அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 7
வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911 - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
6.சித்தன் அருள் - 1916 - பகுதி 6)
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு வேலைக்கும் அழகாக பாடல்களைப் பாடியுள்ளார்களே!!!! அதை ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?
—————————
(மனிதர்களின் ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பாடல்களை பாடி வைத்துள்ளனர் நம் ஞானியர்கள். அதை இயக்கினாலே இறைவனின் சக்திகள் தானாக கிடைத்து, அனைத்தும் உங்களால் சாதிக்க இயலும். நீங்கள் விரும்பியதை அடைய இயலும்.)
—————————
குருநாதர் :- ஆனாலும் பின் நிச்சயம் ஓர் முறை இல்லை. ஈர் முறை இல்லை. நிச்சயம் இலட்சம் தடவைகள் (பதிகங்களை படிக்க வேண்டும்). அப்பொழுதுதான் சக்திகள் (உங்களுக்குள் உண்டாகி) , (கிரக மற்றும் விதியின்) அவ்சக்திகளுக்கும் - (பாடல்களை பாடி மனிதர்களின் உடம்பில் ஏறும் ) இவ்சக்திகளுக்கும் சமம் ஆகும்.
நிச்சயம் தன்னில் கூட அவ்சக்தியும் கூட புருவ மத்தியில் இருந்தால் உடனடியாக (உங்கள் பிரச்சினைகள்) சரியாகிவிடும். நிச்சயம் எங்கோ போய் ஒளிந்து கொண்டிருந்தால் சரியாகாது. நிச்சயம் புருவ மத்தியில் அவ்சக்தியை வைப்பதற்குத் தியானங்கள் அவசியமாகின்றது. நிச்சயம் அவ்தியானத்தின் மூலம் , நிச்சயம் புருவமத்தியில் அவ்சக்தியை பின் நிச்சயம் எடுத்து வைத்துவிட்டால் அனைவருக்கும் அதாவது தன்னைத் தானே வெல்வான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( புருவ மத்தியில் வைத்துவிட்டால்) நீங்கள் சொல்வது நடக்கும். தன்னைத் தானே வெல்வான்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் புருவ மத்தியில் அவ்சக்தியை வைத்தால், நிச்சயம் அப்பனே இறைவனே பின் வந்து அப்பனே மருத்துவத்தில் கூட அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே ஔஷதங்களைக் கொடுத்து விடுவான்.
அப்பனே உங்களுக்குள்ளே சக்திகள் ஒளிந்திருக்கின்றதப்பா!!!! ஆனாலும் அதை எடுத்து வர ஆள் இல்லையே!!!!
அப்பனே, அம்மையே அனைவருமே பாவங்கள் என்றுதான் சித்தர்கள் யாங்கள் வந்து வந்து வாக்குகள் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்!!
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் எல்லாம் பாவமாம். என்னையும் சேர்த்துதான். நம்ப எல்லாம் பாவமாம். அதனால்தான் சித்தர்கள் எல்லோரும் இறங்கி வந்து வாக்குகள் சொல்கின்றோம் அப்பா.
குருநாதர் :- அப்பனே அறிந்தும் இவ்வுலகத்தில் இன்னும் இன்னும் காலங்கள் செல்லச் செல்ல, நல்லதைச் சொல்ல ஆள் இருக்க மாட்டானப்பா. இதனால்தான் இப்பொழுதிலிருந்தே என் பக்தர்களை பக்குவப்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்யச் சொல்லி, தூண்டிக் கொண்டே இருக்கிறேன்.
அப்பனே உங்கள் குறைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் அப்பா? முதலில் இருந்தே வருகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அடியவர்கள் :- (மெல்லிய குரலில் அனைவரும்) எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
குருநாதர் :- அப்பனே வாய்கள் அதாவது வாய் வழியே பேசக்கூடாதப்பா. உள்ளத்திலிருந்து பேச வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சுயநலமாக இருக்கக்கூடாது. எல்லோருக்காகவும் வேண்டி, நீங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
குருநாதர் :- அப்பனே இன்னும் இன்னும் பக்குவங்கள் ஏற்படுத்துகின்றேன் அப்பனே. அனைவருமே என் செல்லக் குழந்தைகள்தானப்பா.
அப்பனே குழந்தைகள் எப்படி கேட்பது என்று தந்தையிடம் பின் நிச்சயம் தெரியவில்லை. அப்பனே தெரியாவிடிலும் கூட தந்தைக்குத் தெரியுமப்பா, தன் பிள்ளைகள் என்ன நினைக்கின்றீர்கள் என்று.
“”””அப்பனே இதனால் நிச்சயம் அனைவருக்குமே வாக்குகள் உண்டு. சொல்லிவிட்டேன் அப்பனே. “”””
உலகத்திற்காகவே அப்பனே உலகத்தை ஜெயித்தாக வேண்டும்.
(யாங்கள் அழியும் உலகத்தை காப்பாற்ற வேண்டும்) அப்பனே என் குழந்தைகளுக்கு நன்றாகப் பாடத்தை எடுத்துத் தெளிவு பெற்றுவிட்டால், அப்பனே பின் நீங்களே காப்பாற்றிவிடுவீர்கள் உலகத்தை.
“”””””அதனால் ஒருவனுக்கு நன்றாக இருக்கும் என்று யான் எப்பொழுதுமே வாக்குகள் ஈயப்போவதில்லை.””””””
“””””நிச்சயம் பாவப்பட்ட ஜென்மம் என்றால் மனித ஜென்மமே.”””””
“””””” இதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து இலவசமாகவே அனைத்தும் தந்துகொண்டிருக்கின்றோம். வருங்காலத்தில் அனைத்தும் தருவோம். “”””””
“””””” எங்களுக்கு ஏதும் தேவையில்லை. “”””””
“””””” அன்பு மட்டுமே. “”””””
“””””” அன்பு மட்டுமே. “”””””
“””””” அன்பு மட்டுமே. “”””””
“””””” நிச்சயம் தந்தையே என்று சொன்னாலே போதும். யான் மகிழ்வேன். “”””””
“””””” இதனால் இவ்தந்தைக்கு எப்பொழுது கொடுக்கத் தெரியும் என்று தன் பிள்ளைக்கு. “”””””
(தன் பிள்ளைகளுக்கு என்ன எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று தந்தைக்குத் தெரியும். யாரும் வருத்தப்படத் தேவையில்லை.)
நிச்சயம் உலகத்தைப் பற்றித் தெரியவில்லையே தன் பிள்ளைகளுக்கு. அதனால்தான் உலகத்தைப் பற்றித் தெரிய வைத்துக்கொண்டிருக்கின்றேன்.
நிச்சயம் என் பிள்ளைகள் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயம் இதனால்தான் உங்களுக்கு அனைத்தும் யான் சொல்லிவிடுகின்றேன். கவலைகள் இல்லை.
(உங்கள் விதியை மாற்றும் சித்த ரகசியங்கள்)
நிச்சயம் பின் தாயே!!! தந்தையே!!!! எழுதப்பட்டிருப்பதுதான் இங்கு நடக்கும். பிரம்மாவின் தீர்ப்பு எப்பொழுதும் மாற்ற முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக நீங்கள் வேண்டிக்கொண்டால், நிச்சயம் உங்களுக்காக யான் போராடி நிச்சயம் எழுத்தையும் மாற்றுவேன்.
அறிந்தும் இவ்வாறாக மற்றவர்களுக்காக நீங்கள் நினைத்துக்கொண்டீருந்தால், இதுவே ஒரு புண்ணியமாகிவிடும். இப்புண்ணியத்தை பிரம்மாவிடம் எடுத்துக்கூறி நிச்சயம் இவன் செய்திருக்கின்றான் மற்றவர்களுக்காக என்று சுலபமாக உங்களை (நீங்கள்) ஜெயித்து விடலாம்.
நிச்சயம் (உங்கள்) ஒவ்வொருவருக்கும் விதியில் கூட பல கஷ்டங்கள்தான் தென்படுகின்றது. மனக்குழப்பங்கள், இன்னும் சில தரித்திரங்கள், இன்னும் பீடைகள் இவையெல்லாம் வரப்போகின்றது. ஆனாலும் அதை நிச்சயம் எங்களால் மாற்ற இயலும்.
நிச்சயம் இறைவன் புரியாத புதிராகவே உள்ளான். நிச்சயம் இறைவன் அதாவது நீங்கள் எங்கெங்கோ சென்று வணங்கிக் கொண்டே , இறைவன் திருத்தலங்களை நாடிக் கொண்டே , நாடிக் கொண்டே ஆனாலும் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று யாராவது நினைத்துள்ளீர்களா என்றால் நிச்சயம் இல்லை. இறைவன் எங்கிருக்கின்றான் ? எப்படி எல்லாம் உலகத்தை ஏற்படுத்தினான்? ஏன் எதற்கு மக்களை ஏற்படுத்தினான் என்பதையெல்லாம் தெளிவாக. அதனால்தான் முதல் வகுப்பிலிருந்தே உங்களைக் கொண்டு செல்வதற்கென்றே. ஆனால் புண்ணியம் உள்ளவர்களே இதையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் நிச்சயம்
மீண்டும் செப்புகின்றேன்.
“”””””மற்றவர்களுக்காக உழையுங்கள். உங்களுக்காக உழைப்பதற்கு யாங்கள் இருக்கின்றோம். “”””””
நிச்சயம் உருவாக்கியதே நிச்சயம் யாங்கள்தான் உங்களை. இதனால் உங்களிடமிருந்தே நிச்சயம் பிரச்சினைகளை வாங்கிக்கொண்டு , பின் யாங்கள் அனைத்தும் அறிவோம்.
நல்முறையாகத்தான் உருவாக்கினோம். ஆனாலும் மனிதன் எதை என்று அறியாமலும் நிச்சயம் “”””பேரழிவுகள்தான் வந்த வண்ணம்”””””.
“””””அப்பேரழிவுகளை எங்கள் பிள்ளைகளால் நிறுத்த முடியும்.””””””
“””””அப்பனே சித்தன் அருகில் வந்துவிட்டால்…. அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்காகவே வாழவேண்டும். சுயநலத்திற்காக வாழக்கூடாது.”””””
நிச்சயம் யாங்கள் எங்கெங்கோ காடுகளிலும், மலைகளிலும் தவங்கள் செய்துவிட்டு மனிதன் எதாவது எக்குழியில் விழட்டுமே என்று சென்றுவிடுவோம். ஆனால் நீங்கள் பாவங்களப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் :- மனிதர்கள் பாவம். எதுவும் தெரியாமல் இறைவனை வணங்கினாலும் இறைவனும் ஒன்றும் கொடுக்க மாட்டார். கடைசியில் இறைவன் இல்லையென்று சொல்லிடூவீங்க).
குருநாதர் :- அதனால்தான் நிச்சயம் இன்னும் நல்லோர்களை எல்லாம் உருவாக்கி, அவர்கள் மூலம் நிச்சயம் பின் உங்களைத் தெளிவடையச் செய்துவிடுவோம்.
“”””””” நிச்சயம் ஒருநாள் பிறந்தால் ஒரு நாள் இறக்க வேண்டும் என்ற மந்திரம் உங்கள் மனதிலே (எப்பொழுதும்) பின் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.”””””””
** இவ்வாறாக நிச்சயம் நினைத்துக்கொண்டாலே போதுமானது, தானாகவே மற்றவர்கள் நினைப்பு வந்துவிடும். **
நிச்சயம் அப்பனே நினைப்புத்தான் பிழைப்புக் கெட்டது என்ற பழமொழியும் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பழமொழிக்கு என்ன காரணம் என்று கேட்கின்றார். சொல்லுங்க.
அடியவர் :- ஊரார் பிள்ளையை ஊட்ட வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
குருநாதர் :- இறைவன் செய்வான் செய்வான் என்று ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தானாம். பின் அதாவது இறைவன் செய்வான், செய்வான் என்று. ஆனால் இறைவன் செய்துவிட்டான். கடைசியில் அழைத்துக் கொண்டான். நடுவில் ஒன்றுமே செய்யவில்லை. அதுபோல் இருந்து விடாதீர்கள்.
அப்பனே இதனால் உங்களுக்குத் தெளிவுகள் இருக்கின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் இவ்உடம்பு இருத்தால், இவ்உடம்பு எதற்காவது உதவிட வேண்டும் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பொழுது ஆன்மா மகிழ்வடையும். பின் நீங்கள் செய்யும் வேலை மற்றவர்களுக்காக இருத்தல் வேண்டும். நிச்சயம் அவ்வாறாகச் செய்தால் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். யாங்கள் உங்களுக்காக செய்வோம். நிச்சயம் ஒருநாள் அனைத்தும் சடலமாகத்தான் போகின்றது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் உயிர் இருக்கும் பொழுதே நன்மையைச் செய்யுங்கள் தங்களால் முடிந்த அளவு. யாங்கள் கொடுப்போம் தைரியத்தை.
அப்படி இல்லாமல் நிச்சயம் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டு, தன் சொந்தக்காரர்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு நிச்சயம் அவையெல்லாம் இறைவனிடத்தில் செல்லாது. நிச்சயம் அனைவரும் சொந்தங்கள் என்று சொல்லுங்கள்.
நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சகோதரர்களே. இவ்வாறாக எண்ணினால் மட்டுமே, அதாவது மனம் பரந்த மனதாக அதாவது மனம், கடல் போன்று இருக்க வேண்டும். பின் நிச்சயம் கடலில் எதை இட்டாலும், கடலுக்கு என்ன வருத்தமா ஏற்படப்போகின்றது?
___________________
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
—————
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் 22,23 June 2025 ஆம் ஆண்டு , மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…...)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment