​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 21 February 2025

சித்தன் அருள் -1805 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - 2!



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( கோளறு பதிகம் - ரகசியங்கள் ) 

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்

1. சித்தன் அருள் - 1796 - கோவை வடவள்ளி வாக்கு 1)

நம் குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை ) அம்மையே என்ன வேண்டும்?

அடியவர் 3 :- ஒன்றும் வேண்டாம் . அப்பாவோட அருள் எப்பவும் கிடைத்தால் போதும். 

நம் குருநாதர் :- அம்மையே அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று?

அடியவர் 3 :- உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் என்று அப்பா கேட்கின்றார்.

அடியவர் 4 :- ( பின்னால் இருந்த படி ) நல்ல பக்தியும் , நல்ல முக்தியும் வேண்டும் என்று சொல்லுங்கள். 

நம் குருநாதர் :- அவனை எழச்சொல் முதலில். முன்னே வரச்சொல். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள் ) தானாகவே போய் மாட்டிக்கிட்டார். 

அடியவர் 4 :- ( சுவடியின் முன்னே வந்தார் ) 

நம் குருநாதர் :- அப்பனே திரும்பி நின்று,  அவரவருக்கு என்ன வேண்டும் என்று நீயே கேள் அப்பனே. ஏனென்றால் புண்ணியம் பெருகட்டும் அப்பனே. அறிந்தும் கூட இன்னும் நல்லவை செய்ய வேண்டும் நீ. அதனால் பின் புண்ணியத்தை யானே தேடித்தருகின்றேன். நீ செய்ய மாட்டாய் என்பேன் அப்பனே. __ என்பேன் அப்பனே. அதனால் அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று. அதுவும் ஒரு புண்ணியம்தானப்பா. யான் சொல்கின்றேன். நீ அப்படியே சொல். புண்ணியம் ஆகும் அப்பனே. புண்ணியம் வளர்த்துக்கொள் அப்பனே. இல்லத்திலும், உன் தாய்க்கும் சந்தோசம் ஏற்படும் என்பேன் நலன்களாகவே. 

==============
(அடியவர்கள் ஒன்றை நன்கு இங்கு கவனிக்கவும். என்ன வேண்டும் என்று கேட்டாலே புண்ணியம் வரும் என்றால் , சித்தன் அருள் வலை தளத்தில் அன்புடன் அகத்தியர் வாக்குகளை மக்களுக்கு நேரில் எடுத்து உரைத்தால் எவ்வளவு புண்ணியம் உண்டாகும்? அதனால் உயிர் உடலில் இருக்கும் காலம்வரை இவ்வாக்குகளை இயன்ற பொழுதெல்லாம் இவ்வுலகம் முழுவதும் பரப்புங்கள்.) 

==================

அடியவர் 4 :- நிற்பவர்களுக்கு யார் யாருக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். 

அடியவர் 3 :- யார் யாருக்கு என்ன வேண்டும் என்று ( அகத்தியர் ஐயா ) அவருக்கே தெரியும். 

நம் குருநாதர் :- அப்பனே புரிகின்றதா?ஆனால் என்னிடத்தில் கேட்கின்றார்கள் ஏன் என்று கூறு?

அடியவர் 3:- இந்த ஜீவநாடி கேட்கவே நாங்கள் எத்தனை ஜென்மத்தில் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

நம் குருநாதர் :- அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே புண்ணியவாதிகள்தான். ஆனால் அனைத்தும் நடக்கும். ஆனாலும் சிறு சிறு தவறு செய்கின்றீர்கள். அவ்வளவுதான். அதை திருத்திக்கொள்ளவே யான் வருகின்றேன். நலமாகவே அனைத்தும் சொல்கின்றேன். நிச்சயம் அதிகம் அதாவது தேர்ச்சி பெற வேண்டும் என்றால், ஆனால் சிறிய அளவிலே பின் தோல்வி அடைந்து விடுகின்றீர்கள். இதனால் அனைத்தும் நலமாக புண்ணியங்கள் மிகுந்து காணப்படுகின்றது. ஆனாலும் சிறிது சிறிது தவற்றினால்தான் நிச்சயம் எங்கேயோ போய் பள்ளத்தில் விழுந்து விடுகின்றீர்கள். அவ்பள்ளத்தில் நிச்சயம் விழாதீர்கள் என்பதற்காகவே இங்கு ஆசிகள் இப்பொழுது. 
( தனி வாக்குகள் ) 
…….
……..
பல போராட்டங்களை சந்திக்கும் பொழுதுதான் இறைவன் நேரில் காட்சி அளிக்கின்றான். 
………
……… 
தாயே , மற்றவர்களைப் பற்றி நாம் எப்பொழுது நினைக்கின்றோமோ நன்றாக இருக்க வேண்டும் என்று , நிச்சயம் இறைவன் தன்னைப் பற்றி ( நம்மைப் பற்றி ) நினைப்பான் தாயே!!!!!!!!
…….
……
( இறை வழிபாட்டில் இருப்பவர்கள் எப்படி பாவத்தை சேர்த்துக் கொள்கின்றார்கள்? ) 

( சுய , தன்னைப் பற்றி, தன் குடும்பம் பற்றி வேண்டுதல் ) இதுதான் மாயை. அதாவது இறைவனிடத்தில் தன் சுயநலத்திற்காக எதுவும் வேண்டக்கூடாது. அப்படி வேண்டினால் பாவங்கள் வந்து சேர்ந்துவிடும். கஷ்டங்கள் வந்து சேர்ந்துவிடும். நிச்சயம் சுய நலம் வேண்டாம். நிச்சயம் இறைவன் படைக்கின்றான் அனைவரையுமே. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இறைவனுக்கு எப்பொழுது செய்யத் தெரியுமோ, பின் அப்பொழுது செய்வான் தாயே. கவலையை விடு. ஆசிகள் கொடுத்து விட்டான் என்று சொல்லிவிட்டேன். பின் செய்யாமலா போவான் இறைவன் ?

….
( நம் குருநாதர் இவ் தருணத்தில் உலகோர் நன்மைக்காக இவ் அடியவரை அதாவது இங்கு “அடியவர் 3” என்ற அடியவரை உரையாட வைத்து , மறைமுகமாக இயக்கி,  மகிமை புகழ் “கோளறு பதிகம்”
 ரகசியங்களை எடுத்தை உரைக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் இவ் அடியவர் புண்ணியமும் உயர குருநாதர்  முன்பு இவ்வாக்கில் உரைத்தருளினார் என்பதை அடியவர்கள் கருத்தில் கொள்க. பல வருடங்களாக ஈட்ட இயலாத புண்ணியங்கள், நம் குருநாதர் கருணையால் , சத்சங்கத்தில் சட்டென்று நடந்துவிடும் அதிசயம் இது. இனி கவனமுடன் படியுங்கள் இவ் ஆழ் ரகசியங்களை.) 

நம் குருநாதர் :- அப்பனே நீ கேள். எனக்காக வேண்டிக்கொள் என்று. 

அடியவர் 3 :- அம்மா , எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எப்படியப்பா வேண்டிக் கொள்வாள்? (அவள்) பெற்ற பிள்ளையா நீ?  

அடியவர் 3 :- அப்படி எல்லாம் ( இவ் அம்மை ) நினைக்க மாட்டார்கள் சாமி. ரொம்ப நாள் தெரிந்தவர்கள். 

நம் குருநாதர் :- அப்பனே யான் கூட பழகுகின்றேன் அப்பனே. ஆனால் பழகிக்கொண்டே இருக்கின்றாள். ஆனாலும் உந்தனுக்காக வேண்டிக்கொண்டாளா என்று கேள்?

அடியவர் 4 :- வேண்டிக்கொண்டேன் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே யான் இல்லை என்று சொல்வேன் அப்பனே. இனி மேலாவது வேண்டிக்கொள்ளச் சொல் அப்பனே. நடந்தேறும் அப்பனே. ஒன்றைக் கொடுத்தால்தான் , ஒன்றை வாங்க முடியும் அப்பனே. 

அடியவர் 3 :- சரிங்க சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே , இன்னும் என்ன வேண்டும் என்று கேள்? 

அடியவர் 3 :- இன்னும் என்ன வேண்டும்?

அடியவர் 4 :- ஒன்றும் வேண்டாம்.

அடியவர் 5 :- அப்பா எங்க கூட இருந்தால் போதும். 

நம் குருநாதர் :- ( தனி வாக்குகள்  உரைத்து அருளினார் கருணைக் கடல் ) இன்னும் என்ன வேண்டும் என்று கேள்?

அடியவர் 3 :- சாமி , எல்லோருக்கும் பக்தியையும் , புத்தியும் கொடுத்துவிடுங்கள். 

நம் குருநாதர் :- ஏன் பக்தியைக் கேட்கின்றாய்? 

அடியவர் 3 :- பக்திதான் அன்பு,  சாமி.

நம் குருநாதர் :- அப்பனே, இது எவ்வாறப்பா நியாயம்? உன் வாயில் வருவதை எல்லாம் உளறுகின்றாய் அப்பனே. 

============
( அடியவர்கள் இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் இவ் அடியவரைத் தூண்டி, எப்படி எல்லாம் அவ் அடியவரின் மூலம் உலகிற்கு ஒரு மகத்தான ரகசியத்தை எடுத்துரைத்து , இவ் அடியவருக்கு புண்ணியத்தை உண்டாக்குகின்றார் என்று கவனிக்கவும். உயர் புண்ணியங்கள் குருநாதர், இறைவன் மனது வைத்தால்தான் நடக்கும் என்பதற்கு இவ் உரையாடல் மிகச் சிறந்த ஒரு உதாரணம். வாருங்கள் நம் அன்பு குருநாதரின் கருணை வாக்கு மழையில் நனையலாம் ) 
==============

அடியவர் 3 :- பக்தியும், புத்தியும் இருந்தால்தானே சுவாமி அனுக்கிரகம்…

நம் குருநாதர் :- அப்பனே , புத்திக்கும், பக்திக்கும் என்ன சிறப்பு?

அடியவர் 3 :- பெரியவங்க சொன்னாங்க சாமி. நல்லபடியாக இருப்போம் (என்று). 

நம் குருநாதர் :- அப்பனே, அப்பொழுது உந்தனுக்கு மூளையே இல்லையா? அறிவே இல்லையா? அப்பனே பெரியவர்கள் சொன்னால்தான்,  அறிந்தும் கூட அப்பொழுது அவர்கள் ஓடிவிடு என்று சொல்வார்கள். ஓடிவிடுவாயா என்ன அப்பனே? சொல் அப்பனே? 

அடியவர் 3 :- சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் சாமி பக்தி செலுத்த வேண்டும் என்று…

நம் குருநாதர் :- அப்பனே பக்தி செலுத்து என்று சொல்கின்றார்கள் அப்பனே, ஆனால் செய்கின்றார்களா என்ன அப்பனே? ஆனால் காதல்தான் செய்கின்றார்கள். 

அடியவர்கள் :- ( மௌன சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( கருணைக்கடல் தூண்டியதோடு மட்டும் இல்லாமல் சுவடி ஓதும் மைந்தனும் அவ் அடியவரை ஊக்குவித்து உரையாடலைத் தொடர்ந்தார்கள். இதன் சுவாரசியத்தை முடிந்த அளவு அடியவர்களுக்கு பயன் பட, இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் அருளால் வாக்குகளாக மலர்ந்துள்ளது. ) 

நம் குருநாதர் :- அப்பனே இவர்கள் ஓரளவிற்குப் பக்தியில் தேர்ச்சி பெற்று விட்டார்கள் அப்பனே. அப்பனே அவர்களுக்கு அனைத்தும் நல்கும் என்று சொல் புண்ணியமாகட்டும் உந்தனுக்கு. 

=========
( நம் குருநாதரின் கருணையை இங்கு கவனியுங்கள். இவ் அடியவருக்கு எப்படி இறங்கி வந்து, கருணைக்கடல் புண்ணியத்தைக் மலை போலக் குவிக்கின்றார் என்று உணருங்கள்.) 
=========

அடியவர் 3 :- ( நம் குருநாதர் உரைத்தது போல்  அங்கு உள்ள அடியவர்களுக்கு உரைத்தார் இவ் அடியவர்.) 

அடியவர்கள் :- இதுவே போதும் சாமி. ( மன நிறைவு அடைந்தது  இவ் அடியவர்களுக்கு ) 

=========
(இப்போது மீண்டும் இவ் அடியவரை அன்புடன் இழுத்து , ஆட்கொண்டு மீண்டும் புண்ணியம் செய்ய வாக்கு அருளினார்கள்.)
=========

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பொழுது நீ கேட்டிருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இருவரும்தான் பக்தியில் தேர்ச்சி பெற்றார்களா என்று? இங்கு அனைவருமே இல்லையா என்று நீ ஏன் கேட்கவில்லை அப்பனே கூறு? 

அடியவர்கள் :- ( பல மௌன சிரிப்புகள் )

அடியவர் :- சாமி நிற்கின்றவர்களைத் தானே கேட்கச் சொன்னீர்கள்?

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் அகத்தியரிடம் கேட்க வேண்டும். 

அடியவர் :- அப்ப அவர்கள் மட்டும் தான் முக்தி பெற்றுள்ளார்களா சாமி? இவர்கள் எல்லாம் முக்தி பெறவில்லையா?

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட யான் சொன்ன பிறகே சொல்கின்றாய் அப்பனே. எவ்வாறு அப்பா நியாயம் அப்பனே? 

அடியவர் 3 :- நீங்க ஞானி. நீங்க முக்காலமும் அறிந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட அதை யான் சொன்னேனா? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் 3 :- எல்லோருக்கும் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே என்ன தெரியும் கூறு அப்பனே அகத்தியனைப் பற்றி? அனைவருக்கும் உரை அப்படித் திரும்பி. 

( நம் குருநாதர் கருணைக் கடல்,  உயர் முதல் தரப் புண்ணியம் ஈட்ட மேலும் வழி வகுத்தார் இவ் அடியவருக்கு.) 

அடியவர் 3 :- ( சுவடி ஓதும் இடத்தில் அடியவர்களைப் பார்த்து திரும்பி உரைக்க ஆரம்பித்தார் ) அகத்தியப் பெருமான் நடக்கின்றது, நடக்கப் போவது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி செய்து எல்லோருக்கும் புத்தியைக் கொடுப்பார். புத்தியையும் பக்தியையும் கொடுப்பார். 

நம் குருநாதர் :- அப்பனே முக்தி என்றால் என்ன? பக்தி என்றால் என்ன?

அடியவர் 3 :- தாங்களே சொல்லிவிடுங்கள் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே நீ ஏதாவது எந்தனுக்குச் சொல்ல வேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் உந்தனுக்கு சொல்லுவேன்.

அடியவர் 3 :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே அப்படியே திரும்பி ஒரு பாடலைப் பாடு. 

=========
( திருஞானசம்பந்தர் பெருமான் உரைத்த மகிமை புகழ் கோளறு பதிகப் பாடலை பாட ஆரம்பித்தார் இவ் அடியவர். ஆனால் இவ் பாடலை பாட வைத்தது நம் குருநாதர். அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க) 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0
சித்தர்கள் ஆட்சி - 378 - திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய கோளறு பதிகம்.

=========

அடியவர் 3:- ( பின் வரும் பாடலை பாடினார் அடியவர்) 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
  மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி    
  சனிபாம்பி ரண்டு முடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட இதை அனைவரையுமே சொல்லச் சொல் அப்பனே. நிச்சயம் கிரகங்கள் அண்டாதப்பா. சொல்லிவிடு. 

அடியவர் 3 :- எல்லோரும் இந்த பாடலை சொல்லுங்கள். கிரகங்கள் யாரையும் தொந்தரவு செய்யாது.

நம் குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் அனைவருக்குமே. எந்தனுக்கு சொல்லவில்லை, உந்தனுக்குச் சொல்லவில்லை , இப்படிச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அப்பனே நிச்சயம் யான் சொல்லியவற்றைக் கேட்டால்தான் அடுத்த அளவில் கூட எடுத்துச் செல்ல முடியும் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெறவேண்டும். அப்பொழுது ஆசிரியன் என்னென்ன சொல்கின்றானோ அதை நிச்சயம் கேட்டு தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அதே போலத்தான் அப்பனே. இப்பொழுது சொல்லிவிட்டேன். என்ன சொன்னேன் என்று அனைவரையும் கேள்?  அப்பனே சொல்லச் சொல் பார்ப்போம் அப்பனே. அதாவது உன் பக்கத்தில் இருக்கின்றானே, அவனை எழச்சொல்லி இதை செப்பச் சொல். 

அடியவர் 3 :- ( மற்றொரு அடியவருக்குச் சொல்லிக் கொடுத்து, அவரை இப் பதிகத்தை சொல்லச் சொன்னார். அவ் அடியவரால் சொல்ல இயலவில்லை.) 

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது  கிரகங்கள் இவன் தனை அமுக்கி விட்டது அப்பனே. எப்படியப்பா? முதலில் என்ன பிரச்சினை வரும் என்பதைக் கேள் அவனை. 

அடியவர் 3 :- முதல்ல என்ன பிரச்சினை வரும்?

அடிவர் :- ஐயாவுக்கு…

அடியவர் 3 :- உங்களுக்குத் தான் சாமி தெரியும். 

நம் குருநாதர் :- அப்பனே காதல் பிரச்சினை வரும். காதலைப் பற்றி நீயும் எடுத்துரை? 

அடியவர் 3 :- ( காதல் புரிவதில் உள்ள பிரச்சினைகளை எடுத்து உரைத்து , பெற்றோர்கள் மூலம் திருமணம் நடத்தல் நன்று என்று  அழகாக எடுத்து உரைத்தார்.) 

நம் குருநாதர் :- அப்பனே ( கோளறு பதிகம் ) இதை நிச்சயம் அவந்தனக்குச் சொல்லிக்கொடு.

அடியவர் 3:-  வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
அடியவர் :- வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 


அடியவர் 3:-  மிகநல்ல வீணை தடவி    
அடியவர் :- மிகநல்ல வீணை தடவி    

அடியவர் 3:-  மாசறு திங்கள்
அடியவர் :- மாசறு திங்கள்

அடியவர் 3:-  கங்கை முடிமேலணிந்தென்
அடியவர் :- கங்கை முடிமேலணிந்தென்    

அடியவர் 3:-  உளமே புகுந்த அதனால்    
அடியவர் :- உளமே புகுந்த அதனால்    

அடியவர் 3:-  ஞாயிறு திங்கள் 
அடியவர் :- ஞாயிறு திங்கள் 

அடியவர் 3:-  செவவாய்  புதன்
அடியவர் :- செவவாய்  புதன்

அடியவர் 3:-  வியாழன் வெள்ளி
அடியவர் :- வியாழன் வெள்ளி

அடியவர் 3:-  சனிபாம்பி ரண்டு முடனே    
அடியவர் :- சனிபாம்பி ரண்டு முடனே    

அடியவர் 3:-  ஆசறு நல்லநல்ல
அடியவர் :- ஆசறு நல்லநல்ல  

அடியவர் 3:- அவைநல்ல நல்ல    
அடியவர் :- அவைநல்ல நல்ல    

  அடியவர் 3:- அடியாரவர்க்கு மிகவே.  
அடியவர் :- அடியாரவர்க்கு மிகவே.  


நம் குருநாதர் :- அப்பனே இதை நிச்சயம் 108 முறை செப்ப வேண்டும் அனைவருமே. இதை செப்பிட்டு , அப்பனே சிறு எறும்புகளுக்காவது தானம் செய்ய வேண்டும் அப்பனே. வெற்றி நிச்சயம் உண்டு அப்பனே. இதை செப்பி, அனைவரையும் செப்பச் சொல். 

அடியவர் 3:- ( இவ் பதிகத்தை அடியவர் ஆரம்பித்த உடன், அங்கிருந்த அடியவர்கள் ஒருமித்த குரலில் கருணைக்கடல் முன்னர் பாட ஆரம்பித்தனர். சத்சங்கமே ரம்யமான இனிய இசைக்களம் ஆனது அங்கு அடியவர்களின் இனிய பாடுதலால். அத்துடன் இவ் அடியவர் குருநாதர் உரைத்தவாறு அனைவரையும் 108 முறை இல்லத்தில் அவர்களை ஓதச் சொன்னார்கள். அத்துடன் ஜீவராசிகளுக்கு அன்னதானம் இடவும் சொன்னார்.) 

நம் குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. இதில் யார் தேர்ச்சி பெறுகின்றார்களோ , அப்பொழுதுதான் அப்பனே அவந்தனக்கு மறு வாக்கு சொல்லி, உண்மை சொல்லி உயர்த்தி விடுவேன். 

அடியவர் 3:- ( அவ்வாரே உரைத்தார் அனைவருக்கும் )

அடியவர்கள் :- அந்த 4 வரியை மட்டும் பாட வேண்டுமா? அல்லது முழுப் பாடலையும் பாட வேண்டுமா? 

=========
கேளறு பதிகம் 11 பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க. 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0 

===============

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட சாதமும், அப்பனே கூறு தனித்தனியாக வைத்து உண்ணலாமா என்று? 

அடியவர் 3 :- ( புரிந்து கொண்டார் ) கோளறு பதிகம் எல்லாமே படிக்க வேண்டும் 108 முறை.

நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொல். குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது இவ்வாறு ஓதினால் என்று.

அடியவர் 3:- கோளறு பதிகம் முழுமையாக படித்தால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது. 

நம் குருநாதர் :- அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே. கிரகங்களின் ஆட்டம் அப்பனே அதிக அளவில் நடைபெறும் என்பேன் அப்பனே. அப்பொழுது இல்லத்திலும் கூட குழப்பங்கள். ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள். தாய் தந்தையர் அதாவது சகோதர, சகோதரிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்படுவதும் கூட உறுதி என்பேன் அப்பனே. இதை சொல்லிக்கொண்டே வந்தால் , அதாவது இல்லத்தில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும். 

அடியவர் 3:- குடும்பத்தில் யாராவது ஒருத்தராவது சொல்லுங்க என்று சொல்கின்றார். 

அடியவர்கள் :- 108 தடவை தொடர்ச்சியாக 
சொல்ல வேண்டுமா?

நம் குருநாதர் :- அம்மையே காசுகள் வந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் வேண்டாம் என்று சொல்லுவாயா தாயே? 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, சொல்லிக்கொண்டே இருங்கள் daily 108 முறை. 

நம் குருநாதர் :- அம்மையே நிச்சயம் உனைப் பார்த்தே ஒன்று கேட்கின்றேன். கடும் முயற்சி எடுத்தால் வெற்றிகள் உண்டு. தாயே இதற்கு என்ன நீ கூறுகின்றாய்? 

அடியவர் 5:- கடும் முயற்சி எடுக்கனும் ஐயா.

நம் குருநாதர் :- அம்மையே உயர் பதவிகள் வகித்தாலும் கடும் முயற்சி நிச்சயம். அதாவது தற்பொழுதெல்லாம் வெளி நாடு செல்கின்றார்கள். அதற்கு நாய் போல் பாடு படுகின்றனர். ஆனால் சுலபமாக வாழ்வதற்கு இதைதன் மீண்டும் கேள்விகளாக கேட்டுக்கொண்டுள்ளீர்கள் தாயே. எவ்வாறு நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

அடியவர்கள் :- ( ஒரே நாளில் 108 முறை சொல்வது குறித்து உரையாடல்கள் ) 

நம் குருநாதர் :- அம்மையே சொல்லிவிட்டால் நன்று. ஆனாலும் அம்மையே அனைவரிடத்திலும் பாவம் உள்ளது. ஈசன் விடுவானா என்பது சந்தேகமே!!!!!?????

சுவடி ஓதும் மைந்தன் :- கேள்விக்குறியை போட்டுவிட்டார்….

நம் குருநாதர் :- அப்பனே இதனால் கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. இறைவா நீயே அனைத்தும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    உங்கள் வாழ்க்கையில் மகத்தான வெற்றி அருளும் கோளறு பதிகம் ரகசியங்கள்
    சித்தன் அருள் -1805 - கோவை வடவள்ளி வாக்கு - 2

    Please find the YouTube link for these who can not read due to eye problems. This video contains only the key points listed out.
    https://www.youtube.com/watch?v=pHKYVnfbMm0

    கேளறு பதிகம் 11 பாடல்கள் அடங்கிய தொகுப்பு.
    அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க.
    https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0
    சித்தர்கள் ஆட்சி - 378 : திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்.

    ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.
    சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  3. நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete