​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 5 September 2020

சித்தன் அருள் - 903 - ஆலயங்களும் விநோதமும் - லக்ஷ்மி வராஹ நரசிம்ஹர் கோவில், சிம்மாச்சலம், விசாகபட்டணம், ஆந்திர மாநிலம்!


வராக லட்சுமி நரசிம்மா் கோயில் என்பது சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் மாநிலமான ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.

விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல, இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு சிம்மாச்சலம் மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி "வராக நரசிம்மராக" அங்கேயே குடிகொண்டார்.

இக்கோயிலின் தல புராணத்தின்படி தந்தையின் மறைவுக்குப் பிறகு பிரகலாதன் நரசிம்மருக்கு கோயில் கட்டினான். ஆதன்பிறகு, அந்த யுகத்தின் முடிவில் கோயில் கேட்பாரற்று அழியத் தொடங்கி, மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது. அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் தெய்வீக சக்தியால் இந்த இடத்துக்கு வந்து அந்தச் சிலையைக் கண்டெடுத்து அழிவுற்ற கோயிலை மீண்டும் கட்டினான். அந்த நேரத்தில் ஒலித்த அசரிரீயானது, அந்த சிலை உருவத்தை காண இயலாமல் சந்தனத்தால் மூடி வைக்கும்படி கூறியது. ஆண்டுக்கு ஒரு முறையே அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அது போலவே இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

மூலவர் சந்தனப் பூச்சுடன் கூடிய சிவலிங்கம் போல காட்சித் தருகிறார். வைகாசி மாதம் சந்தன பூச்சு அகற்றப்பட்டு அவரின் மெய்யான உருவம் வெளிப்படுத்தப்படுகிறது. இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன், இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருவார். இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். கையில் தாமரையுடன் ஆண்டாள், லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன.

சரி! இங்கு நமக்கென என்ன உள்ளது?

வைகாசி மாதம் வளர்பிறை மூன்றாம்நாள் சந்தனகாப்பு, நான்கு மணி நேரம், அபிஷேக பூஜைக்காக அகற்றப்படும். அந்த நேரத்தில், மிக கடுமையான வெப்பம் அவர் சன்னதியிலிருந்து வெளிப்படும். சன்னதியை சுற்றி இருக்கும் கல் சுவர்கள் கூட வியர்வையை வெளிப்படுத்தும். அப்போது அபிஷேகத்துக்கு உள்ளே இருக்கும் பூஜாரி வியர்வையில் குளித்து, எல்லா லோகங்களையும் கண்டு ஒரு வழியாகிவிடுவார். மறுபடியும் சந்தனக்காப்பை பூசி விக்கிரகத்தை அலங்கரித்தபின், அந்த வெப்பம் குறையத்தொடங்கி, சிறிது நேரத்தில் சமன்பாடும்.

"உஷ்ணம் உஷ்னேன சாந்தி" என்ற மருத்துவ மொழிக்கு சான்றாக, அவருக்கு சார்த்திய சந்தானம், மிக சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அந்த சந்தனம், சிறிது பிரசாதமாக கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........................ தொடரும்!

5 comments:

 1. அன்பு வணக்கம் ஐயா. தாங்கள் கூறியவாறு வேண்டி கொண்டோம் ஐயா. நரஷிமார் எனக்கு பிடித்த சாமி ஐயா. ஓம் லட்சுமி வராக மூர்த்தினே நமஹ! குரு அருளால் எல்லாம் நிறைவேற வேணும் ஐயா. மிக்க நன்றி ஐயா, அம்மா. ஓம் லூபாமுத்ரா அம்மா சமேத அகத்தியர் அப்பா போற்றி!போற்றி!.

  ReplyDelete
 2. Ok sir. We will pray for the sandal prasadham. Om lobamudhra thayar samedha agasthiyar thiruvadigale potri.

  ReplyDelete

 3. வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
  தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்
  ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
  தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்🙏🙏🙏

  தன்னை அனுதினமும் வணங்கி வரும் பக்தர்களுக்கு அவர்கள் துயரம் தீர ஸ்ரீநரசிம்மர் என்றும் அவர்களை கைவிட்டது இல்லை பெருமாளின் அவதாரத்தில் நரசிம்மாவதாரம் மிக விசேஷமானது முதலையின் வாயில் அடைபட்ட யானையின் துயரத்தை நீக்க கஜேந்திர மோட்சம் அருளிய வேகத்தைவிட நரசிம்மரின் அருள் மிக வேகமானது பக்தனின் துயரக் குரல் கேட்டு நொடியில் நொடிக்கு நொடியில் அதிவேகமாக எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஸ்ரீநரசிம்மர் காண்பதற்கு உக்கிர கோலத்தில் இருந்தாலும் கருணையே வடிவானவர் லட்சுமி தாயாரை மடியில் அமர்த்தி அருளும் கோலம் மிக விசேஷமானது பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருள்வதில் அவர் ஒரு வரப்பிரசாதி எனக்கு ஒரு முறை அகோபிலத்தில் அகோபிலம் 8 நரசிம்மர் சன்னதி களை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது ஒன்பதாவது நரசிம்மர் மிகவும் மலை உச்சியிலேயே காட்டுப் பகுதியிலே இருக்கிறார் அவரை தரிசிப்பது மிக கடினமான ஒன்று காட்டு விலங்குகள் பாதை இல்லாதது திடீரென கொட்டும் மழை என மிகக் கடினமான ஒன்று நரசிம்மர் ஜுவாலாமுகி நரசிம்மராக கருணையே வடிவாக காட்சி அளிக்கும் தரிசனம் காண பெற்று அவர் பிறந்து வந்த தூண் இன்றும் இருக்கிறது ரத்த குண்டம் தீர்த்தம் உக்ர ஸ்தம்பம் தரிசனம் கிடைக்கப்பெற்று அவர்கள் அருள் கடாட்சம் இருந்தால் சிம்மாசலம் நரசிம்மர் தரிசனம் பாக்கியமும் கிடைக்கும் காத்திருக்கிறோம் பல அறியாத திருக்கோயில்கள் சிறப்புகளைப் பற்றி எங்களுக்கு வழங்கும் திரு அக்னிலிங்கம் அருணாசலம் ஐயா மிக்க நன்றி உங்கள் சேவை மிக மகத்தான சேவை இன்று ஆசிரியர் தினம் எங்களுக்கெல்லாம் ஆன்மீக ஆசிரியராக இருந்து ஆன்மீக பாடம் எங்களுக்குள்ளே விதைக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமக🙏🙏🙏

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete