​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 1 September 2020

சித்தன் அருள் - 899 - ஆலயங்களும் விநோதமும் - வேங்கடவர் கோவில், திருப்பதி!


திருப்பதி வேங்கடவர் கோவில், வைணவ தலங்களில் முதன்மையாக கருதப்படுகிற ஒன்று. இறைவனே சுயம்புவாக அவதாரம் எடுத்ததாக அகத்தியப் பெருமானே நாடியில் வந்து கூறியதை, "பெருமாளும் அடியேனும்" என்கிற தொகுப்பில் படித்தது நினைவில் இருக்குமே! நிறைய அதிசயங்களும், ஆச்சரியங்களும், மர்மமும் நிறைந்த இடம். சுருக்கமாக சொல்வதென்றால், எந்த ஒரு ஜீவனையும் மயக்கி, சுருட்டி தன் காலடியில் போட்டுக்கொள்ளும் இறையாற்றல் நிரம்பி வழியும் இடம்.

இந்த கோவிலின் புராண கால விதி முறைப்படி, வேங்கடவர் வாரத்தில் ஒருநாள், கோவிலை விட்டு மலை இறங்கி, கீழே இருக்கும் அலமேலுமங்காபுரத்தில் உறையும் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். இதற்கு ஏற்றாற்போல், மலைமேல் சுவாமி சன்னதியில், பூஜை முறையே அந்த ஒருநாள் மாறிவிடும். எப்படி? எந்தநாளில்?

வியாழக்கிழமை இரவு நடுநிசியில் , இரவு 12.00 மணிக்கு, வேங்கடவரின் மொத்த அலங்காரமும் கலைக்கப்பட்டு, அவருக்கு ஒரு வேஷ்டி/அங்கவஸ்திரம், வில்வமாலை மட்டும் சார்த்தப்பட்டு, சிவனுக்குரிய மந்திரங்கள் ஓதப்பட்டு, விபூதியில் (திருநீறில்) கற்பூர ஆரத்தி எடுத்து, அந்த விக்கிரகத்தை "சங்கரநாராயணராக" மாற்றிவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பக்தர்களுக்கு மட்டும் தான் இந்த பூஜையை பார்க்க முடியும். முன்பதிவு செய்ய வேண்டும்.

பெருமாள் இறங்கி சென்ற இடத்தில் சிவபெருமான் சங்கரநாராயணராக வந்தமர்கிறார். வெள்ளியன்று எளிய அலங்காரத்துடன் சுவாமி நிலையில் தரிசனம் தர இதுதான் காரணம். கீழே அலமேலுமங்காபுரத்தில் தாயாருடன் சேர்ந்தமர்ந்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதலால், அங்கு அத்தனை கூட்டம் கூடும்.

வெள்ளிக்கிழமை இரவு அதே 12 மணிக்கு மறுபடியும் இறைவன் திருமேனிக்கு அலங்காரம் செய்து, மந்திர பூஜையால், அந்த விக்கிரகத்தை சங்கரநாராயணரிலிருந்து "வேங்கடவராக" மாற்றி விடுகின்றனர். கீழே தாயாருடன் இருந்து அருள்பாலித்து வந்த சந்தோஷத்தால், மலையில் சனிக்கிழமை அன்று தன்னை காண வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதல்களை உடனேயே அருள்கிறார். இதையறிந்து மக்கள் கூட்டம் சனிக்கிழமை அன்று அவர் தரிசனத்துக்கு மலைமேல் திரள்கிறது.

சரி! இங்கு நாம் என்ன வேண்டிக் கொள்ள வேண்டும்?

"ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பக்தர்களுக்கு மட்டும் தான் இந்த பூஜையை பார்க்க முடியும். முன்பதிவு செய்ய வேண்டும்" - அதில் ஒருவராக நான் இருக்கவேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். ஏன் என்றால், அந்த பூஜையை பார்ப்பவர்களுக்கு மட்டும், தீபாராதனை காட்டின விபூதி சிறிதளவு, பிரசாதமாக கொடுக்கப்படும்.

அந்த விபூதி மிகப்பெரிய பொக்கிஷம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................... தொடரும்!

6 comments:

  1. Om sri lobha mudra samedha agasthiar thiruvadigale potri.

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் மூத்தோனே போற்றி. ஓம் ஓதிமலை ஆண்டவர் போற்றி.ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி.
    அய்யா , கோயில்களில் கொடுக்கப்படும் விபூதீயை வீட்டில் உள்ள விபூதியூடன் கலந்து வைக்கலாமா

    ReplyDelete