​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 4 September 2020

சித்தன் அருள் - 902 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், குருவாயூர், திருசிவப்பேரூர், கேரள மாநிலம்!


இறைவன் கிருஷ்ணரின் சுவர்க்க ஆரோஹணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க (வைகுண்டத்திற்கு செல்வது), அவரது முதன்மை பக்தரான உத்தவர் அவரை மனதில் நினைத்து, உருகி மிகவும் வருத்தம் அடைந்தார். அப்பொழுது இறைவனும் அவரைப்பார்த்து இரங்கி உத்தவரிடம் இந்த விக்ரஹத்தை அளித்ததோடு மட்டும் அல்லாமல், தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிரஹஸ்பதியிடம் இந்த விக்ரஹத்தை ஒரு நல்ல இடத்தில் பிரதிஷ்டை செய்யும் படி உத்தரவிட்டார். உத்தவர் அவருடைய மறைவிற்குப் பிறகு கலி யுகத்தில் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அதற்கு இறைவன் அவரே இந்த விகரஹத்தில் உறையப்போவதாகவும், மேலும் அவரிடம் தஞ்சம் புகும் பக்தர்களுக்கு அவர் ஆசிகள் வழங்கி அனுக்கிரஹிக்கப் போவதாகவும் சொல்லி உத்தவரை சமாதானப்படுத்தினார்.

துவாரகையைத் தாக்கிய ஒரு பெரிய பிரளயத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த விக்ரஹத்தை குரு அவருடைய முதன்மை சிஷ்யனான வாயுவின் உதவியுடன் மீட்டெடுத்தார். குரு மற்றும் வாயு ஒரு நல்ல இடத்தை தேடி உலகெங்கும் சுற்றி அலைந்தார்கள். இறுதியில் அவர்கள் பாலக்காடை அடைந்தார்கள்.  அங்கே அவர்கள் பரசுராமரை சந்தித்தார்கள், பரசுராமர் அவர்கள் கொண்டுவந்த விக்ரஹத்தை தேடிக்கொண்டு த்வாரகாவிற்கு செல்வதாக இருந்தார். பரசுராமர் குரு மற்றும் வாயு தேவர்களை, மிகவும் அழகான பச்சைப்பசேல் என்று விளங்கும் இடத்திற்கு அழைத்து சென்றார், அங்கே காணப்பட்ட அழகான தாமரை தடாகத்தில் இறைவன் பரமசிவர் வசிப்பது போன்ற உள்ளுணர்வை அவர்கள் அடைந்தார்கள். அங்கே இறைவனான பரமசிவன் தனது மனைவி பார்வதியுடன் அவர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அவர்களை வரவேற்று அந்த விக்ரஹத்தை ஸ்தாபனம் செய்வதற்கு அதுவே உகந்த இடமாகும் என்பதையும் தெரிவித்தார். பரமசிவர் குரு மற்றும் வாயு தேவர்களை அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான சடங்குகளை தொடங்கி நடத்த அனுமதி வழங்கினார். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து விக்ரஹத்தை நிறுவியதால் (அதாவது குருவும் வாயுவும் இணைந்து செயல் புரிந்ததால்) அன்றிலிருந்து அவ்விடம் குருவாயூர் என்ற வழங்கப்படும் என்று ஆசீர்வதித்தார். அதற்குப் பிறகு பரமசிவர் மற்றும் பார்வதி இருவரும் எதிர்க்கரையில் இருந்த மம்மியூருக்கு திரும்பி சென்று விட்டனர்.

சிவபெருமான் அனுமதித்து, தேர்ந்தெடுத்த இடத்தில், குருவாயூரப்பனுக்கு கோவில் கட்டப்பட்டது.

கேரள நாடு பெருமாள் என்ற வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் வந்த பொழுது, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் நிலைமை மேலும் மோசமடைந்தது மற்றும் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. பெருமாள் வம்சத்தவர் மிக்கவாறும் சைவர்கள் ஆவார் மேலும் அதனால் அவர்கள் வைஷ்ணர்களின் கோவில்களில் அத்தனை அக்கறை காட்டவில்லை. அவர்களுடைய காலத்தில் மம்மியூரில் இருந்த சிவன் கோவிலுக்கு அவர்கள் ஆதரவு அளித்தார்கள் மேலும் அப்படி ராஜ பரம்பரையினர் மரபு மாறி செயல் புரிந்ததால், மக்களும் அவ்வழியையே பின்பற்றி, சிவரை ஆராதித்து சிவன் கோவிலுக்கு செல்லத் தொடங்கினார்கள். இப்படியாக குருவாயூர் கோவில் மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டது மேலும் கோவிலில் ஒரு விளக்கைக்கூட எரிய வைக்க முடியாத நிலைமை ஆட்கொண்டது. இப்படி இருக்கையில் ஒரு நாள், ஒரு பெரியவர் மம்மியூர் கோவிலுக்கு சென்று உணவும் இரவில் தங்க இடமும் அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். அந்நேரம் கோவில் நல்ல நிலைமையில் இருந்தாலும், அந்த கோவிலை பராமரித்தவர்கள் ஒன்றுமே இல்லாதது போல பாவனை செய்தார்கள் மேலும் கோபத்துடன் அவரை அருகாமையில் உள்ள குருவாயூர் கோவிலில் சென்று வசதிகளை பெற்றுக்கொள்ளும் படி இகழ்ந்து அவரை அங்கு அனுப்பினார்கள், அந்தக்கோவிலின் அப்போதைய நிலைமையை நன்றாக உணர்ந்துகொண்டே அவர்கள் அப்படி செய்தார்கள்.

அந்தப் பெரியவர் குருவாயூர் கோவிலின் வாயிலுக்கு வந்த உடன், ஒரு பிராம்மண சிறுவன் அவரை உடனுக்குடன் ஆதரித்து வரவேற்றான் மேலும் நன்றாகவே உணவு படைத்து அவருடைய விருப்பங்களை நிறைவேற்றினார்.

அந்தப்பெரியவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு ஆசீர்வதித்தார். "நான் இங்கு மம்மியூர் கோவிலில் இருந்து வந்தேன், ஏன் என்றால் அங்கே அவர்கள் ஒன்றுமே இல்லை என்று சொன்னதனால்" என்று அவர் கூறினார்.

"மேலும் அவர்கள் இங்கே எல்லாமே நிறைய கிடைக்கும் என்றும் சொன்னார்கள். சரி, இன்று முதல் அது இங்கே அப்படியே ஆகக் கடவது!" என்றுரைத்தார். 

அந்த நாள் முதல், மம்மியூர் சிவர் கோவிலின் நிலைமை குறைய தொடங்கியது, மேலும் குருவாயூர் விஷ்ணு கோவிலின் புகழ் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து பரவத்தொடங்கியது

இந்த கோவிலில், இன்றும் இறைவன் அமர்ந்து, வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதினுடன், அடியவர்கள் புரிந்து கொண்டு ஆச்சரியப்படுகிற அளவுக்கு, ஒவ்வொரு நிமிடமும் திருவிளையாடல்களை நடத்தி வருகிறார்.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது?

குருவாயூரப்பனுக்கு சார்த்திய சந்தனத்தை கடுகளவு பிரசாதமாக கொடுப்பார்கள். அது ஒரு அற்புத மருந்து; ஏன் என்றால், தேவேந்திரன் பரிசளித்த சந்தானம் அரைக்கும் கல்லில் தினமும் தயாரிக்கப்படுகிறது.

குருவாயூரப்பனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம் என 365 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. நாம் பார்க்கும் அலங்காரத்தை மறுபடியும் 364 நாட்களுக்கு பிறகுதான் பார்க்கமுடியும்.

சித்தன் அருள் வலைப்பூவில் உள்ளது மோகினி அலங்காரம்.

ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....................... தொடரும்!

4 comments:

 1. ஓம் அருள்மிகு மூத்தோனே நம்
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை
  ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரை தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 2. Om sri agasthia peruman thiruvadigale potri.

  ReplyDelete
 3. ஓம் நமோ நாராயணா

  பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்தா மாதவா ஜனார்த்தனா சக்கரபாணி பொற்பாதம் பணிகின்றோம்🙏🙏🙏🙏 குருவாயுரப்பா போற்றி போற்றி நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம்.

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete