​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 29 March 2022

சித்தன் அருள் - 1103 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருடபகவான்  ஆதிபகவானைத் தொழுது  வணங்கி, "சர்வேசா! பூவுலகில், பிரம க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்  என்ற நான்குவகைக் குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா?  அவர்களல்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகுப்பினரும்  இருக்கிறார்களல்லவா? அவர்களில் வாலிபனாயினும், பாலனாயினும், விருத்தனாயினும், தனவானாயினும், தரித்திரனாயினும், கருணையுடைய வள்ளலாயினும், கஞ்சனாயினும்,   கருமியாயினும், ஞானியாயினும்,  அஞ்ஞானியாயினும்,   அறிஞனாயினும்,  அறிவிலியாயினும், வித்வானாயினும், படிப்பறிவில்லாதவனாயினும், உலகாளும் அரசனாயினும், ஆண்டியாயினும், உத்தமப் பிராமணனாயினும், மிக இழிந்த குலத்தோனாயினும் அவர்கள் ஓவ்வொருவரும் குறிப்பிட்ட காலத்தில் அவ்வாறு இருந்து பின்னர் இறத்தலுக்குக் காரணம் என்ன என்பதை நவின்றருள வேண்டும்" என்று வேண்டினான். 

நிலங்கடந்த நெடுமுடியண்ணலான  நெடுமால், கருடனை நோக்கி, " வைனதேயா!  நீ கேட்ட கேள்வி ஒரு சிறந்த கேள்வி தான்.  அதற்குரிய விடையைக் கூறுகிறேன்; கேள் ."உயிரினங்கள் மரிக்கும் காலத்தில் ஜீவனைக் கவர்வதற்கென்றே காலன் என்பவன் நியமிக்கப் பெற்றிருக்கிறான்.  உலகத்தில் வாழ்கின்ற ஜீவர்கள், அவர்கள் செய்யும் பற்பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மாய்கிறார்கள்.   மரித்தவன் வீட்டில் உணவருந்துவோனும் பிறனுடைய மனைவியைப் புணர்வதற்கு இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழித்தொழிலைச்  செய்பவனும் வாழ்நாளை இழப்பார்கள். இகவாழ்வுக்கும்  பரலோக வாழ்வுக்கும் உறுதியானதான  நல்வினைகளைச் செய்யாதவனும் பெரியோர்களைப் போற்றி செய்து பூஜியாதவனும்,  தூய்மையில்லாதவனும் தெய்வ பக்தியில்லாதவனும், பாபங்களையே அறிந்திருந்தும் செய்பவனும் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள்.   பிறருக்குக் கேடு நினைப்பவனும் கேடு செய்பவனும், பொய்யுரைப்போனும்              ஜீவன்களிடத்தில்  கருணையில்லாதவனும், சாஸ்திர முறைப்படி வாழாதவனும், தனக்குரிய அறநெறிகளைத் தவிர்த்து, பிறருக்குரிய கர்மங்களைச் செய்பவனும் யமலோகத்தில் வேதனைப்படுவார்கள்.  புண்ணிய தீர்த்தம் ஆடாத நாளும், ஜபவேள்விகள் செய்யாத திவசமும், தேவாராதனை செய்யாத தினமும், புனிதரான மகான்களையும் உலகிற்கு நல்லவைகளைச் செய்யும் நல்லவர்களை வழிபடாத பகலும், சாஸ்திரம் உணராத நாளும், வீணாளேயாகும்.   சூத்திரமரபில் பிறந்தவன் பிரம குலத்தினரே தெய்வம் என்று நினைத்துப் பக்தி செய்து அவரிட்ட தொழிலைப் புரிந்து, தாசனாய் இருப்பனாகில்,  அவன் நற்கதியை அடைவான்.  அவன் வேறொரு கர்மமும் செய்ய வேண்டுவது இல்லை.  அவன், உயந்த ஜாதியருக்குரிய கர்மங்களை செய்வானேயாகில் நலிவுறுவான்.

கருடா!  மனித தேகம் என்ன, பூவுலகில் உடலோடு சஞ்சரிக்கும் எந்த ஜீவனின் தேகமும் நிச்சயமற்றது. நிராதாரமானதாவுள்ளது.  சுக்கில சுரோணிதத்தால் உண்டாவது.  அன்னபானாதிகளால் விருத்தியடைவது காலையில் வயிறு நிரம்ப உண்ட அன்னம் மலையில் நசித்துவிடும்.  உடனே பசிக்கும். மீண்டும் அன்னம் உண்ணாவிடில் மெய் தளரும்.  குலையும்.  ஆகையால் சரீரம் அநித்தியமானதென்றும் அது கர்ம வினையினால் வருவது என்றும் எண்ணி மீண்டும் பூவுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு, நற்கர்மங்களைச் செய்ய வேண்டும்.  ஓ! வைனதேயா! பூர்வ கர்மத்தால் வருகின்ற தேகத்தை யாருடையது என்று கூறலாம்?  அதை வீணாகச் சுமந்து திருந்து மெலிகின்ற ஜீவனுடையது என்று சொல்லலாமா?  அன்னவஸ்திரம் கொடுக்கும் தலைவனதுஎனலாமா?  கர்ப்பமுண்டு பண்ணும் தந்தையினுடையது  எனலாமா?  பத்து மாதம் சுமந்து பெற்ற தாயினுடையது எனலாமா?  தாயைப் பெற்றவனாகிய  மாதா  மகனது எனலாமா?  பிதாவைப் பெற்ற பிதா மகனது எனலாமா?  விலை கொடுத்து அடிமைப்படுத்தும் எஜமானனது எனலாமா?  தொழில் கொடுத்து கூலி கொடுக்கும் மற்ற ஜீவனது எனலாமா?  உடலைச் சாம்பலாக்கும் அக்னியினுடையது எனலாமா? அல்லது அதனை ஈர்த்துப் பிய்த்துண்ணும் குள்ள நரிக்குரியது எனலாமா?  ஜீவன் போன பிறகு, புழுவாகவும் விஷ்டையாகவும் சாம்பராகவும் அழியும் உடலானது, ஒருவருடையதும் அல்லவென்று முடிவதை அறிந்து ஓர்ந்து, சரீரத்தின் மீது ஆசை வைக்காமல், பகவத், பாகவத ஆசாரிய கைங்கர்யங்களை செய்ய வேண்டும். பாபங்கள் என்பவை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. அதிகமான பாவங்களைச் செய்தவன் நாய் நரி முதலிய இழிந்த  ஜன்மம் அடைவான்.  ஜீவன், கர்ப்பவாசம் செய்யும் காலத்தில்,  தாயினுடைய மல முத்திராதிகளால் அதிகமாகத் துன்பங்களையடைவான். இருப்பதைவிட பிறப்பதில் உன்னதான துன்பத்தையும் கர்மாதியையும் எண்ணி,  ஜீவனானவன் நல்ல ஒழுக்க நற்பண்புகளுடன் ஜீவிக்க வேண்டும். தாய் வயிற்றிலிருந்து பிறந்தவன் பால்ய வயதில் வண்ட விளையாட்டுக்களால் தனக்கு உறுதியாக உள்ளது எது என்பதை அறிவதில்லை. முதுமைப் பருவத்தில் சோர்வாலும் கிலேசத்தாலும் ஒன்றையும் உணர்வதுமில்லை. இவ்விதம் உறுதியை உணராமல் ஒழிப்பவரே மிகப்  பலராவர்.   பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் எவனோ, அவனே நிரதிசய இன்ப வீடாகிய நமது உலகையடைவான்.  கர்ம வினைகளாலேயே ஜீவன் பிறந்து பிறந்து இறக்கிறான்.  பிறந்து அதிக வயது உலகில் வாழாமல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மரிப்பது என்பது மகா பாபதினால் என்பதை அறிவாயாக. கொடிய பாவம் செய்தவனே பிறந்தவுடனே மரித்து , மீண்டும் பிறந்து மடிகிறான்.  அவன் பிறத்தலுக்கும்  இறத்தலுக்கும் கணக்கென்பதில்லை.  பூர்வ ஜென்மத்தில் நல்ல நெறிப்படி வாழ்ந்து, தான தர்மங்களை மனங்கோணாமல் செய்து வரும் சேதனன், பூமியில் பிறந்தால் அவன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகம் சேர்வான்.

"ஓ, வைனதேயா!  கர்ப்பந் தரித்த ஆறு மாதத்திற்குள் அந்தக் கர்ப்பம் எந்த மாதத்திலாவது கரைந்து விழுந்ததாயின்  விழுந்த மாதம் ஓன்றாயின் ஒரு நாளும் , இரண்டாயின் இரண்டு நாட்களும் , மூன்றாயின் மூன்று நாட்களும், நான்காயின் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாள்களும், ஆறாயின்  ஆறு நாட்களும், கர்ப்பத்தை கருவுற்றிருந்த மாதாவுக்கு மட்டுமே சூதகத் தீட்டு உளதாகும்.  பிதாவுக்கு அத்தீட்டு இல்லை.  அவன் செய்ய வேண்டிய கர்மமும் ஒன்றுமில்லை.  கருவழியாமல் பத்தாம் மாதத்தில் பிறந்து, மூன்று வயதுக்குள் மாண்டால் , இறந்த அந்தக் குழந்தையை உத்தேசித்து பால் சோறும் தயிர் சோறும் ஊர்க் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.  மூன்று வயதுக்கு மேல் ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை இறந்து போகுமானால் மேற்சொன்னது போலவே பாலர்களுக்கு அன்னங் கொடுத்தல் வேண்டும்.   இவ்விதமில்லாமல் பிறந்த ஒரு மாதத்திற்குள் பிறந்த குழந்தை இறந்தால் அந்தந்த வர்ணத்தாருக்குரியபடி செய்து தீர்த்தமும் பாலும் பாயசம் முதலிய உணவுப் பொருள்களைத் திரவ வடிவில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.  உலகில் பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் மீண்டும் பிறப்பதும் திண்ணமாகையால் இறந்த பிறகு மீண்டும் மறு பிறவியெடுக்காமல்  மீளாவுலகெய்ய முயற்சி செய்ய வேண்டும்.  அவ்விதம், முயற்சி செய்யாமலும், தான தர்மங்களைச் செய்யாமலும் வாழ் நாட்களையெல்லாம்  வீண் நாட்களாக்கி விட்டு மாய்ந்த ஜீவன். பிரம, க்ஷத்திரிய , வைசிய, சூத்திரர் என்ற குலங்களில் ஏதேனும் ஒரு குலத்தில் தோன்றினாலும்,ஒரு நாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியற்ற தரித்திரனுக்குப் புத்திரனாகப்  பிறந்து, கூழ் குடிப்பதற்கு வகையில்லாமல் வருந்தி, விரைவில் மடிந்து, மீண்டும் பிறப்பான்."

"ஓ!  வைனதேயா! ஒருவன், தான் இறந்தால், மறு ஜன்மத்தித்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். உலகம் முழுவதையும் ஆள வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது.  தீர்த்தயாத்திரை செய்து புனிதநதிகளில் நீராடியவன் மனத்தூய்மையுமடைவான்.   பொய் சொல்லாமல், கீழ்ப்படிதலுடன் இன்சொல் பேசுவோன் சகல சாஸ்திர சம்பன்னனாவான். ஏராளமான சம்பத்துகளிலிருந்தும் தான தர்மஞ் செய்யாதவன், மறுபிறவியில் தரித்திரனாகப் பிறப்பான்.  ஆகையால் மனிதன், தனக்கு உள்ள சம்பத்துக்குத் தக்கபடி தான தர்மஞ் செய்ய வேண்டும்" என்று திருமால் கூறினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள் ........... தொடரும்!

Monday, 28 March 2022

சித்தன் அருள் - 1102 - பாலராமபுரம் அகத்தியர் கோவில் திருவிழா!

 


 

 

 

 

 

 வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வருடம் தோரும் பங்குனி மாதத்தில் பாலராமபுரத்தில், நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் அபிஷேக ஆராதனைகள் 10 நாட்கள் நடக்கும். இந்த வருடம் அகத்தியர் பூஜை 05/04/2022 அன்று தொடங்கி 14.04.2022 வரை நடக்க, அவர் அருளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான விரிவான அழைப்பிதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

8ம் நாள் திருவிழா அன்று முருகப்பெருமான், எரித்தாவூர் மலை மீதிலிருந்து கீழே இறங்கி வந்து, அகத்தியப்பெருமானால் மரியாதை செய்யப்பெற்று, அவரால், பாலராமபுரம் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவது கண்கொள்ளாக் காட்ச்சியாகும். முருகப்பெருமானும், குருநாதரும் ஒன்று சேர்ந்து பாலாராமபுரம் ஊர் வீதிகளில் உலா வந்து அனைவரையும் ஆசிர்வதித்து, பின்னர், 9ம் நாள் பூசையை முருகப்பெருமான், அகத்தியர் கோவிலில் ஏற்றுக்கொண்டு, மறுநாள் (10வது நாள்) தன இருப்பிடம் ஏகுவார். இந்த நிகழ்ச்சிகளை, காண கண் கோடி வேண்டும். அன்றைய தினம், மிகுந்த சந்தோஷத்தில் அகத்தியப்பெருமான் அனைவருடைய வேண்டுதலாயு அருளுவார்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கில், அகத்தியர் பூஜை திருவிழாவில் பங்கு பெற குருநாதர் கோவிலுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள். திரு.ரதீஷ் (Sri.Ratheesh) அவர்களை  9048322565 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் சார்பாக இந்த அழைப்பிதழை உங்கள் அனைவர் முன்னும் சமர்ப்பிக்கிறேன்.

சித்தன் அருள்............ தொடரும்!

Friday, 25 March 2022

சித்தன் அருள் - 1101 - அன்புடன் அகத்தியர் - சிவவாக்கியர் வாக்கு!



20/3/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். சிவன் மலை. காங்கேயம்.

ஆதிபகவானை மனதில் தொட்டு என் முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானையும் தொட்டு என் உயிரினும் மேலான உயிரான என்றே நினைத்த முருகனையும் தொட்டு வாக்குகளாக விரவுகின்றேன் வாக்கியன்.

இவை என்று போதாது இன்னும் உலகத்தில் மனிதனுக்கு புத்திகள்.

புத்திகள் இல்லையே மனிதனுக்கு.

பிழைப்புக்கள் இல்லையே!!!

புத்திகள் உண்டு ஆனால் பிழைப்புகள் தவறான வழியில் செல்லுதல்.

இதனையும் முன்னோக்கி பார்க்கும் எனில் இவ்வுலகம் மிஞ்சியது ஏதுமில்லை.

ஏதுமில்லை வளரவளர உன் மனதினில் திருத்தலத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி கற்பனைத் திறத்தாலே பின் இப்படித்தான் தெய்வங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் ஒரு நாள் தெய்வமே வழிவிட்டு வழிவிட்டு அதனையும் நிறைவேற்றி நிறைவேற்றி அதனையுமன்றி கூற அப்படித்தான் இவ் மலை(சிவன் மலை) வந்தது.

வந்தது இதற்கும் அழகாக சூட்டி விட்டனர் உயர் பெரியோர் சிவன்மலை என்று.

இவையற்று அற்று இதனடியில் இன்னும் புதைந்துள்ளது மர்மங்கள். இதனையுமறிந்து ஈசனும் இதற்கு தகுந்தாற்போல் அனைத்தும் செய்வான்.

இன்று ஒருநாள் இங்கு இதனையும் எதனையென்று உணராமல் உணர்ந்த பிறகு உணர்த்திக் கொண்டால் எதனை என்பதை கூட இங்கு ஆலயம் இன்னும் அடியில் தங்கி நிற்கின்றது.

சித்தர்கள் இங்கும் இதன் அடியிலும் உள்ளது ஓர் பாதை, பாதையை வகுத்து பார்த்தால் பின் பாதைகள் ஆகவே சென்று கொண்டு அதில் கூட சித்தர்கள் வலம் வந்து தான் கொண்டிருக்கின்றார்கள். இரவும் பகலும்.

பல முனியவர்கள் பல ரிஷிகள் அறிவதற்கு ஒன்றுமில்லையப்பா மனித ஜென்மங்களே.

மனிதனிடத்தில் உபயோகங்கள் உள்ளது. அதை பின்பற்றவும் தெரியவில்லை.

மந்திரங்களாவது ஏதடா!!??? இதனையுமன்றி தந்திரங்களாவது ஏதடா!!??

ஆனால் நிலைமையைச் சொன்னால் புரியாது மக்களுக்குடா!!!

மக்கள் இன்று வாழ தெரியாமல் வாழ்வாதாரத்தை எப்படி எல்லாம் உயர்த்திக் கொண்டானடா மனிதன்.

மனிதனே நிலைதடுமாறி நிற்கின்றான். நிற்கின்றான் என்பதற்கிணங்க மாயத்தை மாயையை பின்பற்றிக் கொண்டு பின்பு அழிந்தால். பின் நிற்கின்றான் கவலையோடு. ஆனால் முதலிலேயே தெரியுமடா.

தெரியுமடா இதிலிருந்து என்ன பரிசுத்தங்கள்???

ஆனாலும் இங்கே யான் பலமுறை பல முறையும் பல சித்தர்களும் தவம் இயற்றி உள்ளார்கள்.

இவ் மலையில் யானும் உணவருந்தி யானே. இவ் மலையையும் ஒர் முறை தங்கம் ஆக்கியும் கொடுத்தார் ஈசன் எந்தனுக்கு. எடுத்துச் செல் என்று.

ஆனாலும் யான் இவையெல்லாம் எந்தனுக்கு ஏது?  என்று ஈசனையே கேட்டவன்.

அறிவதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்பதற்கிணங்க ஒன்றும் இல்லை என்பதற்கு இணங்க சென்னிமலை இதற்கும் இவையன்றி கூற பின்பு இங்குதான் தங்கம் வேண்டாம் என்று சொன்னாய் பின் இதை எடுத்துக் கொள் என்று கூட பார்வதி தேவி.

ஆனாலும் நீ என் அம்மையாகவே இருக்க கூடாதா!?? அம்மையாகவே இருந்திட்டுச் செல்.

இவ் அன்பு போதும் எந்தனக்கு.

அது வேண்டாம் பின் அவ் மலையும் கல்லாகி விட்டது. இப்பொழுது தெரிகின்றதா?? தெரிகின்றதா?? உயர் பெரியது!! எது வென்று?!!!

குறிக்கின்றது அன்பு.

இவ் அன்பை இறைவன்பால் செலுத்தினாலே செலுத்தினாலே இறைவன் பன்மடங்கு செய்வான்.

யானும் பல பல பல தலத்தில் கூட முருகன் தலத்தில் கூட தர்மம் ஏந்தினேன்.

தர்மம் ஏந்திதான் யான் உண்டிட்டு வந்தேன்.

உண்டிட்டு வந்தேன் ஆனாலும் பழனி தன்னில். ஏறி பின் எந்தனுக்கு எதற்கு தெரியாமல் தகுதிகள் இல்லாமல் முருகனும் பின் வரவேண்டும் என்று எண்ணி ஒருநாள் யான் உண்ணவில்லை முருகன் வருவான் என்று நினைத்து.

ஆனாலும் வரவில்லை இதனையே பின்பற்றி கொண்டான் முருகன்.

யானும் உண்ணாமல் தவித்துக்கொண்டிருந்தேன் தவித்திருக்கின்றேன் என்பதற்கு அப்படியெனில் இங்கு முருகன் வரப்போவதில்லை.

வரப் போவதில்லை என்று என் மனதில் நினைத்து ஈசனிடம் முறையிட்டேன்.

முறையிட்டேன் இவ்முறையானது இப்பொழுதும் தெரிந்து கொண்டு இருக்கின்றது.

தெரிந்து கொண்டு இருக்கின்றது என்பதற்கிணங்க அண்ணாமலை சென்றுவிட்டேன்.

சென்றுவிட்டேன் ஈசனை யான்  எதனை ஈசா என்றுதான் அழைத்தேன்... உன் மகன் அங்கே எந்தனக்கு உத்தரவுகள் கொடுக்கவில்லை என்பதற்கிணங்க ஆனால் என்னையும் பட்டினி போட்டு விட்டான்.

ஆனாலும் யான் இங்கே தர்மத்தை ஏந்துகின்றேன். வரட்டும் அவன் இங்கு என்று.

ஆனாலும் தர்மம் வேண்டினேன் தர்மம் ஏந்திக் கொண்டேதான் இருக்கின்றேன். ஆனாலும் எந்தனுக்கு வந்தது சௌகரியமாகவே.

ஆனாலும் வேண்டாம் என்றாலும் பின் ஈசன் நகையாடுவதற்கே தர்மம் இட்டு இட்டுச்சென்றான்.

சென்றான் ஆனால்  யான்  ஒரு நாள் என்பதைக் கூட ஒர் வேளையே என்று சொல்வேன் உண்ணாமல் இருந்தேன்.

அப்பொழுது தாய் பார்வதி தேவி மகனே என்று கூட எந்தனக்கு உணவிட்டுவிட்டாள்.

ஏனப்பா! எதனால்? இப்படி? என்று கூட ஆனாலும் பின் வாக்கியன் யானும் தாயே!!!

உன் மகன் எந்தனுக்கு தர்மம் ஏந்திக் கொண்டிருக்கும் பொழுது யான் பட்டினி ஆக இருக்கும் பொழுது கூட எந்தனக்கு உணவு கொடுக்க வரவில்லையே என்று.

ஆனாலும் முருகனின் செய்கையை பார் . ஏன்? இங்கு அனுப்பினான் என்று

அப்பொழுது பின் பார்வதி தேவி நீ கூட எந்தன் குழந்தையாக குழந்தைதானப்பா. அதை உந்தனக்கு உணர்த்துவதற்காக தான் உன்னை இங்கு அனுப்பினான்.

எந்தனக்கு ஆனந்தக் கண்ணீர்.

இப்பொழுது இங்கு எதனை?? குறிக்கின்றது.? குறிக்கின்றது ஆனாலும் யான் எதை கேட்டேன்? ஈசா???.... என்று.

நதி போல் என் கண்களில் ஓடியது ஆனந்தக் கண்ணீர். புரிந்து கொள்ளவில்லையே யான் சித்தனாக இருந்தும் கூட....

ஆனாலும் இதற்கு தான் யாங்கள் சித்தர்கள் யான் பெருமையோடு சொல்வேன்.

யாங்களே இதனை உணரவில்லை மனிதர்கள் நீங்கள் எப்படித்தான் உணரப் போகிறீர்கள்???

ஆனால் எள்ளி நகையாடுவது நகையாடுவது ....

உள்ளத்தில் வை இறைவனை போதுமானது.

இதையன்றி கூற ஆனாலும் அங்கிருந்து(அண்ணாமலையிலிருந்து) புறப்பட்டேன். மீண்டும் பழனி தன்னில் செல்லலாமா என்று கூட.

ஆனாலும் ஒரு யோசனை யான் பசிக்காகவே கஷ்டப்பட்டவன். உணவுக்காக எதை என்று எதுவும் இல்லாமல் நீருக்காகவும் கஷ்டப்பட்டவன்.

ஆனால் அண்ணாமலையில் ஈசனிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்து விட்டேன். வந்துவிட்டேன் என்பதற்கிணங்க ..ஈசா!!!! தேவி!!!! இங்கு இம்மலைக்கு யார் வந்தாலும் தருமம் ஏந்தினாலும் அன்னம் மனிதர்களால் கொடுக்கப் படவில்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் இங்கு வந்தவர்கள் நிச்சயமாய் மனப்பூர்வமாக அன்னத்தை போதுமடா என்று அளவாக அவ்வளவு அளவு மீறி செயல்களுக்கு உண்டிட்டு.... "" நமச்சிவாயா என்று அழைக்க வேண்டும் இவை தான் என்னுடைய கூற்று கருத்து என்று வினவினேன்.

"" ஈசன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிட்டான்.

யானும் தர்மம் ஏந்துவேன் வருடம் வருடத்தில் ஓர்முறை அதுவும் சொல்லுவார்கள் சித்தர்கள் நிச்சயம் மாதத்தில் ஓர் முறையாவது எந்தனக்கு அங்கே பிச்சை எடுத்தல் உண்ணுவது மிக்க சந்தோஷம்.

இதனையும் உணர்த்துவதற்கு ஆட்கள் இல்லையப்பா.

ஆட்கள் இல்லையப்பா தன் கர்மத்தை போக்குவதற்காகவே அண்ணாமலை வருகின்றனர்.

எப்படி இறைவன் போக்குவான்???

அன்னத்தை அளித்துவிட்டாலே போக்குவானா?? என்ன??

என்ன?? முதலில் எண்ணுவது மற்றவர்களை நீயும் சரி சமமாக எப்பொழுது பார்க்கின்றாயோ அப்பொழுதுதான் நீ செய்த தர்மங்கள் செல்லுபடியாகும்.

அப்படி செல்லுபடியாகும் பின் அப்படி ஆகவில்லை என்றாலும் உன்னிடத்திலே தவறுகள் உள்ளது

உள்ளது அப்பனே அதனையும் மீறி மீறி மக்கள் நிலையில்லாமல் செல்கின்றனர்.

மந்திரத்தால் ஆவது ஏதடா!!! தந்திரத்தால் ஆவது ஏதடா!!! இறைவனை வணங்கி ஆவது ஏதடா!!! மனதில் நிறுத்தடா இறைவனை"!! குடி கொள்வானடா இறைவன்.

அப்பொழுது நீ ஏற்காமல் ஏற்றுவிட்டு தீபம் உன் உள்ளத்தில் எரிய வை. இறைவன் வந்துவிடுவான் பின் பார்த்துக்கொள்ளலாம் சென்றுவிடலாம் சென்று விடுவதற்கு என்ன வழிகள் தகுதிகள் இல்லையே மனிதா.!!!

மனிதா!!!! பிறந்திட்டாய் பிறந்திட்டாய் என்பதற்கிணங்க அவ் பிறப்பே ஒரு மாயை என்பது நிரூபித்து விட்டாய். நிராகரித்து விட்டாய் எதனால் என்பது எதனால் என்பதை கூட.

சொல்லி இருக்கின்றேன் எதனையும் இப்பொழுது கூட என் இல்லம் இவை தான்(சிவன் மலை) என்பேன்.

இங்குதான் யான் தங்குவேன் என்பேன்.

இங்கிருந்து சென்னிமலை செல்வேன்.

செல்வேன் அங்கிருந்து அழகர் மலையும் செல்வேன் செல்வேன் பழனி தன்னில்.

மலைகள் இங்கு வலம்வந்து பின் இதற்கும் சமமானவர்கள் இங்கிருக்கும் மலைகள் எல்லாம் எதனை என்று கூற...

 முருகன் விளையாடிக் கொண்டே இருக்கின்றான்.

கணபதியும் விளையாடிக் கொண்டே இருக்கின்றான்.

இருக்கின்றான் சபரிநாதன் விளையாடி கொண்டே இருக்கின்றான்.

எதனால் என்பதை கூட விளையாட்டு புத்தி ஆகவே இறைவன்களுக்கு ஆகிவிட்டது.

மனிதன் நிலைமையை அப்பொழுது இறைவன் புரிந்து கொள்வதற்கு சமமானவை மனிதன் செய்தால்தான் நிச்சயம் ""இவனா!!!??? என்றுகூட தேடி வருவான் இறைவன்.

இறைவன் உண்மை உண்மை என்பதற்கிணங்க பொழுது போக்காகவே பார்க்குதல் .   பார்க்குதல் என்பதைக்கூட இனிமேலும் இறைவனிடத்தில் சென்றால் பின் ஏதாவது நடந்து விடுமா ??என்று கூட வருவான் பிச்சை உண்ண.

ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.... மனிதா!!! உன்னிடத்திலே திறமைகள் சரியாக யூகித்துக்கொண்டு  யூகித்து கொண்டு இப்படிப் பின் மனதில் ஆசையின்றி அன்பு மூலமே இறைவனை பெறமுடியும்.

பெற முடியும் என்பதற்கு இணங்க என்னையும் சோதித்தான்!!!!

 சோதித்தான் என் தந்தை என்பதற்கிணங்க முருகன்.

முருகன் நினைத்துக்கொண்டான் பழனிமலை தன்னில்.

யான் இங்கே இருக்கின்றேன்.... முருகன் அங்கே இருக்கின்றான்.

ஆனாலும் வாக்கியனை சோதிக்க வேண்டும் என்று முருகன் எண்ணி விட்டான்.

ஆனாலும் அதை யான் அறிந்து விட்டேன்.

ஆனாலும் முருகன் அதற்கும் மேலாகச் சென்று அறிந்து விட்டான்.

வாக்கியன் அனைத்தும் உணர்ந்தவன்.

உணர்ந்தவன் இவந்தனை எப்படியோ பின் யான் முருகன் என்று தெரிய விடாமல் இவந்தனிடம் விளையாட்டை துவங்க வேண்டும் என்று எண்ணி.

ஆனாலும் முருகன் வந்து விட்டான். ஆனாலும் அப்பொழுது முருகன் என்று கூட எந்தனுக்கு தெரியாமல் செய்துவிட்டான் முருகனே.

ஆனாலும் ஒன்றைக் கேட்டான். எந்தனை. எவ்வாறு என்பதை கூட.

இறைவன் எங்கு இருக்கின்றான்???? என்று சொல் என்று கேட்டுவிட்டான்!!!முருகன்.!!

யானும் திகைத்தேன்.!!!

திகைத்தேன் எப்படி வாக்குகள் உரைப்பது?? உரைப்பது என்பதைக்கூட.

ஆனாலும் யான் சொல்லி இருக்கின்றேன் எதனை என்று கூட....

"""" என்னுள்ளே இருக்கின்றான்""" என்று கூட சொல்லிவிட்டேன்.

ஆனால் நகையாடினான் முருகன்...

உன்னுள்ளே இருக்கின்றானே!!!!! பின் வெளியே எடு என்று யான் பார்க்கவேண்டும் என்று கூட.......

ஆனாலும் யான் திகைத்து விட்டேன், யான் திகைத்து விட்டேன் எப்படி? வெளியே எடுப்பது?? என்பதைக்கூட...

ஆனாலும் முருகன் நகைத்தான் """எடு...!!! எடு..!!! என்று கூட.

ஆனாலும் என்னால் முடியவில்லை. முடியவில்லை ஆனாலும் முருகன் என் பக்கத்திலே அமர்ந்து இருக்கின்றான்.

"" யான் முருகா......!!!!!!!!! என்று கூப்பிட்டேன்.

ஆனாலும் அதற்கும் நகைத்தான்!! முருகன்.

என்னை மதி மயக்கி ஆக்கிவிட்டான் முருகன்.

ஆனாலும் இதனையுமின்றி இன்னும் பெரிய விஷயங்கள் என்னவென்றால்?? வருவது உண்மையே.!!

ஆனாலும் பின்பு முருகனும் திரும்பவும் கேட்டான்.

எங்கே இருக்கின்றான்??? இறைவன் எங்கிருக்கிறான்????

வரச்சொல் என்று கூட.....

ஆனாலும் மாயை கண்ணை மறைத்தது.!!!

கண்ணை மறைத்தது ஆனால் தெரிந்து கொண்டேன் என்னுடைய பலத்தால் !!சக்தியால்.!!!

முருகா...!!! நீ முருகன்..!! தான்.

ஏன்?? என்னிடம் இப்படி விளையாடுகின்றாய் !!!என்று கூட.

ஆனாலும் முருகன் சொன்னான்!!!! சொல்லியதை சொல்லியதாக வாக்குகளாக காப்பாற்ற வேண்டும் வாக்கியனே....

"" முதலில் வரச்சொல் இறைவனை..... உனது உள்ளத்தில் இருக்கின்றான் என்று சொன்னாயே!!!!

முதலில் வரச்சொல் ...என்று கூட.

ஆனால் ஒரு வார்த்தை யான் சொன்னேன்...

''''''''' முருகன் மயங்கிவிட்டான்......!!!!!

முருகா!!!! உன் பால் யான் அன்பு கொண்டேன் அதனால்தான் நீ இங்கு வந்து விட்டாய்!!!!

இப்பொழுது தெரிகின்றதா!!!!??

என் "" மனதில் வந்தவன் நீயே""" என்று!!!!!

இதனைத்தான் உணர்ந்து உணர்ந்து அன்பினால் மட்டுமே இறைவனை வெல்ல முடியும்.

மற்றவைகளால் வெல்ல முடியாது.... வெல்ல முடியாது என்று கூட.

ஆனாலும் பின் முருகனை யானும் கேட்டேன்.... முருகா!!! யான் எப்படி வலம் வந்து கொண்டே இருக்கின்றேன். எந்தனுக்கு சொந்தங்கள் எவை என்று கூற யாரும் இல்லை... என்று கூற.

அதனைக் கூட இவ்வுலகத்தில் மிக்க மிக்க உயர்ந்தவர்கள் பணமதிப்பு உடையவர்கள் என்று எதனையும் குறிப்பிடாமல் யான் சொன்னேன்..

ஆனால் முருகனோ...!!! உந்தனுக்கு என்ன வேண்டும்!???

சித்தனாக தகுதி அனைத்தும் உன்னிடத்திலே இருக்கின்றன.

இவ்வுலகத்தில் அழியும் என்றால் அழிந்துவிடும் பிறப்பு என்றால் இன்னொரு உலகம் பிறக்கும் அவ்வாறு இருக்கும்பொழுது... உந்தனக்கும் வேதனையா??

ஆம்!!! மனித வடிவில் வந்து விட்டாலே வேதனை தானே முருகா!!!! என்று யானும் கூறினேன்.

ஆனாலும் உந்தனுக்கு என்ன?? தேவை?? என்று வினவ..!!!

யானும் ஒருவிதத்தில் சொல்லிவிட்டேன் முருகா இவ்வுலகத்தில் வாழ வேண்டுமென்றால் பணம் முக்கியமாக செயல்படுகின்றது.

முக்கியமாக செயல்படுகின்றது என்பதற்கிணங்க யானும் ஒருவளை(ஒரு பெண்ணை) திருமணம் செய்ய எண்ணினேன்.

சென்றேன் அவள் இல்லத்திற்கு பெண் தேடினேன் பெண் கொடுப்பார்களா என்பதற்கிணங்க

ஆனாலும் என்னையும் நீ ஒரு பரதேசி!!! உந்தனுக்கு எப்படி பெண் தருவது என்றுகூட ....

பின்வந்து ஆனாலும் அறியாமலேயே எப்படி என்று கூட.

ஆனால் முருகனுக்கு கோபம் வந்து விட்டது...

யார்?? அவன்??? யாரென்று சொல்ல ஆனால் பின் மகாராஜா.... இவை அன்று இவ்வாலயத்தை கட்டிக்காக்கும் அவனே என்று.

யான் வருகின்றேன் செல் என்றுகூட. ஆனால் முருகனும் எந்தனுக்கே பெண் பார்த்தான் என்பேன்.

பார்த்திட்டு !!பார்த்திட்டு!! இவையன்றி கூற வந்திருப்பது என் பக்தன்!!!!

யார்?? இவந்தனக்கு பெண் இல்லை என்று சொன்னது?????

ஆனாலும் மகாராஜா சொல்லிவிட்டான்..... """""பெண்ணில்லை!!!! பொன்னில்லையென்றால்.....!!!இதனையும் என்றுகூட.

ஆனாலும் முருகன் இவை பின் எத்தனை பொற்காசுகள் வேண்டும்??? என்று கூற...

யான் இங்கு பின் இவ் வட்டத்திற்குள் யான் கட்டிக்காக்கும் அளவிற்கு வேண்டும் என்று கூற..

ஆனால் பொன் காசுகள் உடனடியாக எந்தனுக்காகவே பின் இங்கு உள்ள அனைத்து மலைகளையும் பொன்னாக்கினார் .முருகன்.

அயர்ந்து விட்டான்!!! அயர்ந்து விட்டான்!!! மகாராஜன்

ஆனாலும் வந்ததை எண்ணி பார்த்து என்னுடன் அனுப்பி விட்டான்.

ஆனாலும் அவ் மகராசி மகாராசி (மகாராஜாவின் பெண்) பின் ஒரு பிறப்பில் என்னுடைய தாயே ஆவாள்.

எப்படி ஆசைப்பட்டு இருக்கின்றேன்??? ஆனாலும் என் தாயவளை இப்பிறவியில் யான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று என்பது விதி.

இதுதான் இதுதான் விதி என்னவென்று முதலில் பிறக்கும்போதே எழுதி வைத்திருக்கும் இதுதான் நடக்கும் இதைத் தவிர இதை தவிர ஒன்றும் நடக்காது.

நடக்காது ஆனாலும் நடக்கும் நடக்கும் எப்படி என்றால் இறைவன் பின் இறைவன் மீது பக்தி அளவுகடந்த அன்பும் இருந்தால்தான் பின் விதியினை வெல்லலாம்.

மற்றபடி மந்திரங்கள் தந்திரங்கள்  எச்செபத்தையும் செய்தாலும்... மானிடா ஆகாது.


எதற்காக எதற்காக ஓடோடி உழைக்கின்றாய் ஒன்றுமில்லை... விதியில் எழுதப்பட்டிருப்பதை யாராலும்...

ஆனாலும்.  அன்பு அன்பால் மாற்றமுடியும் அன்புதான் இறைவன். இறைவன்பால் மனதில் வைத்துக்கொண்டு இரு.

இன்னும் இவ் மலையில் பல ரகசியங்கள் உள்ளது அகத்தியனும் இங்கு வந்திட்டுச் செல்வான்.

செல்வான் என்பதற்கிணங்க அகத்தியனும் எந்தனுக்கு பின் பல வழிகளிலும் பல வழிகளிலும் ஞானம் போதித்து போதித்து பின்...

சுந்தரானந்தன்  இவந்தனுக்கும் பலவழிகள் உண்டு உண்டு என்பதற்கு இணங்க இவ் மலைகளில் விதவிதமாக அதனால் மகாராஜன்.

இவ் மலைகளை பொன்னாக்கினான்  முருகனே ..அதனால் மலைகளுக்கெல்லாம் முருகனே.

ஆனாலும் மகாராஜா மனம் வருந்தி முருகா!!!!  உன்னை யான் தவறாக புரிந்து கொண்டேன். இவ் மலை எதை என்று கூற எந்தனுக்கு பொன்னாக தேவையில்லை . எதை என்று கூற ஆனால் ஒன்றை மட்டும் கேட்கின்றேன் யான் என்று கூட.

இவ் மலையெல்லாம் பின் பொற்காசுகளாக தேவையில்லை..... நீ அமைந்துவிடு போதுமானது...... மக்கள் வந்து தரிசிக்கட்டும் பாவங்கள்... நீங்கட்டும் என்று கூட....

அதனால் முருகன் இவ் மலையிலெல்லாம் நிற்கின்றான்.

இதற்கும் உணர்ந்து வேறில்லை இப்பொழுது மானிட ஜென்மங்களே பார்த்தீர்களா !!!அன்பு வைத்தால் இறைவன் உனக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றான்.

இன்மை இன்மையுள் மறுமை மறுமையில் உண்மை உண்மை ஏதடா மனிதனிடத்தில் பொய்யடா...

பொய்யடா !!!பொய்!! பொய் !!ஆனாலும் பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன் பொய்யும் கூட அவனை தூக்கி விட்டுக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் ஒரு நாள் விழுந்து விடுவான் அப்பொழுதுதான் மெய் என்பதை உணர்வான் மனிதன்.

அப்போது வரை மெய் என்பதை உணர மாட்டான் மனிதன்.

பொய்!! மெய்!!! இதற்கும் ஒரே ஒரு வரிகளில் சொல்லிவிடலாம் மெய்யை பொய்யாகலாம் . பொய்யை மெய்யாக்கலாம்.

ஆனாலும் உண்டு உண்டு காசுகள் வேண்டுமானால் இறைவனே தருவான்.

தருவான் என்பதற்கிணங்க ஆனாலும் மனிதன் எதை வைத்து சம்பாதிக்கின்றானென்றால்?? இறைவனை வைத்து சம்பாதிக்கின்றான்.

இது நியாயமா மனிதனே!!!

மனிதனே நியாயங்கள் இல்லை...

ஏன் இறைவன் பார்க்கத்தான் போகின்றானா?? இதை.... பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள்.

ஆனால் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றான் இறைவன்.

இறைவன் மிகப்பெரியவன்!! கருணை உள்ளவன்!! ஆனாலும் பின் சிறிது காலம் தான் செல்லட்டும் செல்லட்டும் என்று விட்டுக்கொண்டு ....

ஆனால் அவந்தனக்கு கோபம் வந்துவிட்டாலும் நீ எதை வெறுக்கப் படவில்லையோ!!! அதனால் எதன் மூலம்?? எதனை வெற்றி கொண்டாயோ?? அதன் மூலமே உன் தோல்விகள் நிச்சயமாக்கப்படும்.

அதனால் உன்னை எப்பொழுதும் இறைவன் சீண்ட மாட்டான்.

தகுதிகள் தகுதிகள் மென்மேலும் பெருக்கிக்கொள்ள பெருக்கிக்கொள்ள அதிலும் தகுதிகள் இல்லை.

தகுதிகள் இல்லை மனிதா மனிதா நீ மாயை!!!! மாயையில் பிறந்திட்டு அவ் மாயையை நோக்கி கொண்டிருந்தால் பின் அவ் மாயை உன்னை என்ன!!! விட்டுவிடுமா?? என்ன????

விட்டுவிடாது.... அன்பிற்குதான் உண்டோ!!!,உண்டோ!!! எக்காலம் .

எக்காலம்... இறைவன்... அன்பு இறைவன், பாசம், கருணை, இவை எல்லாம் ஒரே வரிசையில் வரக்கூடியது. இவ் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தாலே இறைவன் ஒரே வரிசையில் நீண்டு உன்னிடத்திலே.. வருவான்.

தெய்வம் ,தெய்வத்தை நோக்கி எதற்காக திரிந்து கொண்டு இருக்கின்றாய் மனிதா?? சிறிது காலம் யோசிக்கிறாயா!!!  தெய்வத்தை எதற்கு வணங்குகின்றாய் என்று தெரிகின்றதா???

தெரிகின்றதா??? இல்லை!! புத்திகள்!! புத்திகள் அன்போடு வணங்கு மனிதா பின். மாயை மாயத்தில் சிக்கிக்கொண்டு அழிந்து கொண்டு பிறப்பெடுத்து பிறப்பெடுத்து.... தேவையா???

பிறப்பை யாராலும் பின் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது எதனால்?? பிறப்பை தடுத்துக் கொள்ளலாம் என்றால். """அன்பு"""...!!

ஆனால் மனிதர்கள் பின் தந்திரங்களாலும் மந்திரங்களாலும் இன்னும் என்னென்ன விஷயங்கள் ஆகவும் பிறவியை கடந்துவிடலாம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். முடியாது...... முடியாது முட்டாள் புத்தி இல்லாத மனிதனே.......

புத்தி இல்லாது..!! உந்தனக்கும் எங்கே?? போனது ??புத்தியடா...

புத்தியடா !!ஏன்?? பிறப்பறுக்க பிறப்பறுக்க முற்று பெறலாமென்பதற்கிணங்க மந்திரங்கள், தந்திரங்கள், ஏன்?? உந்தனக்கு எவை என்று கூட துன்பத்தைப் போக்குவதற்கு வழிகள் இல்லையே!!!

வழிகள் இல்லையே மனிதா!!!! இச்சைகள் உன்னை வாட்டுகின்றது இச்சைகள் உன்னை வாட்டுகின்றது எதனால்?? மந்திரங்கள் தந்திரங்கள் எதற்காவாவது பயன்படுத்த கூடுமா என்பது கூட தெரியாமல் போய் கொண்டிருக்கிறாய் மனிதா!!!

மனிதா சிறிது தூரம் நில். நின்றிட்டு இனிமேலும் மாய வலையில் சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு சென்று கொண்டு இருக்காதே!!!!

அப்படி சென்று கொண்டிருந்தாலே ஓர் பள்ளம் வரும்.

அவ் பள்ளத்தையும் உணர்ந்து விடாமல் சென்று கொண்டிருக்கின்றாயே மனிதா!!!

ஆனால் பின் யோசித்துக்கொள்ளு.....

பின் இப்படியே சென்று கொண்டிருந்தால் பள்ளம் வரும் அதில் விழுந்து விட்டால் யாரும் காப்பாற்றவும் வர மாட்டார்கள்.

இதற்கு மந்திரமும் தந்திரமும் உதவாது இறைவனும் உதவமாட்டான்.

ஏனென்றால் இறைவனுக்கு தேவை அன்பு அவ் அன்பு நீ செலுத்தப்படவில்லை..
செலுத்தப்படவில்லை மனிதன் என்ன?? அனைத்தும் செய்பவனா?? என்ன???

மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது.

இதை பல சித்தர்களும் பல ஞானியர்களும் ஏன் யானும் சொல்லிவிட்டேன் மனிதன் பொய் .

அவனால் ஏன் இந்த மந்திரங்களையும் தந்திரங்களையும் கொடுக்க கொடுக்க இதனையும் பின் முடிக்க என்று கூறினானே ஏன் இவந்தனக்கு, எந்தனக்கு, இவ்வாறு நிலைமைகள் பணங்கள் வேண்டும் என்று ஆனால்...

அவந்தன் பணங்கள் கொடுக்கலாமே??!!!!

ஆனால் கொடுக்க முடிவதில்லையே..... திருடன் மனிதன்.

புத்திகெட்ட ஒரு அழகான திருடன் என்பேன்.

தெளிவானது??? எது உணர்ந்து கொள்!! மனிதா

கலியுகத்தில் இன்னும் பொய்யான துறவிகள் போலி குருமார்கள் இவையெல்லாம் பின் உடை அணிந்திட்டு.... யான் இறைவன் என்னால் அனைத்தும் செய்ய முடியும் என்பதை பொய்யான வாக்குகளை நம்பி ஏமாறாதீர்கள்.

உன் வேலையை பார்த்தாலே சரியான முறையில் அன்பை செலுத்தினாலே இறைவன் ஓடோடி வருவான்.

மர்மம் இன்னும் ஒளிந்து கொண்டிருக்கின்றது இவ் மலையில்...காலடி வையுங்கள் யான் ஆசீர்வதித்து மெய்யானது என்றுகூட என்பதைக்கூட உணர்த்தி விடுகின்றேன்.

இவ் மலைக்கு வாருங்கள்... சென்னி மலையிலும் அற்புதமான காட்சிகள் உண்டு.

உண்டு. அவ் மலையிலும் சித்தர்கள் வந்தாலே மாற்றி விடுவார்கள் சித்தர்கள்.

இங்கு வந்தாலே மாற்றி விடுவார்கள் சித்தர் பல சித்தர்கள் உண்டு உண்டு.

நிச்சயம் இவ் மலைகளுக்கு சென்று வந்தாலே போதுமானது புத்தியை மாற்றி விடுவான்.

ஏன்??! பழனி மலைக்கு பின் பயணம் மேற்கொண்டால் பின் ஆனாலும் பயணம் கொண்டே இருந்தாலும் புத்திகள் மாறக்கூடும்... உண்மை நிலைகள் என்னவென்று பழனி ஆண்டவன் தெரிவித்து விடுவான்.

தெரிவித்து விடுவான் இன்னும் சூட்சுமங்களோடு இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்களப்பா... இவ்வுலகத்தை திருத்த.

மேற் சொன்ன வார்த்தைகள் உண்மையானவை.

உண்மையானவையே என்று தெரிந்துகொள்!! மனிதா தெரிந்து கொள் !!மனிதன் மனிதனை நம்புவது எக்காலம்?? எதனை என்று கூற மனிதன்  மனிதனை பின் நம்பிக்கொண்டே இருந்தால் உலகம் தாழ்ந்து கொண்டே செல்லும்.

மனிதன் மனிதனை எப்போது? நம்பாமல் இறைவனை நம்புகின்றானோ!!! அப்பொழுதுதான் உலகம் செழிக்கும். சொல்லிவிட்டேன்.... மறு வாக்குகளில் பல சித்தர்களும் வந்து உரைப்பார்கள்.... முருகா!!!!! முருகா!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

 அருள்மிகு
 வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி
 திருக்கோவில்

பட்டாலியூர்,
சிவன்மலை,
காங்கேயம் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.

Wednesday, 23 March 2022

சித்தன் அருள் - 1100 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த அறிவுரைகள்!


ஸ்ரீமந் நாராயணர் இவ்வாறு கூறியதும் கருடபகவான், திருமகள் தலைவனைத் திருவடி தொழுது  "ஓ, அனந்த கல்யாண குண நிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜன்மத்தை அடைகிறான்?  அத்தகைய பிரேத ஜன்மத்தை அடைந்தவன் என்ன பொருள்களை உண்பான்?  எங்கே வாசிப்பான்? இவற்றை அடியேனுக்குப் புகன்றருள வேண்டும்" என்று கேட்கவும் பரமபதநாதன் பக்ஷிராஜனை நோக்கி கூறலானார்.

 "புள்ளரசே ! பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மத்தை அடைவான்.  ஒருவன் பெருவழிகளில் கிணறு, தடாகம், குளம் முதலியவற்றை வெட்டியும்,  தண்ணீர்ப் பந்தல் வைத்தும் சத்திரம், தேவாலயம் முதலியவற்றைக்  கட்டியும் பலருக்கும் பயன்படும்படியான  தருமத்தைச் செய்ய, அவனது குலத்தில் பிறந்த ஒருவன், முன்னவன் மரித்தவுடன் அவற்றை விலைக்கு விற்பானாயின், அவன் மரித்தவுடன் பிரேத ஜன்மத்தை அடைவான்.  மேற்சொன்ன தர்மங்களை ஒருவன் செய்து, பின்னர் ஒரு காலத்தில் அவனே அவற்றை விற்பானாகில் அவனும் பிரேத ஜன்மத்தை அடைவான்.  பிறர்க்குரிமையான பூமியை அபகரித்தவனும், கிராமத்தின் எல்லைகளையும் வயலின் எல்லைகளையும் பூங்காவின் எல்லைகளையும், ஆரணியத்தின் எல்லைகளையும் புரட்டித் தன் நிலத்தோடு அந்த நிலத்தைச் சேர்த்துக் கொண்டவனும், குளத்தையோ கிணற்றையோ தூர்த்து, அதன் நிலத்தைத் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டவனும், சண்டாளனிடம் அடிப்பட்டு மரணமடைத்தவனும், மிருகங்களால் கடிபட்டு இறந்தவனும். இடி விழுந்து அதனால் மாண்டவனும், நெருப்பில் குதித்து மரித்தவனும், தீயிடுட்டுத் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டவனும், மாடு முட்டி மாண்டவனும், கழுத்தில் சுருக்கிட்டு நான்று மாண்டவனும், விஷம் உட்கொண்டு உயிர் துறந்தவனும், ஆயுதத்தால் மாய்ந்தவனும்,  சம்ஸ்காரம் செய்யத் தனது குலத்திலேயே ஒருவரும் இல்லாமல் இறந்தவனும்,  தேசாந்திரங்களில் ஒருவரும் அறியாதவாறு இறந்தவனும் ,  திருடனால் மாய்ந்தவனும்,  விருஷோற்சர்க்கம் செய்யாமல் மாண்டவனும், தாய்  தந்தையர்க்குச் சிரார்த்தம் செய்யாமலேயே இருந்து இறந்தவனும் பிரேத ஜன்மத்தை அடைவார்கள்.  ஓ! வைனதேயா!  பிராமணன் ஒருவன் இறந்தானென்றால், அவன் சம்பத்தப்பட்ட ஈமக்கிரியைகள் அனைத்தையுமே பிராமணன் தான் செய்யவேண்டும்.  எந்த ஜாதியான் இறந்தாலும், அவனது அந்திமக்கிரியைகளை, அவனவன் ஜாதியைச் சேர்ந்தவனே செய்ய வேண்டும். அவ்விதமில்லாமல் இறந்த பிராமணனுடைய சம்ஸ்காரத்திற்கான நெருப்பு, எருமுட்டை, வைக்கோல், அரிசி முதலியவற்றைச் சுடுகாட்டுக்கு இதர ஜாதியான் எடுத்துச் செல்வானானால், இறந்த அந்தப் பிராமணனும் சம்ஸ்காரப் பொருள்களைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றவனும் பிரேத ஜன்மத்தை அடைவார்கள். மலைமீதிருந்தோ,     மலைச்சாரலிலிருந்தோ   விழுந்து அந்த இடிபாட்டில்   அகப்பட்டு இறந்தவனும், கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டோ, விழித்துக் கொண்டுருக்கும் போதோ செத்தவனும், மேல் வீட்டில் உயிர் நீத்தவனும்,  தெய்வத் திருநாமங்களை உச்சரிக்காமல் உயிர்விட்டவனும், ராஜஸ்வாலையான  பெண், சண்டாளன் முதலியோரைத் தீண்டிவிட்டு, ஸ்நானம் செய்யாமல் சூதகத் தீட்டோடு இறந்தவனும் , ரஜஸ்வாலையாயிருக்கும்  போது அவ்வீட்டில் இறந்தவனும், பிரேத ஜன்மத்தை அடைவார்கள்.  தாய், மனைவி, பெண், மருமகள் முதலியவர்களுடைய சரீர தோஷத்தைத் தன் கண்களால் பாராமலேயே பிறர் வார்த்தைகளைக் கேட்டு, ஜாதிப் பிரஷ்டம் செய்தவனும், மனுநூலுக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்குவோனும் தீர்மானஞ் செய்பவனும், அந்தணரையும், பசுக்களையும் கொல்பவனும்,  ஹிம்சிப்பவனும், கள் மதுபானம் முதலியவற்றை அருந்துவோனும், குரு பத்தினியைக் கூடியவனும், வெண்பட்டு, சொர்ணம் ஆகியவற்றைக் களவாடுவோனும் பிரேத ஜன்மத்தை அடைவார்கள்.  பிரேத ஜன்மம் அடைத்தோர் அனைவரும், எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவார்கள்" என்றார் திருமால்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Tuesday, 22 March 2022

சித்தன் அருள் - 1099 - அன்புடன் அகத்தியர் - மறு பிறவி தந்த கருணைத் தெய்வம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

இந்த உலகத்தில் அன்பை விட உயர்ந்தது எது??? சிறந்தது எது??? வேறெதுவும் இல்லை அன்பு ஒன்றுதான் இவ்வுலகத்தில் உயர்ந்தது சிறந்தது. அன்பே சிவம் என்பது திருமூலர் வாக்கு.

இவ்வுலகில் அன்பு ஒன்றே பிரதானமானது இறைவன் அதை மட்டுமே விரும்புகின்றான் நாங்களும் அதையேதான் விரும்புகின்றோம் வேறொன்றும் நாங்கள் எதிர் பார்ப்பதில்லை என்பது நம் குருநாதர் அகத்தியரின் திருவாக்கு.

இதனை தானும் உணர்ந்து மக்களும் உணர வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் எழுதி வைத்துள்ளனர் சித்தர்கள்.

இறைவன் தானே நம்மை படைத்தவன்  அவர்கள்தானே நம் தாய் தந்தையர்கள் அவர்களிடத்தில் எதிர்பார்த்து கேட்பது எப்படி தவறாகும்?? என்று சிலர் கேட்கலாம். எதிர்பார்த்து கேட்பதற்கும் கேட்டது கிடைப்பதற்கும் சில தகுதிகள் நமக்கு வேண்டும்.

அந்த தகுதிகளில் முதன்மையானது தூய அன்பு, நல்ல சிந்தனை நல்ல செயல் இவைதான் தகுதிகள்.

அதன் பின் தானாகவே நம்மை இறைவன் வழி நடத்திச் செல்வான்.  இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஆத்மா தனிபிரகாசமாய் ஒளிரும்.

அப்படி தூய அன்பினால் நம் அகத்தியப் பெருமான் மனதில் இடம்பிடித்து அவரால் மறுபிறவி பெற்ற அடியவரின் அனுபவங்களை பார்ப்போம்.

சிறுவயதிலிருந்தே அகத்தியப் பெருமான் பால் அளவற்ற அன்பு கொண்டவர். கணவர் மகன் மகள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் அகத்தியர் பாதமே கதி என வாழ்ந்து வருபவர்கள். இசை ஞானம் உள்ளவர்கள். இறைவன் கொடுத்த இசை ஞானத்தால் நம் குருநாதர் அகத்தியர் மேல் கொண்ட பக்தியை பாடலாக பாடி உருகி வழிபடுபவர்கள்.

குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் என்னென்ன உரைக்கின்றாரோ அதன்படியே இம்மி அளவு பிசகாமல் அப்படியே செய்து வருபவர்.

எல்லோரும் நம் குருநாதர் அகத்தியரை குருநாதர், குரு,  அகத்தியப்பன், அகத்தீசன், என பக்தியால் விளிப்பது வழக்கம். ஆனால் அந்தப் அம்மையாரோ... குருநாதரை தாத்தா என்று தான் அன்போடு அழைப்பார்.

அம்மையார் அன்போடு தாத்தா தாத்தா என்று அழைப்பதை குருநாதரும் ரசித்துக் கொண்டே..... அம்மையே யானும் இளமையானவன் தான் .... எனக்கொன்றும் வயதாகி விடவில்லை நித்ய சிரஞ்சீவியம்மா யான்.

நீ என்னை தாத்தா தாத்தா என்று அழைக்கும் பொழுது உன் தாய் லோபமுத்ரா சிணுங்குகின்றாள். செல்லமாக கோபமும் கொள்ளுகிறாள்.

யாங்கள் உன்னை மகளாக ஏற்றுக் கொண்டோம்... அன்பு மகளே..... என்று குருநாதர் உரைக்க..

ஆகையால் உன் விருப்பம் போல் என்னை அழை . உன் அன்பு அதுவே அது மட்டுமே எந்தனக்கு போதுமானது.

ஒரு சிறு பிரச்சனை என்றாலும் தாத்தா என்று சரணடைந்து விடுவார் குருநாதரும் பொறுமையாக மகள் தெளிவுகள் பெறும்வரை உபதேசங்கள் செய்து கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு ஆழமான உறவு முறை இருவரிடையே இருக்கும்.

இசைக் குடும்பம் என்பதால் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் மனம் உருகி பாடி வழிபடுவார்கள்.

ஒருமுறை ராமேஸ்வரம் சென்று ஒவ்வொரு சன்னதியாக மனம் உருகி பாடி தொழுதுவிட்டு ஜீவனாடி வாக்கு கேட்கும் பொழுது.... அண்ட சராசரங்களையும்  ஈரேழு பதினான்கு உலகத்தையும் படைத்து காத்தருளும் ஈசனே வந்தார்....... அன்பு குழந்தாய்காள்!!!! நீங்கள் பாடிய பாட்டைக் கேட்டு யான் ஓடோடி வந்தேன்.... மீண்டும் ஒரு முறை பாடு . யான் கேட்க வேண்டும் என ஈசனே விருப்பப்பட்டு மீண்டும் பாடச்சொல்லி காது குளிர கேட்டார்.

மொத்த குடும்பமும் சர்வமும் அடங்கி கைகூப்பித் தொழுது ஈசனே நம்மிடத்தில் பாடச் சொல்லிக் கேட்கிறார் என்றால் அது நமக்கு கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம் என மீண்டும் அப் பாடலை பாடி ஈசனை கேட்பிக்க வைத்தனர்.

ஈசனும் பாடல் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதங்கள் கொடுத்து விட்டுச் சென்றார்.

இதுமட்டுமல்ல சமீபத்தில் திருச்செந்தூரில் அழகன் முருகன் இவர்களுடைய பாடல்களை கேட்டு ""யானும் மெய்மறந்து ஆடினேன் என்று மகிழ்ந்து ஆசீர்வாதங்கள் தந்தார்.

இறையருளும் குருவருளும் நிரம்பப் பெற்று நல் முறையாக வாழ்ந்து வரும் குடும்பம்.

சமீபத்தில் திடீரென அந்த அம்மையாருக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

சிறு பிரச்சினையாக தொடங்கி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கையில் கிடத்தி விட்டது.

குடும்பத்தினர் அனைவரும் பதறி போய் விட்டனர்.

திடீரென்று இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது குருவிடமே வாக்கு கேட்போம் என நாடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை  தொடர்பு கொண்டபோது.......

சுவடியில் வந்த குருநாதர் அகத்தியர் "அம்மையே கவலைப்பட ஒன்றுமில்லை... யான் இருக்கின்றேன் அனைத்தையும் யான் பார்த்து கொள்கின்றேன். பயப்பட வேண்டியதில்லை" என்று வாக்குகள் உரைத்தார் .

அடுத்தடுத்த நாட்கள் நாளுக்கு நாள் உடல் நிலை மிகவும் மோசமாகவே பயந்து போன குடும்பம் குருநாதரிடம் மீண்டும் வாக்குகள் கேட்ட பொழுது...

யான் இருக்கின்றேன் யான் இருக்கின்றேன்.

""அகத்தியனை நம்பியவரை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரமில்லை!  அனைத்தையும் யான் பார்த்துக்கொள்கிறேன் மீண்டும் வந்து பின் வாக்குகளாக உரைக்கின்றேன் என்று கூறிவிட்டார்.

நான்கு நாட்கள் என்னவென்று கூற முடியாத நிலை மருத்துவர்களும் போராடிக் கொண்டிருந்தனர் குடும்பத்தினரோ மிகவும் பயந்துபோய் குருநாதர் வேறு எதுவும் உரைக்க மாட்டேன் என்கிறாரே என்ன நடக்கும் என்று தெரியாமல் உறைந்து போய் இருந்தாலும் குருநாதர் மீது கொண்ட நம்பிக்கையை கைவிட்டு விடவில்லை.

அந்த அம்மையார் அவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்த பொழுதும் வாயிலிருந்து அகத்தியா!!!! தாத்தா தாத்தா!!!! என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.

குடும்பத்தினர் இந்த இக்கட்டான சூழ்நிலையில்  மீண்டும் குருநாதரிடம் வாக்குகள் கேட்டபொழுது குருநாதர் அதிகமாக எதுவும் உரைக்கவில்லை...

அவள் என் மகள் எந்தனக்கு தெரியும் அவளுக்கு என்ன செய்யவேண்டும் என்று. கவலைப்படாதிருங்கள் மீதி அனைத்தும் யான் பார்த்துக் கொள்கிறேன். என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அடுத்த நான்கு நாட்கள் உடல் நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உடல் மெதுமெதுவாய் ஆரோக்கியம் அடையத் தொடங்கியது. சிறிது நாளில் பூரண குணமடைந்தார்.

மீண்டு வந்த அவர் உடனடியாக அவர் செய்த செயல் என்னவென்றால்

குருநாதர் அகத்தியரிடம் வாக்கு கேட்டது தான்.

தாத்தா நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் அது உங்கள் கருணையால் மட்டுமே உங்கள் அருள் இல்லாமல் நான் இல்லை. ஆனாலும் எனக்கு ஏன் இந்த கஷ்டம் வந்தது இந்த அளவிற்கு கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இருக்கின்றேன் என்ன காரணம்??? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா அல்லது என்னுடைய கர்மாவா??? எது என்னை இவ்வளவு தூரம் வாட்டி வதைத்தது நீங்கள் என் கூடவே இருக்கின்றீர்கள் என்று கூறியிருந்தீர்கள் உங்களையும் மீறி எனக்கு ஏன் ?இந்த கஷ்டம் வந்தது என்று கேள்விகளைக் கேட்க

குருநாதர் அகத்தியர் "என் அன்பு மகளே நல் ஆசிர்வாதங்கள் என்பேன். என்னை நம்பியோரை யான் கைவிட்டதில்லை.
உன் விதியே முடிந்துவிட்டது சொல்லப்போனால் பிரம்மன் உனக்கு ஆயுள் எழுதி வைத்தது இவ்வளவு காலம் தான். என்னையே நீ நம்பி விட்டாய் என் மீது அளவு கடந்த அன்பை வைத்து இருக்கின்றாய் செல்ல மகளே நீ செய்த புண்ணியங்கள் நிரம்பி வழிகின்றது உன்னை எப்படி யான் கைவிடுவேன்??? பிரம்மனிடம் மன்றாடி உன் விதியையே மாற்றி எழுதினேன். அந்த நான்கு நாட்களும் உன் அருகிலேயே இருந்தேன் வேறு எங்கும் யான் செல்லவில்லை. உன் கூடவே இருந்தேன்.  இவையன்றி கூற இன்னும் சொல்லப்போனால் இது உனக்கு மறுபிறவி அகத்தியன் கொடுத்த மறுபிறவி நல் ஆசிர்வாதங்கள்.  அன்பு மகளே கடை நாள் வரை என் பிள்ளையாகவே இருந்து விடு. ஈசன் திருவருளும் கந்தன் திருவருளும் என்னுடைய ஆசிகளும் உந்தனுக்கு  கடை நாள் வரை கூடவே இருக்கும் .

இன்னும் நீ பல புண்ணிய காரியங்களை செய்வாய் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை. நல் முறையாக வாழ்ந்துட்டு பின் எந்தனை வந்தடைவாய். இதனால் குற்றங்கள் இல்லை துயரங்கள் இல்லை... நல் முறையாக என் ஆசீர்வாதங்கள் என

 வாக்குகள் உரைக்க உரைக்க..... கேட்டுக் கொண்டிருந்த அந்த அம்மைக்கு பேச வார்த்தைகள் வரவில்லை! கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடிக் கொண்டே இருந்தது .

தாத்தா !!!தாத்தா !!!!என் அகத்தியப்பா.... உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை இந்த உயிர் நீ எனக்கு நல்கிய பிச்சை.... நீ எனக்கு அளித்த இந்த மறுபிறவியை உன் திருநாமத்திற்கே அர்ப்பணிக்கின்றேன். இனி முதல் ஏன் நேற்றுவரை என் வாக்கு செயல் எண்ணம் அனைத்தும் அகத்தியன் என்று இருந்தேன் இனி அதைவிட பல மடங்கு நடந்து கொள்கிறேன்.

என்னால் இந்த உலகத்தில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு தாத்தா நீங்கள் எண்ணியவாறு  நடந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு நடந்து கொள்வேன்.  மாற்றங்கள் ஏற்பட நானும் துணையாக இருப்பேன் என்று மனதில் உறுதி ஏற்று குருநாதருக்கு நன்றி செலுத்தினார்.

மாசற்ற அன்பை காட்டிய அம்மையாருக்கு குருநாதர் பிரம்மனிடம் போராடி விதியையே மாற்றி மரணத்தையே மாற்றி எழுதி மறு பிறவி தந்த நம் குருநாதர் அகத்தியரின் கருணை எப்பேர்ப்பட்டது? சொல்ல வார்த்தைகளே இல்லை அவரின் கருணை அளவிட முடியாத ஒன்று......

அன்பின் பாதையைத் தேர்ந்தெடுதால் அந்தப் பாதை  இறைவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.  நமக்கு ஒன்று என்றால் அந்த இறைவனே ஓடிவந்து உதவிடுவான் அருகிலேயே வைத்துக் கொள்வான்.

இது குருநாதரின் வாக்கு. இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

Monday, 21 March 2022

சித்தன் அருள்-1098-அன்புடன் அகத்தியர்- காகபுசுண்டர் வாக்கு!


18/3/2022 பங்குனி உத்திரம் / பௌர்ணமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில்  காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 

ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் மனதில் நிறுத்தி வாக்குகளாக உரைக்கின்றேன் புசுண்ட முனி. 

விதவிதமாக இன்னும் பொய்கள் கூறிசொல்லி திரிவார்கள்  எவர் என்று அறியாமலே நிலைமையிலே.

நிலைமையிலே இன்னும் பல கோடி திருடர்கள் வருவார்கள் அதனால் எவரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.

எதை என்று கூற படைத்தவனை நம்பு!!! பின் மனிதர்களை நம்பிவிடாதீர்கள் எளிதில் கூட.

மனிதன் திறமையானவன் எதில் என்றால்?? ஏமாற்றுதலில். ஏமாற்றுவதில் என்றேன்.

ஆனாலும் அவன் தான்  ஏமாறுகின்றான். என்று கூட தெரியாமல் சுற்றிசுற்றி வருகின்றான்.

எதனையும் என்று நிலைநிறுத்தாத பொழுது பொய்கள் இதனையும் என்று கூற.

ஒருவன் எதனையும் என்று அறியாத அளவிற்கு கூட வந்துவிட்டால் அவந்தனக்கு ஒன்றுமில்லை.

இறைவன் தரிசனங்கள் எப்படி?? பார்ப்பது ??என்பது கூட !!இனி எவரும் உணர்ந்திருக்கவில்லை.

யான் யுக யுகங்களாக பிறந்து பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டு இவ்வுலகத்திற்கு பின் நல்செய்தியை பரப்பினேன் யுக யுகங்களாக.

ஆனால் மனிதன் பக்குவமாக ஏற்பதில்லை.

ஏனென்றால் மனிதனுக்கு இறைவனை எப்படி காண்பது என்பது தெரியாமல் போய்விட்டது.

இதை யுக யுகங்களாக யான் பார்த்துக் கொண்டேதான் வருகின்றேன்.

ஆனாலும் சித்தர்கள் வரும் காலங்களில் தன் தகுதிகளுக்கு ஏற்ப மனிதர்களை தேர்ந்தெடுத்து நிச்சயமாய் இறை தரிசனத்தை வாரி வழங்குவார்கள் என்பேன்.

என்பதைவிட சிறப்பு ஆனது உண்டு என்பதற்கிணங்க இவ்வுலகத்தை ஆட்டிப்படைக்கும் ஈசனும் சற்று கோபம் தான்.

ஏனென்றால் மனிதன் அப்படிப் பட்டவனாக இருக்கின்றான்.

எதனையும் நிரூபிக்கும் அளவிற்கு மனிதர்களிடத்தில் எதனையும் நிரூபிக்கும் அளவிற்கு உள்ளது என்றால்?? பொய்கள் பொய்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றான் மனிதன்.

ஆனால் அதன் விளைவு என்னவென்று கூட தெரியாமல் வாழ்கின்றான்.

இவ்வுலகத்தில் பின் பணங்கள் தேவையில்லை வாழ்வதற்கு. புண்ணியங்கள் தான் அவசியமாகின்றது.

புண்ணியத்தை ஒருவன் எப்பொழுது பெற்றுக் கொள்கின்றானோ?? அவந்தனைத்தேடி அனைத்தும் வரும்.

பின் பணங்கள் பணங்கள் என்று பின்னால் அலைந்தாலும் பின் புண்ணியங்கள் இல்லை என்றாலும் பணங்கள் அவை பின் அவந்தனை பாதுகாக்காது என்பேன்.

ஆனால் இன்றைய மனிதர்கள் சித்தர்களை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள் இவையன்றி கூற.

ஏனென்றால் அவர்களுக்கு ஏன் இதனை செய்கின்றார்கள் என்றால் ஏன் கண்ணுக்குப் புலப்படவா?? போகின்றார்கள் சித்தர்கள். கண்ணுக்கு புலப்படவா?? போகின்றார்கள் இறைவன்கள். என்றுகூடப் பின் பொய்.

ஆனாலும் நிச்சயமாய் வரும் காலங்களில் கலியுகத்தில் யாங்கள் காட்சியும் அளிப்போம் .நல் மனிதர்களை தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பு மிக்க இவ்வுலகமாக வரும் காலங்களில் மாற்றுவோம்.

பொய்யானவர்களை நிச்சயம் அழிப்போம் என்பதைக்கூட ஏன் இப்பொழுது தெரிவித்துக்கொள்கின்றேன்.

தெரிவித்துக்கொள்கின்றேன் என்பதைவிட பார்வதிதேவியும் வரங்கள் வரங்கள் தந்து கொண்டே இருக்க மீண்டும் மீண்டும்  சித்தர்கள் இவ்வுலகத்தை ஆட்சி செய்வார்கள் என்பது திண்ணம்!! திண்ணம்!! திண்ணம்.!!

அதனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பதைக்கூட யான் சொல்லி விடுகின்றேன்.

அப்பொழுது எதை என்று கூட இப்பொழுதே சொல்லி விடுகின்றேன் எச்சரிக்கின்றேன் அனைவரையும் கூட.
எச்சரிக்கின்றேன் மீண்டும் மீண்டும்.

பின் பொய்கள் சொல்லி இவை செய்தால் அவை அவை செய்தால் இவை என்றெல்லாம் பின் சொல்லிக்கொண்டே திரிந்தால்..... மனிதா!!! உன் நிலைமை அழிவிற்குரியது என்பேன்.

யோசித்துக் கொண்டு இரு !!உந்தனுக்கு எவை எதனை என்று இறைவன் கொடுப்பதில்லை ?? ஏன் பொய் சொல்லித்தான் நாடகம் நாடகம் இதையன்றி ஆனால் எல்லாம் ஒரு நாடகம் என்று கூட பின் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய் அதில் கூட மனிதா அதனால் பின் கவலைகள் கஷ்டங்கள் வரும் என்பேன்.

அதனால் இப்பொழுதே சொல்கின்றேன் சித்தர்களின் யான் வணங்கினேன் ,பின் அனைத்தும் செய்தேன் ,ஏன்?? கவலைகள் இவ்வாறு என்பதைக்கூட.

ஆனாலும் நீ ஒழுக்கமாக இல்லை பொய் சொல்லி திரிந்துகொண்டு பின் இதனையுமன்றி என்று கூட வாழ்க்கை நடமாடி அதனால் நேர்மையைப் பின்பற்றுங்கள் உண்மையைச் சொல்லுங்கள் பின் ஒழுக்கமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

பொறாமை குணம் ஆகாது ஒருவன் பொறாமையை பின்பற்றினால் அவ் பொறாமையே அவந்தனை அழித்துவிடும். என்பதை கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்.

இவ்வுலகில் நிச்சயம் மாறும் காலங்கள் எங்களுடைய காலங்கள்.

ஆனாலும் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.

சித்தர்கள் பின் நல்லோர்களை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஆனாலும் பின் ஏமாற்றுபவர்கள் அதிகம் இவ்வுலகத்தில் நல்லோர்களை விட.

இதனை பல வாக்குகளிலும் பல சித்தர்கள் செப்பி...செப்பி... ஆனால் மனிதர்கள் திருந்திய பாடில்லை.

அதனால் நிச்சயம் யாங்கள் தண்டனைகள் தான் கொடுப்போம்.

கொடுப்போம் என்பதைவிட மீண்டும் மீண்டும் செப்புகின்றபடியால் ஆனாலும் சில காலங்கள் தான் இவையன்றி கூற ஏமாற்ற முடியும்.

இதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

யான் ஏமாற்றுகின்றேனே....யான் நலமாகத்தான் உள்ளேன் என்பது கூட மனிதனின் வாக்கு.

ஆனால் எப்படி?? இவந்தனை கவிழ்க்க வேண்டும்... என்பதை கூட சித்தர்கள் சரியாக அறிந்து வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை நிச்சயம் தெரிவிப்பேன்.

அதனால் பக்தி என்பதை உன் மனதில் செலுத்து.

அன்பை செலுத்து.

மற்றவை இயலாதவர்களுக்கு பின் போய் உணவிடு.(அன்னதானம்). போதுமானது.

இவையன்றி கூற சித்தன் ஞானி மகரிஷி இவையெல்லாம் பொய் என்று.. எவை என்று கூற மனிதன் ஏற்படுத்துவான் என்பேன்.

ஒருவன் ஞான நிலைக்கு வருவதென்றால் அவந்தன்  பரதேசி போல் இட்ட பிச்சையெல்லாம் அலைந்து திரிந்து பின் வருந்தி பின் எங்கெல்லாம் உறங்கி படுத்து பின் திரிகின்றானோ அவன்தான் உண்மையான ஞானி.

ஆனால் அவந்தனும் இவ்வுலகத்தில் பின் வருவார்கள் கோடி ஆனால் பின் அனைத்தையும்  ஓரிடத்தில் இருந்து பின் பெற்று பெற்று வாழ்பவன் ஓரிடத்தில் நிச்சயமாய் ஞானியாக முடியாது.

ஏனென்றால் இதனையும் நேற்றைய பொழுதில் அகத்தியன் எவ்வாறு என்பதையும் கூட உணர்த்தி உணர்த்திச் சொல்லிக்கொண்டே இருக்க கவலைகள் இல்லை.

இல்லை என்பதற்கிணங்க நாடகங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டே இருக்கின்றான் இறைவன்.

ஆனால் நாடகத்தில் பின் மனிதர்கள் பொய்யானவற்றையே நேசிக்கின்றார்கள் உண்மையான வாழ்க்கைக்கு வந்தாலே போதுமானது அழிவுகள் தடுக்கப்படலாம் என்பேன்.
என்பதைவிட இன்னும் இன்னும் அழிவுகள் கூடிக் கொண்டே தான் போகின்றது.

இதனால் எச்சரிக்கின்றேன் ஏனென்றால் இவ்வாறே செய்து கொண்டிருந்தால் நீங்கள் வரும் காலங்களில் இறைவன் என்ன செய்தான்?? இறைவன் இல்லை என்ற வாக்குகள் சில சில மனிதர்களால் உண்டாகும்.

அதனால் எச்சரிக்கின்றேன் இறைவனை பயன்படுத்த வேண்டாம் சித்தர்களை எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம் இதை என்று கூற பின் ஆனாலும் பொய்யான வாழ்க்கையை நின்று நின்று பார்த்தால் ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை நிச்சயம் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே வருகின்றோம் ஒவ்வொருவருக்கும்.

இதனையுமென்று பலவழிகளிலும் பல ஞானத்தைப் பெற்று பின் பல மனிதர்களை உயர்த்தி வைத்தல் முதல் இதனையும் என்று பல மக்களுக்கு உயர் புண்ணியங்கள் செய்தல் இவையென்றும் கூட புண்ணியத்திற்கு வழிவகுக்கும் கூட இவ்வாறு வழிவகுப்பதை எப்படி என்பதைக் கூட வரும் வரும் காலங்களில் பல சித்தர்கள் உரைப்பார்கள்.

இதனையும் நன்கு பயன்படுத்தி எப்பொழுது மற்றவருக்காக எதை என்று கூற இப்படி செய்தால் நலம் ஆகும் ஒரு நல் வழி சென்றால் நலமாகும்.

பின் இறைவனை நாடு .!!!ஒழுக்கத்தை கடைபிடி.!!! நற்பண்புகளை மனதில் இட்டு நல் எண்ணங்களை வளர்த்து வளர்த்து வர இறையருள் குவியும்.

ஆனாலும் ஒன்றை கேட்கின்றேன் அனைத்து மனிதர்களையும். ஏன்?? இளமையில் பின் இறைவனிடம் நாட்டம் போகவில்லை?? எவன் ஒருவருக்கு இளமையிலேயே அதாவது 15 ,16, வயதுகளிலே பின் இறைவனை பிடித்துக் கொள்கின்றானோ அவந்தன் நிச்சயமாய் உயர் படுவான்.

ஆனால் 16, எவை என்று கூற 20, 25, வயதுகளில்  இவை தன்னில் மனிதனுக்கு பக்திகள் சிறப்பாக இல்லை.

இல்லை என்பதாலும் இதை என்று கூற ஒரு குறிப்பிட்ட கால அளவில் கூட அனைத்தையும் இழந்து விட்டு பின் எதிரே நிற்பான் எதிரே நிற்பான் இறைவனிடத்தில்.

இறைவனிடத்தில் எதற்காக வணங்குகின்றோம் என்பதை கூட தெரியாமல் வணங்குகின்றான்.

வணங்குகின்றான் மேன்மையாவதற்கு. ஆனால் இறைவன் செய்வானா?? என்ன??

ஓர் உபயத்திற்காகவே இறைவனை பயன்படுத்துகின்றான்.

ஆனால் இறைவன் நிச்சயமாய் உதவிட மாட்டான்.

நற்பண்புகள் நீண்ட ஒழுக்கங்கள் உயர்ந்த மேன்மைகள் மேன்மை எண்ணங்கள் இவையெல்லாம் பொய் சொல்லாமை.!!! பிறர் மனதை காயப்படுத்தாமை.!!! பிற உயிர்களைக் கொல்லாமை.!!!

சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலான்( வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்) இவைதான் பின்பற்றினால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்.

இனிமேலும் சொல்கின்றேன் மனிதன் மனிதனிடம் பொறாமை குணத்தால் அழிவான் என்பேன்.

என்பதைவிட என்பதற்கு மேலானது பல பிறவிகளில் மனிதனை பார்த்துவிட்டேன் இப்பிறவியிலும் வாழ்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றேன்.

ஆனாலும் மனிதனின் இயல்புகள் சரி இல்லை அதற்கு தகுந்தார்போல் மனமில்லை.

மனம் ஒன்றி மனசாட்சிக்கு எதிராகவே செயல்படுவான் கலியுகத்தில்.

கலியுகத்தில் பொய்மைக்கே அதிக திறன் என்பதை எதனையும் என்றும்.

மனதில் நிறுத்து இறைவன் நாமத்தை மனதில் நிறுத்து இறைவன் நாமத்தை என்று சொல்வேன்.

புண்ணியங்களை பெற்றுத்தர இறைவனே வழி வகுப்பான் என்பேன்.

என்பதை விட என்பதற்கும் மேலானது ஒன்று உண்டு அதை பிற்பகுதியில் ஒரு சித்தன் உரைப்பான்.

என்பதைவிட ஏன்?? மனிதா !!!எதை??? எதையோ ??பின்பற்றி எதையெதையோ??? அழிவுகளை தேடிக்கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டினால் ஒன்றுமில்லை உருவாவதற்கு வழி இல்லை.

அதனால் எதை என்றும் கூற அகத்தியன் என்று சொல்வதற்கு அருகதை வேண்டும் ஆனாலும் நீங்களும் கூட சொல்லி சொல்லி அவன் பெயரை ஏமாற்றி ஏமாற்றி வருகின்றீர்கள்.

என்பதற்கிணங்க பின் அகத்தியனே நேரடியாக அனைவருக்கும் சில சில வினைகளை ஏற்படுத்துவான் என்பது உறுதியாக சொல்லிவிட்டேன்.

இதனால் எப்பொழுதும் எதை என்று கூற கருணை மனம் கொண்டவன் அகத்தியன்.

ஆனால் அவந்தனுக்கும் கோபங்கள் வர செய்கின்றார்கள் மனிதர்கள்.

ஆனாலும் பொறுத்து கொண்டிருக்கின்றான் அகத்தியன்.

அகத்தியனுக்கு இவை என்று கூற பின் கோபம் வந்து விட்டால் அகத்தியனும் மாறிவிடுவான்.

எதற்காக என்பதையும் கூட என்பதையும் கூற அவந்தன்
அவந்தனுக்கும் இவ்வுலகத்தை ஆட்டி படைக்கும் சக்திகள் உள்ளது.

உள்ளது அதனால் மனிதனின் நிலைமைகள் எதை என்று கூற தன் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறான் என்பதை கூட ஒத்துக்கொண்டு ஆனாலும் அவந்னையும் திருத்த வழி பார்க்கவில்லை இல்லை என்பதற்கிணங்க ஆனாலும் இதனையும் நன்கு அறிந்துகொண்டு பறை சாற்றாமல் உண்டு என்றால் அது அகத்தியனே.

அதனால் அகத்தியன் தண்டனைக்கு நிச்சயம் பின் நீங்கள் உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

உட்படுத்தி  கொள்ளாவிட்டால் பிழைத்துக் கொள்வீர்கள் நீங்கள் நிச்சயம் பின் இதை என்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

அதனால் சரியான நேரத்தில் ஒழுங்காக வழிபட்டு வாருங்கள் இறைவனை மனதில் தொழுங்கள்.

மனதில் தொழுதிட்டு வந்தாலே இன்னும் இறை சக்திகள் பலமாக பலமாக வரும்.

ஒன்றைச் சொல்கின்றேன் பக்தியை நீ செலுத்தினால் உன்னிடத்திலே இறைவன் தங்கி அனைத்தையும் செய்து கொண்டே இருப்பான்.

இதனால் எவ்வித குறைகளும் வராது. வராது என்பேன் என்பதை நிச்சயம் சொல்வேன்.

இன்பம் துன்பம் நிச்சயமாய் எதிர்பாராமல் வரும் ஆனாலும் இதை தடுப்பதற்கு இறைவனிடத்திலே.

ஆனாலும் இன்பம் என்பது பின் துன்பம் என்பது பின் துன்பம் என்பது தான் செய்த புண்ணியம் புண்ணியம் என்பதற்காக புரிவதில்லை துன்பம் எதனால் வருகிறது என்பதால் சொல்கின்றேன் புண்ணியத்தால் தான் வருகின்றது துன்பம் ஆனால் மனிதன் புத்தி கெட்ட மனிதன் தெரியாமல் வாழ்ந்து விடுகின்றான் ஏனென்றால் அப்புண்ணியங்கள் இறைவன் பாதைக்கு அழைத்துச் செல்ல வரும். துன்பத்தைக் கொடுக்கும் ஆனால் அப்பொழுது தான் துன்ப நேரத்தில்தான் அவன் அனைத்து கெட்ட நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்கிறான் இதனால் அவந்தனக்கு தெரியாமலே பாவங்கள் சம்பாதித்து கொள்கின்றான்.

ஆனால் இன்பம் எப்பொழுது வருகின்றது என்பதுகூட பாவங்களால் தான் இன்பம் வருகின்றது. இதையுமென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் இப்பாவங்கள் மூலம் இன்பம் இன்பத்தையும் பின் இன்பம் அதிலும் பாவங்கள் சம்பாதித்து ஆனால் நிலை இல்லாததாக வாழ்கின்றான்.

இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் மனித ஜென்மங்களே.. உங்களுக்கும் சொல்கின்றேன் புண்ணியங்கள் இருந்தால்தான் துன்பம் இன்பம் இவை எவை என்று பாவத்திற்கு தண்டனை இன்பம். துன்பம் புண்ணியத்திற்கு தண்டனை.

ஆனால் இதை மனிதன் இதுவரை உணர்ந்ததில்லை துன்பம் வந்தால் இறைவன் இல்லை இறைவன் இல்லை என்று சொல்கின்றான்.

ஆனால் துன்ப நேரத்தில் தான் இறைவன் பக்கத்திலே இருக்கின்றான் என்று பல நூல்களில் உரைத்து விட்டோம் இப்பொழுது புரிகின்றதா?? எதை என்று கூறும் அளவிற்கு கூட.

அதனால் துன்பம் வந்தால் மனம் பக்குவப்படும்.

பக்குவப்பட்டால் இறைவனை நேரடியாக காணலாம் .

அதனால் இதை என்று வரும் காலங்களில் மக்கள் பின் எவை பின்னால் ஓடுவார்கள் பின் இன்பம் என்று பின் பணத்தின் பின்னே ஓடி அனைத்தும் நம்தனக்கு கிடைக்க வேண்டும். ஆனாலும் எதிர்பாராத வித விதமாக இன்னும் பலப்பல உயரம் மனிதர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை கூட நான் நிச்சயம் சொல்வேன்.

எவ்வகையாக வந்தால் பின் உயர்ந்த இடத்தை வகிக்கலாம் என்பதை கூட யான் அறிந்து விட்டேன்.

இதனால் பக்தர்களே எதை என்று கூற பக்தி பக்தி என்று இறைவனிடத்தில் மட்டும் செலுத்துங்கள் நிச்சயம் உண்மையான பக்தனை உயர்த்தி நிச்சயமாய் யாங்கள் உயர்த்தி வைப்போம்.

சில விஷயங்களை அதை வரும் காலங்களில் நிச்சயமாய் சித்தர்கள் பின் எடுத்துரைப்பார்கள் மனிதர்களுக்கு. தன்னிடம் அதை பின் நன்றாக பயன்படுத்தி வந்தாலே போதுமானது போதுமானது வெற்றி வாகை சூடலாம்.

மற்றவர்கள் போல் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து பல பேர்களுக்கும் பலவழிகளில் பின் நிச்சயம் உதவிடலாம். இதனையும் என்று பின் மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் பக்தர்கள் நிச்சயமாய் சிறந்து விளங்குவார்கள் ஆனால் நிச்சயம் ஒருவரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள்.
போதுமானது என்பேன்.

ஏமாற்ற நினைத்தால் இறைவன் இறைவனும் உன்னை ஏமாற்ற நினைப்பான் என்பது உண்மை.

எதனையுமென்று அறிவதற்கு இன்னும் பலப்பல பல பல வழிகளிலும் யான் சொல்கின்றேன் இன்னும் பல யுகங்களிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் ஏன் யுகம் யுகங்களாக  தவம் செய்தவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

ஆனால் அதனால் சித்த நிலையை அடையவில்லை மகரிஷி என்னும் நிலையை அடையவில்லை ஞான நிலையை அடையவில்லை அஷ்டமாசித்திகளை பெறவில்லை ஏனென்றால் ஏனென்றால் எதனை விரும்புவது என்று ஒரு சூட்சமம் இருக்கின்றது உடம்பிற்குள்ளே. அதை இயக்கி விட்டால் பின் அஷ்டமாசித்திகளை பெறலாம். 

ஆனால் இக்காலகட்டத்தில் கலியுகத்தில் நிச்சயமாய் மனிதன் பெறமுடியாது என்பேன் பின் அப்படிப்பட்டவனும் பொய் சொல்லி திரிவான் அஷ்டமா சித்திகளை பெற்றவன் என்றுகூட.

ஆனால் அட்டமா சித்துக்கள் ஒருவன் பெற்றுவிட்டால் இவ்வுலகத்தில் ஆழ்ந்து ஆடலாம் என்பேன். இவ்வுலகத்தில் அனைத்தும் செய்யலாம் என்பேன்.

ஆனாலும் இதை உணர சித்தர்களே அஷ்டமாசித்துக்கள் பெற்றவர்கள். மறைமுகமாக வந்து வந்து செல்கின்றார்கள்.

ஆனால் மனிதன் நிச்சயம் பெற முடியாது பெறமுடியாது பொய்யான மனிதர்கள்  என்பதை கூட எடுத்துரைக்கின்றேன். 

அதனால் மனிதனை நிச்சயம் நம்பி விடுதல் கூடாது என்பேன்.

அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்பதெல்லாம் சொல்லுபவன் முதலில் முதல் வகையான திருடனில் வருவான் அவந்தனக்கு எவ்வகையான துன்பங்கள் வருவதை அவந்தன் நினைக்க மாட்டான். யாங்கள்தான் நினைப்போம்.

அதனால் மனிதனே சிறிது காலம் உணர்ந்து திருந்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது.

அதனால்தான் கிரகங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு விஷயத்தை நீங்கள் செய்துவிட்டால் கிரகங்கள் உங்களை அண்டாது.

வருங்காலங்களில் அதைச் செப்புவேன்.

ஆனால் இவைதன் வாக்குகள் நல்லோர்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும்.

எங்களுடைய வாக்குகள் யார்? யாருக்கு? போய் சேர வேண்டுமோ அவை அதனை நிச்சயமாய் யாங்கள் சேர்ப்போம்.

புண்ணியம் இல்லாதவர்களிடம் யாங்கள் நிச்சயமாய் சேர்க்க மாட்டோம்.

ஏனென்றால் வரும் காலங்களில் சூட்சமத்தை எப்படி பெறுவது என்பதை கூட சொல்லிக் கொண்டே வருவோம் அதனை பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்து விடலாம்.

ஆனாலும் நிச்சயம் இதைத்தான் யாங்கள் தெரிவித்து விட்டோம்.

நல்லோர்களுக்கே சேரும் போய் சேரும். அவ்வாறு வகையில் யாங்களே பின் அவன் மனதை இதை ஏன்?? படிக்க வேண்டும்??? என்று கூட மனதை மாற்றி அமைத்து விடுவோம்.

நிச்சயம் வரும் காலங்களில் இது நடக்கத்தான் போகிறது கலியுகத்தில் மனிதர்கள் நிச்சயம் மனிதன் மனிதனை அழித்துக் கொள்வது என்பதை விட மனிதனை மனிதன் காப்பாற்றிக் கொள்வதே சிறந்தது.

இறை தரிசனங்கள் பெற்று பெற்று பெற்று வாழ வேண்டியது  தங்கள் கடமை கடமைகளாக செப்புகின்றேன்.

இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் இவ்வுலகில் திரிந்து கொண்டிருக்கின்றது ஆன்மாக்களே நிச்சயமாய் உங்களுக்கு உதவிட முன் வரும்.

முன்வரும் என்பதைவிட சிறந்த வாக்குகள் இவை இல்லை. இவை இல்லை மென்மேலும் இவ்வுலகத்தில் நிச்சயமாய் சித்தர்கள் ஆட்சி படைத்து நல் விதமாகவே ஆக்குவார்கள். ஒழுங்காக இதை என்று கூற.

ஆனாலும் கலியுகம் முடிந்து கொண்டே வருகின்றது வருகின்றது அதனால் மனிதனின் செயல்கள் மாறுபட்டே செல்லும் இதனால் நன்மைகள் ஏற்பட ஒவ்வொரு வாக்கிலும் ஒவ்வொரு சித்தன் சூட்சுமமாக சொல்வதை நன்கு கேட்டறிந்தால் நன்று என்பேன்.

ஆனால் நிச்சயம் தீயவர்களுக்கு மட்டும் வாக்குகள் செல்லாது.

யாங்கள் பல நூல்களில் எழுதிவிட்டோம் இவ்வுலகத்தில்.

ஆனாலும் அது மறைந்து கிடக்கின்றது. அதையெல்லாம் வெளிக்காட்டிவந்தால் மனிதன் தவறான நடத்தையில் ஈடுபட்டு பணத்தை சேகரித்து மனிதனை அழித்து விடுவான்.

அதனால் எங்களுடைய நூல்கள் பல நூல்கள் மனிதர்களை சேரவில்லை.

யாங்கள் இனிமேலும் நல்லோர்களை நல்வழியாக்க சொல்வோம் பல சூட்சமங்களை.

 இவ்வாறு நடந்து கொண்டாலே போதுமானது.

இன்னும் நல் முறையாகவே நல் வாக்குகளும் சொல்வார்கள் சித்தர்கள் .அதை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் நிச்சயம் வெல்வார்கள்.

வெல்வார்கள் இவ்வுலகத்தில் பிறந்து விட்டாலே துன்பம், இன்பம் இதனை இன்னும் இதனையும் நேரிட்டு பார்த்தால் இதனைவிட வறுமை வறுமையில் எதில் அடங்கியுள்ளது எதனையும் என்று இதனையும் எடுத்துரைத்தால் நிலைமைக்கு காரணம் ஈசன்.

ஈசன் என்பதை விட இன்னும் பல வாக்குகள் உரைத்து வந்து இவ்வுலகத்தில் நிச்சயமாய் ஓர் எதை நிரூபிக்கும் அளவிற்கு நிச்சயம் தூதன் வருவான் பின் மக்களை அடிப்பான் என்பதற்கிணங்க நிச்சயம் வேண்டுதல் உண்டு.

(சிவராத்திரி அன்று காசியில் ஈசன் தன்னுடைய வாக்கில் தர்மம் அழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.

தர்மத்தை நிலைநாட்ட இன்னொருவன் நிச்சயமாக பிறப்பான் இவ்வுலகத்தில்.

அதனை வடிவமாகவே பிறப்பெடுத்தது உண்மை. 

பிறப்பெடுத்து வந்து கொண்டே இருக்கின்றான்.

நிச்சயம் அழிப்பேன் அழிப்பேன் என்று ஈசன் வாக்குகள் உரைத்திருந்தார்)

இதனையும் பின் பிறப்பதற்கு வழி விடு!! வழி விடு !!என்று கூட பின் இறைவனிடம் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது அவ் ஆன்மா.

நிச்சயம் அவ் ஆன்மா வந்து விட்டாலும் அனைவருக்கும் கஷ்டங்கள். அதனால்தான் மனிதர்களே நீங்கள் திருந்தி கொள்ளுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். 

தங்கள் வாழ்க்கையை தங்களே பார்த்துக்கொண்டு இறைவனை நேரடியாக தரிசித்து வாருங்கள் போதுமானது.

இப்பொழுது யான் சொல்கின்றேன் எப்பொழுதுமே சொல்வேன். மனிதன் திருடன் முதல் வகையான திருடன். பின் இதை என்று கூற.

இன்னும் பல வாக்குகள் உண்டு சூட்சமங்கள் ரகசியங்கள் பல சித்தர்களும் செப்புவார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி நடை போடுக.

மனிதன் மனிதனாக வாழ்ந்து பின் முற்றுப்பெற்று  இதுவே. கடைப் பிறப்பாக ஆகட்டும்.

உறுதியாக சொல்கின்றேன் மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன்.

இன்றளவும் முருகனின் ஆசிகள் உங்களுக்கும் உண்டு உண்டு.

மற்றொரு பதிவுகளிலும் சொல்கின்றேன் வாக்குகள் விரிவாக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

Friday, 18 March 2022

சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!


அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022 - வாக்கு உரைக்கப்பட்ட தலம்:- திருவண்ணாமலை

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எவை எவை என்று கூற அப்பனே இவ்மனிதன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப்பார்த்தால் அப்பனே பொய்யே. பொய்யை விரும்புகின்றான் மனிதன் என்பேன் அப்பனே உண்மையில்லை மனிதர்கள் இடத்தில் எவை எவை என்று கூற.

அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எவை எவை என்று கூற யான் வகுப்பட்டு இருந்த உண்மைகளை அப்பனே பல முறையும் எவ்வாறு என்பதையும் கூட உண்மைகளை உண்மைநிலையும் என்பதைக்கூட தெரிவித்து தெரிவித்து அப்பனே இன்னும் பல வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே கவலைகள் இல்லை. அப்பனே தரித்திர உலகத்தில் தரித்திர மனிதனால் அப்பனே எவை எவை என்றும் கூட கேடுதான் விளையும் என்பேன் அப்பனே.

அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச்சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச்செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.

ஆனாலும் அப்பனே இவையன்றிகூற இன்னும் எதனை என்று கூற மறுக்கப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை ஐயனே.

மாயை இவ்வுலகத்தை ஆட்டிவைக்கும். இனிமேலும் மனிதனின் நிலமைகள் மாறும் என்பேன் எவையன்றி கூற.

அப்பனே நீங்கள்  செய்வது (அடியவர்கள் ஆதி ஈசன் எழுதிய திருவாசகத்தை படிக்காத , ஏதும் தெரியாத ஏழை எளியோருக்கு சொன்னால் )  முதல் தரமான புண்ணியம் என்பேன் அப்பனே.

அனைவரும் இவையன்றிகூற அன்னத்தையும் இவையன்றிகூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.

ஆனால் தரித்திர மனிதன் இதை புரிந்து கொள்வதில்லை. தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். இவைதன் எவ்வாறு என்பதாக எவ்வாறு என்பதையும்கூட மேன்மைகள் அதனால்தான் அப்பனே உயர் ஞானிகள் முதல் வகையான புண்ணியத்தை தேடிக்கொண்டார்கள் என்பேன் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பனே?

இப்பொழுது கூட எதை என்று கூற இதனால் அப்பனே உன்னால் மற்றவர்களுக்கு நல்லது ஆகினால் அப்பனே அதில்தான் முதல் புண்ணியம் அடங்கி இருக்கின்றது. அதனால் தான் அப்பனே இவையன்றி கூற விவேகானந்தன் (பரமஹம்ச ஶ்ரீ ராமகிருஷ்னரின் பிரதான சீடர் விவேகாணந்தர்), எவையன்றி கூற வள்ளுவன் (ஞானவெட்டியான் திருவள்ளூவர்) இவையன்று பெரிய பெரிய ஞானிகளும் கூறு அப்பனே பல பல எவ்வாறு என்பதையும் கூட இன்னோர் நிலையில் இருந்து பாரத்தால் அப்பனே நல்வழிப்படுத்தி இருக்கின்றார்கள் மனிதர்களை. அப்பனே இதைத்தான் முதல் புண்ணியம் என்பேன் அப்பனே.

திரும்பத்திரும்ப யான் சொல்வேன் அப்பனே. மற்றவை எல்லாம் அடுத்த புண்ணியத்தில்தான் சேரும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் முதல் தர புண்ணியம் எப்படி பெற்றுக்கொள்வது என்பது கூட அப்பனே அதைமட்டும்.

நல்விதமாக எவையன்றி கூற நீங்கள்    (திருவாசகத்தை முழு மூச்சாக அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லும் நீங்கள்) ஆராய்ந்து திரிந்து அலைந்து பயித்தியக்காரன் ஆகி பின் இறைவன் உன்னை ஆட்கொண்டு நல்விதமாக முதல் தரத்தை (முதல் தர புண்ணியம் உருவாக்குதல் - திருவாசகத்தை அனைவர்க்கும் எடுத்து சொல்லி அவர்களை அவர்கள் இல்லத்தில், ஆலயத்தில் தினமும் ஓதச்செய்தல்) ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. இதுதான் அப்பனே. இதைச்செய்.

பலமாக உண்டு உண்டு எண்ணங்கள் மேன்மை பெறுவதற்க்கு வழிகள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் காண்பிப்பான் அப்பனே. நல்விதமாக இன்னும் மாணிக்கவாசகப்பெருமானும் உங்களுக்கு நிறைய பின் உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே அப்பர், சுந்தரர் இவையன்றும் எவையன்றும் கூற பல நயன்மார்களும் உண்டு உண்டு என்பேன் திறமைகள் ஏறப்ப அப்பனே கூறு அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன் . எவையன்று கூற உண்மைநிலை ஆக இருப்பதற்க்கு வழிகள் இல்லை.

ஞானம் சாலச்சிறந்தது என்பேன் அப்பனே பொய்யான மனிதர்கள் உலகை ஆட்கொள்வார்கள் என்பேன்.

ஆனாலும் யாங்கள் விடமாட்டோம் அப்பனே உண்மையான மனிதர்களை தேரந்து எடுத்து நல்வழி படுத்தி இவைதன் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் உணரத்திக்கொள்வோம் வரும் காலங்களில் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே பொய்யான மனிதர்கள் எவைஎன்று கூற யான் மனிதனை பல வழிகளிலும் அப்பனே சித்தர்கள் எவையன்றி கூற காரித்தான் துப்புவார்கள் என்பேன் எவையன்றி கூற அப்பனே எப்படி செய்ய வேண்டும் எப்படி புண்ணியம் செய்ய வேண்டும் எப்படி நலமாகும் என்பதை மனிதருக்கு தெரியாமல் உண்டு நிமிர்ந்து பின் பிறப்பெடுத்து பிறப்பின் ரகசியத்தை அறியாமல் மாண்டுவிடுகின்றான் என்ன பயன் ஐயனே?.

இவையன்றி கூற அதனால் அப்பனே முதல்தர புண்ணியத்தை யான் சொல்லிவிட்டேன் அப்பனே. பார்த்துக்கொள் அப்பனே.

பல பல ஞானியர்கள் எப்படி பின் முதல் தரம் ஆக ஆகிவிட்டார்கள் என்பதைக்கூட முதல் தரமாக சொல்லிவிட்டு இவ்வாறு சொன்னால்தான் அப்பனே உயரந்தார்கள் என்பேன் பல ஞானிகளும் என்பேன்.

ஆனால் முட்டாள் மனிதனுக்கோ இவை எல்லாம் தெரியாது என்பேன். தன் நிலைகளுக்கு ஏற்ப்ப ஏதாவது ஒரு வந்ததைக்கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றான் தரித்திர மனிதன் எவை என்று கூற. திருந்தவில்லை தரித்திர மனிதன் அப்பனே இன்னும் கூட ஆனால் நிச்சயம் கட்டத்தை வாரி வழங்கப் போகின்றான் என்பேன் அப்பனே ஈசன் அதனால் கட்டங்கள் எவை எவை என்று கூட மனிதன் உணரந்து கொள்ளவில்லை அப்பனே . எவ்வாறு பல சித்தர்கள் , பல ஞானிகள் பல வழிகளிலும் அப்பனே பல குருமார்கள் வந்தாலும் மனிதன் திருந்தப்போவதாக இல்லை அப்பனே. .

சில மூலிகைகளை எடுக்கச்சொல் அப்பனே. போகனும் இதறக்கு அருள்வான் என்பேன் அப்பனே. நல்விதமாக யான் சொல்கின்றேன் அப்பனே எவையன்றி கூற அனுதினமும் இதையும் பலமுறை சொல்லிவிட்டேன் பல மனிதர்களுக்கும் நீயும் இதை உபயோகித்துக்கொள் மகனே முழுமனதாக எவையன்று கூற மிளகு, ஜீரகம், இவையன்றி அதில் கூட பின் சிறிது மஞ்சள் இட்டு பின் நல்விதமாகவே உண்டு உண்டு பின் சூடேற்றி இவைதன் நல்விதமாகவே நீயும் உண்டுவந்தால் இதனையும் அறியாமல் சில மாற்றங்கள் உள் நிகழும் என்பேன்.

அப்பனே அவை மட்டும் இல்லாமல் பரிசுத்தமான ஒரு மூலிகையும் சொல்கின்றேன் அப்பனே தேவதாரு எனும் மூலிகை உண்டு என்பேன். அதனை நல்விதமாகவே பின் அதன் இலைகளை சூடேற்றி அனுதினமும் காய்ச்சி வந்தால் அப்பனே பின் காந்தகம் போல் இறைத்தன்மை ஈரக்கும் என்பேன். ஆனால் முட்டாள் மனிதன் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் இதைக்கூட பின்பற்றவில்லை அப்பனே.

எவையன்று கூற. ஆனாலும் அப்பனே அதைச்செய்கின்றேன் இதைச்செய்கின்றேன் இவை எல்லாம் புண்ணியத்தில் போகுமா என்பதைக்கூட தெரிந்திருக்கவில்லை.

ஆனால் முதல் புண்ணியத்தைப்பற்றி சொல்லிவிடுகின்றேன் அப்பனே எவை என்றி கூட சொல்லியும் விட்டேன். அதன்கூட இரண்டாவது புண்ணியத்தை பற்றி யான் விரிவாக குறிப்பிடுகின்றேன்.

அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்த்தில் ஏற்றுக்கொள்ளத்தான் நடக்கவேண்டும் அப்பனே நீங்கள்  செய்த புண்ணியங்கள் பலமாக பலமாக அப்பனே எவையன்றி கூற பிறவி என்றால் அப்பனே எவை என்று கூறும் அளவிற்க்கு கூட பிறவி வந்தோம் பிறந்தோம் இவையன்றி கூட வளர்ந்தோம். ஆனாலும் அனைத்து உயிர்களும் இதைத்தான் செய்கின்றன என்பன.

அப்பனே மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை பின் வாழத்தான் எவையன்றி கூற அப்படி வாழ்ந்தான் மனிதன் மனிதன் மனிதனால் எடுத்துரைக்கப்படும் பிறவியே உண்மையான பிறவி

ஆனால் தரித்திர மனிதன் இவையன்றி கூற பின் வருகின்றான் ஒன்றும் தெரியாமல் வருகின்றான் எவை என்ற கூற நடுவில் பல விசயங்களை செய்கின்றான் இவையன்றி கூற கடையில் ஒன்றும் தெரியாமல் போய் விடுகின்றான். ஆனாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பிறவி எடுத்து ஆனாலும் வீனான பிறவியை தேடிக்கொண்டு இருக்கின்றான்.

அதைச்செய்தோம், இதைச்செய்நோம் இப்படிச்செய்தால் புண்ணியம் அப்படிச்செய்தால் புண்ணியம் ஆனால் அப்பனே அனைத்தும் பொய்யப்பா எவையன்றி கூற எதனை என்று கூற.

இனிமேலும் சொல்கின்றேன் ஒவ்வொரு புண்ணியத்தையும் எப்படிச்செய்யவேண்டும் என்பதைக்கூட அப்படிச்செய்தால்தான் அப்பனே பலன் உண்டு என்பேன் அப்பனே.

ஒன்றைத்தெரிந்து்கொள் அப்பனே. அனைவரிடத்திலும் கேள் அப்பனே, புண்ணியம் செய்தவனே நீ எப்படி இருக்கின்றாய் என்று யான் கட்டத்தோடுதான் ( கஷ்டத்தோடு ) இருக்கின்றேன் என்று சொல்வான் மனிதன்.

ஆனால் தரித்திர மனிதன் உண்மயானதாக எப்படிச்செய்ய வேண்டும் என்பதைக்கூட பின் செய்யாமல் தெரியாமல் செய்து கொண்டு தன்னையே அழித்துக்கொண்டு இருக்கின்றான். மகனே இவையன்றி கூற யான் சொல்லிவிட்டேன் அப்பனே அருள் ஆசிகள்

எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலை யான் இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும்கூட உண்மை நிலை அனைத்தும் தெரிய வைக்கின்றேன் அப்பனே

அப்பனே நல் உலகத்திறக்காக சேவைகள் செய்து நற்பிறவி கிட்டி நல்விதமாக அப்பனே பரிசுத்தமாக இன்னும் பல வாக்குகள் உண்டு என்பேன்.

அடுத்த வாக்கும் கேள் சொல்கின்றேன் மகிழ்வாகவே.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Tuesday, 15 March 2022

சித்தன் அருள் - 1096 - அன்புடன் அகத்தியர் - ஜீவநாடி வாசிக்கும் மைந்தனுக்கு அன்னையின் தரிசனமும் உபதேசமும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

அன்னை என்றாலே அன்பு, கருணை, பாசம், நேயம், என்றுதான் பொருள்.

அன்னையின் கருணைக்கு எல்லை ஏது????

ஈரேழு பதினான்கு உலகத்தையும் படைத்து காத்தருளும் பரமேஸ்வரனையும் ஆள்பவள் அன்னை பரமேஸ்வரி.

வேத நாயகி சமேத உமாமகேஸ்வரி சமேத பெரியநாயகி சமேத என அப்பன் ஈசனின் திருத்தலங்களில் அன்னையின் பெயரே முதலில் வரும்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தந்தையான ஈசனின் கருணையை விட அன்னையின் பாசம் பெரியது.

அன்னையின் கருணையும் சரி, கோபமும் சரி, அன்பும் சரி, ஆதங்கமும் சரி, விரைவில் வெளிப்படும் . அதிவிரைவாக ஓடோடி வந்து காப்பாள் அன்னை உமையவள்.

சமீபத்தில் காசியில் சிவராத்திரியின் போது உலக மாந்தர்கள் நடந்து கொள்ளும் நிலை குறித்து சினமடைந்து வாக்குகள் கூறிய ஈசனிடத்திலே வாக்கினிடையே உட்புகுந்து பரிவுடன் மாந்தர்க்கு பரிந்து பேசி ஆதங்கத்துடன் ஈசனாருடன்,   வழக்காடலும் செய்தாள் அன்னை கற்பகாம்பாள்.

அப்பன் ஈசன் தனக்காக சிறந்ததோர் திருத்தலமாக தில்லை நடராசனாக சிதம்பரம் அமைத்தபோது அன்னையும் எனக்கும் ஓர் திருத்தலம் அமைப்பேன் என்று மதுரையில் மீனாட்சி கோட்டமாக அமைத்தாள்.... இந்த வாக்கு நம் குருநாதர் அகத்தியர் திருவாய் மலந்து அருளிய வாக்கு.

ஈசனே உனக்கு நிகர் நானே!!!! உன்னில் பாதி நானே!!!! உன்னில் சக்தியாக இருப்பவள்.  சகல ஜீவராசிகளுக்கும் அன்னை நானே என்று ஆணித்தரமாக உறுதிபட இருந்து காப்பவள் அன்னை திரிபுரசுந்தரி.

திருவாதிரையின் போதும் திருகார்த்திகை தீபத்தின் போதும் நடராசனோடு நடராணியாய் இணையாக நடனமாடுவாள் மட்டுவார் குழலி.

ஈசனின் மனசாட்சியாக இருப்பாள் அனைத்தையும் ஆட்சி செய்வாள்.
ஈசன் கண்கள் பொத்தி சிறு விளையாட்டும் விளையாடுவாள் .அன்னை பாலாம்பிகை

ஈசனிடம் செல்லமாகப் பிணங்கவும் செய்வாள் தேவி உமையாள்.

மார்க்கண்டேயனை காப்பாற்ற ஈசன் லிங்கத்தை பிளந்து கால சம்ஹார மூர்த்தியாய் தோன்றி எமதர்மராஜனை எட்டி உதைத்து  வதம் செய்து மார்க்கண்டேயருக்குஅருள் புரிந்து அடியவரும் விண்ணோரும் மண்ணோரும் "காலனுக்கும் காலனே" போற்றி !!போற்றி!! கால சம்ஹார மூர்த்தியே!= போற்றி!!! போற்றி என துதித்து பாடியபோது உங்களில் பாதி நானல்லவா இடப்பாகம் என்னுடையதல்லவா எமனை இடது காலால் உதைத்தது நானல்லவா.!!!!

பெயர் மட்டும் நீங்கள் வாங்கி கொண்டீர்களா என்று செல்லமாக ஈசனிடம் கோபிக்கவும் செய்வாள். அன்னை ஆதிபராசக்தி.

சினம் கொண்டு வெகுண்டெழுந்து அசுரர் வதம் செய்து அனைவரையும் காத்தருளினாள் அன்னை காளீஸ்வரி.

மீனாட்சியாக வைஷ்ணவியாக ஆட்சி செய்வாள் காமாட்சியாக கன்னியாகுமரியாக தவமும் செய்வாள்

துர்கா வாக சாமுண்டீஸ்வரியாக அடியவர்களுக்கு அபயமளித்து அசுரர்களை வதமும் செய்வாள்.

கர்ப்பரட்சாம்பிகையாக கருவையும் புவனேஸ்வரியாக புவனத்தையும் மூகாம்பிகையாக லலிதாம்பிகையாக அபிராமியாக அங்காள பரமேஸ்வரியாக அகிலாண்டேஸ்வரியாக அனைத்தையும் காத்து நல்லருள் புரிபவள் அன்னை சிவகாமி .

பாலகன் ஞானசம்பந்தன் பசித்து விசும்பி செய்வதறியாது நின்ற பொழுது அன்னையே கருணையுடன் பாலகனின் மனகிலேசம் மாற்றி தன்னோடு சேர்த்தணைத்து பசியால் வாடிய ஞானசம்பந்தனுக்கு ஞானப்பால் தந்து  திருவமுது செய்வித்தார் அன்னை ஈஸ்வரி.

அதே பிள்ளையாண்டான் ஞானசம்பந்தன் தன்னுடைய விவாகத்தில்  சிவனுடைய திருவிளையாடல் நிகழ்வின்போது

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே

என்ற  பதிகத்தைப் பாடியவுடன் உடனே முதலில் பிரசன்னமாகி அணைத்துக் கொண்டவள் அன்னை வேதநாயகி.

அன்னையின் தனிப்பெருங் கருணையை திருஞானசம்பந்தர் அருளிய பன்னிரு திருமுறைகளில் ஒன்றான தேவார திருவண்ணாமலை பதிகத்தில்
        
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்  பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ   மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்    
    
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.......

என்று உண்ணாமுலை அன்னையை முதல் வார்த்தையாக கொண்டே பதிகம் இயற்றினார்.

அண்ணாமலை நம் தாய் நம் தந்தை ஈசனிடம் தன்னில் சரிபாதியாக பெற்ற இடம்....

அப்பன் ஈசனுக்கு "மாதொருபாகன் "என பெயர் வர காரணமான இடம்.

ஆணும் பெண்ணும் சமமே என்று அர்த்தநாரீஸ்வர தத்துவம் உலகத்திற்கு காட்டி அருளிய இடம்.

"பாகம்பிரியாள்" ஆக முதலில் தோன்றிய இடம்.

உன்னுள் நானே சக்தி!!! என்னுள் நீயே சிவம்!!! என இரண்டறக் கலந்து இரண்டு ஒன்றாகி ஏகமாய் சோதியாய் திகழும் இடம்.

இத்தகைய பெறற்கரிய பேறு பெற்ற அண்ணாமலையில் அகத்திய பெருமான் ஜீவ நாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் அவர்களுக்கு கிடைத்த அன்னையின் தரிசனமும் உபதேசமும் பற்றிப் பார்ப்போம்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு காசி ஸ்தல புனித யாத்திரையை முடித்துக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில புனித ஸ்தலங்களுக்கு செல்ல உத்தரவு கொடுத்தார் அகத்தியர்பெருமான்.

எத்தனை யாத்திரைகள் செய்தாலும் பல புனித ஸ்தலங்களுக்கு குருநாதர் அனுப்பி வைத்தாலும் அடிக்கடி செல்ல சொல்லுவது திருவண்ணாமலை.

வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது ஜீவநாடியை கொண்டு ஜீவநாடியை திருவண்ணாமலை கொண்டு செல்க என்று உத்தரவு வரும் . அண்ணாமலையார் கருவறைக்குள் அவரது மடியில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பூஜை செய்வித்து வணங்கி வருவது குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவுப்படி வழக்கமாக நடைபெறும் செயல்.

குருநாதர் உத்தரவுப்படி ஸ்தல யாத்திரைகளை மேற்கொண்டு திரும்பியவரிடம் உடனடியாக திருவண்ணாமலை செல்க அங்கு சாதுக்களுக்கு அன்னதானம் செய்க என்று உத்தரவிட்டார் குருநாதர்.

அதன்படியே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்து தரிசனம் செய்து சாதுக்களுக்கு முறையாக அன்னதானமும் செய்து ஊர் திரும்பியவரிடம் அடுத்து தீர்த்தமலை ஏகுக என்று குருநாதர் உத்தரவு மீண்டும் வந்தது .

அந்த உத்தரவையும் செயல்படுத்தி விட்டு ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு நேற்று ஜீவநாடியை வணங்கி வாசித்த பொழுது குருநாதர் நாளையே திருவண்ணாமலை செல்ல வேண்டும் ஜீவநாடியை கருவறையில் வைத்து பூசிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படியே (14/3/2022) திரு ஜானகிராமன் ஐயாவும் திருவண்ணாமலை வந்து ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையார் மடியில் வைத்து ஜீவநாடி பூஜை செய்வித்து தீபாராதனை காட்டி தரிசனம் செய்து ஜீவநாடியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபொழுது,

ஒரு வயதான அம்மையார் மொட்டையடித்து நெற்றி நிறைய திருநீறு குங்குமம் தரித்து கழுத்தெல்லாம் ருத்ராட்சம் அணிந்தவாறு ஜானகிராமன் அய்யாவிடம்

ஏம்பா, கொஞ்சம் நில் அண்ணாமலையார் மடியில வைத்து வணங்கினாயே உண்ணாமலை அம்மன் மடியிலும் வைத்து வணங்க வேண்டும்.

ஈசன் மடியில் மட்டும் வைத்தால் போதுமா?? அம்மன் மடியில் வைக்க வேண்டாமா??

அம்மன் இடத்திலும் வைத்து வணங்க வேண்டும் அதுதான் முறை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஜானகிராமன் ஐயாவும் சரி என்று கூறிவிட்டு உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு சென்று அன்னையின் மடியில் வைத்து பூஜை செய்வித்து தீபாராதனை காட்டி ஜீவ நாடியை வாங்கிக்கொண்டு திரும்பினார்.

அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் மனதில் உரைத்தது.

நாம் யார் என்று அந்த வயதான அம்மாவிற்கு தெரியாது நம் கையில் உள்ளது ஜீவநாடி என்றும் தெரியாது. அண்ணாமலையார் கருவறைக்குள் அவரது மடியில் வைத்து பூஜித்தது எப்படி?? வெளியே வைத்து கண்ட அந்த வயதான அம்மாவிற்கு எப்படி தெரியும்???

யாராக அவர் இருப்பார்கள்???. தெரியவில்லையே சரி நாம் சுவடியை அம்மன் சன்னதியிலும்  வைத்து வணங்கி விட்டோம் இந்த செய்தியை அந்த அம்மையாரிடம் தெரிவித்து விடுவோம் என்று ஆலயத்தில் எங்காவது தென்படுகிறார்களா??  என்று சிறிது நேரம் தேடிப் பார்த்தார் அந்த அம்மையாரை எங்கும் காணவில்லை. மாயமாக மறைந்தது போலவே இருந்தது.

சரி சரி அந்த அம்மாவும் நல்லதுதானே சொன்னார்கள் என்று நினைத்துக்கொண்டே இருப்பிடத்திற்கு வந்து விட்டார்.

நாளை செவ்வாய்க்கிழமை பிரதோஷம்(15/3/2022) சரி இன்றும் இங்கே தங்கி விட்டோம் நாளை பிரதோஷம் நாளையும் சாதுக்களுக்கு  அன்னதானம் செய்துவிட்டு பிரதோஷ வழிபாடும் செய்துவிட்டு வீடு திரும்பலாம் என்று குருநாதரிடம் அனுமதி உத்தரவு கேட்க ஜீவநாடியை பிரித்தபோது...

அப்பனே நாளையும் இவ் மலையிலே தங்கி பிரதோஷ கால பூசையையும் கண்டு வழிபட்டு பின் செல்க என்று உத்தரவிட்டார்.

அதன் பின்னே வந்த வாக்குகள் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை மெய்யதிர செய்துவிட்டது.

வாக்குகள் படித்து முடித்தவுடன் உடல் முழுவதும் நடுக்கம் சில்லென்ற மனோநிலை.  உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்த உணர்வு.

பக்திப் பெருக்கில் அண்ணாமலையப்பா உண்ணாமுலையம்மா!!!! அப்பனே அகத்தியா என்று மெய்சிலிர்க்க கூவிவிட்டார்.

குருநாதர் உரைத்த வாக்குகள்

அப்பனே இவையன்றி கூற காலைப் பொழுதிலே வந்தவள் தாய் உண்ணாமுலை என்பேன். உன்னோடு உரையாடினாள். இச்சுவடியையும் அன்போடு அணைத்து ஆசீர்வாதம் செய்தாள் என்பேன்.

மைந்தனுக்கு நல்லாசிகளும் தந்து விட்டுச் சென்றாள் என்பேன். மைந்தனோடு சிறு விளையாட்டு காட்டினாளப்பா. தாய் உண்ணாமுலை. என்று குருநாதர் படபடவென உரைக்க ஜானகிராமன் ஐயாவிற்கு ஒரு நிமிடம் உலகமே மறந்து விட்டது. அன்னை உண்ணாமுலையம்மனின் கருணையை எண்ணி கைகூப்பித் தொழுது மீண்டும் ஆலயத்திற்கு உள்ளே ஓடி மீண்டும் அன்னையைக் காண மாட்டோமா என்ற ஏக்கத்துடன் தேடிப் பார்த்தார் மனம் இருப்புக் கொள்ளாமல்.

அன்னை உண்ணாமலை தாயோ தன் சன்னதியிலிருந்து ஒரு புன்சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தாயே சரணம் அம்மா சரணம் என்று பரவசத்தோடு கைகூப்பிவணங்கினார்.

அன்னை உண்ணாமுலை அம்மனின் திருவிளையாடல்களை பார்த்தீர்களா!!!!

தந்தை மடியிலேயே இருக்கும் உரிமையுடன் மழலையை வாங்கி தன் மடியில் வைத்து கொஞ்சும் தாய் போல

சிவபார்வதி மைந்தன் அகத்தியர் சுவடியை அம்மையும் அப்பனும் மாற்றி மாற்றி பங்குபோட்டு அனைத்து ஆசிர்வாதம் செய்து அருள் புரிவது கேட்கும்பொழுது பரவசமாக இருக்கின்றது.

அம்மையின் கண்டிப்பான அன்பை கவனித்தீர்களா

என் மகன் அகத்தியன் சுவடியும் என் மடியில் இருக்க வேண்டும் சுவடி ஓதும் மைந்தனுக்கும் தன் தரிசனம் தந்து உபதேசம் செய்தது அன்னையின் கருணை அளவிட முடியாத ஒன்று.

அன்னையின் செல்ல பிடிவாதம் காணும்பொழுது வியப்பொன்றும் இல்லை ஏனென்றால் இந்தத் திருவிளையாடல் நடந்த அண்ணாமலை புண்ணிய ஸ்தலத்தின் மகிமை அப்படி!!!!!

சரிபாதி உரிமையை வாங்கிய இடம் அண்ணாமலை. எனக்கும் உரிமை இருக்கின்றது நானும் அருள் புரிவேன் என்று அன்னை உண்ணாமலை அம்மன் செய்த திருவிளையாடல் அதியற்புதம்.

மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாய்என்று  நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா வை மனதில் எண்ணி துதித்து

அகிலம் ஆளும் அண்ணாமலையாரையும், உடனாளும் உண்ணாமலை அம்மனையும் போற்றி வணங்குவோம்

குருநாதர் அகத்தியர் உரைத்த சில பொதுவான வாக்குகள். இதை அனைவரும் கடைபிடிக்கவேண்டுமென உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அப்பனே இவ் வெப்பமான காலகட்டத்தில் பறவைகள் கால்நடைகள் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் குளிர்ந்த நீரை வழங்க வேண்டும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைப்பது மோர் இளநீர் போன்ற குளிர்ச்சியான உணவுபொருள்களை வழங்க வேண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாகத்தைத் தணிக்க உதவிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். சாம்பல்(சுத்தமான திருநீறு) பூசிக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வுலகத்தில் மறைமுகமான எத்தனையோ சக்திகள் இருக்கின்றன அவையெல்லாம் உள்நுழைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நெற்றியில் குங்குமம் இட வேண்டும் ஆனால் முட்டாள் மனிதன் குங்குமம் என்ற பெயரில் எதை எதையோ பூசிக் கொள்கிறான். ரசாயனத்தை உபயோகிக்கின்றனர் இது தவறான செயல்.

முறையாக குங்குமம் இட்டு சாம்பலைப் பூசிக் கொண்டு வந்தால் எதிர்மறை சக்திகள் ஒன்றும் செய்ய இயலாது. இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் முக்கியமாக பெண்கள் அனைவரும் சுத்தமான குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்திருக்கின்றார்.

பெண்கள் தங்கம் வெள்ளி அணிவது நல்லது கால்களில் கொலுசு காதணிகள் போன்றவை அணிய வேண்டும் எதற்காக என்றால் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது ஆலயத்தில் உள்ள சக்திகள் இவ் உலோகங்களினால் ஈர்க்கப்பட்டு அணிபவர்களை  வந்தடையும் அதனால் நலன்கள் ஏற்படும். கனகத்திற்கும்(தங்கம்) வெள்ளிக்கும் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்திகள் உண்டு. இக்காரணத்தினாலே முன்னோர்கள் அணிந்து வலம் வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் இன்றோ மனிதன் புதுமை என்று எதை எதையெல்லாம் உட்கலந்து புகுத்தி விட்டான் இதனால் தேவையற்ற நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆக்கிவிட்டான். இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு உண்மையான அணிகலன்களை அணிய வேண்டும். என்று குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்திருக்கின்றார்.

குருநாதர் அகத்தியர் அன்னை லோபமுத்ரா பற்றி உரைத்தவாறே வாக்கினை அடியொற்றி அன்னை லோபமுத்திரை தேவியை ஓவியமாக வரைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு குருநாதரிடம் வாக்குகள் கேட்டபொழுது

அப்பனே காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, மூன்று பேரின் மொத்த உருவம் தான் லோபமுத்திரை தேவியின் உருவம். தலையில் கிரீடம் அணிந்திருப்பாள் நீண்ட சடை முடிகள் கூந்தல் நீளமாக இருக்கும். கையில் தாமரை மலரை வைத்துக் கொண்டிருப்பாள் என்று குருநாதர் அன்னை லோபமுத்ரா தேவியின் ரூபத்தை பற்றி வாக்குகள் கொடுத்திருக்கின்றார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!