ராஜராஜேஸ்வர கோயில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கேரளாவின் பிரசித்தி பெற்ற 108 சிவாலயங்களில் ஒன்றாகும். தென் இந்தியாவில் பிற கோயில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரசன்னம் பார்ப்பது வழக்கம். பிரசன்னம், கோயிலின் வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும். இந்துக்கள் அல்லாதவர்கள் இக்கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கம்.
ராமர் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்குச் சென்று போரில் வென்ற பின், இங்கே வந்து சிவனை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாய் இக்கோயிலின் நமஸ்கார மண்டபத்தினுள் இன்றும் யாரையும் அனுமதிப்பதில்லை.
இக்கோயிலில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ராஜராஜேஸ்வரராக இருக்கின்றனர்.
இக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு கோபுரமானது திப்பு சுல்தானால் 18 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கோபுரத்தின் சிதறல்கள் கிழக்கு வாசலில் கிடக்கின்றன. இக்கோபுரத்தை முன்னின்று இடித்தவரை பாம்பு கடித்ததால், அதன் பின் தொடர்ந்து இடிக்கவில்லை என்பது செய்தி.
இக்கோயிலில் மற்ற சிவன் கோயிலைப் போல் வில்வ இலை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக துளசி இலை பயன்படுத்தப்படுகிறது.
சரி! இங்கு நமெக்கென்ன உள்ளது.
இந்த கோவிலில், "நெய் அமிர்து" பிரார்த்தனை மிகுந்த சக்தி வாய்ந்தது. கோவிலில் ஒரு சிறு பாத்திரத்தில், நெய் விட்டு, இலையால் மூடி கொடுப்பார்கள். இதை வாங்கி, இறைவன் முன் வைத்து, நம் பிரார்த்தனையை சமர்ப்பித்தால், அது உடனேயே நிறைவேறும்.
பகல் நேரத்தில் சிவ பெருமான் த்யானத்தில் அமர்ந்திருப்பதால், பெண்கள் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இரவு 8 மணிக்கு பூஜையின் பொழுது, அம்பாள் சிவபெருமானை வந்து சேர்வதாக ஐதீகம். அதற்குப்பின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பெண்களுக்கு தரிசன அனுமதி உண்டு.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..................தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
ReplyDeleteஓம் லோபாமுத்ரா
ReplyDeleteஓம் அகத்தியர் ஐயா
பாதம் சமர்ப்பணம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDeleteAum Nama Shivaya
ReplyDelete