​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 6 February 2025

சித்தன் அருள் - 1795 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் கோரக்கர் சித்தர் வாக்கு!





29/1/2025 மௌனி அமாவாசை கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் கோரக்கர் சித்தர் ஈசனை நினைத்து துதி செய்து உரைத்த பொதுவாக்கு.

ஈசனே போற்றி!!!

பணிந்து கோரக்கனே செப்புகின்றேன். 

அறிந்தும் அறியாமல் ஏதடா!? புரிந்தும் புரியாமல் வழியில் வந்து நின்று ஏதடா??

ஏதடா மனிதன் நின்ற நிலையில் கண்ணிமைக்காமல் வந்தது ஏனடா?

காதுகள் பின் வந்தது ஏதடா? 
கண்களும் ஏதடா??
வாயும் ஏதடா??
பற்களும் ஏதடா??
அதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் இறைவனை கூட எப்படி பின் நின்று மனிதன் நின்று பின் எப்படி பின் அறிந்தும் ஒன்று அறியாமையில் நின்று பின் 
தொழுது தொழுது எப்படி? நின்று அழகான வழியில் பின் எப்பொழுது புரிகின்றான் என்று தெரியவில்லையே டா!!!!

கண்களிலும் நோய் வருகின்றதடா 
கண்களில் நோய் வருகின்றதடா 
அதையும் எப்படி போக்குவது? என்று முடியாத  நிலையில்  இருப்பவன் மனிதனடா

காதுகளிலும் நோய்கள் வருகின்றதடா 

அதனையும் கூட எப்படி பின் போக்க முடியும் என்று பின் உணர்ந்து உணர்ந்து அறிந்தும் பின் உடம்பில் கூட அனைத்து நோய்களும் வருகின்றது எதனால் வருகின்றது என்று முடியாமல் பின் மூட முடியாமல் ஓட முடியாமல் ஒளிய முடியாமல் நின்ற மனிதனடா 

அப்படி இருக்கையில் எப்படி பார்ப்பான்?? இறைவனை!!
அப்படி இருக்கையில் இறைவனை எப்படி உணர்வான்?? பின் அறிந்தும் கூட... இறைவனை நிச்சயம் உணரப்போவதில்லை.!!

துன்பங்களும் விட்டு விலகப் போவதில்லை!!!

எப்பொழுது தம் தன் உடம்பில் எதற்காக நோய்கள் வருகின்றது?? என்று உணர்ந்தால் அப்பொழுது தான் இறைவனை கூட பின் நினைப்பான்!!!

அப்பொழுது கூட இறைவனை கூட நினைப்பான்!!

அப்பொழுதுதான் இறைவன் எங்கிருக்கிறான் என்பது கூட புரியுமடா!!!

புரிந்து கூட இன்பம் கூட வருமடா!!! நிழல் போல் இன்பம் கூட வருமடா!!!

நிச்சயம் தன்னில் இறைவனை யார் என்று உணர்ந்து கொள்ள முடியாமல் போனாலும் கூட துன்பம் துன்பம் தானடா!!


ஐயோ எனக்கு துன்பம் வருகின்றதே... என்று பின் திருத்தலம் திருத்தலமாக சென்றாலும் பின் இறைவனை உணரவில்லையேடா மனிதா!!
மனிதா ! மனிதா!

 இறைவனை உணர்வதில்லையே மனிதனே!!

இறைவன் உணர்வதில்லையே மனிதனை மனிதனை நின்று பார்க்கையில் மனிதன் இறைவனை உணர்வதே இல்லையடா 

அப்படி தன் உணர்ந்து விட்டால் துன்பம் எங்கடா?? கூறடா!!! மனிதா எங்கடா? கூறடா!!

இன்பமே வந்து கொண்டிருக்குமேடா!!

அதனால் தானே மனிதனின் பின் அறிவுகள் பின் மங்கி போயிற்றடா!

மீண்டும் கூட அழிவுகள் கூட எடுத்து வருகின்றானடா ஈசன் எடுத்து வருகின்றானடா!!

அதில் கூட நீங்கள் எப்படி?? தப்பித்துக் கொள்வது? என்று யோசிக்க முடியவில்லையேடா!!

ஏனென்றால் அறிந்தும் கூட இறைவனை உங்களால் அறிந்தும் கூட இறைவனை உணரவே முடியவில்லையடா!!

யார் ஒருவன் இறைவனை உணர  முடியவில்லை!! அவன் அறிந்தும் கூட பின் இறைவனை பொய் என்று கூறுவானடா!!! இறைவனை பொய் என்று கூறுவானடா!!

இக்கலியுகத்தில் அழிவு நிலைகள் வந்த வண்ணம்!!! வந்த வண்ணம்!!!

இறைவனை உணர்ந்து கொள்ள ஆள் இல்லையடா.. இறைவனை உணர்ந்து கொள்ள ஆள் இல்லையடா. 

திருத்தலம் திருத்தலமாக சுற்றினாலும் பின் திருநீற்று பட்டைகள் இட்டுக் கொண்டாலும் ருத்ராட்சம் தன்னை இட்டுக் கொண்டாலும் பின் சந்நியாசம் சென்றாலும் இறைவனை உணர்ந்து கொள்ள ஆள் இல்லையடா!!

இறைவனை உணர்ந்து கொள்ள ஆள் இல்லையடா!!!


ஆசிகள் அனைவருக்குமே!!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அனைத்து சித்தர்களும் வந்து ஆசிகள் நல்கி வாக்குகள் உரைத்த பின் குருநாதர் அகத்தியர் பெருமானும்.. வந்து வாக்குகள் தந்து உத்தரவும் தந்தார். குருநாதர் தந்த உத்தரவு திரிவேணி சங்கமம் யாத்திரையில் முதல் வாக்காக சித்தன் அருள் 1790. குருநாதர் தந்த உத்தரவு வாக்காக வந்துள்ளது. 

அதன் பிறகு குருநாதர் அடியவர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் பதில் வாக்குகள் தந்தார் அதன் தொகுப்பு. 


அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே... அனைவரும் வந்து விட்டனர் இங்கு அப்பனே.. நல்விதமாக அப்பனே இதில் கூட பின் வசிஷ்ட முனியும் கூட!!
அப்பனே நல்விதமாகவே பிருகு (ரிஷி) ஆனவனும் கூட!!
அத்திரியும் (ரிஷி) கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே விசுவாமித்திரனும் கூட 
அப்பனே நல்ல விதமாகவே 
கோரக்கனும் கூட அப்பனே நிச்சயம் பின் தேவாதி தேவர்களும் அதாவது இந்திரனும் கூட சந்திரனும் கூட அனைவருமே அப்பனே 
அதாவது... பின் யான் வந்தேன் தனியாக.. என் பின்னே அனைவரும் வந்து விட்டார்கள் என்பேன் அப்பனே.. அனைவருக்கும் ஆசிகள் கிடைத்தது என்பேன் அப்பனே. 

குருவே நீங்கள் அடிக்கடி வாக்குகளில் கூறும் பக்குவங்கள் அடைய வேண்டும் என்று சொல்வதன் தார்ப்பரியம் என்ன???


அப்பனே சொல்கின்றேன் அப்பனே ஒருவன் முழு பக்குவமும் அடைந்து விட்டால் நிச்சயம் அப்பனே உடம்பில் ஒரு ஒட்டு துணி கூட... இல்லாமல் இருக்க எண்ணங்கள் வந்து விடும் அப்பனே. (எல்லாவித இச்சைகளும் இல்லாமல் முழுமை பெற்ற நிர்வாண நிலை) 

குருவே பக்குவங்கள் அடைவதற்கு முன்பே வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கின்றதே 


அப்பனே இவ்வுலகத்தில் ராமன் என்ன தவறு செய்தான்?? என்பேன் அப்பனே.. ஆனாலும் ராமன் எவ்வளவு கஷ்டங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் துணையாக அப்பனே நிச்சயம் அப்பனே அனுமான் இருந்தானே அப்பனே... பின் என்ன???

அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ்வளவு கஷ்டங்கள் நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே... ஆனால் இறைவன் உங்களை விட்டு பின் ஒரு நாளும் அப்பனே விலகி விட்டு செல்வதில்லை!!! இது அனைவருக்குமே அப்பனே! என்பேன் அப்பனே. 


இறைவனை வணங்கினாலும் மனக்குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றது குருநாதா!!

இதற்கெல்லாம் மனம் ஒன்றிணைந்து அப்பனே அமைதியாக இருங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே அனைத்தும் அகத்தியன் பார்த்துக் கொள்வான் என்று தைரியமாக இருங்கள். 

அனைத்தும் செய்வேன்!!

அப்பனே சில சில ஆசனங்களை கூட செய்து வாருங்கள் அப்பனே சில சில ஔஷதங்களை கூட எடுத்துக் கொண்டே வாருங்கள் அப்பனே முன்பே வாக்குகளில் உரைத்து விட்டேன் அப்பனே. 

அப்பனே பின் 40 வயது அதாவது...

 இரு ஆண்டுகள் மூவாண்டுகள் அப்பனே அது ஊறிவிடுமா என்ன தொடர்ந்து எடுத்துக் கொண்டே வாருங்கள் அப்பனே. 

(உங்களுக்கெல்லாம் குறைந்த பட்சம் 40 வயது ஆகின்ற பொழுது மூலிகைகளை ஒரு ஆண்டு இரு ஆண்டுகள் மட்டும் எடுத்துக் கொண்டால் மட்டும் போதுமா??? தொடர்ந்து மூலிகைகளை எடுத்துக் கொண்டே வர வேண்டும்) 

அப்பனே வரும் வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் (யோகா) ஆசனங்களை பற்றியும் கூட எடுத்துரைப்பேன் உங்களுக்கு வாக்குகளில் அப்பனே! 

ஆசனங்களை பற்றி கூட அப்பனே பின் எடுத்துரைக்கும் பொழுது அதை செய்து கொண்டே வந்தால் அப்பனே அதாவது ஆசனங்கள் மூலம் அதாவது அப்பனே அதன் மூலம் கூட அப்பனே நோய்கள் அப்பனே விலகி விடும் அப்பா!!!


குஜராத்தில் வசிக்கும் அகத்தியர் பக்தர் ஒருவர் இருக்கின்றார்.. குருநாதர் காட்டும் வழியில் நடந்து வருபவர் தான தர்மங்களை தன்னால் முடிந்த வரை செய்து கொண்டு வருபவர். அவருக்கு ஒரு மகன் மருமகள் இருக்கின்றார்கள் திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்காவில் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றார்கள். கடந்த ஆண்டு இந்தியா வந்த பொழுது அந்த நேரத்தில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சூரத் சத்சங்கத்தில்  அகத்தியர் குருநாதர் உத்தரவுபடி யாத்திரையில் இருந்த பொழுது அந்த நேரத்தில் திரு ஜானகிராமன் ஐயாவை அவர்கள் குடும்பம் வந்து சந்தித்து குருநாதரிடம் ஆசிகள் வாங்குவதற்காக வந்த பொழுது...


 ஜீவநாடியில் போகர் ரிஷி வந்து அனைவருக்கும் ஆசிர்வாதம் தந்தார்.


 என் பிள்ளை பழனிமலையில் இருக்கின்றான்.. அவந்தனக்கு சாற்றும் சந்தனத்தை  நீங்கள் உட்கொள்ள வேண்டும்!!

 இதனால் உங்கள் கவலைகள் தீரும். என தீர்வினைச் சொல்லி ஆசிர்வாதம் தந்தார்.

அவர்கள் அவசரமாக மீண்டும் தென் ஆப்பிரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை அதனால் குறுகிய காலகட்டத்திற்குள் பழனி சந்தனத்தை பெற முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர் தந்தையானவர் குருநாதர் வழிகாட்டுதல் படி ஆலய தரிசனங்கள் மற்றும் தான தர்மங்கள் முறையே செய்து கொண்டே வந்தார். 

திடீரென தென் ஆப்ரிக்காவில் இருந்து நற்செய்தியை மகனும் மருமகளும் கூறினர். குருவின் திருவருளால் கருவுற்று இருக்கின்றோம் என்று மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். நல்லபடியாக பிரசவமும் ஆனது... ஆண் குழந்தையும் பிறந்தது... அந்த பக்தர் குருநாதருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் அப்பொழுது குருநாதர் 

அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே ஔஷதங்கள் பின் மறைமுகமாக அப்பனே போகன் பின் அறிந்தும் கூட இட்டு விட்டான் என்பேன் அப்பனே...


 எம்முடைய ஆசிகள் அப்பனே நிச்சயம் அப்பனே.... என்னிடத்தில் ஒரு விஷயத்திற்காக கேட்டுக் கொண்டே இருந்தாய் அப்பனே 
கொடுத்துவிட்டேன் அப்பனே... இதையும் கூட விதியின் படி பார்த்தால் நீட்டி இருக்க வேண்டும்.. என்று அப்பனே ஆனால்.. அப்படியே நீட்டி இருந்தால் நீயும் கூட அகத்தியனே இல்லை என்ற நிலைமைக்கு வந்திருப்பாய் அப்பனே!!!

போகனே இதற்கு மருந்துகள் மறைமுகமாக இருவருக்கும் தந்து விட்டான் என்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் கூட இதைக் கூட அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய ஏதோ ஒரு விதத்தில் என்னையே நம்பி விட்டாய் அப்பனே பல புண்ணியங்கள் செய்து விட்டாய் அப்பனே.. இதனால் அப்பனே அறிந்தும் கூட!!!

அப்பனே இதனால் அப்பனே பல மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே குறைகள் இல்லை... யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே புண்ணியங்களை செய்து கொண்டே வாருங்கள்.. வாருங்கள் என்று உங்களிடம் புண்ணியம் இருந்தால் யாங்களே உங்களை தேடி வந்து உங்களுக்கு என்ன தேவையோ அப்பனே அதை அனைத்தையும் கர்மா அப்பனே சேராமல் செய்வோம் என்போம் அப்பனே யாங்கள் சித்தர்கள் அப்பனே!!


அப்பா..... ஆதி கைலாசம் இலங்கையில் இருந்தது என்று கதிர்காம வாக்கில் கூறியிருந்தீர்கள்... லிங்கேஸ்வரன் ராவணன் அங்கு இருக்கும் ஆதி கைலாயத்தை விட்டு விட்டு பாரத தேசத்தில் இருக்கும் கைலாயத்திற்கு ஏன் வந்தார்???

அப்பனே இன்னும் புரியவில்லையா அங்கு மூழ்கி விட்டதப்பா!!!


அப்பா ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் தவ யோகிகளுக்கும் ஆதி கைலாயம் கண்களுக்கு தெரியும் என்று வாக்கில் கூறியிருந்தீர்கள் அப்படியானால் ராவணன் கண்களுக்கு அங்கு ஆதி கைலாயம் இருந்தது தெரியவில்லையா??

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவந்தனுடைய தவ வலிமையால் உணர முடியவில்லை என்பேன் அப்பனே.. இன்னும் ரகசியங்கள் இருக்கின்றன அப்பனே.. பொறுத்திருந்தால் இன்னும் விவரமாகவே விவரிக்கின்றேன் அப்பனே. 


அப்பா மூலிகையைப் பற்றி வருங்காலத்தில் தெரிவிப்பேன் என்று சொல்லி இருந்தீர்கள் 


அப்பனே அனைத்தையும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.. ஒவ்வொன்றாக மூலிகைகளை எல்லாம் பற்றி கூறுவேன் அப்பனே. 


அப்பனே 108 மூலிகைகளை கூட நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட இவை எல்லாம் அப்பனே நெருப்பினால் இட்டு (யாக குண்டத்தில்) அப்பனே அதாவது அவை சாம்பலாக விடும் என்பேன் அப்பனே... விஷயம் அப்பனே அதைக் கூட நெய்யில் அப்படியே எடுத்து எதை என்று அறிய அறிய அப்பனே இப்படி செய்யலாம் என்பேன் அப்பனே...

(மூலிகை மை)

(108 மூலிகைகளை யாகத்தில் இட்டு அவை எரிந்த பிறகு சாம்பலான பிறகு அந்த சாம்பலை நெய்யோடு சேர்த்து குழைத்து மையாக நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்!!!...

மேலும் மூலிகைகளை எரித்த சாம்பலை திருநீறுகவும் பயன்படுத்தலாம் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.)

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் ஆசிகள் அப்பனே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக, நன்றி இறைவா 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம குருவே துணை 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete