சமீபத்தில் குருநாதர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்:-
அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம், பள்ளித்தெரு கிராமம், ஆம்பூர் வட்டம், திருப்பத்தூர் மாவட்டம்.
ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம் இது.
இவை என்று கூற இத்திருத்தலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து அப்பனே தங்கி உறங்கி செல்பவர்களின் பின் தீவினைகள் அகன்று போகும் பவுர்ணமி நாளில் பின் இங்கு சிவ புராணத்தையும் கோளாறு பதிகத்தையும் பின் எவை என்று உணர 108 முறை ஓதி பின் அதனை நிர்வகித்து அமைதி காக்க பின் உடனே பின் திருமணம் கைகூடும்.
பின் கர்மங்களும் சிறிது சிறிதாக அகலுமப்பா
அகலுமப்பா என்பேன். இவ் மலையிலும் பின் சித்தர்கள் ஞானியர்கள் வாழ்ந்த இடம்.
வாழ்ந்த இடம் என்றாலும் அப்பனே பல ஞானியர்கள் இங்கு மாய்ந்து பின்பு ஜீவசமாதி ஆகவும் அடியில் பின்பு எதனை மாய்த்துக் கொண்டார் என்பதும் இருக்கின்றனர்.
அதனால்தானப்பா அவனே தேர்ந்தெடுத்தான் ஈசனே என்பதை யான் பரிபூரணமாக இங்கு உரைக்கின்றேன்.
சிவராத்திரியன்று ஈசனே இங்கு வலம் வருவானப்பா.
அப்பனே இங்கு வருபவர்கள் நலன்கள் ஆக முன்னேற்றங்கள் உண்டு என்பேன்.
அப்பனே இவ்வுலகத்தில் பின் கலியுகத்தில் என்றாலும் தீயவைகள் அகன்றிட பின்பு அவந்தன்(ஈசன்) பல பல பல ரூபத்திலும் இவ் வையகத்தில் சோதித்து தான் கொண்டிருக்கின்றான்.
ஆனால் அதனை மனிதர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை என்றாலும் அப்பனே இருப்பினும் பின் ஈசனே பின்பு அங்கங்கு உருவெடுத்து எழுவான் என்பது திண்ணம்.
அப்பனே இவையன்றி பின் ஞானங்கள் தோன்றும் ஞானங்கள் தோன்றும் அப்பனே.
இத்திருத்தலத்திற்கு வருபவர்கள் என்னுடைய ஆசிகளும் சித்தர்களுடைய ஆசிகளும் பின்பு நலம் என்பேன்.
அப்பனே அனைத்தும் பொய் என்பேன்.அப்பனே இறைபக்தியை பிடித்துக் கொள்ளுங்கள் என்பேன். அவந்தனை நினைத்து பின்
ஈசனை நாடிவிட்டால் பின் எடுத்துச் செல்வான் எங்கேயோ.!! அதுதான் உண்மையான வாழ்க்கை மற்றவையெல்லாம் போலியே என்பதை உணர்ந்து கொள்க.
அப்பனே அதுபோல்தான் ஞானியர்கள் பலர் இவ் மலையை வலம் வந்து பின்பு இங்கேயே தங்கி சென்று இறைவன் இங்கு தான் இருக்கின்றான் என எண்ணியும் பின் முருகனும் இங்கே மேல் எழும்பி காட்சி அருளினான் முன்பே பல யுகங்களுக்கு முன்பே.
(கைலாயநாதர் கோயில் பின்புறம் சிறு மலை உள்ளது. மலையின் பெயர் கைலாசகிரி. மலையின் மேல் முருகன் கோயில் உள்ளது.)
அப்பனே பின் எவை என்று பின்பு எதனை நீக்க அப்பனே பின்பு பரிபூரணமாக ஓடோடி வருவான் முருகன் . அப்பன் பின் பாசத்திற்கிணங்க.
அப்பனே பல ஞானியர்கள் வாழ்ந்த இடம் இது.
பின் அவர்களின் ஆன்மாவும் பின் இங்கே அலை மோதுகின்றது அப்பனே இதனை குறைகள் தீர்ப்பதற்கு என்பதற்காக இல்லை பின் மனிதர்களின் ஒவ்வொரு குறையும் தீர்த்துக் கொண்டு தான் பின் வலம் வருகிறார்கள் என்பதற்கிணங்க. ஆனாலும் மனிதர்கள் கண்டுகொள்வது இல்லை.
மனிதன் இங்கு வந்து சென்றாலும் இறைவனிடத்தில் பின் கஷ்டங்களே நிரம்பி உள்ளது ஆனாலும் பின் ஏன்?? இறைவனை வணங்க வேண்டும்??!! என்று மனதை மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனாலும் அப்பனே இவையன்று பின் உணர பின்பு இறைவனே கதி என்று நினைத்துவிட்டால் அப்பனே ஞானியர்களும் சித்தர்களும் இதற்கு மாற்றாக பின்பு எங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ? அங்கு அழைத்துச் சென்று பின் கர்மாவையும் அழித்து விட்டு பின் மோட்ச கதியை அடைவார்கள் என்பதே திண்ணம் அப்பனே.
குறைகள் கொள்ளாதீர்கள்.
இங்கு எழுந்தருளி இருக்கின்றான் சிவன். இவந்தன் முன்னிலையில் யான் உரைக்கின்றேன்.
இவந்தன் சேவைகள் (கோயில் திருப்பணிகள்) செய்பவர்களுக்கும் இவந்தன்(ஈசன்) இக் கடைசி பிறவியாக ஏற்றுக்கொண்டு பின் மெய் சிலிர்க்க வைக்கின்றது மோட்ச கதியாக அடைந்து விடுவார்கள்.
அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் இங்கு.
அப்பனே பல ஞானியர்கள் இருக்கும் இடம்.அப்பனே பின் எவை என்று பின் நிரூபிக்க அப்பனே இங்கு தங்குதல் வேண்டும் அப்பனே.
இங்கு தங்குதல் சில பிரச்சினைகள் அகலும் அப்பனே. பின் மெய் சிலிர்ப்பான் அப்பனே.
இவந்தனக்கும்(ஈசன்) இவந்தன் முருகனுக்கும் பின் இங்கு பிடித்தமான இடம். இடத்திலும் ஒன்றுதான்.
அப்பனே எவை என்று பின் எவை என்று பின் வள்ளி மலையில் காலை பின் இவையன்று அங்கு ஓர் பின் அதனை நிரூபித்து விட்டு அங்கே இருந்து பின் இங்கே ஓர் காலடி வைப்பான் முருகன். அதனால் இங்கேயும். அவந்தனக்கு சுலபமான வழிகள் இருக்கின்றன. (வள்ளிமலைக்கும் கைலாசகிரி மலைக்கும் ரகசிய வழிகள் உள்ளன.)
அவந்தன்(முருகன்) சந்தோஷப்படுவதும் இங்கே .
அப்பனே இவ்வளவு எவ்வாறு அப்பனே உணர்வதென்று அப்பனே இணைத்தது யார் ?யார்? என்று எங்கெங்கு சென்றாலும் அப்பனே இறைவனுக்குத் தெரியும்!!! யார் ?மூலம் ?எதைச் செய்யலாம்? வெற்றி கொள்ளலாம். என்றாலும் அப்பனே அவந்தனே(ஈசன்) இணைத்து அணைத்து கொள்வான் அனைவரையும்.
அப்பனே பின் முன் போன போக்கிலே அப்பனே பின் செல்லுதல் வேண்டாமப்பா.
அப்பனே பின் எவை என்று ஞானியர்கள் அருள் பரிபூரணமாக இங்கு இருப்பதால் அப்பனே பின் நன்றாக வணங்கி இங்கு துயிலெழுந்து (தங்கி உறங்கி செல்லுதல் வேண்டும்)) விட்டால் அப்பனே பரிசுத்தமான ஆன்மாக்களுடன் அப்பனே பின் ஞானியர்களும் தொடர்புகள் வைத்துக் கொள்வார்கள்.
பின் அனைத்து குறைகளும் நீங்கி விடும் இது உண்மை.
அப்பனே மீண்டும் வந்து ஒரு தடவை வாக்கு உரைக்கின்றேன் இங்கு.
ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள்.
அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயம்.
பள்ளித்தெரு கிராமம்.
ஆம்பூர் வட்டம் திருப்பத்தூர் மாவட்டம்.
முருகன் கோயில் முகவரி
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி.
கெடம்பூர், ஊமராபாத் அஞ்சல்,
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு - 635808
தொலைபேசி
+91 9080776377.
இங்கு அருள் பாலித்து வரும் உமா மகேஸ்வரி உடனுறை ஸ்ரீ கயிலாயநாதர் கற்கோயில் கருவறை மகாமண்டபம் நடராஜர் விநாயகர் முருகர் வள்ளி தெய்வானை நந்திதேவர் நால்வர் நவகிரகம் பைரவர் சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரி உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் தனி சன்னதி மற்றும் ராஜகோபுரம் கருங்கல்லால் திருப்பணி செய்ய உள்ளது.
பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருள் உதவி நிதி உதவி அளித்து இச் சிவாலய திருப்பணி புண்ணியத்தில் பங்கு பெறுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு சிவனடியார் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள்.
கோயில் பூசாரி தொடர்பு எண் : பழனி சிவனடியார் 7373422236
நிதி உதவி செய்ய வேண்டிய முகவரி.
SRI UMAMAHESHWARI KAILAYANATHAR TRUST. (REG NO :BT 796788.)
ACCOUNT NUMBER : 60342083334.
BANK: BANK OF MAHARASHTRA.
AMBUR BRANCH.
IFSC CODE NO: MAHB0001603.
CONTACT MOBILE NO. 9943301891, 9787140075.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்........... தொடரும்!
Om Namahshivaya
ReplyDeleteOm Namahshivaya
Om Namahshivaya
Om sri lobamudra samedha agastherswararau saranam
ReplyDeleteOm sri lobamudra samedha agastherswararae saranam
Om sri lobamudra samedha agastherswararae saranam
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteTranslation:
ReplyDeletehttps://drive.google.com/file/d/10u_GqhS8U5oC5MBz7vl2dBFtcVVB6FXB/view?usp=sharing