​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 16 February 2025

சித்தன் அருள் - 1801 - அன்புடன் அகத்தியர் - தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்!








வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்.. மற்றும் சஞ்சீவி ராய மலை குறித்து குருநாதர் ஆலயத்தின் ரகசியம் மற்றும் அனுமனின் அனுக்கிரகம் பற்றி ஏற்கனவே குருநாதர் வாக்குகள் தந்திருக்கின்றார். 

உயிர் காக்கும் சஞ்சீவினி மூலிகை இருக்கும் மலை இந்த மலை இந்த மலையில் இரவில் தங்கி செல்ல வேண்டும் என்றும் 16/8/2022 ல் குருநாதர் வாக்குகள் கூறியிருந்தார். 

சித்தன் அருள் பதிவு எண் அன்புடன் அகத்தியர் சஞ்சீவிராயன் மலைக்கோயில் 1175 .ல் வெளிவந்துள்ளது.


சமீபத்தில் குருநாதர் சஞ்சீவிராயன் மலைக்கோயிலில்   ஆலயத்திற்கு சென்ற சில அடியவர்களுக்கு தனிநபர் வாக்கில்  குருநாதர் வாக்குகள் கூறும் பொழுது சில பொது வாக்குகளையும் சில தெய்வ ரகசியங்களையும் கூறினார். அதன் வாக்குகள் பின் வருமாறு. 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!. 


அப்பனே நல்விதமாகவே இன்றளவும் கூட அப்பனே நாராயணன் நல்விதமாகவே வந்து அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே ஆசிகள் தந்துவிட்டான் என்பேன் அப்பனே.

(இவ் சஞ்சீவிராயன் மலையில் திருப்பதி ஏழுமலையான் அடிக்கடி வந்து செல்வார்..   என்பதை எல்லாம் குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார்)

ஆசிகள் என்பேன் அப்பனே இப்பொழுது கூட அப்பனே நல்லாசிகள் தந்து தான் கொண்டிருக்கின்றான் அனைவருக்குமே அப்பனே

அப்பனே நிச்சயம் கேட்டதை அள்ளி தருவான் அப்பனே அனுமானும் கூட!!

இதனால் அப்பனே நன் முறைகளாகவே... இன்று பின் வந்திருக்கும் அனைவருக்குமே நல் ஆசிகள் தந்து அவரவர் விருப்பப்படியே அப்பனே இன்னும் அப்பனே சூட்சுமங்கள் அப்பனே பின் கடந்து கடந்து... அவை எவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம்.. அப்பனே பின் அதனால் அவனே ஆசிர்வதித்த பொழுது அப்பனே யான் என்ன சொல்வது??

இதனால் அப்பனே நிச்சயம் விருப்பங்கள் அப்பனே பின் மெதுவாயினும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் நிறைவேறும் என்பேன் அப்பனே... நல்ல விதமாக 

சில தடை பின் தாமதங்கள் இருந்தாலும் அப்பனே நல்விதமாகவே மாற்றம் ஏற்படுவது உறுதியப்பா.. எம்முடைய ஆசிகளாலும் கூட... லோபா முத்திரையின் அருளாலும் கூட. 

அப்பனே நிச்சயம் நான் முறைகளாகவே.. சில சில வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய மனக்குழப்பங்கள் இருந்தாலும் அப்பனே பின் தூரே... எறிந்து விடுங்கள் என்று கூட அப்பனே இடையிடையே மன குழப்பங்கள்... அப்பனே

இவ்வாறு மன குழப்பங்களாகவே போய்க்கொண்டிருந்தால் அப்பனே... என்ன லாபம்???


அப்பனே அவ் மனக்குழப்பங்களை எப்படி பின் சந்தோசமாக மாற்றுவது என்பதையெல்லாம் அப்பனே பின் சிந்தித்து செயலாற்றி அப்பனே மாற்றி அமைத்தால் அப்பனே நிச்சயம் எவ்வாறு மனக்குழப்பம் வந்தாலும் எவ்வாறு துன்பம் வந்தாலும் அப்பனே நிச்சயம் பின் மாற்றிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

அதாவது அப்பனே பின் பல வாக்குகளும் யான் உரைத்து விட்டேன் அப்பனே .. முன்னோர்களின் வாக்குப்படியே அப்பனே அதாவது அப்பனே துன்பத்தை துன்பத்தாலே அப்பனே பின் எவை என்று கூட... சமாளிக்கும் திறன் யார் ஒருவன்? பின் அமைத்துக் கொள்கின்றானோ? அவன் சிறந்த அதாவது அப்பனே இவ்வுலகத்தில் சிறந்த அதாவது இவ்வுலகத்தில் சிறந்த ஆளாகவே.. அதாவது மாமனிதனாகவே பின் படையெடுக்கின்றான் அப்பனே.

அதனால் தான் அப்பனே தன்னைத்தானே அப்பனே நல்முறையாக தீட்டிக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

அதற்கு நிச்சயம் துன்பம் என்று அதாவது துன்பம் அவசியமாகின்றது என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பின் உங்கள் வாழ்க்கை இன்பமாகவே இருந்தால் அப்பனே நிச்சயம் ஒன்றும் ஆகாதப்பா.

அப்பனே நிச்சயம் அவை எதை என்று அறிய அறிய கடைசியில் பார்த்தால்.. பாதாளத்தில் பின் அதாவது அறிந்தும் கூட பாழும் கிணற்றில் பின் விழுந்தால் அப்பனே நிச்சயம் பின் எழுந்திருக்க முடியாதபடி அப்பனே அமைத்துவிடும் என்பேன் அப்பனே இன்பம்.


ஆனால் துன்பம் அப்படி இல்லையப்பா.

அப்பனே மீண்டும் பின் கிணற்றில் விழுந்தாலும்
பின் அவை பிடித்து இவை பிடித்து (கொழு கொம்புகளை பிடித்து) அப்படி எப்படியாவது மேலே வந்து விட முடியுமப்பா!!


அதனால்தான் அப்பனே இறைவனே சில நேரங்களில் துன்பங்கள் கொடுப்பதுண்டு என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட மீண்டும் மீண்டும் துன்பத்தை போக்கு !!துன்பத்தை போக்கு !! என்றெல்லாம் இறைவனிடத்தில் நிச்சயம் சென்றால் எவ்வாறப்பா???

ஆனாலும் சிரிப்பானப்பா இறைவன்!

அவ்வாறு தான் மனிதன் கலியுகத்தில் அப்பனே..

அழிவுகள் நிறைந்த அப்பனே உலகமப்பா அப்பனே இவை.. அறிந்தும் கூட. 

இதனால் அப்பனே பின் நிச்சயம் மாற்றங்கள் எண்ணற்ற மாற்றங்கள் உண்டு அப்பனே நன் முறைகளாக... ஆனாலும் அப்பனே பின் பக்தன் அதாவது பின் எதை என்று அறிந்தும் கூட கலியுகத்தில் அப்பனே பின் பொய்கள் மனிதனாகவே அதாவது இன்னும் எதை என்று அறிய அறிய பின் மனக்குழப்பங்களாகவே அதாவது அப்பனே..

எப்படி எல்லாம் குறுக்கு வழியில் செல்லலாம் என்று எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே யோசித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன். 

ஆனால் இறைவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே..

நிச்சயம் அப்பனே நேர்மையான எவை என்று அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் நல் முறைகள் ஆகவே இறைவனை வணங்கி வந்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுமப்பா. 


இதனால் அப்பனே பின்
எதை என்று அறிய அறிய அப்பனே பின்  நல்விதமாகவே.. புரட்டாதி திங்களில் நல்விதமாக சனி தோறும் ஆஞ்சநேயன் அழகாகவே இங்கு வந்து அனைவருக்கும் அப்பனே பின் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே.

ராமனும் பின் அறிந்தும் கூட சீதா தேவியும் அப்பனே பின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இன்னும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய... ராம அவதாரமும் அப்பனே எவை என்று அனைத்து அவதாரங்களும் கூட அறிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு அவதாரமாக அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூட அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பின் நாராயணனாக!!(ஏழுமலையான்) அப்பனே ஆசீர்வதிக்கின்றானப்பா!! கலியுகத்தில் அப்பனே!!

நிச்சயம் அப்பனே இதனால் இங்கு பின் சக்திகள் பலம் என்பேன் அப்பனே (சஞ்சீவிராயன் மலை)

ஆனாலும் அப்பனே யார் ஒருவன் அப்பனே.. நன் முறைகளாக இங்கு வந்து வந்து வெற்றிகளும் குவிக்கலாம் அப்பனே. 

பின் யார் ஒருவர் தீயவனாக மனதில் எண்ணி அப்பனே பின் அழுக்குகளாக..(தீய எண்ணத்தோடு மனம் அழுக்குகளோடு) இருந்தாலும் அப்பனே... அவர்களுக்கு அடிகள் பலமாக விழுமப்பா!!!

அவ்வளவுதான் அப்பனே 


சிலரகசியங்கள் அப்பனே அங்கும் இங்கும் இவ் மலையில் கூட அப்பனே மலையில் உள்ளது

 . சில மூலிகைகள் அப்பனே பின் கடந்து கடந்து...அவ் மூலிகைகளே அப்பனே போதுமானதப்பா...

அப்பனே அறிந்தும் கூட  இதனால் அப்பனே அதற்கும் கண்கள்!!!
 அதாவது அப்பனே பின் மாடுகளுக்கும்.. அதாவது அறிந்தும் கூட அதாவது பைரவ வாகனங்களுக்கும் அதாவது பின் பைரவன்களுக்கும்..(பைரவர் வாகனம் நாய்களுக்கும்)

 நிச்சயம் அவ் ஒளியானது தெரியுமப்பா

அப்பனே சரியாகவே அப்பனே ஒளியானது அப்பனே இங்கு எவை என்று கூட பின் அப்படியே... எப்படி என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இங்கு படுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே!!!

 அதாவது பின் ஏற்கனவே அப்பனே பின் பல பின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்பனே நன்முறைகளாகவே... அப்பனே அதாவது ஒரு பக்தன் இங்கு வந்தானப்பா நல்முறையாகவே வேண்டி வேண்டி. 

ஆனாலும் அப்பனே நல்முறையாகவே கிடைத்திற்று(கிடைத்தது) என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே.. நிச்சயம் அறிந்தும் கூட பின் எவை என்று அறிய அறிய ஆனாலும்... அனுமானும் இதை வைத்துக்கொள்.. எப்பொழுதும் நீ நிச்சயம் அதாவது பின் அதாவது உயிர் உன்னை விட்டு பிரியாது அறிந்தும் கூட.!!


இதனால் இப்படியே நீ வைத்துக் கொள்!! நிச்சயம்.. இதை எப்பொழுதுமே பின் அதாவது பச்சை நிறத்தில் நிச்சயம் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.. என்பதையெல்லாம். !!

(அனுமன் பக்தனுக்கு பச்சை நிறத்தில் ஒரு வஸ்துவை கொடுத்திருக்கின்றார். அது மரகதம் ஆகவும் இருக்கலாம்.. பச்சை குன்றி மணியாகவும் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகின்றது பச்சை குன்றிமணியை குறித்து குருநாதர் ஏற்கனவே சில தனிநபர் வாக்குகளில் அதன் மகத்துவத்தைப் பற்றி கூறியிருக்கின்றார்)


ஆனாலும் அறிந்தும் கூட இதை அதாவது யாரை நீ தொடுகின்றாயோ நிச்சயம்.. அவர்களெல்லாம் அறிந்தும் கூட  அவ் பச்சை நிறமானது நிச்சயம் வெளிச்சம் காட்டி அவர்களையும் வாழ்க்கை தரத்தையும் கூட உயர்த்தும் என்பதை கூட. 

அப்பனே அதேபோல் அப்பனே அவ் பக்தனும் கூட.. நல் உள்ளம் கொண்டு பின் அனைவருக்குமே!!! நல்லதை செய்து வந்து!!! நிச்சயம் அறிந்தும் கூட !!


அதாவது பின்.. எவை என்றும் கூட இன்னும் பின் உலகத்தில் கடைசி வரை.. வாழவேண்டுமா??? என்றெல்லாம்...

(பச்சைக் வஸ்து தன்னிடம் இருப்பதால் உயிர் பிரியாது என்று அனுமன் வரம் தந்துவிட்டார்.

ஆனால் அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உயிர் மேல் ஆசை இல்லை!

எதற்காக ?? உலகத்தின் கடைசி நாள் வரை வாழ வேண்டும் என்று உயிர் மீது இருக்கும் ஆசையை கூட அவர் துறந்து விட்டார். அதனால் ஆயுளை நீடிக்கும் அந்த பச்சை ஒளி வீசும் பொருளை இந்த மலையில் ஓரிடத்தில் புதைத்து விட்டார்)


ஆனாலும் இங்கு மலையில் ஓரிடத்தில் புதைத்தானப்பா!! நிச்சயம் அவ் பச்சை!!...


ஆனாலும் பின்.. அவந்தன் வேண்டிக்கொண்டான் நிச்சயம்.. நீ எனக்கு கொடுத்தாய் அனுமானே அறிந்தும் கூட 

ஆனாலும் நிச்சயம் பின் இவை தன் பின்  யார் கண்களுக்கும் தெரியக்கூடாது... அப்படி தெரிந்தாலும்.. இதை சரியான முறையில் பயன்படுத்தாமல்.. தீய வழிகளில் தீய விளைவுகளுக்காக ஏற்படுத்திக் கொள்வான்.. அதனால் இதை நிச்சயம் தெரியாமல்.. (மறைந்தே இருக்க வேண்டும்)

இங்கு வருபவர்களுக்கெல்லாம் அக் பச்சைக்  ஒளியானது.. நிச்சயம் அறிந்தும் கூட பின். நிச்சயம் பின் மனிதர்களுக்கு படுகின்ற பொழுது... நிச்சயம் ஆசிகள் அதுதான். 

அவ் பக்தன் அனுமனிடம்!!!

பின் இங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும்... அவரவர் விருப்பப்படி சில கர்மாக்களை... அகற்றி நிச்சயம் வெற்றிகளை தாருங்கள் அனுமானே!!!!!
 என்று வணங்கினான்! என்பதெல்லாம் அப்பனே !!!

இதனால் அப்பனே சில திருத்தலங்கள் உள்ளதப்பா. 

நிச்சயம் அப்பனே ஆனாலும் அவை தன் அப்பனே எப்படி செல்ல முடியும்? என்பவை எல்லாம் அப்பனே புண்ணியங்கள் இருந்தால் தான் அப்பனே நிச்சயம் செல்ல முடியுமே தவிர அப்பனே...

பாவங்கள் அப்பனே அப்படியே பின் நோக்கி அழைத்துச் செல்லும். என்பேன் அப்பனே.

புண்ணியங்கள் முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நல்விதமாகவே ஆசிகள் நல்விதமாகவே ஆசிகள் அப்பனே... எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே இன்னும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் மாற்றங்கள் உண்டு ஏற்றங்கள் உண்டு நல்விதமாகவே அப்பனே

ஆலயத்திற்கு வந்திருந்த ஒரு அடியவர் குடும்பத்திற்கு

அப்பனே பின் இன்றளவும் கூட முப்பெரும் தேவியர்களும் கூட அப்பனே உன் இல்லத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே முப்பெரும் தேவிகளும் (துர்கா பரமேஸ்வரி ஸ்ரீ லக்ஷ்மி தாயார் சரஸ்வதி தேவியார்) வந்து ஆசிர்வதித்து அப்பனே நிச்சயம்... மெது மெதுவாக!!! உயர்வடையச் செய்வார்கள் அப்பனே 

இதனால் அப்பனே எக் குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே.

மனிதன் என்றாலே பெரும் குறை அப்பா.. அப்பனே கலியுகத்தில் மனிதனால் வாழ முடியாத அப்பா என்பதையெல்லாம் யான் உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே அதை கடந்தும் வாழ வேண்டுமென்றால் அப்பனே நிச்சயம் இறை பலம் அவசியமாகின்றது என்பேன் அப்பனே. 

ஆனாலும் இறைபலம் அப்பனே பின் மெதுவாகத்தான் கிடைக்கும் என்பதை கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட செப்புகின்றேன் அப்பனே.

நிச்சயம் அப்பனே பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இறை பலத்தை  நிச்சயம் அப்பனே பிடித்துக் கொண்டால் போதுமானதப்பா.. இறைவன் வழிகாட்டி விடுவான் அப்பா.. கலியுகத்தில் அப்பனே பின் இறைவன் கொடுப்பதற்கு அப்பனே தயாராகத்தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே.

ஆனால் மனிதனுக்கு கொடுத்து விட்டால் அப்பனே அதை தவறாக பயன்படுத்தி க்கொண்டு கடைசியில் பின் இறைவனே இல்லை என்று சொல்லிவிடுவான் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு.. அப்பனே என்னுடைய அருளால் இன்னும் இன்னும் அப்பனே மாற்றம் அடைய செய்து அப்பனே நல் விதமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் அதாவது நல்விதமாக அப்பனே.. அம்மையே பின் மந்திரங்களை.. துர்கா தேவியின் மந்திரங்களை செப்பிக் கொண்டே இருங்கள் நன் முறைகளாகவே. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் சில மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே இன்னும் இன்னும் ஏற்றங்கள் தான் உண்டு என்பேன் அப்பனே நல்விதமாகவே. 

எதை என்று புரிந்தும் கூட எவை என்று அறிந்தும் கூட ஆனாலும்.. பின் தோல்விகள் இருந்தாலும் வெற்றியை நோக்கி தான் நிச்சயம் உண்டு அறிந்தும் கூட. 

நிச்சயம் வெற்றியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே பின் நலன்கள் அப்பனே வெற்றிகள் உண்டு உண்டு. 

அப்பனே ஒரு வெற்றியை அதாவது அறிந்தும் கூட ஒரு தேர்வானது அப்பனே அறிந்து அதாவது ஒரு மாணவன் எழுதுகின்றான் அப்பனே. 

நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் பின் அறிந்தும் கூட இன்னும் இன்னும் அப்பனே பின் அதிக தேர்ச்சி வெற்றி சதவீதம் எடுக்க வேண்டும் என்றால் அப்பனே முயன்று முயன்று பின் கொண்டாலே ஆனாலும் நிச்சயம் அப்பனே மனக்குழப்பங்கள் தான் வரும் அவந்தனுக்கு.. எவ்வாறு என்பதையெல்லாம். 

ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே நன் முறைகளாகவே இன்னும் வெற்றி பெற வேண்டும் இன்னும் அதிக சதவீதம் எடுத்தால் உயர்ந்து விடலாம் என்பதெல்லாம் அப்பனே..

இதனால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே அதே போலத்தான் அனைத்திலும் கூட அப்பனே. 

அவ்வாறு ஒருவன் நிச்சயம் அப்பனே பின் முயன்று முயன்று அப்பனே பின் தோல்வி அடைந்தாலும் அப்பனே முயன்று முயன்று சென்றால் அப்பனே ஒரு நாள்... உச்சிக்கு செல்வான் என்பது மெய்யப்பா!!!

அதை யாரும் உணர்வதில்லையப்பா.

அதனால் அப்பனே இறைவன் தம் தன் வாழ்க்கையை தன்னிடத்திலே ஒப்படைத்து விட்டான்...

ஆனாலும் அப்பனே சரியாக பயன்படுத்துவதும் அப்பனே சரியாக பயன்படுத்தாததும் உங்களிடத்திலே உள்ளது என்பேன் அப்பனே. 

அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே. 

சரியான முறையில் பயன்படுத்தினால் அப்பனே இறைவன் என்றென்றும் காப்பானப்பா

சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே மீண்டும்!!......???  அறிந்தும் அறிந்தும் அப்பனே 

 இதனால்தான் அப்பனே பக்திக்குள் பின் உள் நுழைந்து உள் நுழைந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.. ஏமாற்றங்கள் அப்பனே அறிந்தும் கூட..

அதனால் அப்பனே நிச்சயம் கலியுகத்தில் நிச்சயம் அப்பனே ஆஞ்சநேயன் பக்கம் பலமாக  உந்தனுக்கு இருக்கும் பொழுது அப்பனே நன் முறைகளாக வெற்றிகள் தரும். நன் முறைகளாக இன்னும் இன்னும் சில குழப்பங்கள் வந்தாலும் சில  சில அப்பனே எவை என்று அறிந்தும் கூட.. அறியாமல் வந்தாலும் அப்பனே.. மாற்றங்கள் உறுதியப்பா.. உறுதி!!

அப்பனே இதனால் அறிந்தும் அறிந்தும் கூட பின் நல்விதமாகவே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் செப்பும் பொழுது சில விஷயங்களை கூட அதாவது... ரகசியங்களை அனைவருக்குமே சொல்கின்ற பொழுது.. அதை ஏற்றுக் கொண்டு பின் நடந்து வந்தாலே போதுமானதப்பா. 

பின் உண்மைகள் பல பல புலப்படும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இதனால்... நிச்சயம் ஓர் நாள் அரங்க நாதனை அதாவது எதை என்று கூற ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரங்க நாதனை பார்த்துவிட்டு வா அப்பனே 
சில தோஷங்கள் விலகும் அறிந்தும் கூட.

இதனால் அப்பனே அவந்தன் அரங்கநாதன் மகிழ்ந்து நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும்.. என்ன வேண்டும் என்று கூட அறிந்தும் கூட இவை தன் நிச்சயம் அப்பனே அங்கு செல்ல வேண்டும்!


அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவருக்குமே ஆசிகள் அப்பனே பின் ஆசிகளப்பா!!!

 நிச்சயம் அரங்கனை பார்த்திட்டு வா... அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய... சில விஷயங்களை மாற்றுவான் என்பேன் அப்பனே..

நிச்சயம் அங்கு இருக்கும் அப்பனே அறிந்தும் கூட இன்னும் எதை என்றும் புரிந்தும் கூட... அனுமான் இருக்கின்றானே... அவந்தன் அப்பனே சக்தி மிகுந்தவன்..

எவ்வாறு அங்கு சென்றான் என்பதைல்லாம் எல்லாம் அப்பனே 

இங்கு எவ்வாறு வந்தான்?(சஞ்சீவிராயன் மலைக்கோயில்) என்பதையெல்லாம் அப்பனே!!

இன்னும் அப்பனே ஓர் ஊர் இருக்கின்றதே இதற்கு அறிந்தும் கூட மேற்காகவே!!!!! (சஞ்சீவிராயன் மலையிலிருந்து மேற்கு திசையில் அமைந்திருக்கும் ஹம்பி கர்நாடகா)

அங்கு எவ்வாறு சென்றான்? என்பதெல்லாம் அப்பனே 

பின் திருமலை திருப்பதிக்கும்... எவ்வாறு என்பதையும் கூட 

பின் கன்னியா அப்பனே பின் குமரிக்கும் (சுசீந்திரம் கன்னியாகுமரி) அப்பனே எவ்வாறு என்பதைக் கூட அப்பனே 

நான்கு வடிவிலும் (திசைகளிலும்) பார்த்தால் அப்பனே சக்கரம் போன்று சுழன்று அப்பனே 
பின் சக்தி அப்பனே மதுரை மாநகரில் அப்பனே சக்கரத்தாழ்வான் திருத்தலம் உண்டப்பா!!!

(பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம்

மதுரை – மேலூர் சாலையில், மதுரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ள திவ்ய தேசம்  திருமோகூர். மூலவர் காளமேகப் பெருமாள். தாயாரின் திருநாமம் மோகனவல்லித் தாயார்.

இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் நான்கு  கைகளிலும் நான்கு  சக்கரங்கள் உள்ளன. சங்கு கிடையாது. சக்கரத்தாழ்வார் உற்சவர் விக்கிரகத்தில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.)

அங்கும் சென்று வந்தால் அப்பனே.. நிச்சயம் அப்பனே உயர்வுகள் உண்டு என்பேன் அப்பனே 

அங்கு அரை மணி நேரத்திற்கும் அதிகமாகவே அப்பனே நிச்சயம் தியானங்கள் செய்ய வேண்டும் அப்பனே...

சக்கரத்தாழ்வான் மனம் மகிழ்ந்து அப்பனே  நிச்சயம் எவ்வாறு விஷயங்களுக்கு என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தொழில் புரிவோர்களுக்கும் கூட அறிந்தும் கூட உண்மை நிலைமைகளை கூட அப்பனே இன்னும் அங்கு சென்று தரிசித்தாலே மாற்றங்கள் உண்டு.. இதை அனைவருக்குமே செப்பி விட்டேன். 


(நம் குருநாதர் ஏற்கனவே.. நிலம் மற்றும் வீடு சம்பந்தப்பட்டவைகளுக்கு திருச்சி மணச்சநல்லூர் பூமிநாதர் ஆலயத்திற்கும் 

நீதிமன்றம் வழக்குகள் நீதி நியாயம் கிடைப்பதற்கு காஞ்சிபுரம் வழக்கறுநாதர் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றுவர ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார். 

அதேபோல் தொழில் புரிவோர் மதுரை திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சென்று தியானங்கள் செய்து வணங்கி வந்தால் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றார் இது அனைவருக்கும் பொதுவான வாக்கு) 

அப்பனே நன் முறைகளாகவே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அதாவது இறைவனை அப்பனே நிச்சயம் பிடிப்பது அப்பனே பின் எவை என்று கூட கடினம் தான் என்பேன் கலியுகத்தில் அப்பனே 

அவ்வாறு நிச்சயம் இறைவனை பிடிப்பது கடினமாக இருந்தாலும் நீங்கள் பிடித்துக் கொண்டால் அப்பனே வாழ்க்கையில் வெற்றியப்பா!!

ஆனாலும் அப்பனே இறைவன் சோதிப்பான் அப்பா நிச்சயம்.. இவன் எவ்வாறு செய்கின்றான்? என்று பார்ப்போம்? என்று!!

ஆனாலும் அப்பனே மனிதன் தோல்வியில்.. வாழ்க்கை என்பேன் அப்பனே. 

அதாவது அப்பனே பின் இவ்வளவு வணங்கினேனே.. ஒன்றுமே பின் நடக்கவில்லையே.. என்று நினைக்கும் பொழுது!!

 அப்பொழுதுதான் அப்பனே...

இறைவன் கூட.. இவன் எதற்கும் உருப்பட மாட்டான் என்பதை எல்லாம்... அப்பனே!!

(சிறிது காலம் பக்தியை செலுத்தி விட்டு சோதனை காலத்தில் சிலர் வெறுத்து இறைவனை இவ்வாறு வணங்கினேன் அவ்வாறு வணங்கினேன் எத்தனை ஆலயங்களுக்கு சென்றேன் இறைவன் ஒன்றுமே செய்யவில்லை என்று நினைக்கும் பொழுது....

இறைவன்... இந்த சோதனைகளையே நீ தாங்கவில்லை!! எங்கு நீ உருப்பட போகின்றாய் என்று நினைப்பார்)

நிச்சயம் முயன்று இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்று.. இருந்தால் இறைவன் அப்பனே அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே. 

அனைவருக்குமே ஆசிகள் கொடுத்து விட்டான் அப்பனே... அவரவர் விருப்பப்படி நிச்சயம்.. அப்பனே பின் மெதுவாக நடந்தாலும் வெற்றிகள் உண்டு அனைவருக்குமே அப்பனே நிச்சயம் அப்பனே..

ஆசிகள்!! ஆசிகளப்பா!!

அப்பனே இங்கு வந்து சென்று கொண்டிருந்தாலே நிச்சயம் மாற்றங்கள் அப்பனே பின் பெரிய அளவில் உருவாகும் அப்பா. 

ஆசிகள் ஆசிகள் மீண்டும் செப்புகின்றேன் ஆசிகள் ஆசிகள். 


ஒரு அடியவர் அவருக்கு திருமண தடைக்காக குருநாதர் இடம் தீர்வு கேட்ட பொழுது!!!


அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய  புரிய அப்பனே பின் புரியாமல் இருந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட உன் முன்னோர்கள் அப்பனே.. பின் எவை என்று அறிந்தும் கூட... பின் அதாவது பின் மாணிக்கத்தை பின் நிச்சயம் காத்துக் கொண்டிருந்த அதாவது நாராயணனின் அறிந்தும் கூட பின் நிச்சயம் இதை என்று புரியாமல் கூட அறிந்தும் கூட இதனால் அப்பனே அதாவது நிச்சயம் அவ் மாணிக்கத்தை பின் காத்துக் கொண்டிருந்த பொழுது... அப்பனே பின் அப் பாம்பை.. அடித்து விட்டு!!!........

எதை என்று புரியாமல் கூட.. சில தோஷங்கள் உந்தனக்கு ராகு கேதுக்களால் அப்பனே!!

(திருமணத்தடை குறித்து கேட்ட அடியவரின் முன்னோர்கள் பெருமாள் கோயிலில்.. நாராயணனின் பொக்கிஷங்களை அதாவது மாணிக்கத்தை காத்துக் கொண்டிருந்த.. சர்பத்தை அடித்துக் கொன்று விட்டார்கள்.. அங்க தோஷம் ராகு கேது தோஷமாக மாறி இவரை தொற்றிக்கொண்டு இருக்கின்றது ஏற்கனவே நம் குருநாதர் பூமிக்கு அடியில் இருக்கும் ஆலயங்களில் பொக்கிஷங்களை சர்ப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது என்று பல வாக்குகளில் கூறியிருக்கின்றார் உதாரணத்திற்கு.... பீமேஸ்வரர் ஆலய வாக்கு சித்தன் அருள் 1678. வன்னிவேடு புவனேஸ்வரி அகத்தீஸ்வரர் ஆலய வாக்கு சித்தன் அருள் 1164. மற்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் நிலவறை பொக்கிஷம் குறித்த கேள்வி பதில் சித்தன் அருள் கேள்வி பதில் வாக்குகள் )

ராகு கேதுக்களால் அப்பனே இதனால் நிச்சயம் அப்பனே இங்கு வந்து சென்று கொண்டே இரு அப்பனே நிச்சயம் அனுமானே உந்தனுக்கு உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே.. ஒருமுறை காளாத்திரி (காளகஸ்தி) நாதனை சென்று தரிசித்து வா!!

அப்பனே எதை என்று புரிய புரிய இதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய... 

""பாம்பின் காலம்!! அறிந்தும் கூட....(ராகு கேது தோஷம்) 



(அந்த அடியவர் பல ஜோதிடர்கள் கூறியபடி ராகு கேது தோஷத்திற்காக பல பரிகாரங்களை செய்து ஒன்றும் நடக்கவில்லை என்று குருநாதரிடம் கூறினார்)

அதனால் அப்பனே நிச்சயம் பின் முழு முயற்சியோடு அப்பனே ஆஞ்சநேயனை அப்பனே வணங்கிட்டே வா... அப்பனே நிச்சயம் எதை என்று.. அறிய அறிய இதற்கு எப்பரிகாரங்களும் செல்லாதப்பா!!!

ஆனாலும் அப்பனே இறைவன் வழி விட்டு விடுவான். 


அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய இவை தான் என்பேன் அப்பனே ராகு கேதுக்களால் தான் பிரச்சனை என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின் அவற்றிற்கு எவ்வளவு பின் எதை என்று அறிய அறிய.. அப்பனே நிச்சயம் பரிகாரங்கள் செய்தாலும்.. அப்பனே பின் செல்லாது என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பின் ன் அனுமானே  துணை. இங்கு வந்து சென்று கொண்டே இரு கவலைகள் இல்லை. 

அப்பனே இன்னும் இன்னும் யானும் பரிகாரங்கள் உந்தனுக்கு சொன்னாலும் வெறுத்து விடுவாய் நீ. 

அப்பனே நன் முறைகளாகவே ஆசிகள் உண்டு என்பேன் அப்பனே.. முன்னோர்களே அப்பனே பின் அறிந்தும் கூட.. எவை என்று புரிய அப்பனே நிச்சயம்.. அவர்களும் கூட அப்பனே நல்முறைகளாகவே.. அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் தவறுகள் செய்துவிட்டோம் என்று எண்ணி.. அவர்களும் வருந்தி!!! அவர்கள்.. ஆன்மா  அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கின்றது அப்பனே. 

நிச்சயம் விடிவெள்ளி உண்டு!!!

அப்பனே நலன்களே ஏற்படும் அப்பா கவலைகள் விடு!! கவலைகள் விடு!!

ஆசிகள் ஆசிகளப்பா!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

சஞ்சீவிராயன் மலைக்கோயில். சஞ்சீவிராயபுரம். தித்தியோப்பன ஹள்ளி ஊராட்சி. தம்புரான் மலை அடிவாரம். பாப்பாரபட்டி. பென்னாகரம் தாலுகா. தர்மபுரி மாவட்டம் 636809.

சஞ்சீவிராயன் மலைக்கோயில் தர்மபுரி இரயில் நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாலக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

10 comments:

  1. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    தொழிலில் வெற்றி கிடைக்கும் ரகசியம் - மதுரை மாநகரில் சக்கரத்தாழ்வார் திருத்தலம்

    https://youtu.be/Wk5GeT7lf0Q

    சித்தன் அருள் - 1801

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
    சர்வம் சிவார்ப்பணம்!

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. தொகுத்து அளித்தமைக்கு நன்றி அக்னிலிங்கம் அன்பரே 🙏, ருத்ராட்சம் & கருங்காலி பற்றி அகத்தியர் ஐயா பல வாக்குகளில் உறைத்துள்ளார் ஆனால் பச்சை குன்றிமணி குறித்து கூறிய வாக்குகள் தேடி கிடைக்கவில்லை.. லிங்க் இருந்தால் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பச்சை குன்றிமணியை குறித்து குருநாதர் ஏற்கனவே சில தனிநபர் வாக்குகளில் அதன் மகத்துவத்தைப் பற்றி கூறியிருக்கின்றார் தனி நபர் வாக்குகளில் ஐயா)

      Delete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. Sir please give janakiraman sir phone number

    ReplyDelete
  6. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    கர்மத்தை நீக்கி வெற்றியை குவிக்கும் அனுமான் ரகசியங்கள்-தர்மபுரி சஞ்சீவிராயன் மலைக்கோயில்.
    https://youtu.be/UHIX1o0s02Q

    சித்தன் அருள் - 1801 - தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்!

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
    சர்வம் சிவார்ப்பணம்!

    ReplyDelete
  7. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    மனக்குழப்பங்களை எப்படி சந்தோசமாக மாற்றுவது?
    https://youtu.be/HeSRp3Bu_sA

    சித்தன் அருள் - 1801 - தர்மபுரி பாப்பாரப்பட்டி சஞ்சீவிராயன் மலைக்கோயில்!

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
    சர்வம் சிவார்ப்பணம்!

    ReplyDelete
  8. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

    சஞ்சீவிராயன் மலைக்கோயில். சஞ்சீவிராயபுரம். தித்தியோப்பன ஹள்ளி ஊராட்சி. தம்புரான் மலை அடிவாரம். பாப்பாரபட்டி. பென்னாகரம் தாலுகா. தர்மபுரி மாவட்டம் 636809.

    சஞ்சீவிராயன் மலைக்கோயில் தர்மபுரி இரயில் நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாலக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

    google map link

    https://maps.google.com/?cid=11080824082731787891

    ஓம் அன்னை ஷ்ரி லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
    சர்வம் சிவார்ப்பணம்.

    ReplyDelete
  9. Rajeswari amma
    ஜானகிராமன் ஐயா நம்பர் 9367438937

    ReplyDelete