​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 8 February 2025

சித்தன் அருள் - 1796 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு-1


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 1

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே அப்பனே. புசண்டனும் அப்பனே அழகாகவே வாக்கு எடுத்து உரைத்து விட்டான். ( கோவையில் இவ் சத்சங்க வாக்கிற்கு முன்னர் நடந்த சத்சங்கத்தில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்தார்கள். அவ் வாக்கினை அடியவர்கள் படிக்கவும்.) 

இதனால் தர்மங்கள் செய்தாலே போதுமானதப்பா. அப்பனே, என்னிடத்தில் வருபவர்கள் அனைவரும் முதலில் கோபத்தை நீக்க வேண்டும். இன்னும் போட்டி பொறாமைகள் இவைதனை அழகாகவே நீக்க வேண்டும் அப்பனே. பின் நிச்சயம் இவை எல்லாம் நீக்கி வந்தாலே யானே அருளுவேன் அப்பனே. அங்கங்கு வந்து யானே வாக்குகள் தெரிவிப்பேன் எதை என்று யான் கூற. 

அவை மட்டும் இல்லாமல் தன் கடமையை ஒழுங்காகச் செய்தாலே போதுமானதப்பா. அப்பனே இக்கலியுகத்தில் இன்னும் பக்திகள் பொய்கள் கூடும் கூடும் என்பதெல்லாம். அப்பனே இன்னும் வருவார்களப்பா, போட்டி பொறாமைகளோடு. அதனால்தான் அப்பனே நிச்சயம் அனைவருமே நன்றாகத்தான் இருக்க வேண்டும் (என்று எண்ண வேண்டும்). அதாவது கலியுகம் என்றாலே அழியுகம் என்றெல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே. கலியுகத்தில் வாழ முடியாதப்பா மனிதனால் என்றெல்லாம் சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே. அதனால் அப்பனே நீதி நேர்மை தவறாமல், சரியான பாதையிலே அதாவது இறைவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எதை என்றும் புரியாமல் இருந்தாலும் நிச்சயம் யாங்கள் சொல்லியபடி நடந்தாலே போதுமானதப்பா.

அப்பனே பாவம் புண்ணியம் சரி பார்க்கப்பட்டதே அப்பனே பிறப்பு. இதனால் அப்பனே பாவத்தாலே மிதந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. பின் அப்பாவத்தை எப்படித் தொலைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன். அதைத் தொலைத்தாலே போதுமானதப்பா. புண்ணியம் அப்பனே தேங்கி நிற்கின்றதப்பா அனைவரிடத்திலும். அவ் தேங்கி ( உள்ள புண்ணியத்தை ) பின் அறிந்தும் கூட அதை கலக்கிவிட அப்பனே யாங்களே என்று புசண்டனும் எடுத்துரைத்து விட்டானப்பா. 

அதனால் அப்பனே ( வடவள்ளி ஆலய அடியவர் ) இவன்தனக்கும் கூட எம்முடைய ஆசிகள் அப்பனே. நிச்சயம் அப்பனே பின் என் இடம் அப்பனே இது. யான் வருவேன் , போவேன். 
உன்னிடம் இல்லை. என்னை எப்பொழுது வைத்து விட்டாயோ அது என் இடம் அப்பனே. (அடியவருக்குத் தனி வாக்குகள் ) 
யான் இருக்கும் இடத்தில் எல்லாம் யான் வருவேன், போவேன் அப்பனே. அப்பொழுது அறிந்தும் உண்மைதனைக் கூட வெளிப்படுத்துவேன். இன்னும் ஞானங்கள் தருவேன் அப்பனே. அப்பொழுது நீ யார் என்று நீயே தெரிந்து கொள்ளலாம். 

ஆனாலும் அப்பனே ( பலர் ) இவ்வாறு திருத்தலங்கள் எல்லாம் அமைத்துவிட்டு , அப்பனே பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். இன்னும் போட்டி பொறாமைகள் எல்லாம் இருக்கின்றது அப்பனே. அவன் பெரியவனா? அப்பனே உன்னிடத்திற்கு யான் வந்தேன் இங்கு. ஆனாலும் இதை பல பேர் அறிந்தும் உண்மைதனைக்கூட அங்கு சென்று விட்டானா? ஏமாற்றுக்காரன் என்றெல்லாம் புலம்பி. ஆனாலும் கவலை இல்லை.  யானே அடிப்பேன் அப்பனே. 

அப்பனே உயர்தர ரகசியங்கள் கூட இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. சோம்பேறியே, பல வேலைகளை ஒருவனுக்கு கொடுத்தேன். ஆனால் ஒருவன் கூட அறிந்தும் கூட அவன்தன் ஒழுங்காக வேலைகள் செய்வதே  இல்லை. சோம்பேறித்தனமாக சுற்றிக்கொண்டு இறைவன் நாமத்தை வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் இங்கு ஒருவன். 

( சாட்டை அடி தனி வாக்குகள் ஆரம்பம் ஆனது. அதில் உள்ள பொது வாக்குகளை மட்டும் இங்கு அளிக்கின்றோம். ஒரு அடியவருக்கு வாக்கு ஆரம்பம். )

நம் குருநாதர் :- (வாழ்வதற்கு) அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? 

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுதைக்கு அனைத்தும் யான் நல்குகின்றேன். எதை வேண்டுமானாலும் அப்பனே (நீ) பெற்றுக் கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா , நான் தருவதற்குத் தயார். எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். கேள் என்று சொல்கின்றார். ஐயா இதுதான் சமயம் பார்த்து அடிக்கின்றது என்பது. ( அடியவரைக் கேட்டுப் பெற ஊக்கப்படுத்தினார் )

அடியவர் :- ஐயா என் வாழ்க்கையில் அப்பாவுக்குச் சேவை செய்ய வேண்டும்.

நம் குருநாதர் :- அப்பனே அது நான் நினைத்தால்தான் அப்பனே. அப்பனே எந்தனுக்கு சேவை செய்து கொண்டே இருக்கின்றாய் அப்பனே. ஆனால் அப்பனே உண்ண உணவு, உடை எதை என்று புரியப்புரிய இதனால் இப்பொழுது இவந்தனக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றாய் என்று நினைத்துக்கொள் அப்பனே. ஆனால் நாளை பார்த்தால் அப்பனே மனதில் என்னென்ன எண்ணங்களோ தோன்றும் அப்பா. திருமணம் வேண்டும் என்று கேட்பாய் அப்பனே. வேலை வேண்டும் என்று கேட்பாய் அப்பனே. இன்னும் எதை எதையோ கேட்பாய் அப்பனே. ஆனால் என்னிடத்தில் உள்ளவருக்கு ஏதும் கிட்டாது அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. அறிந்தும் கூட பல பக்குவங்கள் ஏற்படுத்துவேன்.  பல பக்குவங்கள் ஏற்படுத்தவே உந்தனுக்கு 50 வயது ஆகிவிடுமப்பா. அப்பொழுது திருமணம் வேண்டாமா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வேளை என்னிடம் வேலை செய்தால்,  ஒன்றுமே கொடுக்க மாட்டேன். பக்குவங்கள் ஏற்படுத்துவேன். அதற்குள்ளேயே 50 வயசு ஆகிவிடும். அப்புறம் என்ன செய்வாய்? (இன்னும்) கேளுங்க ஐயா. 

அடியவர் :- திருமணம் வேண்டும் ஐயா. 

நம் குருநாதர் :- அப்பனே மனது என்பது குரங்கப்பா. அப்பனே உந்தனுக்கு எதைச் செய்தாலும் இப்பொழுது எப்படியப்பா? இங்கும் அங்கும் தாவுகின்றாய் அப்பா. இப்பொழுது என்னிடத்தில் இருந்து கொள்கின்றேன் என்றாய். இப்பொழுது திருமணம் வேண்டும் என்றாய். நாளை பொழுது என்ன கேட்பாய் அப்பனே.

( அடியவர்கள் இறை, சித்த மார்க்கத்தில் செல்லும் பொழுது மிகத் தெளிவாக உயர் சிந்தனையுடன் செல்ல வேண்டியது மிக அவசியம். ) 

அடியவர் :- ஐயா எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். அப்பாவுக்கு சேவை செய்ய வேண்டும். 

நம் குருநாதர் :- அப்பனே எதைக் கடப்பது? 

அடியவர் :- அப்பாவோட வழியில் வரவேண்டும். 

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட இப்பொழுது வழியில் வரவில்லையா என்ன? 

அடியவர் :- வந்து கொண்டுதான் இருக்கின்றேன் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது எப்படி இப்படிக் கேட்கலாம்? 

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ( ….. நீண்ட தனி வாக்கு ஆரம்பமானது.  அனைத்து விதியில் உண்மைகளை அப்பட்டமாக போட்டு உடைக்க ஆரம்பித்தார் கருணைக் கடல். ) 

நம் குருநாதர் :- அனைவருக்குமே  சொல்கின்றேன் அப்பனே.  அனைத்தும் யான் கொடுக்கத் தயார். ஆனாலும் பின் சிறிதேனும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பின் அமைதியான இருந்தவனுக்கு யான் கொடுத்துவிட்டால்  நீங்கள் சொல்வீர்கள் - யான் அமைதியாக இருந்தேன்,  நீங்கள்தான் கொடுத்தீர்கள் என்று, நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றால் யான் எங்கு செல்வது? ( தனி வாக்குகள் ) 
………..
…………
…………. 
( காதல் போதை - பொது வாக்கு) 
அப்பனே காதல் போதை பெரிய போதையப்பா. அப்பனே அனைத்திலும் தப்பித்துக் கொள்ளலாம் நிச்சயம். காதல் போதை வந்துவிட்டால் தப்பிக்க இயலாதப்பா. அவ் போதை எப்பொழுது தெளிவு ( அடையும் என்றால் ) அடிபட்டால்தான் அப்பனே. சண்டைகள் வந்தால்தான் அப்பனே. அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. (காதலித்தால்) சண்டைகள் நிச்சயம் வரும்.
……………….
……………….. 
(ஞான வாழ்க்கை குறித்த வாக்குகள் ) 

நம் குருநாதர் :- அப்பனே ஏன் எதற்காக என்னைப் பிடிக்க நினைக்கின்றீர்கள் நீங்கள் அனைவருமே? சொல்லுங்கள் அப்பனே? அனைவரும் சொல்லலாம்.

அடியவர் 1 :- நல்வழியில் செல்வதற்கு..

அடியவர் 2 :- ஞான சித்தி, ஞானம் கிடைக்க. 

நம் குருநாதர் :- அப்பனே ( அடியவர் 2 ), நீ பெரியவனப்பா. அமர்ந்தே சொல்கின்றாய் அப்பனே. இதுதான் ஞானமா? 

அடியவர்கள் :- ( அனைவரும் பலத்த சிரிப்பு )

அடியவர் 2:- மன்னித்துவிடுங்கள் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே ஞானப்பாதை என்பது எவ்வளவு கடினம் என்பது தெரியுமா அப்பா? 

அடியவர் 2:- தெரியும் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது தயாராக இருக்கின்றாயா? கஷ்டத்தை அள்ளித் தரலாமா?

அடியவர் 2 :- தரலாம் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே தாங்க மாட்டாயப்பா. வாய்தான் சொல்கின்றது அப்பனே. உள்ளமெல்லாம் எதை எதையோ   யோசிக்கின்றது அப்பனே. 

அடியவர்கள் :- ( அமைதியாக சிரிப்புக்கள் )

நம் குருநாதர் :- அப்பனே அதனால் அறிந்தும் கூட உந்தனுக்கு ஞான வாழ்க்கை கொடுத்து விட்டால்  அப்பனே மற்றவர்கள் சொல்வார்கள். அகத்தியனை நம்பி இவன் பைத்தியமாகிவிட்டான் என்று அப்பனே. இப்பொழுது ஞானம் வேண்டுமா? அப்பனே அனைத்தும் வேண்டுமா அப்பனே? 

அடியவர் 2 :- எனக்கு ஞானம் ( கொடுங்கள் ).

நம் குருநாதர் :- அப்பனே நிச்சயம் கொடுக்க முடியாதப்பா.

அடியவர் 2 :- ஏன் ஐயா? 

நம் குருநாதர் :- அறிந்தும் கூட உன் வீட்டோரே அதாவது உன்னைத் திட்டினால் பரவாயில்லை அப்பனே. இறைவனையே சாடி விடுவார்கள். 

அடியவர்கள் :- ( அமுக்கச் சிரிப்பு ) 

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஞானம் பின் பெற வேண்டும் என்று நிச்சயம் கடையில் விற்கின்றது அப்பனே. எடுத்துக் கொள்வாயா?

அனைத்து அடியவர்கள் , அடியவர் 2 :- ( ஞானத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு,  குண்டூசி கீழே விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதி ) 

நம் குருநாதர் : அப்பனே அறிந்தும் கூட ஞானம் என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பேன் அப்பனே. பல கஷ்டங்கள் படவேண்டும் அப்பனே. நோய்கள் வரும் அப்பா. ஆனாலும் சென்று விடும் அப்பா. வலியில் கூட பைத்திய நிலைக்குப் போய்விடும் என்பேன் அப்பனே. வேண்டாம் அப்பா. அப்பனே நிச்சயம் உந்தனுக்கு இல்லை. இப்பொழுது நீ கேட்டாலும் கொடுக்கப் போவதில்லை. வேறென்ன  வேண்டும் என்று கேள்.

============
( உயர் ஞானம் தொடர்பான இவ்வாக்கை தட்டச்சு செய்யுபோதே , மனம் வெறுத்து கனத்த,  வெற்று மனதுடன் தட்டச்சு செய்ய வேண்டிய ஒரு சூழ் நிலை என்றால் இவ் வாக்கின் உன்னத அதி உயர் பரிசுத்த புண்ணிய நிலையை என்னவென்று சொல்ல!!!!!!!!!!. ) 
==============

(ஞானம் தொடர்பான வாக்கு நிறைந்து , மீண்டும் பொது வாக்கு ஆரம்பம். இப்போது உங்களால் அதனை பின் வரும் வாக்குகளில் உணர இயலும் )

அடியவர் 2 :- ( தனி குடும்ப நபர் நலன் தொடர்பான கேள்விகள்) 

நம் குருநாதர் :- ( தனி வாக்குகள் ) அப்பனே பிறந்தால்தான் அதாவது வளர்த்தால்தான் குழந்தையா. இங்கு ஒருவன் இருக்கின்றானே , உன் தம்பியாக எண்ணி இவன் தனக்கு நல்லது சொல் அப்பனே. 

அடியவர் 2 :- தினமும் 3 மணிக்கு எழுந்திரியுங்கள்… ( என்று நல் புண்ணியச் செய்திகளைச் சொல்ல ஆரம்பித்த உடனே)

நம் குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லாதே அப்பனே. காதல் பற்றிச் சொல்.

அனைத்து அடியவர்களும் :- ( பலத்த சிரிப்புக்கள் ) 

அடியவர் 2 :- காதலைப் பற்றி நான் என்ன சொல்வது..

அனைத்து அடியவர்களும் :- ( மீண்டும் பலத்த சிரிப்புக்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்குத் தெரிந்ததனால் உங்களை அழைத்துள்ளார். தெரியாமல் உங்களை அழைக்க மாட்டார். ( அதாவது ஒரு பாசமுள்ள அண்ணன் இடத்தில் இருந்து தம்பியை , நேர் நல் வழி நடத்தும் படி உரைக்க வேண்டும் என்று புரிந்து கொள்க ) 

அடியவர் 2 :- காதல் செய்வது வேஸ்ட். அதன் மூலம் சில பிரச்சினைகள் வரும். அது மட்டும் இல்லாமல் நாம் போகும் வழியில் சரியாக செல்ல முடியாது. குடும்பத்திலும் பிரச்சினை வரும். அதனால் love marriage வேண்டாம் . நீங்க (பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்) arranged marriage செய்து கொள்ளுங்கள். ரொம்ப நல்லது. 

நம் குருநாதர் :- அப்பனே கேட்க மாட்டானப்பா. ( மீண்டும்)  சொல். 

( மீண்டும் சில நல் வாக்குகளை நல்கினார்கள் அவ் அடியவர்.  ) 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. தயவு செய்து ஆலய முகவரி பகிரவும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      1325 , 1595 -முல்லை நகர் வடவள்ளி அகத்தியர் ஆலயம் ( 11.024878013178313, 76.91665820855364)
      ஸ்ரீலோப முத்ரா தேவி தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் மருதமலை அடிவாரம். முல்லை நகர் வடவள்ளி அகத்தியர் ஆலயம்

      சித்தன் அருள் - 1595 - அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு!
      https://siththanarul.blogspot.com/2024/05/1595.html

      ஓம் அன்னை ஷ்ரி லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.
      சர்வம் சிவார்ப்பணம்!

      Delete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete