​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 24 July 2023

சித்தன் அருள் - 1368 - அன்புடன் அகத்தியர் - அமர்நாத் யாத்திரை அனுபவம்!







வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!! 

நம் குருநாதர் நாம் நம்முடைய வாழ்வில் அனுதினமும் எந்தெந்த  மூலிகைகளை உண்டு வர வேண்டும் மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார் அதில் குறிப்பாக 32 வகையான மூலிகை மருந்தும் திரிபலா திரிகடுகம் இதனை குறித்தும் குருநாதர் வாக்குகள் தந்திருந்தார் திரிபலா திரிகடுகு உண்ண வேண்டிய அவசியம் என்ன?? எதற்காக உண்ண வேண்டும் என்பதை அமர்நாத்தில் ஈசன் பார்வதி தேவியார் காகபுஜண்டர் முன்னிலையில் குருநாதர் வாக்குகளாக தந்திருந்தார் இந்த வாக்கினை நன்கு உணர்ந்து அடியவர்கள் அனைவரும் அனுதினமும் திரிபலா திருக்கடுகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடைகளில் கிடைக்கும் பல கூட்டுக் கலவைகள் மற்றும் வியாபார நோக்கத்திற்காக செய்யப்படுவது அதனால் அதை தவிர்த்து விட்டு சுத்தமான திரிபலா திரிகடுகு இதனை பயன்படுத்தி வர முழு பலன் தரும்.

அகத்தியர் அடியவர் குருநாதர் உரைத்த மூலிகைகளை பயன்படுத்தி மருந்துகள் அனைவருக்கும் வழங்கி வரும் திரு தனக்குமார் ஐயா ஏற்கனவே திரிபலா திருகடுகினை சுத்தமாக தயாரித்து அடியவர்களுக்கு வழங்கியிருந்தார்!!  நம் குருநாதர் திரிபலா திருகடுகு மகத்துவத்தை மீண்டும் வாக்குகளில் பரிந்துரை செய்திருக்கின்றார் அதனால் ஏற்கனவே இதனை பற்றி அறிந்த நபர்களும் சரி இப்பொழுது தெரிந்து கொண்ட அடியவர்களும் சரி திரு தனக்குமார் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு திரிபலா திரிகடுகு மருந்துகளை பெற்றுக் கொண்டு மருந்துகளை உண்டு ஆரோக்கியமாக வாழ கேட்டுக் கொள்கின்றோம் !!!

நம் குருநாதர் உடைய பக்தராக இருப்பது மட்டும் பெரிதல்ல குருநாதர் கூறுகின்ற விஷயங்களை அப்படியே அனுசரித்து செயல்படுத்தி வாழ வேண்டும் அதனால் இந்த மருந்துகளை அவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள்

திரு தனக்குமார் ஐயா 
ஈரோடு.   Contact number 
9566825599

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!! 

ஈசனார் :::

நில்லும்!!! புசண்டனே நில்லும்!!!!!  நிச்சயம் வந்து கொண்டு தான் இருக்கின்றது!!.... உணர்வேன்!!!! ஏன்? எதை என்றும் அறிய அறிய ஆனால் இதற்கு அகத்தியன் விஞ்ஞான வழியில் உரைப்பான்!!!

அகத்திய பெருமான் :

ஐயோ!!!!...........  அனைத்தும் அப்பனே!! அம்மையே!! என்னிடத்திலே விட்டுவிடுகின்றீர்களே!!!!!.... நிச்சயம் யான் செப்புகின்றேன்!!!!!

புசண்டனே!!!!!!!  அம்மையப்பனே!!!!! கேளுங்கள்!!!! 

எதை அறிந்தும் கூட நிச்சயம் பின் இவ்வுலகத்தில் தவறு செய்யக் கூடாது அறிந்தும் எதற்கு எடுத்து எடுத்து  நிதானித்து நிதானித்து பின் வாழ வேண்டும்.... நிதானத்தில் வாழ வேண்டும்....ஆனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!

மனிதனுக்கு வரும் காலங்களில் நோய்கள் வருகின்றது எதனால்???என்று!!!! 

சிறுவயதிலே அனைத்தையும் மென்று தின்று விடுகின்றான்!!! ஆனால் முதுகின் பின்புறம் ஒரு சுவாசம் உள்ளது!!!!

அவ் சுவாசம் நன்று செயல்பட வேண்டும்!!!!

ஆனால் பின் அனைத்தும் மென்று தின்கின்றான்!!! அதாவது பல வகையான ருசிக்காகவே!!!!!!!......

இதனை சுவாசம் அதாவது முதுகில் உள்ளதே அங்கு போய் சேகரித்து அது அதுவாகவே வைக்கின்றது!!! இதனால் பின் அளவு கொள்ளாமல் அவை எல்லாம் பின் சிறிதாக கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கூட அங்கங்கும் பாய்ந்து விடுகின்றது!! கைகளிலும், கண்களிலும், வாய்களிலும், இன்னும் மூக்கினிலும், இன்னும் மூளையிலும், இன்னும் கால்களிலும், பாய்கின்றது!!!

அதனால் நிச்சயம் பின் அதனால் தான் அவ் எவையென்றும் அறிய அறிய அவ் அழுக்குகளை நீக்க வேண்டும் என்பதற்காகவே!!.......

""""""""""""" திரிபலா """"""""

"""""""""""""திரிகடுகம்"""""""""""

இன்னும் பல வகையான மூலிகைகளை கூட யான் உரைத்தேன்!!!!!

ஆனால் மனிதன் அதை பெற்றுக்கொள்ளவில்லை!!!! அதை உண்ணவும் இல்லை!!!! 

இதனால் நோய்கள் வரும்!!! 

தெரிந்து கொண்டீர்களா!!!!! இதை !!!

என்னுடைய கண்டுபிடிப்பே!!! 

ஈசனார் :

அகத்தியனே!!!!!!!  சரியான விளக்கம் தந்தாய்!!!!!

இவ் வாக்கினை நன்குணர்ந்து திரிபலா திரிகடுகு இவற்றின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்க!!!!! 

குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள சொல்லுங்கள் எல்லா வியாதியும் வயிற்றிலிருந்து தான் தொடங்குகின்றது என்று குருநாதர் கூறியிருக்கின்றார் திரிபலா திரிகடுதிணை எடுத்து வர எடுத்து வர வயிறு சுத்தமாகும் நோய் நொடிகள் குறையும் நன்றி வணக்கம்

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!!

ஈசனுடைய ஆலயங்களுக்கு ஸ்தல யாத்திரை தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கில் குருநாதர் தெளிவாக கூறியுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு அகத்தியர் அடியவர் வயதில் மூத்தவர். பூர்வீகம் தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் நம் குருநாதரை தந்தை போல் எண்ணி ஆராதனை செய்து வருகின்றவர் தமிழ்நாட்டில் உள்ள பல ஆலயங்களுக்கும் அடிக்கடி வந்து சென்று பல புண்ணியங்கள் தான தர்மங்கள் செய்து வருபவர் இந்த முறை அவருக்கும் குருநாதர் அமர்நாத் செல்ல வேண்டும் என்று உத்தரவு கொடுக்க!!!! வயது மூப்பு காரணம் என்றாலும் நான் குருநாதர் கூறியதை கடைப்பிடிப்பேன் என்று மன உறுதியுடன் அமர்நாத் யாத்திரை வந்தார். குகை அடிவாரம் வரை குதிரையின் மூலம் பயணம் செய்து அதன் பிறகு குகையில் செங்குத்தாக ஏற வேண்டும் ஏற்கனவே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவருக்கு சிறிது தலை சுற்றலும் உடல் சோர்வும் ஏற்பட்டது.

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் அமர்நாத் யாத்திரை என்பது ஜூன் மாதம் தொட்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை மூன்று மாதம் வரை தரிசனம் செய்ய முடியும். இந்திய ராணுவம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை இவர்கள்  பேருதவியாக எந்நேரமும் சேவை செய்து கொண்டிருப்பார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் வாழும் பழங்குடி இஸ்லாமிய மக்கள் அமர்நாத் யாத்திரையில் வரும் பக்தர்களுக்கு குதிரை சவாரி மற்றும் டோலி மூலம் தூக்கிச் செல்வது கை தாங்கலாக பிடித்துச் செல்வது என்று சேவை செய்து வருகின்றார்கள்.

அவர்களுக்கும் படியளக்கும் பரமன் அமரநாதன்!!!!! இந்த மூன்று மாதங்கள் அவர்கள் கிடைக்கும் கூலித்தொகையை வைத்துக் கொண்டுதான் வருடம் முழுவதுமாக வாழ்க்கையை நடத்த முடியும்.

குறுகலான சாலை பனிச்சரிவு போன்ற கஷ்டங்கள் இருந்தாலும் வயது முதிர்ந்த இந்தியா முழுவதும் இருந்து வரும் அனைத்து பக்தர்களையும் சுமந்து அமர்நாதன் தரிசனத்தை செய்வித்து வருகின்றார்கள்!!!!

டோலி,  மற்றும் குதிரைச் சவாரி இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தான் அவர்களுடைய வாழ்க்கை!!!

குஜராத் சேர்ந்த அந்த அடியவர் குகை வரை சென்ற பின் உடல் சோர்வு காரணமாக மேலே படிக்கட்டுகளில் ஏற முடியவில்லை அப்பொழுது அங்கு இருந்த அந்த கூலியாட்கள்  உதவியோடு அமர்நாதனை தரிசனம் செய்தார்!!!!

அவர்களும் அவரை சுமந்து கொண்டு தரிசனம் நல்லபடியாக செய்ய உதவினார் இவரும் மன மகிழ்ந்து அவர்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்தார்.

இதனை குருநாதர் தன்னுடைய வாக்கில் குறிப்பிட்டு...... ஈசனை நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு உதவினால் அது மிகப் பெரிய புண்ணியம் என்று வாக்கில் குறிப்பிட்டு இருந்தார்.

இது புனிதமான தொலைதூர பயணங்கள் ஆகட்டும் அடுத்து இருக்கும் ஈசன் ஆலயம் ஆகட்டும் எந்த ஒரு ஈசன் ஆலயத்திற்கு சென்றாலும் இறைவனை வணங்குவது மட்டும் இல்லாமல் ஈசனின் நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு உதவினால் அது மிகப்பெரிய புண்ணிய செயலாகும் என்ற வாக்கு நம் அனைவருக்கும் பொதுவானது.

குருநாதர் தன்னுடைய பொதுவாக்கிலும் சரி தனி நபர் வாக்குகளிலும் சரி புண்ணியங்களை எப்படி சம்பாதிப்பது என்பதை குறிப்பிட்டு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார் அதை நாம் நன்குணர்ந்து கடைபிடித்தால் நாமும் புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம் அதில் குருநாதர் கூறிய வாக்குகளிலிருந்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளும் வழி இந்த வாக்கை உணரும் பொழுது நம் அனைவருக்கும் புரியும்.

குருநாதர் அருளிய வாக்கு!!! 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலமுடனே ஆசிகள் அப்பனே சிலசில மனதில் குழப்பங்கள் குறைபாடுகள் வரலாமே தவிர நிச்சயம் யான் வந்து காத்திடுவேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே சரியாகவே அப்பனே எவை என்றும் அறிய அறிய என்னுடைய ஆசீர்வாதங்கள் கடைநாளும் அப்பா!!!!

அப்பனே இப்போது திரிந்ததில்லை!!!! முன்பெல்லாம் இங்கு நீ திரிந்து இவைதன் பின் வந்து கொண்டு தான் இருக்கின்றாய் அப்பனே

அப்பனே ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே!!!

எத்தனையோ செலவுகள் மனிதர்கள் தெரியாமலே செய்கின்றார்கள் அப்பனே!!!

ஆனால் இறைவனிடத்தில் வரும்பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய நான்கு பேர் தூக்கினார்களே உன்னை பின் அவர்களும் எதை என்றும் அறிய அறிய ஏதும் இல்லாதவர்களே!!!!!

அதனால்தான் அப்பனே அவர்களுக்கும் எதை என்று கூட பின் கொடுத்திட்டாய் அப்பனே!!!! எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே.....

ஈசனையே பின் நம்பி பிழைப்பு நடத்திக் கொண்டு வருபவர்களுக்கு அப்பனே!!.......

பின் தன் மகள் தன் மகன் தன் குடும்பம் என்று இன்னும் இன்னும் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பல மனிதர்கள் அப்பனே சுயநலத்தோடு எதை எதையோ செய்கின்றார்கள்!!!அப்பனே

ஆனால் ஈசனை நம்பி அதாவது பின் எதை என்று கூட இதையே நம்பி பிழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அப்பனே கொடுப்பது தவறில்லை என்பேன் அப்பனே!!!!!

இதனால் அப்பனே அதனால்தான் எங்கு சென்றாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஈசனை பின் எவை என்று கூட அன்பால் வணங்கி அப்பனே மற்றவர்களுக்கு கூட அப்பனே ஈசனை நம்பி பிழைப்பவர்களுக்கு கூட ஏதாவது தன்னால் முடிந்த வரை செய்தால் புண்ணியம் அப்பா!!!!!!

இதை மனிதன் எப்பொழுதுமே செய்வதில்லை அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அனைத்தும் அப்பனே எவை என்று கூட பின்.... உந்தனுக்கு ஓர் யுகத்தில் அப்பனே எதை என்றும் தெரியாமலே அப்பனே.... இவர்கள் எதை என்றும் அறியாமலே சில தவறுகள் செய்தனர் அதனால் உன்னை சுமந்து அப்பனே அக்கர்மாவை நீக்கிக் கொண்டனர்!!!

இப்படித்தான் அப்பனே அனைத்தும் கர்மா மூலமே அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் நடந்து கொண்டிருக்கின்றது

ஆனால் முட்டாள் மனிதனுக்கு இது தெரிவதே இல்லை அப்பனே!!!

என்னுடைய ஆசிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யானும் வந்தேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அனைவருக்கும் ஈசன் பார்வதி தேவியும் அழகாக பார்த்திட்டார்கள்!!! அப்பனே நலமாக எவை என்றும் அறிய அறிய எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!

கடந்த வருடம் அமர்நாத் பயணத்தில் மேலே தங்குவதற்கு அனுமதி இருந்தது அமர்நாதன் மடியில் சென்ற அடியவர்கள் அனைவரும் ஒரு இரவு தங்கி மறுநாள் கீழே இறங்கி வந்தனர் அதேபோன்று இந்த ஆண்டு இந்திய ராணுவத்தால் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும் அமர்நாத் குகையை அடுத்துள்ள பஞ்சதர்ணியில் தங்குவதற்கு ஏற்பாடுகள் இருந்தது அங்கு தங்கி செல்லலாமா!???என்று குருநாதரிடம் கேட்டதற்கு!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய எதற்காக வந்தீர்கள் இங்கு அப்பனே ஈசனை அன்போடு பார்த்துவிட்டு அப்பனே அன்பால் வணங்கியது போதும் என்பேன் அப்பனே

அவந்தனே பார்த்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே!!!  எவையென்று கூற எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று கூட அப்பனே இருப்பினும்... செல்லுங்கள் அப்பனே கவலைகள் இல்லை!!!

யான் ஆசிகள் பின் வாங்கி எதையென்றும் அறிய அறிய அப்பனே உங்களிடத்திலே யானும் வந்து விட்டேன் அப்பனே!!!

அவனும்( ஈசன்) பார்த்துவிட்டான் அப்பனே!!!

செல்லுங்கள் அப்பனே!!!!!!

குருநாதர் ஒரு காரணமாகத்தான் மேலே தங்க வேண்டாம் கீழே செல்லுங்கள் என்று கூறினார் அதற்கும் பிற்பாடு காரணங்கள் இருந்தது அவையெல்லாம் குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் வெளிப்படுத்தினார்!!!!!!

அமர்நாத் யாத்திரையின் போது ஈசனும் குருநாதர் அகத்திய பெருமானும் யார் வரவேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர்கள்தான் வரமுடியும்!!! அப்படி நம்முடைய விருப்பத்தின் பேரில் ஒன்றும் நடக்காது இங்கு தீர்மானம் என்பவை ஈசனால் எடுக்கப்படும் என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் குருநாதர் தன்னுடைய வாக்குகளில் வெளிப்படுத்தினார் அந்த தொகுப்பு!!!!

அமர்நாத் யாத்திரை வந்த அடியவர் தன்னுடைய உறவினரை அழைத்து வருவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார்!!!! அவர் மிகவும் பக்தி மிகுந்தவர் அவரையும் அழைத்து வர அனுமதி கேட்டு இருந்தார்.

குருநாதர் அதற்கு இறைவன் பொதுவானவன் அனைவருக்கும் சொந்தம் அனைவரும் தரிசனம் செய்ய முடியும் என்பதை கூறிவிட்டு ஈசனுடைய ஆலயங்களுக்கு செல்வதற்கு புண்ணியங்கள் தேவைப்படும் புண்ணியங்கள் இருந்தால் தான் ஈசனே அங்கு அனுமதி அளிப்பான் என்று வாக்குகள் தந்திருந்தார்.

இதற்கிடையே பல்வேறு  மனக்குழப்பங்கள் யாத்திரை தொடர்பான விஷயங்கள் எல்லாம் நடந்தேறிய பொழுது சரி குருநாதர் கூறிய நாம் மட்டும் சென்று வருவோம் என்று சென்று வந்தபின் ஓரிடத்தில் மற்றவர்களை அழைத்து வருவதற்கு சில தடங்கல்கள் ஏற்பட்டது அவர்களால் வர முடியவில்லை இதனைப் பற்றி குருநாதர் இடம் கேட்ட பொழுது

அப்பனே!! ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!

நீங்கள் அனைவருமே அப்பனே எவை என்று கூட பல மனிதர்களுக்கு கூட சேவைகள் செய்துள்ளீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!

அதனால்தான் ஈசனே உங்களை அழைத்தான்!!

அவை மட்டும் இல்லாமல் நீங்களும் கேட்கலாம் அனைவரும்( மற்ற பக்தர்கள் யாத்திரையில் வந்து செல்வதை) வந்து தான் செல்கின்றார்களே என்று!!!!

ஆனாலும் அனைவரும் கூட இங்கேயே எதை என்று கூட முன்னொரு காலத்தில் ஈசனுக்காகவே சேவைகள் செய்து அடிபட்டு அப்பனே பின் எவை என்று கூட உயிரையே மாய்த்தவர்கள்!!!! அவர்கள் தான் இப் பிறப்பிலும் இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!! 

(யாத்திரை வர விரும்புகின்றவர்கள்) 

அவர்களும் கூட அப்பனே எதை என்று கூட பின் இயலாதவர்களுக்கு அதாவது வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவளிக்க எதை என்றும் அறிய அறிய உணவளிக்க நன்று என்பேன் அப்பனே!!

இதை செய்து கொண்டு இருக்க நன்று என்பேன். அப்பனே!!!!

இதனால் ஈசனே அழைப்பான் என்பேன் அப்பனே!!!!ஈசன் சம்மதம் இல்லாமல் வந்தாலும் அப்பனே ஏதேதோ நடந்துவிடும்!!!

அதனால்தான் அப்பனே இப்பொழுது கூட நீங்கள் எதை என்றும் அறியாமலே அப்பனே பின் அனைவரையும் அழைத்து வந்தாலும் அக்கர்மா உங்களை சார்ந்து விடும் அப்பனே மீண்டும் கஷ்டத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்!!! பின் யான் அகத்தியனை வணங்கினேனே ஒன்றும் பிரயோஜனம் இல்லையே என்று புலம்பி இருப்பீர்கள் இதற்கு நீங்கள் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே அவர்களுக்கும் எதையென்று அறிய அறிய சிறு சிறு கர்மாக்கள் அப்பனே எதை என்று கூட பணத்தை வைத்துக்கொண்டு அப்பனே பின் பிறருக்கு உதவிகளும் செய்வதில்லை அப்பா!!!!

அப்பனே இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே அவர்கள் எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே கர்மா இருப்பவர்களை அப்பனே நீங்கள் அழைத்து வந்தால் உங்களுக்குத் தான் கர்மா என்பேன் அப்பனே ஆனாலும் அதை எப்படி போக்க வேண்டும்???? அப்பனே எப்படி நிச்சயம் எதை என்று கூட எதன் மூலம் பின் தர்மங்கள் செய்தால் எப்படி அப்பனே  திருத்தலத்திற்கு சென்றாலும் ஆசிகள் கிடைக்கும் என்பதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றேன் அப்பொழுது அழைத்துக்கொண்டு செல்லலாம் அப்பனே!!!!

இன்று குருநாதர் வாக்குகள் தந்து விளக்கம் அளித்தார்!!!!

இவ்வாக்குகள் நம் அனைவரும் நன்கு புரிந்து கொண்டு குருநாதருடைய வாக்குகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்!!!

ஒரு வாக்கில் அப்பனே கர்மா எவ்வழியில் வருகின்றது என்பது உங்களுக்கு தெரியாது!!!! சித்தர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறியிருந்தார் அது உண்மைதான் !!!

நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் நடவடிக்கைகளில் எந்தெந்த ரூபத்தில் கர்மா வருகின்றது என்பதை நாம் அறியோம்!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் கர்மா பற்றி உரைத்துக் கொண்டே வருகின்றார் அதை நாம் அனைவரும் நன்குணர்ந்து பின்பற்றி வந்தாலே கர்மா செயல்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம். நம்மை கர்மாவில் இருந்து காப்பாற்ற குருநாதர் தரும் வாக்குகளை பின்பற்றி வந்தாலே போதுமானது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete