​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 22 March 2022

சித்தன் அருள் - 1099 - அன்புடன் அகத்தியர் - மறு பிறவி தந்த கருணைத் தெய்வம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

இந்த உலகத்தில் அன்பை விட உயர்ந்தது எது??? சிறந்தது எது??? வேறெதுவும் இல்லை அன்பு ஒன்றுதான் இவ்வுலகத்தில் உயர்ந்தது சிறந்தது. அன்பே சிவம் என்பது திருமூலர் வாக்கு.

இவ்வுலகில் அன்பு ஒன்றே பிரதானமானது இறைவன் அதை மட்டுமே விரும்புகின்றான் நாங்களும் அதையேதான் விரும்புகின்றோம் வேறொன்றும் நாங்கள் எதிர் பார்ப்பதில்லை என்பது நம் குருநாதர் அகத்தியரின் திருவாக்கு.

இதனை தானும் உணர்ந்து மக்களும் உணர வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் எழுதி வைத்துள்ளனர் சித்தர்கள்.

இறைவன் தானே நம்மை படைத்தவன்  அவர்கள்தானே நம் தாய் தந்தையர்கள் அவர்களிடத்தில் எதிர்பார்த்து கேட்பது எப்படி தவறாகும்?? என்று சிலர் கேட்கலாம். எதிர்பார்த்து கேட்பதற்கும் கேட்டது கிடைப்பதற்கும் சில தகுதிகள் நமக்கு வேண்டும்.

அந்த தகுதிகளில் முதன்மையானது தூய அன்பு, நல்ல சிந்தனை நல்ல செயல் இவைதான் தகுதிகள்.

அதன் பின் தானாகவே நம்மை இறைவன் வழி நடத்திச் செல்வான்.  இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஆத்மா தனிபிரகாசமாய் ஒளிரும்.

அப்படி தூய அன்பினால் நம் அகத்தியப் பெருமான் மனதில் இடம்பிடித்து அவரால் மறுபிறவி பெற்ற அடியவரின் அனுபவங்களை பார்ப்போம்.

சிறுவயதிலிருந்தே அகத்தியப் பெருமான் பால் அளவற்ற அன்பு கொண்டவர். கணவர் மகன் மகள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் அகத்தியர் பாதமே கதி என வாழ்ந்து வருபவர்கள். இசை ஞானம் உள்ளவர்கள். இறைவன் கொடுத்த இசை ஞானத்தால் நம் குருநாதர் அகத்தியர் மேல் கொண்ட பக்தியை பாடலாக பாடி உருகி வழிபடுபவர்கள்.

குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் என்னென்ன உரைக்கின்றாரோ அதன்படியே இம்மி அளவு பிசகாமல் அப்படியே செய்து வருபவர்.

எல்லோரும் நம் குருநாதர் அகத்தியரை குருநாதர், குரு,  அகத்தியப்பன், அகத்தீசன், என பக்தியால் விளிப்பது வழக்கம். ஆனால் அந்தப் அம்மையாரோ... குருநாதரை தாத்தா என்று தான் அன்போடு அழைப்பார்.

அம்மையார் அன்போடு தாத்தா தாத்தா என்று அழைப்பதை குருநாதரும் ரசித்துக் கொண்டே..... அம்மையே யானும் இளமையானவன் தான் .... எனக்கொன்றும் வயதாகி விடவில்லை நித்ய சிரஞ்சீவியம்மா யான்.

நீ என்னை தாத்தா தாத்தா என்று அழைக்கும் பொழுது உன் தாய் லோபமுத்ரா சிணுங்குகின்றாள். செல்லமாக கோபமும் கொள்ளுகிறாள்.

யாங்கள் உன்னை மகளாக ஏற்றுக் கொண்டோம்... அன்பு மகளே..... என்று குருநாதர் உரைக்க..

ஆகையால் உன் விருப்பம் போல் என்னை அழை . உன் அன்பு அதுவே அது மட்டுமே எந்தனக்கு போதுமானது.

ஒரு சிறு பிரச்சனை என்றாலும் தாத்தா என்று சரணடைந்து விடுவார் குருநாதரும் பொறுமையாக மகள் தெளிவுகள் பெறும்வரை உபதேசங்கள் செய்து கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு ஆழமான உறவு முறை இருவரிடையே இருக்கும்.

இசைக் குடும்பம் என்பதால் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் மனம் உருகி பாடி வழிபடுவார்கள்.

ஒருமுறை ராமேஸ்வரம் சென்று ஒவ்வொரு சன்னதியாக மனம் உருகி பாடி தொழுதுவிட்டு ஜீவனாடி வாக்கு கேட்கும் பொழுது.... அண்ட சராசரங்களையும்  ஈரேழு பதினான்கு உலகத்தையும் படைத்து காத்தருளும் ஈசனே வந்தார்....... அன்பு குழந்தாய்காள்!!!! நீங்கள் பாடிய பாட்டைக் கேட்டு யான் ஓடோடி வந்தேன்.... மீண்டும் ஒரு முறை பாடு . யான் கேட்க வேண்டும் என ஈசனே விருப்பப்பட்டு மீண்டும் பாடச்சொல்லி காது குளிர கேட்டார்.

மொத்த குடும்பமும் சர்வமும் அடங்கி கைகூப்பித் தொழுது ஈசனே நம்மிடத்தில் பாடச் சொல்லிக் கேட்கிறார் என்றால் அது நமக்கு கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம் என மீண்டும் அப் பாடலை பாடி ஈசனை கேட்பிக்க வைத்தனர்.

ஈசனும் பாடல் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதங்கள் கொடுத்து விட்டுச் சென்றார்.

இதுமட்டுமல்ல சமீபத்தில் திருச்செந்தூரில் அழகன் முருகன் இவர்களுடைய பாடல்களை கேட்டு ""யானும் மெய்மறந்து ஆடினேன் என்று மகிழ்ந்து ஆசீர்வாதங்கள் தந்தார்.

இறையருளும் குருவருளும் நிரம்பப் பெற்று நல் முறையாக வாழ்ந்து வரும் குடும்பம்.

சமீபத்தில் திடீரென அந்த அம்மையாருக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

சிறு பிரச்சினையாக தொடங்கி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கையில் கிடத்தி விட்டது.

குடும்பத்தினர் அனைவரும் பதறி போய் விட்டனர்.

திடீரென்று இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது குருவிடமே வாக்கு கேட்போம் என நாடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை  தொடர்பு கொண்டபோது.......

சுவடியில் வந்த குருநாதர் அகத்தியர் "அம்மையே கவலைப்பட ஒன்றுமில்லை... யான் இருக்கின்றேன் அனைத்தையும் யான் பார்த்து கொள்கின்றேன். பயப்பட வேண்டியதில்லை" என்று வாக்குகள் உரைத்தார் .

அடுத்தடுத்த நாட்கள் நாளுக்கு நாள் உடல் நிலை மிகவும் மோசமாகவே பயந்து போன குடும்பம் குருநாதரிடம் மீண்டும் வாக்குகள் கேட்ட பொழுது...

யான் இருக்கின்றேன் யான் இருக்கின்றேன்.

""அகத்தியனை நம்பியவரை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரமில்லை!  அனைத்தையும் யான் பார்த்துக்கொள்கிறேன் மீண்டும் வந்து பின் வாக்குகளாக உரைக்கின்றேன் என்று கூறிவிட்டார்.

நான்கு நாட்கள் என்னவென்று கூற முடியாத நிலை மருத்துவர்களும் போராடிக் கொண்டிருந்தனர் குடும்பத்தினரோ மிகவும் பயந்துபோய் குருநாதர் வேறு எதுவும் உரைக்க மாட்டேன் என்கிறாரே என்ன நடக்கும் என்று தெரியாமல் உறைந்து போய் இருந்தாலும் குருநாதர் மீது கொண்ட நம்பிக்கையை கைவிட்டு விடவில்லை.

அந்த அம்மையார் அவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்த பொழுதும் வாயிலிருந்து அகத்தியா!!!! தாத்தா தாத்தா!!!! என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.

குடும்பத்தினர் இந்த இக்கட்டான சூழ்நிலையில்  மீண்டும் குருநாதரிடம் வாக்குகள் கேட்டபொழுது குருநாதர் அதிகமாக எதுவும் உரைக்கவில்லை...

அவள் என் மகள் எந்தனக்கு தெரியும் அவளுக்கு என்ன செய்யவேண்டும் என்று. கவலைப்படாதிருங்கள் மீதி அனைத்தும் யான் பார்த்துக் கொள்கிறேன். என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அடுத்த நான்கு நாட்கள் உடல் நிலையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உடல் மெதுமெதுவாய் ஆரோக்கியம் அடையத் தொடங்கியது. சிறிது நாளில் பூரண குணமடைந்தார்.

மீண்டு வந்த அவர் உடனடியாக அவர் செய்த செயல் என்னவென்றால்

குருநாதர் அகத்தியரிடம் வாக்கு கேட்டது தான்.

தாத்தா நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றால் அது உங்கள் கருணையால் மட்டுமே உங்கள் அருள் இல்லாமல் நான் இல்லை. ஆனாலும் எனக்கு ஏன் இந்த கஷ்டம் வந்தது இந்த அளவிற்கு கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இருக்கின்றேன் என்ன காரணம்??? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா அல்லது என்னுடைய கர்மாவா??? எது என்னை இவ்வளவு தூரம் வாட்டி வதைத்தது நீங்கள் என் கூடவே இருக்கின்றீர்கள் என்று கூறியிருந்தீர்கள் உங்களையும் மீறி எனக்கு ஏன் ?இந்த கஷ்டம் வந்தது என்று கேள்விகளைக் கேட்க

குருநாதர் அகத்தியர் "என் அன்பு மகளே நல் ஆசிர்வாதங்கள் என்பேன். என்னை நம்பியோரை யான் கைவிட்டதில்லை.
உன் விதியே முடிந்துவிட்டது சொல்லப்போனால் பிரம்மன் உனக்கு ஆயுள் எழுதி வைத்தது இவ்வளவு காலம் தான். என்னையே நீ நம்பி விட்டாய் என் மீது அளவு கடந்த அன்பை வைத்து இருக்கின்றாய் செல்ல மகளே நீ செய்த புண்ணியங்கள் நிரம்பி வழிகின்றது உன்னை எப்படி யான் கைவிடுவேன்??? பிரம்மனிடம் மன்றாடி உன் விதியையே மாற்றி எழுதினேன். அந்த நான்கு நாட்களும் உன் அருகிலேயே இருந்தேன் வேறு எங்கும் யான் செல்லவில்லை. உன் கூடவே இருந்தேன்.  இவையன்றி கூற இன்னும் சொல்லப்போனால் இது உனக்கு மறுபிறவி அகத்தியன் கொடுத்த மறுபிறவி நல் ஆசிர்வாதங்கள்.  அன்பு மகளே கடை நாள் வரை என் பிள்ளையாகவே இருந்து விடு. ஈசன் திருவருளும் கந்தன் திருவருளும் என்னுடைய ஆசிகளும் உந்தனுக்கு  கடை நாள் வரை கூடவே இருக்கும் .

இன்னும் நீ பல புண்ணிய காரியங்களை செய்வாய் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை. நல் முறையாக வாழ்ந்துட்டு பின் எந்தனை வந்தடைவாய். இதனால் குற்றங்கள் இல்லை துயரங்கள் இல்லை... நல் முறையாக என் ஆசீர்வாதங்கள் என

 வாக்குகள் உரைக்க உரைக்க..... கேட்டுக் கொண்டிருந்த அந்த அம்மைக்கு பேச வார்த்தைகள் வரவில்லை! கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடிக் கொண்டே இருந்தது .

தாத்தா !!!தாத்தா !!!!என் அகத்தியப்பா.... உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை இந்த உயிர் நீ எனக்கு நல்கிய பிச்சை.... நீ எனக்கு அளித்த இந்த மறுபிறவியை உன் திருநாமத்திற்கே அர்ப்பணிக்கின்றேன். இனி முதல் ஏன் நேற்றுவரை என் வாக்கு செயல் எண்ணம் அனைத்தும் அகத்தியன் என்று இருந்தேன் இனி அதைவிட பல மடங்கு நடந்து கொள்கிறேன்.

என்னால் இந்த உலகத்தில் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு தாத்தா நீங்கள் எண்ணியவாறு  நடந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு நடந்து கொள்வேன்.  மாற்றங்கள் ஏற்பட நானும் துணையாக இருப்பேன் என்று மனதில் உறுதி ஏற்று குருநாதருக்கு நன்றி செலுத்தினார்.

மாசற்ற அன்பை காட்டிய அம்மையாருக்கு குருநாதர் பிரம்மனிடம் போராடி விதியையே மாற்றி மரணத்தையே மாற்றி எழுதி மறு பிறவி தந்த நம் குருநாதர் அகத்தியரின் கருணை எப்பேர்ப்பட்டது? சொல்ல வார்த்தைகளே இல்லை அவரின் கருணை அளவிட முடியாத ஒன்று......

அன்பின் பாதையைத் தேர்ந்தெடுதால் அந்தப் பாதை  இறைவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.  நமக்கு ஒன்று என்றால் அந்த இறைவனே ஓடிவந்து உதவிடுவான் அருகிலேயே வைத்துக் கொள்வான்.

இது குருநாதரின் வாக்கு. இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

16 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    குருவே சரணம்
    குருவே சரணம்
    குருவே சரணம்

    ReplyDelete
  2. Om sri lobhamudra thayar samedha agathiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  3. அகத்தியர் அவர் பக்தர்களுக்காக எதையும் செய்வார். எனக்கு ஒருநாள் கனவில் வந்து' திருப்பதி சென்று திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து திருவேங்கடனிடம் ஒப்படைத்து வா ' என்று சொன்னார். இது என்ன உத்தரவு .இப்படி எல்லாம் சொல்வது எப்படி என்று அகத்தியர் முன்பு தீபம் ஏற்றி வேண்டினேன். இது உங்க உத்தரவு என்றால் இந்த covid lockdown time எப்படி tickets கிடைக்கும் என்று நினைத்து online darisanam ticket try பண்ணினேன் . Tickets கிடைத்தது. என் கணவர் துணையோடு திருப்பதி சென்று திருவோடு ஏந்தி பிச்சை கேட்ட போது 2 பேர் போடவில்லை. ஒருவர் பரிகாரம் என்று 10 ரூபாய் போட்டார். எங்கள் உருவம் தோரணை பார்த்து பிச்சை யாரும் போடமாட்டார்கள் என்று தெரியும். உடனே கோபுரத்தை பார்த்து அகத்தியரே ஏன் என்னை பிச்சை எடுக்க வைத்தாய் என்று கண்களில் கண்ணீர் ததும்ப கோபுரத்தை பார்த்து வேண்டினேன்.அடுத்த நொடி பஞ்சபாண்டவர்கள் உருவத்தில் 5 ஆட்டோ ஓட்டுனர்கள் என் முன்பு வந்து பர்சை திறந்து 50.100 .500.என்று இருந்த பணம் அனைத்தும் போட்டனர்.நான அவர்களிடம் நீங்கள் போட்ட பணம் அனைத்தும் நான் திரும்ப தந்து விடுகிறேன். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு என்று என் கணவர் பர்சை திறந்த போது அவர்கள் திட்டி விட்டு சென்று விட்டனர். நானும் மீண்டும் கோபுரத்தை பார்த்து அகத்தியரே நன்றி என்று சொல்லி திருவேங்கடனிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வரும் போது லட்டு நிறைய வாங்கி ஆட்டோ டிரைவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தேடினேன். கிடைக்கவில்லை.எங்கு தேடியும் அவர்களை பார்க்க முடியவில்லை. அகத்தியர் மகரிஷி நன்றி சொல்லி விட்டு என்னை ஏன் பிச்சை எடுக்க வைத்தாய் என்று திட்டி விட்டு வந்தேன். பிச்சை எடுத்த காரணம் புரிந்த போது அகத்தியரே என்று என்னால் அழமுடிந்தது. அகத்தியர் அவர் பக்தர்களுக்காக எதையும் செய்வார் என்று புரிந்தது.

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. எனக்கு முதல் முதல் ஜானகிராமன் அய்யா நாடியில் அம்மையே உன்னை என் மகளாக ஏற்று கொண்டோம்.என் விதியில் இல்லாத ஒன்றை அகத்தியர் கிட்ட கேட்ட போது வேண்டாம் அம்மையே என்று சொன்ன அகத்தியர் போன வாரம் மீண்டும் ஜானகிராமன் அய்யா நாடியில் உன்விதியை மாற்றி எழுதி விட்டு தான் உனக்கு வாக்குஉரைப்பேன் என்று படித்தார்.எனக்கு புரிந்தது ஒன்று தான். என்விதியில் இல்லாத ஒன்றை எனக்கு தருவதற்காக பிரம்மாவிடம் விதியை மாற்றி எழுதி நான் கேட்டதை தருகிறார் என்று. அகத்தியர் என்றால் யார் என்று இப்போது தெரிந்திருக்கும் அனைவருக்கும்... உண்மை பக்தி கொண்டு தர்மவழியில் சென்றால் அகத்தியரை அடையலாம்.

    ReplyDelete
  6. இந்த article படிக்கும் போது லட்சுமி mam உருவம்
    என் கண்முன் வருகிறது. Lekshmi mam பூரணமாக குணம் அடைய அகத்தியர் மகரிஷி யிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தாயார் சமேத ஸ்ரீ அகத்தியர் பொற்பாதங்களே போற்றி போற்றி🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. அகதியர் அருளை திருவிளையாடலை படிக்க படிக்க ஆனந்த கண்ணீர் அய்யா!

    ReplyDelete
  9. om Namahshivaya
    om Namahshivaya
    om Namahshivaya

    ReplyDelete
  10. Solla vaarthaikal ellai.. guruve thunai.. kannula kanner thengi eruku..

    ReplyDelete
  11. கருணைக் கடலே அகத்தியர் திருவடிகள் போற்றி

    நல்ல ஆன்மாவிற்கு குருவின் கருணை மற்றும் ஆசீர்வாதம் எல்லையில்லாதது.

    வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்

    நற்பவி,நற்பவி,நற்பவி

    ReplyDelete
  12. ஓம் அகத்தீசாய நமஹ பஞ்சட்டி ஸ்தலத்தை பற்றி கூறவும் ஐயா தங்கள் அருள் வாக்கை படிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிரேன் அப்பா

    ReplyDelete
  13. அகத்தியர் ஐயா அருளை பெற்று இந்த பாக்கியவதியோடு தொடபுகொள்ள முடியுமா ஏனென்றால் ஐயாவேஒரு மதுரை கூறியிருக்கிறார் அடியவர்கள்எல்லாம் இனைய வேண்டும் என்று

    ReplyDelete
  14. Om Sri lopa mudra samathaAgasthiyar thiruvadi Saranam.AmmaAppaThiruvadi Saranac.

    ReplyDelete
  15. அகத்தியப் பெருமானுக்கு மிக்க நன்றி..

    என் துன்பம் தீரவும் வழிகாட்டி உள்ளார்..

    ReplyDelete