​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 11 March 2022

சித்தன் அருள் - 1095 - அன்புடன் அகத்தியர் - சாந்த் தியானேஸ்வர் மகாராஜ் ஜீவசமாதி மந்திர். ஆளந்தி. புனே. மகாராஷ்டிரா.






7/3/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் .சாந்த் தியானேஸ்வர் மகாராஜ் ஜீவசமாதி மந்திர். ஆளந்தி. புனே. மகாராஷ்டிரா.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து  செப்புகின்றேன்  அகத்தியன்.

அப்பனே நலன்கள் என்பேன் ஆசீர்வாதங்கள் என்பேன்.

அப்பனே யானும் பலமுறை இத்தலத்திலே வந்து சென்றேனப்பா. அப்பனே நல் விதமாக அதனால்தான் அழைத்தேன் நல் விதமாக இங்கும் பல சக்திகள் நல்விதமாக உணர்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே .

இதனை என்று கூற மறுப்பதற்கு இல்லை இவந்தன் சக்திகள் அதிகம் அதிகம்.

இதனையும் கூட சில தீயவைகள் அகன்று போகும் என்பேன். இங்கு வந்தவர்களுக்கு.

வந்தவர்களுக்கு எவை என்று கூற சில சில கெட்ட நடவடிக்கைகள் தாம் தன் தொற்றிக் கொண்டு வரும் மனிதர்களுக்கு இதனை அறுப்பதற்கு இங்கு அடிக்கடி வந்து சென்றாலே போதுமானது மாயதிரையில் இருந்து மீட்டு எடுப்பான் இவன்.

இவன் சக்தி வாய்ந்தவன் இவன் உலகத்தையே சுற்றி திரிவான் ஓர் இரவில் கூட.

அவ் இரவு எவ்வாறு என்று பொழுது கேட்கும்பொழுது ஆச்சரியமூட்டும் என்பதே மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர தினத்தில் எவை என்று கூற இவந்தன் இவ்உலகத்தையே சுற்றி வருவான் என்பேன்.

மாய பிறப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் பார்ப்பான். அப்பொழுது இவந்தன் அங்கே பின் நல் விதமாக அருள்மழையை பொழிந்து என்னிடத்தில் வா யான் காப்பாற்றுகிறேன் என்று கூட சில வார்த்தைகள் கூறி விட்டுச் சென்று விடுவான்.

மனிதனின் காதில் அது போய் நல் விதமாக மாற்றமடைந்து ஆனாலும் இவன் அனுகிரகத்தை பெற்றால் தான் அதுவும் முடியும் என்பேன்.

இவந்தன் சூட்சமங்கள் பல பல.

பல மக்களுக்கும் சேவைகள் செய்து நல் விதமாக பல நோய்களையும் பல பல வழிகளிலும் பலப் பல பிரச்சனைகளிலும் இருந்து காப்பாற்றியவன் இவன் ஓர் பிறவி தன்னில்.

இவை என்று கூற இங்கு சித்தர்களும் வந்து சென்றுள்ளனர் என்பேன்.

இவையன்றி கூற எவ்வாறு என்பதையும் கூட மீண்டும் மீண்டும் இவந்தன் பிறப்பதற்கிணங்க ஆனாலும் பிறப்பெடுத்து இங்கேதான் அமர்ந்து கொண்டு இருக்கின்றான் இவந்தன்.

மென்மேலும் உயர்வுகள் பெற இவந்தனை வழிபட வழிபட எவ்வாறு என்பதையும் கூட பிரச்சனைகள் தானாக அகன்றுவிடும்.

அகன்று விடும் அதுமட்டுமில்லாமல் இங்கு வரும் பக்தர்களுக்கு நிச்சயமாக வேலை செய்யாது கிரகங்கள் என்பேன்.

என்பதை விட இன்னும் மேன்மையான பலன்கள் இவந்தன் கொடுப்பான் என்பேன்.

இவந்தனை வணங்க வணங்க எவ்வாறு என்பதையும் கூட வணங்க கூட தேவையில்லை இங்கு வந்து அமர்ந்தாலே மனதில் உள்ள குறைகள் இவந்தனுக்கு நல் முறையாக படம் போல் காட்டிவிடும் இதனால் அதனையுமன்றி மாயையை நீக்கி பின் மனதில் உள்ளவற்றை தெளிவாக தெரிந்த நல்விதமாகவே கொடுத்து அனுப்புவான் என்பதே உண்மை. தீராத உண்மை.

இவையன்றி கூற இன்னும் பல பல உண்மைகளை பார்த்தால் இங்குகூட ஒரு பிறப்பில் நல் விதமாக வரும் காலங்களில் கூட இன்னும் இவன் மீண்டு எழுந்து வருவான் என்பேன் பக்தர்களைக் காப்பான் என்பேன். அதி விரைவில்.

அதி விரைவில் அவை மட்டும் என்று எண்ணாமல் இங்கு பல மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட பல ரிஷிமார்கள் எவ்வாறு என்பதையும் கூட வந்து வந்து சென்று குருமார்களும் இவந்தன் ஆசிகள் பெற்றுவிட்டனர்.

ஓர் பகுதியை குறிப்பாக கூறுகின்றேன். கூறுகின்றேன் என்பதற்கிணங்க இவையன்றி கூற நல் விதமாக மாற்றுவதற்கான இங்கே பல ஆயிரம் பேர்கள் தவம் செய்தனர் ஞானியர்கள் ஆனால் அவர்கள் ஒரே வழியில் நல் விதமாக இவந்தனும் அங்கேயே ஜீவ சமாதி அடைந்து விட்டனர்.

அதனால் பல ஆயிரம் பேர் இங்கு சுற்றித் திரிகின்றனர் வலம் வலமாக.

இதனால் இங்கு வந்து சென்றால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிலைமைகள் மாறும்.

உணர்ந்து பின் சென்று தீய எண்ணங்களை அகற்றி பின் நல்லெண்ணங்கள் ஆக மாறும் என்பேன்.

என்பதே இத்தலத்தின் சிறப்பு என்பேன்.

இன்றும் பல வழிகளிலும் இன்னும் மோட்சமடைய காத்துக் கொண்டிருக்கின்றனர் வழிவழியாக.

இவ் நதியின் (இந்திரயானி நதி) வழியே பின்னாலே எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு இன்னும் சூட்சமங்கள் காணப்படுகின்றது.

காணப்படுகின்றது என்பேன்.

மறுவாக்கும் பின் இங்கேயே விரிவாக உரைக்கின்றேன்.

அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஸ்ரீ சாந்த் தியானேஸ்வர் மகாராஜ் பற்றிய விவரங்கள் மற்றும் ஆலய முகவரி

இறைவனின் பேரருளைப் பெற வயது தடையில்லை’ - வாழ்ந்து உணர்த்திய மகான் ஞானேஸ்வர்...

ஞானி, யோகி, பக்திக் கவிஞர்... 21 வயதில் ஸித்தியடைந்த ஞானேஸ்வர்!

ஞானதேவர் அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் ஒரு வர்க்காரி வைணவ கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1][2]பாண்டுங்ரக விட்டலரின் பக்தரான ஞானேஸ்வரர் 21 வயதில் சமாதி அடைந்தார். இவரதி சமாதிக் கோயில் மகாராட்டிரா மாநிலத்தின் புனே அருகில் உள்ள ஆளந்தி எனும் ஊரில் உள்ளது.

ஞானேஷ்வர்

பிறப்பு
1275 கி.பி
பைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்
சமாதி அடைந்தது
1296 கி.பி (21 வயதில்)
ஆளந்தி, புனே அருகில்

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் அம்சமாகக் கருதப்படும் ஞானேஸ்வர், மகாராஷ்டிரா மாநிலத்தில் தோன்றிய மிகப்பெரிய ஞானி, யோகி, பக்திக் கவிஞர். 13-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் பக்தியைப் பரப்பியவர். தன் சிறு வயதிலேயே வேதத்தையும் மற்ற புராணங்களையும் பாமர மக்கள் அனைவருக்கும் புரியும்படி உபதேசித்தவர் ஞானேஸ்வர். தம்முடைய ஜீவித காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...

இல்லற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடித்த பிறகு துறவறம் மேற்கொண்டவர்கள் ஏராளம். ஆனால், துறவறம் மேற்கொண்ட பிறகு இல்லற வாழ்க்கைக்குத் திரும்பியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஞானேஸ்வரரின் தந்தை விடோபா திருமணம் ஆன பிறகு காசிக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கு குரு ராமானந்தரின் உபதேசத்தால்,  தான் திருமணமானவன் என்பதையும் மறந்து துறவறம் மேற்கொண்டார்.  பிறகு ஒருமுறை, சுவாமி ராமானந்தர் விடோபாவுடன் யாத்திரை மேற்கொண்டு மகாராஷ்டிராவுக்கு வந்தார். அப்போது சுவாமி ராமானந்தரைச் சந்தித்த விடோபாவின் மனைவி ருக்மணி, தனது மனக்குறையைத் தெரிவித்தார். விடோபாவைக் கண்டித்த ராமானந்தர் மீண்டும் அவரை இல்லற வாழ்க்கையைத் தொடரப்  பணித்தார். இருவரின் இல்லற வாழ்க்கையின் பயனாக அவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தார்கள், இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வர். ஞானேஸ்வரரை திருமாலின் அம்சம் என்றே அனைவரும் கருதினார்கள். சிறு வயதிலேயே வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றைக் கற்று சிறந்து விளங்கினார் ஞானேஸ்வர். அதனை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும்படி எளிய முறையில் போதித்தும் வந்தார்.

விடோபா துறவறம் மேற்கொண்டு இல்லறத்துக்குத் திரும்பியதால், ஆசார்யப் பண்டிதர்கள் அனைவரும் அவரை ஒதுக்கிவைத்தார்கள். இதனால் மனம் உடைந்த விடோபா - ருக்மணி தம்பதி, தங்கள் குழந்தைகளும் தங்களைப்போல் பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊரைவிட்டுப் புனித யாத்திரை மேற்கொண்டனர். பெற்றோர் செய்த தவறு ஞானேஸ்வர் மற்றும் அவருடன் பிறந்தவர்களையும் விரட்டத் தொடங்கியது. அவர்களின் விரட்டல்தான், சிறு வயதிலேயே ஞானேஸ்வர் தமது ஞானத்தையும் அற்புதத்தையும் வெளிப்படுத்துவதற்குக் காரணமானது. அப்படித்தான், ஒருநாள் ஞானேஸ்வர் எளிய மக்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசார்யர்கள், ஞானேஸ்வரின் செயலைத் தடுத்து நிறுத்தினார்கள். ``முறையற்ற வாழ்க்கை வாழ்ந்த அந்தணன் பெற்ற குழந்தைகள் நீங்கள். வேதம் ஓதுவதற்கு உரிய தகுதி உங்களுக்கு இல்லை. அது எம்மைப் போன்று ஆசாரத்துடன் வாழும் பண்டிதர்களுக்கு மட்டுமே உண்டு’’ என்றார்கள்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எதிரே வந்த எருமையின் மேல் கைவைத்தார் சிறுவனான ஞானேஸ்வர்.  அப்போது எருமை வேதம் ஓதத் தொடங்கியது. `கர்ம வினைகளாலும், நடத்தையாலும்தான் ஒருவன் உயர்ந்தவனாகிறான்' என்று உணர்த்தும்படியான வேதப் பாடலை வரி பிசகாமல் பாடியது எருமை. எருமை பாடியதைக் கேட்டதும் ஆசார்யர்கள் மறு வார்த்தை பேசாமல் ஞானேஸ்வரின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். பிறகு ஞானேஸ்வர் தனது அண்ணனான நிவ்ருத்திநாத்தை குருவாக ஏற்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது 15-ம் வயதில் பாமரரும் புரிந்துகொள்ளும்படி பகவத் கீதையை மராட்டிய மொழியில் மொழிபெயர்த்து எளிய விளக்கத்துடன் பாடினார். அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய எழுச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

சித்தபுருஷர் சாங்கதேவர்தான் ஞானேஸ்வரின் ஞானத்தையும் திறமையையும் உலகறியச் செய்தவர். அந்த சித்தபுருஷர் தன் யோக சக்தியின் மீது அதீத கர்வம்கொண்டவர். ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அவர் வாழ்ந்துகொண்டிருந்தார் என்று மக்கள் நம்பினார்கள். தனது யோகத்தின் மூலம் அனைத்து உயிர்களையும் வசப்படுத்தும் வித்தையைக் கற்றுவைத்திருந்தவர். சிறுவனான ஞானேஸ்வரின் புகழைக் கேட்டு, சந்திப்பதற்காகச் சிறுத்தை ஒன்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டு பாம்பைத் தனது கழுத்தில் சுற்றியபடி சென்றார். `அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் நான்' என்பதை ஞானேஸ்வருக்கு உணர்த்தும்படி இருந்தது சாங்கதேவரின் செயல். சாங்கதேவரின் செயலைப் பார்த்து அனைவருமே மிரண்டு போனார்கள். ஆனால், அமைதியாகத் தனது பீடத்தின் மீது அமர்ந்திருந்த ஞானேஸ்வர், தனது கைகளை உயர்த்தினார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவர் அமர்ந்திருந்த பீடம் அப்படியே பின்னால் நகர்ந்து போனது. உயிருள்ள பொருள்களை மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த சாங்கதேவர், உயிரற்ற பொருளைக் கட்டுப்படுத்திய ஞானேஸ்வரின் யோகத் திறமையைக் கண்டார். பிறகு, சிறுத்தை மீதிருந்து கீழே இறங்கி, ஞானேஸ்வரின் திருவடிகளில் பணிந்து வணங்கியதுடன் கர்வமும் நீங்கப்பெற்றார்.

சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியவரும், மஹாராஷ்டிர மக்களிடையே பக்தி உணர்வைப் பரப்பியவருமான மகான் ஞானேஸ்வர், தமது 21-வயதில் ஜீவசமாதி அடைந்தார்.

ஞானேஸ்வரின் நினைவாக வருடா வருடம் ஜூலை மாதம் `சாந்த் ஞானேஸ்வர் மகாராஜா பால்கி யாத்திரை' மேற்கொள்ளப்படுகிறது. 700 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் யாத்திரை இது. `இறைவனின் பேரருளையும் ஞானத்தையும் அடைவதற்கு வயது என்றுமே ஒரு பொருட்டாக இருப்பதில்லை' என்பதை உணர்த்துவதற்காகவே அவதரித்தவர்தான் மகான் ஞானேஸ்வர். மகாராஷ்டிரா மண்ணில் தமது எளிய உபதேசம் மற்றும் தத்துவத்தினால் பக்திப் புரட்சி செய்த ஞானேஸ்வரை பக்தியுடன் நினைவுகூர்வோம்..!

ஆலய முகவரி

இந்திரயாணி நதிக்கரை ஓரத்தில் ஜீவசமாதி கோயில் அமைந்துள்ளது.

 ஸ்ரீ சாந்த் ஞானேஷ்வர் மகாராஜ்
 சாமாதி மந்திர்.
வர்ஜே ஜகட் நாக்கா.
பிரம்மசைதன்யா சொஸைட்டி.
ஆளந்தி.
புனே.
மகாராஷ்டிரா மாநிலம். 411052

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

8 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    குருவே சரணம் !
    குருவே சரணம் !
    குருவே சரணம்!

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    குருவே சரணம் !
    குருவே சரணம் !
    குருவே சரணம்!

    ReplyDelete
  3. Om Namahshivaya
    Om Namahshivaya
    Om Namahshivaya

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. Sant Gnaneshwar,a charismatic saint from Maharashtra has enlightened thousands of devotees through his exceptional literary work like "Gnaneshwari" in prakrut Marathi.Lakhs of devotees throng the samadhi place to offer obeisence.Few years before a team of International scientists visited for measuring energy of this place,found outstanding results.

    ReplyDelete
  6. குருவே சரணம். தக்க நேரத்தில் என் மனக்குறை தீர்ந்தது.

    ReplyDelete
  7. Translation:
    https://drive.google.com/file/d/19DMLPYvTpG0wZ_UppJdXthytsott4Ga4/view?usp=sharing

    ReplyDelete
  8. இன்று தயனேஸ்வரர் அருளால் அவருடைய தரிசனம் கிடைத்தது

    ReplyDelete