​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 9 July 2023

சித்தன் அருள் - 1359 - அன்புடன் அகத்தியர் - ஶ்ரீ நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில்!








1/6/2023. அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ நல்லநாயகி / அன்னபூரணி சமேத ஶ்ரீ நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், காங்கேயம்பாளையம் , ஈரோடு மாவட்டம்.

ஆலய குடமுழுக்கு நன்னாளில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 1 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் !!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!

அப்பனே வரும் காலங்களில் என்னென்ன நிகழும்??? என்பதை எல்லாம் அப்பனே பல பல யுகங்களுக்கு எதை என்று அறியாமலே யான் சொல்லி வைத்திருந்தேன் அப்பனே!!!!

ஆனாலும் அவையெல்லாம் அப்பனே மனிதன் அதாவது கலியுகத்தில் பிழைத்துக் கொள்வான் என்று எண்ணி அப்பனே அவையெல்லாம் எவை என்று கூற பின் அப்பனே பக்திமான்களே பின் அதாவது நம்மை விட பின் மிகுந்த பக்தி மான்களாக மாறிவிட்டால் இவ்வுலகம் நிச்சயம் பின் இருளில் இருந்து தப்பித்து விடும் என்ற நிலைமைக்கு அதனால் அப்பனே அனைத்தும் ஆற்றில் கொட்டி விட்டனர் என்பேன் அப்பனே!!!!!! ( நம் குருநாதர் கலியுகத்தில் மனிதன் எதை செய்தால் படித்துக் கொள்ள முடியும் என்பதை எல்லாம் சுவடிகளில் எழுதி வைத்திருந்ததை ஆற்றில் போட்டு அழித்து விட்டனர் சில மனிதர்கள்)

அப்பனே ஆனாலும் அவையெல்லாம் கிடைத்து இருந்தாலும் இப்பொழுது அதாவது கலியுகத்தில் அப்பனே அவற்றையெல்லாம் எடுத்து அப்பனே மனிதன் பொருள் ஆக்கி இருப்பான் அப்பனே!!!!

இப்படியும் இருக்கின்றது அப்படியும் இருக்கின்றது அதனால் மனிதனின் தன்மை புரியாத தன்மை அப்பனே!!!!!!

இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஒவ்வொரு யுகத்திலும் கூட அப்பனே நல்லோர்கள் அப்பனே இறைவனை நாடி நாடி சென்று சென்று ஆனாலும் அப்பனே கலியுகத்தில் யாங்கள் தான் மனிதனை சென்று சென்று திருத்துவதாக உள்ளது அப்பனே!!!!!

இதனால் அப்பனே பின் கலியுகம் என்றால் அழிவுயுகம் என்பதுதான் நிச்சயமான பொருள் என்பேன் அப்பனே!!!!!

அதனால் ஒவ்வொருவரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே மனதில் இறைவனை நிறுத்தி அப்பனே நல்விதமாகவே அப்பனே இறைவனை நினைத்துக் கொண்டே இருந்தால் அப்பனே இறைவன் என்ன தேவை என்று ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயம் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இப்பொழுதெல்லாம் தன் மனம் போன போக்கிலே மனிதன் போய்க் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே அவ் மனமே எமன் என்று யாருக்குமே தெரிவதில்லை என்பேன். அப்பனே!!!

இதனால்தான் அப்பனே துன்பங்கள் எதனால் வருகின்றது என்பதை சிறிது யோசித்து பார்த்தாலே அப்பனே மனிதனாக வாழலாம்!!!!

அப்படி யோசிக்காவிடில் நிச்சயம் மனிதனாக வாழ முடியாது என்பேன் அப்பனே!!!!

அப்பனே கலியுகத்தில் மனிதனால் நிச்சயம் வாழ முடியாது  அப்பனே  எதை என்றும் அறிய அறிய அப்படித்தான் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்றும் இன்னும் பல பல சித்தர்கள் பல பல யுகத்திலும் வாழ்ந்து வாழ்ந்து அப்பனே மனிதரை பார்த்திட்டனர் அப்பனே!!!!!

ஆனால் கலியுகத்தில் தான் அப்பனே நிச்சயம் பின் பல வகையிலும் கூட திருடன் அப்பனே!!! மனிதனை யான் திருடன்  தான் என்பேன் அப்பனே!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவ்வாறெல்லாம்??  பிழைப்புக்கள்!!!!! 

பிழைப்பிற்காக எவ்வாறெல்லாம்?? பக்திக்குள் நுழைந்து நுழைந்து அப்பனே எதை என்றும் அறியாமல்.....ஆனால் அப்பனே நிச்சயம் அவையெல்லாம் மாற்றியமைத்து நிச்சயம் யாங்கள் ஒழுங்குபடுத்துவோம் மனிதனை அப்பனே!!!

அப்பனே பின் விட்டுவிடுவோம் சில காலம் ஆனால் அப்பனே அவந்தன் மனம் போன போக்கிலே போய்க்கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் வழியில் ஏதாவது அதாவது தடங்கள் வைத்து திருத்தி அப்பனே இப்படித்தான் எடுத்துக்கொள்ள வர வேண்டுமே!!! தவிர அப்பனே பரிகாரங்கள் செய்தால் இவை நடக்கும் அவை செய்தால் இது நடக்கும் என்பதெல்லாம் வீணே!!!!!!

நிச்சயம் இல்லை அப்பனே!!!

பின் விதிக்கு ஏற்றவாறு தான் அனைத்தும் நடக்கும் என்பதையெல்லாம் ஏற்கனவே பல சித்தர்கள் உரைத்து விட்டார்கள் அப்பனே!!!! 
பின் எதற்காக என்பதையெல்லாம்!!!!!

ஆனாலும் விதியினை கூட நிச்சயம் அப்பனே மதி எதையென்றும் அறிய அறிய அப்பனே பின் அதாவது நீங்கள் விதியை வெல்ல வேண்டுமானால் அப்பனே நிச்சயம் மனதை அதாவது தன் மனதை வெல்ல வேண்டும்!!!!

அப்படி தன் மனதை வென்று விட்டால் அப்பனே பின் சுலபமாக எதை என்று அறிய அறிய விதியை வென்று விடலாம்!!!!

ஆனால் அப்பனே மனதை யாராவது வென்று இருக்கின்றார்களா????? என்றால் அப்பனே நிச்சயம் இல்லை அப்பனே!!!!!

அப்பொழுது நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே!!!!!!

மனதை வென்றவன் இவ்வுலகத்தை ஆளலாம்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய மனதை பின் ஆளத் தெரியாதவன் அப்பனே பின் மீண்டும் கஷ்ட நிலைக்கே செல்ல வேண்டியது தான் அப்பனே

ஒரு பக்கம் இறைவனை ஒரு பக்கம் ஆசை பாசங்கள் இன்னும் எதையெதையோ இப்படி இருந்தால் அப்பனே சரி சமமாக அப்பனே இன்பமும் துன்பமும் மாறி மாறி தான் வரும் என்பேன் அப்பனே!!

அதனால் அப்பனே ஏற்றுக் கொள்ளத்தான் ஆக வேண்டும்!!! இதை பொதுவாகவே சொல்கின்றேன் அப்பனே !!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே பிடி!!!! பிடி!!!!  என்றெல்லாம் அப்பனே இளமையில் பிடி என்றெல்லாம் அப்பனே கருத்துக்கள் பல ஆனாலும் யாராவது ஒருவர் பிடித்திருக்கின்றார்களா???? என்றால் அப்பனே இல்லை அப்பனே!!!! 

ஆசைகளை அப்பனே தேடி தேடி செல்வது ஆனாலும் அப்பனே அவ் ஆசையே எதை என்று அறிய அறிய பின் எமனாகவும் மாறி மாறி மாறி அப்பனே மீண்டும் எதை என்றும் அறிய அறிய இறைவனை வணங்கினேனே!!!!! நிச்சயம் பல ஆலயங்களுக்கு சென்றேனே!!!!!! பின் இவ்வாறெல்லாம் நடப்பது ஏன்????? என்பதை எல்லாம் அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் என்னுடைய வழி பின் அதாவது விஞ்ஞான வழியிலே யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அப்பொழுதுதான் புத்தி கெட்ட மனிதனுக்கு புத்தி உள்ளதை எவை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே கிட்டும் என்பதை கூட!!!!! 

பின் புத்தி இல்லாது மனிதன் திரிகின்றான் அப்பனே புத்தியை வைத்துக் கொண்டு தன்னிடத்திலே!!!! அப்பனே!!

ஆனால் பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே!!!! அப் புத்தியை பயன்படுத்தினால் மட்டுமே உயர்வுகள் உண்டு அப்பனே வெளிச்சம் உண்டு அப்பனே சந்தோசமாக வாழலாம் ஆனாலும் அப்பனே நிச்சயம் புத்தியை பயன்படுத்துவதே இல்லை மனிதன்!!!!!

அதனால்தான் அப்பனே துன்பங்கள் வருகின்றது என்பது நிச்சயமான உண்மை!!!!

ஆனாலும் அப்பனே இன்னும் பக்தர்கள் எதை என்றும் அறிய அறிய அதாவது பொய் பக்தர்கள் என்று தான் யான் சொல்வேன் அப்பனே!!!!

அவை இவை என்றெல்லாம் அப்பனே முதலில் மனதில் அப்பனே இறைவனை எப்படி கொண்டு வருவது என்று எண்ணுங்கள் அப்பனே!!!!பின் இவ்வாறு நிச்சயம் இறைவனை மனதில் கொண்டு வந்தால் தான் அப்பனே பின் தீய சக்திகளை கூட ஒழிக்க முடியும் என்பேன். அப்பனே!!!!

தீய சக்தி என்பது யான் மனிதனையும் குறிப்பிடுவேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே நிச்சயம் அனைத்தும் சாதிக்கும் திறன்கள் அப்பனே மனிதனிடத்திலே இருக்கின்றது!!!!! ஆனால் அதை ஒழுங்காக பயன்படுத்துவது இல்லை அப்பனே அதனால்தான் துன்பங்கள் வருகின்றது!!!

அப்பனே இத்துன்பத்திற்கு காரணம் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே என்றெல்லாம் யோசிக்க தெரியாத மனிதன் பிறரிடம் செல்கின்றான் அப்பனே!!!  இத்துன்பம் வந்ததென்று!!!

ஆனால் அவனோ ஏமாற்றி விடுகின்றான்!!!! இவ்வாறு செய்!! அவ்வாறு செய்!! என்றெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே விதியை நிச்சயம் எங்களால் மட்டுமே நிச்சயம் மாற்ற முடியும் தவிர மனிதனால் எப்போதும் மாற்ற இயலாது!!! மாற்ற இயலாது!!! சொல்லிவிட்டேன்!!!

பொய்களப்பா!! பொய்கள்!!

அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பக்தன் என்று சொல்கின்றானே அவனுடைய லீலைகளை யான் சொல்லட்டுமா!!?? என்ன?????????????

வரும் காலத்தில் சொல்கின்றேன் அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய என்னென்ன ??செய்தான்!! என்னென்ன?? திருடினான்!! அப்பனே எப்படி எல்லாம் பெண்களை ஏமாற்றினான் அப்பனே!!........ ஆனால் இவந்தன் கடைசியில் பக்தி என்பது ஆனால் அதனால் தான் அப்பனே மனித குலமே தலைகீழாக மாறிக் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

மனிதன் செய்த தவற்றால் அப்பனே உலகமே அழிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் நிச்சயம் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காகவே வந்துள்ளோம்!!!! ஆனாலும் அப்பனே  இன்னும் திருந்துவதாகவே இல்லை மனிதன்!!! அதனால் அப்பனே ஒரு அடியை அடிப்போம் நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!

அப்பனே யானும் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் இக்காவேரி தன்னில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட விரிந்து  காணப்படுகின்றது அப்பனே அதுபோல் மனம் பின் விரிந்து காணப்பட வேண்டும் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!!

அவ்வாறு விரிந்து காணப்பட்டால் தான் அப்பனே நிச்சயம் அதாவது ஒன்றுமே இருக்கக் கூடாது மனதில் அப்பனே!!! அங்கு தான் இறைவன் நிச்சயம் வீற்றிருப்பான் அப்பனே!!!

இதனால் தான் அப்பனே இது எதை என்று அறிய அறிய ஈசனின் இதயம் யான் அழகாக ஈசன் பின் இதயத்திலே குடி கொண்டிருக்கின்றேன் அப்பனே இதுதான் உண்மை!!!!!

அதனால் அப்பனே மனதில் எதை என்றும் அறிய அறிய அழுக்குகளை எடுத்து நிச்சயம் போடுங்கள் அப்பனே!!!!! 

அதாவது காவிரியில் தொலையட்டும் அப்படி இல்லை என்றாலும் கூட மனதில் அப்பனே சண்டைகளை சந்தேகங்களை வளர்த்துக் கொண்டால் அப்பனே வீணே!!! 

அப்பனே மனிதனின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அப்பனே சிறு வயதிலே சில சந்தோஷங்கள் அப்பனே பின் பகுதியிலே( பாதி வயதில்) சில சந்தோஷங்கள்!!! இன்னும் இன்னும் அப்பனே எப்பொழுதுதான் மனிதன் இறைவனை காண போகின்றான் என்பதே அப்பனே நிச்சயம் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன். அப்பனே!!!!

யாங்கள் காட்டுகின்றோம் காட்டுகின்றோம் என்று பின் சொல்கின்றோம் அப்பனே இறைவனை!!!

ஆனால் மனிதனோ?!!! பின் எந்தனுக்கு சுகங்கள் வேண்டும் !!!இன்னும் என்னென்ன தேவை சொத்துக்கள் வேண்டும்!!!! பணங்கள் வேண்டும் அப்பனே இப்படி சென்று கொண்டே இருங்கள்!?!?!?!?!!!!!!!!!!? அப்பனே ஆனால் கடைசியில் பார்த்தால் அது பொய் என்பது தெரிந்திட்டு மீண்டும் இறைவனை நாடி நாடி எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவன் அனைத்தும் தருவானா???? என்று கூட!!!!!!!

அப்பனே நிச்சயம் தரமாட்டான் அப்பனே!!!!

முதலிலே இறைவனை வணங்கிட்டு இறைவா இறைவா என்றெல்லாம் பின்னே சென்றால் அப்பனே பின்பு அனைத்தும் வாரி வழங்குவான் இதுதான் மெய்!!!!!

அதை விட்டுவிட்டு அப்பனே பணத்தின் பின்னே அப்பனே நிச்சயம் பணத்தால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எதை என்றும் கூட சுகத்தின் பின்னே........ சுகத்தினால் தான் அழிவு அப்பனே சொத்துக்கள் பின்னே சொத்துக்களால் தான் அழிவு அப்பனே பிள்ளைகள் பின்னே பிள்ளைகளால் தான் அழிவு அப்பனே இவற்றையெல்லாம் நிச்சயமாய் புரிந்து கொள்ள வேண்டும் மனிதன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் இறைவன் வணங்கினால் பின் அனைத்தையும் கொடுத்து விடுவானா??? என்ன???

அப்பனே நிச்சயம் கொடுக்க மாட்டான் அப்பனே!!!!

முதலில் அப்பனே அனைவருக்குமே தெரியும் அப்பனே எண்ணம் போல வாழ்க்கை என்று கூட!!

அதனால் அப்பனே மனதில் இறைவனை வைத்துக்கொண்டால் நிச்சயம் இறைவன் மனதில் குடி கொள்வான் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே அதனால் தான் எதை எதையோ மனதில் வைத்துக் கொண்டு அப்பனே இறைவனை வணங்கினாலும்!!!...........??

ஆனாலும் இன்றைய பொழுதிலும் கூட சந்தோசங்கள்!!!!!! யான் இங்கு வந்து நன்றாகவே அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டேன் அப்பனே!!!!

ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை அப்பா!!!

அப்பனே அனைவரையும் ஆராய்ந்தேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை என்றும் அறிய அறிய ஒருவரை பார்த்தால் நோய் நொடிகள் இல்லத்தில் கஷ்டங்கள் அப்பனே சொத்து சுகம் வேண்டும் திருமணம் ஆகவில்லை இன்னும் ஒரு படி சென்றால் பின் காந்தர்வம் ( காதல்)காந்தர்வங்கள் வேண்டுமென்று கூட அப்பனே!!!!!................... இவ்வாறெல்லாம் வணங்குகின்றார்களே அப்பனே!!!!!!!!!

இவையெல்லாம் கர்மம் தான் அப்பனே!!!!!!!

அதனால் மனிதன் எவை என்றும் அறிய அறிய பின் கர்மத்தைத்தான் வேண்டும் என்கின்றான் அப்பனே!!!!

இதனை ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் பல பல உரைகளிலும் கூட அப்பனே!!!!

பின் கர்மத்தை கேட்டால் பின் யான் எப்படித்தான் தர முடியும்?????

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பல வழியிலும் கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம்  ஓர் தந்தை அதாவது தாய் அப்பனே தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்பது சரியாக கவனித்து கவனித்து கொடுப்பாள் அதனால் அப்பனே என்ன வேண்டியது அப்பனே மனதை காவிரி போல் அப்பனே பின் நீண்டு வைத்துக் கொள்வது அப்பனே நிச்சயம் இறைவன் வந்து அங்கே தங்கி வழி நடத்துவான் இதுதான் சத்தியம் அப்பனே மற்றவை எல்லாம் எடுபடாது என்பேன் அப்பனே!!!!!

சித்தரை வணங்கினால் அனைத்தும் கொடுத்து விடுவார்களா??????

அப்பனே நிச்சயம் கொடுக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன்!!!!!

அப்பனே ஆணித்தரமாகவே !!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய நீங்கள் எங்கள் வழியில் வந்தால் நிச்சயம் பலமுட்களையும் பல பல காடுகளையும் கூட அப்பனே எவை என்று கூட நீரிலும் கூட நெருப்பிலும் கூட அப்பனே இவையெல்லாம் கடந்து வருவது எவ்வளவு கஷ்டங்கள் என்று உங்களுக்கே தெரியும் அப்பனே!!!!

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வந்தால்தான் அப்பனே எங்களுடைய ஆசிகளும் கிட்டும் அப்பனே அனைத்தும் யாங்களே வந்து செய்து விடுவோம்!!!

ஆனாலும் வருகின்றார்கள் அப்பனே  ஆனாலும் ஒன்றும் செய்யவில்லை என்றால் சித்தர்கள் ஒன்றும் செய்யவில்லையே இறைவன் ஒன்றும் செய்யவில்லையே என்று மீண்டும் திரும்பி விடுகின்றான் அப்பனே கர்மா பாதைக்கே!!!!! 

ஆனாலும் அப்பனே கர்மா பாதைக்கு இப்படி திரும்பும் பொழுது தான் அப்பனே பிரச்சனைகள் ஆரம்பமாகி அப்பொழுது பின் திரும்புகின்ற பொழுது மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப அப்பனே பிறவிகள் எடுத்து எடுத்து அப்பனே அப்பொழுது இறைவனை காண்பது இவ் ஆன்மா எப்பொழுது தான்????????????????! அப்பனே !!!!

எப்பொழுது?? அப்பனே!!!!! எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஆசைகளை வைத்துக் கொள்ளாதீர்கள் அப்பனே!!!!

நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே கலியுகம் என்றால் யான் சொல்லிவிட்டேன். அழிவுகாலம் என்பதைக் கூட!!!! அது மட்டுமில்லாமல் நோய்கள் காலம் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!! 

அதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல மூலிகைகளை பற்றியும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

ஆனாலும் அப்பனே அதை கூட எதை என்றும் அறிய அறிய பின் பயன்படுத்த அப்பனே எவை என்று கூட புண்ணியங்கள் வேண்டும் அப்பா!!!!!!

புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!! 

முதல் வகையான புண்ணியங்கள் அப்பனே பல வகையிலும் கூட எடுத்துரைத்தார்கள்!!!  சித்தர்கள்!!!! 

ஆனாலும் அப்பனே அதை கூட செய்யத்தெரியாத மனிதனுக்கு அப்பனே இறைவனின் தரிசனம் எங்கு தான் கிட்ட போகின்றது என்பதை கூட மனிதன் அறிவானா?????? 

இல்லை யாங்கள் அறிவோமா அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே!!!!! 

பழனி தன்னில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஈசன் எதை என்று அறிய அறிய முதலிலே அப்பனே அனைவருக்கும் கொடுத்து கொண்டிருந்தான்!!!!! முருகனும் அங்கே இருந்தான் அப்பனே!! 
அனைத்தும் கொடுத்தான்!!!!! 

ஆனாலும் அப்பனே நல்லோரும் பின் தீயோரும்என்றில்லாமல் இறைவன் கொடுத்தான் அப்பனே!!!!!

ஆனாலும் கொடுத்ததை சரியாக பயன்படுத்த தெரியவில்லை ஆனால் ஈசனோ பின் முருகனிடம்!!....

பின் முருகா!!!!

அறிந்தறிந்து உன்னிடத்தில் வருகின்றார்களே சிறிது நேரம்  அனைத்தும் கொடு பார்ப்போம்!!!!

ஆனால் பின் இவை இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் அப்பனே எதை என்றும் அறிந்தறிந்து கொடுத்துக் கொண்டே இரு முருகா!!!!

பின்பு யான் சொல்கின்றேன் என்று!!!

மூன்று வருடங்கள் தொடர்ந்து பின் ஆனாலும் அனைவருக்கும் என்னென்ன தேவையோ அனைத்தும் கொடுத்தான் ஆனாலும் முருகன் பலமாகவே பின் இவ்வளவு பக்திகளா!!!என்று!!!!

ஆனாலும் பின் மூன்று ஆண்டுகள் முடிவுற்றது!!!

ஆனாலும் ஈசன் போய் முருகா!!!! கொடுத்தது எவை என்று அறிய அறிய போதும்!!! 

இனி மேலும் யார் வந்தாலும் இனி நீ கொடுக்காதே!!!! பார்  என்று!!!

ஆனாலும் அனைவரும் வந்தார்கள் பல மனிதர்கள் பல பல வழிகளிலும் கூட முருகா முருகா என்றெல்லாம்!!!!

எந்தனுக்கு முருகன் அதைச் செய்தான் இதைச் செய்தான் மற்றவர்கள் எல்லாம் ஆனாலும் வருகின்ற பொழுது ஆனாலும் மக்கள் பின் கூட்டம் குறுகியது அதாவது பின் தொடர்ந்து செல்ல முடியவில்லை பின் எதை என்றும் அறிய அறிய ஆட்களும் குறைந்து போய்விட்டனர்!!!

ஆனால் கடைசியில் முருகனிடத்தில் யாரும் இல்லை!!!

ஆனால் ஈசன் சென்றான்!!!

முருகா!!!!! நீதான் (பெருமை) பீற்றிக் கொண்டாயே!!!!! என் மீது( முருகன் மீது) இவ்வளவு பக்திகள் இவ்வளவு அன்புகள் என்று!!!

ஏன்??? இப்பொழுது யாரும் வரவில்லை என்று தெரிந்து கொண்டாயா????

நிச்சயம் மனிதன் எதற்காக அலைக்கின்றான் என்றால்....ஏதோ ஒன்று எவை என்று அறியாமலே உங்களுக்கே தெரியும் அப்பன்களே!!!!!!

எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் இறைவனை மனிதன் வணங்குகின்றானே தவிர உண்மையான பக்திகள் இல்லை அப்பா!!!!

அப்படி உண்மையான பக்திகள் இருந்தால் அப்பனே நிச்சயம் இறைவன் சோதிப்பான் அப்பனே!!!!

அதிலும் கூட வெற்றி கொண்டால் அப்பனே நிச்சயம் அனைத்தும் தருவான் அப்பனே மோட்ச கதியையும் அடைவான் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் உயர்வுகள் எதை என்று அறியாமலே கொடுப்பான் அப்பனே!!!

அதனால் நிச்சயம் அப்பனே எத் தெய்வங்களாயினும் அப்பனே எதை என்றும் அறிய அறிய !!!!

ஆனாலும் முருகன்!!!....ஓ!!!!!!!......என்று அழுதான்!!!!!! 

மக்கள் இவ்வாறெல்லாம் இருக்கின்றார்களே என்று!!!!

ஆனாலும் நிச்சயம் பின்பு அழைத்தேன்( அகத்தியர்) யான்!!!!

முருகா!!!!!  வேண்டாம்!!!!

எதை என்றும் அறிய அறிய நிச்சயம் இன்னும் சொல்கின்றேன் சில வருடங்கள் பின் எதை என்றும் அறிய அறிய!!!!! அதனால் என்னிடத்தில் வந்து விடு என்று!!!!

ஆனாலும் முருகன் அகத்திய மாமுனிவரே!!!!!

என் தந்தையும் இப்படி சோதனைகள் செய்து  என்னையே பின் அழ வைத்து விட்டான்!!!!!

ஆனாலும் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று!!!!

எங்கே செல்லலாம்???? என்று!!!!

வா!!!!!!!!!! 

எதை என்றும் அறிய அறிய ஆனால் அகத்திய முனிவரே!!! உங்களுக்கு அனைத்துமே தெரியும் ஆனாலும் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று விடுவோம் என்று!!!!!

ஆனால் நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய யானும் சொன்னேன்!!!!

அப்பனே முருகா நிச்சயம் எதை என்றும் அறிய அறிய யாரும் இல்லாத இடத்திற்கு எங்கு யான் செல்வது!!!?????
என்றெல்லாம்!!!!!

ஆனாலும் பின் முருகா முருகா எப்படி எதை என்று அறிய அறிய உன்னால் அனைத்துமே முடியுமே!!!!

நீதான் செய் என்று!!!!!

ஆனாலும் முருகனோ!!!!! அகத்திய மாமுனிவரே... அனைத்தும் அறிந்தவர் என் தந்தையின் விளையாட்டும் உந்தனுக்கு தெரியும்!!! ஆனாலும் நீயும் தலை குனிந்து விட்டாய்!!!! 

அதனால் நீ தான் என்னை நிச்சயம் எதை என்று எங்கே கொண்டு செல்வது அதனால் நிச்சயம் ஏதோ ஓரிடத்திற்கு செல்வோம் என்று இதனால் நிச்சயம் அழகாகவே யான் இங்கு வந்திட்டேன்!!!( நட்டாற்றீஸ்வரர்) இங்கு யாருமில்லை என்று!!!!

ஆனாலும் நிச்சயம் காவிரி போல் குறுகிய இடமே இங்கு ஆனாலும் முருகனை அழைத்து வந்தேன்!!!

 முருகா!!!! போதுமா? இன்னும் வேண்டுமா!? என்று!!!!!

பின் முருகனே!!!!....... ஆனாலும் எதை என்று கூட அகத்திய மாமுனிவரே!!!!  இதுவே போதும்!!!! நிச்சயம் யானே இங்கு தங்கி விடுகின்றேன்!!!!!!

எந்தனுக்கு பழனி மலையும் தேவையில்லை இன்னும் எவ் மலையும் தேவையில்லை!!...... ஆனால்  எதையென்று அறிய அறிய வணங்கட்டும் சில வரங்கள் யான் நிறுத்தி விடுகின்றேன் என்று!!!! 

ஆனாலும் இங்கேயே பல நாட்கள் நிச்சயம் முருகன் தங்கி விட்டான் ஆனாலும் பின்பு பின்பு எதை என்று அறிய அறிய.... பின் நோய்களும் நொடிகளும் கூட பின் அதிகரிக்க தொடங்கியது பழனி தன்னில்!!!!!

யான் சென்றேன் நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் பழனி மலைக்கு செல்கின்ற பொழுது நிச்சயம் பல மனிதர்களுக்கு நோய்கள் நொடிகள் கூட வந்துவிட்டது எதை என்று அறிய அறிய கலியுகம் கூட தொடங்கி விட்டது என்பதை யான் ஆராய்ந்து விட்டேன்!!!!!

பின்பு பழனி மலையிலே இருந்து!!!! யான்!!! 

வேலவா!!!!!!!!!!! 

முத்துக்குமரா!!!!! 

அழகனே!!!!!! ............என்று யான் அழைத்தேன்!!!!!!!!!!

ஆனால் முருகனுக்கு இங்கே கேட்டது!!!!

அகத்திய மாமுனிவரே என்ன வேண்டும்?? என்று!!!

வா!!!!!!! பழனி தனுக்கே வா!!!! நிச்சயம் அனைத்து வரங்களும் கொடு!!!!

ஏனென்றால் கலியுகம் ஆரம்பமாகிவிட்டது ஏனென்றால் அறியாத அளவிற்கும் கூட.... 

ஆனால் நிச்சயம் அவ் மலைக்கு வரப்போவதில்லை!!!!

நிச்சயம் அகத்திய மாமுனிவரே  இது தான் எந்தனுக்கு நிம்மதி என்று கூட!!!! 

நிச்சயம் முருகா!!!!! அனைத்தும் செய்கின்றேன் வா!!!! என்று பின் யான் பழனி மலை தன்னில் எதையென்றும் அறிய அறிய இருக்கின்றேன்.

ஆனால் முருகனோ இங்கிருக்கின்றான் ஆனாலும் நிச்சயம் முருகா!! வா!!! வா !! என்று!!

ஆனாலும் ஓர் முறையில் பின் ஓர் அடியை வைக்கின்றான் ஆனால் மனது போகவில்லை எதை என்று அறிய அறிய

முருகனுக்கு இங்கேயே இருந்து விடுவோம் அகத்தியன் மடியிலேயே இருந்து விடுவோம் என்றெல்லாம் முருகன் சிந்திக்கின்றான்!!!!

ஆனாலும் நிச்சயம் முருகா வா என்று அழைத்ததற்கு நிச்சயம் பின் !!!

அகத்திய மாமுனிவரே!!!! நிச்சயம் என் எண்ணங்கள் முழுவதும் இங்கே தான் இருக்கும் அதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய நிச்சயம் அகத்திய மாமுனிவரே உன்னுடைய அருள்களை பெற்றவர்கள் தான் இங்கு வர முடியுமே தவிர யான் நிச்சயம் விடமாட்டேன் என்று!!!!

சரி வருகின்றேன் என்று பழனி மலைக்கு வந்து விட்டான்!!!

ஆனாலும் வரங்கள் கொடுத்திட்டான்!!!!! ஆனாலும் பின் ஈசனுக்கு கோபம்!!! 

பின் ஈசனும் பழனி மலை தனக்கு வந்து முருகா!!!!!

யான் என்ன சொன்னேன்???? 

பின் அனைத்தும் கொடுத்தாய்... ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மக்கள் வந்தனர்... ஆனாலும் ஒன்றும் கொடுக்கவில்லை மக்கள் போய்விட்டு!!..... எதை என்றும் அறிய அறிய இதனால் இன்னும் ஏன்????.......

எதை என்று அறிய அறிய நிச்சயம் பின் நல்விதமாகவே அப்பனே பின் முருகனும் கூட அப்பனே நிச்சயம் கொடுக்கின்றோம் அதாவது எண்ணத்திற்கு தகுந்தவாறே அவந்தன் என்ன? கேட்கின்றானோ? அவன் மன நிலையை பார்த்தே யான் தருவேன் இனிமேலும் என்று!!!!

ஆனாலும் சரி முருகா!!!!!! உன்னுடைய இஷ்டங்கள் என்று நிச்சயம் பின் அதாவது ஈசனும் கேட்டிட்டு உணர்ந்து உணர்ந்து அகத்திய மாமுனிவரே பாரும்!!...  பாரும்!!!...  என்றெல்லாம் நிச்சயம் சரி என்று பின் இறைவனும் அதாவது இறைவியும் கூட அண்ணாமலைக்கு சென்று விட்டனர்!!

அதனால் நிச்சயம் இன்றளவும் கூட நிச்சயம் வருவோருக்கெல்லாம் முருகன் அழகாகவே நடைபாதையில் எல்லாம் இன்னும் வந்து திரிந்து அலைந்து கொண்டிருக்கின்றான் யாராவது உண்மையான பக்தி உள்ளவர்கள் வந்தால் கையைப் பிடித்து மேலே தூக்கி விடுகின்றான்!!!!

இச்சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது!!!!

ஆனாலும் ஒருவருக்கு பின் திருமணம் ஆகவில்லையே ஏறுகின்றனர்!!!! எதையென்று அறிய அறிய குழந்தை பாக்கியம் இல்லையே என்று இன்னும் பணத்திற்காகவே என்று இன்னும் சொத்துக்களுக்காகவே என்று இவ்வாறெல்லாம் அலைக்கின்றனர் ஆனாலும்.....எப்படியப்பா????  எதையென்றும் அறிய அறிய இறைவனை காண முடியும் என்பதையெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஓர் குழந்தைக்கு எதை என்று அறிய அறிய அப்பனே ஏதாவது தேவை என்றால் அப்பனே கேட்கத் தெரியாது!! 

அழும்!!!!  அப்பனே!!!

ஆனால் புரிந்து கொள்வாள் தாய்!!!

இது போலத்தான் அப்பனே மனிதர்கள் இருக்க வேண்டும்!!!!

அப்பனே எதை என்று கூட ஏதாவது தேவையென்றால் இறைவா இறைவா என்று அன்போடு பாசத்தோடு அழைத்தாலே இறைவனுக்கு தெரியும்!!!

எது நல்லவை எது தீயவை என்று கொடுக்கத் தெரியும் அதனால் நிச்சயம் அப்பனே மனிதன் வெறும் பொம்மையே!!!!!  அப்பனே!!! இப் பொம்மையை சிறிது நேரத்தில் இறைவன் கசக்கி வீசி விடுவான்!!!

ஆனாலும் அப்பனை அது மனிதனுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!!

அதுதான் நகைப்பாக உள்ளது அப்பனே!!!

வாழ்வோம் வாழ்வோம் என்றெல்லாம் மனிதன் ஆனால் இறைவனோ பின் மனிதனை பாவம் பாவம் வீழ்கின்றானே வீழ்கின்றானே என்ற எண்ணம் இறைவனுக்கு!!!!

அப்பனே பாருங்கள்!!! அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே இத்தலத்திற்கும் என்னுடைய அருள்களை பெற்றால் தான் வரவும் முடியும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

மற்றவர்களை யாரும் அப்பனே முருகன் அனுமதிக்க மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே இன்னும் இன்னும் இன்னும் அலைந்து திரிந்து அப்பனே எவை என்று கூட பைத்தியமாகினால் தான் அப்பனே கடைசியில் தான் அப்பா இறைவன் வருவான்!!!

அப்படி இல்லையென்றால் நடுவில் எதை என்று அறிய அறிய பின் அங்கு சென்றால் அவை நடக்கும் இங்கு சென்றால் இவை நடக்கும் என்றெல்லாம் நிச்சயம் நடக்கும் பொழுது அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய யாங்களும் சோதிப்போம் அப்பனே!!! 

அப்பனே யாங்கள் சோதிப்பது அப்பனே எவை என்று அறிய அறிய சோதித்து சோதித்து வெற்றியை பெற்று விட்டால் அப்பனே!!!!

அவந்தனை வெல்ல ஆள் இல்லை அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய ஆனாலும் சோதிப்பான் அப்பனே எளிதில் கொடுத்து விடுவான் ஆனால் மீண்டும் பிடுங்கி கொள்வான் அப்பனே.. அந் நிலைமை தேவையா???? அப்பனே!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!  அதனால் இறைவன் எதை என்று உணர்ந்து உணர்ந்து இவந்தன் வாழ்க்கை இவனிடத்திலே!!! சிறிது காலம் ஒப்படைக்கலாம் என்று விட்டு விடுவான் அப்பனே!!! 

ஆனால் ஒப்படைத்தவுடன் என்னன்ன ஆட்டங்கள் என்னென்ன பாட்டங்கள் என்னென்ன அப்பனே ஆனால் எழுதிக் கொள்வான் அப்பனே இறைவன் அனைத்தும் கூட!!!

அதாவது பின் பக்கத்தில் வைத்து எவை என்று அறிய அறிய இவந்தன் வாழ்க்கை இவனிடத்தில் ஒப்படைத்து விட்டோம்!!!!

இவன் என்னென்ன செய்கின்றான்???? என்று எழுது!!!!!  என்று கூட!!!! 

அப்பனே அனைத்தும் எழுதிக் கொள்வான் அப்பனே!!!

ஆனால்  பின் வாழ்க்கை அவனிடத்தில் விட்டு விட்டு அப்பனே அனைத்தும் எதை என்று கூற கர்மா தான் செய்வான் அப்பனே!!! அதனால் மீண்டும் என்னென்ன செய்கின்றான் என்று நிச்சயம் அவற்றை புரட்டிப் பார்க்க என்னென்ன செய்திருக்கின்றான் என்று இறைவன் கேட்க பின் இறைவா பின் நீ அனைத்தும்  அனுபவித்து விடு என்று நல்லதற்காக விட்டு விட்டாய்!!!!

ஆனால் இவந்தன் அனைத்தும் செய்தது கர்மா வினையே என்று நிச்சயம் அவன் எதை என்றும் அறிய அறிய அவனிடத்திலே விட்டு விடு அப் பாவக்கணக்கை உன் தலையிலே செருகி(செலுத்தி) விடுவான் அப்பனே!!!!!

அப்படி செருகினால் அப்பனே அதற்குரிய தண்டனைகள் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே!!!!!!

நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2 ல் தொடரும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக, வெகுநாள் கழித்து சிறப்பான பதிவை காண்கிறேன் நன்றி

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete