​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 20 September 2020

சித்தன் அருள் - 918 - ஆலயங்களும் விநோதமும் - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா!


அகத்தியப்பெருமான் தென்புலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த நேரம். கிரௌஞ்சன் என்கிற அரக்கன், மலை உருவெடுத்து இருந்து, அங்கு தவமியற்ற வரும் சாதுக்களையும், சன்யாசிகளையும், கொன்று வந்தான். 

இதை அறிந்த அகத்தியப்பெருமான், "மலையுருவெடுத்த நீ மலையாகவே இருக்கக்கடவது! என் அப்பன் முருகப்பெருமான் வேல் கொண்டு உன்னை அழிப்பார்!" என சபித்தார். மலையாக உருவெடுத்த அரக்கன், மலையாகவே இறுகிப்போனான்.

எங்கும் முன் போல் போய் அசுர புத்தியை காட்ட முடியாமல் போகவே, மலையாகவே இருந்து, தன்னை தேடி வந்த அசுரர்களுக்கு, மலைக்குள்ளேயே ஒளிவதற்கு இடம் கொடுத்து வந்தான்.

தாரகாசுரனுடன் யுத்தம் செய்த பொழுது, அசுரர்களுக்கு கிரௌஞ்ச மலை அடைக்கலம் கொடுப்பதை அறிந்து, தன் வேலினால் மலையை இரண்டாக பிளந்து, கிரௌஞ்சனையும், அசுரர்களையும் முருகர், வதம் செய்தார்.

ராமாயணம், மஹாபாரதம், ஸ்கந்த புராணம், போன்ற புராண இதிகாசங்களில், கிரௌஞ்சகிரி பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த மலையில் அம்பாளுக்கும், முருகப்பெருமானுக்கும் (குமாரசுவாமி) தனித்தனி கோவில்கள் உள்ளது. இங்கு இருக்கும் விநாயகப்பெருமான் மிக பிரசித்தம். அத்தனை சக்தி வாய்ந்தவர்.

700 - 800ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட கோவில். முருகர் ஒரு 15 அடி உயரத்தில் இருப்பார். அம்பாளுக்கும், குமாரஸ்வாமிக்கும் தனித்தனி சன்னதி! இங்கு எல்லாமே, நம் எண்ணத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

சூரபத்மனை நம்முள் இருக்கும் அகங்காரமாகவும், கிரௌஞ்சனை நம் கர்மாவாகவும் விவரித்து, முருகப்பெருமான் கையிலிருக்கும் வேலை "ஞான சக்தியாகவும்" திருப்புகழ் விவரிக்கின்றது. முருகனன்றி வேறொருவரும், நம் கர்மாவை அழித்து, பிறவிப்பெருங்கடலை தாண்டிட உதவிடார் என உரைக்கின்றது.

சரி! இங்கு நமெக்கென உள்ளது!

அம்பாள் சன்னதியில், முருகர், எனக்கு வேண்டாம் என கக்கிய தாய்ப்பால், கட்டியாக வைத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் போய் பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம்! சிறுது உண்டு பார்த்தால், முதலில் விபூதி வாசனை வரும், பின்னர் பால் மணம் வரும், நம் நாக்கில்!

மிகுந்த இரைச்சலான நகர வாழ்க்கையில் வசிப்போர், ஒரு முறை இங்கு சென்று வர வேண்டும். நம் குருநாதர், அகத்தியப்பெருமான் சொல்கிற, மிக, மிக அமைதி என்ன என்பதை, அப்பொழுது உணரலாம். இயற்கையின் அமைதி நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்! 

11 comments:

 1. ஓம் ஓதியப்பர் சரணம்🙏
  ஓம் அகத்திய பெருமான் சரணம்
  சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 2. Om lobha mudra thayar samedha agasthia peruman thiruvadigale potri

  ReplyDelete
 3. Ayya, krounja malai engu ulladhu? Endha route? Nearby place ?

  ReplyDelete
 4. Ayya, krounja malai engu ulladhu? Endha route? Nearby place ?

  ReplyDelete
  Replies
  1. குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா!

   From Hospet Railway Station, it is 23 Kms.

   Delete
 5. ஓம் ஸ்ரீ மாதா லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்

  ReplyDelete
 6. ஐயா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகத்திய பெருமானின் திருவருளால் தங்கள் வழி எனக்கு அந்த பிரசாதம் கிடைத்தது. மிக்க மிக்க நன்றி ஐயா. இந்த சன்னிதிக்கு சென்று வர மனம் ஏங்குகிறது. விரைவில் நடைபெறும் என மனமார நம்புகிறேன். 🙏

  ReplyDelete
 7. அய்யா, இந்த வருடம் கோடகநல்லூர் வழிபாடு பற்றி கூறவும். நன்றி !

  ReplyDelete
 8. ஓம் நம குமாராய 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏

  ReplyDelete
 9. Aum Sharavana Bhavaaya Namaha......

  ReplyDelete