​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 30 August 2025

சித்தன் அருள் - 1928 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு!







15/8/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: வஜ்ர வாராஹி தேவி திருக்கோயில். சப்பாங்கான் கிராமம்.காத்மாண்டு நேபாளம்.

ஆதி கைலாய நாதனையும் கைலாய நாயகியையும் போற்றி பணிந்தேனே...

இறைவா அனைத்து உலகும் காப்பாய்!!

உரைக்கின்றேனே அகத்தியனே!!!

நல்முறையாகவே அனைவருக்குமே  ஆசிகள்!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பார்வதி தேவியின் அருள்கள் பல பல!!! உண்டு!!

உண்டு அப்பனே அறிந்தும் பின் பின்.. வரும் அளவிற்கு கூட அப்பனே... நன்முறையாகவே பல அவதாரங்கள்.. பார்வதி தேவியின் அவதாரங்கள் அப்பனே. 

இக் கைலாய மலையிலே அப்பனே நல் விதமாகவே அப்பனே !!!.....பல வழிகளிலும் கூட உலகை காக்க வேண்டும்.. என்று எண்ணி அதாவது... நிச்சயம் கலியுகத்தில் இப்படி எல்லாம்.. நடக்கும் என்பதை எல்லாம் தெரிந்து.. நன் முறைகளாகவே... ஈசனிடத்தில் கோபித்துக் கொண்டு!!! கோபித்துக் கொண்டு.!!!!. பல அவதாரங்களையும் கூட அன்னை... நிச்சயம் தன்னில் கூட.
பல வழிகளிலும் கூட அப்பனே அவதாரங்கள்..


 இதனால் நிச்சயம் தன்னில் கூட... ஒவ்வொரு அதாவது கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள்.. அதிகரித்தது. 

இதனால் அப்பனே அவ்.. நிச்சயம் பாவங்களையும் பல.. மனிதர்களையும் கூட. பாவத்தினை சரியாக தீர்க்க..... பின் எப்படி? ஏது ? அவதாரம்?? எடுத்தால் நன்மை தரும்.. என்பதையெல்லாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட அடிக்கடி... அன்னை அவதாரங்கள் என்பேன். அப்பனே. 

இதனால் கலியுகத்தில் துஷ்டர்களை அழிப்பதற்காகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பார்வதி தேவி நிச்சயம் பின்.. வாராஹி தேவி அவதாரமாக எடுத்தாளப்பா!!!

இதனால் அப்பனே..இக் கதையும் அப்பனே அறிந்தும்... பல வகையிலும் கூட யாருக்கும் தெரியாதப்பா. 

அப்பனே உண்மை கதையை.. கலியுகத்தில் யாரும் விளக்குவதே இல்லையப்பா.

பொய்யானவற்றையெல்லாம்... விளக்கி அப்பனே... பொய்யானதை எல்லாம் பின்பற்றி.. அழிவுக்கு காரணமாகி... நிச்சயம் மதி மயங்கி அப்பனே.. எதை எதையோ.. மனிதனே மனிதனை மயக்கி அப்பனே... எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான்ப்பா.

இதனால் அப்பனே இதை திருத்துவதற்காகவே...யாங்கள் சித்தர்கள் அப்பனே அழகாகவே... வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 


அவை மட்டும்  இல்லாமல்.. சிலர் என்னிடத்தில் தான்.. அகத்தியன் இருக்கின்றான்... இன்னும் அவை பொய் இவை பொய்... என்றெல்லாம் 

ஆனாலும் அப்பனே!!!

"""" அவனே பொய் !!!!!

 என்பதெல்லாம்.. உணர்வதே இல்லை என்பேன் அப்பனே. 

இதனால் அவந்தனக்கே நிச்சயம்......!?!?!?!?!?!


அப்பனே சித்தர்கள் (தவறான வழியில் சித்தர்கள் பெயரை) நாமத்தை எடுத்தவர்கள் அப்பனே.. நிச்சயம் அழியாமல் விட மாட்டார்கள் எதை என்று புரிய அப்பனே. 

சரியாக நல் மனதாக வந்தால் தான் அப்பனே நிச்சயம்... பின் அனைத்தும் கிடைக்குமப்பா!!


அப்படி இல்லை என்றால் அனைத்தும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் அதாவது... நிச்சயம் அவர்களே உணர்வார்களப்பா!!!

மூடநம்பிக்கைகளை கூட காலை வேளையில் கூட புஜண்டன்.. எடுத்துரைத்தான் அப்பா 

(பசுபதி நாதர் ஆலயத்தில்..  காகபுஜண்டர் மகரிஷி உரைத்த வாக்கு..அக் வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

அப்பனே நல்விதமாக எதை என்று தெரியும் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

நிச்சயம் புரிந்து கொள்ளா விடில் நிச்சயம் கஷ்டங்கள்.. கூட வந்து கொண்டு இருக்கும் என்பேன் அப்பனே. 

இக் கஷ்டங்களை தடுப்பது யார்???

அப்பனே நிச்சயம் முடியாதப்பா. 

இதனால் தான் அப்பனே மனிதன் கலியுகத்தில்.. பல பல வழிகளில் கூட.. சென்று கொண்டிருப்பான் அப்பனே.

இதனால் அப்பனே பல வினைகளை சம்பாதித்து கொள்வான் என்பதை கூட...யாங்கள் அறிந்ததே!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அழகாக நிச்சயம் புத்திகளை ஈசன் அழகாக... மனிதனுக்கு புத்திகளை கொடுத்து அனுப்புகின்றான் அப்பனே.

அவ் புத்திகளை சரியாக பயன்படுத்தாதினால் தான் அப்பனே... துன்பம் என்பதையெல்லாம்.. நிச்சயம் தன்னில் கூட.

அதை விலக்குவதற்காகவே... நிச்சயம்... அனைத்தும் யாங்கள் சொல்வோமப்பா!!!

வரும் காலத்தில் என்ன நடக்கும்??? ஏது??... எதை என்று புரிய அப்பனே..

எதை என்று கூற... எவ்வாறு அழிவுகள் வருகின்றது?? என்பதை எல்லாம் அப்பனே

அவ் அழிவுகளை தடுக்க அப்பனே... மனிதனால் தான் முடியும் என்பதை எல்லாம்..யாங்கள் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம் அப்பனே.

ஆனால் மனிதன் கேட்பதே இல்லை என்பேன் .

இதனால் எதை என்று புரிய சுயநலத்திற்காகவே... அப்பனே நிச்சயம் தனக்கு இல்லம் வேண்டும்.. அதாவது மனைவி அமைய வேண்டும்.. பின் எதன் மூலம் சொத்துக்கள் அமைய வேண்டும்?? என்பதை எல்லாம் அப்பனே பின் அதாவது... சுயமாகவே சிந்தித்தால் !?!?!?!??அப்பனே...

இறைவனும் கூட... சுயமாகவே அப்பனே பின் அனைத்தும்... அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்வான்...அப்பனே.

அதனால்தான் அப்பனே பின் கூட்டுப் பிரார்த்தனைகள் வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே... எடுத்துரைத்துக் கொண்டு வருகின்றேன் அப்பனே.

நிச்சயம் அப்பனே இறைவனிடம் அனைவரும் மன்றாடினால் இறைவன் செவி சாய்ப்பானப்பா!!!

இல்லையென்றால் அப்பனே அழிவுகள் தான் என்பேன் அப்பனே ... வரும் காலத்தில் பலமாக.

ஆனாலும்(கூட்டு பிரார்த்தனையை பற்றி) இதையும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

ஆனாலும் சில மனிதர்கள் இதை கேட்கவில்லை என்பேன் அப்பனே.

ஆனாலும் இதையும்..(கூட்டு பிரார்த்தனை) பொய் !  எதை என்று பொய் !! என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர் என்பேன் அப்பனே.

ஆனாலும் அவனுக்கு அழிவுகள் தான்...அப்பனே.

கூட்டுப் பிரார்த்தனை எதை என்று புரிய மற்றவர்களை காப்பாற்ற....!!;

அப்பனே எங்கள் அருகில் (நெருங்க) எப்பொழுது... நிச்சயம் அதிகமாகும் என்றால்... நல்விதமாக அப்பனே நிச்சயம்....

 இவ்வுலகத்தில் பெரிய பரிகாரமே....... மற்றவர்களுக்காக... வணங்குவதே என்பேன் அப்பனே. 

என் பக்தர்கள் பின் நிச்சயம்... மற்றவர்களுக்காகவே வணங்கினால் மட்டுமே...

நிச்சயம் தன்னில் கூட அவர்கள் தான் என் பக்தர்கள் என்பேன். அப்பனே. 

தன் சுயநலத்திற்காகவே அனைத்தும் கேட்டுக் கொண்டே இருந்தால் அப்பனே பின் அவன் என் பக்தனே இல்லை என்பேன் அப்பனே 

நிச்சயம்... ஏதோ நிச்சயம் சித்தர்கள் வருகின்றார்கள்... நிச்சயம் பின் அதாவது... ஜாதகங்களையும் சொல்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்...

அப்பனே அப்படி இல்லையப்பா!!!

அப்படித்தான் ஆக்கிவிட்டார்கள் மனிதர்கள் என்பேன் அப்பனே...
சித்தர்களை நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட....



 எப்படி எல்லாம் கிரகங்கள் கலியுகத்தில் செயல்படும்??? என்பதை எல்லாம் அப்பனே.... அண்ணாமலையிலேயே உரைப்பேன் என்பேன்  அப்பனே!!!
நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே...

நல்விதமாகவே அப்பனே இன்னும்... மனிதனுக்கு வாழ்க்கையை பற்றி பின் தெரிவதில்லை.. அப்பனே சிந்திப்பதும் இல்லை என்பேன் அப்பனே !!!

எதை எதையோ சிந்தித்து எதையெதையோ பின்... சிந்திப்பதெல்லாம் பின் அழிவுக்கு... காரணம் என்பது அப்பனே மனிதனுக்கு தெரிவதில்லை அப்பனே.

இதனால் என்ன ஏது எதை என்று புரிய அப்பனே...

இதனால் அப்பனே நல்விதமாகவே... அப்பனே எதை என்று அறிய அறிய... அப்பனே கைலாய மலையில் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அழகாகவே நிச்சயம்... அறிந்தும் அப்பனே பின்... ஈசனும் பார்வதி தேவியும் அழகாக.... உட்கார்ந்து தியானங்கள்... இப்படியே நிச்சயம் தன்னில் கூட கந்தனும் அப்பனே... பின் அழகாக.... செந்தூரிலிருந்து மயில் மீது ஏறி... கைலாய மலைக்கு வந்து எதை என்று புரிய!!!

அப்பனே கந்தன் அதாவது தாயே!! தந்தையே !! நிச்சயம் நீங்கள் இங்கே அமர்ந்திருந்தால் மட்டும் போதுமா???

நிச்சயம்  கலியுகத்தில் பல வருத்தங்கள் மனிதனுக்கு!!

இதனால் பின் ஏதோ நீங்கள்...முடிவெடுங்கள்.....

நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு.. முடிவெடுத்தால் மனிதனுக்கு யாங்கள் எதை என்று பின் புரிய வைப்போம் என்பதையெல்லாம். 


மகனே கேள்!!! என்று ஈசனாரும்.. கூட !!!


 கந்தனே!! எதை என்று..புரிய அதாவது கர்மாக்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது...

கந்தனே !!

அறிந்தும் புரிந்தும்... இதனால் நிச்சயம் தன்னில் கூட... அவனவனுக்கு பின் நிச்சயம் தன்னில் கூட நல் மனதாக உனை பின்... எதை என்று புரிய என்று அறிய.... நல் மனதாகவே பின் வந்தால் பின் நிச்சயம் தன்னில் கூட...(நல் மனதோடு முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்)

. அதாவது உன்னுடைய பின் நிச்சயம் சக்திகள் அவனுக்கு போகும். 

இதனால் அவன் பலமடைவான்... பின் அதுவே போதும் என்பதை எல்லாம்... ஈசன் பின் கந்தனிடத்தில் கூட.




இதனால் அப்பனே நல்முறையாகவே... நல்மனதாகவே... சென்றால் கூட... இறைவன் சக்திகள் அப்பனே... உந்தனுக்கு கொடுத்து விடுவானப்பா!!!

அவை இல்லாமல் அப்பனே எதை எதையோ வேண்டிக்கொண்டு.. சென்றால் அப்பனே இறைவன்... கொடுக்கப் போவதில்லை. 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின்...

 கந்தனும்!!

.தாய் !!தந்தையே!!! நிச்சயம் தன்னில் எதை என்று புரிய .... நிச்சயம் செந்தூரிலே அனைவரும்... வருகின்றார்கள்!!

பின் அதாவது... பாவ வினைகளை எல்லாம் சுமந்து தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனாலும் நிச்சயம்  அங்கு பின் சிலர் உறங்குகின்றார்கள் (திருச்செந்தூரில்) 

அங்கு அவர்களை பார்க்கின்ற பொழுது... பாவக்கணக்கு அதிகமாக இருக்கின்றது..

அதை நீக்க நிச்சயம்... நீங்கள் தான் வரவேண்டும்... அறிந்தும் புரிந்தும் கூட... அதாவது பின் முருகனும் கூட... தன் தந்தையிடம்....

அறிந்தும் எவை என்று கூற பின்... ஈசனார் 

கந்தனே கேள்!!!!..

எதை என்று கூட புரிந்துகொள்!! நிச்சயம் தன்னில் கூட!!

அவ்வாறாக... கர்மங்கள் தான் செய்தவர்கள் தான் அங்கு வருகின்றார்கள்!!!

பின் நல்லதே செய்துவிட்டால் யார்?? வருவார் நிச்சயம் தன்னில் கூட !!!

அதனால் அங்கு வருபவர்கள் எல்லாம்.. பாவம் செய்தவர்கள் தான். 

யாம் அறிவோம். 

ஆனாலும்... அப்பொழுதும் கூட பின் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் தன்னில் கூட... சரியாகவே எதை என்று புரிந்தும் கூட... ஒவ்வொருவர்... அதாவது ஒவ்வொரு மனதையும் கூட நீ நிச்சயம் ஆழ்ந்து.. நிச்சயம் சிந்திப்பாய். 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறு நல் மனதாக இருந்தால்....அவர்களை

. """"""மிதித்துச் செல்!!!!

நிச்சயம் பாவங்கள் தொலையட்டும் அறிந்தும் புரிந்தும். 

இதனால் பின் ஈசனாரும் கூட... கந்தன் இடத்தில் நிச்சயம்...

யான் அறிந்தேன்!!! எதை என்று புரிய எவை என்று அறிய... நிச்சயம் தன்னில் கூட !!


பின் முருகனும்...

பின் அதாவது தந்தையே!!!

 பாவம் செய்தவர்கள் தான் என்னிடத்தில் அதிகம்.. வருகின்றனர். 

இதற்கு? எதை என்று புரிந்து.....!?!?!




ஈசனார் நிச்சயம் அதாவது மகனே கேள்!!!!

திருத்தலத்திற்கு பின் பாவம் செய்தவன் தான்... நிச்சயம் வருவான். 

நல்லோன் வருவானென்றால்!?!?!!!!!!?!.... நிச்சயம் பின் இல்லை!!!

அதாவது எனை உணர்ந்து விட்டால் நிச்சயம்... பின் அவனிடத்தில் யான். தங்கி விடுவேன்.

இதனால் நிச்சயம்.. அவனுக்கு நிச்சயம் என்னிடத்தில் தான்... ஈசன் இருக்கின்றான் என்று. 


ஆனாலும் நிச்சயம் இக்கலியுகத்தில்... இன்னும் அதிக பாவங்கள் பின்.. சேர சேர நிச்சயம் அதாவது...

அதிக அளவு மனிதனுக்கு அழகாக அனைத்தும் கொடுத்து தான் அனுப்புகின்றேன். 
அதை சரியாக உபயோகப்படுத்தாமல் நிச்சயம் திரிந்து... நிச்சயம் அவ்வாறாகவே...


கந்தன் 


பின் தாயே !!!...நீயும் கூட.. அறிந்தும் அதாவது தந்தையே... இப்படி பேசிக்கொண்டு!!!

ஆனால் நீயும் பின் வரவேண்டும்... நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்... அறிந்தும் எதை என்று புரிய...

ஏதாவது ஒரு அவதாரத்தை எடுத்து நிச்சயம் தன்னில் கூட மனிதனை பின்... காக்க தாயே நிச்சயம்...

அதாவது தந்தை தான் இங்கு அமர்ந்து கொண்டு.. இருக்கின்றார். 

பின் தாயே நீ என்னிடத்தில் வருவாயாக!!!!...... நிச்சயம் தன்னில் கூட.

அதாவது தாய் தந்தை!!! எதை என்று புரிந்து... அதாவது தந்தை நிச்சயம்.. இங்கு அமர்ந்து கொண்டு நிச்சயம் தவத்தில் இருக்கட்டும்!!

  நிச்சயம் தன்னில் பின் தந்தைக்குத் தெரியும்!!.. பின் யாரை எப்பொழுது காப்பாற்ற வேண்டும்?? என்று!!

ஆனாலும் அழிவுகள் நிச்சயம் பாதி அழியப் போகின்றது... தாயே நீயும் வாரும்!!! என்றெல்லாம்!!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும்...எவை என்று அறிய...

பின் அதாவது மயில் மீது ஏறி... அதாவது அழகாக தன் மயில் வாகனம் இருக்கின்றது. 
அழகாக வா தாயே!!. என்று நிச்சயம் தன்னில் கூட!!!

எங்கெல்லாம்... அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய... நிச்சயம் தன்னில் இவை என்று அறிய...

இதனால் நிச்சயம் தாயே... நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய பின் அதாவது எவை என்றும் உண்மை தனை கூட.... அதாவது மனிதனின் நிச்சயம் தன்னில்  கூட... அறிந்தும் பாவத்தை நீக்க நிச்சயம்... ஏதாவது பின் அகோரமாக... பின் அறிந்தும் புரிந்தும்... நீ அவதாரம் எடுக்க வேண்டும்... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் நிச்சயம் தாயே.. எதை என்று புரிய அதாவது நிச்சயம் நீ வா!!! அன்போடு அழைக்கின்றேன்!!

நிச்சயம் இவ்வாறாக... பார்வதி தேவியும் நிச்சயம் பின்.....

ஈசனாரே!!!... அறிந்தும் நம் குழந்தை இவ்வாறாகவே கேட்கின்றான்... மனித குலத்தை காக்கவே!!!

இதனால்... நிச்சயம் யான் அவதாரமாகவே.. எடுக்கத்தான் போகின்றேன் நிச்சயம் குழந்தைகளிடம் செல்லத்தான் போகின்றேன் என்று..

ஈசனாரும்... நிச்சயம் பின் தேவியே செல்லும்!!!

நிச்சயம் குழந்தை என்றாலே தாய்க்கு பாசம் வந்து விடும்!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட.

மகனே கிளம்பு!!!!... அறிந்தும் புரிந்தும் கூட!! எதை என்று அறிய அறிய!!

தாயே நிச்சயம் தன்னில் கூட அதாவது...இவ் வாகனம் அதாவது அறிந்து... நிச்சயம் எங்கெல்லாம் பின் அழிவுகள்.. வரப் போகின்றதோ... அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட கூச்சலிடும்!! அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது.. அதாவது சரியாகவே.. எதை என்று புரிய பின் கைலாயத்தில் நிச்சயம் பின் அதாவது... அதாவது மணலை (கைலாய புனித மண்) எடுத்து அங்கங்கே வீசு!! என்று!!!

(மயில் வாகனத்தில் செல்லும் பொழுது பூலோகத்தில் எங்கெல்லாம் அழிவுகள் வரும் இந்த இடத்திற்கு மேலே மயில் வாகனம் பறக்கும் பொழுது மயில் சப்தம் எழுப்பி அகவும்) 


இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எங்கெல்லாம்.. அழிவுகள் அடுத்து வரப் போகின்றது ?என்று.. என்பதையெல்லாம் நிச்சயம் உணர்ந்து..

 பின் அதாவது நிச்சயம்.. அதாவது மகன் எடுக்கச் சொல்கின்றான்!!! கைலாய நாதனே... நிச்சயம் பின் அன்பு கருணை.. நிறைந்தவனே நிச்சயம் தன்னில் கூட!!

மண்ணை நீயே அள்ளி.. எடுத்துக் கொடு என்று.. ஈசனிடம் பார்வதி தேவி.

நிச்சயம் ஈசனும் சரியாகவே.. நிச்சயம் அதாவது தாயிடம்.....பார்வதி தேவியிடம் மண்ணை கொடுத்தார் ஈசன்.

இதனால் கந்தன் நிச்சயம் தன் மயில் வாகனத்தில் அமர்ந்தான்... நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக... அங்கங்கு நிச்சயம் பின் மயில்..... எங்கெல்லாம் அழிவுகள் வருகின்றதோ....... பலத்த சப்தத்துடன் நிச்சயம் கூச்சலிட்டது!!
அவ்வாறாக.. நிச்சயம் சிறிது சிறிதாக......

இதனால் நிச்சயம் எதை என்று புரிய தாயே!!! மயில் மீது அமர்ந்து... பறந்து சென்று கொண்டே இருக்க...

குழந்தை அதாவது முருகன் யோசனை... நிச்சயம் தாயே... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அதாவது... எங்கெல்லாம் அழிவுகள் வருகின்றது? என்பதை எல்லாம்.. நிச்சயம் பின் மயில் எதை என்று அறிய அறிய...உணர்ந்ததே நாம்.

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... இவ்வாறாக... மயில் கூச்சலிடுகின்ற பொழுது... அங்கே கீழே சென்று நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் ஏதாவது ரூபத்தில் நிச்சயம் தன்னில் கூட...அங்கேயே இருந்து!!! எவை என்று அறிய மீண்டும் பின் அவ்வாறாக அவ்வாறாக என்றெல்லாம். 

(ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அங்கு ஏதாவது ரூபத்தில் ஆலயத்தில் பார்வதி தேவி அவதாரமாக அமர்ந்து கொண்டார் அழிவுகளை தடுக்க) 

நிச்சயம் இவ்வாறாக எங்கெல்லாம்.. பின் கைலாயத்திலிருந்து.. பின் முருகனும் எதை என்று.. பார்வதி தேவியும்.. மயில் மீது நிச்சயம் பின் அமர்ந்து.. எங்கெங்கு எதை என்று புரிய... மண்ணை கெட்டியாக பிடித்துக் கொண்டு... நிச்சயம் பின் அங்கங்கே.. பார்வதி தேவியும். தன் காலை அதாவது.. மயில் பலமாக.. போய்ச் சேர்கின்ற பொழுது நிச்சயம்... அறிந்தும் புரிந்தும் இவ்வாறாக.. நிச்சயம் பின் இறங்கி தன் கால்களை நிச்சயம் பதித்து.. நிச்சயம் பல வழிகளிலும் கூட சக்திகளை ஏற்படுத்தி விட்டாள்!!!.. சக்தியவள்!!

அதனால்தான் இவ் சக்தி.. நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே இங்கு.. அழிவுகள் வரும் என்பதையெல்லாம் நிச்சயம்.. எதை என்று அறிய தெரிந்து காலை பதித்தாள்!! இன்னும் பலமாகவே பார்வதி தேவி!!! (இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியாரின் கால்கள் பதித்தார்)

இன்னும் பல திருத்தலங்களை கூட எவ்வாறாக என்பதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறாக கால்களை பதித்தாள் என்பதையெல்லாம்... அடுத்து  சென்று கொண்டிருக்க... பல பல திருத்தலங்கள்..


 எதை என்று கூற கடைசியில்... நிச்சயம் மலையனூரில் கால் பதித்தாள். 

(மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம்) 

அறிந்தும் புரிந்தும் கூட!!

ஏனென்றால் அங்கெல்லாம் சுற்றி அழியப்போகின்றது.. என்பதை எல்லாம்... அதாவது பின் அங்கும் அதாவது... நான்கு திசைகளிலும்... அதாவது வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு... இவ்வாறு அங்கு இருந்து பின் அழகாக பின் 500... மைல் தொலைவுகளிலும் கூட அழியும்.. எதை என்று புரிய என்றெல்லாம்... அங்கேயும் கால் பதித்து... இன்னும் பல இடங்களில் கூட!!!


திருச்செந்தூர் ரகசியம்.

 கடைசியாக... நிச்சயம் தன்னில் கூட அழகாகவே... நிச்சயம் அறிந்தும் புரிந்தும் சென்று... செந்தூருக்கே அழைத்துச் சென்று விட்டான்.. தன் அன்னையைக் கூட.. கந்தன்.

அங்கேயே  அறிந்தும் பார்வதி தேவி கால்பதித்து அறிந்தும் கூட... மறைமுகமாக நிச்சயம் பின்... அதாவது எதை என்று புரிய என் பின்னாலே இரு தாயே!! என்று.. நிச்சயம் தன்னில் வராஹி ரூபத்திலே!!!! செந்தூரிலே... அன்னை நிச்சயம் தன்னில் கூட!!

(திருச்செந்தூர் ஆலயத்தில் முருகன் மூலஸ்தானத்தில் முருகன் பின் பார்வதி தேவியார் வாராகி ரூபத்தில் அருள் பாலிக்கின்றார்) 

வருவோருக்கெல்லாம் அருள் பாலித்து கொண்டு இருக்கின்றாள்!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று கூற (திருச்)செந்தூரும்...!!!

 அங்கே முருகன் அருள் கொடுப்பதை விட.. வராஹி தேவி அருள் எதை என்று புரிய.......


 நிச்சயம் பார்வதி தேவியின்  பரிபூரணமாக...இக் கலியுகத்தில் நிச்சயம் பின் கந்தன்.. பின்னே (முருகனின் மூர்த்திக்கு பின்னால்)

 இருந்து வராஹி தேவியாக.. நிச்சயம் பின்.. மனிதர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டு.. இருக்கின்றாள். 

வருவோருக்கெல்லாம்.. பின் பாவவினைகளை தீர்த்துக் கொண்டே இருக்கின்றாள்..

இதை யார் அறிவார்?????

எதை என்று புரிய அதனால்தான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட பல மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவே.. சித்தர்கள் யாங்கள் பின் அழகாகவே எதை என்று புரிய... அப்பனே.. சொல்லிக் கொண்டே வருகின்றோம் 

 இதனால் அப்பனே..

இங்கெல்லாம் பார்வதி தேவி அப்பனே இன்னும் அவதாரங்கள் எடுத்து நிச்சயம்... பின் எவை என்று கூற 

பள்ளூரில் !!!

(காஞ்சிபுரம் அருகில் 15 கிமீ.... இருக்கும் பள்ளூர் வராஹி தேவி அம்மன் ஆலயம்)

நிச்சயம் அங்கும் கூட 


காஞ்சி தன்னில் கூட பின் அழகாகவே.. எதை என்று காமாட்சியாக.. இருக்கின்றாளே நிச்சயம் தன்னில் கூட 
வராஹியாகவே இருக்கின்றாள்.

மதுரை தன்னில் கூட(மீனாட்சி) வாராஹியாகவே இருக்கின்றாள்.

ராமேஸ்வரத்திலும்   (பர்வதவர்தினி) வாராஹியாகவே இருக்கின்றாள். 

நிச்சயம் தன்னில் கூட... ஏனென்றால் காக்க வேண்டும்... மனிதர்களை...

எதை என்று கூற பின் காசி விசாலாட்சியிலும் கூட வாராஹி தேவியாகவே இருக்கின்றாள்...

இன்னும் இன்னும் அப்பனே எதை என்று புரிய... இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே.... இன்னும் பார்வதி தேவி வராஹி தேவியாக எப்படியெல்லாம்?? ஆட்சி புரிகின்றாள் என்பதை எல்லாம் அப்பனே...

கவலைகள் வேண்டாமப்பா!! இன்னும் நல் முறைகளாகவே ஆசிகள் அப்பனே!!..  இன்னும் அப்பனே தேவியின் பின்.. ரூபத்தை பற்றி எடுத்துரைப்பேன்... அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!! ஆசிகளப்பா!!!



குருநாதரிடம் அடியவர்கள் சில சந்தேகங்களை கேட்ட பொழுது குருநாதர் தந்த பதில்கள். 


குருவே சரணம் குரு பாதம் சரணம் குருவே இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் இருக்கும் திரிபுரா மாநிலம் பால திரிபுரசுந்தரி தாயாரின் பெயரில் இருக்கின்றது நீங்கள் அங்கு வாக்கு உபதேசமும் செய்தீர்கள்..

 சித்தன் அருள் 1599 .

 அங்கு பால திரிபுர சுந்தரி தேவி அன்னை சக்தியாக வீற்றிருக்கின்றார். 

அதேபோல் அருணாச்சல பிரதேசம் அருணாச்சல ஈஸ்வரனின் பெயரில் இருக்கின்றது அதன் விசேஷங்கள் மகிமையை கூறுங்கள் குருநாதா !!!!


அப்பனே இதைப் பற்றியும் சொல்வேன் அப்பனே... எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கைலாயத்திற்கும் இதற்கும் சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே.... சரியாக யோசித்து அப்பனே இதையாவது நீங்கள் கண்டுபிடித்து..... நிச்சயம் தன்னில் கூட பின்பு யான் உரைப்பேன். அப்பனே.

வஜ்ர வாராகி இந்த ஆலயத்தின் மகிமையை கூறுங்கள் குருதேவா!!!

அப்பனே வாக்கிலே உரைத்து விட்டேன் முன்பே... பார்வதி தேவி கால் பதித்து.. என்று ...
(இந்த ஆலயமும் பார்வதி தேவி தன் கால்களை பதித்த இடம்) 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே இங்கு வந்தால்.. சில மனப் பிரச்சனைகள் நிச்சயம் போகுமப்பா... நிச்சயம் சிலருக்கு மனம் மாறிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே அவையெல்லாம் நீங்குமப்பா... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட ஏராளம் என்பேன் அப்பனே.. கலியுகத்தில் அப்பனே அதாவது பில்லி சூனியங்கள் என்பேன் அப்பனே ... இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இத் தேவி அழித்து விடுவாள் என்பேன் அப்பனே.... இங்கு வந்தால் அப்பனே.


அடியவர்கள் கைலாச தரிசனம் செய்யும் பொழுது சில புகைப்படங்களை எடுத்தனர் அப்பொழுது சில புகைப்படங்களில் கைலாய மலைக்கு மேலே சில விசித்திரமாக பறக்கும் தட்டுகள் பறப்பது போன்று சில புகைப்படங்களில் பதிவாகி இருந்தது அதைப்பற்றி குருநாதரிடம் கேட்ட பொழுது 


அப்பனே யான் முன்பே சொன்னேனே.... மேலிருந்து தூதர்கள் சித்திர குள்ளர்கள் அதாவது இறங்கி வருவார்கள். இங்கு அடிக்கடி வந்து சென்று கொண்டே இருப்பார்களப்பா அவர்கள் தானப்பா அது என்று குருநாதர் உரைத்தார்.

மேலும் ஆண்கள் பெண்கள் அனைவரும் இடுப்பில் அரைஞான் கொடி அதாவது மணி மேகலை கட்டிக் கொள்கின்றார்கள் சிலர் நூல் கயிறினை பயன் படுத்துகிறார்கள் இதனைப் பற்றி குருநாதரிடம் சந்தேகமாக கேட்ட பொழுது 


அப்பனே இடுப்பில் கட்டிக்கொள்வதற்கு வெள்ளி சிறந்தது... அதாவது வெள்ளியில் அரைஞாண் கொடி இப்படி ஆண்கள் பெண்கள் அனைவரும் கட்டிக் கொண்டிருந்தால் உடம்பிற்கு நல்லது. வயிற்று இடுப்பு பாகங்கள் உள் உறுப்புகள் பலமாக இருக்கும்... என்று கூறினார்.

(ஏற்கனவே அனைவரும் இரவில் உறங்கும் பொழுது தொப்புளில் நல்லெண்ணெய் ஓரிரு துளி விட்டு உறங்குவது உடம்பில் வயிற்றில் உள்ள செல்களுக்கு நல்லது என்று குருநாதர் கூறியிருக்கின்றார் அதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்)


அதுமட்டுமல்லாமல் சில மரப் பிசின்கள் அதாவது மர கோந்து! உண்ணுவதற்கு ஏற்றவையா??? உதாரணத்திற்கு பாதாம் பிசின் நீரில் ஊற வைத்து உண்ணுகிறார்கள் அதே போன்று ஆன்லைன் வர்த்தகத்தில் நாவல் மர பிசின் போன்றவை விற்பனைக்கு வருகின்றது இவற்றை வாங்கி உண்ணலாமா??? என்று குருநாதரிடம் கேட்டதற்கு 

அதாவது நாவல் மரத்தின் பிசின் வேப்ப மரத்தின் பிசின் சிலாஜித் எனப்படும்.. பாறை கசிவு...இவை உட்கொள்வது நல்லதா?? இவை எல்லாம் முந்தைய காலத்தில் நடைமுறையில் இருந்தவையா??? என்று குருநாதரிடம் பணிவாக கேட்டதற்கு..

குருநாதர் அப்பனே இவையெல்லாம் சிறிதளவு நீரில் கலந்து ஊறவைத்து உட்கொள்ளலாம் அப்பனே இவையெல்லாம் உடலுக்கு அதிக சக்திகள் தரும் என்று குருநாதர் வாக்குகளில் கூறினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    அப்பொழுது சில புகைப்படங்களில் கைலாய மலைக்கு மேலே சில விசித்திரமாக பறக்கும் தட்டுகள் பறப்பது போன்று சில புகைப்படங்களில் பதிவாகி இருந்தது

    Is the photo available ?

    ReplyDelete