​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 14 January 2022

சித்தன் அருள் - 1070 - அன்புடன் அகத்தியர் - சுப்பா ஞானியார் சுவாமி ஜீவசமாதி, அருப்புக்கோட்டை!


சமீபத்தில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் சுப்பா ஞானியார் சுவாமி ஜீவசமாதி அருப்புக்கோட்டை.

ஆதி சிவசங்கரியின் பொற்பாதத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே ஒன்றை யான் சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே என்னுடைய ஆசிகள்.

இவந்தனின் ஆசிகள்.

இவந்தன் இரண்டரை ஆண்டுகள் 

அதிலும் கூட சூட்சுமம் உள்ளது. 

நல் முறைகளாக எவை என்று கூற நினைக்கும் எதிர்த்து போராட திறமை கொண்டவன் இவன்.

இவந்தன்  நல் முறைகளாக எண்ணும் பொழுது இரு வருடம் அல்லது நல் முறைகள் ஆகவே இதற்கு மேல் ஐந்து மாதங்கள் கூட நல் முறைகள் ஆகவே வலம் வருவான் இவந்தன் ஓர் மாதம். 

அவந்தனுக்கே இப்பொழுதுகூட என்ற நிலைமை சித்திரை வைகாசியில் நிச்சயம் இவந்தன் நல் முறைகளாகவே இவ் நல் முறைகளாக இதில் பாதியும் அதில் பாதியும் நல் முறைகள் ஆக சித்திரையில் கடைசி வைகாசியில் முதலில் நிச்சயமாய் இவன் இங்கு சுற்றி வருவான் என்பேன்.

(சித்திரை கடைசி 15 நாட்கள் வைகாசி முதல் 15 நாட்கள் = ஒரு மாதம்) 

அதனால் இங்கு தங்குவது அனைத்து கர்மாக்களையும் நீக்கும் என்பேன்.

நீக்கும் என்பேன் இதனை விட ஒரு சிறப்பை சொல்கின்றேன் சொல்கின்றேன் எதைப் பார்த்து என்பதைவிட நிச்சயமாய் இவன் சீடனே இவந்தனக்கு ஜீவநல்காரியத்தை (ஜீவசாமதியடைதல்) செய்வித்தான்.

ஆனாலும் இவந்தன் இச் சீடனை நல் முறைகள் ஆகவே இவனே மனித ரூபத்தில் வந்து..இவந்தனுக்கும் இச் சீடனுக்கும் இவந்தனே ஸ்தலம் அமைத்து விட்டான் என்பதே மெய்.

அப்பனே இதுதான் ஞான சூட்சுமம் என்பது.

யான் சொன்னேனே!!!!
 
ஒரு மாதம் நிச்சயமாய் வாருங்கள் ஆசிகள் பல பெற்று செல்லுங்கள் என்பேன்.

அப்பனே அப்பொழுது வந்தால் இவனுடைய திறமைகள் உங்களுக்கே வெளிப்படும் என்பேன்.

அப்பனே நல் முறைகளாய் இத்தலத்தில் அப்பனே பெருமைகள் என்னென்ன?? கூறுவது!!! 

அப்பனே இங்கு பல கர்மாக்களை அழிக்கலாம் அழித்துவிடலாம் என்பேன்.

அப்பனே தொடர்ந்து நல் முறைகளாய் இங்கு கூட பின் ஓர் மண்டலம் பின் உறங்கச் சென்றால் அனைத்து கர்மங்களும் நிச்சயம் விமோசனம் அடையும் என்பேன்.

ஆனால் அது நடக்காத காரியம் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதைக் கூட அவன் கர்மா அவை போன்று இருக்கும் பொழுது நிச்சயம் வரமுடியாது தான் என்பேன் யானும் கூட .

அப்பனே நல்முறைகள் ஆகவே இவ்வாறு சில ஜீவசமாதிகள் நாடி நாடி செல்ல வேண்டும் என்பேன்.

இவ்வாறு சென்றால் தான் நம்தனக்கும் சில கர்மாக்கள் விலகும் என்பேன்.

ஆனாலும் "பாத்திரமறிந்து பிச்சையிடு"!!! என்று சொல்கிறார்களே.      வருகிறதா!!! ஞாபகத்திற்கு!!!

அதனைப் போன்று தான் மகன்களே நல் முறைகள் ஆகவே எப்போது எதை தொழ வேண்டும் என்று தொழுதால் நிச்சயம் கர்ம வினை நீங்கும் என்பேன்.

இவன் நிச்சயமாய் ஒர் மாதம் இங்கே உறங்குவான். வெளியில் சுற்றுவான். பின் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று வாருங்கள்.!!!

அப்பனே இவந்தனக்கும் நல் முறைகளாக யான் சொல்கின்றேன்.

அப்பனே நல் முறைகளாக யாரை? அழைக்க வேண்டுமோ !!! தகுதியான மனிதர்களை மட்டும் தான் இவன் விரும்புவான் என்பேன்.

இவந்தனுக்கு கோபம் வந்தால் அனைத்தும் அழித்துவிடுவான் யாரையும் இவந்தன் கிட்டவே சேர்க்க மாட்டான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே எவை என்றும் எதற்காக?? ஆனாலும் முன்பே இப்பாதையில் பல பல சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.

ஆனாலும் இதை எதிர்க்க நல் முறைகளாக பின் இங்கிருந்தும் பின்.            பின் பின் பல மடங்கு கிலோ மீட்டர் அளவில் இவந்தன் சென்று மக்களுக்கு நல்வழி படுத்த எவ்வளவோ முயற்சித்தான். ஆனாலும் மக்களோ?! முட்டாள்தனமாக எதையுமே நம்பவில்லை.

அதனால்தான் அப்பனே வந்தது வினை!!!!!

""வினை"" இவந்தனும் மக்களை அழியட்டும்!! என்று தனியாக வந்து விட்டான்.

மக்களை பார்க்கவே இவன் விரும்புவதும் இல்லை.

ஆனாலும் இவந்தனக்கு யார் மீது விருப்பம் வைக்கின்றானோ அவந்தனையே அழைப்பான் என்பேன்.

அதனால் நீங்கள் அனைவருமே புண்ணிய காரர்கள் அதனால்தான் அழைத்தான் உங்களுக்கு நிச்சயமாக ஆசீர்வாதங்கள் கொடுத்து இன்னும் மேன்மையான செயல்களை செய்விப்பான். என்பேன் கவலைகள் விடுங்கள் மகன்களே. 

அப்பனே நலன்களாக...நலன்களாக ஏதும் அறியாதவர்? ஏன்?? அப்பனே !!!

பல பேர் இங்கு வருவதில்லை?????

நீங்கள் மட்டும் ஏன் வந்து இருக்கின்றீர்கள் சிறிது யோசித்தீர்களா!!!!

இதனால்தானப்பா பெருகும் புண்ணியங்கள்.

அப்பனே இவ்வளவு எவ்வளவு என்பதைக் கூட அருகதை இல்லாமல் சில ஜீவசமாதிகள் பின் நல் முறைகளாக அவந்தனே அழைத்தால் தான் உண்டு இல்லையென்றால் அத் தரிசனமும் கிட்டாது என்பேன்.

அனைத்துமே அனைத்து ஞானிமார்களுமே மனிதனை பின் திருத்த திருத்த பார்த்து ஆனாலும் திருத்த முடியாமல் அவர்கள் அழிவைத் தேடிக் கொண்டு திரும்ப வந்து கொண்டே இருக்கும் பொழுது சிரிக்கின்றார்கள் மனிதர்களைப் பார்த்து.

"போ " "போ" என்றே!!!!...

ஆனாலும் நிச்சயமாய் இவந்தன் அன்பு பெரியது என்பேன்.

சாதாரணமானவன் இல்லை என்பேன் இவன்.

பாருங்கள் இவன் திறமையை மென்மேலும் நீங்களே பார்ப்பீர்கள் என்பேன்.

ஆனாலும் இவ் நேரத்திலும் நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே ஆசிர்வாதங்கள் கவலைகள் இல்லை என்பதைப் போல இவந்தனக்கும் எவை?? தேவையில்லை என்று குருவைப் போல் சீடனைப் போல் மிஞ்சுவது எதுவுமே இல்லை அதனால் பின் நல் முறைகளாகவே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.

சொல்கின்றேன் பின் தை மாதம் பிறந்தவுடன் நல் முறைகளாக இவர்களே இவர்களுக்கு அபிஷேகம் செய்வார்கள் மாறி மாறி.

அப்பனே நிலையில்லாத வாழ்க்கையில் அப்பனே நிலைக்கும் என்ற கொள்கையை படைத்தவன் மனிதன்.

ஆனாலும் இவனது கொள்கை பின் நிலையில்லாத வாழ்க்கையடா மனிதனின் வாழ்க்கை என்று கூட சில சித்தர்களுக்கு சில ஞானிகளுக்கு மனிதனை பார்த்தால் பின் எவையுமே தோன்றுவது இல்லை என்பேன்.

விளக்கங்கள் அளிக்க அளிக்க இன்னும் நேர்மையான நேர்மையானவை பல உபதேசங்களை ஒருநாள் தெரிவிப்பேன் அனைத்தும் கூட.

அப்பனே உரைக்கின்றேன் மேலும் வாக்குகள்.

ஆலய முகவரி மற்றும் விபரங்கள். 
சுப்பா ஞானியார் ஜீவசமாதி. 
பாலையம்பட்டி.
சொக்கலிங்கபுரம். காமாட்சி அம்மன் கோயில் பின்புறம். 
அருப்புக்கோட்டை.

சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்

"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "  என்று பாடிய பட்டினத்தார் அடிகளைப்போன்றே சத்குரு அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை  செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.

அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி, மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில், அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.
   
சுவாமிகளின் சீடரின் சமாதி 
சுவாமிகளின் ஜீவ சமாதி

இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை, மாலை  என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு நடக்கின்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்! 

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா.
    நான் மதுரை மாவட்டத்தில் வசித்து வருகின்றேன்.எங்கள் ஊர் அருகில் சித்தர்மலை மகாலிங்கம் கோவில் உள்ளது.இக்கோவிலைப் பற்றியும் அகத்திய பெருமானிடம் கேட்டு சொல்லுங்கள். அருகில் வைகை ஆறு ,
    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், குருவித்துறை குருபகவான் கோவில் போன்ற பழமையான கோவில்களும் உள்ளது.
    சித்தர் மலை மகாலிங்கம் கோவிலுக்கு சென்று வந்தால் சதுரகிரி சென்று வந்த உணர்வு வரும்.

    மதுரை -திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அணைப்பட்டிக்கு அருகில் உள்ள s.மேட்டுப்பட்டியில் உள்ளது.

    ReplyDelete
  3. எல்லாம் வல்ல இறைவனின் ஆசியில் அனைத்தும் நலம் ஆகட்டும் 🙏....

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1JKKL-dIE2812JGSWs_6CIIngBJ_HMYiO/view?usp=sharing

    ReplyDelete