​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 6 January 2022

சித்தன் அருள் - 1067 - குருநாதர் காட்டிய ஒரு சிறந்த வழி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், நிறையவே சிரமங்களை அனுபவித்து மனம் சிதிலமடைந்த நிறைய அன்பர்கள் தனிப்பட்ட முறையில் அடியேனுக்கு ஈமெயில் அனுப்பியிருந்தனர். அத்தனை பேர் கேள்விகளையும் குருநாதரிடம் சமர்ப்பித்து, ஏதேனும் ஒரு எளிய வழியை காட்டுங்கள் என வேண்டிக்கொண்டேன்.

"விரைவில் ஒரு வழி வந்தடையும். அதை அனைவருக்கும் தெரிவித்துவிடு. நம்பிக்கை உள்ளவர்கள், அவ்வழியை தொடர்ந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரட்டும்" என உத்தரவிட்டார். இரு வாரங்களாக அன்புடன் அகத்தியர் தலைப்பின் கீழ் நிறைய உபதேசங்களை அவர் தொடர்ந்து கூறினாலும், இதுவல்ல, வேறு ஒன்று வரும்" என மனம் உரைத்தது.

ஒரு தொகுப்பு வந்து அடியேன் வாசித்த பொழுது, "நீ கேட்ட கேள்விக்கு பதில் இது தான். கூறிவிடு. புரிந்து கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்" என உரைத்தார்.

அடியேனுக்கு புரிந்தது. நீங்கள் அனைவரும் உணர வேண்டி, திரு சேஷாத்திரி ஸ்வாமிகளின் அறிவுரையை, உங்கள் நலனுக்காக சமர்ப்பிக்கிறேன்.

இதற்கும் மேல் அடியேனால் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

நலம் பெறுக!

*ஜபம் செய்தால் என்ன கிடைக்கும் ???*

திருவண்ணாமலை சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒருவர் இடை விடாது மந்த்ரம் சொல்லிக் கொண்டிருந்த சேஷாத்திரி ஸ்வாமியை அணுகி , 

"என்ன செய்கிறாய்? சேஷாத்ரி" எனக் கேட்டார்.

"கர்மா ஒழிய வேண்டும்", அதற்காக மந்த்ர ஜபம் செய்வதாக சேஷாத்ரி ஸ்வாமி கூறினார்.

"ஒரு லட்சம் ஆவிருத்தி ஆயிருக்கு. இன்னும் ஒரு அரை லட்சம் பண்ண வேண்டி இருக்கு. மந்திரம் சொல்லிச் சொல்லி கர்மாவை அழிக்கலாம். வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடலாம். மந்த்ர ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு சுத்தமாயிடுச்சுன்னா போதும்…..நீங்க என்ன கேட்டாலும் கிடைக்கும்".

'இது ஆச்சரியமா இருக்கே! நாலு வார்த்தையை திருப்பித் திருப்பி சொல்றதால எல்லா நன்மையும் கொண்டு வந்து தருமா ?"

''அது வெறும் வார்த்தையல்ல. கந்தகம் என்பது ஒரு வகை மண்ணு. அது வெடிமருந்தா மாறலயா. அந்த மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல் நிகழ்த்தும்.''

"மந்த்ரம் சொல்லச் சொல்ல மனசு ஒருமுகப்படும். ஒரு முகப்பட்ட மனசுக்கு நிறைய சக்தி உண்டு."

வெறுமனே சந்தேகப்படாம உடனே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். உனக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ தெரியாது. அதனால இந்த ஆயுசிலேயே நல்லது கிடைக்க மனதில் தெளிவு கிடைக்க இப்பவே மந்திரம் சொல்ல ஆரம்பி."

ஒருமணி நேரத்துக்குமேல ஜபம் பண்ண முடியலையே சேஷாத்ரி. அந்த ஒருமணி நேரமும் மனசு எங்கெங்கோ சுத்துறதே" ஆர்வமுள்ளவர்கள் ஆவலுடன் கேட்டார்கள்.

பண்ணிதான் ஆவேன்னு உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான் வைராக்கியம். என்ன தடுத்தாலும், எது குறுக்கிட்டாலும் தினம் ஒருமணி நேரம் ஜபம்கறதை ஆரம்பிச்சுடணும் சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா ஒருமணி நேரம் போறாது.

மனசுக்கு பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு மணிநேரம் பண்ணு. இன்னொரு மணி நேரம் பண்ணுன்னு அதுவா கேட்கும் ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது, ஆனால் கஷ்டப்பட்டு ஆரம்பிச்சுட்டா ஆர்வம் அதிகமானாலும் ஆகும்.

நான் ஏழு வயசிலேயே கார்த்தாலே 1 மணிநேரம், சாயந்தரம் 1 மணிநேரம் ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதனாலே கணக்கோ, பாட்டோ, பூகோளமோ, இங்கிலீசோ, பள்ளிக் கூடமோ முக்கியமில்லைனு ஆயிடுத்து. காசை விட ஜபம் தான் முக்கியம்னு போயிடுத்து.

எல்லா அபிலாஷைகளும் ஜபத்தால் நடக்கும்கற போது வேற இங்கு செய்ய என்ன இருக்கு.

மனசு கேட்க, கேட்க ஜபம் பண்ணிண்டே இருக்கேன். என் மனசுக்கு பசி அதிகம்! எத்தனை சாப்பிட்டாலும் நிரம்பாத வயிறு மாதிரி! எத்தனை ஜபம் பண்ணினாலும் மனசுக்கு பத்தல. பன்னெண்டு மணிநேரம் பண்றேன்!

'ஜபம் பண்ணி என்ன கிடைச்சுது?'

சேஷாத்ரி ஸ்வாமிகள் சொல்கிறார.

"எனக்கு என்ன கிடைச்சுதுங்கறது முக்கியமில்லடா. நான் ஒரு பொருட்டில்லை. என்ன கிடைக்கும்னு கேள்! படிப்படியா விளக்கிச் சொல்றேன்.

தினம் ஒருமணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம் அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு.

காலைல ரெண்டு மணிநேரம், சாயந்தரம் ரெண்டு மணி நேரம் பண்ணினா காதில் இனிமையான சங்கீதம் கேட்கும்.

உடம்பு இறகு போல லேசா இருக்கும்.

நோய் உபத்திரவாதங்கள் இருக்காது.

உணவு கவனமா சாப்பிடத் தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது.

உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும் !

கார்த்தாலே மூன்று மணிநேரம், சாயந்தரம் மூன்று மணி நேரம் ஜபம் பண்ணினா, முகத்துல மாறுதல் உண்டாகும்.

கண் கூர்மையாகும்.

உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி விசிறி அடிக்கும்.

நாம் சொல்லும் வாக்கு பலிக்கும்.

எட்டு மணிநேரம் ஜபம் பண்ணினா, நீ வேற மந்த்ரம் வேற இல்ல. நீயே மந்திரமா மாறிடலாம்.

அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல் தான்.

எதை பார்த்தாலும் சந்தோஷம் தான்.

பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது.

மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு ஸ்வாமி கிட்ட நெருக்கமா போய்டலாம். அப்புறம் அதுவே உன்னை இழுத்துண்டு போய்டும்.

இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய, அந்த சக்தியே கூட்டிண்டு போய்டும்.

நீ உன்னோட கட்டுப்பாட்டில் இருக்கமாட்டே.

முழுக்க முழுக்க ஸ்வாமி கிட்ட சரணாகதி ஆயிடுவே.

அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்.

இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமோ?

உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும் பகவானா பார்த்து, பார்த்துக் கொடுப்பார்.

உன் வார்த்தையெல்லாம் கடவுளுடைய வார்த்தை.

உன் செய்கையெல்லாம் கடவுளுடைய செய்கை. 

"எட்டு மணி நேர ஜபத்துக்கப்புறம் என்ன? "

"எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு தோணிடும். எட்டு இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும்."

மந்த்ர ஜபம் என்பது கற்றுக் கொள்வதில் இல்லை. பூஜை என்பது சொல்லித் தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து  பீறிட வேண்டும்.

தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கிச் சரிதல் வேண்டும்.

சடங்காக செய்கிறபோதும், எதிர்பார்த்து உட்காரும் போதும் செய்கிற விஷயத்தின் வீர்யம் குறைகிறது.

ஸ்வாசம் போல இயல்பாக மாறிய செயல் தான் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்! 

13 comments:

  1. ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம
    ஓம் அகஸ்த்தியாய நமஹ
    காஞ்சி மகா பெரியவா சரணம்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    மந்திர உபதேசம் செய்யுங்கள் ஐயா

    ReplyDelete
  3. நமசிவாய 🙏... வயது வரம்பு இருக்கிறதா ஐயா.... எனக்கான வயது 23....

    ReplyDelete
  4. Om Namahshivaya
    Om Namahshivaya
    Om Namahshivaya

    ReplyDelete
  5. Om Sri lopamudra Samantha' Agasthiar thiruvadi saranam

    ReplyDelete
  6. Yes correct sir. சின்ன குழந்தைகளுக்கு 3 வயதிலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் போதும்.அடுத்த தலைமுறை நன்றாக வரும். ஆன்மீகம் சார்ந்து வாழ்க்கை முறை இருந்தால் மட்டுமே நம் வாழ்வு நிறைவு அடையும். அதனால் நம் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே அவர்களிடம் ஆன்மீகம் சார்ந்து வாழும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,

    மந்திரம் சொல்வதை பற்றி செந்தூர் அழகன் (சித்தன் அருள்-1065) இப்படி வாக்குரைத்துள்ளார் -

    "மெய் அப்பனே!! என்பதை உணர்ந்து நிச்சயம் மந்திரங்கள் கடலில் பின் ஆழப்பகுதியிலே பின் உச்சரிக்க வேண்டும்.

    இவைதான் உண்மை அப்பொழுதுதான் அவ் மந்திரங்களுக்கு சக்தி என்பேன்.

    அதனை விட்டுவிட்டு மந்திரங்கள் ஜெபித்தாலும் வீணே!!

    அதைவிட முக்கியமானது எங்களுடைய அருள் இல்லாமல் மந்திரங்கள் ஜெபித்தால் பொய்யாக போய்விடும் என்பதே உண்மை.

    ஆனாலும் ஜெபித்து தான் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்."

    சேஷாத்திரி ஸ்வாமிகளும் மந்திர ஜெபமே மேலானது அன்றும் மற்றும் பல ஞானிகளும் கலியுகத்தில் இறை நாமமே இறை அருளை பெற்று தரும் என்று கூறியுள்ளனர்.

    இந்த இரு வேறு முரண்பாடான கருத்துக்களை நாம் எப்படி சமமாக ஏற்று கொள்வது என்ற வினா நிறைய பேருக்கு இருக்கலாம்.

    இதிலுன்ன சூக்குமம் யாது என்று சிந்தித்தால் மேலே தரப்பட்டுள்ள இரண்டு கூற்றுகளுமே உண்மை என்று உணரலாம்!

    எப்படி? இதற்க்கு விடை அகத்தியர் ஐயா சித்தன் அருள் - 1066இல் அதற்க்கு முன்னர் பல முறைகள் கூறியுள்ளார். அது என்ன என்று கீழே, அகத்தீசனின் வார்த்தைகளை அப்படியே கொடுத்துள்ளேன் -

    1.அப்பனே பக்குவங்கள் பெறவேண்டும். பக்குவங்கள் பெற்றால்தான் இறையருள் பலமாக இருக்கும்.

    2. புண்ணியத்தை நீங்கள் செய்தால் இறைவன் எவ்வாறு என்பதும்கூட உன்னையே தேடி வந்துவிடுவான் என்பேன்.

    அதனால் அனைவரும் நல் முறைகளாக ஜீவராசிகளுக்கு உணவு நிச்சயமாய் அனுதினமும் கொடுக்க வேண்டும் என்பேன் இதையாவது நீங்கள் செய்கிறீர்களா என்று பார்ப்போம்.

    3. எதையும் கேட்காமல் இருப்பது நல்லதே என்பேன்.

    தூய மனதோடு இறைவன் சிந்தனையிலேயே இருங்கள்..

    4.அன்னதானங்கள் தொடர்ந்து செய்ய செய்ய கர்மங்கள் ஒழியும். பரிகாரம் என்று ஒன்று கூட தேவையில்லை.

    5. இறைவா!
    இறைவா!
    இறைவா !
    என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள் பின் இது கடைசி வரை இன்பமாகவே மாறும் ஆனால் அவ்வழியில் யாரும் இல்லை என்பேன்.

    6. அதனால் நீங்களும் எதையும் கேட்க தேவை இல்லை என்பேன் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யுங்கள். பின் நலமாகும். நலமாகும் என்பேன்.

    7. அப்பனே அனைவரும் அதிகாலையிலே சூரியனை வணங்க வேண்டும். (இதை பல முறை கூறியுள்ளார்)

    8.அப்பனே இப்பொழுதும் கூட சொல்லி வைக்கின்றேன் சுத்த சன்மார்க்கத்தை சரி முறையாக கையாள்வது எவன் என்றால் அப்பனே அவனிடத்தில் இறைவனே தேடி வந்துவிடுவான் என்பேன்.

    அதைச் செய்யுங்கள் முதலில்.

    பின் வாக்குகளாக அனைத்தும் கேளுங்கள் யான் சொல்கின்றேன்.

    அப்பனே வள்ளலார் முறைப்படி பின்பற்றினால் ஒரு கடுகளவும் குறை வராது என்பேன். இது நிச்சயம்.

    9. புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால் இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

    10. அப்பனே பௌர்ணமி அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு நல் முறைகளாக வணங்கி வணங்கி அப்பனே பல புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பேன்.

    இயலாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் அவர்கள் பிழைப்பதை நினைத்து நல் முறைகளாக.

    நல் முறைகள் ஆகவே அவர்களை (முன்னோர்களை) நினைத்து நீங்களே வாங்கிக் கொள்ளவேண்டும் என்று மனதில் எண்ணி நினைத்து கொடுங்கள் நல் முறைகளாக பின் அமாவாசை திதிகளில் நல் முறைகளாக காவேரி நதியில் நீராடி அப்பனே செல்லுங்கள் அப்பனே நல் முறைகளாக புண்ணிய நதிகளில், கடலில் நீராடுங்கள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன்.

    11. பெற்றால் தான் பிள்ளையா. அப்பனே அம்மையே, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல் மனதாக வேண்டிக்கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் நன்றாகவே இருப்பீர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் ஆசீர்வாதங்கள்!

    ReplyDelete
    Replies
    1. Thank you so much ..Even I had the same question and was praying for an answer.. Thank you so much for consolidating the points...

      Delete
    2. 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

      Delete
  8. Gnanboomi english version of siththan arul is closed I can't find old posts please help.

    ReplyDelete
  9. Ohm agathiyar thiruvadikal potri......

    ReplyDelete
  10. Arumaiyaana pathivu nandri anbey anaiththm vanakkam

    ReplyDelete