​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 August 2025

சித்தன் அருள் - 1915 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 5 ( சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள் ) 

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4)

குருநாதர் :- இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே, இறைவன் கேட்டால் தருவானா? தரமாட்டானா? 

அடியவர்கள் :- கண்டிப்பாகத் தருவார் ஐயா. 

குருநாதர் :- அப்பொழுது பின் நீங்கள் கேட்டுத்தான் தரவேண்டுமா என்ன? 

அடியவர் :- கேட்கவே வேண்டியதில்லை.

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது அப்பனே. பின் அழிவு நிலைக்குத்தான் சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. பின் அவ்அழிவு நிலையிலிருந்து உங்களால் காப்பாற்ற முடியுமப்பா. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட நவகோள்களும் அதாவது புவியின் விசையும் கூட சமமாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.  அப்படி நிச்சயம் சமமாக இல்லையென்றால் நிச்சயம் பல வேகத்தில் வந்து அதாவது கிரகங்களில் இருந்து  ஒளிகள் வேகமாக வந்து ( பூமி மீது மோதி , இடித்து ) புவியில் இடிக்கும் பொழுது பின் அழிவுகள் திடீர் திடீரென்று ( உண்டாகும் ) அப்பனே. 
பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே ராகு , புவியை நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்பேன் அப்பனே. இதனால் நிச்சயம் அழிவுகள்தாப்பா அதிகம்.  

அப்பனே அவை மட்டும் இல்லாமல் சண்டைகள் அப்பனே. அவை மட்டும் இல்லாமல் மனது தீய வழியில் செல்லும் அப்பா. 

அறிந்தும் அதை நிறுத்துவது எவ்வாறு என்று உங்களுக்குத் தெரியுமா என்ன?  நிச்சயம் தாயே தெரியாது. இதனால்தான் இவற்றுக்கெல்லாம் ஏன் எதற்கு அதாவது நரகத்தில் இருக்கின்றானே மனிதன் அவர்களை மீட்டெடுக்க யாங்கள் சித்தர்கள் வந்திருக்கின்றோம். 

அறிந்தும் ( ராகுவானவன் ) நிச்சயம் பின் நெருங்கிவிட்டால் அதாவது  ஒரு விசை அதிலிருந்து வரும். நிச்சயம் அவ்விசையானது புகை வடிவிலிருந்து , பின் அனைவரும் , அதாவது கண்களுக்குத் தெரியாது. நிச்சயம் மனிதனை நெருங்க, மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். 

அப்பனே, அம்மையே பின் அதை யாங்கள் காக்க வேண்டுமா? பின் உங்கள் சுயநலத்திற்காக காக்க வேண்டுமா? சொல்லுங்கள்?

அடியவர்கள் :- (அனைவரும் ஒரு மித்த குரலில்) எல்லோரையும் (காப்பாற்ற வேண்டும் ஐயா). 

குருநாதர் :- அப்பனே இவ்வாறாக நீங்கள் வேண்டிக்கொண்டாலே, இவ்வாறாக மனம் வந்து விட்டாலே யான் உங்களைக் காப்பாற்றி விடுவேன் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- நாம் வாழ வேண்டும் என்ற மனது எப்போதும் வைக்காமல், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அது எனக்கு திருப்தியப்பா என்று சொல்கின்றார். 
அம்மா புரியுதுங்களா? 

அடியவர் :- அதைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?

குருநாதர் :- அப்பப்பா உலகத்தில் இல்லையப்பா மனிதன். ( உலகைக் காக்கும் தகுதி மனிதர்கள் எவரிடத்திலும் இல்லை) 

அப்பனே இவ்வாறாகவே பல ஞானங்கள் உண்டு அப்பனே. இதனால் அப்பனே மனிதன் அதாவது இறைவன் அழகாக மனிதனை அனுப்பினான் என்பேன் அப்பனே உலகிற்கு. ஆனால் மனிதனாலே உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டே இருக்கின்றது. 

அப்பனே தன் பிள்ளைகள் செல்லப் பிள்ளைகள், செல்லப் பிள்ளைகள் என்று இறைவன் விட்டுவிட்டானப்பா. அவ்வளவுதான். 
ஆனால் இறைவனை எதிர்த்து நிற்கின்றான் மனிதன் அவ்வளவுதான் அப்பா கலியுகத்தில். 

அப்பனே இதனால் நிச்சயம் அதாவது நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்றால், அனைவருமே நிச்சயம் ஒரு பிறப்பில் எனை சந்தித்தவர்கள்தான். 

(இவ்சத்சங்கத்தில் கலந்து கொண்ட அனைவரும், முற்பிறப்பில் சித்தர்கள் வழியில் தொடர்பு உள்ளவர்கள். நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவரை முற்பிறவியில் நேரில் சந்தித்தவர்கள். ) 

இதனால் அப்பனே நீ சொன்னாயே ( உலகைக் காப்பது எப்படி என்று கேட்ட அடியவர்) , இதனால்தான் அப்பனே நவ தீபத்தை, நவகிரக தீபத்தை ஏற்றச் சொன்னேன் மற்றவர்களுக்காக. 

அடியவர் :- இனி கண்டிப்பாக தொடருவேன் ஐயா. 

குருநாதர் :- அப்பனே ஆனாலும் யாரும் அதைப் பின் பற்றவில்லையப்பா. சுய நலத்திற்காக பின் பற்றினார்கள் என்பேன். அப்பொழுது மனிதனின் அழுக்குகள் எவ்வளவு நிறைந்திருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

அடியவர் :- Main Taskகே இதுதான். 

(நவகிரக தீப வழிபாடு என்பது தனக்காக, தன் குடும்பத்திற்காக ஏற்றாமல், பிறருக்காக பொது நலத்திற்காக ஏற்ற வேண்டும். சுயநலமாக நவகிரக தீபம் ஏற்றினால் கஷ்டத்தை அள்ளித் தந்துவிடும் என்று பொருள் கொள்க.) 

குருநாதர் :- அப்பப்பா, இன்னும் அழிவுகள்தான் அதிகம் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே நிச்சயம் பின் யாங்கள் அனைவரையுமே காக்க வேண்டும். 

நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் சேர்ந்து நிச்சயம் சிவபுராணத்தைப் பாடுதல் வேண்டும். 

( பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகு கிரகத்தைத் தடுத்து நிறுத்த, இவ் உலகைக் காக்க நம் அன்பு குருநாதர் காட்டிய வழியில் அடியவர்கள் ஒருமித்த குரலில் கூட்டுப் பிரார்த்தனையாக முதல் முதலாக ஓங்கி ஒலித்தது சிவபுராணம் பாடல் அங்கு. இவ்ஆலயம் பல நூறு வருடங்களுக்கு முன்பு அன்னை லோபாமுத்ரா உடன் குருநாதரால் திருவாசகம் மற்றும் பல ஞான உபதேங்கள் போதிக்கப்பட்ட மகத்தான குருகுலம் என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம்.  அதனாலே குருநாதர் இங்கு எழுந்தருளுகின்றார். மகத்தான ஆலயம். அவ்புண்ணிய குருகுலத்தில்,  அடியவர்கள் ஒருமித்து சிவபுராணம் பாடலை மிக அழகாப் பாடி முடித்தனர். )

குருநாதர் :- அழகாகவே எதை என்றும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே அனைவரும் நிச்சயம் பக்தர்கள் சேர்ந்து,  அனைவருமே சந்தோசம் நிரம்பி நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே நிச்சயம் அனைத்தும் நடக்கும். 

தாயே!! தந்தையே!! இதன் ரகசியத்தை உணர்ந்து , இதனால் ராகுவானவனைக் கட்டுப்படுத்த ஒரே வழி நிச்சயம் ( சிவபுராணம் ) இவ்பாடலே என்பேன்.

இதைத்தன் அதாவது உடம்பில் பல துகள்கள்,  நுண்ணிய உயிர்கள் நிச்சயம் தன்னில் கூட அங்கங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனை இவ்வாறாகக் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டால் , நிச்சயம் அவைதன் வாயிலிருந்து வெளிப்பட்டு , நிச்சயம் பின் மேல் சோக்கிச் சென்று,  நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட, நல் உள்ளங்களாக அதாவது எண்ணங்கள் எப்படி இருக்கின்றதோ அவ்வாறாகவே அத்துகள்கள் நிச்சயம் தன்னில் கூட ஆடி அசைந்து (மேல் நோக்கி) நிச்சயம் செல்லும். செல்கின்ற பொழுது நிச்சயம் நேரடியாகக் கிரகங்களை பின் இவ்அலைகள் தாக்குகின்ற பொழுது, அப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட அதற்கு பின் சக்திகள் எவ்வளவுக்கு பலம். இவ்சக்திகள் தாக்குகின்ற பொழுது பின் சில தண்டனைகள் அதாவது சில பேரழிவுகள்  நிற்கும் ஐயா. 

நிச்சயம் அனைவரும் ஒன்றாக இப்படி இனைந்து நிச்சயம் பின் தியானங்கள் செய்தால் , அனைவரிடத்திலும் இருந்து நிச்சயம்  அதாவது மேல் நோக்கிச் செல்லும். மேல் நோக்கிச் செல்கின்ற பொழுது ( கிரகங்களிடம் இருந்து வரும்) அவ்காந்த அலைகள் கீழ் நோக்கி வருகின்ற பொழுது , அதாவது அறிந்தும் கூட இன்னும் கீழ் நோக்கி வராமல் அப்படியே இவ்சக்திகள் கூட சமமாக நிற்கின்ற பொழுது , நிச்சயம் பின் பேரழிவுகள் தவிர்க்கப்படும். 

( கூட்டுப் பிரார்த்தனை என்பது அதி உச்ச முதல் வகைப் புண்ணியங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு உண்டாக்கும் உன்னத,  மகத்தான , மகிமை புகழ் வழிபாடு. ஏனெனில் இங்கு உலகமே பேரழிவுகளிலிருந்து காக்கப்படுகின்றது.  ) 

இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

( நம் குருநாதர் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete