​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 6 September 2020

சித்தன் அருள் - 904 - ஆலயங்களும் விநோதமும் - சுப்பிரமணியர் கோவில், திருச்செந்தூர்!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது.

அறுபடை வீட்டில், முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

ஒவ்வொரு நொடியும் அதிசயமும், ஆச்சரியமும் நடக்குமிடம். அதை உணர்ந்து கொள்ள நமக்குத்தான் பொறுமை வேண்டும்! இவர் கோவிலை சுற்றி சமாதியில் அமர்ந்திருக்கும் பெரியவர்களே இதற்கு சாட்சி.

முன்னொரு காலத்தில், இந்த பகுதி திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஒருநாள், மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடல்கொண்ட கோவிலில் இருந்த தன்னுடைய விக்ரகம், கடல் நீருக்கடியில் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகவும், அதை எடுத்து தற்போதைய கோவில் இருக்குமிடத்தில் வைத்து பூசை செய்யவும், உத்தரவிட்டார். மேலும், அந்த விக்ரகம் இருக்கும் இடத்துக்கு மேல், பூசை செய்த பூக்கள் மிதக்கும் எனவும், நிமிர்ந்து பார்த்தால், கருடர் ஆகாயத்தில் வட்டமிடுவார் எனவும் குறிப்பு கொடுத்துள்ளார்.

மறுநாள், மகாராஜா ஒருசிலரை அழைத்து படகில் சென்று நடுக்கடலில் பார்க்க, அங்கே பூஜை செய்த பூக்கள் மிதந்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் கருடர் பறந்துகொண்டிருந்தார்.

மகாராஜாவின் உத்தரவின் பேரில், கூட வந்தவர்கள் நீரில் குதித்து, கீழே இருந்த முருகர் விக்கிரகத்தை மேலே கொண்டு வந்தனர். அதுவே, திருச்செந்தூர் கோவிலில் "சண்முகர்" சன்னதியை அலங்கரிக்கிறது.

பின்னர் வந்த மாற்றங்களில், திருச்செந்தூர் இன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறிடினும், முருகர் காட்சி கொடுத்து, தன்னை வெளிப்படுத்திய திருவிதாம்கூர் மகாராஜாவை போற்றும் விதமாக, இன்றும், அக்கோவிலின் முதன்மை பூஜாரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட இடத்திலிருந்துதான், நியமிக்கிறார்கள்.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது!

நிறைய சொல்லலாம்! அத்தனை உண்டு. இருப்பினும் மிக உயர்ந்தது என கூறுவதானால், முருகருக்கு அபிஷேகம் செய்த விபூதியை, ஒரு இலையில் வைத்து பிரசாதமாக தருவார்கள். அப்படிப்பட்ட புனிதமான விபூதியைத்தான், முருகர் உவந்து, ஆதி சங்கரருக்கு கொடுத்து, அவரது வயிற்று நோயை குணப்படுத்தினார்.

இந்த விபூதி கிடைக்கவேண்டும், பஞ்சலிங்கம், சண்முகர் தரிசனம் கிடைக்கவேண்டும் என பிரார்த்தித்து கொள்ளுங்கள்.

திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.  

கோபுரத்தில் எங்கோ ஓரிடத்தில் அனுமன் சிலை உள்ளது. எல்லா மாதமும் அனுமார் அங்கு வந்தமர்ந்து, தனது மூல நட்சத்திரத்தன்று, முருகரை கண்டு, ஆரத்தழுவும் நாள்.

திருச்செந்தூர் கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடக்கும் கொடிமர நமஸ்கார பூஜை மிக முக்கியமானது. ஒருவர் மந்திரம் ஓத மற்றவர்கள் அனைவரும் அதை கூறி, கொடிமரத்துக்கு நமஸ்காரம் செய்வார்கள். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பின்னர் கொடிமரத்துக்கு பூஜை, தீபாராதனை நடக்கும். அதற்குப் பின்தான் மூலவர் சுப்ரமண்யருக்கே பூஜை, தீபாராதனை நடைபெறும். அங்கு சென்றால், இதில் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை தவமிருந்து பெறும் பலனை, ஒருநாள், திருச்செந்தூரில் உபவாசம் இருந்து முருகனை தரிசித்தால், எளிதாக பெற்றுவிடலாம் என சூதமா முனிவர் உரைத்துள்ளார்.

திருச்செந்தூரை நினைக்கும் பொழுது, அடியேனுக்கு, நம் குருநாதர் அகத்தியப்பெருமான் ஒருமுறை நாடியில் உரைத்த விஷயம்தான் ஞாபகத்துக்கு வரும்.

"முருகன் கோபப்பட்டால் நல்லது நடக்கும்! ஆனால். முருகன் வருத்தப்பட்டால், என்ன நடக்கும் என, எங்களுக்கே தெரியாது" என்றார்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................... தொடரும்!

6 comments:


 1. Om lobhamudra thayar samedha agasthia peruman thiruvadigale potri.

  ReplyDelete
 2. மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

  தேவர்கள் சேனா பதியே போற்றி!
  குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
  திறமிகு திவ்விய தேகா போற்றி!
  இடும்பா யுதனே இடும்பா போற்றி!

  கடம்பா போற்றி கந்தா போற்றி!
  வெட்சி புனையும் வேலே போற்றி!
  உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
  மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

  சரணம் சரணம் சரவண பவஓம்
  சரணம் சரணம் சண்முகா சரணம்!
  சரணம் சரணம் சண்முகா சரணம்!🙏🙏🙏 ஓம் நம குமாராய ஓம் நம குமாராய ஓம் நம குமாராய 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

  ReplyDelete
 3. மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

  தேவர்கள் சேனா பதியே போற்றி!
  குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
  திறமிகு திவ்விய தேகா போற்றி!
  இடும்பா யுதனே இடும்பா போற்றி!

  கடம்பா போற்றி கந்தா போற்றி!
  வெட்சி புனையும் வேலே போற்றி!
  உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
  மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

  சரணம் சரணம் சரவண பவஓம்
  சரணம் சரணம் சண்முகா சரணம்!
  சரணம் சரணம் சண்முகா சரணம்!🙏🙏🙏 ஓம் நம குமாராய ஓம் நம குமாராய ஓம் நம குமாராய 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. ஐயா தங்கள் பதிவு தெய்வ அருள்... நன்றி ஐயா

  ReplyDelete