வணக்கம் அகத்தியர் அடியவர்களே
சமீபத்தில் குருநாதர் அகத்திய பெருமான் அடியவர்கள் வாக்குரைப்பின் போது சில பொதுவான உபதேசங்களை கூறியிருந்தார். அதை பற்றிய ஒரு தொகுப்பு.
அப்பனே இவ்வுலகம் மிகவும் விசித்திரமானது விசித்திரமான இவ்வுலகத்தில் மனிதர்கள் விசித்திரமானவர்கள் என்பேன்.
அப்பனே மனிதர்கள் பணம் ஈட்டுவதற்காக பலவழிகளிலும் தொழில் செய்து ஈட்டுகின்றனர்.
அவ் தொழில்களில் முறையாக நேர்மையாக நடந்து பின் சம்பாதித்து வாழ்தல் வேண்டும்.
ஏழையின் வயிற்றில் அடித்து வாழ்வது சிறப்பாகாது. அது கடைசியில் பெரும் கர்மங்கள் ஆக மாறி விடும்.
அப்பனே அனைவரும் எப்படி எப்படியோ சம்பாதிக்கிறார்கள் அவர்கள் அனைவரும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்று யாரும் நினைக்க கூடாது.
இதிலும் கூட சூட்சமங்கள் உள்ளது.
உங்கள் மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என்பேன்.
அப்படி செய்தால் அப்பனே பின்வருவது பாவக் கணக்கில் என்பேன்.
அப்பனே எவை என்று கூற அப்பனே சொல்கின்றேன்
ஒரு சீடன் ஒரு குருவிடம் சென்றானாம் .
அப்பனே சீடன் குருவிற்கு அனைத்தும் செய்து கொண்டிருந்தான் ஆனாலும் குருவினிடத்தில் சீடன் நற்பெயரை எடுத்துக் கொண்டான்.
ஆனாலும் எடுத்துக் கொண்டதற்கு இணங்க சீடன் பின் இவ்வாறு நினைத்தான்.
பின் குரு இருக்கின்றான் அனைத்துமே நம்தனக்கு செய்துவிடுவான். என்று.
ஆனால் இவை என்று கூற அவந்தனக்கு தவறு எவ்வாறு என்பது கூட தெரியவில்லை. ஆனால் நான் தவறு செய்தாலும் குரு மன்னித்து விடுவார். நாம் தான் குருவிற்கு அனைத்தும் செய்து விட்டோமே என்று.
ஆனாலும் ஒருநாள் இவன் தெரியாமல் குருவிற்கு குருவிற்கு தெரியாமலே எவ்வாறு என்பதையும் கூட பின் அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு. தைரியமாக வந்து குருநாதா உந்தனுக்கு நான் பல வகையிலும் எப்பொழுதும் கடை நாள் வரையிலும் கடைபிடிக்க வேண்டும் உந்தனுக்கு சேவை செய்ய வேண்டும் இவை என்று கூற இப்படி சொன்னானாம்.
ஆனாலும் குரு உணர்ந்து விட்டான்.
இவன் என்ன செய்வான் என்பது கூட.
ஆனாலும் குரு மௌனமாக காத்துக்கொண்டிருந்தான் ஆனாலும் இவந்தன் குருவிற்கு தெரியாமலேயே அனுதினமும் செய்து வந்தான் தவறுகளை.
ஆனாலும் இவன் செய்வது குருவிற்கு தெரியாது என்று கூட இவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் குரு அனைத்தும் அறிந்தவன் என்பதுகூட இவந்தனக்கு தெரியாமல் போய்விட்டது.
ஆனாலும் சேவைகள் செய்யட்டும் செய்யட்டும் என்று கூட பின் குருவும் அமைதியாக பொறுத்து இருந்தான். இவந்தனும் பல தவறுகளை செய்துவிட்டு குருவிற்கு பல சேவைகளை செய்து வந்தான்.
ஆனாலும் கடைசியில் இவன் செய்த தவறுகள் இவந்தனக்கு வினையாக வந்துவிட்டது.
கை கால் முடக்கம் என்று கூட கண் பார்வை மங்கிவிட்டது.
ஆனாலும் குருவினடத்தில் அப்பொழுது வந்தான்.
குருவே உந்தனக்கு பல சேவைகளை செய்தேன் பலவற்றை யான் செய்து கொண்டே இருக்கின்றேன். ஏன் எனக்கு இந்த நிலைமை என்று கேட்க.
ஆனாலும் குரு சொன்னான் அப்பனே நீ செய்தது அனைத்தும் எந்தனுக்குத் தெரியும்.
ஆனாலும் நான் கண்டுகொள்ளவில்லை.
ஆனாலும் முன்பே நீ நினைத்தாய் யான் செய்து வருவது நல்லது என்று கூட.
ஆனாலும் எவை என்று கூறும் அளவிற்கு கூட என்னிடத்திலேயே நீ இவ்வாறு என்று கூட சொல்லாமல் செய்து கொண்டிருந்தாய்.
அப்பனே இப்பொழுது இதனை அனுபவிக்கின்றாயா!!! எதனை?? இதுதானப்பா விதி.
விதி தன்னில் அப்பனே பின் அவரவர் செய்த பின் கர்மத்திற்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்பதே .
அப்பனே இதை எவை என்று கூற குருவும் தடுக்க முடியாது என்பதே இயல்பு அப்பனே.
இதைப் பற்றி மேலும் விரிவாகக் கூறுகின்றேன் அப்பனே.
அப்பனே இதையன்றி கூற அப்பனே யான் கூறிவிடுகின்றேன் அப்பனே.
அப்பனே ஓர் குருவிடம் அப்பனே ஒரு சீடன் நன்கு வாழ்ந்து வந்தான் என்பேன்.
வாழ்ந்து வந்தான் என்பேன்.
குருவிற்கு தேவையானதை அனைத்தும் செய்வித்தான் என்பேன்.
ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே சீடன் அப்பனே பின் ஏழ்மை நிலையில் இருந்தான்.
ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் குருவிற்கு முறையாக குருவிற்கு சேவை செய்ய முடியவில்லை அப்பனே.
அப்பனே இவை என்று கூற பின் திரும்பவும் சீடன் குருவிடம் வந்தான் என்பேன்.
வந்து குருவே என்னால் எதையும் செய்ய முடியாது உந்தனக்கு.
உந்தனக்கு ஏனென்றால் யான் அனைத்தும் இழந்து விட்டேன். இழந்துவிட்டேன் எவை என்று கூற என்னிடத்தில் ஏதுமில்லை என்று.
ஆனாலும் குருவானவன் பின் மௌனத்தை காத்துக் கொண்டிருந்தான் இவன் என்ன செய்கின்றான் என்று.
ஆனாலும் சீடனோ பின் குருவிற்கு ஏது எதை செய்வது என்று கூட தெரியாமல் வாழ்ந்து வந்தான்.
ஆனாலும் இவையன்றி கூற பின் ஒருநாள் குருவும் மாண்டு விட்டான் என்பேன்.
மாண்டு விட்டான் என்பேன் அதனால் சீடன் எவ்வாறு என்று கூற நினைத்து பின் குருவானவன் மாண்டு விட்டான் எந்தனக்கு யாரும் துணை இல்லை.
துணை இல்லை என்று கூட நினைத்து விட்டான் ஆனாலும் குருவானவன் மாய்ந்து விடவில்லை.
மாய்ந்து விடவில்லை இவன் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பூமிக்கடியில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான் பின் உடம்பு தான் மாண்டு விட்டதே தவிர. அவன் ஆன்மா மாண்டு விடவில்லை.
ஆனாலும் இவந்தனக்கு(சீடன்) சில தவறான எண்ணங்கள் வந்துவிட்டது.
ஏன்? நம்தனக்கு எவ்வாறு என்பதையும் கூட பணம் பொருட்கள் சேர்த்து நம் குருநாதருக்கு விதமாக திருத்தலம் அமைக்கலாம் என்று.
ஆனாலும் இவை என்று கூற அனைவரிடத்திலும் பின் கையேந்தினான்.
கையேந்தி சில காசுகள் வந்துவிட்டது.
ஆனாலும் குறுக்குப்புத்தியால் பின் ஏன் இவ்வளவு மனிதர்களிடத்தில் யான் பிச்சை எடுக்க வேண்டும்?
ஆனாலும் இவையன்றி கூற பல இல்லங்களுக்குச் சென்று நல் விதமாக கொள்ளையும் அடித்தால் எவ்வாறு என்பதை கூட இதனையும் என்று பார்த்தால் நம்தன் குருவிற்கு பெரிய திருத்தலமே அமைத்து விடலாமே என்று எண்ணி பல பல இல்லங்களிலும் கொள்ளை அடித்தான்.
ஆனாலும் பெரிய நல் விதமான செல்வங்கள் சேர்த்துக் கொண்டான் சேர்த்துக் கொண்டான் என்பதற்கிணங்க அனைத்து செல்வங்களும் அவந்தனக்கு வந்துவிட்டது.
வந்துவிட்டதற்கிணங்க பின் குருவிற்கும் செய்தான் திருத்தலத்தையும் அமைத்தான் நன்றாகவே.
நன்றாகவே அமைத்து திடீரென்று அவந்தனக்கு பல சோதனைகள் வந்துவிட்டது.
பல சோதனைகளும் வந்துவிட்டது என்பேன்.
அவந்தன் பின் இல்லத்திலும் பின் சுலபமாக தேவை என்று கூற அவந்தன் மனைவிக்கும் நோய்கள் வந்து விட்டது நோய்வாய் பட்டு விட்டாள். பிள்ளைகளுக்கும் கஷ்டங்கள் ஆகிவிட்டது.
எவை என்று கூற திரும்பவும் எவ்வாறு என்பதையும் கூட அவன் ஆலயத்திற்கு வந்து அமர்ந்தான்.
குருவை திட்டி தீர்த்தான் என்பேன்.
உன்னைத்தான் நான் நம்பிக்கொண்டிருந்தேன் உன்னையே நம்பி இருந்தேன். நம்பியே இருந்தேன் உந்தனக்கு ஆலயத்தையும் எழுப்பினேன். இவையெல்லாம் செய்துவிட்டு பின் எவை என்று வீணடித்து பின் நீ எந்தனக்கு ஏதும் செய்யவில்லையே??
இவ்வாறு யான் கஷ்டப்படும் பொழுது எவ்வாறு என்பதையும் கூட எந்தனுக்கு உதவிகள் இல்லையே நீ உதவிகள் செய்ய வில்லையே என்று.
நீ பொய்யே!!!
உந்தனக்கு இறையருளே இல்லை.
நீ ஒரு குருவே இல்லை என்றெல்லாம் திட்டி தீர்த்தான்.
ஆனாலும் தவறு இவன் மேலே இருக்கிறது. என்று கூட எண்ணிக்கூடப் பார்க்கவில்லை.
ஆனாலும் அப்போது கூட அடியிலிருந்து குரு பார்த்துக்கொண்டே இருந்தான் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான்.
ஆனாலும் இவையன்றி கூட குருவிற்கு இவந்தன் பிரச்சினையை தீர்க்க தெரியும்.
ஆனாலும் விட்டு விட்டான் இவன் செய்த தவறுகள் இவனையே வாட்டுகின்றது என்பது. அப்பனே இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பனே இவை என்று கூற இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.
அப்பனே குருவானவன் அப்பனே பின் சீடனானவன் ஒரு மரத்தடியில் பின் இருவரும் உட்கார்ந்து இருக்கின்றனர்.
அப்பனே குருவானவனுக்கு மட்டும் உணவு அருந்த அனுதினமும் ஓராள் வந்து உணவை வைத்து கொண்டிருந்தார்கள்.
சீடனும், சீடனுக்கு இல்லை உணவு.
ஆனாலும் சீடன் பார்த்துக் கொண்டேதான் இருந்தான் நம் குருவிற்கு மட்டும் உணவு வருகின்றதே நமக்கு உணவு வரவில்லையே என்று.
ஆனாலும் சில நோக்குகளையும் பார்த்து பார்த்து இவை என்று அளவு அறியாமல் சீடனும் காத்துகொண்டு இருந்தான்.
பின் வரவில்லை வரவில்லை என்று கூட.
எத்தனை என்று குறிப்பிட்ட அளவிற்கு கூட ஒரு நாள் சீடன் கேட்டு விட்டான்.
குருவே உந்தனக்கு மட்டும் பின் நல் உணவு மனிதன் எடுத்துக்கொண்டே வருகின்றான். எந்தனுக்கு ஏன்? வரவில்லை? என்று.
அப்பொழுது குரு சொன்னான்.
அப்பனே நீ செய்த கர்மாப்பா!! என்று கூட.
ஆனாலும் குருவோ நல் விதமாக பக்கத்தில் அமர்ந்து இருக்கின்றவனை அவனின் கர்மாக்களை நீக்கலாம் ஆனால் ஏன் நீக்கவில்லை என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
அவரவர் செய்கின்ற கர்மாக்களை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும்.
அப்பனே இவையன்றி கூற மனிதன் நினைத்தால் அனைத்தும் நிறைவேறும் என்பேன். நிச்சயம் நேர்மையாக நடந்தால் அனைத்தும் சாதிக்க முடியும் என்பேன்.
அப்பனே அவரவர் செய்த வினைகளுக்கு அவரவர் கஷ்டப்பட்டே தீரவேண்டும் அப்பனே.
அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தில் நல்விதமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்
கர்மத்தை செய்தால் நிச்சயம் கர்மத்தை அனுபவிக்க வேண்டும்.
புண்ணியங்கள் செய்தால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும் அப்பனே.
அப்பனே கலியுகத்தில் நீதி நேர்மை நியாயம் தர்மம் இவையெல்லாம் அகன்று விட்டது என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே சில பொருள்கள் அப்பனே சில தினங்களுக்குள் அப்பனே பின் எவை வேண்டும் என்று கூட ஒதுக்கி பதுக்கி வைத்து கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் பின் அவையெல்லாம் அப்பனே வாழ்க்கைக்கு உதவும் என்று மனிதர்கள் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கடைசியில் அவைகள் எதுவும் உதவுவது இல்லையப்பா.
நீங்கள் நேர்மையான வழியில் நடந்து கொண்டு புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டால் அவ் புண்ணியத்தை யாராலும் தடுக்க முடியாது அப்பனே.
அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே என்னை நம்பியவர்களே அப்பனே யான் தான் பெரியவன் நான் தான் பெரியவன் அனைத்தும் எந்தனுக்கு தெரியும் என்று கூட அப்பனே போலியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் சொன்னேன் அப்பனே . என்னுடைய பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று.
ஆனாலும் அப்பனே ஒன்றிணைந்தால் அப்பனே நலமாகும்.
ஆனால் ஒன்றிணைய மாட்டார்கள் மனிதர்கள் பொய்யே என்பேன்.
அப்பனே யான் உரைத்த மருந்துகளை அவரவர் இஷ்டத்திற்கு செய்து வருகின்றார்கள் என்பேன் ஆனாலும். இதற்கு தகுந்தாற்போல் அப்பனே பின் நல் விதமாக மூலிகைகளைப் பயன் படுத்துவதற்கு குரு மந்திரமும் தேவை என்பேன் அப்பனே ஆனாலும் அதை அப்பனே யாரும் உணர்வதில்லை என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே யான் சொல்லியதை அப்பனே நிச்சயமாய் உண்ணுக. அதற்கும் அப்பனே நல் விதமாக வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே.
ஆனாலும் யாங்களும் கூட தேர்ந்தெடுத்த கொண்டே இருக்கின்றோம் அப்பனே யாராவது மனிதன் நல் விதமாக செய்து தருவானா? என்று கூட. அப்பனே ஆனாலும் அனைத்து மனிதர்களுமே அப்பனே பணத்தின் மீதே மோகம் கொண்டால் அப்பனே.
ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே சித்தர்கள் வந்து அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே சித்தனை வணங்கி வணங்குவதற்கும் தகுதிகள் வேண்டும் அப்பனே.
அது எவ்வகை தகுதியென்றால் அப்பனே எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று வந்துவிட்டால் அப்பனே யாங்கள் கொடுப்போம் அனைத்தும் கூட.
அதை யாராலும் தடுக்க முடியாது அப்பனே.
இதைத்தான் இனிமேலும் யாங்கள் செய்யப் போகின்றோம்.
பொறுத்திருந்து பாருங்கள்.
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..............தொடரும்!
அப்பனே அகத்தியா, நீயே உற்ற துணை. ஏதாவது தவறுகள் செய்திருந்தாலும் மன்னித்து நீயே உள்ளிருந்து இயக்க வேண்டும். மனிதர்கள் பார்வையில் நல்லது கெட்டது என்பதும் ஞானிகள் மகான்கள் பார்வையில் பாவம் புண்ணியம் என்பது வேறுபாடு கொண்டது.
ReplyDeleteஎன்னுடைய துன்பத்தில் இருந்து நீண்ட நாட்களாக போராடியும் மீளமுடியவில்லை.குருநாதர் வாக்கினை ஜீவநாடி வழியாக பெற்று தரும் புண்ணியம் கொண்டவர்கள் யாராவது (சித்தன் அருளில்) இருக்கிறார்களா..
ReplyDeleteதொகுப்பு 1067 உங்களை போன்றவர்களுக்கு அகத்தியர் தனியாக உரைத்த வாக்கு! நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்!
Deleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete