​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 19 February 2025

சித்தன் அருள் - 1803 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை அடிவாரம்!




16/2/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். ஹரிஹரபுத்ரா சேவா டிரஸ்ட் வளாகம். நாராயணன்தோடு .நிலக்கல்.வழி. சபரிமலை அடிவாரம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே என்னுடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே. 

சில சில அப்பனே பின் இவ்வுலகத்தில் மாற்றங்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.

அப்பனே ஆனாலும் சித்தர்கள் அப்பனே பின் யாங்களே.. வழி நடத்துவோம். 

அப்பனே  பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ் ஐயனை (ஐயப்பனை) நிச்சயம் காண வேண்டுமென்றால் அப்பனே எங்கள் அருள் அப்பனே எதை என்று பின் அறிந்தும் கூட

அப்பனே இவன் கூட அப்பனே... (சக்தி)மிகுந்த ஒரு சித்தன் தானப்பா!!!

அப்பனே பின் சித்தன் அப்பனே தெளிவடைந்தவன்!!! அப்பனே!!

இதனால் சித்தனிடத்தில் சிறிது எச்சரிக்கையாகவே (இருக்க வேண்டும்) அப்பனே.. பின் அனைவருமே!!

 சித்தர்கள் அறிந்தும் பின் அப்பனே பின் ஒவ்வொன்றாகவே விளக்குகின்றேன் (ஒவ்வொரு சித்தர்களைப் பற்றியும்) அப்பனே. 


அப்பனே பின் இவன் கருணை கொண்டவன்!! இன்னும் இன்னும் அப்பனே!! பின் அறிந்தும் கூட..

இதனால் அப்பனே எதுவும் இக் கருணைக்கு ஈடாகாது என்பேன் அப்பனே. 

அறிந்தும் இதன் உண்மைதனை கூட இப்பொழுது செப்புகின்றேன் அப்பனே.

இதனால் அப்பனே நன் முறைகளாகவே.. அப்பனே அதாவது.. இது இப்பொழுதே நடந்ததப்பா. 

அறிந்தும் இதன் தன்மையை உணர்ந்தும் கூட அதாவது அப்பனே அதாவது ஒரு 40 வருடங்களுக்கு முன்பே அப்பனே.. அறிந்தும் இவை தன் கூட அப்பனே.

இதனால் அப்பனே பின் இதை என்று கூற இங்கிருந்து  அப்பனே சில மைல் தொலைவிலே அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!

 பின் அதாவது ஒரு தாய் தந்தையர்!! அப்பனே பின் ஐயன் மீது பின் பலமாக அப்பனே பின் பக்திகள் கொண்டு வாழ்ந்து வந்தனர். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் இதைத் தன் கூட அப்பனே..ஐயனே!!!!... பின் அதாவது திருமணம் செய்தது கூட நிச்சயம் ஐயனை நினைத்து பின் நீதான் எங்கள் குழந்தை என்று...யாங்கள் அறிந்தும் எதிலும் ஈடுபடவில்லை என்று... நிச்சயம் அவர்கள் பின் ஐயனை நினைத்துக் கொண்டு... வருவோருக்கெல்லாம் பின் அன்னத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தனர்.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு வாரி!! வாரி!! பின் வழங்கி கொண்டிருக்கும் பொழுது பலர்  நிச்சயம் அதாவது பின் அறிந்தும் பின்...அவ் பெண்மணியிடத்தில் இவ்வாறு நீங்கள் புண்ணியம் செய்கின்றீர்களே!!!!

உங்களுக்கும் ஒரு குழந்தை இருந்தால் பின் நன்று!! என்று!!!

அவர்களும்!!.. ஆனாலும்... எங்களுக்கு தேவையில்லை குழந்தை! 

எங்களுக்கு குழந்தையே இவ் மணிகண்டனே!!!... எங்கள் குழந்தை மணிகண்டனே என்று நிச்சயம் தன்னில் கூட!!

ஆனாலும் இருப்பவர்கள் எல்லாம் பின் இவர்களை பாராட்டி நிச்சயம்... இவ்வளவு அன்னத்தை அளிக்கின்றீர்களே... நிச்சயம் தன்னில் இதோடு பின் உங்கள் சேவையை முடிக்க கூடாது. 

நிச்சயமாய் பின் உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் பின் செய்து இவ்வாறு நீங்கள் செய்து வருகின்றீர்களே நிச்சயம் அவ்வாறே... பின் அவர்களும் செய்வார்கள் அல்லவா!!! 

(உங்கள் வாரிசுகளும் அன்னதானம் செய்வார்கள் அல்லவா அதற்காகவாவது குழந்தை இருந்தால் நல்லது என்று பொதுமக்கள்) 

நிச்சயம் என்றெல்லாம்!!


அவ் பெண்மணியும் நிச்சயம் தேவையில்லை!! அதாவது என் குழந்தையே!! ஐயனே!!!.. 



இதனால் பின் நிச்சயம் எப்படியாவது... நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட இப்படியே.. ஏதாவது ஒரு விதத்தில் கொடுப்பான் என்று நிச்சயம். (எங்கள் குழந்தை ஐயப்பன் நாங்கள் இல்லாத காலகட்டத்திலும் இந்த அன்னதான சேவையை ஐயப்பன் எப்படியாவது ஒரு வகையில் நடத்தி வைப்பார் அனைவருக்கும் அன்னதானத்தை கொடுப்பார் என்று)


ஆனாலும் போகப் போக நிச்சயம் அப் பெண்மணிக்கும் கூட வருத்தங்கள்!!.. ஆமாம் அவர்கள் சொல்லியதெல்லாம்!!! மனதில் எண்ணி குழப்பங்கள் இட்டு... நிச்சயம் தன்னில் கூட இவை தன் கூட. 

ஆனாலும் ஒரு முறை நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரியாமல் கூட பின் ஓடோடி பின் அதாவது நிச்சயம் தன்னில் பின் அவ்வாறு எதை என்றும் புரியாமல் அன்னத்தை வாரி!!...வாரி!!...

ஆனாலும் பின் ஐயனோ பின்!!... ஒரு லீலையை நடத்தினான்.

அதனால் நிச்சயம் தன்னில் பின் அதாவது அனைவருக்குமே சமைத்து நிச்சயம் பின் அதாவது... அதிகாலையில் இருந்தே.. அறிந்தும் கூட நேற்றைய பொழுதில்... அதாவது உத்திரம் தினத்திலே இது நடந்தது. 

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் அதிகாலையில் இருந்தே பின் அதாவது நான்கு மணிக்கு பின் அறிந்தும் கூட பின் அக் காலை வேளையில் இருந்தே  பின்  அன்னத்தை அள்ளி அள்ளி நிச்சயம்... நாள் முழுவதும் கூட!!!

அறிந்தும் பின் எங்கெல்லாம்... இருக்கின்றார்களோ? பக்தர்களுக்கு பின் நிச்சயம் அறிந்தும் கூட!! இதனால் இவர்கள் முடிவெடுத்து நிச்சயம் வருகின்றவர்களுக்கெல்லாம் கொடுப்போம் என்று! 

ஆனாலும் கடைசியில் அறிந்தும்.. எதை என்று அறியாமலும் கூட..

ஆனாலும் நிச்சயம் இது தீரட்டும் என்று... நிச்சயம் ஐயனே பல வழிகளிலும் கூட பல மனிதர்களை அனுப்பி அனுப்பி பின் அறிந்தும் கூட பின் மொத்தமாக தீர்ந்து விட்டது!!

(ஐயப்பன் திருவிளையாடல் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு ஐயப்பன் அதிகப்படியான மனிதர்களை அனுப்பி உணவை வாங்கி உண்ணச் செய்து உணவை தீரும் படி செய்து விட்டார்)



பின் இவர்களும் இப்படியா?? எவ்வாறு? இவ்வளவு மனிதர்கள் வந்தார்கள் என்று!!!

ஆனாலும் நிச்சயம் அனைத்தும் உணவுகளும் முடிந்திற்று!!

ஆனாலும் சரி!!! என்று ஆனாலும் வருவோருக்கெல்லாம் நிச்சயம் வேண்டாம் என்பதைப் போல் அறிந்தும் இதன் தன்மையைக் கூட கடைசியில்... மணிகண்டன் நிச்சயம் பின் கையேந்தினான் வந்து!!!


பின்!..  தாயே!!! தந்தையே!!... அறிந்தும் கூட ஏதாவது இருக்கின்றதா??

 யான் பசியோடு.. வந்திருக்கின்றேன். என்று நிச்சயம்!!

ஆனால் அறிந்தும்.. பாலகனாகவே மணிகண்டன் வந்து அறிந்தும் இதன் தன்மையைக் கூட.

ஆனாலும் நிச்சயம் அவர்களும்...

 ஐய்யய்யோ!!

 ஒரு குழந்தை வந்திருக்கின்றதே!!

ஆனால் இப்படி அனைத்து உணவுகளும் இன்று தீர்ந்துவிட்டதே!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய!!

இதனால் நிச்சயம் பின் அதாவது அவ் இல்லத்தோனும் நிச்சயம். தன் இல்லத்தவளிடம்!!..தாயே!! இவந்தனை... இக்கு குழந்தையை இங்கேயே பின் அமைத்திடு!! (உன்னிடமே இருக்கட்டும்) 

நிச்சயம் யான் ஓடோடி சென்று.. நிச்சயம் ஏதாவது சில பொருட்களை வாங்கி வருகின்றேன்.. நிச்சயம் தன்னில் கூட.... அப்பொழுது நீ சமைத்து பின் சரியாகவே இக்குழந்தைக்கும் கொடுத்து விடலாம் என்றெல்லாம். 

நிச்சயம் பின்.. நிச்சயம் குழந்தாய்!! நீ இங்கேயே இரு!!! என்று யான் சென்று வாங்கி வருகின்றேன் என்றெல்லாம் பின் இல்லத்தவனும் கூட!!

பின் ஓடோடி சென்றான்!!.... எங்கும் !!எதுவும்!!... கிடைக்கவில்லை!!!!

அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் பின் அனைத்தும் பின் (பொருட்கள்)தீர்ந்துவிட்டது என்றெல்லாம்!!! பின் பக்கத்தில் உள்ள ஊர்களிலும் கூட!!... எதுவுமே இல்லை என்று! 

ஆனாலும் அறிந்தும் பின் மீண்டும்.. பின் அதாவது இல்லத்திற்கு வந்து மனமுடைந்து நிச்சயம் தன்னில் கூட இல்லத்தவளிடம்.. பின் அதாவது  இச்சிறுவனுக்கு தருவதற்கு எதுவுமே இல்லையே!!!! எப்படி ?என்ன செய்வது??? என்றெல்லாம்!!
நிச்சயம் அங்கிருந்தே...

 ஆனாலும் வந்திருப்பது ஐயன் என்று தெரியவில்லையே!!!! அறிந்திருக்க கூட முடியவில்லையே...

இதனால்தான் நிச்சயம் இவ்வாறெல்லாம் இக்கலி யுகத்தில்... தர்மத்தின் பாதையில் செல்வோருக்கெல்லாம் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் பின் இறைவன் வந்தடைந்து கொண்டே இருக்கின்றான். 

ஆனால் நிச்சயம் தெரிவதில்லையே!!!... ஏன்? எதற்கு ? என்றால்... நிச்சயம் அவ் விஷயங்களுக்கெல்லாம் யான் வரும் வரும் காலங்களில் பதிலளிப்பேன். அப்பொழுது புரியும் நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம்... ஐயனே வந்து நிச்சயம்... அதாவது நிச்சயம்... ஆனால் எப்படியோ ஏதாவது ஒன்றை சமைத்து விட வேண்டும்... என்று. 

பின் ஆனாலும் மணிகண்டனோ?!...... ஐயோ!! பசிக்கின்றது!!! எந்தனுக்கு பசிக்கிறது!! நிச்சயம் ஏதாவது தாருங்கள் என்று!!

அறிந்தும் இதன் தன்மையைக் கூட... ஆனாலும்  மீண்டும்

பின் நிச்சயம் எப்படியாவது நிச்சயம் அதாவது பின்... நடுநிசி அதாவது.. 12 மணி இரவு... ஆகிவிட்டது ஆனாலும் நிச்சயம்... அறிந்தும் மீண்டும் பின்... இல்லத்தவன் பின் நிச்சயம் எங்கேயாவது... நிச்சயம் யான் சென்று.. ஏதாவது கொண்டு வந்து இவந்தனுக்கு உணவை ஊட்டுவேன் என்று.. நிச்சயம் அறிந்தும் கூட. 

இதனால் பின் அதாவது.. எதையெதையோ?? எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் இதை என்று புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் ஒரு அழகாக ஒரு பசுவும் கன்றும் கூட அவந்தனக்கு தென்பட்டது.

நிச்சயம் தன்னில் கூட சரி!!
பின் இவ் நடு இரவில் எங்கு தேடுவது????

நிச்சயம் இவ் பசுவிடம் சென்று.. நிச்சயம் அறிந்தும் கூட பின் பாலை எடுத்து நிச்சயம்... அக்குழந்தைக்கு கொடுப்போம் என்று. 

நிச்சயம் பாலை பின் அழகாகவே அறிந்தும் கூட.. அதாவது யாரும் இல்லையே என்று!!

ஆனாலும் நிச்சயம் அன்னத்தை நிச்சயம் அளிக்க வேண்டும் அனைவருக்கும்!! பின் அனைவரும் பசியாற வேண்டும் என்பதே இவனுடைய குறிக்கோளாகவே!!!

இதனால் அழகாகவே பின் அதாவது பின் பசுவையும் கன்றையும் கூட நிச்சயம் வணங்கிட்டு... அறிந்தும் கூட!!

பின்!! ஒரு பாலகன் வந்திருக்கின்றான்!! என் இல்லத்திற்கு!!!

பின்... யான் ஏதாவது தவறு செய்திருந்தால்.. மன்னித்து அருளிட வேண்டும். நீங்கள் நிச்சயம் பின்  பாலை. தாருங்கள் என்று அறிந்தும் அங்கேயே பல வழிகளிலும் கூட... எதை என்று அறிய. பசுவை வணங்கி!!!

ஆனாலும் எதை என்று அறிந்தும் கூட இதனால் அழகாகவே சரியாகவே.. பின் அதாவது இலைகளை மடித்து (பாத்திரம் போல்) பின் பாலை கறக்க!!!


ஆனாலும் அதற்குள்ளே ஓடோடி வந்து விட்டார்கள்!!

திருடன் வந்து விட்டான்! திருடன் வந்து விட்டான்! என்று!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் பிடியுங்கள் இவனை... இவன்தான் பின் அனைத்தும் திருடிக் கொண்டிருந்தானா!? என்று!!

ஆனாலும் நிச்சயம் அனைவரும் பல ஊர்களில் இருந்து... அறிந்தும். 

அப்பொழுதெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும்.. பின் ஒருவர் ஏதாவது செய்தால்... நிச்சயம் அப்படியே பரப்பி விடுவார்கள்.. பின் ஊர் ஊராகச் சென்று.. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நிச்சயம் இவந்தன்... இப்படி அன்னத்தை ஈந்து கொண்டிருக்கின்றானே!!!... இவன் மகா பெரிய திருடன்!!

நிச்சயம் இவ்வாறுதான் அனைவரின் இல்லத்திலும் திருடி திருடி இவன் நிச்சயம் பின் இவ்வாறெல்லாம் பின் அதாவது அன்னத்தை ஈகின்றேன் !!அன்னத்தை ஈகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான்.. திருடித் திருடி அனைவருக்கும் கொடுத்தானா!??? என்று!!

நிச்சயம் இவனை நல்லோன்!(நல்லவன்) என்று நினைத்தோமே என்றெல்லாம்!!

இன்னொருவன் இவனை பக்தன் என்று நினைத்தோமே என்றெல்லாம்..

நிச்சயம் அறிந்தும் கூட இதனால் பின் அதாவது நிச்சயம் அறிந்தும் கூட அதாவது ஒரு மரத்தடியில் கட்டி வைத்தனர் இவனை. 

நிச்சயம் பின் யார் யாருக்கு?? என்ன? ஏது? என்றெல்லாம் அடித்து இவனை இங்கேயே சாகடியுங்கள் என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய. 

ஆனாலும் பின் இதை உணர்ந்தாள் (அறிந்தாள்) இல்லத்தரசி. 

பின் ஓடோடி வந்து... பின் மகனே...(பாலகன் ரூபத்தில் வந்த ஐயனை பார்த்து) நீ இங்கேயே நில்லும்!!

ஏதோ ஒரு சிக்கல் இருக்கின்றது என்றெல்லாம்... நிச்சயம் உந்தனுக்காக நிச்சயம் பின் அதாவது.. உணவு இருக்கும். 

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் யான் சென்று வருகின்றேன் என்று. 

ஆனாலும் அதற்குள்ளே நிச்சயம்... அறிந்தும் கூட கற்களை கூட அவன் மீது வீசி... பின் எதை எதையோ செய்து பின் காறியும் துப்பி நிச்சயம்... அறிந்தும் கூட. 

அப்பெண்மணியும் ஓடோடி வந்தாள்!!! அறிந்தும் கூட!! ஆனாலும் அனைவருமே பின் இப் பெண்மணியும் திருடி தான்!! நல்லோள் (நல்லவள்) போல் நடித்து.. நிச்சயம் அன்னத்தை ஈகின்றேன் என்று... நிச்சயம் எங்கே எங்கேயோ திருடி கொண்டு இப்படி செய்திட்டார்களே பின் எங்கு? அறிந்தும் எதை என்று கூட... இறைவா!! என்று!!

ஆனாலும் அப் பெண்மணி இறைவனே!!!!
பின் யாங்கள் அப்படி இல்லை... அதாவது என் இல்லதரசன் இப்படி நிச்சயம் செய்திருக்க மாட்டான்.. நிச்சயம் அறிந்தும் என்று. 

ஆனாலும் அவர்களும்  யாங்கள் பார்த்தோம்!!! அதனால் தான் கட்டி வைத்தோம் என்று!!

ஆனாலும் இல்லத்தரசியோ... ஐயனே!!! அறிந்தும் கூட!!! இப்படி ஒரு சோதனையா????

யாங்கள் என்ன குற்றம் செய்தோம்??!

பின் ஏன்?? எதற்கு இப்படி?? உன்னையே நினைத்து தவங்கள் செய்து கொண்டிருந்து உன்னையே நினைத்துக் கொண்டிருந்து.. அன்னத்தை பின் அனைவருக்கும் ஈந்தது தவறா???

அறிந்தும் உண்மைதனை கூட எப்படி?... ஏது? என்றெல்லாம்!! நிச்சயம் தன்னில் கூட பின்...

 அதாவது பின் சபரி ஈஸ்வரனே!!!!... அறிந்தும் கூட வா!!!

நிச்சயம் தன்னில் காப்பாற்ற வா!!! என்றெல்லாம்!!!

ஆனால் மற்றவர்களோ நிச்சயம் யாங்களும்... மணிகண்டனின் பக்தர்கள். 

என்ன அறிந்தும் கூட... நீங்கள் அழைத்தால் மணிகண்டன் வந்து விடுவானா???

யாங்களும் அன்னத்தை ஈகின்றோம் யாங்களும் பல பக்திகளை காட்டியுள்ளோம்.. அதனால் மணிகண்டன் உங்கள் அழைப்பிற்கெல்லாம் வரமாட்டான்... என்று..

நிச்சயம் அப்பனே இப்படித்தான் பக்தி இன்றளவு இருக்கின்றதப்பா!!!

நம்பிக்கை இல்லையப்பா!!

அப்பனே நிச்சயம்... நம்பிக்கை இருக்க வேண்டும்!!!

நிச்சயம் அறிந்தும் கூட..அவ் நம்பிக்கை அப்பனே சில பேர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

பல பேர்களிடம் அப்பனே இருப்பதே இல்லை என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே.....

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... இறைவனை நெருங்க நெருங்க அப்பனே... சில கஷ்டங்கள் வருமப்பா!!!

அக்கஷ்டங்களை எல்லாம் பின் தாண்டி வந்தால்தான் அப்பனே... நிச்சயம் தன்னில் இறைவன் சோதிப்பது அப்பனே நிச்சயம்... நீங்கள் தேர்வில் அதாவது அப்பனே பெரிய இடத்தை பின் வகிக்க வேண்டும் என்றால்... அப்பனே தேர்வில் அப்பனே நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான்.. உயர் பதவிக்கு அப்பனே. 

ஆனால் இப்படியே சாதாரணமாகவே.... இப்படியே என்றால் அப்பனே... இறைவனிடத்தில் அப்பனே பின் செல்வது அதாவது அவ்வளவு சுலபமா???

அப்பனே ஆனால் இன்றளவு மனிதன் சுலபமாகவே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!

ஆனால் இவர்கள் அப்பனே நிச்சயம் பல வருடங்கள்.. அப்பனே அன்னத்தையே.. அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட கொடுத்துக்கொண்டு!! கொடுத்துக்கொண்டு!!

இதனால் அப்பனே எப்படியெல்லாம்... நிச்சயம் அப்பெண்மணியும் கூட... தனி ஒருவளாகவே போராடினாள்.

நிச்சயம் விட்டு விடுங்கள்!!! பின் இன்னும்... அவனை கல்லால் அடித்தால் இறந்து விடுவான் என்று நிச்சயம். 

நீயும் இறந்து விடு!! என்று பெண்மணியை பார்த்தும் அவர்கள் நிச்சயம் இவ்வாறு திருடர்களாக நீங்கள் இருப்பதெல்லாம் எதற்கு??? நீயும் இறந்து விடு என்று! 

ஆனாலும் அப்பனே அதாவது அவர்களும் ஐயனின் பக்தர்கள் தான் அப்பனே. 

ஆனாலும் ஒருவர் கூட உணரவில்லையே அப்பனே 

அப்பனே எங்கப்பா?? தர்மம்??

அப்பனே இதுதான் அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே.... நிச்சயம் யோசிக்க மாட்டான் அப்பனே மனிதன் அப்பனே. 

சரியா? தவறா? என்று யோசிக்காமல் உடனடியாக பேசி விடுவான் என்பேன் அப்பனே!!

எப்பொழுதும் யோசித்துப் பேச வேண்டும் அப்பனே. 

உங்களுக்கும் கூட சொல்கின்றேன் அப்பனே. 

இது சரியா??? தவறா??? என்றெல்லாம் அப்பனே பின் ஒரு முறை அல்ல!!! பலமுறை யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் அனைத்திற்கும் காரணம் ஆக இறைவன் இருக்கின்றான். 

அதனால் நிச்சயம் அறிந்தும்... இதன் தன்மையைக் கூட...

இதனால் அப்பனே ஒவ்வொருவரும் கூட யோசித்து அப்பனே நிச்சயம் பேச்சை பேச வேண்டுமே தவிர... அப்பனே ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டு!! உளறிக்கொண்டு!! அப்பனே அப்பொழுது பைத்தியம் தான் ஆவீர்கள் என்பேன் அப்பனே! 

அதனால் அப்பனே அதன் மூலம் கூட அப்பனே கர்மா சேர்ந்து விடும் என்பேன் அப்பனே..

பிறர் மனம் புண்படும்படி.. பேசினால் அப்பனே நிச்சயம் பலத்த கர்மா ஏற்படுத்தும் என்பேன் அப்பனே. 

நல்லவனோ??!!... அப்பனே தீயவனோ!???.. அப்பனே பின் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!

அவன் அப்பனே பின் தண்டனை வழங்காதது?? அப்பனே.... நீங்களா!?!? அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூட வழங்கப் போகின்றீர்கள்????

அப்பனே யாங்கள் இருக்கின்றோம் அப்பனே!!!

அப்பனே பழமொழியும் உண்டு... அப்பனே பின் அரசன் அன்று தான் கொல்வான் அப்பனே..

ஆனாலும் அப்பனே யாங்கள் பார்த்து பார்த்து அப்பனே... என்ன தண்டனைகள்??? பின் எதை என்று அறிய அப்பனே!!!

ஆனால் இப்பொழுதெல்லாம் அப்பனே தேவையில்லை என்பேன் அப்பனே. 

இன்னும் அப்பனே வாக்கியத்தில் யான் சொல்கின்றேன் பலமாகவே!!!

இதனால் அப்பனே இன்னும் அப்பனே... யாருமே நம்பவில்லை பின் அதாவது அப்பனே பின் அதாவது... உண்ட வீட்டிற்கு இரண்டகம்.. இன்னும் அதாவது துரோகம் என்கின்றார்களே... பின் அவர்களும் கூட... பின் அதாவது இப்படித்தானப்பா!!! போட்டி பொறாமைகள் அப்பனே இருந்து கொண்டே... அப்பனே பின் அறிந்தும் கூட!!

அவர்கள் கூட இவர்கள் திருடர்கள் என்று... பின் ஆனால்...அவ் பெண்மணியோ நீங்கள் கூட.. பின் யாங்கள் என்ன தவறு செய்தோம்??? எவ்வளவு கஷ்டங்கள் பட்டுப் பட்டு அறிந்தும் கூட இவ்வாறு செய்தோம் என்று. 

ஆனாலும் சரி.. எங்களுக்கு யாருமே உதவவில்லை... நிச்சயம் அறிந்தும் கூட பின்.. ஐயன் தானே!!!


பின் ஐயனே!!!!!.........
உன்னை கூட அறிந்தும்.. எதை என்று கூட... குழந்தையாக யாங்கள் ஏற்றுக் கொண்டோமே!!! உன்னையே நினைத்து!! நினைத்து!!! பக்தர்களுக்காக சேவைகள் செய்தோமே!!!

எங்களுக்கு ஏன் இந்த நிலைமை ???  என்றெல்லாம்!!!...அப் பெண்மணியும் கூட!!!

ஆனாலும் பின் ஆனாலும் நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் நிச்சயம் ஐயனே!!!!

அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் சிரித்துக் கொண்டே வந்தான் நிச்சயம்.. அறிந்தும் பின். 

ஆனாலும் நிச்சயம் பலரும் கூட... இக்குழந்தை யார்.????

நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் பல பேர்.... இவர்களுக்கு குழந்தையே இல்லையே!!!
பின் முறையில்லாமல் பிறந்து விட்டதா... என்றெல்லாம் (தவறாக பேசினர்) பல பேர்களப்பா!!!!! அப்பப்பா!!! இதுதான் வேதனைக்குரியது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தான் ஐயன் என்பேன் அப்பனே. 

இதுதான் இறைவன் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அனைத்தும் அப்பனே நீங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சகித்துக் கொண்டு இருக்கின்றான் இறைவன் அப்பனே!!!

ஆனால் உடனடியாக தண்டனைகள் கொடுத்து விட்டால் அப்பனே!!! உலகத்தில் ஏதப்பா?? நியாயம்!!??

(இறைவன் தான் தீர்மானிப்பார் தண்டனைகள் எப்பொழுது எப்படி என்ன என்று!! மனிதர்களால் எது சரி எது தவறு எப்படி தண்டனை என்று வழங்கினால் அது நியாயமாகாது இறைவனுக்கு தெரியும் என்ன செய்வது என்று)



இதனால் அப்பனே மனிதன் தான் உடனடியாக கொடுப்பான்!!

ஆனால் இறைவனோ அனைத்திற்கும் சேர்த்து ஒன்றாக... எங்கு பின் அடித்தால்... பின் அடிவாங்கும் இடம் அப்பனே.. பலமாக இருக்கும் என்பதெல்லாம்.. அப்பனே. 

இதனால் ஐயன் பார்த்துக்கொண்டே!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் மாற்றத்தை எதை என்று அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட... பின் தவறாகவே பேசினார்கள் என்பேன் அப்பனே ஐயனையே!!

ஆனாலும் அப்பனே இதில் கூட ஐயன் பக்தர்கள் என்பேன் அப்பனே... ஆனாலும் அப்பனே யாருக்குமே புரியவில்லையே!!!

எப்படியப்பா?? புரியும்!!! மாயை வலையில் சிக்கிக் கொண்டால்... அப்பனே இறைவன் நேரில் வந்தாலும் அப்பனே நிச்சயம்... எதை என்று அறிய அறிய.. பின் எவை என்று கூட.. பின் எவை என்று புரியாமலும் போய்க்கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே. 

அதனால் தான் அப்பனே இறைவன் பின் இறைவனை அப்பனே பின் அதாவது வணங்கினால் அப்பனே நிச்சயம்... அப்பனே ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் அப்பனே சிறிது நேரமாவது அப்பனே ஆத்மார்த்தமாகவே அப்பனே நிச்சயம்... எதையும் மனதில் நினைக்காமல் இறைவனை மட்டும் நினைத்து வணங்க வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பொழுதுதான் அப்பனே இறைவன் சென்று கொண்டிருக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் தெரியுமப்பா.

அப்படி இல்லையென்றால் அப்பனே... கடைசி வரை அப்பனே நீங்கள்... உங்கள் மனதை எங்கோ?? வைத்துக் கொண்டு!!... இறைவனை தேடு!! தேடு என்றால் அப்பனே அப்படியே தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே.

இதனால் அறிந்தும் கூட இதனால் அப்பனே... ஐயன் தன் சுயரூபத்தை காட்டினான். அப்பனே ஐயன்... நிச்சயம் தன்னில் கூட!!

இவை எல்லாம் நிச்சயம் பின் ஏதாவது... என்னை உங்கள் பிள்ளையாக ஏற்றுக் கொண்டீர்களே.. நிச்சயம் தன்னில் கூட என்னை... இப்படியா?? என்றெல்லாம் கட்டித்தழுவி யான் தான் ஐயன் என்று.. தன் சுய ரூபத்தை காட்டினான் நிச்சயம் அறிந்தும் கூட. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் கருணை வடிவானவன் ஐயன் என்பேன் அப்பனே. 

பின் அனைவரும் கூட ஓடி ஓடி வந்து... அப்பொழுது பின் ஐயனே!!! நீங்களா??? அறிந்தும் எதை என்று கூட எங்களை மன்னித்து விடுங்கள்!! மன்னித்து விடுங்கள் என்றெல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் பின் அப்படியே மோட்சத்திற்கு பின் அழைத்து சென்றுவிட்டான்..அவ் இருவரையும் கூட. 

அப்பனே இன்னும் அப்பனே ஐயனின் லீலைகள் அப்பனே சொல்லிக் கொண்டே.. இருப்பேன் அப்பனே நிச்சயம்..

இவ்வாறு சொல்லிக் கொண்டு உங்களுக்கு பக்குவங்கள் பிறந்தால்தான் அப்பனே.. அனைத்தும் உணர முடியும் என்பேன் அப்பனே. 

பக்குவங்கள் இல்லை என்றால் எதைச் சொல்லியும் பிரயோஜனமில்லை என்பேன் அப்பனே. 

முதலிலே அவை நடக்கும் இவை நடக்கும் என்றெல்லாம் அப்பனே அதனால் அப்பனே அனைத்து சக்திகளும் மனிதரிடத்திலே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.

அவை சரியாக இயக்க அப்பனே முதலில் அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 

சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

பின் பெரிய பெரிய படிப்பிற்கு அப்பனே பெரிய பெரிய பின் யோகங்கள் அப்பனே பின்.. அறிந்தும் கூட அப்பனே பின் செல்ல அப்பனே நிச்சயம்... முதன்மை பாடத்தை இரண்டாம் பாடத்தை எல்லாம் அப்பனே நீங்கள் கற்று வந்தால் தான் அப்பனே... அடுத்தடுத்த உயர் பதவிகளும் கூட வகிக்க முடியும் என்பேன் அப்பனே. 

மனிதன் இப்பொழுது என்ன எண்ணுகின்றான்??? என்றால் அப்பனே உடனடியாக.. அப்பனே மேற்பதவிக்கு சென்று விட வேண்டும் என்று!!!

அப்படி எல்லாம் ஆகாதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

யாங்கள் கொடுத்த தேர்வில்... அப்பனே முதலில் நீங்கள் மதிப்பெண்கள் பெற்று அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட சரியான மதிப்பெண்கள்.. அதிகமான மதிப்பெண்கள் பெற்று.. அப்பனே நிச்சயம் வந்தாலே...யாங்களே வாக்குகள் சொல்வோம் என்பேன் அப்பனே. 

ஆனால் நீங்கள் அனைவருமே பூஜ்ஜியம் தான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் ஒரு அப்பனே இரண்டு அப்பனே நிச்சயம் சதவீதம் கூட.. எடுக்கவில்லையே?? அப்படி எப்படி அப்பொழுது... எப்படியப்பா??? உங்களை மறு வகுப்பிற்கு யாங்கள் அழைத்துச் செல்ல முடியும்????????????

அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே மூடநம்பிக்கைகளில் இருந்து விடாதீர்கள். 

அதனால்தான் சித்தர்கள் வந்து வந்து அப்பனே நிச்சயம் !!!


ஆனால் இன்றையளவில் அப்பனே சித்தர்களை பின் அதாவது இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் ஏமாற்றி!! ஏமாற்றி!!! காசுகளுக்காகவே அப்பனே பின் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அவை தன் கடைசியில் அடித்தால்.. நோய்களாகவே நிச்சயம் குடும்பத்திற்காகவே அவனவன் செய்த அவர்கள் பின் தண்டனைகள் நிச்சயம் அவனவன் சரியான பாடத்தை நிச்சயம் அவனவனே அனுபவிப்பானப்பா!!

அவ்வளவுதான் அப்பனே 

ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே அனைவருக்குமே ஆசிகள் என்பேன் அப்பனே!!


(சேவா அமைப்பு நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு) நல்விதமாகவே அப்பனே ஐயனின் அருள்களைக் கூட நீங்கள் பெற்று அப்பனே முன் ஜென்மத்தில் இருந்தே அப்பனே பின் ஐயனின் அருள்களை பெற்றவர்கள் தான் என்பேன் அப்பனே..அது இச் ஜென்மத்திலும் தொடர அப்பனே.. சில மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்துவது உறுதியப்பா. 

கவலையை விடுங்கள் ஆசிகள்!! ஆசிகள்!!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!... அன்னதான பிரபு சபரிநாதன் மணிகண்டன் ஐயப்பன் மற்றும் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஜீவநாடியில் வந்து வாக்குரைத்த இடம் ஹரிஹர புத்திரா அன்னதான சேவா அமைப்பு... இந்த இடத்தில் தான் குருநாத அகத்திய பெருமான் கூறிய சம்பவம் நடந்தது.


 இந்த அமைப்பினை பற்றி விபரங்கள். 

குறிப்பு: விளம்பர நோக்கத்திற்காக அல்ல அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக!!!

மணிகண்ட சேவா ஆசிரமம் என்றும் அழைக்கப்படும் ஹரிஹரபுத்திர சேவா அறக்கட்டளை, மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பாதை வழியாக புனித மலைக் கோயிலான சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் உன்னத நோக்கத்துடன் 2017 இல் பதிவு செய்யப்பட்டது. 

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிலக்கல் அருகே எருமேலி-பம்பா காட் சாலையில் அமைந்துள்ள பல செயல்பாட்டு மையமான மணிகண்ட சேவா ஆசிரமம், தங்குமிட சேவைகள் மற்றும் சுத்தமான சுகாதார வசதிகள் உள்ளிட்ட சுகாதாரமான தங்குமிடங்களை வழங்குகிறது. ஆசிரமத்தின் அதிநவீன சமையலறை தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும், தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இலவச உணவு மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குகிறது. இரண்டு மாத கால வருடாந்திர யாத்திரை முழுவதும் சராசரியாக 8000-10,000 பக்தர்களுக்கும், ஐந்து நாள் மாதாந்திர பூஜை நாட்களில் தினமும்  4000-6000 பக்தர்களுக்கும் ஆசிரமம் உணவு வழங்குகிறது.

ஹரிஹர புத்திரா சேவா டிரஸ்ட் .Narananthodu, Thulappally(P.O, Perunad, Kerala 686510

வலைத்தள முகவரி 

https://www.hariharaputhrasevatrust.org/

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!~

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    சித்தன் அருள் - 1803 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை அடிவாரம்!
    https://siththanarul.blogspot.com/2025/02/1803.html

    Harihara Puthra Seva Trust - Google map link
    https://g.co/kgs/hnyaDCH
    https://www.hariharaputhrasevatrust.org/

    ஓம் அன்னை ஷ்ரி லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.
    சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete