​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 February 2025

சித்தன் அருள் - 1794 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் அழுக்காணி சித்தர்!








29/1/2025 மௌனி அமாவாசை கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் அழுக்காணி சித்தர் ஈசனை தொழுது ஆடி பாடி உரைத்த வாக்கு. 

உருண்டையை உருட்டுகின்ற ஈசா!! போற்றி!!

(பூமி பந்தை சுழல வைத்து பிரம்மாண்டத்தை ஆளுகின்ற  ஈசா!!போற்றி)

பணிந்து செப்புகின்றேன் அழுக்காணி!!!

நின்று நின்று கும்மியடி!!!
கும்மியடி பெண்ணே கும்மியடி நின்று கும்மியடி!!

ஆனந்தத்தில் கும்மியடி!! வைகுண்ட நாதனை கண்டு விட்டோம் என்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!!
கருணை வடிவானவனை கண்டுபிடித்தோம் என்று கும்மியடி!!

கும்மியடி !! கும்மியடி!! ஆனந்தத்தில் நின்று இங்கு கும்மியடி!!!

வருவோருக்கெல்லாம் ஆசிகள் தந்து ஈசனின் இன்னும் பரிபூரண ஆசிகள் தந்து பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் கும்மியடி!! கும்மியடி!! பெண்ணே!! பெண்ணே!!

ஆனந்தம்!!! ஆனந்தம்!!
சித்தர்கள் ஆனந்தம்!! ரிஷிகள் ஆனந்தம்!!
முனிவர்கள் ஆனந்தம்!!
தேவாதி தேவர்கள் ஆனந்தம்!!
இந்திரனுக்கும் இந்திரனுக்கும் ஆனந்தம் ஆனந்தம் கும்மியடி தம்மில் கும்மியடி!! தம்மில் கும்மியடி!!


எந்த ரூபத்தில் வந்தாலும் தம்மில் கும்மியடி!!! மனிதன் வடிவத்தில் வந்து கும்மியடி!!

ஆனந்தக் கண்ணீரில் நனைகின்றோம் சித்தர்கள் யாங்கள் கும்மியடி தம்மில் கும்மியடி!!!

உலகத்தில் நின்று காத்தருளும் கும்மியடி!!! இணைந்து இன்னும்  வாழ்க்கையில் பின்னும் வெற்றிகள் தரும் ஈசனாரை பார்த்து கும்மியடி!!!!

கும்மியடி !! கும்மியடி!! தேவாதி தேவர்களும் இங்கு வந்து ஈசனை தேடி தேடி ஆசிகள் பெற்று!!!
 கும்மியடி!! கும்மியடி!!

மனிதனே சோம்பேறித்தனம் பட்டு இருந்து  அங்கே எப்படி செல்வோம்??? என்று!!

கும்மியடி!! கும்மியடி!!
இந்திரனுக்கும் மேலானவர்கள் எவர்? என்று தெரிந்து கொள்ள கும்மியடி!!

சித்தர்கள் யாங்கள் அனைவரும் இங்கு வந்து சந்தோஷத்துடன் களித்தோம்!!!

இறைவனையும் கண்டோம் கண்டோம்!! தெளிந்தோம்!! தெளிந்தோம்!!

இறைவனை யார் யார் என்று மனிதனுக்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லையே.

கும்மியடி! தம்மில் கும்மியடி! 
அனைவரும் இணைந்து பின் கும்மியடி!!

அடி என்று இங்கே என்று எதனை அடி? கும்மியடி என்று யான் சொன்னேனே!!
அனைத்திலும் கும்மியடி!!
அணிந்து உள்ளம் கொண்டவருக்கும் தீய எண்ணங்கள் நீக்கும் திறன் கொண்டவருக்கும் இவ் கங்கை நதியில் நின்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!! ஆனந்த கண்ணீரில் கும்மியடி!!!

பற்று அற்று அற்றவுடன்.. பற்றி நின்று கும்மியடி!!
இணைந்த கைகளால் கும்மியடி!!!

ஊர்ந்த கைகளால் கும்மியடி!!! என்றும் இணைந்து கும்மியடி!!!

பாவங்களை போக்குபவனை கும்மியடி!!
கும்மியடி கும்மியடி!!
புண்ணியங்கள் தரட்டும் கும்மியடி!!!

ஈசனாரும் பார்வதி தேவியும் நின்றிட்டு அழகாக அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து பாவத்தை நீக்கியும்!!!
சிலர் பின் கர்மத்தை அறிந்தும் கூட....

பின் புண்ணியத்தை புகுத்தியும் கும்மியடி!!
கும்மியடி!!


சிலர் பின் இறப்பதற்காகவே இங்கே வந்து இறக்கிறோம் என்று பின் நீரில் அப்படியே போயிட்டவர்களையும் கூட பின் ஈசன் பின் கட்டிக் கொண்டு கொடுத்தான் கும்மியடி!!!

மனிதருக்கு இன்னும் புரியவில்லையே!!!

ஆனந்தக் கண்ணீரில் யாங்கள் நனைகின்றோம் 
கும்மியடி!!!

மனிதன் பின் இறைவன் யார்? என்று புரியாத வரை சந்தோஷம் இல்லை கும்மியடி!!!

சந்தோஷம் இல்லை கும்மியடி!!! சந்தோசம் இல்லை கும்மியடி!!

ஏன் அறிந்தும் கூட துன்பம் வருவது எதனால் என்று அறிய முடியாததை கும்மியடி...

அறிந்த பின்பு உணர்ந்த பின்பு இறைவன் என்று யாரென்று தெரிந்து கொண்டு பின் பின் துன்பமே இல்லை என்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!!

ஆனந்தம்!; ஆனந்தம்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment