​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 9 September 2020

சித்தன் அருள் - 907 - ஆலயங்களும் விநோதமும் - மீனாக்ஷி அம்மன் கோவில், மதுரை!


மீனாக்ஷி அம்மனின் விக்கிரகம், மரகதப் பச்சைக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும். இந்தக் கருவறை விமானத்தை, தேவேந்திரன் அமைத்தான்.  மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட் கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள். 

இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும். இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிஷேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

இந்த ஆலயத்தில் முக்கியமானது என, எதை குறிப்பிட்டு கூற முடியும்? அனைத்து விஷயங்களும் அற்புதமானவை.

இருப்பினும், அதிகம் வெளிவராத விஷயங்களாக;சொக்கநாதர் சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் இருக்கும் ஆகாச லிங்கம். தியானத்திற்கு மிக அருமையான இடம். மிகுந்த அமைதியாக இருக்கும். என்ன சொல்லி த்யானம் செய்கிறோமோ, அதன் அர்த்தத்தை உடனேயே விளக்குவார்.

உள் பிரகாரத்தில், சொக்கநாதர் சன்னதிக்கு இடதுபுறத்தில், சுந்தரனார் சித்தர் சன்னதியும், இவருக்கு பின்னால் உள்ளே மேடை போன்ற இடத்தில் அமைந்திருக்கும் பிக்ஷாடனர் சன்னதியும் மிக சக்தி வாய்ந்த இடங்கள்.

சுந்தரனார் சித்தர் சன்னதியில் பிரார்த்தனையை சமர்ப்பித்தபின், "ஓம் நமசிவாய" என்று ஜபம் செய்தபடி, 11 முறை ப்ரதக்ஷிணம் செய்த உடன், நம் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும்.

பிக்ஷாடனர் சன்னதியில் பிரார்த்தனையுடன் அவரது கையிலிருக்கும் திருவோட்டில், நம் கையிலிருக்கும் காசை வைத்தால், பொருளாதார பிரச்சினைகள், உடன் விலகும்!

எப்பொழுதும் சித்தர்கள் நடமாட்டமும், ஆதிக்கமும் உள்ள கோவிலாக உள்ளதால், கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒன்றி இருந்தால், நல்ல காட்சியும், அனுபவமும், ஒவ்வொருவருக்கும் கிடைப்பது உறுதி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ................. தொடரும்!

15 comments:

  1. ஐயா அன்பு வணக்கங்கள். ஐயா படிக்கும் பொழுது அம்மா சன்னதியில் அமர்ந்தந்ததும், சித்தர் அருள் பெற்றதும் அங்கேயே கொண்டு விட்டது ஐயா. கோயிலில் இவ்வளவும் தெய்வீக விஷயங்களா என்று மலைக்க வைக்கிறது. ஐயா ஆதித்ய இருதய பாடல் எப்போதெல்லாம் படிக்கலாம் ஐயா. ஓம் மீனாக்ஷி அம்மா, சொக்கநாதர் அப்பாபோற்றி! வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஆதித்ய ஹ்ருதயம் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த மந்திரத்தை ஜபம் செய்து, அகத்தியப்பெருமானுக்கு குரு தட்சிணையாக கொடுக்கலாம். இதுவும் அவர் வாக்கு.

      Delete
    2. ஐயா மிக்க நன்றி. பாடல் சொல்லுபொது ஒலி பிழை ஏற்பட்டாலும்பரவாயில்லையா ஐயா. பாட பாட தெரிந்து கொள்கிறோம்லு ஐயா. தமிழில் பாடினாலும் அதே பலன் உண்டுங்களா ? ஐயா. ராம் ராம்.

      Delete
    3. பாடலாகவோ, மந்திரமாகவோ சொல்லலாம். உச்சரிப்பில் தவறிருந்தாலும் அவர் ஏற்றுக்கொள்வார். எந்த மனநிலையுடன் ஜபம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்!

      Delete
    4. Sir can I chant it in tamil
      I can not understand Sanskrit

      Delete
  2. Alayaangalum vinothamum migaum arputam.om Sri lopamudra samata agastiyar thiruvadi saranam,

    ReplyDelete
  3. ஐயா தங்களுக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏... அன்னை பற்றி படிக்கும் போது அங்கு சென்று வந்த ஒரு உணர்வு ஐயா

    ReplyDelete
  4. அய்யா வணக்கம் , ஓதிமலை ஆண்டவர்க்கு பூசை நடக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமையா அல்லது திங்கட்கிழமை அன்றா.

    ReplyDelete
  5. அகத்தீசாய நம

    ReplyDelete
  6. ஐயா, இந்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி மீனாட்சியம்மன் கோவில் சென்றிருந்தேன். பிக்ஷாடனர் சன்னதியிலும் காசு வைத்தேன். மிக மகிழ்வாக உள்ளது. எல்லாம் வல்ல சித்தர் பற்றி கூறவும் ஐயா. மிக்க மிக்க நன்றி 🙏

    ReplyDelete
  7. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,

    மீனாக்ஷியம்மன் கோவிலில் ''எல்லாம் வல்ல சித்தர்'' / "வல்லப சித்தர்'' தான் சுந்தரானந்தர் சந்நிதியா என்று தயை கூர்ந்து தெளிவு படுத்த வேண்டுகிறேன். இவரை பற்றி தாங்கள் தனியாக ஒரு "series" ஆரம்பிக்க வேண்டும்.

    காஞ்சி மஹாபெரியவா ஒரு முறை தான் ''எல்லாம் வல்ல சித்தர்'' / "வல்லப சித்தர்" அம்சம் என்று தன் வைணவ பக்தரிடம் கூறியுள்ளார். அந்த பக்தரின் youtube வீடியோ லிங்க் இங்கே கொடுக்கிறேன். வீடியோவில் 15.00 நிமிடங்களிலுருந்து பார்க்கவும்.
    https://youtu.be/vt9uYlj_vkI?t=900s

    சித்தர்களுக்க்கு ஜாதி மதம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.. ஈசன் அருள் ஒன்றே அவர்கள் மூச்சு.

    எல்லாம் வல்ல சித்தர் போற்றி
    மஹாபெரியவா சரணம்
    ஓம் அம் அகத்தீசாய நமஹ
    ஓம் ஈஸ்வராய நமஹ

    பி.கு - ஈசனுக்கு நிகரானவர் அகத்தீசன், அவர் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார், ஈசன் எந்த ஒரு முக்கியமான முடிவையும் அகத்தீசரை ஆலோசிக்காமல் எடுப்பது இல்லை, ஆனால் அகத்தீசர் தன்னை முன்னிறுத்தி கொள்ளாமல் ஈச தொண்டு ஆற்றுகின்றார் என்று வால்மீகி மகரிஷி "ஆத்மாவின் சுய சரிதம் - ஒரு கலியுக காவியம்" என்னும் புத்தகத்தில் கூறியுள்ளார்.

    ஆதலால்,
    அசைவத்தை தொலைத்திடுங்கள், சிவத்தை பிடித்திடுங்கள்;
    ஆணவத்தை ஒழிக்க அன்பை பண்பை பணிவை பெருக்க - அகத்தியர் நமக்கு அருளாசி வழங்கிடுவார்.
    சித்தர் யுகம் தொடங்கி விட்டது. இனி எல்லாம் நம் மனதிலும் நடத்தையிலும் உள்ளது.

    ReplyDelete