இந்த கோவிலில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை, "வைஷ்ணவ கணபதி" என்றழைக்கின்றனர். சைவத்துக்கும், வைஷ்ணவத்துக்கும் ஒரு முடிச்சாக இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு வித்யாசமாக கணபதிப்பெருமான் அமர்ந்த நிலையில், அவரது இடது தொடைமேல் பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக உட்கார்ந்து, அவர் விவரிப்பதை கூர்ந்து கவனிப்பது போலவும், அவரது நான்கு கரங்களில் ஒன்றில் இனிப்பு லட்டுவும், தும்பிக்கையில் நுனியில் "எலுமிச்சை பழமும்" சுமந்தபடி இருப்பார்.
300 ஆண்டுகளுக்கு முன், இந்த விக்கிரகம், வட இந்தியாவிலிருந்து, ஒரு சந்நியாசி இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்துவிட்டு போனதாக வரலாறு.
இங்கு வந்து தரிசனம் பெறுபவர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும், விலகுவதாகவும், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இங்கு நமெக்கென உள்ளது, இறைவன் தரிசனமும், அவர் அருளும்!
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...................தொடரும்!
Om lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.
ReplyDeleteலோபமுத்ர சமேத அக்த்தீசாய நமக
ReplyDeleteஅகத்தீசாய நம
ReplyDeleteஓம் கணேசாய நம🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDeleteAum Ganeshaya Namaha
ReplyDelete