28/1/2025 கும்பமேளாவில் சிவவாக்கியர் சித்தர் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திரிவேணி சங்கமம் பிரயக்ராஜ் உத்தர் பிரதேசம்.
ஆதிக்கு ஆதியான ஆதி குருவை நினைத்து மகிழ்வுடனே வாக்கியன் ஈகின்றேன்.
மண்ணில் இந்த ஈசனை துதித்து துதித்து வழிபடு!!
மண்ணில் இந்த ஈசனை துதித்து துதித்து வழிபடு!!
எத்துன்பம் ஆயினும் வந்தாலும் துதித்து துதித்து வழிபடு!!!
எத்துன்பம் வந்தாலும் துதித்து துதித்து அன்புடனே பணிந்திடு!!!
ஈசனே!! இல்லையென்றால் இவ்வுலகில் ஏதுமில்லை அறியேனே...
ஈசன் இல்லையென்றால் இவ்வுலகத்தில் ஏதும் இல்லையடி!!!
ஈசனை நினைத்து நினைத்து வாழ்ந்தோர் கோடி கோடி!!!
பின் துன்பம் ஆயினும் கடைசியில் இன்பம் வருவதே சிறப்பு!!!
ஈசனே உன் பாதம் தொழுதேனே...!!! தொழுதே பல தவங்கள் செய்தேனே!!!!!!.
கடைசியில் நான் யார்? என்று உணர்வதற்கு ஆள் இல்லையே !!!
உனை நினைத்து நினைத்து பின் வந்தாலும் !!!......
கடைசியில் என்னில் நீ பாதி என்றவனே!!!
மண்ணில் இந்த உலகத்தையே படைத்து படைத்து பின் காக்கின்றவனே!!!
இருளிலும் முதுமையிலும் கூட பின் வணங்கியவர் எல்லாம் நிச்சயம் பூந்து அழி தன்னில் கூட.....!!!
அழிவுகாலம் என்ற போதிலும் நிச்சயம் தன்னில் பின் அழகாக காத்து நிற்கும் பின் சித்தனே!!!
சிவ சித்தனே!!!
எங்கெங்கோ? தேடினும் யாங்கள் வந்து பின் அறிந்தும் கூட உன்னை அறிய முடியவில்லையே !!! ஈசனே!!!
அறிய முடியவில்லை ஈசனே!!
பல தத்துவங்கள்!!! பல சாத்திரங்கள்.. பல பல பின் சக்திகள் இருந்தாலும்!!!!
ஈசனே!! உன்னையே தேடி தேடி உங்களை நிச்சயம் எங்களால் உந்தனை கண்டு கொள்ள முடியவில்லையே!!! ஈசனே !!!
ஈசனே !! ஈசனே!! ஈசனே!! எம்மை வந்து அழகாக ஆட்கொள்ளும் ஈசனே !!!
பின் ஈசன் எங்கு இருக்கின்றான்? என்று பல தவங்கள் செய்து செய்து நிச்சயம் தன்னில் கூட முடியவில்லையே!!!
அழுது கொண்டே!!யான் அன்பான ஈசனே!!! எங்கு இருக்கின்றாய் நீ? என்று கூறுகின்ற பொழுது..!!
கண்ணீரில் ஆழ்ந்து ஆழ்ந்து... ஆனந்தக் கண்ணீரில் இருக்கின்ற பொழுது..
உடனடியாக வந்து நீயும் என்னுள் பாதி என்று சொன்னவனே!!!
அப்படித்தான் சித்தர்கள் அனைவரையும் அணைத்து கொண்டவனே!!!
முதல் சித்தனே!!!
உலகத்தின் நாயகனே!!!
பின் ஊழிக்காலம் என்ற போதிலும் மனிதனால் அறிய முடியவில்லையே
ஈசன் யார் என்று!!!
அடி முடி காணாத அண்ணாமலையில் கூட...
இங்கு பின் ருத்ராட்சங்கள் அணிந்தாலும்.. நமச்சிவாயா!! என்று அழைத்தாலும் உன்னை அறிந்து கொள்ள முடியவில்லையே!!! மனிதன் அறிந்து கொள்ள முடியவில்லையே!!!
அதனால் பின் கஷ்டங்கள் வந்து வந்து எவை என்று அறியாமல் இருந்தாலும் இறைவன் என்று இல்லை என்று சொல்கின்றானே!!! சொல்கின்றானே!!!
அனைத்தும் அறிய முடியவில்லையே மனிதனால்!!
எப்பிறப்பு பிறப்பு எடுத்தாலும்!!! எதற்காக? பிறப்பு என்று அறிய முடியாத போதிலும்!!
உனை எப்படி உணர்வார்??? சிவபெருமானே!!
ஆனந்த சந்தோஷத்தில் யாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோமே!!!
வந்து உள்ளோமே!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்??? இதுபோல் வரும் என்று தெரியவில்லையே!!! தெரியவில்லையே!!!
அனைத்தும் சித்தர்கள் உணர்ந்தாயினும் கூட பின் !!....
அனைத்தும் ஈசன் என்று!!!
யாங்கள் சொல்வோமே!!
யாங்கள் கடைசி வரை சொல்வோமே!!
ஏனென்றால் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி ஈசனே!!!! ஈசனே!!!
அதனால் வந்து வந்து பின் எத்தனை உனை தன் எத்தனை உனை தன் அபிஷேகங்கள் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும் உனையே அறிந்து கொள்ள முடியவில்லையே!! சிவபெருமானே!!
என்னில் பாதி உன்னில் பாதி இருப்பவனே!!
இருந்து கொண்டும் பின் இயக்குபவனே!!
அன்னையே!! பராசக்தி ஆதி பராசக்தியே!!
உமை அம்மையே!! உமை அம்மையே!!!
பல ரூபங்கள் எடுத்தாலும் எந்தன் ஈசன் ஒருவனே!!
நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!!!
நமச்சிவாயனே!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDeleteஓம் சிவாய நம ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete