சங்கரநாராயணர், கோமதி அம்மன் கோவில், சங்கரன்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில், மண் (ப்ரித்வி) தன்மைக்கு காரகத்துவம் உள்ள கோவில். இங்கிருக்கும் சிவலிங்கம், சுயம்பு மூர்த்தியாக தோன்றியது. பாம்பு புற்றுக்குள் சிவமே லிங்கவடிவில் இருந்து தன்னை வெளிப்படுத்தியதால், இங்கு புற்று மண் மருந்தாக மாறுகிறது. அனைத்து விஷகடிக்கும் எதிரான சிறந்த மருந்து.
இங்கு இறைவன் இறைவியை தரிசனம் செய்வதால், ஒருவர் ஜாதகத்திலுள்ள "சர்ப்ப தோஷத்திலிருந்து" விடுதலை பெறலாம். விஷ ஜந்துக்களின் படையெடுப்பால், நாம் இருக்கும் வீட்டிலோ, சுற்றத்திலோ பாதிக்கப்பட்டால், இங்கு வந்து அன்னையிடம் வந்து முறையிட்டால், உடனேயே நம்மை காப்பாற்றுவாள்.
கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.
சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது.
பொதுவாக கோவில் கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு காட்சி தருவார். ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார்.
பாம்பாட்டி சித்தரின் சமாதி, இங்கு, கோவிலின் பின்புறத்தில் உள்ளது. சித்தமார்கத்தில், செல்லும் ஒவ்வொருவரும் சென்று, அங்கமர்ந்து, த்யானம் செய்ய வேண்டும். பாம்பாட்டி சித்தர் இறைவனிடம், வேண்டி தன்னை அண்டியவர்களின் மூச்சில் இருக்கும் குறைகளை களைந்து, அவர்களின் மூச்சு பயிற்சிக்கு மிகுந்த உறுதுணை புரிகிறார். மூச்சுக்காற்றின், நீளம், அகலம், வீதி போன்றவற்றை கற்க விரும்பும் யோகா ஆச்சாரியர்கள், கண்டிப்பாக போக வேண்டிய தலங்களில், சங்கரன் கோவில் பாம்பாட்டி சித்தர் சமாதி முதன்மையானது.
சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது?
அந்த புற்றுமண் பிரசாதமாக கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்.அம்பாள் சன்னதிக்கு எதிராக ஒருவர் மட்டும் அமர்கிற அளவுக்கு அலுமினிய கம்பிகளால் தரையில் ஒரு குழியின் மேல் அமைத்திருப்பார்கள். அந்த கம்பி வலைக்கு கீழே ஸ்ரீசக்ரம் பதிக்கப்பட்டிருக்கும். அதன் மீது அமர்ந்து அம்பாளை பார்த்து த்யானித்தபடி அமர்ந்தால், ஒருவருக்கு எத்தனையோ விஷயங்கள் தெரியவரும். ஒரு நிமிடத்தில் அமர்ந்தவரை தியானத்தின் பல நிலைகளை தாண்டி கூட்டிச் செல்லும். அங்கு செல்கிற ஒவ்வொருவரும், கண்டிப்பாக அமர வேண்டிய இடம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.................. தொடரும்!
மிகவும் அற்புதம் நன்றிகள் ஐயா...
ReplyDeleteOm lobha mishra samedha agasthia peruman thiruvadigale potri.
ReplyDeleteஅகத்தீசாய நம 🙏
ReplyDeleteஐயா அந்த இடத்தில் உட்கார அனுமதிப்பார்களா
ReplyDeleteYES! NOONE WILL STOP YOU!
Deleteஐயா அன்பு வணக்கங்கள். ஸ்ரீ சக்கரம் மீது அமர்ந்து தியானம் மிக அற்புதம் ஐயா. இவை அனைத்தும் கிடைக்க குருவும், இறையும் அருளட்டும் ஐயா. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. அனைத்து சித்தர் பெருமக்கள், குருமார்களின் திருவடிகள் போற்றி!போற்றி!
ReplyDeleteAum Lopamudra Sametha Shree Agasthya Perumane Sharanam
ReplyDeleteஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDelete