​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 28 February 2025

சித்தன் அருள் - 1808 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 )

நம் குருநாதர் :- அப்பனே கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒவ்வொரு இடத்திலும் உங்களைப் பார்த்துள்ளேன் நலமாகவே. ஆனாலும் சில வெற்றி, தோல்விகள். கவலைகள் இல்லை. 

வெற்றி, தோல்வி அறிந்தும் கூட 

சூரியன் , சந்திரன்

இரவு பின் பகல்

இன்பம் , துன்பம்

மாறி மாறித்தான் வரும் என்பேன். நிச்சயம் ஒன்று சொன்னேன் பல வழிகளிலும் கூட. இதனால் துன்பமே வந்திருந்தாலும், இன்பமே வந்திருந்தாலும் நிச்சயம் இன்பமாகவே இறைவன் படைத்திருந்தாலும் நீங்கள் நிச்சயம் இன்பமாகவே வாழ்ந்திட்டு , இறைவன் என்ற பெயரையே மறந்து விடுவீர்கள். அதனால்தான் இறைவன் துன்பம் என்று வைத்திருக்கின்றான். அதனால் நிச்சயம் துன்பம் வந்தே சேரும். துன்பம் வந்தால்தான், இறைவனிடத்தில் ஐயோ!!! ஓடோடி  இறைவா!!! இறைவா!!!! என்னை காப்பாற்று காப்பாற்று என்று ஓடோடி வருவீர்கள். இன்பமாகவே இருந்தால் , இறைவனா??? எங்கிருக்கின்றான்??. யான்தான் இறைவன் என்று மனிதன் சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பான். 

அடியவர்கள் :- ( காற்றின் ஓசை கூட கேட்காத அளவு அமைதி ) 

குருநாதர் :- அப்பனே சொல். துன்பம் வருவது நல்லதா? பின் இன்பம் வருவது நல்லதா? 

அடியவர் 4 :- இரண்டும் கலந்து வந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று தானே சொல்ல வருகின்றீர்கள் சாமி!! 

குருநாதர் :- அப்பனே எப்படி சுவையாக இருக்கும்?

அடியவர் 4 :- பக்குவம் ஆகி, அதுக்கு அப்புறம் நல்லது நடக்கும்போது, கெட்டியாக காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றீர்கள் சாமி.

குருநாதர் :- அப்பனே (இதை) அனைவருக்கும் சொல்லி எடுத்து உரை. 

அடியவர் 4 :- ( அப்படியே எடுத்து உரைத்தார் அங்கு உள்ள அடியவர்களுக்கு ) வாழ்க்கையில இன்பம் துன்பம் இரண்டும் இருக்கும். துன்பம் வந்தால்தான், பக்குவம் வரும். பக்குவம் வந்தால்தான் அதை கட்டி காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் சொல்லவருகின்றார். 

குருநாதர் :- அப்பனே புரியும் என்பது என்ன? புரியாது என்பது என்ன? 

அடியவர் 4:- நீங்க சொல்ரது புரியல சாமி. 

குருநாதர் :- அப்பனே அறியும் என்பது, அறியாது என்பது (என்ன)?

அடியவர் 4:- தாங்களே கூறிவிட்டால் சௌகரியமாக இருக்கும்…

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :- அப்பனே அனைத்தும் கூறுகின்றேன் அப்பனே. உணவைக்கூட உன் பக்கத்திலேயே வைக்கின்றேன். நீ உண்ணாதே. யான் ஊட்டி விடுகின்றேன். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )

அடியவர் 4 :- அது உங்கள் கருணை சாமி.

குருநாதர் :- அப்பனே அறிந்தும்கூட இவ்வளவு கருணை படைத்தவன் உங்களுக்கு நல்லது செய்ய மாட்டானா என்ன? கூறுங்கள் நீங்களே அப்பனே. 

அடியவர் 4:- கண்டிப்பாக சாமி ( எங்களுக்கு நல்லது செய்வீர்கள் )

குருநாதர் :- அப்பொழுது என்னைக் கேட்க வேண்டுமா அப்பனே? உங்கள் மனதில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறியாததா? பின் எடுத்து வந்துவிட்டேன் அப்பனே. இதுபோலத்தான் அகத்தியன் அப்பனே. எப்படி, யாரை, எப்படி கொண்டு வர வேண்டும்? எங்கு வைக்க வேண்டும்? எப்படி உரைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரியும் அப்பா. அப்பனே உன் வாயாலே வந்து விட்டது. கருணை படைத்தவன்தான் ( இவ் அகத்தியன் ). அனைத்து சித்தர்களும் மக்களுக்கு நன்மை செய்ய காத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் மக்களோ , மாயையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் அழகாகச் செப்பினால் ஆனால் சொல்வதில்லையே? அப்பொழுது என்ன செய்யலாம் மகனே? 

அடியவர் 4:- சாமி நீங்கதான் அணுவுக்கு அணுவாக இருக்கின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் சொல்வது )நான் கருணை உள்ளவன் தான். ஆனால் குழந்தைகள் போல் சொல்கின்றேன். ஆனால் கேட்பதில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று கேட்கின்றார்.

அடியவர் 4:- சாமி எல்லோருக்கும் அசரீரியாக பேசினீங்க என்றால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். 

அடியவர்கள் :- ( சிரிப்பு )

அடியவர் 5 :- அடித்துச் சொல்லுங்கள் (குருநாதா). 

குருநாதர் :- ( யாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை.) அதனால்தான் என் பக்தர்கள் ஆயினும் அடித்து நொறுக்குகின்றேன் அப்பனே. கஷ்டத்தை அள்ளித் தந்துகொண்டே இருக்கின்றேன். 
(நல் வழிப்படுத்துகின்றேன்)
பின் சரியா, தவறா? 

அடியவர் 4 :- நீங்கள் செய்தால் சரிதான் சாமி.

குருநாதர் :- அப்பனே அனைவரிடத்திலும் கூறு. அகத்தியன் எதைச் செய்தாலும் நன்மைக்கே என்று அனைவருக்கும் தெரிவி. 

அடியவர் :- அகத்தியர் (பெருமான்) எதைச் செய்தாலும் நல்லதற்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். 

குருநாதர் :- ஒத்துக் கொள்கின்றீர்களா என்று கேள்?

அடியவர் 4 :- ஒத்துக்கொள்கின்றீர்களா? 

அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) ஒத்துக்கொள்கின்றோம் ஐயா. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் ஒரு குழந்தை தன் தந்தையை, தன் தாயை நம்பிக்கொண்டிருக்கின்றது. தாய், தந்தையும் நன்மை செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன? 

அடியவர் 4 :- விடமாட்டாங்க சாமி. 

குருநாதர் :- அதே போலத்தான் அப்பனே. எனை நம்பி வந்துவிட்டீர்கள் ஓடோடி அப்பனே. யான் உங்களைக் கை விடுவேனா என்ன? அப்பனே நிச்சயம் விதியில் உள்ளதையே மாற்றித் தருவேன் அப்பனே. ஆனால் அதற்கு நீங்கள் பக்குவங்களாக, பக்குவங்கள் பட வேண்டும் என்பதே இவ்வாறெல்லாம் வாக்குகள் கூறி , எடுத்துரைத்து , பக்குவங்கள் பெற பின் நன்மைகள். அதாவது தர்மத்தைக் காக்கவேண்டும். தர்மத்தைக் காக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நிச்சயம் என் பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள். அதனால் தர்மத்தைக் காக்கப்பட வேண்டும். தர்மத்தை நிச்சயம் கடைப்பிடித்தால் நிச்சயம் யான் வந்து உந்தனுக்கு அதாவது கதையோடு கட்டிப்பிடித்து பின் பிள்ளையே என்று அனைத்தும் செய்து விடுவேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 

அடியவர் 4 :- தர்மத்தை ( நீங்கள் ) கடைப்பிடித்தீர்கள் என்றால் , (சாமி) அவரே வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்துக்கொள்கின்றேன் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே பல வினைகளையும் நீக்குவேன். அப்பனே இவ்வுடம்பு பாவத்தால் சூழப்பட்டுள்ளது அப்பா. புண்ணியம் குறைவே. 

இதனால் பின் பாவத்தால் சூழப்பட்டதற்கு நிச்சயம் பல வருத்தங்கள், பல தொந்தரவுகள் வந்தே தீரும். ஆனாலும் கவலை விடுங்கள். இவ் அகத்தியனை நம்பி வந்து விட்டீர்கள். நல்லதே செய்வேன் உண்மைதனைக் கூட. பல வகையிலும் கூட சிறு வயதிலிருந்தே பக்திகள் கடைப்பிடிக்க வேண்டும். பின் ஒழுக்கமாக வாழ வேண்டும். நல் முறையாகவே நல் எண்ணங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அனைவருமே (நம்) சொந்தங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இருந்தால்தான் பின் சித்தனிடையே அறிந்தும் உண்மைதனைக்கூட. 

இதனால் போட்டி பொறாமைகள் , இன்னும் யான் பெரியவன் , நீ பெரியவன் என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால் இறைவன் கூட,  நீதானப்பா பெரியவன். போய் சென்று கொண்டே இரு. எங்கே அப்பனே அடிபட்டு,  பின் மீண்டும் வருவானப்பா. இறைவன் எப்படியப்பா நல்லது செய்வான்? நீங்களே கூறுங்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே ஒவ்வொரு குறைதானப்பா. குறையில்லாமல் மனிதன் யார் என்று கேள். உண்மைதனை இன்னும் விளக்குகின்றேன். 

அடியவர் 4 :- குறையில்லாதவர்கள் யார் ( என்று சொல்லுங்கள் அடியவர்களே). 

அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) எல்லோருக்கும் குறை உள்ளது ஐயா. 

குருநாதர் :- அப்பனே குறை இல்லாமல் யார் இருக்கின்றான் இவ்வுலகத்தில்?

அடியவர் 4 , அடியவர்கள் :- ( அப்படிக் குறை இல்லாமல் ) யாரும் இல்லே சாமி. 

குருநாதர் :- அப்பனே தெரிகின்றதா? அப்பொழுது குறை நீக்குபவன் யார்?

அடியவர் 4 :- தாங்கள் தான் சாமி. 
அடியவர்கள் :- இறைவன்

குருநாதர் :- அப்பனே இறைவன்தானப்பா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM
    NANRI AYYANE

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete