கைலாய மலை மானசரோவர் ஏரியில் வைத்து சித்தர்கள் ஈசன் பார்வதியுடன் உரையாடிய வாக்கு பாகம் 2 தொடர்கின்றது.
இடைக்காடர்:
இடையன் பின் எந்தனுக்கும் கூட கோபங்கள்.... அண்ணாமலையிலேயே பல தவறுகள் நடந்த வண்ணம் இருக்கின்றது.
அறக்கட்டளைகள் தொடங்கி அதன் மூலம் அன்னதானத்தை பின் இயக்குகின்றேன் என்று... பொய்கள் சொல்லி பணத்தை இன்னும் இன்னும் எதை எதையோ... பயன்படுத்திக் கொண்டு... நிச்சயம் அவன் பெரியவன் ஆகின்றான்...அவ் அரசியல்வாதி என்கின்றான்... இவன் என்கின்றான்... அவன் என்கின்றான்... எப்பொழுது!!!...
ஆனால் யான்!!
அறிய சொல்கின்றேன் நிச்சயம்... இடைக்காடன் அறிந்தும் புரிந்தும்... கைலாயத்தில் இருந்து எவை என்று கூற... நீ நிற்கின்றாயே தேவாதி தேவனே!!!
நிச்சயம் முதலில் பின் அவன் குழந்தைகளிலிருந்து ஆரம்பிப்பேன்... நிச்சயம் யார் எவை என்று அறிய... அவர்கள் மனைவி மூலம் ஆரம்பிப்பேன்... அவர்களுக்கெல்லாம் கெடுதல்களை கொடுத்து நிச்சயம்... அவனை நிற்க வைத்து.. நிச்சயம் கொல்வேன் சொல்லிவிட்டேன்... இங்கிருந்து கைலாயத்திலிருந்து... கைலாய நாதனே சொல்லிவிட்டேன்!! சொல்லிவிட்டேன்!!!
அறக்கட்டளைகளை தொடங்கி தொடங்கி நிச்சயம்... நிச்சயம் எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்....
இவந்தன் பிழைக்கட்டும் ஆனால்... எவன் தொடங்கினானோ அவன் பிழைக்கட்டும் முதலில்.... ஆனால் கிள்ளி எறிவேன்.. முளையிலே...
பின் அவன் பிள்ளைகளையும் கூட அவர்கள் மனைவிகளையும் கூட... எவ்வாறு என்பதையெல்லாம் நோய்களை ஏற்படுத்தியே தீருவேன்!!
ஏனென்றால் இவர்கள் மூலம் பல.. கோடி மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.....
உண்மை ஞானத்தை தெரியவில்லையே!!!
புரியவில்லையே பின் நிச்சயம்... தன்னில் கூட கைலாய நாதனே... பின் கைலாய தேவியே!!!
நிச்சயம் பின் அதாவது... பின் உன்னிடத்தில் இருக்கும்... எதை என்று புரிய.... நிச்சயம் பின் ஆதங்கத்தில் பேசுகின்றேன்.. பின் அண்ணாமலையிலேயே யான் இருந்திருந்தேன்!!
ஆனால்....... இப்பொழுதெல்லாம்... என்னென்ன தவறுகள்????... நிச்சயம் பின் அடுத்தவன் மனைவியை அழைத்து வருகின்றான்... உன் முன்னே !!!.... இது எவ்வாறு நியாயம்???
எதை என்று புரிய!!!
நிச்சயம் தன்னில் கூட பின்... வரும் காலத்தில் நிச்சயம் எதை எதையோ.... தவறு செய்துவிட்டு!!!... நிச்சயம் கொன்று (கொலை செய்து விட்டு) விட்டும்... அண்ணாமலைக்கு வருகின்றான்!!! நிச்சயம் பிறர் சொத்தை அபகரித்தும்... வருகின்றான்!!
என்ன நியாயம்????
நிச்சயம் யான் விடப்போவதில்லை.... நிச்சயம் அங்கேயே... அமுக்குகின்றேன்... பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்...
மூக்குப்பொடியான் இருக்கின்றான் அல்லவா!!!!!!
(மூக்குப்பொடி சித்தர் ஜீவசமாதி)
அங்கு தான் யான் இருக்கின்றேன்!!!... ஒருவன் ஒருவனை கூட அங்கு நிச்சயம்.. பின் அதிக அளவு... இப்படி செல்கின்ற பொழுது யான் நிச்சயம்... பார்த்து பார்த்து... அங்கேயே தண்டனைகள் கொடுத்து.. அனுப்பி விடுவேன்.
ஆனாலும் அண்ணாமலைக்கு... வந்தேனே ஒன்றும் நடக்கவில்லையே!!!
இவ்வாறு ஆகிவிட்டதே... யாரும் பின் நிச்சயம்... இவ்வாறாகவே சொல்லக்கூடாது..
இங்கிருந்தே யான்.... தேவியே பின்... கைலாய தேவியே!!! கைலாய நாதனே!!!
இங்கிருந்து நான் வரங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.. இப்பொழுதிலிருந்து!!!
பார்ப்போம் இனிமேலும் கூட!!!
மனிதனை இப்படியே விட்டுக் கொண்டே விட்டுக் கொண்டே... இருந்தால் எதை எதையோ.. என்று தெரியாமலே அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய அறிய.
குருநாதர் அகத்திய பெருமான்:
நிச்சயம் பின் இடையனே நில்லும்!!! பின் அகத்தியன் இருக்கின்றேன்!!... நிச்சயம் உந்தனுக்கும் கூட அறிந்தும் கூட இவ்வாறாக... சிறிது செல்லட்டும் ஏ மனிதன்!!!... அவ்வாறாக பிழைத்துக் கொள்ளட்டுமே!!!
நிச்சயம் பின் கடைசியில் அடிப்போமே!!!......
இடைக்காடர்:
நிச்சயம் அகத்தியரே... பின் இதில் நீங்கள் தலையிடாதீர்கள்!!!.. நிச்சயம் தன்னில் கூட.... இவ்வாறாக பின் போகட்டும் போகட்டும்... என்று நீங்கள் மனிதனை விட்டு.. ஒழித்ததால்தான் இவ்வாறு பிரச்சனைகளே ... வந்தது!!!
(குருநாதர் அகத்தியர் பெருமான் மனிதர்களை கருணையோடு சரி போகட்டும் பிழைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டதால்)
இதனால் நீங்கள் நிச்சயம் இதில் தலையிடக்கூடாது...
நிச்சயம் எந்தனுக்கும் ஒரு வரம் வேண்டும்.. வரம் வேண்டும் சொல்லிவிட்டேன்... பார்வதி தேவியே!!! பின் ஈசனாரே!!!... எந்தனுக்கு நிச்சயம் இக்கட்டளை நிச்சயம் தன்னில் கூட... நிறைவேற்றி தாரும் நீங்களே!!!!
ஏனென்றால் பின் அண்ணாமலையிலே!!! நடக்கின்றது மிகப்பெரிய !!! மிகப்பெரிய !!! மிகப்பெரிய !!! பின் தவறுகள் நடக்கின்றது!!!
நிச்சயம் எங்கெங்கோ அழைத்துக் கொண்டு வந்து நிச்சயம் தன்னில் கூட... பின் விடுதியில் தங்கி... எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றான்.
இவையெல்லாம் யான் பார்க்க கூடாது!!!
நிச்சயம் பின் அதாவது என் மனதில் இருக்கும்... என் தந்தையும் தாயும்... அதாவது பார்வதி தேவியும்... ஈசனாரும் இருக்கும் இடத்தில்.. பின் அனைத்தையும் எடுப்பேன் வரும் காலத்தில்...
பின் நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறு அழிக்க வேண்டுமோ??????... அவ்வாறு அழித்து... நல்லோர்களையும் கூட... உயர்வு பெறச் செய்து.... நிச்சயம் அண்ணாமலையில் ஓர்.. கொடியோடு பின் வாழவைப்பேன்.
சொல்லிவிட்டேன்.
தாய் தந்தையரே!!!.. யான் வாழ வைக்க போகின்றேன் அவ்வளவுதான்!!..
நிச்சயம் இதை எந்தனுக்கு.... அருளாகவே (வரம்) நிச்சயம் தன்னில் கூட... நீங்கள் நிச்சயம் பின்... தராவிடிலும் யான்... நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று.. கூட ஞானத்தின் வழியாகவே நிச்சயம் தன்னில் கூட...
பின் ஆனாலும் தவத்தை.. செய்தால் நிச்சயம் தன்னில் கூட தவம் செய்து கொண்டே இருந்தால்... என் ஈசன் மகிழ்ந்து பின் எந்தனுக்கு... வரம் அளித்து விடுவான்!!
இவ்வளவு பாசங்களா என்று!!
நிச்சயம் அளிப்பான்.
இவ்வாறு தான்.. பின் அறிந்தும் புரிந்தும் கூட..
அகத்தியர் பெருமான்:
பின் இடையனே நில்லும்!!! நில்லும்!!.. பின் அகத்தியன் பேசுகின்றேன்!!
நிச்சயம் யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.
இடைக்காடர்:
அகத்தியரே!! நீர் நில்லும்!!! முதலில்!!!
நீர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள்....
ஆனால் என்ன முயற்சி செய்தீர்கள்????? இதற்கெல்லாம்???
அகத்தியர் பெருமான்:
நிச்சயம் பின்... இடைக்காடனே!!!... அதாவது சிறிது நிச்சயம் மனிதனுக்கு அனுபவத்தை கொடுப்போமே!!!! பின்பு அவ்வாறு செய்வோம் என்று!!
இடைக்காடர் சித்தர்:
அகத்தியரே நிச்சயம் அறிந்தும் இவ்விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள்.
ஏனென்றால் நிச்சயம் இப்படியே விட்டு விட்டால் நிச்சயம் தன்னில் கூட... மனிதன் பின் எவ்வளவோ.. அழித்து விடுவான்!! எதை என்று புரிய!!
இதனால் பின்... அதாவது உங்களை வணங்குகின்றேன்.. அகத்தியரே உங்களை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கின்றேன்.
அன்பு பின்பு அதாவது.. உங்களுக்கு அனைத்தும் தெரியும்... அதனால் நிச்சயம் தன்னில் கூட!!!...
ஒரு சந்தர்ப்பத்தை அதாவது ஈசனிடத்தில் கேட்கின்றேன் நிச்சயம் தன்னில் கூட... பின் இப்பொழுது இருந்து!!!
தந்தையே!!! தாயே!!!.. நிச்சயம்... உன்னை அழிவு நிலைக்கு எடுத்துச் செல்ல மாட்டேன் ஏனென்றால்!!..
அண்ணாமலை!!... வரும் காலத்தில் பின்... அழிவு நிலைக்கு செல்கின்றது...
சத்தியமாக சொல்கின்றேன் கைலாயத்திலிருந்து!!!
நிச்சயம் என் அண்ணாமலையை காப்பேன் காப்பேன்!!
இவை பின் என் இல்லம் என் இல்லம்... அண்ணாமலை என் இல்லம் சொல்லிவிட்டேன் இங்கிருந்தே!!!... யான் விலகுகின்றேன்.. இப்பொழுது சொல்லிவிட்டேன்!!! ஈசனாரே!!! பார்வதி தேவியே!!! அறிந்தும் நிச்சயம்!!
ஈசனார்:
தேவியே!!!... பார்த்தாயா!!!
இடைக்காடன் என்ன கோபம்? கொண்டிருக்கின்றான்!!
நிச்சயம் அறிந்தும் புரிந்தும்... எதை என்று அறிய அறிய...
இருப்பினும்... நிச்சயம் அவன் எண்ணத்தை... நிச்சயம் தன்னில் கூட பின்... பக்குவங்களாக மனிதனுக்கு கொடுக்கட்டும்... நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று புரிய.
ஏன் எவை என்று அறிய... இன்னும் இன்னும் எவை என்று புரிய...
அழுக்காணி சித்தர் வருகை:
பின் அதாவது ஈசனாரே!!! அழுக்காணியே பேசுகின்றேன்!!!
ஏன் எதற்கு எவை என்று புரிய... பின் மனிதனின் அழுக்குகள் தான்.. எவ்வளவு???? எவ்வளவு???
எதை என்று புரிய அதாவது மனிதனுக்கு நிச்சயம் உடம்பை கொடுத்து விட்டாய்.
ஆனால் உடம்பினில் பின் எவ்வளவு அழுக்குகள்.. ஆனால் மனிதன் நிச்சயம்... நீராடினால் அவ் அழுக்குகள் போய்விடும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனே!!!.. பின் மனிதன்!!!
பின் எவ்வளவு புத்தி கெட்ட மனிதனாக இருக்கின்றான்.
ஆனால் மனதில் உள்ள அழுக்குகள்... போகவில்லையே!!!
கைலாய நாதனே!!
கைலாய தேவியே!!
எப்பொழுது அவையெல்லாம் நீக்க போகின்றீர்கள்???
நிச்சயம் பின் கலியுகத்தில்... மனிதனின் மனதில் அழுக்குகள் பொங்கிக் கொண்டே வருகின்றது!!
அதற்கு யான் என்ன செய்யப் போகின்றேன்???
எதை என்று அறிய அறிய ஈசனாரே!!!
நிச்சயம் தன்னில் கூட
பார்த்து பார்த்து பின் கண்ணீர் வருகின்றது!!
ஏன் எதற்கு என்றெல்லாம்.. தெரியாமல் கூட!!!
ஏனென்றால் கலியுகத்தில் பின் மனிதனின் அழுக்குகள்.. போட்டி பொறாமைகளை... மற்றவர்களை இழிவு படுத்தி... நிச்சயம் தன்னில் கூட பின் ஏறி மிதித்து... முன்னுக்கு வருவது.
நிச்சயம் எவை என்று புரிய... இன்னும் அநியாயங்கள் அக்கிரமங்கள் நடந்து கொண்டே... இருக்கின்றது..
ஈசனார்:
நிச்சயம் பின் அழுக்காணியே நில்லும்!!!
உந்தனுக்கு நிச்சயம் தன்னில் கூட... ஒரு வரத்தை தருகின்றேன்.
நிச்சயம் தன்னில் கூட புதிதாகவே!!!
நிச்சயம் மனதில் உள்ள இன்னும் அழுக்குகளை நீக்க செய்து... அண்ணாமலையில் வருபவருக்கெல்லாம்!!!
இடைக்காடன் கோபித்து சென்று விட்டான்!!.. அதைச் செய்கின்றேன் என்று!!
ஆனாலும் நீயும் கூட பின் வந்தால்... மனிதனின் உள்ளே இருக்கும் அழுக்குகள் நிச்சயம்... தூய்மை செய்து அப்படி... தூய்மை செய்ய முடியவில்லை என்றால்... சில கஷ்டங்களை கொடுத்து... அனுபவ பாடத்தை கொடு!!!
போதுமா!!!
அழுக்காணி சித்தர்:
ஈசனாரே!!!.... இவ்வளவு கஷ்டப்பட்டு... உன்னை பார்த்து பார்த்து இவ்வளவு... ஆண்டுகள் இப்படி.... இவ்வளவு சிறிய!!..... இவ்வளவு சிறிய!!...(வரமா)... இவ்வளவுதானா எந்தனுக்கு??? கொடுக்கின்றீர்கள்!!
நிச்சயம் பார்த்து பார்த்து அலுத்து விட்டேன்... ஈசனாரே... மனிதனின் செய்கைகளை!!!
நிச்சயம் உண்மையான பக்தி இல்லை !
அங்கு அண்ணாமலைக்கு வருபவர்களுக்கெல்லாம்.
ஏதோ? எவனோ? ஒருவன்!????..... அங்கு அண்ணாமலையில் சுற்றுங்கள் என்று சொல்லிவிடுகின்றான்!!!
அதனால் சுற்றுகின்றார்கள்... பின் அங்கு சுற்றினால் உந்தனுக்கு.. திருமணம் ஆகும் என்று!!!
சுற்றுகின்றான்!!
அங்கு சுற்றினால் பின் அடுத்தவன் மனைவியை அபகரிக்கலாம் என்று!!
சுற்றுகின்றான்!!
அங்கு சுற்றினால் பாவம் போகும் என்று!!!
பின் சுற்றுகின்றான்!!!
ஆனாலும் நிச்சயம் உன்னை அறியவில்லையே ஈசனாரே!!!!
உன் நிலைமையை அறியவில்லையே ஈசனாரே!!!
உன் அன்பை நிச்சயம் பின் அறியவில்லையே!!
அவ்வாறெல்லாம் சுற்றுபவனுக்கு நிச்சயம் யான் தண்டனை கொடுப்பேன்!!.. யானும் நிச்சயம் பின் ஏதாவது.. இங்கு பேசிக்கொண்டே இருந்தால்... நிச்சயம் வேண்டாம்!!. வேண்டாம்!! என்று நீங்கள் சொல்லிவிடுவீர்கள்!!.. இதனால் நிச்சயம் யானும் விலகிக் கொள்கின்றேன்!!... இதை செய்யத்தான் போகின்றேன்!!.. அங்கே அண்ணாமலையில் நிச்சயம் அடிக்கத்தான் போகின்றேன்!!! செல்கின்றேன் சென்று வருகின்றேன்!!!... அம்மையே!!!... தாயே!!!
தாயே என்றும் அன்னையே என்றும் இங்கு... நிச்சயம் பின் பார்வதி தேவியே என்று ஈசனையும் கூட... எந்தனுக்கு இருவரும் ஒன்றே!!! ஒன்றே!!!
அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம்... பின் அறிந்தும்... எவை எவை என்று புரிந்து கொள்ள ஆள் இல்லையே... இங்கு!!!
பார்வதி தேவியார்:
நிச்சயம் தேவாதி!!! தேவனே!!!... எப்படித்தான்... ஒருவருக்கொருவர் சித்தர்கள் கையில் எடுத்துக் கொண்டால் நிச்சயம்... நீங்கள் என்னதான் செய்யப் போகின்றீர்கள்???
நிச்சயம் அதாவது தேவாதி தேவனே!!!.... இன்னொருவன் வருகின்றானே!!... இவன் என்னதான் பேசுகின்றான்... என்று பார்ப்போம்!!
போகர் மகரிஷி வருகை:
கைலாய நாதனே!! போகன் பேசுகின்றேன்!!
நிச்சயம் அவனவனுக்கு.. அதாவது அவனவன் பின் செய்த தவறுகளால்... நிச்சயம் நோய்கள் ஏற்படுகின்றது.
ஆனால் என்னுடைய மூலிகைகளை.. பின் எடுத்துக் கொண்டு சரி செய்து வருகின்றான் நிச்சயம் ஒருவன் கூட.
அவந்தன் நிச்சயம் தன்னில் கூட!!.. போகட்டும் போகட்டும் என்று... விட்டுவிடுகின்றேன்!
ஆனாலும் அவந்தன்.. இவ்வுலகத்தில்.. எதை எவை என்று புரிந்து கொள்ள!!!
ஆனாலும் பின் ஆனாலும் அறிந்தும் புரிந்தும் கலியுகத்தில்... இவ்வாறெல்லாம் நடக்க பின் அதாவது... நடந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு... எந்தனுக்கு வேதனையாகத்தான் இருக்கின்றது!!!
ஆனால் முன்னொரு காலத்தில் பின் வரங்களை... பின் பெற்று வந்து விட்டானே!!... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!
ஈசனார்:
அழகாக பின் போகனே!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட
நல்லோர்களுக்கும் இங்கு நோய்கள் வருகின்றது கலியுகத்தில்...
ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட... தன்னிடத்தில் பின் இருப்பவர்களுக்கெல்லாம்... நிச்சயம் நல்லது பின் சொல்லாவிடிலும் இவைதன் வந்துவிடும்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் அறிந்தும் இதனால்... கலியுகத்தில் நோய்கள் நிச்சயம் தன்னில் கூட... காக்கப்படுவது சந்தேகமே!!
நிச்சயம் அறிந்தும் புரிந்தும் நோய்களால் தான் நிச்சயம்... மாண்டு போவான் என்பதை எல்லாம்... ஏற்கனவே நிச்சயக்கப்பட்டது.
அதனால் என்ன செய்யப் போகின்றாய் போகனே!!!
போகர் மகரிஷி
தேவாதி தேவனே!!! உத்தமனே!!!
அறிந்தும் அனைத்திற்கும் நீயே!!
இதனால் பின்... உன்னுடைய ஆசிகளோடு... நிச்சயம் தன்னில் கூட... ஏதோ நல்லவர்களையாவது காப்பாற்றிக் கொள்ள வரும் காலத்தில் நிச்சயம்... அதாவது என்னுடைய மந்திரத்தை.... அதாவது தற்பொழுதெல்லாம்... போகன் மருத்துவம்!!!
இன்னும் எதையெதையோ அகத்தியன் மருத்துவம் என்றெல்லாம்... சொல்லி சொல்லி பொய்களை சொல்லி சொல்லி... எதை எதையோ கொடுத்து... நிச்சயம் இன்னும் நோய்களாக்கிக் கொண்டே இருக்கின்றான்.
இதனால் என் அதாவது பக்தர்களுக்கு ஒரு ரகசியத்தை... செப்பப்போகின்றேன்!!!
குரு மந்திரத்தை எடுத்துரைக்கப் போகின்றேன்.
அதை நிச்சயம்... அதாவது ஆயிரம் தடவை சொல்லி.. சொல்லி அதாவது அறிந்தும் பின் இல் அவுஷதத்தை (மருந்து) உட்கொண்டால் மட்டுமே!!! நிச்சயம் பின் மனிதன் பிழைத்துக் கொள்வான்!!!
என்பதையெல்லாம் நிச்சயம்... அடுத்தடுத்த வாக்கில் யான் சொல்லப் போகின்றேன்..
நிச்சயம் பின் தேவாதி தேவனே!!!... இதற்க்காவது வழி விடுவோம்!!! நிச்சயம்!!
ஈசனார்:
சரி!!!!... சரி போகனே!!!
அழகாக நிற்கும் என் குழந்தையையும் (முருகனை) பார்த்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா!!!
நிச்சயம் தன்னில் கூட அவ் வரத்தை... நிச்சயம் கொடுக்கின்றேன்...
நீ எடுத்துரைக்கலாம் குரு மந்திரத்தை!!!... வரும் காலத்தில்!!!
போகர் மகரிஷி
பின் சென்று வருகின்றேன்!!!... தேவியே!!!.. பின் தாயே பார்வதி தாயே!!! தேவாதி தேவனே!!! தந்தையே!!! நிச்சயம் தன்னில் கூட!!
ஏதோ என்னால் முடிந்தது... நிச்சயம் மனிதன் அதாவது பாவ கணக்குகளில் வீழ்ந்து இருக்கின்றான்..
ஆனால் காக்கப்படுவது.. நீங்கள் தான்!!!
ஆனாலும் நிச்சயம் என் குரு.. மந்திரத்தால் நிச்சயம்... பின் நல்லோர்களாவது காக்கப்பட்டு... நிச்சயம் அதன் மூலம்... தெளிவு பெற்று... உன்னிடத்தில் அழைத்து வருகின்றேன்.
நலம்!!!...
பார்வதி தேவியார்:
பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட... எதை என்று கூற அழகாக அனைவரும் பேசிக்கொண்டு பேசிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கின்றார்கள்... அகத்தியனே!!!!
நீர் மட்டும்... அமைதியாக இருக்கின்றீர்களே!!!... நிச்சயம் தன்னில் கூட என்ன? ஏது?.. எவை என்று புரிய!!!
நிச்சயம் அதாவது அன்னை பேசுகின்றேன்!!... அகத்தியனே சொல்லும்!!!
அகத்தியர் பெருமான்:
தாயே நீங்கள் இருக்கின்ற பொழுது... எந்தனுக்கு என்ன கவலை??..... நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு நடத்தப்பட வேண்டுமோ?? ஈசன் நினைத்தாலே அதை யான் நிச்சயம்... அதாவது என் தந்தை தாயும்... என்ன நினைப்பீர்கள்??? என்ன அடுத்து பின் செய்வது? என்பதையெல்லாம் நிச்சயம் பின் அறிந்து...
அதாவது நீங்கள் மனதில் நினைத்தாலே யான் செய்து விடுவேனே!!!!!!
ஏன் எதை என்று புரிய... இதனால் ஒவ்வொரு மனதையும் கூட ஆராய்ந்து... வரும் காலத்தில் நிச்சயம்.. எடுத்துரைப்பேன்... நீ இப்படித்தான்!!! நீ இப்படித்தான்!! என்று!!!
விதியை நிச்சயம் தன்னில் கூட பின்... மாற்ற முடியாவிட்டாலும்... நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் புரிந்தும் கூட.. மாற்றிட நிச்சயம் தன்னில் கூட... வரங்களை அறிந்தும்... புரிந்தும் கூட எவர்.. ஏது என்று அறிய...
நிச்சயம் தாயே!!! தந்தையே!!! நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ!!! அதை யான் அறிவேன்!!
அதை யான் செய்து முடிப்பேன்.. அவ்வளவுதான்.
அமைதி காத்திருக்கின்றேன்!!
பின் நலமாக இன்னும்.. இன்னும் பின்... அறிந்தும் அழகாக.. பின் அனைவரும் பின் அதாவது... அறிந்தும் அறியாமலும்... செய்த பிழைகளை... நிச்சயம் தன்னில் கூட.. பின் பொறுத்துக் கொண்டு.. அனைவருக்கும் ஆசிகள்.. கொடுத்து விடுவீர் ! தேவாதி தேவனே!!!
மன்னனே!!!
நிச்சயம் இன்னும் அறிந்தும்... ஆனாலும் இவ் சக்தி இன்னும் பேசிக் கொண்டிருந்தால் (வாக்குகள்).. நிச்சயம் இவ் மைந்தனுக்கு.. நிச்சயம் அறிந்தும் சக்திகள்.... இதனால் அதாவது இன்னும்.. உடம்பு சக்திகள்.. பின் எதை என்று அறிய அறிய...
(கிட்டத்தட்ட 5000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் இல்லாத சூழ்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொண்டு மூச்சு இழுத்துக் கொண்டு கடும் குளிரில் மானசரோவர் ஏரிக்கரையில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யா வாக்குகள் ஓதினார்... இடைக்காடர் சித்தர் வந்த பொழுது கடும் ஆவேசத்துடன் கோபத்துடன் வாக்குகள் நல்கும் பொழுது... திரு ஜானகிராமன் ஐயா குரல் மற்றும் உடல் மொழி அப்படியே மாறிவிட்டது கடும் வேகத்துடன் ஆவேசத்துடன் வாக்குகள் வந்தது ஆக்சிஜன் குறைபாடு இருந்தாலும் அதை மூச்சு பிடித்துக் கொண்டு வாக்குகள் அதே வேகத்தில் ஓதி முடித்தார் திரு ஜானகிராமன் அய்யா.
தன்னுடைய மைந்தனுக்கு இன்னும் இது போன்று வாக்குகள் தொடர்ந்து வந்தால் அவருடைய உடலில் சக்திகள் தெம்பு இல்லாமல் போய்விடும் என்று குருநாதர் கருணையோடு வாக்குகள் உரைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ஆசிர்வாதங்களோடு)
இதனால் அடுத்த வாக்கில் உனை அழைக்கின்றேன் தேவாதி தேவனே... ஆசிகள் ஆசிகள்!!!
மானசரோவர்... கைலாச யாத்திரை பார்வதி தேவியாரின் அம்சமான மானசரோவர் ஏரி கரையில் வைத்து குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு!!
அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!
நிச்சயம் தன்னில் கூட இங்கு இத்தனை பேர் வந்திருக்கின்றார்களே... ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... எங்கிருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட.. எதைச் செய்தாலும் நிச்சயம் தன்னில் கூட... ஈசன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
ஆனாலும் சில மனிதர்கள் வருகின்றார்கள் இங்கு பாவங்கள் போகும் என்று.
ஆனாலும் நிச்சயம் போகாது நிச்சயம் தன்னில் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் அவனவன் துன்பத்தை அவனவன் அனுபவித்து விட வேண்டும் ஏனென்றால்.. நிச்சயம் தன்னில் கூட ஏதோ பின்... அடித்து பலமாக.. பின் அறிந்தும் புரிந்தும் கூட பின்... அடி விழுகின்றது என்பதெல்லாம் ஈசனுக்கு தெரியும் ஆனாலும்.. இங்கு வந்து விட்டால் பிழைத்துக் கொள்ளலாம்... என்று ஏதோ மனதை மாற்றி அனுப்பி விடுகின்றான் அவ்வளவுதான்.
எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. இங்கு வந்து இருப்பவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தின்.. தொடர்பே!! அதனால்தான் ஈசன் அழைத்துக் கொண்டே இருக்கின்றான்!!!
அப்பனே மானசரோவர் இதை பார்ப்பதே புண்ணியம் என்பேன். அப்பனே!!
இப்பொழுது தேவாதி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் கூட நீராடி கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே...
ஆனாலும் அப்பனே அமைதியாக நினைத்துக் கொண்டு.. நிச்சயம் கால்களை வைத்துக் கொண்டு.. நிச்சயம் தன்னில் கூட வணங்குங்கள்... அவர்களுடைய பார்வையும் ஆசீர்வாதமும் கிடைக்கும் அப்பா.
அவ்வாறு அவர்கள் குளிக்கின்ற பொழுது இவ்வாறெல்லாம்... மந்திரங்கள் ஓதி கூச்சலிட்டுக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு கோபம் வந்துவிடும்.
(மானசரோவர் ஏரியின் கரையில். கைலாச யாத்திரை வந்திருந்த மற்ற மனிதர்கள் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் நெருப்பை மூட்டிக்கொண்டும் சைனா காவல்துறை கட்டுப்பாட்டை மீதியும் தன்னுடைய செயல்களில் ஈடுபாடு காட்டிக் கொண்டிருந்தனர்.
மானசரோவர் புனிதமான ஏரி... அதில் தேவாதி தேவர்களும் ரிஷி முனிவர்களும் நீராடும் பொழுது இப்படி கூச்சலிட்டு கொண்டிருந்தால் அவர்களுக்கு கோபம் வரும் என்று குருநாதர் கூறினார். )
நிச்சயம் இவ்வாறு கூச்சலிட்டு எதை என்று அறிய அறிய எவ்வாறு கத்தினாலும் இறைவன்... பார்ப்பானா??? என்ன!!
அமைதியாக பின் சாந்தமாக வணங்கினாலே... அவர்கள் உங்களைப் பார்ப்பார்கள் அவ்வளவுதான்... ஆசிகளை சந்தோஷமாக... பார்க்கலாமே என்று கொடுத்து விடுவார்கள்.
ஆனால் இவ்வாறெல்லாம் கூச்சலிடக் கூடாது சொல்லிவிட்டேன்.. கைலாயத்தில்.
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்
ஈசனே அமைதியாக தான்.. இருக்கின்றானப்பா!! அவந்தன் கூச்சலிடவில்லை!!!
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இங்கு எதை என்று அறிய... இது பார்வதி தேவியின் உடம்பு அப்பா!!!... இதில் குளிப்பதே சில பாவத்தை உருவாக்கும் என்பேன் அப்பனே!!!
அதனால் நிச்சயம் தன்னில் கூட கால்களிலே இருக்க வேண்டும்... அவ்வளவுதான்.
(மானசரோவர் ஏரி பார்வதி தேவியின் அம்சம் ஏரிக்கரை அருகே இருக்கும் அலை நீர் நிலை நாம் அது பார்வதி தேவியின் கால்கள் அங்கே நின்று தொட்டு வணங்கி பிரார்த்தித்தாலே போதுமானது என்று குருநாதர் கூறுகின்றார்!! மான சரோவர் ஏரியில் மனிதர்கள் குளிக்கக் கூடாது பாவங்களை உருவாக்கும் என்று கூறி இருக்கின்றார்)
எங்கு நீராட வேண்டும் என்றெல்லாம் இருக்கின்றதப்பா!!! இன்னும் காலங்கள் இருக்கின்றது அப்பா நிச்சயம் தன்னில் கூட!!!
இங்கு அனைவரும் ரிஷி முனிவர்களும் பறவைகள் ரூபத்தில் திரிவார்களப்பா!;!
அப்பனே இன்னும் உரைப்பேன் அப்பனே ஆசிகள்!!!!
ஓம் அகத்தீசாய நமக. 🙏
ReplyDelete🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteநிச்சயம் இவ்வாறு கூச்சலிட்டு எதை என்று அறிய அறிய எவ்வாறு கத்தினாலும் இறைவன்... பார்ப்பானா??? என்ன!!
ReplyDeleteஅமைதியாக பின் சாந்தமாக வணங்கினாலே... அவர்கள் உங்களைப் பார்ப்பார்கள் அவ்வளவுதான்... ஆசிகளை சந்தோஷமாக... பார்க்கலாமே என்று கொடுத்து விடுவார்கள்.ஐயா
இதையே மற்ற மதத்தவரும் யோசித்தால் மற்றவருக்கு மிக நன்றாக இருக்கும். ஈசனார் அனுப்பி வைத்த அந்த இறை தூதர் மட்டும் ஏன் ஒலி பெருக்கி வைத்து ஓதினால் மட்டும் தான் செவி சாய்ப்பரா, இது ஏன் வர்களுக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் மற்ற மதத்தவர்கள் யாரும் இறையிடம் மனமுருகி வேண்டவோ அல்லது தியானிக்கவோ முடியவில்லை. இதற்க்கு ஒரு நல்ல தேர்வு வேண்டும் அய்யனே.
அகத்திய தந்தையே போற்றி போற்றி போற்றி 🙏
ReplyDelete