25/6/2025 அன்று போகர் மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: பெரிச்சி கோயில் (எ)சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்.கண்டிரமாணிக்கம். சிவகங்கை மாவட்டம்.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!...
கண்டிர மாணிக்கம் (சிவகங்கை மாவட்டம்) நவபாஷாண பைரவர்! இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர். இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை. அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இவருக்கு தீபாராதனை காட்டும் பொழுது, அர்ச்சகர் உள்ளே சூடத்தட்டை விக்கிரகத்தின் பின்னால் கொண்டு காட்ட, அப்படியே பழனி தண்டாயுதபாணியைப் போல் காட்சியளிப்பார் பைரவர். போகர் சித்தர் பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு. இவருக்கு, வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இவர் சன்னதியில் விபூதி மட்டும்தான் பிரசாதம்.
பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பின்புற முகத்தை காண முடியாது பின்புற முகம் இடுப்பில் கை வைத்துக் கொண்டு வேலை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் முருகனின் ரூபம் தீப ஆராதனையின் போது தெரியும்.
இந்த ஆலயம் காகபுஜண்டர் மகரிஷியால் மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு அதை கண்டுபிடித்து செல்லச் சொல்லி அதன் பிறகு கண்டுபிடித்து அங்கு சென்று வந்து அதை திரு அக்னி லிங்கம் ஐயா அவர்களுக்கும் சொல்லி அவர்களும் இந்த ஆலயத்திற்கு சென்று உணர்ந்து வந்த நிகழ்வு
2023 ஆம் ஆண்டு சித்தன் அருள் 1447... கண்டிரமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் கோயில் நவபாஷண பைரவர் என்ற தலைப்பில் பதிவு வெளிவந்துள்ளது.
ஆலயத்தைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள இந்த பதிவை அனைவரும் படித்து தெரிந்து கொள்வது அவசியம். நன்றி.
போகர் மகரிஷி வாக்கு!
அழகாக குழந்தாய்!!
அறிவாய் குழந்தாய்!!
அறிவாய் குழந்தாய்!!
அன்பு குழந்தாய்!!!
வணங்கி வேண்டுகின்றேனே மக்களுக்கு.. ஆசி!! தர!! வா முருகா!!
போகனே!!! அழைக்கின்றேன் வருக அறிந்தும்..அருள் புரிக !!
போகன் அழைக்கின்றானே!!
முருகா!! முருகா!!
அன்பென்றும் உள் சென்றும் முருகா!!
நினைத்தாலும் நினைவேற்றும் முருகா
வயிரவா முருகா முருகா
அன்பென்று ஒன்றுமே நிறைந்த போதும் என்றும் மனம் பின் தில்லை தன்னில் அறிந்தும்.. கூட பின் பட்டளாத்தில் கூட அசைந்தாடும் முருகா!!
மயிலாடும் முருகா!!
மயிலோடு வந்து பின் அனைவரையும் காப்பாற்ற வருவாயே முருகா!!!
வயிரவா முருகா
அன்பென்று நிச்சயம்
ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து அறிந்தும் கூட
பிள்ளையோனும் நீயும் கூட சனீஸ்வரனோடு ஓடியும் கூட...
இவையென்று அன்றி ஒன்றும் இல்லையே
அனைத்தும் நீயே முருகா!!!
அன்றன்றும் கூட எங்கெங்கு பின் செல்லச் சொன்னாயே முருகா!!!
அங்கங்கு பின் சென்றேனே முருகா
அயலோடு பின் காத்தேனே மக்களை முருகா
இங்கு பின் வந்தோர்கள் எல்லாம் பின் வினை தீர்த்து போகின்றனர்....
கலியுகத்தில் பின் வர இயலாத சூழ்நிலைகள் தன் பின் பாவ கணக்கை முடிக்காத வரையில்.. வர முடியவில்லையே முருகா!!!
வைரவனோடு பின் புகுந்து பின் காணப்படுவதில் கூட பின் அறிந்தும் என்றென்றும் தீர திக்கற்று பின் அறிந்தும் பின் மனிதனுக்கு அனைத்தும் வழங்கிடும் முருகா
முருகா முருகா அனைத்தும் நீயே முருகா!!!
வினைகளோடு பின்னிப்பிணைந்த.. பின் அதிலிருந்து ஒவ்வொன்றாக அறிந்து அறிந்து பின் அவையென்று பின் நிச்சயம் பின் எதை என்றும் கூட பின்.. அகற்றிடும் முருகா!!!
பஞ்சை போல் பின் பறந்து பறந்து பின் கர்ம வினைகளை நிச்சயம் தன்னில் கூட
உன் அவதாரமே முருகா!!!
ஈசனின் அவதாரமே முருகா
சித்தர்களின் அவதாரமே முருகா
அவதாரமே முருகா
வயிரவா முருகா!!!
எவ்? எவ்? ஞானத்தில் பின் மனிதனை பின்... அக்காலத்தில் பின் எப்படி என்று நீயே எனக்கு எடுத்துக்கூறி அப்படியே... அமை !! அங்கங்கு என்று!! சென்றிட்டு வா.. என்று சொன்னாயே!!!
பல வழிகளில் கூட நன்மைகள் கூட நிச்சயம் வந்து வந்து அறிந்தும் கூட இங்கு நின்று பின் பல ரகசியங்கள் பின் அடைந்து கிடக்கின்றதே!!!
இங்கெல்லாம் வழி விடும் வயிரவா... முருகா !! மக்களை பின் காப்பாற்று நிச்சயம் தன்னில்...
அழைத்திடுவேனே யானே!!!
அழைத்து வந்ததும் நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் நன்றாக ஆயிட்டு பின் வாழ்கின்றார்களே முருகா !!
அனைத்தும் பின்னிப்பிணைந்து அனைத்தும் கூட ஒன்றாக சேர்த்து பின் எனை ஆக்கு. (சிலையாக உருவாக்கு) என்று கூறிட்டாயே!!
அனைத்தும் ஒன்றென்று நிச்சயம் பின் ராகுவும் கேதுவும் கூட சனீஸ்வரனும் அறிந்தும் அறிந்தும் பின் நவ கிரகங்களையும் கூட ஒன்றாக்கி பின் இறைவனை செய்தேனே வைரவனை செய்தேனே!!!
ஆனாலும் பின் சக்திகள் பின் புண்ணியங்கள் பின் அதிகமாக இருந்தாலே பின் நிச்சயம் தன்னில் கூட இங்குதான் வரவழைக்கும் பின் முருகா அழகான முருகா!!!! குழந்தையே முருகா!!
இதனை தன் பின் பன் மக்களுக்கு நிச்சயம் பின் கலியுகத்தில் பின் பிரச்சனைகளோடு வாழும் பிரச்சனைகள் கூட நிறைந்த உலகத்தில் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட கலியுகத்தில் பின் முற்றிற்ற காலத்தில் இங்கு வருவார்களே என்று சொன்னாயே முருகா!!!!
நிச்சயம் பின் கலியுகத்தில் பின் முற்றுவதற்கு தன்னில் சென்று கொண்டிருக்கும் போது கூட !!
அழை!! முருகா!!
அழை முருகா!!!
நிச்சயம் தன்னில் அங்கங்கும் இன்னும் புதைந்து காணப்படுகின்றதே!!! நிச்சயம் தன்னில் கூட!!
(போகர் உருவாக்கிய பாஷன முருகன் சிலைகள் ரகசியமாக பல இடங்களில் உள்ளது)
நீ அதை பின் அறிந்தும் அறிந்தும் கூட எப்பொழுது பின் போகனே !!பின் வெளிக்காட்டு!!!!
நிச்சயம் தன்னில் கூட என்று சொன்னாலே!!!!
அதை தன் மக்களுக்கு வெளி காட்டி பாவத்தை யானே பின் போக்குவேனே போக்குவேனே!! உன் அருளாலே!!! முருகா!!
சிந்தையில் முருகா இதயத்தில் முருகா வயிறினில் முருகா அனைத்திலும் முருகா
மூளையிலும் முருகா!!
கண்களிலும் முருகா அணைத்து ஆளும் முருகா ஒன்றாக தரிசித்தாலே போதுமே!!!
குரு அருளும் கூடுமே!!!
மங்கலத்தில் !!!
(பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி)
அதாவது அறிந்தும் கூட பின் இங்கு என்று நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அறிவில்லாதவராக வலம் வருகின்றார்களே!!!
பிள்ளையோன் (பிள்ளையார்பட்டி)
அன்னையாக(பட்டமங்கலத்தில் பார்வதி தேவி காளியாக தேவி தரிசனம்)
இதை...
(தசா பாசன காலபைரவர் பெரிச்சி கோயில்)
பின் மூன்றையும் தரிசித்தால் பின் வெற்றிகள் பெறுவார்களே மனிதர்கள் வெற்றிகளை பெறுவார்களே!!!
கலியுகத்தில் வழிவிடு!! முருகா!!!
வயிரவா!! வயிரவா!!
வயிரவா முருகா!!!
(போகப் பெருமான் இங்கு குறிப்பிடுவது இந்த கால பைரவர் ஆலயத்தை மட்டும் தரிசனம் செய்யக்கூடாது
மூன்று ஆலயங்கள் அதாவது
முதலில் பிள்ளையார்பட்டி.. பிள்ளையார் தரிசனம்.
அடுத்துப் போகர் பெருமான் குறிப்பிடும் மங்கலம் ஆலயம்..
இதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பட்டமங்கலம்.
குரு ஸ்தலமாக இருக்கும் மற்றும் கார்த்திகை பெண்கள் வணங்கிய தலம் .
அங்கு இருக்கும் ஈசன் தக்ஷிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் அருள்பாலிக்கின்றார்.
பார்வதி தேவியார்.. சௌந்தரி அம்மன் நவ்வலடி காளி.. மீனாட்சி தேவியாக இருக்கின்றார். கார்த்திகை பெண்களுக்கும் இந்து தனி சன்னதிகள் உண்டு.
இங்கு அன்னையை தரிசனம் செய்துவிட்டு
அடுத்து இந்த தசா பாஷன முருகன் சூட்சமமாக மறைந்திருக்கும் காலபைரவர் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த மூன்று கோயில்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் பேச வேண்டும். இது மக்களுக்கு இந்த ரகசியம் தெரியாது இந்த மூன்று கோயில்களையும் தரிசனம் செய்தால் சுற்றி வந்தால் வெற்றிகள் கிடைக்கும்.
இந்த மூன்று கோயில்களும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுற்றிவரும் ஒரே நாளில் சுற்றி வரும் தூரத்தில் உள்ளது.)
கலியுகத்தில் மக்களை பின் நிச்சயம் தன்னில் கர்மத்தை நீக்க பின் வழி விடு முருகா!!!
வழிவிடு!! முருகா!!
எப்பொழுதோ பின் சொன்னாயே!!
உன் கட்டளையை ஏற்று யான் அழகாக செய்து முடித்திட்டேனே!!!
நிச்சயம் சில காலங்கள் வழிபட்டு பின் கஷ்டங்களோடு இங்கு வருவார்கள் அப்பொழுது பின் அனைத்தும் பின் தீர்த்திடும் முருகா!!!
வருகின்ற காலத்தில் அனைவருமே பின் ஓடோடி வருவார்களே முருகா!!!
இங்கு ஞானத்தை காண ஓடோடி வருவார்களே!! முருகா!!
நிச்சயம் தன்னில் பின் (சிலையை) செய்திட்டு எனையே.. மறைத்திடு என்று சொன்னாயே!!!
அவ் மந்திரத்தை கூட வரும் காலத்தில் யான் பெற்றுக் கொள்கின்றேனே!!!
நீதான் அதற்கும் அருள் புரிய வேண்டும் முருகா..
கந்தா முருகா கதிர் வேலவனே காத்திடு மக்களை!!!
அதற்குத்தான் பின் உன் நினைவும் ஆகி நின்ற பொழுதிலும் வள்ளி தெய்வயானையோடு வந்து நின்று உத்தரவு கொடு!!முருகா!!
உத்தரவு கொடு!! முருகா!!
அறிந்தும் அறிந்தும் என் செல்லப் பிள்ளையாகவே நிச்சயம் பின் அதனின்றும் கூட வழிவிடு !!!முருகா!!!
மக்கள் உன்னை தேடி வரட்டுமே முருகா !!
போக்கிடு முருகா நிச்சயம் தன்னில் கூட ஆடி திங்களில் (மாதத்தில்) கூட!!
பின் நிச்சயம் தன்னில் யான் என் மனம் உருகி கேட்கின்றேனே முருகா!! அதன் பிறகு மனிதனுக்கு வழிவிடு முருகா
இன்னும் பல பல திருத்தலத்தில் யான் அழகாக செய்திருக்கின்றேனே
கலியுகத்தில் அங்கு வந்து வந்து பின்.. தீமையை பின் நன்மையாக்கி செல்வார்களே மனிதர்கள் என்று தானே நீ சொன்னாயே முருகா!!
நீ சொன்னாயே முருகா!!
இப்பொழுது கூட அறிந்தும் கூட பின் கலியுகத்தில் பல பல இன்னல்களோடு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் பின் அழைப்பாயே!! முருகா!!
உன்னிடத்தில் அழைப்பாயே முருகா!!
என்றும் கூட அறிந்து அறிந்தும் இத்திருத்தலங்களில் முப்பெரும்
திருத்தலங்களில்.. ஒன்றாக வழிபட்டு வழிபட்டு!!!
செல்வோருக்கு ஒரு குறையும் இல்லையே!!
(மேற்கூறிய மூன்று திருத்தலங்கள்)
எம்முடைய ஆசிகளோடு நிச்சயம் தன்னில் பின் நீதானே கூறினாயே முருகா!!!
போகனே உன்னிடத்தில் கலியுகத்தில் வருவார்கள் என்று சொன்னாயே முருகா!!
நிச்சயம் யான் தயாராகவே இருக்கின்றேன் மனித குலத்தை காக்க!!!
அதனின்றும் நிச்சயம் தன்னில்.. நீ தான் கூட சாவி கொடுத்திடு!! முருகா!!
என்னிடத்தில் சாவி கொடுத்திடு முருகா!!
அறிந்தும் கூட இன்னும் கூட இங்கு கூட வரவில்லையென்றால் மக்கள் இன்னும் கூட அறிந்தும் உண்மையில் பிரச்சனைக்குள் உள் சென்று பின் அழுவார்களே முருகா!!
அழுவார்களே முருகா!!
(போகர் பெருமான் இந்த ரகசியத்தை நம் அனைவரிடமும் கூறிவிட்டார் முருகப்பெருமானின் அனுமதியோடு இதை தெரிந்து கொண்டு இங்கு வரவில்லை என்றால் வந்து தரிசனம் செய்ய வில்லை என்றால் இந்த மூன்று கோயில்களையும் முறையாக வழிபாடு செய்யவில்லை என்றால் மக்கள் மேலும் பல பிரச்சனைகளை சந்தித்து மேலும் அழுவார்கள் என்று கூறி இருக்கின்றார்.
இந்தக் கருத்தினை வைத்து சமீபத்தில் குருநாத அகத்தியர் பெருமான் தனிநபர்களுக்கு வாக்குகள் உரைத்த பொழுது
என்னிடம் வாக்கு கேட்கும் மைந்தர்களுக்கு யான் கூறும் ஆலயங்கள் மற்றும் பரிகாரங்கள் முறையாக செய்து வர வேண்டும் அப்படி சித்தர்கள் சொல்லி செய்யவில்லை என்றால் அதுவும் பாவமாகிவிடும் கர்மா கணக்காகி விடும் என்று சொல்லி இருக்கின்றார்...
எங்களின் அதாவது சித்தர்களின் வாக்குகள் கிடைப்பதே பெரிய விஷயம். அதில் யாங்கள் குறிப்பிடுவதை சொல்லுவதை அப்படியே கேட்டு நடந்தால் உங்களுக்கு வெற்றிகள். அப்படி இல்லை என்றால் அது உங்களுக்கு பாவமாகிவிடும்.
எங்களுக்கு வேறு வேலை இல்லையா???
உங்களுக்காக யாங்கள் வந்து ஒவ்வொன்றாக நீங்கள் நலம் பெறுவதற்கு வாக்குகளில் நீங்கள் நலம் பெறுவதற்கு சொல்லிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அதை நீங்கள் எளிதாக கடந்து சென்று விடுகின்றீர்கள் அப்படி நீங்கள் சொல்லும் இடங்களுக்கு சொல்லும் பரிகாரங்களை செய்யாமல் அப்படியே விட்டு விட்டால் அது உங்களுக்கு பாவமாகிவிடும் என்று கூறியிருக்கின்றார். தனிநபர் வாக்குகள் குருநாதரிடத்தில் வாங்கியவர்கள் ஆகட்டும் பொது வாக்குகள் படிப்பவர்கள் ஆகட்டும் குருநாதருடைய இந்த கட்டளையை அனைவரும் கவனத்தில் கொள்க)
மைந்தனே முருகா!!
அடிபணியாத முருகா!!
அன்புக்கு அடிபணிந்து வா வா முருகா!!!
உனை அழைக்கின்றேனே முருகா!!!
தாயும் நீயும் தந்தையும் நீயும் முருகா!!!
உமையவள் நீயே முருகா!
அனைத்தும் நீயே முருகா.. என்றிருந்தேனே!!!
பழனி தன்னில் கூட பூம்பாறை தன்னிலும் கூட... அறிந்தும் எதை என்று அறியாமலும் கூட இங்கென்று வந்து நிச்சயம் தன்னில் பௌர்ணமி தன்னில் ஒரே முறையாக சுற்றினால் ... வலுக்கும் நிச்சயம் சக்திகள்!! மனிதனுக்கு!!!
வலுக்கும் சக்திகள் நிச்சயம் பின் மனிதனுக்கு!!!
(பௌர்ணமி நாளில் பழனி மலை பூம்பாறை மற்றும் இந்த காலபைரவர் ஆலயத்தை ஒரே முறையில் சுற்றி தரிசனம் செய்து வந்தால் மனிதர்களுக்கு சக்திகள் கிடைக்கும்)
ஆனாலும் அதை தன் பின் நிச்சயம் தன்னில் எப்படியாவது... நிறைவேற்றும் தன்னில் கூட... அஷ்டமா சித்துக்களில் நிச்சயம் தன்னில் கூட ஒரு சித்து பின் நீ கொடுப்பாயே முருகா!!!
என்று சொன்னாயே முருகா...
கலியுகத்தில் நிச்சயம் மனிதனுக்கு கொடுப்பேனே என்று சொன்னாயே முருகா
மனதில் எத் தீய காரியங்கள் நிச்சயம் தன்னில்.. பின் ஓட ஓட விரட்டி விடுவாயே முருகா !!
அனைத்தும் பின் எதிர்மறை சக்திகளும்
பின் இவ் சக்திகளை பார்க்கின்ற பொழுது
(மூன்று ஆலய தரிசனங்கள்)
அதனாலே பின் தீயவை ஓடிட்டு ஓடிட்டு!!!! நன்மை சக்திகள் பின் நல் சக்திகள் உள்புகுமே முருகா!!!
முருகா முருகா கலியுகத்தில் தீய சக்திகளில் போராடுகின்ற மனிதனுக்கு இது ஒரு உபாயம் (உதவியாக) ஆக இருக்குமே என்று சொன்னாயே முருகா!!
சொன்னாயே முருகா!!
அதன்படியே அமைத்திட்டேனே முருகா!!!
(கலியுகத்தில் அனைவரும் மாந்திரீகம் ஏவல் பில்லி சூனியம் எதிர்மறை தாக்குதல் இந்த தீய சக்திகளால் மனிதர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் எப்படி இதையெல்லாம் அகற்றுவது என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள்
அவர்கள் தீய சக்திகளில் இருந்து மீண்டு வர இந்த ஆலயம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று முருகன் போகரிடம் கூறியிருக்கின்றார்)
இன்னும் கூட வெளி வராத உண்மைகள் தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கின்றது.
முதலில் இவற்றிற்கு மனிதன் வந்து நிச்சயம் தன்னில் கூட... எதிர்மறை சக்திகளை அகற்றி.... நிச்சயம் தன்னில் கூட!!
யான் உருவாக்கிய (மூலிகைகள்.. அதாவது பழனி முருகன் பாசன மூர்த்தியில் சார்த்தப்படும் சந்தனம் போன்று மனிதர்கள் எதிர்மறை ஏவல்களை இங்கு வந்து நீக்கி விட்டு சென்றால்... தூய்மை அடைந்து விட்டால்... முருகா நீ மனிதர்களுக்கும் அந்த பாஷாணங்களை அதாவது மூலிகைகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றார் போகர்)
பாஷானங்களை நிச்சயம் தன்னில் மனிதனுக்கு பின் கொடுத்து கொடுத்து நல்லவற்றை செய் முருகா!!!
குழந்தாய் முருகா அன்பு தாயாக இருக்கின்றாயே முருகா!!
அன்பு தந்தையாகவே இருக்கின்றாயே முருகா!!!
உனை தன் காலையிலும் மாலையிலும் எங்கெங்கு பின் வந்து வழிபட்டு வழிபட்டு போகின்றார்களே மனிதர்கள் போகின்றார்களே!! வினைகள் தீரவில்லையே!!!
கலியுகத்தில் பின்
ஆனாலும் எப்படி.. இதை தன் இயக்குவேன்? என்று சொன்னாயே முருகா!!
கலியுகத்தில் கட்டாயம் நிச்சயம்... நவ பாஷனத்தில் பின் இயங்கும் நிச்சயம் திருத்தலங்களை நாடிட்டு வந்தாலே
(இதுவரை போகப் பெருமான் பாஷனங்களை பயன்படுத்தி உருவாக்கிய ஆலயங்களை பழனி பூம்பாறை மற்றும் இந்த காலபைரவர் மறைமுக முருகன் ஆலயத்தை பற்றி இந்த மூன்று ஆலயத்தை பற்றி பாஷன ஆலயங்களைப் பற்றி கூறியிருக்கின்றார்.
அதாவது பாஷனங்களில் இயங்கும் ஆலயங்கள் என கூறியிருக்கின்றார்
இன்னும் பல இடங்களில் இருக்கின்றது அதையும் எதிர்காலங்களில் வாக்குகளில் தெரியவரும் தற்போதைக்கு இந்த பாஷன ஆலயங்களுக்கு செல்ல வேண்டும்)
நிச்சயம் தன்னில் எதிர்மறை சக்திகள் அடிக்காது என்று சொன்னாயே முருகா!!!
ஆனாலும் மனிதனை நீ விடவில்லையே முருகா!!
(அனுமதி தரவில்லை)
முருகா முருகா பின் சாவியை கொடுத்திடு முருகா!!!
கார்த்திகை பின் திங்கள் தன்னில் கூட பின் இவ்... முப்பெரும் பின் அறிந்தும் கூட எதை என்று கூற அறிந்து அறிந்து.. திருத்தலத்தை சுற்றினாலே போதுமே முருகா!!!
உனை பின் கைலாயத்தில் தரிசனம் செய்திட்ட பலன்களை நிச்சயம் கொடுப்பாயே முருகா!! மனிதனுக்கு
கொடு ! கொடு ! முருகா!
வளர்த்தார்களே பின் கார்த்திகை திங்களில் பெண்கள் வளர்த்தார்களே!!
இங்கும் அங்குமாக சுற்றி சுற்றி... வளர்த்தார்களே!!!
அப் பெண்களும் இங்கு வருவார்கள் அல்லவா!!
அவர்களை மனிதன் கூட பார்க்கட்டும் முருகா!!!
குழந்தை பாக்கியம் பெற்றிட்டு செல்லட்டும் முருகா!!!
குழந்தைகளுக்கு சில சில நோய்கள் வந்திட்ட போதிலும்... இங்கு வந்து பின் உன் அருளாலே பாலை கொடு!!! பின் கொடுத்திட்டு முருகா!!!
அனைத்தையும் சரி செய்து கொடு!! முருகா! முருகா!!
உனையன்றி ஆட்களுக்கு துணை இல்லையே முருகா!!!
உனையன்றி ஆட்களுக்கு துணை இல்லையே முருகா!!!
வந்து வந்து அழகாக உறங்கிட்டு செல்கின்ற முருகா!!!
சஷ்டி தன்னில் ஓர் நாள் தன்னில் கூட... கந்த சஷ்டி தன்னில் எதை என்று புரியாத பின் நிலையில் இருந்தாலும் கார்த்திகை பின் சஷ்டி தன்னில் கூட ஒரு நாள் வந்து இங்கு தன்னில் கூட... அப்படியே மூன்றையும் தரிசித்து பின் மனிதனுக்கு பின் அனைத்தும் கொடுப்பாயே! முருகா!
(கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி தினத்தில் பிள்ளையார்பட்டி பட்டமங்கலம் இந்த காலபைரவர் ஆலயம் இந்த மூன்றையும் தரிசனம் செய்ய வேண்டும்)
பசியோடு பட்டினியோடு தூங்காமையோடு மனிதன்.. திரிந்து கொண்டிருக்கும் நேரத்தில்..... வலுவான சக்திகள் கொடுத்திடு முருகா!!!
பூம்பாறையில் செய்ய சொன்னாயே !!
பழனி தன்னில் செய்ய சொன்னாயே!!
நிச்சயம் தன்னில் ஒன்றைக் கூட மறைத்திடு !! மறைத்திடு!! என்று சொன்னாயே!!!
இங்குதான் மறைத்திட பின் செய்தேனே!!!
அதையும் கூட நிச்சயம் தன்னில் கூட மக்களுக்கு பின் உன் அருளால் தெரிவிக்கப் போகின்றேனே!!
குறைகளை களைத்திட போகின்றேனே!!
சக்திகளை பின் நீயே கொடு முருகா!!
சக்திகளை நீயே கொடு முருகா மனிதனுக்கு!!
அன்னையாக தந்தையாக நிற்கின்றாயே முருகா
குருவாகவும் நிச்சயம் தன்னில் அனைத்திற்கும் காரணமாக விளங்குகின்ற முருகா!!
அனைத்தும் நீயே முருகா!!
இதையென்று (இதை) மனிதன் புரிந்து கொள்ள முடியவில்லையே!!
தரித்திரங்கள் செய்ததனாலும் தன்னில் கூட பின் பாவங்களும் மறைத்திடும் மனிதர்களுக்கு!!
(பாவ வினைகள் அதிகமாக இருப்பதால் இது எல்லாம் மனிதர்களுக்கு தெரிவதில்லை)
முருகா அவையெல்லாம் நீக்கிடு முருகா!!
அறிந்தும் அப்பப்பா இவை நிச்சயம் புரிந்தும் பின் வருவோருக்கு எல்லாம் பின் வருங்காலத்தில் எதிர்மறை சக்திகளை மாற்றும் ஸ்தலம் இது சிறப்பான ஸ்தலம்.
மூன்றையும் இன்னும் தரிசிக்க இன்னும் கால நேரங்கள் நிச்சயம் மனிதனுக்கு உண்டு.
ஏற்றங்களும் உண்டு.
முருகனும் வந்திட்டான் வந்து சென்று கொண்டே இருக்கின்றான்.
ஏனென்றால் அறிந்தும் இக்கலியுகத்தில் இதை மறைத்திடு... என்றெல்லாம் நவபாஷாணங்கள் தன்னில் கூட.. செய்திட்டு அறிந்தும் இன்னும்.. பின். ஓர் மூலிகையை கூட.. பின் அதாவது கடைசியில் பத்து (தசா பாஷனம் ஆக ) அறிந்து பின் அதை தன் முருகனாகவே மனதில் எண்ணி முருகனுக்கும் சக்திகள் கொடுத்து தான் யான் செய்தேன்.
(பழனி மலை தன்னிலும் அனைவரும் நவபாஷாணம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அது தசா பாசனம் பத்தாவது மூலிகையை பயன்படுத்தி போகர் மகரிஷி.. செய்ததை குறித்த மனுதேவி ஆலய வாக்கு நினைவில் கொள்க.. மீண்டும் ஒருமுறை மனு தேவி ஆலய வாக்கினை படிக்கும் பொழுது போகர் மகரிஷி பாசன மூர்த்தி பிரதிஷ்டை குறித்த வாக்குகள் தெளிவு பெற வைக்கும்
சித்தன் அருள் 1234... அன்புடன் அகத்தியர் மனு தேவி ஆலயம்)
கலியுகத்தில் மறைக்கப்பட்ட ஸ்தலம்.!!!
நிச்சயம் இங்கு வந்து ஆசிகள் பெறுக!!!
(அனைவரும் இங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் இந்த மூன்று ஆலயங்களையும் போகர் பெருமானின் உத்தரவு)
எதிர்மறையான எண்ணங்களை அகற்றி தீய சக்திகளை எல்லாம் அகற்றி... இங்கு வந்து கொண்டு இருந்தாலே வெற்றிகள்.
தாம் தான் மனிதனுக்கு என்னென்ன ???? வேண்டுமென்று !!!
(மனிதர்களின் நேர்மையான வேண்டுதல்கள்)
பெற்று தரும் ஸ்தலம்..
(நேர்மையான வேண்டுதல்களை ஆசிர்வாதங்களை நிறைவேற்றி பெற்று தரும் ஸ்தலம்)
அறிந்தும் புரிந்தும். ஆசிகள் !! ஆசிகள் !!
இன்னும் விவரிக்கின்றேன்.. ஆசிகள்!!!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் முருகப்பெருமானே செல்லக் குழந்தை முருகா
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete