​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 26 August 2025

சித்தன் அருள் - 1924 - அன்புடன் அகத்தியர் - மானசரோவர் வாக்கு!






9/8/2025 அன்று பார்வதி தேவியார் சிவபெருமான் காகபுஜண்டர் மகரிஷி இடைக்காடர் சித்தர், அழுகிணி சித்தர் போகர் பெருமான் அகத்தியர் மகரிஷி உரையாடிய வாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம்: மானசரோவர் ஏரி. சக்தி பீடம் கைலாஷ் யாத்திரை.திபெத்.சீனா.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே.....திரு அகத்தியர் மைந்தன் இந்த கைலாஷ் மானசரோவர் யாத்திரை நேபாளம் வழியாகத்தான் செல்ல முடியும்... அப்படி நேபாளம் வழியாக யாத்திரை துவங்குவதற்கு முன்...நேபாள் பசுபதி நாதர் ஆலயத்திலும் தரிசனம் மற்றும் குருநாதர் வாக்குகள் தந்தார்... அப்போது குருநாதர்...அப்பனே இங்கெல்லாம் பரிபூரணமாக ஈசன் உலாவிக் கொண்டு இருப்பார்... இந்த யாத்திரையில்...இனி மேல் சுவடியை ஓத துவங்குவதற்கு முன்பு... சிவபுராணம் ஓதி வணங்கி அதன் பிறகு சுவடியை வாசிக்க வேண்டும் என்று உத்தரவு இட்டார்.....அதன் படியே யாத்திரையில் ஜீவநாடி சுவடி ஓதுவதற்கு முன் சிவபுராணம் படித்து பாராயணம் செய்து அதன் பிறகு சுவடி வாசிக்கப்பட்டது.


பார்வதி தேவியார்:


அகிலத்தை அழகாக காத்து அருளக்கூடிய இறைவா!!! 
போற்றியே!! பணிகின்றேன்!! பார்வதி தேவியே!!

மக்களுக்கு எடுத்துரைக்க வா!!!
உன் கோபத்தை இன்னும் தணிவித்து.. அறிந்தும் அறியாமல் மனிதன் பிழைகள் செய்திருந்தாலும்.. காத்திட !! கருணை படைத்தவரே!!
அன்பான மணவாளனே!!
இறங்கி வா!!!
இறங்கி வா!!

மனிதனை நீ தான் படைத்தாய்!!!


மீண்டும் தவறுகள் செய்யாத வண்ணம்.......



 மனிதன் கலியுகத்தில் இப்படித்தான் இருக்கின்றான் அல்லவா!!!... என்பதையெல்லாம் நீயே.. அறிவாய்! 

பின் அறிந்தும் இதன் உள்ளத்தை அனைத்து.. உள்ளத்தையும் நீயே புரிந்து கொள்வாய். 

எனக்கும் சரிபாகமாய்.. உன்னிடத்தில் தந்தாயே!!!

பின் அனைத்தும் காத்தருள கூடிய...!!

 மனிதனையும் காத்து அருளும்!!! இனிமேலும்!!

வா!!! அன்பு மணவாளனே!! உன்னை தாள் பணிகின்றேனே!!

ஏன் இவ்வளவு கோபம்?? மக்களிடையே!!

மக்களிடையே இன்னும் புத்திகள் கலியுகத்தில் மாறும் என்பதையெல்லாம்.. நீயே அறிவாய்... அனைத்தும் இவ்வுலகத்தில்... கருணை படைத்தவன்.நீயே!!!
உன்னை போல் இங்கு யாரும் இல்லை!!!

இதனால் மனிதனின் அழிவுகள்.. பேரழிவுகளாக போய்க்கொண்டு!! போய்க்கொண்டு இருக்கின்ற பொழுது!!

நிச்சயம் அமைதியும் காத்து.. கொண்டிருக்கின்றாயே மணவாளனே!!! அன்பு!! மன்னனே!!
. எழுந்தோடி வா!!!
இப்படியே நீ இருப்பாயா???


காலங்கள் !!!...............  .காலங்கள் முடிந்த வண்ணம் இருக்கின்றது. 

இதனால் மடியப்போகின்றார்கள் பலர். 

மனிதர்கள் பல வண்ணங்களில் கூட புத்திகளை.. மாற்றி அறிந்தும்... அதாவது உன்னை (நீ) இல்லையே.. என்று சொல்லப் போகின்றார்கள்! 

இவையே!!!  இப்படியே நீ நிச்சயம் தாமத படுத்தி அமைதியாக நீ இருந்தாலே...

 இறைவன் இல்லை!!!

இறைவன் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா???
என்றெல்லாம் நிச்சயம் சொல்லத்தான் போகின்றார்கள். 

அறிவாயா? மணவாளனே!!!
அன்பு மன்னனே!!! வா வா!!! 

எழுந்து வந்து கைலாயத்திலிருந்து வாக்குகள் மக்களுக்கு பரப்பு!!!



காகபுஜண்டர் மகரிஷி.

அம்மையே !! அம்மையே!!
உன்னையே எண்ணி எண்ணி... அம்மையே பணிகின்றேனே.. புசுண்டன்.

நிச்சயம் மனிதனுக்கு புத்திகள் இல்லை தாயே!!!!
அமைதியாக தந்தை அமர்ந்திருக்கின்றான் இங்கு!!!

அறிந்தும் இவர் போல் கருணை படைத்தவர் எவர்????

இவர் போல் கருணை படைத்தவர் எவரும் இல்லை!!!
பாசம் படைத்தவர் எவரும் இல்லை!!

அனைவருக்கும் பின் அன்பு எனும் மூலத்தை காட்டி... அனைவரையும் அணைத்துக் கொள்வார். அணைத்து கொள்பவர் என் ஈசன். என் மனதில் உள்ள ஈசன். 

இதனால்தான் கருணை படைத்தவனாக.. இருப்பதினால் தான்...என் தந்தையை...என் தந்தையே!! அறிந்தும்.. நிச்சயம் என் தந்தையை விட இங்கு மதிப்பு மிக்க பின் யாரும் எவருமில்லை. 

நிச்சயம் அனைத்திற்கும் காரணம் என் தந்தையே!!!

அதனால்தான் என் தந்தையை பின் யான் பின் நேர்மையாக இருப்பதினால் தான்... பின் அறிந்தும்... எவை என்று கூற என் தந்தையை எவ்வாறாகவும்...யான் திட்டுவேன்...
பின் அறிந்தும் ஆனாலும் ... என் தந்தை!!... புசுண்டனே!! என்று அணைத்துக் கொள்வான்.

பின் ஆகா!!!!.... பின் கருணை படைத்தவன் நீ!!... என்றெல்லாம் என் தந்தையானவனும்!!


ஆனாலும் மனிதனின் புத்திகள்... எவ்வளவு கீழ்நோக்கி!! கீழ்நோக்கி!!

ஆனாலும் என் தந்தை தான்.. மனிதன் அனைவரையும் கூட படைத்து படைத்து.. ஆற்றல்கள் கொடுத்து கொடுத்து. 

எப்படியாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம்!!!

ஆனால் அவ் புத்தியை சரியாகவே பயன்படுத்த தெரியாமல்... இன்னும் அழிவுகள்... வரப்போகின்றது. 
இன்னும் அறிந்தும் அதாவது... கணவன் மனைவி இருவர்களுக்கு இடையே... இன்னும் போட்டி பொறாமைகள் இன்னும்.. கவலைகள் இன்னும் சண்டைகள் சச்சரவுகள்.. சந்தேகங்கள் வரும் காலத்தில்.. கூடி வரும். 

அவை மட்டும் இல்லாமல்... நீர் நிலைகள் மாறும்!!
மாறி மழைகள் அதாவது பருவ மழை மாறி மாறி பொழிந்து...
இவ்வாறாகவே.. பொழிகின்ற பொழுது மனிதன் புத்திகள் மாறும். 

அவை மட்டும் இல்லாமல் இன்னும் பலத்த அழிவுகள் இருக்கின்றது. 

அகத்தியனும் பூலோகத்தில்... பல மனிதர்களுக்கு பரப்பி வாக்குகள் பரப்பி இவ்வாறெல்லாம் நடக்கப் போகின்றது... அதை நிச்சயம் மனிதர்கள் நீங்கள் தான் காக்க வேண்டும்... அக் காக்க வேண்டியவற்றிக்கெல்லாம் பின்... இப்படி செய்தால் நிச்சயம் அழியாமல் காக்கலாம்... என்றெல்லாம் அகத்தியனும்... தேடித் தேடி!!... மனிதனை தேடி தேடி!!

ஆனால் மனிதன் என்னவோ? புத்தி கெட்ட!!!... பின் யான் பெரியவன்!!!.. நீ சிறியவன்!!!... இவ்வாறெல்லாம் தனித்தனியாக... பின் அகத்தியன் பக்தர்களே... அவை பொய் !! இவை பொய்!! என்றெல்லாம்! 

அகத்தியனும் அவை எல்லாம் மௌனம்... காத்துக்கொண்டு!!

ஆனாலும் வரும் காலத்தில் யான் விடப்போவதில்லை. 

யான் விடப்போவதில்லை. 

அகத்தியனின் சரியான அகத்தியனின் பொன்மொழிகள்... சரியாகவே பின் பயன்படுத்த.. தெரியாத மனிதன் பின் இவ்வுலகத்தில் வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லை!!

இதனால் யானே பல நோய்களையும் உருவாக்குவேன். 

பின் ஈசனாரே!!!
அன்பு தந்தையே!!!
பின் இவ் கைலாயத்திலிருந்து யான் ஆணையிட்டு சொல்கின்றேன். 

நிச்சயம் மனிதன் பல பொய்களை நிரப்பி கொண்டு... அதாவது எதை எதையோ செய்து செய்து அகத்தியன் பின்... அகத்தியன் வடிவத்தை அழகாக வரைந்து... அதற்கு அகத்தியனுக்கு பூஜை செய்தால் அனைத்தும் வரும். 
அகத்தியனுக்கு பூஜை செய்தால்... பணங்கள் வரும் என்பதையெல்லாம்...

அவை மட்டும் இல்லாமல்... பொய்யான பரப்புகளை எல்லாம்... மக்களிடையே பரப்பி... வாக்குகள் செப்புகின்றேன் என்றெல்லாம்... நிச்சயம் செப்பி!! செப்பி!!

ஆனால் அவன் நிலையை பார்த்தால்... நிச்சயம் புத்தி... மங்கி மங்கி!!

இதனால் முதலில் ஈசனாரே!!!....யானே இக் கைலாயத்திலிருந்து முதலில்... அறிந்தும் புரிந்தும்... அவர்கள் குழந்தைகளிடமிருந்து ஆரம்பிப்பேன். 

நோய்கள் நொடிகள்... இன்னும் பின் எதை எதையோ... எவை என்று புரிய....
நிச்சயம் இவ்வாறு... குழந்தைகளிடமே இருந்து ஆரம்பித்தால்.. நிச்சயம் தன்னில் கூட பின்... எவை என்று அறிய அறிய... அவனுக்கு புரியும். 

ஆனால் அவனை!!!..... நிச்சயம் தன்னில் கூட எப்படி?? சிறுக சிறுக... என்பதையெல்லாம் நிச்சயம்... அறிந்தும் இன்னும் வாக்குகளில் கூட யான் பரப்புவேன்!!



பார்வதி தேவியார்!!!

மைந்தனே நில்லும்!!
மைந்தனே நில்லும்!!!
ஏன் இப்படி பேசுகின்றாய்?????

அறிந்தும் நிச்சயம் அறியாதவாறும் பிள்ளைகள் தவறு செய்கின்றார்கள்...

ஆனால் தந்தை தான் அதை காக்க வேண்டும். 
ஆனால் புசுண்டனே... இப்படி எல்லாம் கூறுகின்றாயே??? இது நியாயமா உந்தனுக்கே???!!!!


காகபுஜண்டர் மகரிஷி: 

தாயே!!!.... பின் நியாயம் இல்லை தான்!!

ஆனால் என் தந்தையை பற்றி யாரேனும்.. நிச்சயம் புறம் கூறினாலும்... அகத்தியனை பற்றி யார்.. ஏமாற்றினாலும் எந்தனுக்கு வருகின்றது கோபங்கள். 

ஏனென்றால் என் தந்தை.. பின் ஈசனார் பற்றி... யான் நன்கு அறிவேன். 

இதனால்தான் ஈசன் பின் நிச்சயம்... எப்பொழுது தோன்றினானோ???????
அப்பொழுதே யானும் தோன்றி விட்டேன். 
நிச்சயம் தன்னில் கூட. 

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.. மனிதனை!!!

ஆனால்... தந்தையோ அமைதி காத்துக்கொண்டிருக்கின்றான். 

ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லையே!!!
மனிதன் செய்யும் தவறுகள் பல பல !!
மனிதன் செய்த தவறுகள் தான் மட்டும்.. அழியாமல் பின்.. மற்றவர்களையும் கூட அழித்து.. நிச்சயம் புரியா வண்ணம்.. பின் அனைவரையும் அழித்து கொண்டிருக்கின்றான். 

இதனால் முதலிலே அவன் குடும்பத்தில் நிச்சயம் தன்னில் கூட சிறப்பானது எல்லாம் அழித்து பின் கடைசியில் இவனை அழித்தால் தான் நிச்சயம்.. அவை அழிக்க நேரிடும். என்பவையெல்லாம் நிச்சயம்.. நிச்சயம் புரிந்தும் அறிந்தும். 

இதை தன் மாற ஏது?? எவை என்று கூற!!!
இவ்வாறெல்லாம் உண்மையாகவே படுகின்ற பொழுது... ஏது எதை என்று.. தெரிவிக்க??



ஈசனார்:

நிச்சயம் நில்லுங்கள்!!
நில்லுங்கள்!!!
இவ்வாறாகவே நீங்களே பேசிக் கொண்டிருந்தால்...!?!?!?!

 பார்வதி தேவியே!! என்னை வரவழைத்து வரவழைத்து வா!! வா!! என்று சொல்லிவிட்டாய்!!

ஆனால் நீங்கள் இருவருமே.. வாதாடிக் கொண்டிருக்கின்றீர்களே!!!

யான் இப்பொழுது பின் ஈட்டுகின்றேன்....


மக்களுக்கு அழகாகவே 
அறிவு படைத்து சக்திகளை படைத்து அனுப்பி இருக்கின்றேன். அனுப்பி இருக்கின்றேன். அதை தன் சரியாகவே பயன்படுத்தவும் அதன் மூலமே... தாய் தந்தையரையும் கூட எப்படி... யார் மூலம் எதை பயன்படுத்த வேண்டும்?? என்பவை எல்லாம்... அறிந்து அனுப்பி வைத்தேன். 

ஆனாலும் அவ் சக்திகளை கூட... மனிதன் மாயையில் இட்டு...

அதாவது 

மண்! 
பொன்!! பொருள்!!!.. இன்னும் பல ஆசைகளில் கூட!!. நுழைந்து நுழைந்து!!
அவை மட்டும் இல்லாமல் இவையெல்லாம் (ஆசைகள்) பொய் என்று பல.. பல ஞானிகளை.. உருவாக்கினேன்..

இன்னும் சொல்லப்போனால்...

புத்தன்!!!
இயேசு!!!
இன்னும் விவேகானந்தன்!!
இன்னும் ராமகிருஷ்ணன்!!
இன்னும்... அறிந்தும் பல வகையான... ஞானிகளை கூட... இன்னும் எதை என்று... நிச்சயம் புவி தன்னில் கூட...இவை தன் கூட...

அவை மட்டும் இல்லாமல் ராமாயணத்தையும் கூட 
மகாபாரதத்தையும் கூட 
ஏற்பாடு செய்தேன்!!!

இதன் மூலம் நன்மைகளைப் பெற...

அவை மட்டும் இல்லாமல்... நபிகள் நாயகத்தையும் அனுப்பினேன்!!!

மக்கள் ஒன்று கூடி மனிதனுக்கு நன்மை செய்தால்... அனைத்தும் நடக்கும் என்று. 

ஆனால் அறிந்தும்... இவை யாவும் மனிதன் கடைப்பிடிக்கவில்லையே!!!

இன்னும் பல ஞானிகளை அனுப்பினேன்... இன்னும் கூட இவைதன் பின் தெரிந்து கொள்ளட்டும் என்று. 

இன்னும் இன்னும் சாரதா தேவி!!!... இன்னும் பல்வகையான பின்... ஆசிரமங்கள் இன்னும் லாலா வைத்தியங்கள்... என்றெல்லாம் இன்னும் போகனையும் (போகர் மகரிஷி).. இன்னும் பல வகையான... அகத்தியனும் அறிந்தும் இன்னும்.. பூலோகத்தை காத்து!!!

நிச்சயமாய் பின் பூலோகத்திற்கு நல் அறிவுகளை கொடுத்து கொடுத்து மனிதனை காப்பாற்ற நிச்சயம்... போ! போ! என்று!!

ஆனாலும் அறிந்தும்... இவை யாவும் மனிதனுக்கு... பல பொன்மொழிகள்.. எடுத்துக் கூறினர்!!

இவ்வாறாக இருந்தால் மனிதன்.. நிச்சயம் தன்னில் வாழ்ந்திடலாம் என்று..

ஆனாலும் அவையும் கேட்கவில்லை!!

ஆனாலும் இவை தன் இன்னும்... அவ்வை பிராட்டியும் (அவ்வையார்).... இன்னும் என்னும் அளவிற்கு... பல வகையான பின் மூதாதையர்கள் எல்லாம்... என்னுடைய ஆசிகள் பெற்று...!!!

 நிச்சயம் பின் மனித குலத்தை... திருத்தி வாருங்கள் என்றெல்லாம்... அனுப்பினேன். 


ஆனாலும் அவர்கள் பேச்சையும் கேட்கவில்லை மனிதன்!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம்.... வீரத்திற்கு அதிபதியான மைந்தன்... முருகனையும் கூட அனுப்பினேன். மக்களை காப்பாற்ற. 

தீய சக்திகளிடமிருந்து வேரோடு.. அழித்துக் கொள்!! என்று!!! மனிதனை அழகாக காத்திடு என்று!!!

ஆனாலும் என் அதாவது... மகனிடம் (முருகன் ஆலயங்களுக்கு) சென்றாலும்... அறிந்தும் தீய எண்ணங்களோடே!!!

அவை மட்டும் இல்லாமல்... இன்னும் அறிந்தும்... மனிதனுக்கு புத்திகள் மாற்றிட... அவ் சக்திகளை பயன்படுத்திட... பின் ஞான கணபதியையும் கூட அனுப்பினேன். 

மக்களை ஞானத்தின் வழியை எடுத்து வா!! எடுத்து வா!! எடுத்து வந்து விட்டால் அவ் ஞானத்தைப் பற்றி தெரிந்து கொண்டு சக்திகளை... அனுபவிக்க நிச்சயம்.. நீதான் பின் பாடுபட வேண்டும்.. என்று!!!

அதனால் ( ஞான கணபதி) எங்கும் அமர்ந்து பின்... எங்கும் மனிதனுக்கு சேவை செய் !! என்றெல்லாம்... கணபதியையும் அனுப்பினேன். 

ஆனால் நிச்சயம் அவை கூட.... கணபதி என்னென்ன?? சொல்லி இருக்கின்றான் என்பவையெல்லாம்?...
நிச்சயம் கணபதியின் மூலாதாரம்... என்னும் நூலில் உள்ளது. 

அவையை கூட மனிதன்... அழகாக மறைத்து விட்டான். !!!


அவை தன் வரும் காலத்தில்... அகத்தியன் எடுத்துரைப்பான். 

கணபதியின் நிச்சயம்... அறிந்தும் எவ்வாறு.. பெருமைகள் என்பதையெல்லாம்... மனிதன் எவ்வாறு எல்லாம்... வாழ?.. நிச்சயம் ஞானத்தை பின் கூடி... ஞானி ஆகலாம் என்பவையெல்லாம்... அகத்தியன் வரும் காலத்தில் எடுத்துரைப்பான்! 

இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட... பலவகையான மனிதர்களை கூட... தெய்வமாகவே அதாவது... நிச்சயம் அறிந்தும் இன்னும்... அனுப்பினேன்... யானாகவே தோன்றினேன்... பின் அனுமானாகவே!!!
நிச்சயம் தன்னில் கூட!!
(ஈசன் ஆஞ்சநேயராக அவதாரம்) 

ஆனாலும் பின் இவை தன் கூட... ஆனாலும் நிச்சயம்... நல் மனிதனாகவே இருந்தால் நிச்சயம்.. தெய்வமும் துணை நிற்கும்... என்றெல்லாம் யானே!!... அவதரித்தேன்!!! அவதரித்தேன் அறிந்தும்!! அனுமானாகவே!!!

இன்னும் இன்னும் மனிதனுக்கு... புரியவில்லையே!!!
இன்னும் பல அவதாரங்கள்... இன்னும் பிரம்மாவும் விஷ்ணுவும்... இன்னும் எதை என்று.. புரிய...

ஆனாலும் பின் அனைத்திற்கும் காரணம்... ஒருவனே என்று... யாரும் எண்ணவில்லையே!?!?!

ஆனாலும் பின் மக்கள் பலவற்றை (பலவகையான மத மார்க்கங்கள்) பயன்படுத்தி கொள்கின்றார்கள் என்றெல்லாம்.. விட்டுவிட்டேன்!!

ஆனாலும் அனைத்திலும் யானே!!
இருக்கின்றேன்!!!

(அனைத்து மதங்களும் அனைத்து மார்க்கங்களும் சென்றடைவது ஈசனிடத்தில்) 

ஆனாலும் அறிந்தும் இவையாவது... இப்படியாவது... செய்து பிழைக்கட்டும்... என்று யான்... அனுப்பினேன். 

ஆனாலும் அதையும் மனிதன் சரியாக பயன்படுத்தவில்லை. 


தேவியே!!!.....கேளும்!!!.... பின் அன்பு அதாவது உந்தனுக்கு மட்டுமா? அதாவது தாய்க்கு மட்டுமா? இருக்கும்? 

பின் தந்தைக்கும் இருக்கும்!!!

உன்னை விட பின் பன்மடங்கு.. நிச்சயம் பின்... குழந்தைகள் மீது எனக்கும்... பாசம் தான். 
அனைவரும் எம் குழந்தைகள்தானே!!
இதை திருத்துவதற்கு இக் குழந்தைகளை திருத்துவதற்கு தான் பல வழிகளிலும் கூட பின்... அவதாரங்கள் எடுக்கச் செய்து!!!

ஆனாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. 

இவ்வாறு இருக்க எப்படி???....யான்? அமைதியாகவே!?!?!?....
அறிந்தும் எவ்வாறாக எல்லாம் யான் முடிவெடுக்க வேண்டும்!!?
பின் நிச்சயம் நீயே கூறும்... அன்பு தேவியே!!


பார்வதி தேவியார்:

 
அன்பு மணவாளனே... நிச்சயம் யான் அறிவேன் அனைத்தும். 
இவ்வாறெல்லாம் படைத்திருக்கின்றாய் என்பவையெல்லாம்.. நிச்சயம் அறிவேன்... யானும்!!

ஆனாலும் கலியுகத்தில் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றதே!!!

இதற்கு எப்படி தான் தீர்வு???
நீங்களே சொல்லுங்கள்!!! அறிந்தும்!!!


ஈசனார்!!

நிச்சயம் தேவியே!! கருணை மிகுந்த தேவியே!!
என் அன்பு தேவியே!!
அகத்தியன் பரிபூரணமாக உலாவிக்கொண்டே வருகின்றான். 
இவ்வாறு செய்தால் நலமாகும் என்றெல்லாம். 

ஆனால் அதையும் கூட பொய் என்று சில மனிதர்கள்... ஏன்? எதற்கு? பின் என்னிடத்தில்... அகத்தியன் இருக்கின்றான் என்று!!
இன்னொருவன் என்னிடத்தில் இறைவன் இருக்கின்றான் என்று..
இன்னொருவன் சுவடிகளை வைத்து நிச்சயம் பணம் சம்பாதிக்கலாம் என்று..
இன்னொருவன் பார்த்தால்... அகத்தியன் சொல்வதே நிச்சயம் பொய்... என்றெல்லாம் நிச்சயம் அதாவது அழிவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான். 

இதனால் மக்களும் கூட அவர்களைத் தேடிச் சென்று நிச்சயம்.. இதுதான் உண்மை என்று. 

இதுதான் கலியுகம்.. அறிந்தும் புரிந்தும். உண்மைதனை ஏற்காது. பொய் தனை ஏற்கும். 

ஆனாலும் அகத்தியன் பாடுபட்டு கொண்டே இருக்கின்றான். எப்படி எல்லாம் பொய்யை.. நிச்சயம் அறிந்தும்.. அழிப்பது என்று!!!

வரும் காலத்தில் நிச்சயம் அதை இன்னும்... யான் சக்திகளை கூட... இதனால் புசுண்டன் அகத்தியன் அருகிலே இருந்து... நிச்சயம் அகத்தியன் கருணை... காட்டினாலும் புசுண்டன்.. விடப்போவதில்லை..

யான் அறிவேன் புசுண்டனை!!!

யான் எப்பொழுது? தோன்றினேனோ!?... அப்பொழுதே.. தோன்றி விட்டான்!!!... பின் எந்தனுக்கு... காவலாளியாகவே புசுண்டன்.

புசுண்டனே!!!... உன்னை பார்த்தால்... எந்தனுக்கு பெருமை தான்! 

ஆனாலும் மனிதன்... எப்படி எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்? என்பதை எல்லாம்... எடுத்து வந்து எடுத்து வந்து... 

ஆனாலும் யானே அறிவேன். 
யான் அழகாகவே..இக் கைலாயத்தில் இருப்பேன்... ஆனாலும் நீயும் கூட... இப்படி எல்லாம் மனிதன்... செய்கின்றானே!!!

அடி!!....அடி!!... என்றெல்லாம் நீயும் கூறிக் கொண்டே தான் இருக்கின்றாய்.. புசுண்டனே...

ஆனாலும் யானும் மௌனம் காத்துக்கொண்டே இருக்கின்றேன். 
பிள்ளையே!!!  அதை அறிந்தும் கோபத்தால்!!! ஈசனே நீ அமைதியாக உட்காரு!! யான் அறிந்தும் புரிந்தும்.. செல்கின்றேன்.. மனிதனை பின் அழித்து பின் அதன் மூலம் புத்தியை கொடுத்து என்றெல்லாம். 

ஆனாலும் இதன் கருணை... புசுண்டனின் கருணை எவருக்கு வரும்??
ஏனென்றால் பின் மனிதன் திருந்தப் போவதில்லை... சில கஷ்டங்களை கொடுத்து... அருகிலே இருந்து பின் நிச்சயம் அறிந்தும் பாதுகாத்தால் பின் திருந்துவான்!!.. என்றெல்லாம்... நிச்சயம் அக்கருணை... அறிந்தும் பின் புரிந்தவன் பின் புசுண்டன்! 

புசுண்டன் பின் அறிந்தும்... ஏது என்றெல்லாம்... யுகங்கள் யுகங்களாக பல வழிகளில் கூட பல மனிதர்களை பார்த்தவன்.. நிச்சயம் பின் புசுண்டன்.

என்னிடத்தில் கூறுவான்... பின் ஈசனாரே!! ஈசனாரே!!.. கலியுகத்தில் மனிதன் ஒருவன் கூட நல்லவன் இல்லை!!

ஏனென்றால் அறிந்தும் நீங்கள் தானே படைத்தீர்கள்!! எவ்வாறு என்பதையெல்லாம்! 
ஆனாலும் யானும் யோசித்துக் கொண்டே இருப்பேன்.. யோசித்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறாகவே நிச்சயம்...


பார்வதி தேவியார்

அழகாக சொன்னீர்கள் தேவாதி தேவனே... இட்ட கட்டளைகள் எவ்வாறு என்பவையெல்லாம் ஆனாலும் அனைத்தும் நீயே!! அறிந்தும் புரிந்தும் இன்னும் என்னென்ன?? வழிகளை கூட.. பின் மனிதனுக்கு செய்தீர்கள் என்பவை எல்லாம்... தாங்கள்தான் எடுத்துரைக்க வேண்டும்!!


ஈசனார்: 

பார்வதி தேவியே... அன்பானவளே!!! நிச்சயம்.. கருணை படைத்தவன் தான்!!! இன்னும் பல வழிகளிலும் கூட!!! பல எதை என்று புரியாமல்.. மனிதன் இருந்தாலும் மனிதன் புரிந்து கொள்ளும் அளவிற்கு நிச்சயம் பல ஞானிகளை உருவாக்கி அனுப்பி இருக்கின்றேன்! 

அதாவது என் (ஈசனின்) துகள்கள் !!! அறிந்தும் அகத்தியன்... சொல்வானே அறிவியல் வழியாகவும் கூட!!
எனை கண்டுபிடித்தானே அறிவியல் வழியாகவும் கூட.
பல வழிகளிலும் கூட கண்டுபிடித்தானே!!


இறைவனை அதாவது அகத்தியன் எனை புரிந்து கொண்டான். 

ஆனாலும் அறிந்து பின் ஈசன்.. இருக்கின்றான் என்று அழகாக. 

ஆனால் அறிவியல் வழியாக எதை புரிந்து கொள்ள மக்களுக்கு தெளிவடைய கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் (வாக்குகளில்) வெளியேற்றுவான்... அதனைக் கூட கண்டுபிடித்தவன் பின் அகத்தியன். 

ஆனாலும் இக்கலி யுகத்தில் இன்னும் மெய்ஞானமான அறிவியல் வழியாகவே எடுத்து வருவான் அகத்தியன்.. அப்பொழுது யாரும் தப்பிக்க முடியாது. 
யாரும் தப்பிக்க முடியாது.

இன்னாருக்கு பின் இன்று எவ்வளவு தூரங்கள் இன்று நாள் என்ன என்ன நடக்கும்? என்பதை அகத்தியன் அறிந்ததே... கலியுகத்தில். அனைவரையும் ஏமாற்றலாம்... இன்னும் அவை நடக்கும் இவை நடக்கும்.. இப்பொழுது செய்தால் இவை நடக்கும் என்று!!

ஆனாலும் நிச்சயம் அகத்தியனின் புத்தி கலியுகத்தில் நிச்சயம் இவ்வாறெல்லாம் இருக்கும்...

 மனிதன் புதிய கண்டுபிடிப்புகள் கண்டு உணர்வான்.!!!... ஆனால் 
அதன் முன்னே அகத்தியன் மிகப்பெரியவன்.. அகத்தியன் அதனுள்ளே நிச்சயம் இன்னும் நுழைந்து இவர்கள் சொன்னார்கள் பின்..
இன்னும் அகத்தியன் அறிவியல் கண்டுபிடிப்புகள்.. மேலாகச் சென்று... மனித குலத்தை எப்படி காப்பாற்றுவான்?? என்பது வரும் காலத்தில் மக்களுக்கு தெரிய வரும். 

நிச்சயம் அகத்தியன் பின் அதாவது அடுத்து 100 ஆண்டுகளில் என்னென்ன நடக்க போகின்றது??? என்று அறிவியல் வழியாகவே எடுத்து பின் அழகாகவே பின் நிச்சயம் தெளிவுபடுத்த இருக்கின்றான்! 

இவை தெளிவு புரிந்து விட்டால் நிச்சயம் அனைவரும் பின் பூஜ்ஜியத்தில் நிற்பார்கள். 
வாக்குகளும் சொல்ல முடியாது இன்னும்.. அறிந்தும் எதை என்று புரிய. 

( மக்களுக்கு தெளிவு கிடைத்து விடும்... மற்றவர்கள் வாக்குகள் சொல்லி ஏமாற்ற முடியாது)


இவை தன் இன்றும் இன்னும் மக்களே மக்கள் நிச்சயம் பின் மாறிக்கொண்டே இருப்பார்கள் கலியுகத்தில்... அப்படி மாறினால் நிச்சயம் அனைவரும் மாறுவார்கள்... எடுத்துரைத்து எடுத்துரைத்து. 

ஏன் இவ் அவலம்??? சொன்னேனே!!!..

 நிச்சயம்... இயேசுவும்.... நிச்சயம் அதற்கு மேலும் பிதாமகன் யார்??? என்பதையெல்லாம் அறிந்தும்... அழகாக ஏட்டிலே எழுதி வைத்து எழுதி வைத்து... இப்படி இருந்தால் கலியுகத்தில்... பிழைத்துக் கொள்ளலாம் என்று. 

இன்னும் ஞானிகள் இன்னும் கூட்டுப் பிரார்த்தனைகள் அகத்தியன்... எடுத்து வந்தானே!!!... நிச்சயம் இவை விட... இவ்வுலகத்தில் வேறு எதுவுமே இல்லை!!

நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனைக்கு... அவ்வளவு சக்திகள் என்பவை எல்லாம்... நிச்சயம் இன்னும் அகத்தியனே... இன்னும் யார் மூலம்? ஏற்படுத்த வேண்டும்? என்பவை எல்லாம்... யார் மூலம்? நடத்தப்பட வேண்டும்?... என்பவையெல்லாம் சரியாக எழுதி வைத்திருக்கின்றான்.
அவர்களை தேர்ந்தெடுத்து அழகாக வழியும் நடத்தி அழியாத உயர் பதவியில் வைத்து நிச்சயம் பின் அதாவது...

ஈசன் கைலாயத்தில் (மட்டும் ) இல்லை... நிச்சயம் அங்கங்கே இருக்கின்றான்... என்பதையெல்லாம் பின் அறிவியல் வழியாகவே எடுத்து வருவான். 

பின் அறிவு என்பது அகத்தியன்...
அகத்தியன் என்ற சொல்லுக்கு மறுசொல் அறிவு. 

பின் அகத்தியன் போல் இவ்வுலகத்தில் அறிவு படைத்தவர் எவரும் இல்லை. 

பார்வதி தேவியார்.

நில்லுங்கள் நில்லுங்கள் அப்பொழுது அறிந்தும் பின் தேவாதி தேவனே... அப்பொழுது நீங்கள் பின்.....

அதாவது நகைக்கின்றேன் யான்!!!


ஈசனார்:

பின் அமைதியாக உட்காருவேன் யான் இங்கு....
செய்ய வேண்டியது எல்லாம் இதோ சித்தர்கள் செய்து விடுவார்கள்... பின் கேட்டாயா? அறிந்தாயா? தேவியே!!!


பார்வதி தேவியார்: 

பின் நகைக்கின்றேன் யானும்!! தேவாதி தேவனே!!! பின் படைத்து விட்டு அழகாக நகைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் இக் கயிலாயத்தில்!!


ஈசனார்: 

நிச்சயம் தேவியே யான் எவ்வாறு? கூற!!!
மனிதனின் செயல்களை பார்த்தால்... அதாவது குழந்தைகளின் செயல்களை பார்த்தால்... பின் நகைக்கத்தான் தோன்றுகின்றது!!!

நிச்சயம் அறிந்தும் புரிந்தும் இவ்வாறெல்லாம்...

பார்வதி தேவியார்:

 நிச்சயம் பின் தேவாதி தேவனே!!! குழந்தைகள் மீது அன்பு செலுத்திக் கொண்டிருக்கின்றீர்களே!!!... பின் இங்கு ஏன்.. நீங்கள் மனிதனை நிச்சயம்... இவ்வாறெலாம் அறிந்தும் புரிந்தும்... காப்பாற்ற ஓடோடி வா. 


ஈசனார்: 

பின் தேவியே நில்லும்!!
இதனால்தான் சித்தர்களை.. பின் அனுப்பி இருக்கின்றேன்.. பூலோகத்திற்கு எல்லாம்!!
நிச்சயம் அறிந்தும் மனிதனை திருத்திக் கொண்டு. 

அவை மட்டும் இல்லாமல்... குள்ளர்களையும் அனுப்பப் போகின்றேன். 

ஏன் இக் குள்ளர்கள் என்றால்... நிச்சயம் தவறான வழியில் பின்... அதாவது சித்தர்களைப் பற்றி.. நிச்சயம் தெய்வங்களை... அறிந்தும் புரியாமலும்.. எதை யார் என்று பின் எவை தெரியாமலும்... இருப்பார்களே!!!... அவர்களையும்.. அழித்து!!.. இன்னும்.. அறிந்தும் புரிந்தும்!!!
நிச்சயம் எவை என்று புரிய!!!

ஏது என்று அறிய!!!

 
காகபுஜண்டர் மகரிஷி:


பின் தேவாதி தேவனே!!!
நிச்சயம் அறிந்தும் புரிந்தும் தந்தையாரே... புசுண்டன் இங்குதான் இருக்கின்றேன்... யானும் ஒரு வரியில் உன்னை பற்றி...

ஆனாலும் ஈசனாரே நிச்சயம்... இப்பொழுது சொல்கின்றேன் கைலாய மலையில் இருந்து!!!

உன்னுடைய பெயரை சொல்லி அறக்கட்டளைகள் தொடங்கி... நிச்சயம் எவ்வாறெல்லாம் பின்... பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.. பணத்தோடு.... நிச்சயம் தன்னில் கூட அவ் அறக்கட்டளைகளை தொடங்கி நிச்சயம்... பின் எதை எதையோ செய்கின்றார்கள். 

கேட்டால்!?... யான் நல்லது தான் செய்தேன்... யான் மக்களுக்கு தான் செய்தேன்... என்றெல்லாம்...

இதனைப் பற்றி நீ இங்கு நிச்சயம் தன்னில் கூட!!!


ஈசனார்:


பின் புசுண்டனாரே நில்லும்!!!... அறிந்தும் புரிந்தும்... ஆனாலும் இவைகள் பின் செய்பவர்கள் எல்லாம்.. நிச்சயம் பார்த்துக் கொண்டே வா... யாராவது நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய. 


இடைக்காடர் வருகை


நிச்சயம் தேவாதி தேவனே நில்லும்!!! நில்லும்!!!.... ஓடோடி வருகின்றேன்... அண்ணாமலையிலேயே நிச்சயம் இருக்கின்றாயே!!!... அங்கு பல வகைகள் இவ்வாறு நடக்கின்றது... அறக்கட்டளைகள் அறக்கட்டளைகள் என்று... நிச்சயம் யான் விடப்போவதில்லை! 
இங்கு கைலாயத்திலிருந்து சொல்கின்றேன்... பின் இடையன்!!

ஈசனிடம் இடைக்காடர் புரிந்த விவாத வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
    Replies
    1. Om Agatheesaya Namaha!
      Om Nama Shivaya!
      Heavy rain in North India. But still Agathiar peruman made Janagi Raman Iyya travel and got us Lord Shiva and Parvathi devi arulvakku.

      Delete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete