வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911 - பகுதி 3 )
குருநாதர் :- தாயே நிச்சயம் இங்கு ஒரு உயிர் வந்தால் அது நிச்சயம் திரும்பிச் செல்லும். தாயே அதாவது பின் நீயே இவ்வளவு பாசம் என்றால், பின் அதாவது இறைவன் படைத்திருக்கின்றான் தந்தையாக. பின் ஆனால் அவனுக்கு எவ்வளவு பாசங்கள் இருக்கும்? இதனால் அவன் நிச்சயம் அனுப்பிவிடுகின்றான் ஆனாலும் இவ்ஆன்மாவை. அதாவது நம்மிடத்திலேயே இருந்ததே, சென்றுவிட்டதே என்று அதாவது குழந்தையாக. மீண்டும் குழந்தையும் இறைவனிடத்தில் பாசம் வைக்கும். ஆனால் மீண்டும் அவ்ஆன்மா இவ்வுலகத்தை விட்டுப் பிரியும் போது…
“””இறைவா!!! நிச்சயம் யான் வந்து கொண்டே இருக்கின்றேன். தந்தையே”””” என்றெல்லாம் பாசத்தோடு. இறைவனும் பாசத்தோடு அணைப்பான். இப்பொழுது இங்கு யார் பாசம் பெரிது?
அடியவர்கள் :- இறைவனுடைய பாசம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனுடைய பாசம். உங்கள் பாசம் எல்லாம் பொய் என்று சொல்லுகின்றார்.
குருநாதர் :- நிச்சயம் அதாவது தந்தை, தாயுடனே இருந்து விடலாமே? திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாமே என்ற எண்ணம் முதலிலிருந்து வருகின்றதா என்ன? நிச்சயம் ..
தாயே! ஒவ்வொரு மணித்துளிகளிலும் கூட அதாவது இக்குழந்தையை ( உங்களை ) நிச்சயம் பின் அனுப்பிவிட்டோமே? என்று இறைவன், எப்படி வாழப்போகின்றான் நரகத்தில் என்றெல்லாம் நிச்சயம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு secondஉம் , உங்களைப் பற்றி இறைவன் யோசித்துக்கொண்டே இருக்கின்றார் இறைவன். எப்படியடா நம்ப பசங்க வாழ்வாங்க? எப்டா அந்த ஆன்மா மூட்டும் நம்மிடம் திரும்பி வரும் ? அதுதான் அன்பு. அம்மா? இறைவன் வைத்திருக்கின்றது பெரிய அன்பு. இறைவன் நம்மீது வைத்திருப்பது அளவில்லாத அன்பு. ஆனால் நாம் வைத்திருப்பது, அதெல்லாம் பொய் என்கின்றார்.
குருநாதர் :- தாயே நிச்சயம் எவ்வளவு பாசங்கள் இருந்தாலும் பின் ஒரு மாதம் அல்லது ஒரு வருடமாகவே வைத்துக் கொள்ளலாமே!! அவ்வளவுதான். ( மனிதர்களின் பாசம் - இறைவன் மீது ) நிச்சயம் தன்னில் கூட. ஆனால் இறைவன் அவ்ஆன்மாவை எப்பொழுதும் மறப்பதில்லை.
அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட அதாவது படைத்து விட்டோமே!!! பின் அதாவது காப்பாற்றிவிடுவோம் என்றெல்லாம் நிச்சயம் அருகிலே, அருகிலே துடி துடித்துக் கொண்டிருக்கின்றான் இறைவன். (அதாவது நாம் தவறான கர்மங்கள் செய்து விடாமல்)
ஆனால் அதைத் தெரியாமல் பின் அதாவது பாசம் யாரிடத்தில் செலுத்துவது என்று தெரியாமல் செலுத்தி வந்து கொண்டே இருக்கின்றான் மனிதன். அதாவது புத்தி கெட்ட மனிதன்தான்.
நிச்சயம் குழந்தை பிறக்கின்ற பொழுது, யான் சொல்லி, பல பின் உரையில் சொல்லி இருக்கின்றேன்.
“”””””””ஆ”””””””””
உலகத்தில் பிறந்துவிட்டோமே … அழுது கொண்டே ( பிறப்பான் மனிதன்). ஆனால் (உயிர் பிரிந்து) போகும் பொழுது அவ்ஆன்மா நிம்மதியாக அடடா !!!! இறைவனிடத்தில் செல்கின்றோமே!!! என் தந்தையிடத்தில் செல்கின்றோமே என்று. ஆனால் அனைத்து பந்த பாசங்களும் மறந்துவிட்டுச் செல்லும் இங்கு.
ஆனால் மனிதனோ அறியாது, போய் விட்டதே, போய் விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருப்பான். நிச்சயம் ஒவ்வொரு ஜீவராசிகளும் இறைவனுக்குச் சொந்தமானது தாயே!
ஆனாலும் நிச்சயம் ஒரு உயிரைக் கொன்று, நிச்சயம் பின் அதையும் உட்கொள்கின்றானே மனிதன், இன்னும் அழிவுகள் பலமாக வரும்.
தாயே!!! இதனால்தான் நிச்சயம் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழுங்கள் என்றெல்லாம். நிச்சயம் இவ்வாறு இருந்தால் மட்டும்தான், அதாவது நிச்சயம் இறைவன் சொந்தமான உயிர்களை நிச்சயம் எதுவும் செய்யாமல் இருந்தால் மட்டுமே இவ்வுலகம் பிழைத்துக் கொள்ளும். இல்லையென்றால் அழிவுகள் இன்னும் இன்னும் பலம் பலம்.
தாயே நிச்சயம் உங்களால் முடியுமென்றால் இவை நிறுத்த நிச்சயம் முடியாது. இதனால்தான் இறைவன் கோபத்தை அதிகப்படுத்தி நிச்சயம் அனைத்து உயிர்களையும் அழிக்கின்றான். இது தவறா ?????
அடியவர்கள் :- ( ஆழ் சிந்தனை அமைதி )
குருநாதர் :- அதனால் இவை எவ்வாறு நியாயம்? நிச்சயம் தன்னில் கூட மற்ற உயிர்களைக் கொன்றால் பின் (மனிதன்) அழுவதில்லை. ஆனால் மனிதன் உயிரைக் கொன்றால் (மனிதன்) அழுகின்றது. பின் நிச்சயம் இதற்குப் பதில் வர வேண்டும்?
அடியவர் :- ரத்த பாசம் ( அதனால் மனிதன் அழுகின்றான் )
குருநாதர் :- பின் அவைகளுக்கும் பந்த பாசம் இருக்கும் அல்லவா???
அடியவர் :- (…..)
குருநாதர் :- இதனால் நிச்சயம் அப்பனே இவ்வாறு (அப்பாவி உயிர் வதையால்- ரத்த ஆறு) பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருந்தால் நிச்சயம் அப்பனே உயிர்கள் அழிந்து கொண்டே இருக்கும் மனித உயிர்கள்.
அதாவது ராகுவானவன் செயல்பட்டுக் கொண்டேயிருப்பான். அனைத்தும் எரியச் செய்வான். அப்பனே நிச்சயம் ராகுவானவன் கண்ணுக்குத் தெரியாத நிழல் கிரகங்களெல்லாம் எடுத்துரைக்கின்றார்கள் அப்பனே ஆனாலும் அப்பனே புவியை நெருங்க இன்னும் பேரழிவுகள் வருமப்பா!!!!
தாயே நீங்கள் சுயநலத்திற்காக்க் கேள்வி கேட்கின்றீர்கள். பின் அவ்சுயநலத்திற்காக யான் சொல்வதா? பின் அதைக் காக்கப்படுவதா? பின் (இவ்வுலகை) காக்கட்டுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் சுயநலத்திற்காக நான் பதில் சொல்வதா? அனைவருக்காகப் பதில் சொல்லவா? என்று கேட்கின்றார் அம்மா.
அடியவர்கள் :- அனைவருக்காகவும் (சொல்லுங்கள் தந்தையே)
குருநாதர் :- தாயே, இதுதான் நிச்சயம் தன்னில் கூட அன்பு. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று யார் ஒருவர் எண்ணுகின்றானோ அவர்களை யானே தானாகவே தூக்கி விடுவேன். நிச்சயம் எண்ணங்கள் மேல்நோக்கி, மேன்மையாக இருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு மனதும் எப்படி இருக்க வேண்டும்????
அடியவர்கள் :- மேன்மையாக … பொது நலத்தோடு இருக்க வேண்டும்.
குருநாதர் :- நிச்சயம் பொதுநலத்தோடு ஆகவே இருந்தால் , நிச்சயம் இறைவன் அனைத்தும் கொடுப்பான். சுயநலத்தோடு இருந்தால் நிச்சயம் கொடுத்து பின் நிச்சயம் துன்பத்தை ஏற்படுத்திவிடுவான். தாயே நிச்சயம் அதனால் எதன் மீது இங்கு பாசம் வைக்க வேண்டும்?
அடியவர்கள் :- இறைவன் மீது.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட மிகப் பெரிய பின் எல்லையில்லாதவன். பின் அவன் மேல் பாசம் வைத்தால்தான், நிச்சயம் அனைத்தும் கிடைக்குமே தவிர , பின் மனிதன், மனிதன் மீது பாசங்கள் வைப்பது பொய்யே!!! அழியக் கூடியதே!!!!
நிச்சயம் அவ்வாறாகவே இறைவன் அன்பாகவே இருக்கின்றான். அன்பாகவே பிறக்க வைக்கின்றான். ஆனால் இங்கு மாயையில் சிக்கிக்கொண்டு , நிச்சயம் இறைவனையே மறந்துவிடுகின்றான். இறைவனோ!! எண்ணுகின்றான். அடடா!! இவ்வாறு தன் மகனையோ, மகளையோ இவ்வாறு பின் நிச்சயம் மாயையில் சிக்கித் தவித்து , நிச்சயம் இவ்வாறெல்லாம் கஷ்டம் நிச்சயம் தன்னில் கூட அதாவது வாழ்க்கையே வீணடித்துக் கொள்கின்றானே!!! நிச்சயம் என்று அறிந்தும் கூட அதாவது எவை என்று
புரிய, இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட.
அடியவர்கள் :- நம்ம குழந்தை மேல நம்ம வருத்தப் படுகின்றோம். அது போல் இறைவன் நம் மீது வருத்தப் படுகின்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- (இப்படி இறைவன் நம்மீது அன்பாக ஒவ்வொரு நொடியும் இருக்கும் பொழுது) ஆனால் ஒரு காலகட்டத்தில் இறைவனை மறந்து விடுகின்றோம். அப்படியென்றால் இது ஒரு பாவச் செயல்தான்.
குருநாதர் :- நிச்சயம் படைத்தவன் இறைவனே!! படைத்தவனுக்குத் தெரியும் யார் யாருக்கு , பின் எப்படி எங்கு எதை என்று அறிய அறிய, எவை என்று புரிய , பின் எவை செய்ய வேண்டும் என்று. இதனால் படைத்தவனைத் தவிர, யாரும் எதனாலும் இங்கு மாற்ற முடியாது.
இதனால் தவறான வழியில் சென்றுவிடுவானே என்பதற்கிணங்க , நிச்சயம் சில சில வழிகளிலும் கூட அதாவது பக்குவங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான். அவ்வளவுதான். இதனால் அனைவருக்குமே ஈசனுடைய ஆசிகளும், நிச்சயம் பரிசுத்தமானவை பார்வதி தேவியினுடைய ஆசிகளும் அண்ணாமலையிலே பல ஆசிகள்.
அப்பப்பா!!! நிச்சயம் தன்னில் கூட அதாவது அன்புடனே யானே அழைத்தேன் உங்களை. அப்பனே அப்பொழுது உங்கள் குறைகளை யான் தீர்க்க மாட்டேனா என்ன? நீங்களே கூறுங்கள் அப்பனே? இதுதான் எவை என்று கூற நம்பிக்கை.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை நான்தான் இங்கு அழைத்தேன். உங்கள் குறைகளை நீங்கள் சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்று கேட்கின்றார் ஐயா?
அடியவர்கள் :- இல்லைங்க ஐயா.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் உங்கள் வாயால் எதை கேட்கின்றேனோ அதை மட்டும் , இதனால் அப்பனே நீங்கள் கேட்டுத்தான் யான் அனைத்தும் செய்ய வேண்டுமென்றால் அப்பனே சித்தர்கள் எதற்கப்பா?
சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் ஒவ்வொருடைய மனதும் எனக்குத் தெரியும் என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் உங்கள் மனதை யான் அறிவேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் மாற்றித் தருகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ உங்க எல்லோருக்கும் ( நீங்கள் இங்கு கேட்க வந்ததை ) கொடுப்பார். உங்கள் ஒவ்வொருவரின் இறைவன் மனதையும் ஆராய்ந்துவிட்டார்.
குருநாதர் :- ஆனால் தகுதிக்கு ஏற்பத்தான் கொடுப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு என்ன கொடுக்கனுமோ அதுக்கு ஏற்ப கொடுப்பேன். பெரியதாக ஆசப்படாதீங்க.
குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட (உங்களுக்கு) பசிக்கின்றது என்றால் (யான்) உணவு கொடுத்தால் போதும் நிச்சயம். ஆனால் அத்துடன் நீங்கள் இன்னும் மேன்மையாகச் சென்று என்ன கேட்பீர்கள்?
அடியவர் :- பூரி, பொங்கல் அது இது என்று ( சிரிப்புக்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஆம். அதெல்லாம் கேட்டுடாதீங்கப்பா. பசிக்குது உங்களுக்கு. அதுக்கு கொடுத்துட்டேன். கரொக்டா சொல்லீட்டீங்க ஐயா. முதல்ல உங்களுக்கு தேவையானதை கொடுத்திட்டு. அடுத்த leavesல் எடுத்திட்டு போவார். அவர் பூரி கொடுப்பதோ, பொங்கல் கொடுப்பதோ அப்புறம்….
அடியவர் :- பிரியாணி… ( சிரிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- (சிரிப்புக்கள்) ஆமாங்க ஐயா. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நிறைவேற்றுவார் ( கொடுப்பார் ).
குருநாதர் :- அப்பனே இறைவன் ஏன் அனைவருக்கும் ( கேட்டதை எல்லாம் ) கொடுப்பதில்லை?
அடியவர்கள் :- ( அமைதி )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் அதைக் கொடுத்தாலும் உங்களால் அதைக் காப்பாற்ற முடியாதப்பா. அப்பனே நிச்சயம் அவ்வாறு காப்பாற்றுவதற்கான தகுதிகள் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய தேர்வுதான் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- Exam எழுதனும். Exam எழுதி pass செஞ்சா மட்டுமே உங்களுக்கு என்ன தேவையோ அது கொடுப்பார்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எதை என்று புரிய சிலர் நிச்சயம் தன்னில் கூட 20, சிலர் நிச்சயம் பின் 30 , சிலர் பின் 40, ஆனாலும் சிலர் பின் 50, ஆனாலும் சிலர் 60ம். இவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- சிலர் 20 மார்க் எடுக்கிறாங்களாம் 100க்கு. சிலர் பேர் 30, 40, 50 , சில பேர் 60. அதுக்கு மேல யாரும் இல்ல இங்க.
குருநாதர் :- முதலில் 20ஐ , 60 ஆக்குவோம். ( 20 மார்க் எடுக்கும் மாணவர்களை 60 மார்க் எடுக்க வைக்க இறைவன் சித்தம் )
இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் 22,23 June 2025 ஆம் ஆண்டு , மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…...)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDelete