​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 10 February 2025

சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்!






07/08/2024 அன்று பெங்களூரு சத்சங்கத்தில் கந்தர் அனுபூதி ரகசியம் குறித்து குருநாதர் உரைத்த வாக்கு!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! பெங்களூரு சத்சங்கத்தில்... தேடல் உள்ள தேனீயாய் தேடிக் கொண்டே இருக்கும் பக்தருக்கு கூறிய வாக்கில் கந்தர் அனுபூதி சிறப்பு மற்றும் ரகசியம் இவற்றையெல்லாம் குருநாதர் கூறி நிச்சயம் இந்த அனுபூதியை அனைவரும் பாடிக்கொண்டே வரவேண்டும்.. அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் சொல்லி தெரியப்படுத்த வேண்டும் என்று  உத்தரவு தந்தார்.

 அந்த வாக்குகள் மற்றும் உரையாடல்களின் தொகுப்பு. 


அப்பனே!! எவை என்று அறிய அறிய சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!

அன்பு தான் மூலாதாரம் என்பேன் அப்பனே.. இவை எவை என்று அறிய அறிய அப்பனே அன்பாலே.. அப்பனே பார்த்தாலே யான் ஓடோடி வந்து அப்பனே அனைத்து குறைகளையும் நீக்குவேன் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் அப்பனே அவை என்று அறிய அறிய ஓடோடி வந்தாயல்லவா அப்பா.. எதை என்றும் அறிய அறிய ஒரு பாடலை பாடு!!

என்று குருநாதர் அந்த அடியவருக்கு கட்டளையிட்டார். 


அடியவர். 

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை நீங்காதோர் குலம் தழைக்க நிதியாவானைச் செஞ்சொலி வயற்பொழில்சூழ் தில்லை மூதூர்ச் சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை வெஞ்சாபமுமில்லை ஒரு வினையுமில்லை வேலுண்டு துணை வருங்கால் வெற்றியுண்டாம் அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும் அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

அகத்திய மகரிஷி நம என்றென்றோது அஷ்ட சித்துதனை ஈவார்
 குளிகை ஈவார் அகத்தியரே காஷாய வேட மீவார் அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள் அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல யாருக்கும் தடையில்லை அரசே யென்பார் அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி ஆயிரத்தெட்டு அண்ட மெல்லாம் ஆணையாச்சே.

ஓம் ஸ்ரீம் ஓம்
சற்குரு பதமே
சாப பாவ விமோசனம்
ரோக அகங்கார துர் விமோசனம்
சர்வ தேவ சகல சித்த
ஓளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம!!


திருவள்ளுவர் ஞானத்திலிருந்து ஒரு பாடலை பாடுகின்றேன் குருநாதா!!! என்று அடியவர் மீண்டும் !!!

அண்டம் பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி!
அகண்டம் பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவி மதி சுடரே போற்றி!
மதுர தமிழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி!

என பாடிவிட்டு கந்தர் அனுபூதியை குருநாதர் சுவடி முன்பு பாட தொடங்கினார்.

முருகா!! முருகா!! முருகா !!:முருகா!! முருகா!! முருகா !!

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்!!

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே!!

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே!!

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே!!

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!!


என கந்தர் அனுபூதியில் முதல் நான்கு செய்யுள்களையும் பாடிவிட்டு குருநாதரிடம் முழுவதும் பாட முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன் குருநாதா!!! என்று கூறிவிட்டு !!.....

கந்தர் அனுபூதி யின் கடை பாகமான 51 வது செய்யுளான

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

என்று மனமுருகி பாடினார்.


குருநாதர். அகத்தியர் பெருமான்!!

அப்பனே!! பின் எவை என்று அறிய அறிய முருகனை பாடி அப்பனே.. முதலில் இதைப் பாடினாலே அப்பனே அவந்தனுக்கு சந்தோஷங்களப்பா!!!

அப்பனே பின் இதை பாடினாலே அவந்தன் அப்பனே அமைதியாக நிற்பானப்பா!!!

அப்பனே பின் காதுகளால் கேட்பானப்பா.. முருகன்!!!

இதைத் தன் நிச்சயம் நீ அனைவருக்கும் சொல்லிக் கொடு அப்பனே இப்பாடலை!! (கந்தர் அனுபூதி) 
எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் நிச்சயம் அனைவரின் வாழ்வில் அப்பனே பின் ஒளி வீசும் பொழுது.. புண்ணியம் கூட உங்களை சேரும் என்பேன் அப்பனே. 

இதனால் பின் நீங்கள் விரும்பியதை கூட அப்பனே அதாவது.. உன் இல்லத்தில் உள்ளாளே!! அவள் தனக்கும் கூட எம்முடைய ஆசிகள் என்பேன் அப்பனே.

கந்தனுடைய அனுக்கிரகங்கள் பரிபூரணம் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நீ இப் பாடலை அனைவருக்கும் பின் கொண்டு சேர்க்க வேண்டும் !! அப்பனே .

இதுதான் உன்னுடைய வேலை என்பேன் அப்பனே. 


இவ்வாறு எதை என்றும் அறிய அறிய அப்பனே 

ஆடும் பரி வேல் அணி சேவல்... என்று அப்பனே பணிந்து.. அப்பனே பல நபர்களுக்கு எடுத்துச் சென்றாலே.. உன் தரித்திரம் இப்பிறப்பில் நீங்குமப்பா!!! அதாவது கர்மா நீங்குமப்பா! 

முருகன் அப்பனே உந்தனுக்கு அனைத்து ஆசிகளும் கொடுப்பானப்பா!! அப்பனே. நிச்சயம் நீ விரும்பியதை எளிதில் அடைந்து விடலாம். 

அது மட்டும் இல்லாமல் அப்பனே சிலசில எவை என்று அறிய அறிய அப்பனே பின் நோய்களும் கூட எவை என்று அறிய அறிய முருகனே தீர்த்து வைப்பானப்பா!!

 அப்பனே அவை மட்டுமில்லாமல் நீயும் அப்பனே பின் உன் இல்லத்தவள் எவை என்றும் அறிய அறிய அப்பனே பழனி தனக்கு சென்று நல் விதமாக அப்பனே எவை என்று அறிய அறிய அங்கு இருக்கும் பின் (பழனி தசாபாஷண முருகன் சிலை மீது சாற்றும்)

 சந்தனத்தை அப்பனே அனுதினமும் உண்டு கொண்டே வாருங்கள் என்பேன் அப்பனே!! முருகன் அனைத்தும் பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே!

 இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்றும் புரிய புரிய.. முன் ஜென்மத்தில் வந்தவை எவை என்று அறிய அறிய அப்பனே !!!

முருகன் எவை என்று அறிய அறிய முருகனின் பல பாடல்களை கூட அப்பனே போற்றித் துதித்து அப்பனே எவை என்று கூட இப்பாடலை அப்பனே யான் எடுத்துச் செல்வேன் என்று முருகப்பெருமானிடம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய திருச்செந்தூரிலே அப்பனே நீ சபதம் ஏற்றாய் அப்பா.முன் ஜென்மத்தில்!!


 ஆனாலும் இப்பிறவியில் நீ மறந்து விட்டாயாப்பா.

 இதனால் தான் அப்பனே பல துன்பங்கள் அறியாமல் எங்கு சென்றாலும் அப்பனே பின் தீரவில்லை என்பேன் அப்பனே.. எவை என்று புரிய புரிய!!!

 இதனால் அப்பனே... இப்பாடலை அனைவருக்கும் தெரிவித்து.. அனைவரையும் பாட வைக்கச் செய்.. எதை என்றும் அறிய அறிய அப்பனே... இன்னும் நான்கு வரிகள் பாடு முதலில்!!!

என்று குருநாதர் கட்டளையிட்டார். 


அடியவர்.!!

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.

அப்பனே எவை என்றும் புரிய புரிய... அப்பனே புரியாமல் அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட பின் உன் பிறவியின் ரகசியம் அப்பனே சேவைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே முருகனிடம் திருச்செந்தூரில் அப்பனே எவையென்று அறிய அறிய அப்பனே நீ பல பிறப்புக்கள் கடந்து கடந்து அப்பனே பின் எவை என்று அறிய வந்தாலும் ஒரு பிறப்பில் எவை என்றும் அறிய அறிய அப்பனே... முருகா !!! யான் எந்தனுக்கு எப்பொழுது கடைபிறப்பு எடுக்கின்றேனோ!?!?! அப்பொழுது அப் பிறப்பில் உன்னை பாடியே யான் எவை என்று கூட வாழ வேண்டும்...

எனக்கு எதுவும் தேவையில்லை!! நீதான் வேண்டும்!! எப்பொழுதும் உன்னை துதிக்க வேண்டும் என்றெல்லாம் அப்பனே அவனிடத்தில் வேண்டி வேண்டி!! வேண்டி!!வந்தாயப்பா!!! எதையென்றும் அறிய அறிய!!!


 ஆனாலும் முருகன் அப்பனே எதை என்று புரிய புரிய பின் நிச்சயம் கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய சொந்த பந்தங்கள் இல்லாமலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய இல்லாள் துணை இல்லாமலும் நீ வாழ முடியாது என்பதற்கிணங்க...!!


 முருகா நிச்சயம் எந்தனுக்கு கொடுத்து விடாதே!! யான் எவை என்றும் புரிய புரிய.. எதையும் கொடுத்து விடாதே!!  மாயையில் பின் சிக்க வைத்து விடாதே!!!

 அதில் பின் சிக்கி விழுந்தால் நிச்சயம் யான் அறிவேன் பல பிறவிகள் கூட பின் ஏதாவது பின் மனைவி பின் உற்றார் உறவினர்.பின் பிள்ளைகள் என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவர்களெல்லாம் கொடுத்துத்தான் இந் நிலைமைக்கு எதை என்று அறிய அறிய அவர்களால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை அதனால் கொடுத்து விடாதே!! முருகா !!முருகா!! என்றெல்லாம் செந்தூரிலே!! அப்பனே முருகனின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு..

ஆனாலும் நிச்சயம் யானே கொடுப்பேன் என்று பின் முருகன் எவை என்றும் அறிய அறிய. 

ஆனாலும் முருகா!! வேண்டாம்!! என்றெல்லாம் நிச்சயம்... உந்தனை இதனால் வரை பல பிறப்புக்கள் எடுத்து எடுத்து உன் பக்தனாகவே இருந்திருக்கின்றேன்.. அதற்காகவாவது நீ உதவி செய்ய வேண்டும் என்று. 

பின் முருகன் சரி!! என்று ஒத்துக் கொண்டான்!! என்பேன் அப்பனே! 

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய உன் பிறவி பின் சேவைக்காகவே வந்தவை என்பேன் அப்பனே. 

ஆனாலும் நீ எதை செய்து கொண்டிருக்கின்றாய்.. என்று பார்!! எவை என்றும் புரிய  புரிய ஆனாலும் அப்பனே.. பின் ஏதோ குடும்பம் கொடுக்க வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே நிச்சயம் முருகப்பெருமான் நிச்சயம் உந்தனக்கு திருமணம் செய்து வைத்தான் என்பேன் அப்பனே!!

 அதேபோல் முருகனும் அப்பனே என்ன செய்ய வேண்டும்? என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!

 இப்பொழுது சொல்லிவிட்டாலும்... அகத்திய முனிவரே!!! நீர் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்!!! என்றெல்லாம்..!!!

 அப்பனே முருகன் எவை என்று கூட... என்னிடத்தில் கேள்விகள் கேட்டு வருவானப்பா. 

அதனால் முருகனே உந்தனுக்கு வாக்குகள் அதிவிரைவிலே அப்பனே... !!

முருகன் இன்னும் உரைக்கும் பொழுது உந்தனக்கு புரியும் அப்பா!!

அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய உன் நிலைமை யாருக்கும் எவை என்று அறிய அறிய எங்கு சென்றாலும் அப்பனே உன்னுடைய நிலைமை யாரும் அப்பனே சொல்ல மாட்டார்கள் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே அவை செய் !! இவை செய் இப் பரிகாரம் செய்!! என்பதெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பேன் அப்பனே!

 ஆனாலும் அதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பா.. இதனால் அப்பனே உன் இல்லத்தவளுக்கும் கூட அப்பனே வெறுப்பு ஏற்பட்டு அப்பனே அனைத்தும் பொய் எதை என்று அறிய எதையும் நம்பி விடாதே என்றெல்லாம் அப்பனே. 

ஆனாலும் எதை என்று அறிய அறிய அவள்தன் எனை நம்பிக் கொண்டிருக்கின்றாள் அப்பனே... அவள் தனக்காவது யான் தீர்வுகள் கொடுத்து!!! அப்பனே எவை என்றும் அறிய அறிய முருகப்பெருமான் அருளால் அவள் தன் அப்பனே எதை என்று அறிய அறிய அவள் தன் விருப்பப்படியே நிச்சயம் அப்பனே பின்  முருகப்பெருமான் அப்பனே ஏற்று நடத்துவான் அப்பனே. 

இவ்வாறாக நீ சென்று கொண்டிருந்தால்!!


(எங்கு தீர்வு கிடைக்கும்?? என்று பல்வேறு இடங்களுக்கு மனிதர்களை நம்பி சென்று கொண்டிருப்பதை)


 அப்பனே எவை என்று அறிய அறிய அவள்தனும் கூட உன்னை வெறுப்பாள் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய...

யான் இருக்கின்றேன் நிச்சயம் அப்பனே.!!


. பின் எதை என்று கூட உன்னால் முடிந்தவற்றை செய்..!!


 இன்னும் அப்பனே அங்கும் இங்கும் நீ சென்று கொண்டிருந்தால் அப்பனே ஒன்றும் நடக்காதப்பா.

 சொல்லிவிட்டேன் அப்பனே. 

எவை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே... அவளிடத்தில் (மனைவியிடம்) நீ அடி வாங்க வேண்டியது தான்... அதாவது திட்டி தீர்ப்பாள் என்பேன் அப்பனே..

 எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே உந்தனுக்கு நீயே துணை!!! எதை என்று அறிய அறிய இரு... அப்பனே போதுமானது என்பேன் அப்பனே!!

முருகன் இருக்கின்றான்!!! என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய. 

இதனால் அப்பனே பின் நிச்சயம் யான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!


 இதற்கும்கூட முருகப்பெருமான்... ஏன்?? அகத்தியனே பின் இவ்வாறெல்லாம் நீ சொன்னாய்....?? அவந்தனுக்கே பின் (அடியவருக்கு) புத்திகள் வளரவேண்டும்!! என்பது அப்பனே.. என்று நிச்சயம் எனைக் கேட்பானப்பா முருகன்!!


சொல்லிவிட்டேன் அப்பனே...

 ஏனென்றால் அப்பனே பின் நீ எனையே நம்பி வந்து பின் அங்கும் அங்கும் திரிந்து பின் ஏதாவது நல்லது நடக்குமா? என்றெல்லாம் அப்பனே பின் ஓடோடி வந்தாய் என்பேன் அப்பனே!

அதற்காகத்தான் அப்பனே எவை என்று அறிய அறிய இப்பொழுது கூட வாக்குகளாக உந்தனுக்கு பரப்பிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே!!

எதை என்று அறிய அறிய பல பிறவிகளில் அப்பனே பின் யான் சொல்லியதை அப்படியே பின் எவை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே செயல் அப்படியே செயல்படுத்தி மக்களுக்கு கூட தெளிவு படுத்தினாய் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே இப்பொழுது கூட இந் நிலைமையில் கூட வாக்குகள் செப்பி கொண்டிருக்கின்றேன் அப்பனே.

இதனால் அப்பனே முருகனின் அருள் பரிபூரணம் என்பேன் அப்பனே... 

விதியின் தன்மையைக் கூட அப்பனே முருகன் எடுத்துக் கொண்டானப்பா.. எதை என்று அறிய அறிய !!

இதனால் அப்பனே முருகனின் தீர்ப்பு எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய உங்கள் விருப்பப்படியே முருகன் தான் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே.. நலமாகவே. 

அதனால் முருகன் அனைத்தும் செய்வானப்பா!!!

 பொறுத்திரு!! அப்பனே.!

 எவை என்று அறிய அறிய அப்பனே ஏற்கனவே சில வியாதிகள் வந்து எதை என்று அறிய அறிய பின் நீ படுத்த படுக்கையில் இருக்க வேண்டும்.. என்று விதி. 

ஆனால் அதையும் கூட முருகன் மாற்றி விட்டான் என்பேன் அப்பனே. எவை என்று அறிய அறிய!!!


 அப்பனே ஆனாலும் அது சிறிதளவு தெரியும் அப்பா.. எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய அப்பனே.. ஒரு பத்து சதவீதம் ஆவது. (கஷ்டங்களை)

ஏனென்றால் பின் அதனை அனுபவித்தால் தான் அப்பனே மோட்சமும் முக்தியும் கிட்டும் என்பேன் அப்பனே..!!


 அப்பனே எவை என்று கூட இன்னும் ரகசியங்கள் உங்களுக்கு சொல்ல யான் தயாராக இருக்கின்றேன். 

ஆனாலும் அப்பனே முருகன் பொறுத்திருக.!! அகத்திய மாமுனிவரே !!

எதை என்றும் அறிய அறிய 
இவந்தனுக்கு சில பக்குவங்களை ஏற்படுத்த வேண்டும்... எவை உண்மை?? எவை பொய்?? என்றெல்லாம் தெரிவிக்க வேண்டும்!!  என்பதை எல்லாம் அப்பனே! 

இதனால் அப்பனே பெண் சாபமும் தொடர்ந்து வர அப்பனே அதையும் கூட அவனை முருகப்பெருமான் நீக்கி விட்டான் என்பேன் அப்பனே நல்முறையாகவே அப்பனே !!!

இதனால் கவலைகள் கொள்ளாமல் இரு அப்பனே.

எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய மனிதர்களுக்கு தெரியாதப்பா... எதைக் கேட்டு வந்தோம்?? (பிறவி எடுக்கும் போது)

எதை என்று அறிய அறிய எதை கேட்கின்றோம்?
 (இப்போது பிறவி எடுத்து வந்த பின்)

இவ்வுலகத்தில் என்பதையெல்லாம் அப்பனே! 

அதனால்தான் அப்பனே பின் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே. 

இப்பொழுது நீ என்ன கேட்டு வந்தாய்???

 கடை பிறப்பு எவை என்று அறிய பின் எப்பொழுது இருக்கின்றதோ!? அப்பொழுது எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை!! என்று கேட்டு வந்தாய் அப்பனே. 

ஆனால் இப்பொழுது நீ இருக்கும் நிலை இதுதான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே!!

 அதனால்தான் அப்பனே எவை என்று புரிய அதனால் அப்பனே அவனையே. (முருகனை) எவை என்று அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தன் பாடல்களை கூட பின் நன்றாக பாடிட்டு அப்பனே மக்களுக்கும் கூட இதை தெளிவுபடுத்து..!!

 இதை பாடச் சொல் !! (கந்தர் அனுபூதி) என்பேன் அப்பனே...

பல கர்மங்கள் இதில் நீங்கும் அப்பா..

அப்பனே முருகனுக்கு அப்பனே...இவை பிடித்தமான பாடல் என்பேன் அப்பனே...

அவன் முருகன் மகிழ்வானப்பா!! ஆடுவானப்பா!! அப்பனே சந்தோசத்தில்!!!
 அனைத்து வரங்களும் கொடுப்பானப்பா. 

இதனால் தான் அப்பனே ஒவ்வொருவருக்கும் கூட தனித்தனியான வாக்குகள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதனால்தான் உன்னை வைத்தே இங்கு வாக்குகளை தொடங்கினேன் அப்பனே.

அனைவரையும் பாடச் சொல்!!! அப்பனே 

இப் பாடலை அப்பனே!! மீண்டும் ஒருமுறை பின் எவை என்று கூட.... அனைவரின் காதில் போடு!!! (மீண்டும் பாடு)



அடியவரும் சத்சங்கத்தில் கலந்து கொண்ட அனைவரும் இணைந்து மீண்டும் கந்தர் அனுபூதியை பாடினர். 


குருநாதர் அகத்திய பெருமான்:

அப்பனே இப்பாடலை முருகனை நோக்கி ஏன்.. யார் பாடினார்?? தெரியுமா??


அடியவர். 

அருணகிரிநாதர். 

குருநாதர் அகத்திய பெருமான். 

அப்பனே எதற்கு பாடினார்?? தெரியுமா???


அடியவர். 

அடியவர்:

 அருணகிரிநாதர் பாடினார் என்று சில விளக்கங்களை கொடுக்க!!

குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே எவை என்று அறிய அறிய தெரியுமா?? அப்பனே எவை என்று அறிய அறிய... ஆனாலும் மக்கள் தவறான எண்ணத்தையே  பதித்து வைத்துள்ளார்கள் என்பேன் அப்பனே மனதில்.

அப்பனே ஆனால் உனக்கு தெரிந்ததை கூறு!!!


அடியவர்...

 அருணகிரிநாதர் குறித்து அவர் அறிந்த தகவல்களை கூறினார்.. அருணகிரிநாதர் யாத்திரை சென்றது கூடு விட்டு கூடு பாய்ந்தது கிளி வடிவம் எடுத்தது.. என அவருக்கு தெரிந்த விஷயங்களை கூறினார். 


குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே.. விளக்கம் அதாவது இன்னொரு விளக்கத்தையும் சொல்லப் போகின்றேன் அப்பனே. 

ஏன் எவை என்றும் புரியப் புரிய அப்பனே... இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் (கலியுகம்)வரும் பொழுது தான் கலியுகத்தில். 

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் முருகனிடத்தில் மன்றாடி எதை என்று அறிய அறிய முருகா!!! என் பிள்ளையே!!... என்று அருணகிரி எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் கலியுகத்தில்!!

 யானே அதாவது உன் அடிமையாகவே இருந்தேன். 

ஆனால் யான் பட்ட கஷ்டங்கள். எவ்வளவு?? எவ்வளவு??

எதை என்று அறிய நீயே சொன்னாய் முருகா!!! அறிந்தும் கூட அதாவது பின் நீ என் தந்தை என்று.. பின் அருணகிரியும் கூட முருகனிடத்தில்.. உரையாடலாக...!!

அறிந்தும் கூட ஆனாலும் எந்தனுக்கே!!! இவ்வளவு கஷ்டங்கள் என்றால் கலியுகத்தில் பின் மனிதன் என்ன செய்வான்??

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய... மனிதன் புரியாமல் தவிப்பானே!! முருகா!!!

 இவர்களுக்கெல்லாம் நிச்சயம் ஒரு உபயத்தை உபதேசத்தை கொடு என்று!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய... பின் முருகனும் சொன்னான். 

பின் அருணகிரியே!!!.. எதை என்று நிச்சயம் இவ்வுலகத்தில் அதாவது மனிதனின் பிறப்பு எதை என்று தெரியாமலும் வருந்தியே... பின் வாழ வேண்டும் என்பதே விதி கலியுகத்தில். 

இதனால் அறிந்தும் கூட அருணகிரியும் 

 முருகா!!! முருகா !! முருகா!!
பின் என் பிள்ளையே!!  

ஏன் ? எதற்கு?? இவ் மானிட துன்பங்கள்????

அதனால் பிறப்பு எடுக்காமல் விட்டுவிடலாமே என்றெல்லாம்...

வேண்டாம் !!ஆனால் நிச்சயம் முருகா !! முருகா!! யான் பட்ட கஷ்டங்கள் மனிதர்கள் படக்கூடாது..

இதனால் எப்படி எதை என்று அறிந்தும் கூட. 

ஆனாலும் முருகன் சொன்னான்!!

அப்படியா!!! நிச்சயம் அருணகிரியே!!! நிச்சயம் என்னை தாலாட்டுவதைப் போல் ஒரு பாடலை பாடினால் நிச்சயம் மனமிரங்குவேன் என்று! 

இதனால் அருணகிரிநாதன் பாடினான்....

பின் அதற்கும் முருகன் பின் செவி சாய்க்கவில்லை. 

ஆனாலும் எதை என்று எத்தனை? எத்தனை? (பாடல்கள்)

முருகா!! எப்பொழுதும் நீ என் பிள்ளையே என்று அருணகிரி... பின் யானையின் மீது வந்தான். யானையின் மேல் பாடினான். அறிந்தும் எதை என்று புரிய. 

ஆனாலும் முடியவில்லை!!!

பின் முருகா!! எதை என்று அறிய அறிய... அருணகிரி இன்னும் பல அவதாரங்கள் எடுத்தான்...

.(முருகன் மனமிரங்குவதற்கு பல்வேறு முயற்சிகள்)

 என்னென்ன? எதை என்றும் அறிய அறிய !!


(குருநாதர் நமக்கு கூறும் வாக்கு 

அருணகிரி இப்பொழுதும் கூட அண்ணாமலையில் பார்த்தால் எதை என்று அறிய அறிய பின் ஓர் மலையில்... ஓர் மலை எதை என்றும் அறிய அறிய பின் கிளைகள் எதை என்றும் அறிய அறிய (திருவண்ணாமலை தொடர்ச்சி மலைகள்.) அங்கும் கூட அருணகிரி சுற்றிக்கொண்டே!!!
மக்களை காத்துக் கொண்டே!! இருக்கின்றான். 



மீண்டும் அருணகிரி பாடும் சம்பவம் 

ஆனாலும் இப்படியே பல ரூபங்களில் கூட !! முருகனை பாடினான் !!

பின் ஆனாலும் பார்த்தான் பார்த்தான்.. எதை என்றும் அறிய அறிய..!! முருகன் மனமிரங்கவில்லை!!!

 முருகா!! என்னால் முடியவில்லை என்று. அருணகிரி.

ஆனாலும் முருகா!!! நிச்சயம் பின் அன்னை தன்னில் பாசம் !!எவை என்று அறிய அறிய நீ அன்னை மீது வைத்திருக்கும் பாசம் பின் நிச்சயம் பாடுகின்றேன் என்று நிச்சயம் பின் அண்ணாமலையிலே எதை என்று அறிய அறிய பாடினான். 

அதற்கும் செவிசாய்க்கவில்லை. முருகன். 

பின் அருணகிரி செந்தூருக்கு சென்றான்!! அங்கும் பாடினான்.. முருகன் அதற்கும் செவி சாய்க்கவில்லை. 

பின்பு பழனி தனக்கு சென்றான்.. சென்று பாடினான் இன்னும் எண்ணற்ற திருத்தலங்களில் பாடி பாடி.. எதை என்றும் புரிய புரிய!!
ஒன்றுமே நடக்கவில்லை!!

 பின் அண்ணாமலையில் எதை என்றும் அறிய அறிய பின் அதாவது தந்தையிடம் சென்று அதாவது ஈசனாரிடம் சென்று!!

நிச்சயம் எதை என்று பின் ஈசனாரே!!! நிச்சயம் பின் அதாவது உன் பிள்ளை நிச்சயம் எதை என்று அறிய அறிய பின்... அறிவாளிதான்! 

என்னால் நிச்சயம் சாதிக்க முடியவில்லையே!!

நீ எப்படி சாதிக்கின்றாய்!! ஈசனே!!!!!

 நீயே எந்தனுக்கு ஒரு வாய்ப்பை கொடு!!! என்று !!! எதை எவை என்று அறிய அறிய. 

ஆனாலும் நிச்சயம் ஈசன்!!!

அருணகிரியே!!!!!! பின் அதாவது எதை என்று அறிய அறிய... என் இல்லத்தவளுக்கு..(பார்வதி தேவி) எதை என்று அறிய எதை என்று புரிய... கிளி என்றாலே பிடிக்கும்!!



(அகத்திய பெருமான் நமக்கு கூறுவது)


எதை என்று அறிய இன்னும் கிளி ரூபத்தில் உள்ள பின் எவை என்று அறிய அறிய பின் அவனைப்  பற்றியும் யான் சொல்வேன். 
(சுகர் பிரம்மரிஷியை பற்றியும் குருநாதர் வாக்குகளில் கூற போகின்றார் வரும் காலங்களில்) எதை என்றும் அறிய அறிய! 



இதனால் ஈசனார்!! அருணகிரியிடம் !

அருணகிரியே!!!

 நிச்சயம்  நீ கிளி ரூபம் எடுத்து!!! எதை என்று அறிய அறிய... முருகனை தாலாட்டு. 

இதனால் நிச்சயம் பின் முருகன் மனம் இறக்கி விடுவான். இதனால் நிச்சயம் அனைவருக்கும் ஆசிகள் தந்து விடுவான்.. 

இதனால் சில பாவங்கள் தொலைந்து விடும் என்று. !!

இதனால் அப்பனே பின் அருணகிரிநாதன் பாடினான். 

(முதலில் கிளி ரூபம் எடுத்து ஏனென்றால் பார்வதி தேவிக்கு கிளி என்றால் பிடிக்கும் அதனால் அருணகிரிநாதர் கிளி ரூபம் எடுத்து தேவியின் முன்பாக சென்று பாடினார்)



புரிகின்றதா? உங்களுக்கு அப்பனே!!

இனிமேல் நீயே கற்றுக்கொள்!! அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் தெரியாத ரகசியங்கள் எல்லாம் உள்ளதப்பா.

இதனால் அப்பனே பின் இப்பாடலை பாடினாலே பின்  முருகன்!!
எதை என்று அறிய அறிய.. மகிழ்வான். 

பின் ஆனாலும் எதை என்று அறிய அறிய அருணகிரி கிளி ரூபமாக வந்து தாயே!!! எவை என்று கூட பார்வதி தேவியை பார்த்து!!. பின் தாயே எதை என்றும் அறிய அறிய... எவை என்றும் புரிய புரிய! 

எந்தனுக்கு ஏன் இந்த நிலைமை??

முருகன்!! அறிய இதனால் நிச்சயம் தாயே... நீயும் எவை என்றும் அறிய அறிய இப்படியே (நீயும் பார்த்துக் கொண்டு அமைதியாக) இருக்கின்றாயே என்பதற்கிணங்க!!

அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் அறிய அறிய... இவை தன் புரியாத அளவிற்கும் கூட

தாயே !!நீயே !!வா!!! என்றெல்லாம்!!.... நிச்சயம் அப்பனே அருணகிரிநாதன். எதை என்று அறிய அறிய.

(தேவியும் கிளி ரூபம் எடுத்து முருகனை நோக்கி பாடினார்)

ஆனாலும் அப்பனே  பின் கிளி ரூபம் எடுத்து நிச்சயம் தேவியே ! வந்து முருகனைப் பாட!!!

(கிளி ரூபத்தில் வந்து பார்வதி தேவி முருகனை நோக்கி பாடினார்)

நிச்சயம் முருகன் எவை என்று கூட...நம் அம்மை தான் பாடினாள் என்று கூட!!

அப்பனே புரிகின்றதா?? அப்பனே இப்பொழுது!!

அப்பனே இதனால் அப்பனே அருணகிரிக்காக!!! அம்மை பார்வதி தேவியே பாடியது அப்பனே (கந்தர் அனுபூதி).. தன் பிள்ளைக்காக அப்பனே!

பல உண்மைகள் அப்பனே மறைக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே. 

இவ் உண்மைகளை மக்களுக்கு தெரிவி!! நன்முறைகளாகவே!! அப்பனே!!


(அடியவருக்கு மட்டுமல்ல!!! இதனால் வரை தெரியாமல் பாடி வந்த அனைவருக்கும்) 

அப்பனே இதை தெரியாமல் இதுவரை பாடி வந்தாய் அப்பனே என்ன பிரயோஜனம்? என்பேன் அப்பனே!!




மனம் எதை என்றும் அறிய அறிய அப்பொழுதுதான்!!! (மனதில் தெரிந்து கொண்டு பாட வேண்டும்)


 பின் அருணகிரிக்கும்!!! எதை என்று அறிய அறிய சந்தோசம். 

பின் யான் ஜெயித்து விட்டேன் ஜெயித்து விட்டேன் என்று!!

முருகனும் சொன்னான். 

எதை என்று அறிய அறிய அருணகிரியே!! உன்னை ஜெயிக்க வைப்பதற்கே இப்படி ஒரு திருவிளையாடல். 

நீ பாடியதாகவே அதாவது எதை என்றும் புரிய என் அன்னை பார்வதி தேவி தான் பாடினாள்! 

ஆனால் வரும் காலங்களில் நீயே பாடினாய்!! என்பதை கூட அனைவராலும் பின் நீ அழைக்கப்படுவாய்.. அழைக்கப்படுவது உண்மையே.. இதுதான். உலகம் ஏற்றுக்கொள்ளும். என்று முருகன்.


(அகத்திய பெருமான் நமக்கு கூறுவது)

பின் அப்பனே எதை என்று அறிய அறிய புரிகின்றதா??

அதனால் என் பக்தர்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.. எதன் மூலம்? எப்படி? என்றெல்லாம்! 

பின் புரியாமல் வாழ்ந்தால் பயன் இல்லை என்பேன் அப்பனே.. பின் கஷ்டங்களே வந்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எவ்வளவு எதை என்று கூட.. அம்மைக்கு உலகத்தில் பின் திறமைகள் இருக்கின்றது என்பதை பார்த்தாயா?? 

அதனால்தான் அப்பனே முதலில் அம்மைக்கு மதிப்பு தர வேண்டும் என்பது.


முருகன் அருணகிரியிடம்!!!!!
இதனால் எதை என்றும் அறிய அறிய வரும் காலத்தில் அருணகிரியே!!! நீ இதை... அதாவது 

பின் உன் பாடலாக ஏற்றுக் கொண்டு... யார்? ஒருவன் பாடுகின்றானோ??!! அவனுக்கு கர்மா தீரும் என்பதை கூட... முருகன் அண்ணாமலையிலே பின் எவை என்று கூட விதிக்கப்பட்டதப்பா!!!

(கந்தர் அனுபூதி நல்முறையில் ஓதி வருபவர்களுக்கு கர்மாக்கள் தீரும் திருவண்ணாமலையில் முருகன் தந்த வரம்... கலியுகத்தில் கர்மாவில் இருந்து மீள்வதற்கு முருகன் எழுதிய விதி)


(கந்தர் அனுபூதி பக்தியுடன் முருகனை ஈசனை!! தேவியை!! கணபதியை!!  அருணகிரியாரை!!! நினைத்து வணங்கி ஓதி வர கர்மங்கள் விலகும்)


அப்பனே எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே உண்மைகளை தெரிந்து கொண்டு பாட வேண்டும் !!ஆட வேண்டும். !!

அப்பனே எதை என்று கூட அப்பனே... உண்மைகள் தெரியாமல் ஆடினாலும் பாடினாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பா!!!

அப்பனே பலவற்றை நிச்சயம் எவை என்று கூட மக்கள் கலியுகத்தில் அப்பனே... பாவங்களை தொலைத்து வாழ வேண்டும் என்பதை எல்லாம் சுவடிகளில் எழுதி வைத்தோம். 

ஆனாலும் அப்பனே சில தீயோர்கள் எல்லாம் அப்பனே.. அதை அழித்துவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

ஆனால் அப்பனே யான் விடப் போவதில்லை!! என்பேன் அப்பனே.
 என் பக்தர்களை இவ்வாறு வரவழைத்து (சத்சங்கம்) அப்பனே... அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கும் தெளிவு கொடுத்து அவர்களுக்கும் நன்மைகள் செய்து அனைத்தையும் கொடுத்து அப்பனே தெளிவுபடுத்துவேன் என்பேன் அப்பனே!

பொய்யை எவை என்று அறிய அறிய நீக்குவேன் என்பேன் அப்பனே. 

உண்மையை (உணர்ந்து புரிந்து செய்து கொண்டு வந்தால்)அப்பனே எதை என்று அறிய அறிய இவ்வாறு செய்தாலே பின் அகத்தியன் உங்கள் பாவங்களை எல்லாம் நீக்கி விடுவேன் சுலபமாகவே என்பேன் அப்பனே!!

உங்களால் நீக்க முடியாதப்பா. 

அப்பனே எதை என்றும் அறிய அறிய புரிகின்றதா அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே!!

இதனால் இப்பாடலை பாடும் பொழுது அப்பனே பார்வதி தேவியும் அப்பனே நன்றாகவே ஆசீர்வதிப்பாள்!! அப்பா!!

அப்பனே ஈசனும் மனம் இரங்குவானப்பா!!!

அப்பனே கணபதியும் மனம் இரங்குவானப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய...தாயைப்போல் மனம் இரங்குவோர் உண்டா இவ்வுலகத்தில்????

தாய்க்கு மனம் இரங்காதவர் உண்டோ ? இவ் உலகத்தில்???

அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பல விஷயங்கள் தெரிந்து கொண்டாலே போதுமானதப்பா. 

பல கர்மங்கள் அழியுமப்பா!!

இதனால் அப்பனே யான் வாக்கை செப்பலாம் அப்பனே!!!

ஆனாலும் பாவம் போக அப்பனே வாய்ப்பில்லை என்பேன் அப்பனே. 

(குருநாதர் வாக்குகள் சொன்னாலும் இதை புரிந்து உணர்ந்து உண்மை நிலைகளை தெரிந்து கொண்டு குருநாதர் காட்டும் வழிமுறைகளை மேற்கொண்டு வந்தால் தான் பாவங்கள் தீரும்)

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொண்டால்..!!!!

உங்கள் பாவத்தை நீங்களே நீக்கலாம் என்பேன். அப்பனே.

அதனால் நீங்கள் பின் அதாவது நீங்களே உங்களுக்கு மன்னனாக இருந்தால் சரி. அப்பனே.

(எது சரி? எது தவறு? என்று சரியாக உணர்ந்து எது பாவம்? எது புண்ணியம்? என்று புரிந்து உண்மை நிலை அறிந்து நமக்கு நாமே தீர்ப்பை எழுதிக் கொள்ளலாம் ஒரு அரசனை போல)
 
பெங்களூர் சத்சங்க வாக்குகள் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. அப்பா நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  3. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA. GURUVE SARANAM SARANAM

    ReplyDelete
  4. அகத்தியர் அய்யன் அருளே அருள்...உம்மையன்றி என்னைக் காக்க யார் உள்ளார்

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete