10/8/2025 அன்று கைலாயத்தில் ஈசனார் பார்வதி தேவியார் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: கைலாய மலை .
எம் இடத்தில் இருந்து கொண்டே... எம்மிடத்தில் இருந்து கொண்டே.... வாக்குகளை ஈட்டுகின்றேன்.. மகேஸ்வரனே!!!!
இன்னும் எண்ணற்ற திருடர்கள் வருவார்கள்!!!
எனை நமச்சிவாயா!! என்று சொல்வார்கள்!!
ஆனாலும் யான் விட்டு விடுவேன்!!!
இதை பயன்படுத்திக் கொண்டு... அதாவது நமச்சிவாயன் ஒன்றும் செய்யவில்லையே!!!... பின் இன்னும் நாம் தவறுகள் செய்வோம் என்று பக்தன் ருத்திராட்சத்தையும் அணிந்து இன்னும்... விபூதியையும் பூசுகின்றேன்... என்றெல்லாம் சொல்லி நடிப்பான்!
ஆனாலும் விட்டு விடுவேன்!!!
ஆனாலும் அறிந்தும் எதை என்று புரியாமல் மனிதன் வாழ்வான்... கலியுகத்தில்!!!
ஆனாலும் அவனை எப்படி சாய்ப்பது???.. என்பதையெல்லாம்!!
ஆனாலும்.. ஈசனை பற்றி அதாவது என்னைப் பற்றி... அனைவரும் உணர்ந்ததே!!!!
நிச்சயம் அன்னையும் பிதாவும்.. முன்னறி தெய்வம் என்று... நிச்சயம் நீங்கள் அறிந்ததே!!!
இங்கு சான்றாகவே விளக்குகின்றேன்!!!
இதனால் அனைத்தும் கொடுக்க யாங்கள் தயார்!!!... இங்கிருந்தே தன் கைலாய மலையில் இருந்தே.. சொல்கின்றேன்.
ஆனால்... வரும் காலத்தில் கலியுகத்தில்... இன்னல்கள் அதிகமாக!!!
இதனை காக்கவே!!!.. பல மலைகளில் ஏறி ஏறி... உங்களை.... பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்!!
ஏன்? பக்திக்கு நீங்கள் வருகின்றீர்கள்???? என்பதை யான் அறிவேன்!!!
திருடுவதற்காகவே வருகின்றீர்கள்!!!
மீண்டும் சொல்வேன்!!!
கைலாயத்திலிருந்து சொல்கின்றேன்!!
ஏன் பக்திக்கு??... நமச்சிவாயா!!!. என்று. என் பெயரை.. உச்சரிக்கின்றீர்கள் என்றால்... திருடுவதற்கே!!!
பின் நீங்கள் மனசாட்சி உள்ளவர்களா???.. என்று நீங்களே ஒரு முறை... உங்கள் மனதை அதாவது... உங்கள் மனதின் மீது கையை வைத்து தொட்டு... நிச்சயம் செப்புங்கள் பார்ப்போம்!!
நிச்சயம் ஒவ்வொரு மனதையும்...யான் ஆராய்வேன்!!!. ஏன்? எதற்கு?
(படைத்து) அனுப்பியவன் யான் தானே!!!!
அறிந்தும் அனைத்திற்கும் யானாகவே விளங்குகின்றேன்...
அறிந்தும் பல யோகிகள்... பல ஞானவான்கள்... பல ரிஷிகள் பல சித்தர்கள்... எங்கும் பின் அனுதினமும்... இங்கு வந்து தியானத்தில் அமர்ந்து...... என்ன? இப்படி எல்லாம் கலியுகத்தில்... நடந்து கொண்டிருக்கின்றதே!??
நீங்களும் அமைதியாக இருக்கின்றீர்களே!!!.. என்றெல்லாம்!!!
ஆனாலும் அமைதி காத்திடுவேன்!!!
சொல்லிவிட்டேன்!!!.. அறிந்தும்.. பிறர் அறியா வண்ணம் கூட...
பிள்ளையை (குழந்தைகளாகிய மக்களை) அதாவது விட்டு விடுவேன்... பின் அறிந்தும் அறிந்தும்...
உங்களுக்கு யான் என்ன கொடுக்கவில்லை??????
அறிந்தும் நல்லறிவை கொடுத்து அனுப்பி இருக்கின்றேன்...
இதை பல சித்தர்கள் எடுத்துரைத்து!!! எடுத்துரைத்து!!!
ஆனாலும் அவ் நல்லறிவை சரியாகவே பயன்படுத்துவது இல்லை!!!
ஆனாலும் நின்று பின் நீங்கள்... தவறு செய்வதற்கு முன்பே...யான் உணர்த்துகின்றேன்..
.இது தவறு என்று!!!
ஆனாலும் உணர்வதில்லையே!!!
மீண்டும் தெரிவிக்கின்றேன்... யாராவது மூலமாக ஏற்படுத்தி.. நிச்சயம் அதை தடுக்கின்றேன்.
ஆனாலும் போய்க் கொண்டு !! போய்க் கொண்டு!!
ஏன் ?எதற்கு? எவை என்று புரியாமல்!!... நீங்கள் கேட்டதை தான்.. யான் தருகின்றேன்!!!
ஆனாலும் நீங்கள் அறிந்தும் புரிந்தும்... நீங்களே ஒவ்வொன்றாக ஏற்படுத்தி ஏற்படுத்தி கொண்டதே!!!
அறிவீர்களா!???
செப்புவீர்களா!??... மனதை தொட்டு!!!
நிச்சயம் யான் செப்புவேன்.. என்னிடத்திலிருந்து!!!
திருடர்கள் தான் அதிகம்... இன்னும் உழைக்க முடியவில்லையே!!!
இன்னும் பின் அறிந்தும் கூட அறிந்தும் புரிந்தும்.. பின் அதாவது இவ் வேடம்... சாமியாராம்!?!?!?
எதை என்று புரிய நிச்சயம்... யான் நகைக்கின்றேன் நகைக்கின்றேன்!!!
சாமி யார்? என்றே தெரியவில்லை!!
அவனுக்கு! அவன் சாமியாராம்....!?!?!?!?!?
அறிந்தும் எப்படி? இவையெல்லாம் நம்புவது???
ருத்ராட்சை இடுவது!! கண்களை மூடிக்கொண்டு தியானங்கள் போல்!! நடிப்பது!!!
அதைச் செய்கின்றேன். இதைச் செய்கின்றேன் என்று சொல்வது!!!
நிச்சயம் அவனைக் காப்பாற்ற முடியவில்லையே!!!
அவன் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே!!!
அவன் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே!!!
ஐயகோ!!!... அறிந்தும் என்ன பயன்???
இவையெல்லாம் காப்பாற்ற தெரியாதவனுக்கு... நிச்சயம் என் மீது பாசம்!?!?!?!?!...
நமச்சிவாயா என்று சொல்கின்றானே... நியாயமா??????
தர்மமா???????
அறிந்தும் மனதை தொட்டு சொல்லுங்கள்..
நிச்சயம் உன் மனைவியை பாருங்கள்.. இல்லத்தில்.. நிச்சயம் உன் தாய் தந்தையரை பாருங்கள் இல்லத்தில்... மகனை பாருங்கள் இல்லத்தில்!!
ஐயகோ !!!... இவையெல்லாம் விட்டுவிட்டு.... நடித்தீர்கள் என்றால்....!?
கைலாய மலையில் இருந்து சொல்கின்றேன்... அடிப்பேன் பலமாக! பலமாக!
மீண்டும்.. நீங்கள். நீங்கள் உன்னை தானே... நமச்சிவாயா என்று சொன்னேன்!!!
ஆனால் அப்படி கூறக்கூடாது!!!
உன்னைத்தானே இன்னும் பல பாடல்களை... பாடினேனே!!!... எதற்கு ஈசன் என்றெல்லாம்!! நிச்சயம் கூறக்கூடாது!!!
அவரவர் செய்த தண்டனைகள்... அவரவர் செய்த பாவங்கள்... உடனடியாக கலியுகத்தில்..யான் வழங்குவேன்!!!
தவறான கண்ணோட்டத்தில் உற்றுப் பார்ப்பவர்களை... கண்ணை மங்க செய்து விடுவேன்.
சொல்லிவிட்டேன்!!!
தவறான வார்த்தைகளை காதில் கேட்பவனை... பின் காதில் பின்... மாயமான நோயை.. ஏற்படுத்துவேன்!!!
தவறான நிச்சயம் தன்னில் கூட.. உச்சரிப்பவனை... பற்களே இல்லாமல் செய்து விடுவேன்!!!
பின் அறிந்தும் இன்னும் பல... வழிகளில் கூட அறிந்தும் புரிந்தும்... பொய் சொல்லுபவனை கூட நிச்சயம்... பின் இருதயத்தில்... அறிந்தும் புரிந்தும்... சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவேன்.
அவை மட்டும் இல்லாமல் நடுக்கங்களை.. ஏற்படுத்துவேன்... அவை மட்டும் இல்லாமல்... இன்னும் பின் சரியாக நீங்கள்.. இன்னும் உண்ணும் உணவு அதாவது... இனிப்பு அனைத்தும் அறுசுவை உணவு உண்ணாதவாறு யான் செய்து விடுவேன்.
சொல்லிவிட்டேன்.. கயிலாயத்திலிருந்து!!!
பக்தர்கள் பின் கோடி கோடியாகவே நிச்சயம் தன்னில் கூட நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்... நமச்சிவாயா நமச்சிவாயா என்று சொல்லி!!!
ஆனால் நீங்கள்... மனிதனிடத்தில் நடிக்கலாம்... ஆனாலும் பின் என்னிடத்தில்... நடிக்க முடியாது!!!
அறிந்தும் சொல்லிவிட்டேன்.
ஏன் எதற்கு இன்னும் சித்தர்களை... அனுப்பிக்கொண்டே இருக்கின்றேன்!!!
பின் செல்லுங்கள் மனிதனை திருத்துங்கள்!!
திருத்த முடியவில்லை என்றால் அடியுங்கள்!!! என்றெல்லாம்!!!
ஆனாலும் திருந்தவில்லையே!!!
பின் நமச்சிவாயா என்று சொல்லிவிட்டால்... அனைவரும் ஒன்றே!!!
ஆனால் ஒருவன் நமச்சிவாயா... என்று சொன்னால்..... மற்றொருவன்... அவன் பொய்யன் என்று கூறுகின்றான்.... இவன் மற்றொருவனை பொய்யன் என்று கூறுகின்றான்.... இவன்.
ஆனாலும்... ஒருவனை நிச்சயம் தன்னில் கூட.... யான் படைத்தவனை குறை கூறும் தகுதி... யாருக்கும் இல்லை!!!!
சொல்லிவிட்டேன்!!!
அவ்வாறு குறை கூறுபவன் நிச்சயம் தன்னில் கூட... மனிதனுக்கு அதாவது மனிதனாக வாழ தகுதியற்றவன்... தகுதியற்றவன்.
ஏது எதை என்று புரியாமல்... தவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்
அதாவது எவ்? சக்தி... பார்வதி தேவியின் சக்தியை விட!!!
பார்வதி தேவிக்கு சக்திகள் அதிகம் கொடுத்துள்ளேன்!!!
அவ் சக்தியை விட பின்.. எது சிறந்தது??? இங்கு!!!!
இன்னும் இன்னும் பூசைகள்... புனஸ்காரங்கள்... என்ன ஏது அறிந்தும் கூட நிச்சயம்... அன்பில்லாமல் செய்தால்... யான் எதையும் ஏற்கப்போவதில்லை!!!
சொல்லிவிட்டேன்!!!
ஆனால்... கேட்டால் ஈசனை வணங்கினால்... நிச்சயம் தரித்திரம் வரும் என்று!!!
அதாவது இன்னும் மேலே சென்று..... நிச்சயம் ஈசனை இல்லத்தில் வைக்கக்கூடாது.. என்று!!!
அடடா!!!..... படைத்தவன் எதை என்று புரிய!!!!
படைத்தவன் யார் என்று தெரியாமலே!!!
ஏன் ?எதற்கு?.. இவையெல்லாம்... மனிதனிடத்தில் விட்டுவிட்டேன்... செல்லக் குழந்தைகள் என்று என்று!!
ஆனாலும் கடைசியில் பார்த்தால்... மனிதன் என் தலை மேலே... காலை வைக்கின்றானே!!!!!!!
அதுதான் நிச்சயம் தன்னில் கூட!!!!
பார்வதி தேவி பல அவதாரங்களில்.. பல அவதாரங்களில் வந்து கொண்டிருக்கின்றாள்.
தற்பொழுது வராகி எனும்... பின் அவதாரத்தை எடுத்து.. நிச்சயம் மனித குலத்தை காத்து... சில அரக்கர் கூட்டங்களை அழித்து அழித்து...
ஏன் எதற்கு நம்பியவர்களை பின்... நிச்சயம் யாங்கள் அதாவது.... அறிந்தும் பின் புரிந்தும்.... எதை என்று அறிய அறிய... தன் மகன் பின் முருகனும்... பிள்ளையோனும் (கணபதி) பின் அய்யனும் (ஐயப்பன்)... அறிந்தும் கூட பின் கைவிடப் போவதில்லை!!!
ஆனால் நிச்சயம் பெயரைச் சொல்லி... ஏமாற்றினாலே நிச்சயம் தண்டனைகள் உண்டு... நீங்கள் வெறும் கையோடு தான் பின் வணங்க வேண்டுமே தவிர!!
நிச்சயம் இன்னும் அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது!!
அதை சித்தர்களே எடுத்துரைப்பார்கள்!!!
அதை தடுப்பதற்கும் வழிவகை செய்வார்கள்.
ஆனாலும் நிச்சயம் நீங்கள்.. பின் அதை ஏற்று... நடக்கவில்லை என்றால்... நிச்சயம் தன்னில் கூட..... சித்தர்கள் ஒருவருக்கு வந்து வாக்குகள் செப்புவதில்லை.....
அனைவரும் பின் எம் குழந்தைகளே என்று.. சித்தர்களுக்கு தெரியும்!!
அனைவர்களையும் கூட நிச்சயம் வரும் காலத்தில்.. கூட்டு சேர்த்து. எப்படி இயக்க வேண்டும்??... இக்கலி யுகத்தில் எப்படி? வாழ்ந்தால்? நன்மைகள் பெற வேண்டும்... என்பதையெல்லாம்... அறிந்து தானாகவே... செப்புவார்கள் .. அறிந்தும் புரிந்தும்.
மனிதனே!!!.. பல சக்திகளை கொடுத்துள்ளேன்.. பல சக்திகள் கொடுத்துள்ளேன்!!!
ஆனாலும் ஏன் நீங்கள் பயன்படுத்துவதில்லை??? சொல்லுங்கள்???
எதை? யார் மீது தவறு???
இன்னும் கலியுகத்தில் குறுக்கு வழியில் குறுக்கு வழியில்.. சம்பாதித்து சம்பாதித்து... எதை என்று புரியாமலும்... எதை என்று அறியாமலும் அனைத்தும்.. சேர்த்து வைத்து கடைசியில்...அது பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகின்றது!!
ஆனாலும் உண்மை நிச்சயம் சத்தியம் ஜெயிக்கும்
தர்மத்தை கடைபிடியுங்கள்... நேர்மையாக வாழுங்கள்!!!
இவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு.. சொல்ல நிச்சயம் அறிந்தும்... யான் கடமைப்பட்டவனா??? என்பதையெல்லாம் நினைத்தால்... நிச்சயம் தன்னில் கூட!!
ஏனென்றால்... என்னிடத்தில் வந்து விட்டார்கள் !!
இதனால்.. யான் அறிந்தும் நிச்சயம் பின் வாக்குகள்.. பின் இட்டே ஆக வேண்டும்.. என்பது என் எண்ணி வந்து விட்டார்கள்.
இதனால் ஈட்டியே ஆக வேண்டும் வாக்குகளை!!!
இதனால் தான்... இன்னும் அறிந்தும் பல.. கட்டிடங்கள் நிச்சயம் சரியப் போகின்றதே!!!
நிச்சயம் இதற்கும் சித்தர்கள்..........
ஏன்? அறியும் மனிதர்களுக்கு.. உணர்த்துகின்றார்கள் பலர்.
நிச்சயம் அதை இதை என்று... பணத்தை வாங்கிக் கொள்கின்றார்கள்.. நிச்சயம் அப்பணம் என்பது எப்படி? ஏது? என்று... தன்னை வாழவைக்குமே தவிர... தன் பிள்ளைகளையும் வாழ வைக்காது.. தன் மனைவியையும் வாழ வைக்காது... தன் சொந்த பந்தங்களைக் கூட வாழ வைக்காது.
ஏனென்றால் நிச்சயம்...யான் படைத்தேன் இங்கு மனிதனை!!!
எனக்கு மட்டுமே தகுதி இருக்கின்றது!!!!
பின் இப்படிச் செய் அப்படி செய்!!.. எவ்வாறு எப்படி பின் விதியை.. எங்கிருந்து மாற்றுவது என்பதை கூட.....
ஆனாலும் மற்றவர்கள் எடுத்துக் கூறினால் நிச்சயம்... அழிவுதான்!!
சொல்லிவிட்டேன்...
சொல்பவனுக்கும் அழிவு!!!
கேட்பவனுக்கும் அழிவு!!!
நிச்சயம் மனித குலங்களே!!!
அழகாக உங்களை அருளக்கூடிய... சித்தர்கள் இருக்கின்றார்கள்... காப்பாற்ற அருள் கூர்ந்து இன்னும்.. பின் தன் அறிந்தும்... புரிந்தும்!!!
ஏன்?... இவ்வளவு கேவலமாக..?????
. நிச்சயம் படைத்தேனே!!!..யான் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய..
ஏன் கேவலமாக நடந்து கொள்கின்றீர்கள்???
நன்றாகத்தான் படைத்தேனே!!!
இன்னும் நிச்சயம் தன்னில் கூட.. சரியாக மனசாட்சியோடு... வாழவில்லை என்றால்.. அனைத்தையும் அழித்துவிட்டு சென்று விடுவேன்!!
சொல்லிவிட்டேன் இங்கிருந்தே!!.. பின் என் கைலாயத்தில் இருந்தே சொல்கின்றேன் மீண்டும் மீண்டும்.
நல் மனதாக இருங்கள்.. அறிந்தும் புண்ணியம் செய்யுங்கள்.. நல் மனசாட்சியோடு பிறருக்கு நிச்சயம்.. தீங்கு செய்யாது வாழுங்கள்!!
அனைத்தும் யான் கொடுக்க தயார்!!!
பிள்ளைகள் நிச்சயம் அனைவருமே எங்கள் பிள்ளைகள் தான்.. நிச்சயம் தன்னில் கூட... எங்கள் பிள்ளைகளை யாங்கள் விட்டுவிடுவோமா?? என்ன!!!
ஆனால் பிள்ளைகள் சரியில்லாத நேரத்தில்..யாங்கள் நிச்சயம் அழிப்போம்!!
அனைத்தும் எங்களுக்கு சொந்தமானது.. அனைத்து உயிர்களுமே எங்களுடைய.. உயிர் போன்றது!!
இதில் கூட நிச்சயம் ஏதாவது சாகடித்து.. சாகடித்து!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட விதி பின்.. போகும்.... அவை தன் என்னிடத்தில் வந்து விடும்......
ஆனாலும் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட.. என்னால் படைக்கப் பட்டதை... நீங்கள் அழித்தால் நிச்சயம்... உங்களை பின் சிறுகச் சிறுக... நிச்சயம் பின்.. நோயை விட்டு நிச்சயம் அழித்திடுவேன்.
சொல்லிவிட்டேன்.
மாற்றுவேன் நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட மாற்ற முடியும்... ஆனாலும் நிச்சயம் பின் எல்லை மீறிப் போய்விட்டது கலியுகத்தில். நிச்சயம் தன்னில் கூட.
இதனால்தான்.. சித்தர்கள்.. ஆங்காங்கு வந்து பின்... நல்முறையாக நல் மனதோடு செப்பி கொண்டிருக்கின்றார்கள் வாக்குகளை....
அவை மட்டும் இல்லாமல்... வேலோடு தன் மைந்தன் நிச்சயம் தன்னில் கூட... அனைத்து இல்லங்களிலும் திரிந்து கொண்டிருக்கின்றான்.... யார் ?யார் ?எவர்? என்ன தவறு? செய்கின்றார்கள்?? என்பதை!!
அவை மட்டும் இல்லாமல்.. ஞான பிள்ளையோன் தன் மகன்... எங்கெங்கு அநியாயங்கள் அக்கிரமங்கள் நடக்கின்றது.. எவை விதி இவன் என்ன.. செய்கின்றான்?? என்றெல்லாம்
அங்கங்கு நிச்சயம் இருக்கின்றான்!!!
அதைக் கூட நிச்சயம் புரியாமல்.. தெரியாமல் நிச்சயம் அப்படியே.. அதாவது எங்கெங்கோ பின்.. என் .பிள்ளை ஞான கணபதியோன் இருக்கின்றான்...
நீங்கள் கடந்து செல்கின்ற பொழுது.. அவன் பதிவு செய்து கொண்டே இருக்கின்றான்... எழுதிக் கொண்டே இருக்கின்றான்.... பிரம்மாவிற்கு இருக்கும் தகுதி அவனுக்கும் உண்டு!!!
இப்பொழுது.. நிச்சயம் தன்னில் கூட.
இதனால் தான் அங்கங்கு கணபதி.. நிச்சயம் இருக்கின்றான்... நிச்சயம் தன்னில் கூட.
இவை விட்டுவிட்டு.. நிச்சயம் கடந்து சென்று விட்டால்.... நிச்சயம் அவனை வணங்குகின்றீர்களே... அவன் கணக்கு சரியாக எழுதுவான்.
ஆனால் அக் கணக்கில் இருந்து நீங்கள்.. தப்ப முடியாது!!
சொல்லிவிட்டேன் அறிந்தும்... இன்னும் ஞானிகள் சித்தர்கள்.. வாக்குகள் வந்து செப்புவார்கள்.. நல்லோர்களை உயர்த்தி அறிந்தும் புரிந்தும்.. இன்னும் உலகத்தை பின்.. காப்பாற்ற நிச்சயம் சித்தர்கள் ஓடோடி.. வந்து கொண்டே இருக்கின்றார்கள்...
தவறு செய்யாது அறிந்தும் குழந்தைகளே... நல்மனதாகவே இருங்கள்...யான் கொடுக்கின்றேன் அனைத்தும் உங்களுக்கு.... பின் அதாவது அறிந்தும் புரிந்தும் கூட...
பார்வதி தேவியார்:
தேவாதி தேவனே!!!... நிச்சயம் நில்லுங்கள்!... பின் இவ்வளவு சொல்கின்றீர்களே!!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட.
நிச்சயம் குழந்தைகள் அனைவருமே பின் நன்றாக இருப்பார்கள்.. நிச்சயம் தன்னில் கூட.
யான் பூலோகத்தில் நிச்சயம் தன்னில் கூட... வாராஹி... ஏற்றம் கொண்டு.. அனைவரையும் காத்தருளுகின்றேன்... இது சத்தியம்!!!
நிச்சயம் தன்னில் கூட... அனைவரின் மனதையும் குழந்தைகள்.. மனதையும் யான் மாற்றுவேன்... கைலாயத்திலிருந்தே உன் மீதே சத்தியம் வைக்கின்றேன்!!
இதோடு என்னோடு சித்தர்களும் இருக்கின்றார்கள்.. பின் பிள்ளை.. குரு அறிந்தும் புரிந்தும்.. முருகனும் கணபதியோனும் அய்யனும் இருக்கின்றான்... என்னிடத்தில்.
இதனால் மாற்றுவோம்!!
கவலைப்பட தேவையில்லை... அமைதியாக இருங்கள் தியானத்தில் இருங்கள்.
போதுமானது!!!
ஆசிகள் ஆசிகள் அனைவருக்குமே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete