​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 15 January 2022

சித்தன் அருள் - 1071 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


வைவஸ்வத பட்டணம்  என்ற ஒரு பட்டணமுண்டு.  அந்த பட்டணம் உயர்ந்த மாளிகைகள் ஒன்றொடு ஒன்று நெருங்கியதாகவும், யாவருக்கும் அச்சம் தரும் மிகவும் கோர ரூபமுடைய  அநேகம் பிராணிகளுக்கும் இருப்பிடமாகவும், துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

பாவம் செய்தவர்கள் மிகப்பலர். அந்த நகரத்திலிருந்து அண்டத்தில்  முகடு கிழிய, இப்போதும் ஆ, ஆ, ஊ. ஊ என்று ஓலமிடுகிறார்கள். அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும் .  குடிப்பதற்கேற்ற  ஒரு துளி தண்ணீர் கூட அங்கு கிடைக்காது.  மேகங்களலெல்லாம் அருந்துத்துவதற்கு அருகதையற்ற ரத்தம் முதலியவற்றையே பொழிவதையாக இருக்கும். முன்பு இறந்த ஜீவன், பதிமூன்றாம் நாளன்று யமபுரியக்கு செல்வான்  என்று சொன்னேன் அல்லவா? அவன் நிலையை  கூறுகிறேன், கேள்.

குரங்கை கயிற்றால் பிணைத்து இழுத்து செல்வதை போல, யமகிங்கரர்கள்  பத்தாம்  நாள் பிண்டத்தாலான ஜீவனைப் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு  செல்லும் போது , அந்த ஜீவன் தன்  புதல்வனை நினைத்து , 

"ஐயகோ! என் அருமை மகனே! நான் கஷ்டத்தோடு அவதிப்படுகிறேனே! ஐயோ!  நான் என்ன செய்வேன்! என்ன செய்வேன்? சர்வேஸ்வரன் ஒருவன் உண்டென்றும் ஸ்வர்க்கம், நரகம் என்ற இடங்கள் உள்ளன என்றும், அவற்றிற்கு செல்ல நன்னெறி, தீயநெறி என இரு நெறிகள் உண்டென்றும் உலகில் உயிரும் உடலும் கொண்டு நான் வாழ்ந்த காலத்தில் உலக மக்களின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அதற்கப்பாலும் உள்ள வாழ்வுக்கு இதமானவற்றை சொன்னவர்களோடு முரண்பட்டு, ஸ்ரீயப்பதி என்று ஒருவன் இருக்கிறானோ, கடவுள்  இல்லாமல் மனிதன் வாழ முடியாதோ, மற்றவைகளும்  உளவோ, இறந்த பிறகு இன்னவையெல்லாம்  உள்ளன என்று கற்பனை செய்து மயக்கத்தால் பிதற்றுகிறீர்களே என்று வன்கண்மை பேசி, சாதுக்களையும், ஞானங்களையும், பாகவத சன்யாசிகளையும் ஏசிப்பேசிப்  பரிகாசம் செய்தேனே! அவற்றின் பயனையெல்லாம் இப்போது நான் அனுபவிக்கிறேன்,  என் முயற்சியாலோ , என் உழைப்பாலோ, சக்தியாலோ , எதையும்  செய்ய முடியாமல் தனியனாய் தவியாய் தவிக்கிறேனே! மலை போன்ற  ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமல் என்னை அடித்து புடைக்கிறார்களே! 

அந்தோ! நான் பூமியில்  வாழ்ந்த காலத்தில் பெரியோர்களுக்கு ஓர் உதவியும் செய்தேன் அல்லேன்!  தீர்த்த யாத்திரைகள் செய்தேனல்லேன்! மாதவங்கள்  எதுவும் புரிந்தேனல்லேன்!

மாதவம் செய்த யோகியரையும், முனிவரையும் போற்றினேன் அல்லேன்! தண்ணீர் இல்லாத இடங்களில் தண்ணீர் பந்தல் எதையுமே வைத்தவன் அல்லேன்! ஒரு கிணறு வெட்டவில்லை! பசுக்கள் மேய்வதற்குரிய பசும்புல் பயிரிட்ட பூமியை வைத்திருக்கவில்லை! மந்தை வெளியை என் சொந்த நிலம் என்றேன்! இப்போது எந்த நிலமும் இல்லாமல், இருக்கும் உடலும் இல்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேனே! பூமியில் வாழ்ந்த காலத்தில் தானம் செய்தேனல்லேன்! 

வேத சாஸ்திரங்களை பழித்தேன்! புராணங்களை  பொய்கள் என இகழ்த்தேன்! கல்வி கற்போருக்குக் கல்விச் சாலைகள் உண்டாக்க மறுத்தேன். இராமாயண, பாரத, பகவாதங்களையும் புராணங்களையும் கையால் எழுதியேனும், எழுதச் செய்தேனும், விலை  கொடுத்து வாங்கியேனும் அவற்றைப் படிக்க விரும்பியவருக்கு மனதார கொடுத்தேனல்லேன்! 

பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவுமில்லை . படிக்க வைத்தாவது புராண வசனங்களைக்  கேட்டதுமில்லை. ஸ்ரீஹரியின் புனித தினமாகிய ஏகாதசியில் உபவாசம் இருந்தேனல்லேன். 

நல்வினை, நற்செயல் ஒன்றைக்கூட கனவிலாவது நினைத்தேன் அல்லேன். தீவினைகளில் ஒன்றைக்கூட விடாமல், அத்தனையும் செய்தேன்! இப்போது என் செய்வேன்? யாரிடம் அழுது சொல்வேன்! என்று அழுது கூக்குரல் இட்ட  வண்ணம், ஒவ்வொரு குரலுக்கும் யமகிங்கரர் அவனைத் துன்புறுத்த, அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்து செல்லப்படுவான்!" என்று திருமால் கூறியருளியதாகச் சூதபுராணிகர் கூறினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

2 comments:

  1. ஜீவ நாடி படிப்பவர்கள் இங்கே இருக்கிறீர்களா

    ஜானகி ராமன் ஐயாவிடம் பதில் கிடைக்கவில்லை..

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete