள் தான் வழி செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!
(முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை அன்று எப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் மானசா தேவி ஆலய வாக்கு சித்தன் அருள் 1533 லும்
கார்த்திகை மாதத்தில் கந்தன் ஆன்மாக்களை முக்திக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பி வைப்பார் என்பதை பற்றியும்
மார்கழி மாதத்தில் இறுதி தீர்ப்பு ஆத்மாக்களுக்கு ஏற்படும் என்பதை பற்றியும்
குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறியுள்ளார்
சித்தன் அருள் 1563 ல் வெளிவந்துள்ளது)
சம்பந்தங்கள் பல உண்டு அப்பனே!!! அருகில் பின் எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனும் கூட அப்பனே இவையெல்லாம் யான் நிச்சயம் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டால் அப்பனே உலகம் எதை என்று அறிய பின் இருக்கும் வரையில் அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் அதாவது மனிதன் எதை என்று அறிய அறிய இவ்வளவுதான் என்று விதியில் இருக்கும் வரையில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்திடுவான் என்பேன் அப்பனே
அப்படி இல்லாமல் எதையும் தெரிந்து கொள்ளாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் அப்பனே நிச்சயம் இறைவன் அப்பனே எதை என்று அறிய அப்பனே இறைவன் இருக்கின்றான் அப்பா
ஆனாலும் மனிதனுக்கு தான் வாழ தெரியவில்லை சொல்லிவிட்டேன் அப்பனே
இன்னும் அழிவு காலம் அப்பா வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே
சித்தர்கள் அப்பனே எப்படியெல்லாம் எதை என்று அறிய அழிவு எவை என்று அறிய அறிய அழிவை மனிதன் தான் உருவாக்குகின்றான் அப்பனே!!! எவை என்று அறிய அறிய
ஆனாலும் அப்பனே அதற்காகத்தான் அப்பனே பின் இறைவனும் மாறிக்கொண்டே தான் எதை என்று அறிய அறிய எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதெல்லாம்!!!
ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய எதை என்று கூட கந்தன் சொன்னான் அப்பா
எவை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது அப்பனே பின் பூமியின் வேகம் அப்பனே சற்று குறைகின்றது என்பேன் அப்பனேஎதை என்று அறிய அறிய அதை பின் எதை என்று அறிய அறிய வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே யான் யோசித்துக் கொண்டே அப்பனே!!!! எவ்வாறெல்லாம் என்பதை அப்பனே ஆனாலும் அப்பனே பின் குறைந்து அப்பனே அவைதன் அப்பனே எதிர் முனையில் செயல்பட ஆரம்பித்தால் அப்பனே இங்கு எதை என்று கூட எவரும் இருக்க மாட்டார்கள் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே
(பூமி சுற்று வேகம் குறைந்துள்ள நிலையில் எதிர் திசையில் சுற்ற ஆரம்பிக்கின்றது ... அப்படி பூமி நேர்மாறாக எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால் இங்கு யாரும் வாழ முடியாது)
இதனால்தான் அப்பனே சித்தர்கள் ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய அப்பனே கண்டுபிடிப்புகள் பல பல அப்பனே!!!
ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அச் சுவடிகளையும் கூட அப்பனே எவை என்று கூட மாற்றி விட்டனர் என்பேன் அப்பனே.... ஒழுங்காக மாறி மக்கள் வாழ்ந்து விடக்கூடாது என்று அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பெரிய பெரிய அரசர்கள் எல்லாம் அப்பனே பின் நம் தனக்கு பின் அதாவது மக்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று அப்பனே எதை என்று அறிய அறிய சுவடிகளை எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய ஆற்றிலும் எதை என்று அறிய அறிய அப்பனே கடலிலும் கூட விட்டுவிட்டார்கள் என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் யாங்கள் புதுப்புது விஷயங்களை எல்லாம் அப்பனே
எவ்வாறு வாழ்வது எவ்வாறு எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் கலியுகத்தில் மனிதன் வாழ்வது என்பது அப்பனே கேள்விக்குறியாக தான் உள்ளது என்பேன் அப்பனே கஷ்டங்களோடு தான் வாழ்வான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
மனித உடம்பை எடுத்தாலே அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் அப்பனே
ஆனாலும் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட
அப்பனே அழகாகவே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ராவணனும் எதை என்று புரிய புரிய அப்பனே நல் எவை என்று புரிய புரிய இன்னும் அவனது அப்பனே ஆற்றல் கூட எங்கு செயல்படுகின்றது??? இங்கெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே எங்கெல்லாம் அப்பனே பூத உடல்கள். பின் தங்கி நிற்கின்றது என்பதெல்லாம் எதை என்று கூட அப்பனே எதை என்று அறிய அறிய சில கர்மாக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எங்கு சென்றால்?? அப்பனே
ஏன் இறைவன் பின் அங்கங்கு இருக்க வேண்டும்!!! எதை என்று அறிய அறிய ஓரிடத்தில் இருக்கக் கூடாது!!! எதை என்று அறிய அறிய
ஆனாலும் மனிதன் சொல்லிக் கொண்டிருப்பான் இறைவன் என்னிடத்தில் இருக்கின்றான் என்று அப்பனே எவை என்று அறிய அறிய அவைகள் எல்லாம் பொய்கள் அப்பா
எதை என்று கூட அங்கங்கு எதை என்று புரிய புரிய அப்பனே எப்படி பின் கர்மா ஒழிக்க வேண்டும்?? அதாவது பாவங்கள் எங்கு பின் ஒழியும்??? பின் புண்ணியங்கள் எங்கு செயல்படும்??? அப்பனே எதை என்று அறிய அறிய
இங்கு வந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அவ் குளமானது அப்பனே பாவத்தை நீக்கும் எவை என்று அறிய திறன் வாய்ந்தது என்பேன் அப்பனே.. பாவத்தை நீக்கிவிட்டு அப்பனே எதை என்று அறிய அறிய ராமனுக்கும் சீதாவுக்கும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட சில நேரங்களில் கூட அப்பனே கிரகங்களால் அப்பனே எவை என்று கூட அடிபட்டு (கிரக தாக்கத்தினால் கஷ்டங்கள்) எதை என்று கூடஆனாலும் அதில் மூழ்கி அப்பனே இங்கு வழிபட்டு எதை என்றும் அறிய அறிய பாவத்தையும் தீர்த்து எதை என்று அறிய அறிய!!!
(நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே கடல் ஓரத்தில் ஒரு குளம் போன்று உள்ளது. கீரிமலை கேணி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது அங்கு மூழ்கி நீராடினால் பாவங்கள் தொலையும்
கிரகங்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட கஷ்டங்களை ராமரும் சீதா அம்மாவும் இந்த குளத்தில் மூழ்கி நீராடி கழித்தனர்)
இதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே மனித உடம்பை பெற்றாலே அப்பனே பாவம்தானப்பா பாவம் சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய
இதனால் அப்பனே உண்மைதனை உணர்ந்து உணர்ந்து அப்பனே நல் முறைகளாகவே அப்பனே மாற்றங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே
ஆனால் அப்பனே ஒரு ஞானி இருந்தானப்பா!!! எப்பொழுதும் அவந்தன் இங்கு எதை என்று அறிய அறிய அப்பனே பின் நமச்சிவாயா நமச்சிவாயா என்று பின் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே வருபவர்களிடம் தர்மம் ஏந்தி கொண்டு இருப்பான் எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே அனைவரும் இடுவார்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் அனைவரையும் கூட எவை என்று அறிய அறிய இவன் எதை என்று புரிய புரிய இவன் பைத்தியக்காரன் இவன் பைத்தியக்காரன் என்று சொல்லி சொல்லி உள்ளே அனுப்புவான் அப்பா அறிந்தும் கூட
ஆனாலும் பின் எவை என்று அறிய அறிய மனிதர்களோ!??? புரிந்து கொள்ளவில்லை!! அவனை!!
பின் என்னையே பைத்தியக்காரன் என்று சொல்கின்றாயே எவை என்று அறிய அறிய என்று அவனையும் ஒரு அடி அடித்து விட்டு செல்வார்கள் அப்பா
ஆனாலும் எதை என்று அறிய அறிய
ஏன்?? பைத்தியக்காரன் என்று அவன் தான் பின் சொல்கின்றான் என்று யாரும் உணரவில்லை எதை என்று அறிய அறிய அப்பனே
ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே
அவந்தன் பைத்தியக்காரன் என்றால் இவர்களுக்கு பாவம் போகும் என்பது தெரியவில்லையே??? அறிந்தும் அறிந்தும்!!
அப்பனே இதுதான் அப்பா இன்றைய மனிதன் கூட!!!
ஏதோ ஒன்றை அதாவது ஆசைக்காக அப்பனே அதாவது ஏதோ ஒன்றை கொடுப்பான் என்று இறைவனை வணங்க கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
எதையும் பின் மனதில் நினைக்க கூடாது எதை என்று அறிய அறிய அப்பனே
அப்படி பின் நினைக்காமல் இருந்தால் அப்பனே படைத்தவன் இறைவன் எதை என்று அறிய அறிய அவனுக்கு தெரியாதா????
எதை என்று அறிய அறிய அப்பனே இவைதனை பல வாக்குகளில் யான் செப்பிக் கொண்டே தான் வருகின்றேன் அப்பனே நலன்களாகவே அப்பனே
ஆனாலும் தெரிவதே இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய
அதனால் அப்பனே பின் படைக்கும் பொழுதே அப்பனே அனைத்தும் தீர ஆராய்ந்து தான் அப்பனே இவந்தனுக்கு என்ன கொடுத்தால்? எவை நன்று என்றெல்லாம் அப்பனே எழுதி அனுப்புகின்றான் இங்கு!!
ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய எவ் வயதில் நோய்கள் ஏற்பட வேண்டும்??? எப்படி எவை என்று கூட வாழ வேண்டும்??? எவ் பிரிவு நிலைகள் என்றெல்லாம் ஆனாலும் அவைகளையும் மாற்றும் திறன் சில ஆலயங்களுக்கு உண்டப்பா!!!
அதில் இதுவும் ஒரு ஆலயம் அப்பா!!! விதியை மாற்றும் திறன் இங்கு உள்ளதப்பா!!!
(நகுலேஸ்வரம் ஸ்ரீலங்கா)
அப்பனே தேடி தேடி அலைய வேண்டும் இறைவனை!!!
சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
பின் வேலை அதாவது வேலைக்கு சென்றால் அப்பனே தேடி தேடி பின் அங்கு தேசம் இங்கு தேசம் என்றெல்லாம் அப்பனே தேடி !! தேடி!!(வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்வது)
திருமணத்திற்காக தேடி தேடி பணத்திற்காக தேடி தேடி சுகத்திற்காக தேடி தேடி துன்பத்திற்காக தேடி தேடி இன்பத்திற்காக தேடி தேடி ??????
அப்பனே ஆனால் இறைவனையும் தேட வேண்டும் என்பேன் அப்பனே!!!!
தேட!! தேட !! தேட!! அப்பனே!! எவை என்று அறிய அறிய அப்பனே கர்மா அதாவது பாவம் கரையும் அப்பா
ஆனாலும் அப்பனே எவை என்று கூட அனைத்தும் தேடுகின்றார்கள் இறைவனை மறந்து விடுகின்றார்கள் அவ்வளவுதான் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!
அப்பனே அதனால் சொல்கின்றேன் இவர் எவரெவருக்கு பின் எங்கு சென்றால்? பின் பாவம் போகும்??? எங்கு சென்றால் ?புண்ணியம் இருக்கும் என்பதையெல்லாம் அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே!!
நிச்சயம் என்னுடைய வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே யானே எடுத்துச் செல்கின்றேன் அப்பனே ஆனால் மனிதன் முட்டாள் எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது செயல்களால் அப்பனே பைத்தியக்காரன் என்பேன் மனிதன் அப்பனே எதையும் புரிந்து கொள்ள!!!... அவை பொய் இவை பொய் என்றெல்லாம் அப்பனே மனிதன் அவை செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் என்றெல்லாம் அப்பனே பின் எதை என்று கூட மனிதனை மனிதனே கெடுத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே
பக்திக்குள் நுழைந்து இன்னும் கெடுப்பானப்பா மனிதன் எதை என்று அறிய அறிய அதைச் செய்தால் இவை நடக்கும் என்பதெல்லாம்
ஒன்றும் நடக்காது என்பேன் அப்பனே
கர்மம் தான் அதாவது பாவம் தான் சேரும் என்பேன் அப்பனே
புண்ணியத்திற்காக யாராவது சொல்கின்றார்களா?? என்றால்??? அப்பனே
இல்லை என்பேன் அப்பனே!!!
அவனவன் தன் பிழைப்பிற்காக எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றான்
இவையெல்லாம் பாவம் அப்பா
எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே நன் முறைகளாக சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே
உலகத்தை எப்படி எல்லாம் அப்பனே இதனால் அப்பனே சில சில மாற்றங்களை சில மனிதர்களை யான் உருவாக்குவேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தனை பெரிய விஞ்ஞானியாக ஆக்குவேன் என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே என்னுடைய பக்தர்கள் இருக்கின்றார்கள் அப்பா எதை என்று அறிய அறிய அப்பனே மறைமுகமாகவே
அவந்தனுக்கும் பல வகையிலும் வாக்குகள் சொல்லி எழுப்புவேன் என்பேன் அப்பனே வரும் காலத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே...இவ் தேசம் போற்ற!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
நன்முறைகளாகவே!!!
இதனால் அப்பனே எப்படி காக்க வேண்டும்?? எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
அப்பனே பூமியானது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றதே அப்பனே எவை என்று கூட அது எதிர் திசையில் சுற்ற அதாவது பின் வேகம் குறைந்து எதிர் திசையில் ஆரம்பிக்கும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய தோல்விகள் பயங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுதல் அப்பனே மனிதனை மனிதன் தின்னுவான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் சொந்த பந்தங்கள் எங்கே??? யான். எங்கே என்று எதை என்று கூட பைத்தியமாகி அனைத்தும் அழிந்து விடும் என்பேன் அப்பனே
இறைவன் அழிய மாட்டானப்பா அழிய மாட்டான்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!
அதற்காகத்தான் யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே...
ஆனாலும் எதை என்று கூட எதிர் திசையில் போவதை யாராலும் தடுக்க முடியாதப்பா!!!! தடுக்க முடியாது!! இங்கிருந்தே யான் சொல்கின்றேன் அப்பனே...
என்னிடம் தானப்பா அப்பனே இவையெல்லாம் (தீர்வு)அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
ஆனாலும் மனிதன் போடுவது அப்பனே தவறான கணக்கு தவறான கணக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
எதை என்று அறிய அறிய ஆனாலும் சுழற்சி (பூமியின்) வேகத்தை அதிகரித்து அதிகரித்து அப்பனே யானே எவை என்று அறிய அறிய பின் வருங்காலத்தில் ஏற்படுத்துவேன் என்பேன் அப்பனே
அப்பனே ஏனென்றால் அப்பனே பல பேர் அப்பனே இறைவனை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பேன் அப்பனே!!! உண்மையான பக்தர்கள் எல்லாம் அப்பனே கஷ்டங்களை பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!
ஆனால் ஏமாற்றுபவன் பக்திக்குள் நுழைந்து அப்பனே எவை என்று அறிய அறிய பிழைத்துக் கொண்டு!!!! அப்பனே ஏனப்பா?????
ஆனாலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!
பின் பக்திக்குள் ஏமாற்றுபவர்கள் வேண்டாம் இங்கு !!!
ஆனாலும் அப்பனே அவை தன் பாவம் உங்களை எங்கு சேர்க்கும் என்பதை கூட அப்பனே யான் வரும் காலங்களில் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே நலங்களாக!! அப்பனே
அதனால் அப்பனே நம்பினால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் நரகம் அப்பனே நம்பாவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நரகம் என்பது சொல்லிவிட்டேன் அப்பனே பின் நரகம் இங்கே இருக்கின்றது என்பேன் அப்பனே
அதாவது எதை என்று கூட நம்பினால் எவை என்று அறிய அறிய பின் நரகத்திற்கு சென்று அப்பனே சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும்.
அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் நம்பினால் அப்பனே சில நரகம் அதாவது நரகம் என்பது கஷ்டங்கள் தான் அப்பா!!! சில கஷ்டங்கள் வரும் அப்பா!!! அவையும் எதிர்கொண்டு விட்டால் சொர்க்கத்திற்கு யாங்கள் அப்படியே அழைத்துச் செல்வோம்!!! அதனால்தான் இங்கு சொன்னேன்!!
பின் நம்பினால் !!!!
ஆனாலும் அப்பனே இதை மாற்றுவதற்காக எதை என்று அறிய அறிய அப்பனே நம்பினால் அப்பனே அதாவது நரகத்திற்கு சென்று சொர்க்கத்திற்கு செல்லலாம் அப்பனே
ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய நம்பாவிடில் அப்பனே சொர்க்கத்திற்கு சென்று நரகத்திற்கு வந்து விடுவீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே பின் நம்பாமல் எவை என்று கூட யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று அப்பனே பின்!!! ஆனாலும் அப்பனே சில நாள் தான் மட்டுமே என்பேன் அப்பனே சொர்க்கத்திலிருந்து மீண்டும் நரகத்திற்கு வந்து விட்டால் அப்பனே மாற்ற முடியாதப்பா!!!
சொர்க்கத்திற்கும் அப்பனே எதை என்று அறிய அறிய வழி இதுவும் ஒரு (திரு) தலம் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே!!
பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே சொர்க்கத்தில் இருக்கும் எவை என்று அறிய அறிய இவையும் அப்பனே திருத்தலம் ஒன்றப்பா ராமேஸ்வரமும் !! ஒன்றப்பா திரிகோணமலையும் ஒன்றப்பா!!!
(பெங்களூரு சத்சங்க வாக்கு பாகம் 8 ல் சித்தன் அருள் 1634 ல் பூலோகத்தில் இருக்கும் சொர்க்கங்களை பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகள் தந்துள்ளார் திருவண்ணாமலை காசி கேதார்நாத் வரிசையில் நகுலேஸ்வரம் ராமேஸ்வரம் திரிகோணமலை கோனேஸ்வரம் என்று இந்த வாக்கில் குருநாதர் பூலோக சொர்க்கங்களை பற்றி கூறியிருக்கின்றார்)
எதை என்று அறிய இன்னும் சொல்கின்றேன் அப்பனே ஆனாலும் அப்பனே இங்கெல்லாம் சென்றால் தான் அப்பனே பாவம் தொலையும் என்பேன் அப்பனே... எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவனையே நம்பிக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய
(நகுலேஸ்வரன் ஆலயத்தில் சேவைகள் செய்து வரும் அர்ச்சகர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு
ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனுக்கு சேவைகள் செய்வதற்கும் தகுதிகள் வேண்டும் என்பேன் அப்பனே இவர்கள் எல்லாம் சேவைகள் செய்கின்றார்களே!!! உண்மை எதை என்று அறிய அறிய பின் முன் ஒரு காலத்தில் அப்பனே இறைவனுக்காக ஈசனிடத்தில் மன்றாடி உங்களுக்கே சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே ஈசனிடத்தில் வரம் பெற்றவர்கள் தான் என்பேன் அப்பனே!!! நலமாகவே
அதேபோலத்தான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே வாழ்க்கையில் ஆனால் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே தெரியாவிடில் அப்பனே இன்னும் இன்னும் மனிதனை மனிதன் அழிப்பான் என்பேன் அப்பனே...
ஆனாலும் யாங்கள் விட மாட்டோம் என்பேன் அப்பனே கந்தனும் அழகாகவே காத்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே இவ் தேசத்தை!!
எப்படி காக்க என்று அப்பனே இன்னும் பல வழிகளிலும் கூட வாக்குகள் உரைப்பேன் நலமாக ஆசிகள் ஆசிகளப்பா!!!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் (தமிழ்: கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் ),கீரிமலையின் திருதம்பலேஸ்வரம் கோவில் என்றும் அழைக்கப்படும் கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் , காங்கேசன்துறையின் புறநகர்ப் பகுதியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்துள்ள கீரிமலையில் உள்ள புகழ்பெற்றஇந்துக் கோயிலாகும். இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று, இது சிவபெருமானின் தீவின் பஞ்ச ஈஸ்வரங்களின் வடக்கே உள்ளது,கீரிமலை கடல் மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில்பலாலிக்குமேற்கே அமைந்துள்ளது . தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தீர்த்த கேணியில் நீராடுவதற்கும் பக்தர்கள் வருகின்றார்கள்.
நகுலேஸ்வரன் கோயில்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம் வடக்கு
ஸ்ரீலங்கா
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Saturday, 27 July 2024
சித்தன் அருள் - 1653 - அன்புடன் அகத்தியர் - காசியில் காகபுசுண்டர் வாக்கு!
வெற்றி உண்டா? மனிதனுக்கு என்றால் நிச்சயம் அவ் வெற்றி தானாகவே உருவாக்கப்படுகின்றதா என்றால் சத்தியமாக இல்லை. நிச்சயம் பின் அது இறைவனால் நிச்சயிக்கப்படுகின்றது. அனைத்தும் கூட!!!
யார்? எப்பொழுது? எதை? செய்ய வேண்டும்??? எவை தன் நடக்க வேண்டும்??? எப்படி?? நடந்தால் வெற்றி கிடைக்கும்?? எதை பின்பற்ற வேண்டும்??? என்றெல்லாம் நிச்சயம் பின்பற்றினால்...
ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன்
தான் தான்(அவரவர் )நிலைமைக்கு தானே காரணம் என்று கூட நிச்சயம் அறிந்தும் ஏற்கனவே செப்பி விட்டார்கள்!!!
இதனால் நிச்சயம் அகத்தியன் பாதையில் வந்தால் நிச்சயம் தான தர்மங்கள் நேர்மை. நிச்சயம் பொய் சொல்லாமை
பொறாமை இல்லாமை காமம் இல்லாமை பின் யான் பெரியவன் அவன் சிறியவன் என்றெல்லாம் நிச்சயம் வந்தால் அப்பா இப்பொழுது சொல்கிறேன். அடியோடு அடிவாரத்துக்கே போய் விடுவாய் அப்பா இதை யான் சொல்லவில்லை.அப்பா பின் அகத்தியனை அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய!!!!
அகத்தியன் என்று சொன்னாலே சக்தி கிடைக்குமப்பா அறிந்தும் அறிந்தும் கூட. !!!
அவ் சக்தியை அப்பனே தவறாக தவறான பாதைக்கு பின் அழைத்துச் செல்வதற்கு அப்பனே அவ் சக்தி அப்பனே இன்னும் அமுக்கும் அப்பா கீழே!!!
நேர்மையாக அப்பா. அறிந்தும் கூட பின் அகத்தியனை பயன்படுத்த அப்பனே
உயர் நோக்கி செல்லும் அப்பா சக்தி !!!!
அப்பப்பா அறிந்தும் அறிந்தும் கூட அனைத்தும் கண்டுபிடித்தவன் அகத்தியனே!!!
இன்னும் சொல்லப் போகிறான்!!!! மனித உடம்பில் என்ன ? என்ன ??இருக்கின்றது, ?? எவ்? எவ்?? பாவத்திற்கு என்ன செய்கின்றாயோ அதற்கெல்லாம் கர்மா எங்கெல்லாம் பின் அதாவது உடம்பில் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் சொல்லப் போனால் அப்பா அப்போது புரிந்து கொள்வீர்கள்.
அகத்தியனை பற்றி!!!!
ஆனாலும் அறிந்தும் அகத்தியன் கண்டுபிடிக்காததா??????? இவ் உலகத்தில் இருக்கின்றது.???????
அப்பப்பா அறிந்தும் எதை என்றும் அறிய அறிய போற்றி பின் அறிந்தும் உண்மைதனைக்கூட!!!
இதனால் மக்களை காக்கவே பின் அறிந்தும் கூட மக்களை பின் அனைத்திலும் காப்பேன் என்று சபதம் ஏற்று திரிந்து கொண்டிருக்கின்றான் அகத்தியன்!!!!
ஆனாலும் மனிதன் அறிந்தும் எவை என்று கூட புரிந்தும் புரிந்தும்
புரியாமல் போல் வாழ்கின்றான். மனிதன் அறிந்தும் அறியாமலும் போல் வாழ்கின்றான். மனிதன்
பின் உண்மையானவை கூட அப்பனே பின் இருக்கும் இடத்தில் பொய்யானதை கடைப்பிடித்து வாழ்கின்றான்.
எப்படியப்பா??? இன்னும் அப்பா அறிந்தும் பின் அழிவு நிலைக்கு கொண்டு சென்று விடுவான். மனிதனிடத்தில் அனைத்தும் கொடுத்தால்!!!
ஆனால் யாங்கள் நிச்சயம் கொடுக்கப்போவதில்லை யாங்களே பின் இறங்கி இன்னும் திருத்தலங்கள் எல்லாம் வடிவமைப்போம் பின் பழைய திருத்தலங்களை எல்லாம் அறிந்தும் !!!
அரிது அரிது நிச்சயம் உணர்ந்தும் உணர்ந்தும் கூட பின் மானிட பிறப்பு எடுத்து அறிந்தும் உண்மைதனை கூட பின் புரியாமல் வாழ்ந்து வந்து நிச்சயம் அனைவரையும் கெடுத்து மீண்டும் பிறக்கின்றாயே!!!! தரித்திர மனிதா!!!!!
இப் பிறப்பு தேவையா??? இன்னும் இன்னும்!!????
சரி இறைவன் படைத்து விட்டான் அறிந்தும் கூட.
எப்படி வாழ வேண்டும் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வந்தால். என்ன லாபம்??????
ஆனால் இதற்கும் இறைவன் காரணம் என்று ஒருவன் சொல்வான் அப்பா.
அறிந்தும் எடை என்று அறிய அறிய
வரச் சொல் பார்ப்போம் எதை என்றும் புரிய புரிய!!!
அப்பா நிச்சயம் பின் பொய்யானவனுக்குத்தான் இவையெல்லாம் பின் நிச்சயம் பின் அறிந்தோமே என்றெல்லாம் கோபம் வந்து பின் அறிந்தும் கூட இறைவன் எங்கிருக்கிறான்?? என்று கேட்பான்.
அனைத்தும் இறைவன் செயல் என்று இறைவன் செயல் இல்லை என்று அறிந்தும் பின் புரிந்தும் பின் எதை என்று அறிய அறிய பின் செயல் இல்லை என்று கூறுவான் பின் கர்மா என்று அறிந்தும் கூட ஏனென்றால் பின் அதாவது பின் சித்தர்களை வணங்குபவர்களே!!! அவை இவை என்றெல்லாம் சொல்லி அப்பா!!!....
ஒருவன் இருக்கின்றானப்பா எதை என்று கூற அகத்தியன் பக்தன் இருக்கின்றானப்பா அவன் நாமம் பின் அகத்தியனே உரைக்கட்டும்!!!
நிச்சயம் அப்பா அறிந்தும் கூட அகத்தியன் உன்னிடத்தில் உறவுகொள்ள பின் சொன்னான் அதாவது உன்னிடம் உறவு கொண்டு சொல்லச் சொன்னான் என்று
அறிந்தும் கூட அப்பா இவ்வாறு அப்பா கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பக்தர்கள்
ஏனப்பா?? அது மட்டுமில்லாமல் அகத்தியன் பின் உன்னைத்தான் பின் அதாவது அதாவது எதை என்று கூட திருமணம் செய்ய சொன்னான் என்று அப்பா !!!!.....
அவள்தனுக்கோ அப்பனே பின் கோடிக்கணக்கில் அப்பா!!!!!
ஆனாலும் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே ஆனால் அகத்தியன் பக்தனாக இருந்து பின் அதாவது வேடமணிந்து அப்பா!!!!! அவன் நாமத்தையும் யான் சொல்கின்றேன் ஈசன் மறு நாமமே !!! அப்பனே
அப்பனே அறிந்தும் உண்மை தன்மை கூட அப்பனே அதாவது பின் ஈசன் நாமத்தை ஜெபித்துக்கொண்டு!!! ஜெபித்துக்கொண்டு!!!
அப்பா நமச்சிவாய!!! ருத்ராட்சை அணிந்துகொண்டு திருத்தலமாக திருத்தலமாகச் சென்று அப்பனே இல்லத்தில் மனைவியை விட்டிட்டு. இன்னொரு பெண்ணிடத்தில் பின் அறிந்தும் கூட பழகுகின்றானப்பா
ஆனால் அறிந்தும் கூட இல்லத்துக்கு வந்தால்!!!! மனைவி திட்டினால்!!!!. அறிந்தும் கூட ஈசன் தான் இதையெல்லாம் செய்தான் என்று.
ஆனால் உண்மையான மனைவி ஈசனை திட்டி தீர்க்கின்றாளப்பா!!!!
ஈசனே இவ்வாறா?????அறிந்தும் அறிந்தும் இவ்வாறு தான் உன் லீலையா???? என்று!!!
அப்பப்பா நிச்சயம் இறைவனுக்கு பின் அறிந்தும் கூட தொண்டு செய்யுங்கள். ஆனால் இவ்வளவு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்காதீர்கள் என்பேன் அப்பனே.
அப்பப்பா அறிந்தங கூட அறிந்தும் எதை என்று அறிய அறிய நாமத்தைச் சொல்லி விடுவேன். ஆனால் அகத்தியனோ வேண்டாம்!!! என்று அறிந்தும் கூட
எதை என்றும் புரிந்தும் கூட நிச்சயம் பின் யான் திருத்துகின்றேன் என்று!!! அவர்களும் அகத்தியர் பக்தர்கள் தான் அப்பா
அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பப்பா எதை என்றும் புரிய அப்பனே பின் நிச்சயம் தண்டனை உண்டு அப்பனே என்னிடத்தில் அகத்தியன் கொடுக்காவிடிலும் யான் கொடுத்து விடுவேன் சொல்லி விட்டேன்!!!
அகத்தியன் நாமத்தை உச்சரித்துக் கொண்டு எதை எதையோ செய்து கொண்டு அப்பா அகத்தியன் என்ன??? எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய
அகத்தியன் சொல்கின்றான் அனைத்தும் பின் என் பிள்ளைகளே என்று!!!
ஆனால் அகத்தியன் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும்??? என்று தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள்!!!
நிச்சயம் அறிந்தும் கூட
ஆனால் பின் பிதற்றுவது அகத்தியன் பிள்ளை என்று!!!
ஆனால் பொய் பொறாமை அறிந்தும் யான் பெரியவன் என்று அகத்தியன் பிள்ளைகள் பின் அனைவரும் ஒன்றாகத்தான் இருந்து இவ்வுலகத்தை காப்போம் என்று சபதம் ஏற்பார்களே தவிர.... ஆனால் பணத்துக்காகவே சபதம் ஏற்கின்றார்கள்
எப்படியப்பா???? நியாயம்???
அப்பப்பா இன்னும் இன்னும் சித்தர்கள் வந்து ரகசியத்தை சொல்லி இன்னும் இன்னும் ரிஷிகள் வந்து பின் ஏற்று நிச்சயம் பின் முனிவர்களும் தேவர்களும் வந்து வந்து அப்பா எங்கு இருக்கின்றார்கள் என்பதை கூட அகத்தியனுக்கு தெரியும் அப்பா பின் நீதி நியாயம் தர்மத்தோடு வாழ்ந்து வந்தால் அகத்தியன் எடுத்துச் செல்வானப்பா அப்பா
அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட
அதனால் புரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் புரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் நிச்சயம் எண்ணற்ற கோடி பிறவிகள் அறிந்தும் எதை என்று அறிய அறிய மானிட பிறப்பு வந்துள்ளதே இதற்கு எவ்வளவு கஷ்டங்கள்?? பின் எவ்வளவு பின் துன்பங்கள்?? அறிந்தும் கூட!!!
ஆனால் அதைத்தான் செய்கின்றாயே மனிதா!! மனிதா!!
இன்னும் இன்னும் ஏன் அவ் ஆன்மாவிற்கு தெரியும் இவ்வாறு அவ்வாறு என்றெல்லாம் அலைபாய்ந்து கூட!!
அதைத்தான் நிறுத்த வேண்டும் நிறுத்த வேண்டும் ஏனென்றால் அவ் ஆன்மா மறுபிறவி எடுக்க துடிக்கும் மனிதா ஆனால் நீயும் கூட மாயையில் சிக்கி விடாதே அறிந்தும் இறைவன் இருக்கின்றான் என்று அவ்வாறு பின் மனதை நோக்கி சென்றால் அதுதான் ஆன்மா
அறிந்தும் கூட உன்னை நீ கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தினால் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தினால் நீ உலகத்தை வெல்லலாம்
பின் உண்டா????? இவ்வுலகத்தில் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தியவன்???
அறிந்தும் செவிகள் கேட்க பின் அறிந்தும் கூட எவ்வளவு தானா என்று
பின் எதை என்று புரிய புரிய கண்களால் அறிந்தும் கூட பின் கைகளால் இன்னும் கால்களால் எதை என்று புரிய புரிய மனிதா மனிதா இவை என்றும் உணர்ந்து உணர்ந்து இன்னும் ஏனைய சித்தர்களும் செப்புவார்கள். செப்புகின்ற பொழுது மனிதர்களைப் பற்றி விலாவாரியாக விவரிக்கின்ற பொழுது இன்னும் அகத்தியன் மனித உடம்பில் என்னென்ன தீங்குகள் எங்கெங்கு பின் நோய்கள் வரும் என்பதை எல்லாம்!!! அதற்கும் பின் நிச்சயம் கண்டுபிடிப்புகள்
ஆனாலும் மனிதன் பணத்திற்காகவே விற்று விட்டான் அப்பா விற்று விட்டான் அறிந்தும் கூட
அதனால்தான் சித்தர்கள் மனிதனை இக்கலி யுகத்தில் கூட வேண்டாமடா!! வேண்டாமடா!! நல்லோர்களுக்காவது உதவட்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி!!!
ஆனாலும் அப்பொழுது கூட திருந்தவில்லையே!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பணம் புகழ் இவை எல்லாம் எதை என்று கூட மனிதன் அறிந்தும் கூட ஏங்குகின்றான்!!!
அப்பா அவ் புகழுக்கும் பணத்திற்கும் ஏங்குகின்றவனுக்கு அதாவது எங்களிடத்தில் வேலை இல்லை
ஆனால் அன்போடும் பண்போடும் சென்று கொண்டிருந்தால் யாங்களே பின் சுலபமாக!!!!!.......
வையெல்லாம்( பணம் புகழ் )ஒன்றுமே இல்லை!!!
அறிந்தும் பின் புண்ணியங்கள் பெற்று நிச்சயம் பின் அறிந்தும் பின் அழகு பார்ப்போம் அறிந்தும் அறிந்தும் கூட அனைத்தையும் கொடுப்போம் புகழையும் கொடுப்போம் பணத்தையும் கொடுப்போம் வேறொன்றும் இல்லை அனைத்தும்
ஆனாலும் இன்னும் சிலர் பணம் வேண்டும்!! பணம் வேண்டும் என்று!!
பணம் வந்து விட்டால் என்ன தான் செய்யப் போகின்றாய்???
நீ வாழ்வாய்!!!
ஆனால் இறைவனுக்குத் தெரியும் இப் பணத்தை யாரிடத்தில் கொடுத்தால் பின் அனைவரிடத்திலும் அறிந்தும் கூட பின் பாசமாக பின் குடும்பமாக செலவிடுவான் என்று!!!
அவ்வாறிடத்தில் (அவ்வாறு இருக்கும் மனிதர்களிடத்தில் தான்) தான் கொடுப்பானே தவிர... நீ மட்டும் பின் வைத்துக் கொண்டு உன் குடும்பம் மட்டும் வாழ்வதற்கு கொடுப்பதற்கு இறைவன் ஒன்றும் முட்டாள் இல்லை அப்பா!!!
அறிந்தும் எதை என்றும் புரியப் புரிய இன்னும் சில பேர் இதை அனைவருக்குமே உரைக்கின்றேன்!!!
பின் பணங்கள் என்னிடமிருந்து போய்விட்டதே பணத்தை அதாவது கொடுத்த இடத்திலிருந்து அறிந்தும் கூட பின் வரவில்லையே என்று!!!
அப்பப்பா!!!!! அறிந்தும் லட்சுமி உன்னிடத்தில் வந்து விட்டாள்!!!! அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டுமே தவிர இவ் லட்சுமியை மற்றொருவரிடம் கொடுத்து விட்டால் அவ்வளவுதான்!!!!
முடிந்தது உன் வேலை!!!
திரும்பவும் வராதப்பா!!!
இதை அனைவருக்கும் உரைத்து விடு!!!!!!
அறிந்தும் கூட
ஆனால் ஏதோ சில புண்ணியங்கள் செய்திட்டாலே வருமப்பா யாங்கள் வந்து பின் அறிந்தும் கூட!!!
இப்படித்தான் அப்பா உன்னிடத்தில் தகுதி இல்லை என்றால் அப் பணம் மற்றொருவன் இடத்தில் சென்று விடும் அப்பா சொல்லிவிட்டேன் அறிந்தும் கூட எதை என்றும் புரிய
புரிய புரிய உண்மைதனை கூட
அப்பா செல்லமாகவே கூறுகின்றேன் அப்பா பின் நல் ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள் அப்பப்பா நல்லதை செய்யுங்கள் அப்பப்பா நீதியை நிலை நாட்டுங்கள் போதுமானது சித்தர்களுக்கு
வேறொன்றும் தேவையில்லை
யாங்கள் எதையுமே கேட்கவில்லை நேர்மையோடு வாழுங்கள் நிச்சயம் பின் அனைவரும் சமம் அனைத்து உயிர்களும் சமம் என்று வாழுங்கள் போதுமானதப்பா!!!
யானே பின் ஈசனை அழைத்து கையைப் பிடித்து இழுத்து வருவேன் காண்பதற்கு நீங்கள்!!!
(ஈசனை அழைத்து வந்து உங்களுக்கு காட்டுவேன்)
அப்பா!!! அறிந்தும் உண்மையை சொல்கின்றேன் மனிதன் பின் காண்பதற்கு அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் அறிந்தும் உண்மைதனை கூட!!!
பின் இறைவனை காண மனிதனால் முடியும் ஆனால் மனிதனின் பேராசை
பேராசையப்பா பணத்தின் மீது!!! பின் புகழின் மீது இல்லத்தின் மீது மனைவி மீது மக்கள் மீது!!! இவ்வாறு வைத்திருந்தால் என்ன லாபம்???
ஆனால் இதை தவிர்த்து முதலிலே இறைவனிடத்தில் பின் அன்பாக பாசமாக பின் கண்டு விட்டால் இறைவனை கண்டுவிட்டால் இவையெல்லாம் இறைவனே கொடுப்பான்!!!
இறைவனால் கொடுப்பதை நிச்சயம் யாராலும் தடுக்க முடியாது!!
முதலிலே முந்திக் கொள்கின்றாயே!! முந்திக்கொண்டு அனைத்தையும் இழந்து விடுகின்றாயே!!!
அப்பப்பா அதனால் இளமையில் காதல் போதை!!!
அப்பா அவ் காதல் போதை இறைவனிடத்தில் வைத்திருந்தால் நிச்சயம் இறைவன் கண்களுக்கு தெரிந்திருப்பான் பின்பு தானாக வந்துவிடும் குடும்பமும் இன்னும் அதாவது சொல்கின்றேனே பின் மனைவி வருவாள் பின் பிள்ளைகள் வருவார்கள் அறிந்தும் கூட இறைவனே உயர் தேவர்களை தேவதைகளை அழைத்து இவர்களுக்கு பிள்ளைகளாக அதாவது பின் அதாவது பின் ஊர்வசி ரம்பை இன்னும் இன்னும் கூட அவர்களை பின் அழைத்து இவர்களுக்கு மனைவியாக போ என்று!!
அப்பா!!! அப்பொழுது உன் குடும்பமும் நீண்டு வாழுமப்பா!!!
அப்பொழுது முதலில் மாயையை பின்பற்றுவீர்கள் அப்பனே ஒன்றும் நடக்கப்போவதில்லை சொல்லிவிட்டேன்!!!
இன்னும் சொல்லிக்கொண்டே கஷ்டம் கஷ்டம் என்று அப்பப்பா!!!! நீ சிறுவயதில் என்னென்ன செய்தாய்??? அப்பா???
அதற்கெல்லாம் தண்டனைகள் அனுபவித்து தான் ஆக வேண்டும்!!! அறிந்தும் உண்மைதனை கூட எடுத்துரைக்க அப்பனே இவ்வுலகத்தில் யாரும் இல்லை அப்பா!!!
அப்பா பொய்யானவற்றை கூறிக்கொண்டு பொய்யானவற்றை எடுத்துச் சொல்லித்தான் இவ்வுலகத்தில் பின் நடந்து கொண்டிருக்கின்றது
உண்மையை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை அப்பா
இவ்வுலகத்தில் கொண்டு சொல்லுவோம் எம் வாக்குகளை!!!!
அப்பப்பா இறைவன் வந்துவிட வேண்டுமாம்!?!?!?!?!
பின் அவ்வளவு எதை என்று அறிய அறிய சாதாரண மனிதனே எதை என்று புரிய புரிய புரிந்தும் கூட இறைவனுக்கு பூஜை செய்கின்றேன் இறைவன் இங்கே இருப்பானாம்!!!?!?!?!!!!
அட முட்டாள் மனிதனே!!! அறிந்தும் கூட இறைவனுக்கு பல வேலைகள்!!!
உலகத்தையே பார்க்க வேண்டும் எதை என்றும் புரியாமல் கூட!!!
ஆனால் தன் கையிலே இருக்கின்றது பின் அன்பு!!!
அன்பு செலுத்து அதாவது மனதில் திருத்தலத்தை நீ கட்டி விட்டால் போதுமானதடா போதுமானது அறிந்தும் உண்மைதனை கூட
இன்னும் இன்னும் சொல்லப்போனால் இன்னும் அறிந்தும் கூட அதாவது உன் குடும்பம் அதாவது அகத்தியன் பக்தன் ஒருவன் சொல்கின்றான் பின் சுவடியை பார்த்து நிச்சயம் இவ்வாறு தங்க நகைகளும் வைத்தால் தான் பின் உன் குடும்பம் பிழைக்கும் என்று
ஆனால் பின் பயந்து வைத்து விட்டாள் ஒரு பெண்ணே!!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட ஒன்றுமே நடக்கவில்லை அறிந்தும் கூட
மீண்டும் பின் தோல்வியுற்றாள் இவ்வளவு லட்சங்களா என்று அப்பப்பா என்ன லாபம்?? என்ன லாபம்?? அப்பா பொய்கள் வேண்டாம் அப்பா
(போலியான சுவடி ஓதும் இடத்திற்கு சென்று ஒரு பெண்மணி பணத்தையும் தங்க நகைகளை இழந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றார்)
உண்மையைச் சொல்லி பிழைத்துக் கொள்ளுங்கள் அப்பா தர்மம் காத்திட வேண்டும் இவ்வுலகத்தில்
அப்பா எதை என்று புரியப் புரிய
அப்பப்பா அறிந்தும் கூட நிச்சயம் அப்பா இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் பழனி தன்னில்!!!
ஆனாலும் இது இப்பொழுதே நடந்தது அதாவது ஒரு நூறு வருடங்கள் அறிந்தும் உண்மைதனை கூட
இதனால் நிச்சயம் பின் வேலைக்கு சென்றான் அதாவது பின் பிறப்பு எடுத்து நிச்சயம் காதலித்தான் அறிந்தும் கூட ஆனால் திருமணமும் முடிந்தது தன் காதலியோடு
ஆனால் இவை வீண் என்று நினைத்து விட்டான் தள்ளி விட்டான் அறிந்தும்.
அப் பெண்மணியோ பின் துடித்தாள்!!! ஏன் எதற்கு என்று அறிய அறிய
ஆனால் பணம் தான் முக்கியம் என்று பணத்தை சம்பாதித்தான் பின் அதுவும் அழிவற்றது
ஆனாலும் அனைத்தும் பின் பிள்ளைகள் இவையும் வீண் என்று
ஆனால் இன்னும் அறிந்தும் கூட பின் சுகம் தான் இவ்வுலகத்தில் பின் சுகத்தை கண்டு கொண்டான் அல்லவா அதனால் சுகம் தான் மிச்சம் அதாவது எப்பொழுதுமே சுகம் தான் பெண்களோடு உல்லாசம் தான் நிச்சயம் முக்கியம் என்று உணர்ந்தான்.
இதனால் அவந்தனுக்கு மனதில் தோன்றியது பின் அதாவது வேடத்தை அணிந்து கொண்டான் சாமியார் என்று சொல்கின்றார்களே முட்டாள் மனிதனே இவ்வாறு பின் சாமியார் வேடத்தை அணிந்து கொண்டால் அனைத்து பெண்களும் பின் நம்மிடத்தில் வருவார்கள் கடைநாள் வரையிலும் வாழ்ந்திடலாம் என்று
இதனால் அப்படியே வேடம் அணிந்தான் அறிந்தும் கூட
இதனால் பின் அனைத்தும் அதாவது வாக்கு சொல்கின்றேன் என்று பெண்ணே வா என்று இன்னும் எதை எதையோ சொல்லி மயக்கினான் அறிந்தும் கூட உல்லாசமாக இருந்து விட்டான்
ஆனால் முருகன் அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்!! அறிந்தும் கூட
ஆனாலும் தண்டனைகள் கொடுத்து விட்டான்!
இப்பிறவிலும் பிறந்துள்ளார்கள் அப் பெண்மணியும் கூட!!! ஏனென்றால் நிச்சயம் தெரிகின்றது இவந்தன் பொய்யானவன் என்று ஆனால் பொய்யானவற்றிலேயே விழுந்து விட்டார்கள் சொல்லிவிட்டேன் அறிந்தும் அறிந்தும் கூட
ஆனாலும் அவந்தன் பல கோடிகள் சம்பாதித்து விட்டான்!!! ஆனால் அறிந்தும் கூட எதை என்று கூட ஆனால் முருகன் வந்து அறிந்தும் கூட அனைத்தையும் அழித்து விட்டான்!!
ஆனாலும் அய்யய்யோ!!! என் பணங்கள் போய்விட்டதே என் பணங்கள் போய்விட்டதே!!!
அட முட்டாளே முட்டாள் மனிதா உன் பணங்கள் எங்கே அது??? உன் பணமா அது??? அறிந்தும் எதை என்று அறிய அறிய
இறைவன் கொடுத்தான் இறைவன் எடுத்துக் கொண்டான் அவ்வளவுதான்
ஆனாலும் நேராக பின் அறிந்தும் கூட அவனை விரட்ட தொடங்கினார்கள் அறிந்தும் எதை என்று அறிய அறிய நேராக அவன் காசிக்கும் வந்து விட்டான் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய
இங்கு ஈசனை பார்த்து ஈசனே !! நீ இறைவனா??? அறிந்தும் கூட உல்லாசமாக இருந்தேன் அதாவது உன்னை நம்பினேன் நீயாவது பிழைக்க வைப்பாயா என்று
ஆனால் பிழைக்க வைக்கவில்லையே அறிந்தும் கூட அனைத்தும் பின் அறிந்தும் உண்மைதனை கூட பின் பிடுங்கி விட்டாயே என்று
பின் யோசித்தீர்களா மனிதன் இப்படித்தான் பிதற்றிக் கொண்டிருக்கின்றான் இப்பொழுது
மனிதன் அனைத்து தவறும் செய்வானாம்!?!?!?!?!?!?!?!
ஆனால் பிடுங்கி விட்டால் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவானாம்!?!?!! மனிதன்!!!
ஆனால் அறிந்தும் பின் ஈசன் வந்து விட்டான் நேரடியாக!!!!
அப்பப்பா நீ மனதில் அறிந்தும் கூட என்னென்ன நினைத்தாயோ அறிந்தும் கூட அது எந்தனக்கு கேட்டது என்று!!!
ஆனாலும் அவனும் நீ யாரப்பா என்று கேட்டு விட்டான்!!
(ஈசன்) யானும் இங்கு பின் ஒரு பிச்சை ஏந்துபவன் தான் அறிந்தும் கூட என்று கூட
பின் பிச்சைக்காரனா நீ அறிந்தும் அறிந்தும்
ஆனால் பின் ஈசன் கேட்டான் அதாவது மறைமுகமாக வந்து (மாறுவேடத்தில் வந்து)
அவனைப் பார்த்து நீயும் பிச்சைக்காரன் தானே என்று!!
ஆனாலும் அறிந்தும்
அவன் யான் எப்படி வாழ்ந்தேன் என்று தெரியுமா!!!! ஆனால் ஈசன் தான் இப்படி கெடுத்து விட்டான் என்று
ஆனால் வந்தது ஈசன் என்றே தெரியவில்லை இதுதான் அன்பா?? இதுதான் பாசமா???
வேஷம் மனிதா வேஷம் இதுதான் அறிந்தும் கூட
ஆனால் ஈசன் கேட்டான் அறிந்தும் கூட அதாவது எதை என்று அறிய அறிய யான் பிச்சைக்காரன் அல்லவா ஏதாவது கொடு என்று
உந்தனுக்கு போய் பின் யான் கொடுப்பதா??
எந்தனுக்கு பல சொத்துக்கள் இருக்கின்றது அறிந்தும் அறிந்தும் ஆனாலும் வீணே (சும்மாகவே) என்னைக் கூட அடிக்க முற்பட்டார்கள் பின் கொல்ல முற்பட்டார்கள் அதனால் இங்கு வந்து ஒளிந்து கொண்டு விட்டேன் என்றெல்லாம் பொய்கள் சொல்லி விட்டான்!!!
ஆனால் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய ஆனால் வந்தது கோபம் அறிந்தும்!!!
(காக புஜண்டர் மகரிஷி)
யான் வந்து பின் அவந்தனை பளார் என்று அடித்தேன் அறிந்தும் எதை என்றும்...
(போலி சாமியார்)
அய்யய்யோ என்னை யார் அடித்தது??? பின் இறைவனே இதனால் என்னை அடிக்கவில்லை பின் மக்கள் அனைவரும் என்னை பாசத்தோடு என் மீது பாசம் காட்டினார்கள் காண்பித்தார்கள்!!! இறைவா என்று என் கால்களில் கூட பின் தொட்டு வணங்கினார்கள்!!!
ஆனால் நீ அடித்தாயே என்று!!!
(காக புஜண்டர்)
ஆனாலும் யான் மறைமுகமாக வந்து என்ன செய்வாய் என்று கேட்டேன்!!!
(அவ் போலி சாமியார்)
யான் என்ன செய்கின்றேன்?? என்று பார்!!! இறை சக்தி என்னிடத்தில் உள்ளது ஈசனே என்னிடத்தில் உள்ளான் என்று
(காக புஜண்டர்)
சரி பின் காண்பி!!!! உன்னுடைய லட்சணத்தை காண்பி!!!! முடிந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய் என்று!!!!
பார்க்கின்றேன் பார்க்கின்றேன் என்று பின் வாய்!!!! அவன் வாய் தான் பேசுகின்றதே தவிர ஒன்றும் பேசவில்லை
இதனால் அடித்தேன் அறிந்தும் எதை என்று அறிய அறிய பளார் என்று அடித்தேன் நிச்சயம் பின் அவன் பிரண்டு பிரண்டு எங்கேயோ விழுந்தான் பின் அவன் காதுகளும் கேட்கவில்லை அறிந்தும் கூட அவன் கைகளும் உடைந்து விட்டது கால்களும் உடைந்து விட்டது அறிந்தும் அறிந்தும்!!
ஈசன் அதாவது எதை என்று அறிய அறிய
(போலி சாமியார்)
ஈசனே உன்னை நம்பி வந்தேனே இப்படி ஒரு அறிந்தும் பின் எதை என்று அறிய அறிய இப்படி ஒரு கவலையா என்று!!!
ஆனால் மனிதா பார்த்தீர்களா அனைத்தும் நீங்கள் செய்த பாவங்கள் புண்ணியங்கள் தான் உங்கள் எண்ணத்திற்கு தகுந்தவாறே உன்னை தீர்மானிக்கும்.
நீ உயரிய இடத்திலும் கூட தாழ்வான இடத்திலும் கூட இருப்பதற்கு காரணம் நீங்களே
நோய்கள் வருவதற்கும் இன்னும் என்னென்ன வருவதற்கும் அனைத்திற்கும் காரணங்கள் பின் நீயே
உன்னிடத்திலே வாழ்க்கை இருக்கின்றது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் யாங்கள் வருவோம்
சொல்லிவிட்டான் அகத்தியன் இச் சுவடியை கூட தருவோம்!!! அதாவது எழுத்துக்கள் மூலமாகவே வரும் என்று பல உரைகளிலும் கூட
ஆனால் ஒருவனாவது அறிந்தும் கூட சுவடி வந்தால் பணம் கிட்டி விடுமாம்!?!?!?! அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் பணத்திற்காகவே சுவடியை ஓதினால் கர்மா அப்பா கர்மா!!!
அறிந்தும் கூட கர்மா பற்றி தெரியவில்லை மனிதனுக்கு!!!
ஒருநாள் அது (கர்மா)அடித்தால் நிச்சயம் யாரும் தாங்க போவதில்லை!!!
இன்னும் ஜோதிடர்கள் எதை என்று கூட பின் அவை இவை அருள்வாக்கு இவையெல்லாம் சொல்லி வருகின்றார்களே அவர்களுக்கு இதெல்லாம் பாவம் என்று தெரியவில்லை
ஆனால் அவ் பாவத்தை போக்க எதை என்று அறிய அறிய எங்களால்தான் முடியும் அறிந்தும் அறிந்தும் கூட
பின் மனிதா அவையெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் கூட காசை வாங்கினாலும் அகத்தியன் சொல்வான் பின் எப்படி செய்ய வேண்டும் என்று !! அப்படி செய்திட்டு புண்ணியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயம் உங்கள் குடும்பம் நீடூழி வாழும் அப்படி இல்லை என்றால் பாவங்கள்!!
யான் பார்த்திருக்கின்றேன் ஜோதிடன் எப்பொழுதும் கூட பின் நன்றாக பிழைக்க முடியாமல் அவன் குடும்பம் அடித்தளத்தில் போவதை எல்லாம் பார்த்திருக்கின்றேன்!!!
(ஜோதிடர்கள் குடும்பம் கர்மாவினால் வாழ்க்கை தரம் கீழாக போனதை எல்லாம்)
அருள்வாக்கு சொல்கின்றவர்களும் கஷ்டங்கள் எதை என்று அறிய அறிய பின் இன்னும் ஆபத்து அதாவது விபத்துக்கள் ஏற்பட்டு இன்னும் அறிந்தும் அறிந்தும் வரும் காலங்களில் இப்படித்தான் பின் விபத்துக்கள் நடக்கும் அறிந்தும் அறிந்தும்.
எண்ணங்கள் அதாவது தான் வாழ்கின்றோம் வாழ்கின்றோம் என்று தீய செயல்களை செய்து விட்டு அறிந்தும் கூட பின் ஒரே நொடி அறிந்தும் கூட ஒரே நொடியில் பின் சனியவன் இழுத்து விடுவான் சொல்லிவிட்டேன் அறிந்தும் கூட
அதனால் நிச்சயம் நேர்மையை கடைபிடியுங்கள் நேர்மை தெரியாவிடிலும் கூட நேர்மையுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுடன் நட்பை உயர்த்திக் கொள்ளுங்கள் போதுமானது இவ்வுலகத்தில் நீடூழி வாழலாம்
அறிந்தும் கூட எம்முடைய ஆசிகள் அனைவருக்கும் உண்டு
இன்னும் ஒரு தத்துவத்தை விளக்கமாக கூறுகின்றேன் ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!