சோற்றானிக்கரையில் பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும். அன்னை பகவதியை இறைவன் திருமாலுடன் இந்தக் கோவிலில் பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆகையினால் எங்கும் பக்தர்கள் அன்னையை "அம்மே நாராயணா!" என்று அழைப்பதை காணலாம். மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள். காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; நண்பகலில் சௌபாக்கியம் தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல வண்ண உடையிலும், காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்.
ஆதிசங்கரர் இந்த வழியாக சென்ற பொழுது, அன்னை, தீப ஜோதியாக தோன்றி அருகில் இருந்த பாறைக்குள் மறைந்ததாகவும், அதை உணர்ந்த ஆதி சங்கரர், அன்னைக்கு இங்கு கோவில் எழுப்பி, பூசை செய்தார். ஆதலினால், இன்றுவரை, இங்கு விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. காலையில் அபிஷேக நேரத்தில் இதை காணலாம். பின்னர் அன்னையின் உருவ கவசம் வைத்து பூசை செய்வார்கள்.
அதர்வணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனம் சம்பந்தமான நோய்களுக்கும், மிக சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
சரி! இங்கு நமெக்கென்ன உள்ளது?
இந்த கோவிலின், கீழ்ப்புறத்தில் உள்ள கீழ்க்காவில் தினமும் இரவு நடைபெறும் "குருதி பூசையை" காணவேண்டும். அதன் பின்னர் அங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதத்தை, வாங்கி, வீட்டில் நிழலில் உலர்த்தி, தினமும் சிறிதளவு உண்டுவந்தால், மேற்கூறிய உடல் பிரச்சினைகள் விலகி, நிம்மதியாக வாழலாம்.
அனைத்து, அதர்வண பிரச்சினைகளையும், துடைத்து சுத்தம் பண்ணி, ஒருவரை நிம்மதியாக வாழ வைக்கும் ஸ்தலம்.
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
thank you sir...very nice infromation
ReplyDeleteஅம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரி நாராயணா 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ReplyDeleteOm lobhamudhra thayar samedha agasthia peruman thiruvadigale potri.
ReplyDeleteஐயா அன்பு வணக்கம். ஒருமுறை டூற்போகும் பொது பகவதி தாய் தரிசனம் காலையில் கிடைத்தது. மேலும் கீழ்ப்பக்கம் சென்ற பொது கூடவந்தவர்கள் அங்கெ செல்லாதீர்கள் அங்கு பேய் ஓட்டுவார்கள் என்றனர். ஆகவே அங்கு கீழ் பக்கம் இரங்கி பார்க்காமல் வந்துவிட்டேன் ஐயா. இவ்வாறு தெரியாமல் சில சமயம் நடந்து விடுகிற து ஐயா . அகத்தியர் அடியார்களுக்கு தாங்கள் அளிக்கும் அத்துணை நன்மையையும் குரு பிரான் அளிக்க வேண்டும் ஐயா. மிக்க நன்றி ஐயா. வாழ்கவளமுடன் ஐயா, அம்மா. அம்மே நாராயணி தாயே அருள்வாய் அம்மா!
ReplyDeleteAmme Narayana...
ReplyDeleteOm Agatthisaya Namaha
ReplyDeleteRaman
ஓம் அகத்தீசாய நம
ReplyDeleteஅகத்தீசாய நம
ReplyDelete