​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 5 August 2025

சித்தன் அருள் - 1913 - அன்புடன் அகத்தியர் - எகிப்து வாக்கு - 4!





குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பிரமிடு ரகசிய வாக்குகள் பாகம் 4 

சுகனும் எதை என்று அறிய அறிய (சுக பிரம்ம ரிஷி) அப்பனே இங்கு தான் அப்பனே தன் உடம்பை பத்திரப்படுத்தினான்.. என்பேன் அப்பனே 

ஓரிடத்தில்!!!

அப்பனே ஆனாலும் எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட... ஓரோர் (ஓர், ஓர்,) உடம்பிற்கு அப்பனே நிச்சயம்.. இத்தனை வருடங்கள் என்று!!!!... அப்பனே பின். எதை என்று அறிய அறிய அப்பனே.. அப்படியே திரும்ப வருதல் சிறப்பு என்பேன் அப்பனே

இவ்வாறு பத்திரப்படுத்தி அப்பனே.. அப்பனே பின் நிச்சயம்  அப்பனே உருவம். எவை என்று அறிய அறிய பின்.. பல மக்களை கவர்ந்து அப்பனே.. பல மக்களுக்கு உதவிகள் அப்பனே பின் இப்பொழுதும் கூட சித்தர்கள் யாங்கள் அப்படி தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்போம் அப்பனே.

ஆனாலும் மனிதன் கேட்பானப்பா!!

ஏன் உடம்பை பெறவில்லை?? எதை என்று அறிய அறிய...

உடம்பை பெற்று விட்டாலே அப்பனே தரித்திரம் தானப்பா!! என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே பின்... அதாவது இங்கிருந்து அப்பனே பின்... சென்றோர் அப்பனே நிச்சயம் தஞ்சையை அடைந்து... அப்பனே பல வகையிலும் கூட.. நிச்சயம் தன்னில் கூட பின்... எவை என்று புரியாமல் கூட அப்படியே பின் ஏற்படுத்தினார்கள் என்பேன் அப்பனே. 

அங்கும் கூட அப்பனே பின்... எவை என்று அறிய அறிய எதை என்று புரிய ஒரு தலம் இருக்கின்றதப்பா!!!

அப்பனே அங்கும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே """வற்றாத!.... எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் ஜீவ நதியாக இருந்து... எவை என்று கூட இப்பொழுதெல்லாம்... அப்பனே எவை என்று புரிந்து கொள்ள பின் நின்று அன்று அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் எதை என்று புரியாமலும்... எவை என்று அறியாமலும் நிச்சயம் தன்னில் கூட மனிதன் பின் வாழ்க்கை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றானப்பா!!

பின் ஏன்? எதற்கு? என்று எவை என்று தெரியாமலே என்பதெல்லாம் அப்பனே! 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்து அப்பனே பின் செல்வோர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... உணர்ந்தனர் என்பேன் அப்பனே. 

அதாவது பின் மனிதனையும் கூட அதாவது... உயிர் போகும் மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்றெல்லாம். 

இப்படியே பின் சென்றவர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கடைசி வரை சென்று விட்டார்கள் என்பேன் அப்பனே..

பின் கன்னியாகுமரி இன்னும் அப்பனே.. அதையும் தாண்டியும் கூட அப்பனே...

இதனால் போகும் வழிகளில் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... எவை என்று அறிய அறிய அரசனை நோக்கி... இவ்வாறாக அமைத்தால் பின் நன்று என்று !!

(யாத்திரை செல்லும் வழிகளில் ஆங்காங்கு ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசர்களைப் பார்த்து இவ்வாறு அமைக்க வேண்டும் என்று உபதேசம்)

என்பதையெல்லாம் சொல்லிச் சொல்லி அரசர்களும் அப்படியே அமைத்து... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது இப்பொழுது கூட அப்பனே... உடம்பில் உள்ள பல வகையான நிச்சயம் தன்னில் கூட அதாவது தோஷங்களை கூட எடுக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பல வகையிலும் கூட பின்... தஞ்சை பின்  கும்பகோணத்தில் அப்பனே அறிந்தும் இன்னும் இன்னும்... அப்பனே அங்கு பல திருத்தலங்கள்... அப்பனே உருவாக்கப்பட்டது. 

அப்பனே அவ்வாறாக அப்பனே ஒவ்வொரு நிச்சயம்... கையிற்கும் ஒவ்வொரு திருத்தலம்!! அப்பனே காலுக்கும் ஒவ்வொரு திருத்தலம்..!! அப்பனே இதயத்திற்கும் ஒரு திருத்தலம்!!.. கண்ணுக்கும் ஒரு திருத்தலம்!! அப்பனே.. நிச்சயம் தலைக்கும் ஒரு திருத்தலம் அப்பனே... உடம்பிற்கும் அப்பனே எவை என்று அறிய அறிய... அனைத்து பாகங்களுக்கும்.. ஒவ்வொரு திருத்தலங்கள் உள்ளதப்பா...

அங்கு சென்று அப்பனே நலன்களாக உறங்கி வந்தாலே பல நோய்கள் பின் தீருமப்பா!!!

ஆனாலும் அப்பனே அவை நிச்சயம்... இப்பொழுது இங்கிருந்து யான் சொல்லுவதற்கு இல்லையே!!!!!.....

அப்பனே ஏன்? எதனால்? என்பவையெல்லாம்... வருகின்ற காலத்தில் அப்பனே... நிச்சயம் சொல்வேனப்பா!!!

இவ்வாறு பக்குவப்படாமல் பின் அங்கெல்லாம் சென்றாலும்... அப்பனே  மீண்டும் பின் அங்கிருந்து... அதாவது சொல்லிவிட்டார்கள் என்று... அப்பனே பின் அங்கு உறங்கினாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!

அதனால் என்ன செய்ய வேண்டும்???? முதலில் அப்பனே!!!

எதைச் செய்ய வேண்டும்?? அப்பனே!!

எப்படி செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் அப்பனே!!!.. உணர்ந்து செய்து கொண்டு... உறங்கினால் மட்டுமே... அனைத்து நோய்களும் கழியுமப்பா!!!

அப்பனே செப்பி விட்டேன் அப்பனே. 

ஏன்? எதற்கு?... உடம்பிற்கும்... அப்பனே பிரபஞ்ச சக்திக்கும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட இடையே தான்... அப்பனே ஆட்டம் துவங்குகின்றது.. என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் ஒவ்வொரு... அதாவது அப்பனே நவகிரகங்கள் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே பின் உடம்பில் துகள்கள் அப்பனே பலமாக....அப்பனே

அவ் நவகிரகங்களின் துகள்கள் சிறிதாவது பாதிக்கப்பட்டால்... நிச்சயம் தன்னில் கூட நோய்கள் வந்துவிடுமப்பா!!

அவ் நவகிரகத்தை... எப்படி? ஏது? எவை என்று கூற சக்திகள் ஆக்குவது??? என்பதெல்லாம் அப்பனே யாங்களே உணர்ந்தோம் என்போம் அப்பனே...

இதனால் அப்பனே தன் மக்களுக்கு.. தெரிவிக்கலாம் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட

ஆனாலும் அப்பனே பாவ.... அணுக்கள் தான் அதிகம் உள்ளதப்பா!!!

அவ் பாவம் அணுக்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே உள்ளே இருந்து கொண்டு அப்பனே எவை என்று அறிய அறிய.. உண்மையை நம்பாதப்பா. 

சொல்லிவிட்டேன் அப்பனே. 

இதனால் மனிதனை குறை கூறவே முடியாதப்பா!!! புண்ணிய அணுக்கள் இருந்தால் மட்டுமே.. அப்பனே பின் அதாவது.. சித்தர்களைப் பற்றி தெரியுமப்பா!! உண்மை நிலையை தெரியுமப்பா!! பின் தேடுவோம் என்று!!

இதனால் அப்பனே பின் சித்தனை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்று சென்று கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அதை பின் அறிவியல் வழியாகவும் அப்பனே பல வாக்குகளாக செப்புவேன் என்பேன் அப்பனே ஒவ்வொரு இடத்திலும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு தெரிந்து தெளிவு பெற்றால் அப்பனே... உங்களை நீங்களே வெல்லலாம்.. நீங்களே வெல்லலாம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றோம் அப்பனே. 

அதாவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் எவை என்று புரிய அப்பனே..... மாந்தியானவன் (மாந்தி கிரகம் குளிகன்) அப்பனே அதிர்ஷ்டத்தை அப்பனே குறிக்கக் கூடியவன் என்பேன் அப்பனே...

 இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் சனி பகவானிடையே சண்டையிட்டு நிச்சயம் தன்னில் கூட பின் எதுவும் தேவையில்லை
நிச்சயம் தன்னில் கூட யான் நிச்சயம் சென்று விடுவேன்... எவை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் இங்கு (எகிப்து )வந்து விட்டானப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் மாந்தி எவ்வாறு... எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அவனுடைய அருள் இருந்தால் மட்டுமே அப்பனே... அதிர்ஷ்ட வாய்ப்புகள் அப்பனே நிச்சயம்... தானாக தேடி வருமப்பா!!!

உயர்ந்த நிலைகளை அடைவார்களப்பா!!!

அவ்வாறு அப்பனே நிச்சயம் தன்னில் கூட... மறைமுக பொருளாகவே மாந்தி இருக்கின்றானப்பா!!!

அப்பனே எங்கெங்கு?? அவந்தன் என்ன எதை என்று அவனுடைய லீலைகள் செய்து கொண்டு இருக்கின்றான்... எதை என்று அறிய அறிய அப்பனே. 

சுக்கிரனுடனே அப்பனே சேர்ந்து நிச்சயம் தன்னில் கூட எல்லையில்லா.. அப்பனே பின் வெற்றிகளை பின் நிச்சயம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பலமாக அப்பனே மாந்தியின் இருப்பிடம்...இவ் நதியானதே (நைல் நதி) என்பேன் அப்பனே!!

இதனால்தான் இவ் நதி நீண்டு காணப்படுகின்றது என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய.

 யாரும் இன்னும் அப்பனே பின் எவை என்று அறிய சில கண்டுபிடிப்புகள் அப்பனே கண்டு பிடிக்காத நிலையிலும் கூட உள்ளதப்பா. 

இதனால் அப்பனே மாந்தி ஆனவன்.. அப்பனே நீண்டு காணப்படுவான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

நீண்டு அப்பனே அதிர்ஷ்டத்தை... எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே 

 மனதும் நீண்டு (நல் மனமாக விசாலமாக) அப்பனே காணப்பட்டால் அப்பனே ஏற்றங்கள் உண்டு..

அவ்வாறாக அப்பனே  பின் அனைத்து எதை என்று அறிய அறிய இவ் நதிக்கு சொந்தக்காரன் அப்பனே எவை என்று புரிய  புரிய... மாந்தி ஆனவனே அப்பனே. 

இவ்வாறாக அப்பனே பலம் பெறச் செய்ய வேண்டும்.

மனிதன் அனைத்தும் பின் அதாவது பின் எண்ணத்தில் தோன்றுவதெல்லாம் பின் நல்லவைகள் பின் எவை என்று கூற வளர்த்துக் கொள்ள வேண்டும்... நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்... இவ்வாறு நீண்ட மனது இருந்தால் அப்பனே... அனைத்தும் அப்பனே மாந்தி பின் செய்வான் என்பேன் அப்பனே. 

அப்படி இல்லாவிடில் அப்பனே நிச்சயம் கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவான் என்பேன் அப்பனே மாந்தி ஆனவன்.. அப்பனே. 

மீண்டும் அப்பனே பின் அழிய வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

இன்னும் இன்னும் சிறப்புகள் உண்டு என்பேன் அப்பனே இங்கு!!! எதை என்று அறிய அறிய. 

இதனால்தான் அப்பனே... அப்பனே இவையும் கூட அப்பனே எதை என்று கூட பின் நல்விதமாகவே அப்பனே பின் அங்கெல்லாம் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது தஞ்சை.. இருக்கின்ற எவை என்று அறிய அறிய பின் மதுரையில் இருக்கின்ற எவை என்று அறிய அறிய... (சோழர் பாண்டியர்) மன்னர்களும் இங்கு வந்து அப்பனே... சக்திகளை ஏற்றிக் கொண்டு அப்பனே பின் பல வழிகளிலும் கூட வெற்றிகள் பெற்றனர் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே வருவதற்குள்ளே அப்பனே இன்னும் அப்பனே பல அரசர்கள் வந்தனர் என்பேன் அப்பனே !!

ஆனாலும் இடையே வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் கொன்றும் குவித்து விட்டனர் என்பேன் அப்பனே. 


(தூர தேசங்களில் இருந்து எகிப்து சென்று சக்திகளை பெறுவதற்காக சென்ற அரசர்கள் வழியில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த அரசர்கள் உடன் போர் ஏற்பட்டு அவர்களால் இங்கிருந்து சென்றவர்கள் போகும் வழிகளிலேயே கொல்லப்பட்டனர் ஏனென்றால் பல தேசங்களை கடந்து தான் எகிப்து செல்ல வேண்டி இருந்தது) 

அவர்களுக்கெல்லாம் பிறவிகள் கொடுத்து அப்பனே பின் மீண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய உலகத்தை.. எவை என்று அறிய அறிய வேண்டும் மீண்டும் மீண்டும் அப்பனே... முயற்சிகள் செய்து
அப்பனே ராஜராஜ சோழனும் இங்கு வந்து அப்பனே பல.. எதை என்று அறிய அறிய பல வெற்றிகளை பெற வேண்டும் என்பதற்கிணங்க... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் எவை என்று அறிய அறிய இவ் நதியின் கரையில் அப்பனே தவங்கள் செய்தான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே இங்கு எவை என்று அறிய அறிய... அனைத்து கிரகங்களும் கூட அப்பனே பின் ஒன்று சேர்ந்து அப்பனே எவை என்று அறிய அறிய... வெடிக்கும் சமயத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதாவது எவ்வாறாக பின்... வெடிக்கும் குண்டு (போல்) அப்பனே எதை என்று அறிய அறிய... ஓரிடத்தில் அப்பனே பின் அவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட 

கிரகங்கள் அப்பனே ஒரே நேர்கோட்டில் அப்பனே வந்தால்... அனைத்து கிரகங்களின் கூட பார்வையால்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது பளு அதாவது நிச்சயம் தன்னில் கூட அதாவது வேகம்.. என்றும் இதை குறிப்பிடலாம் அப்பனே வேகம் தாங்காமல் வெடிக்குமப்பா!!!

(கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் ஒன்றாக மோதி வெடிக்கும்)


அவ்வாறு பின் வெடிக்கின்ற பொழுது அப்பனே.. பின் அனைத்து துகள்களும் இங்கு வந்து அழகாக விழுமப்பா!!!

இவ்வாறு விழுகின்ற பொழுது அப்பனே.. உடம்பில் படுகின்ற பொழுது அப்பனே ஒரு சக்தி.. ஏற்படுமப்பா!!

அவ் சக்தியானது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது அவ் சக்தியானது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது பின்... நிச்சயம் ஒரு கோடி ஆட்களுக்கு பின்... சமம் என்பேன் அப்பனே.

இவ்வாறாக வெல்லலாம் என்பேன் அப்பனே... இதனால் அப்பனே இன்னும்... சக்திகளைப் பற்றி யான் சொல்கின்றேன் அப்பனே... ஒவ்வொன்றாக அப்பனே. 

இதனால் அப்பனே.. அனைத்தும் அப்பனே சொல்லிக் கொடுப்பேன்.. என் பக்தர்களுக்கு!!!

எப்படி வெல்ல வேண்டும்??? அப்பனே எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!.. அவ்வாறாக இல்லையென்றால் நிச்சயம்... அவை இவை என்று அப்பனே பின்னே சென்று கொண்டே இருக்க வேண்டியது தான் என்பேன் அப்பனே. 

இவ்வாறு பின்னே சென்று கொண்டே இருந்தால் மீண்டும் மீண்டும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அதாவது.. பிறப்பெடுத்து அப்பனே கஷ்டங்கள் பட்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய.. அப்பனே உங்களை நீங்களே... புரிந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் உண்மை நிலைகளை புரிந்து கொள்ளவே அப்பனே இன்னும் வாக்குகள்.. அப்பனே பின்  தெளிவு படுத்துகின்றேன் என்பேன் அப்பனே... எதை என்று புரிய. 

இதனால்தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட எங்கெல்லாம்... அப்பனே எவை என்று புரிய... அப்பனே பின்  அதிகமாக.... இன்னும் கதிர்வீச்சுக்கள்... நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் கிரகங்களின் கதிர்வீச்சுக்கள்... அப்பனே விழுகின்றதோ.... அங்கெல்லாம் அப்பனே நதியை யான் ஏற்படுத்தினேன் என்பேன் அப்பனே. 

இவ்வாறாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே அறிந்தும் அறிந்தும் அவ் நதிகள் எல்லாம் அப்பனே அங்கங்கு... மனிதன் அப்பனே பக்கத்திலே இருக்க அங்கேயாவது அப்பனே பின் நீராட... அப்பனே சில பாவங்கள் பின் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே தொலையட்டும் என்று!!

ஆனாலும் அப்பனே அதைக் கூட மனிதன் ஏற்கமாட்டானப்பா!!

ஏன்???
எதனால்??? அப்பனே இக் கலியுகத்தில் அப்பனே பாவ அணுக்களே அதிகமாக பெற்றுள்ளானப்பா மனிதன் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் உண்மை சொன்னால் நம்ப போவதில்லை... அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!


 பொய் சொன்னால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவை நடக்கும் இவை நடக்கும்.. இப்படி செய் அப்படி செய் அது வந்துவிடும்.. இது வந்து விடும் என்று சொன்னால் அப்பனே.. கேட்பானப்பா அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட உண்மை சொன்னால் ஒரே வரியில் அப்பனே நிச்சயம் இறைவனைத் தவிர யாராலும் பின் ஒன்றும் கொடுக்க முடியாது என்று சொன்னால்...... அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!


 அனைவருமே மனதை அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... மனதை கட்டுப்படுத்த தான் அப்பனே.. செய்கின்றார்கள் அப்பனே. 
அதாவது ஒரு எல்லைக்குள் அப்பனே!!!

 இறைவனிடம் வந்து அனைத்து தவறுகளும் செய்து விட்டு இனிமேல் யான் தவறுகள் செய்யக்கூடாது... அதற்கு என்ன எவை என்று அறிய அறிய உபாயம்??? என்பதற்கிணங்க!!!!...
 மனிதன் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு... இம் மந்திரத்தைக் கொடு அவ் மந்திரத்தை கொடு.. என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட!!

தவறு செய்தவனுக்கு ஒரே நாளில்... அனைத்து நன்மைகளும் செய்ய முடியுமா??????  என்ன அப்பனே!!!!

முடியாது அப்பனே!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட...


இன்னும் அப்பனே ஏராளமான வாக்குகளும் உண்டு... அப்பனே நாளைய பொழுதிலும் கூட உரைக்கின்றேன் ஆசிகள்!! ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!


3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete