​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 6 March 2022

சித்தன் அருள் - 1093 - அன்புடன் அகத்தியர் - காசியில் அகத்தியர் வாக்கு!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த தொகுப்பில் முன்னர் இட்ட வாக்கு மாற்றப்பட்டு அகத்தியரின் வாக்காக மாற்றப்பட்டது. மறுபடியும் வாசித்து பார்க்கவும்!]
 
1/3/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த ஸ்தலம்  .காக்கும் சிவன் காசி.கங்கைகரை.
 
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகிறேன் அகத்தியன்.

நல் விதமாக எம்முடைய ஆசிகள் என்பேன்.

அப்பனே ஈசன் காசியில் இருந்தே இன்றைய தினம் (மகா சிவராத்திரி) தன் பயணத்தைத் தொடங்குவான் என்பேன்.

யானும் இன்றைய  பொழுதில்  இங்கே தங்கி பல ஆலயங்களுக்கு செல்வேன் என்பேன்.

அப்பனே காசியில் பல கர்மங்களை கழித்து விடலாம் என்பேன் .

காசி லோபமுத்ரையின் கோட்டை. அவளும் இங்கே சுற்றி திரிவாள் என்பேன். இங்கேயே பல பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்வாள் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்தில் அனைத்தும் பொய்யப்பா இறைவன் தான் மெய்யருள்.

அப்பனே மனிதன் மனிதனை கூட துன்பத்தில் ஆட்கொள்வான் இனிமேல்.

ஈசனும் உரைத்து விட்டான் இதனைப்பற்றி. என் வழியில் வந்தவர்களை நான் நிச்சயமாய் பல திருத்தலங்களுக்கு பல சூட்சுமங்களை எடுத்துரைப்பேன் என்பேன்.

என்பேன் என்பதற்கிணங்க இல்லையப்பா அதனால் என்னை நாடி வருபவர்களும் நான் நிச்சயமாய் புண்ணியத்தை சேர்க்க வைப்பேன் இனிமேலும்.

ஏனென்றால்  இக்காசி தன்னில் மறைமுகமாக பலகோடி சித்தர்களும் பலரிஷி மார்களும் பல ஞானியர்களும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது கூட இங்கே பின் கங்கை நீரில் நீராடிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

அதனால் அவர்கள் உங்களை பார்த்தாலே போதுமானது என்பேன். பல பாவங்கள் தொலைந்து விடும்.

அதனால் பல ஞானியர்களுக்கும் பல சித்தர்களுக்கும் பலகோடி குருமார்களுக்கும் பின் நாடி வருபவை ஈசனை காண்பவன் கோடி கோடி யுகங்களாக இவ்காசியில் தான்.
 
கர்மங்களை தீர்த்துக் கொள்வதற்கான சரியான வழி காசியே என்பேன்.

ஏனென்றால் இங்கு பல பல கோடி மனித ரூபத்தில் அலைந்து கொண்டிருக்கின்றனர் சித்தர்கள்.அவர்கள் பார்வையில் பட்டாலே போதுமானது என்பேன்.

இவையன்றி கூற தெரியாத அளவும் கூட பறந்து சென்று கொண்டிருக்கின்றனர்கள்  மனிதர்கள்.

எவ்வாறு என்பதையும் கூட இதனால் உணர்ந்து உணர்ந்து சொல்கின்றேன் இன்னும் பல ஆலயங்களுக்கு சென்று நல் முறையாக புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் வரும் காலங்களில் மனிதனுக்கு அழிவு தான் நிச்சயம் என்பதைக் கூடக் ஈசன் கூறிவிட்டான்.

அதனால் கங்கை தாயின் மடியிலிருந்து இருந்துகூட யான் சொல்லிகொண்டு இருக்கின்றேன்.

என்னுடைய நூல்களைப் படியுங்கள் போகனுடைய  நூல்களைப் படியுங்கள் மூலனின்(திருமூலர்) நூல்களைப் படியுங்கள் படியுங்கள் சிவபுராணத்தையும்.

இவ்வாறு ஓதி வந்தால் அவை மட்டுமில்லாமல் ஞானவெட்டியான் (திருவள்ளுவர்) எழுதிய திருக்குறளையும் நல் விதமாகவே படித்து வாருங்கள்.

உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.
தெரியும் என்பதை உணர்ந்து இவ்வாறு நடந்து கொண்டிருந்தாலே போதுமானது என்பேன்.

ஆனாலும் இவைதனிலும் ஞானவெட்டியான் எழுதிய திருக்குறளிலும் கூட சில வரிகளை உள் நுழைத்து விட்டார்கள் மனிதர்கள்.

சில அதிகாரங்களிலும் பொய்யாக பதித்து விட்டனர். எவ்வாறு என்பதையும் கூட.

இன்னும் ஞானியர்கள் பிறப்பார்கள் நலமாக வாழ்ந்து வந்து எங்கெங்கு?? செல்ல வேண்டும் எவ்வகையான வழிகளை தேடிக் கொள்ள வேண்டும் என்பதையும் கூட சொல்கின்றேன் வரும் காலங்களில்.

அவைதனை தொடர்ந்து சொன்னாலே போதுமானது அடுத்தபடியாக இவை என்றும் அண்ணாமலையில் தன் கர்மத்தை போக்கிக் கொள்ளும் தகுதிகள் உள்ளது என்பேன்.

இதனால் நல் முன்னேற்றம் காண அண்ணாமலையில் சிவராத்திரி அன்று கூட ஈசனே வலம் வருவான் என்பது மெய்யே.

இதனால் பல கர்மங்களை தொலைத்து கொள்ளலாம் அவை மட்டும் இல்லாமல் பிரதோஷ காலத்திலும் வரும் வரும் நேரங்களில் கூட சித்தர்கள் யாங்கள் கிரிவலம் செல்வோம் அப்பொழுது கூட தெரிந்துகொள்ளலாம்.

ஆனாலும் இவை விட்டுவிட்டு மனிதன் உருவாக்கியது பௌர்ணமி அமாவாசை திதிகளில்.

யாங்கள் ஆனாலும் யாங்கள் ஏற்பதில்லை ஆனாலும் சுற்றி பாருங்கள் பௌர்ணமி அமாவாசை திதிகளில் சுற்றிப் பார்த்தால் மிச்சம் எவ்வாறு என்பதை கூட கஷ்டமே மிஞ்சும்.

மனிதனே மனித நேயத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் முற்பட்டவையாக இருந்தாலும் யாங்கள் நிச்சயமாய் அழியும் காலங்களில் மனிதனை நல்வழிப்படுத்துவோம்.

நல் வழிக்குத்தான் எடுத்துச் செல்வோம் என்பதைக்கூட சொல்லி விடுகின்றேன்.

என் மக்களே யாரும் கவலைப்பட தேவை இல்லை என்பேன்.

அகத்தியன் இருக்கின்றான்!!! அகத்தியன் இருக்கின்றான்!!! என்பதை சொல்லிக் கொண்டே இருங்கள்.

பின் தீபங்கள் ஏற்றினாலும் உண்மை இல்லை பல புண்ணியங்கள் செய்தாலும் உண்மை இல்லையப்பா.

ஏனென்றால் இறையருள் தான் காக்கும் அவ் இறையருளை எப்படிப் பெறுவது என்பதை கூட வாக்குகளாக சொல்கின்றேன்.

அவ் இறையருளை முதலில் பெறுங்கள் அப் பின் புண்ணியங்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை சொல்கின்றேன்.

புண்ணியங்கள் செய்திருந்தாலும் இறையருளை பெற வில்லையென்றால் அப்பனே வீணப்பா.  அனைத்தும் வீணப்பா.

அதனால் முதலில் இறையருளை பெறவேண்டும் என்பதை ஒவ்வொரு வாக்காக கூறுகின்றேன்.

பின்பு புண்ணியங்கள் எப்படி செய்யலாம் என்பதையும் தெரிவிக்கின்றேன் அப்பனே.

என்னுடைய ஆன்மா நல் முறையாகவே இன்னும் பல சித்தர்கள் வந்து வாக்குரைப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.....

குருநாதர் அகத்தியபெருமான் சில தனிப்பட்ட வாக்குகளையும் பொதுவான வாக்குகளையும் பல திருத்தலங்களிலும் புண்ணிய தலங்களிலும் அடியவர்களின் கேள்விகளுக்கு பதில் வாக்கு தந்து கொண்டே இருக்கின்றார்.

மடியில் இருக்கும் மழலையின் தலையை வருடிக் கொடுப்பது போல குருநாதர் அன்போடு ஒவ்வொரு கேள்விக்கான விளக்கத்தையும் பொறுமையாக எடுத்துரைத்து நல் முறையாக விளங்கச் செய்வார்.

ஆனால் அவரைப் பற்றிய கேள்விகளுக்கு முழுமையாக பிடிகொடுக்காமல் நேரம் வரும்பொழுது உரைக்கின்றேன் என்று உரைத்து விடுவார்.

ஆனாலும் அகத்திய அடியவர்கள் விடாது குருநாதரிடம்  ஒவ்வொரு முறையும் அவரைப் பற்றி கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

குருநாதரும் இதனைப்பற்றி வருங்காலங்களில் நிச்சயமாக யான் உரைக்கிறேன் என்று கூறிவிட்டார்.

அகத்திய அடியவர்கள் குருநாதரை பற்றியும் உலோபமுத்திரையை அம்மையை பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ள சில கேள்விகளை கேட்டனர்

இந்தக் கேள்விகள் கடந்த திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தன்று தொடங்கி இந்த சிவராத்திரி தினமன்று காசியில் முழுமையாக  விடையும் கிடைத்தது அதன் தொகுப்பை பற்றி பார்ப்போம்.

குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு நமஸ்காரங்கள்

குருவே உங்களுடைய லோபமுத்ரா அம்மையின் ரூபங்கள் எப்படி இருக்கும் ஏனென்றால் நாங்கள் அகத்தியர் லோபமுத்திரை உருவங்கள் என்று அறியப்படுவது நீண்ட ஜடா முடியும் பெரும் வயிறும் குள்ள உருவமும் இப்படித்தான் அகத்தியர் இருப்பார் என்று சிலைகளும் சரி ஓவியங்களும் சரி இப்படியே இருக்கின்றன அன்னை லோபமுத்ரா தேவி எப்படி இருப்பார்கள் அவர்களுடைய உண்மையான ரூபம் எப்படி இருக்கும்?? தயவுசெய்து குருநாதர் எங்களுக்கு உரைக்க கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்

 அப்படி இவையன்றி கூற இதனை என்று கூற ஓர் இளவரசி என்பேன். எவ்வாறு என்பதை  கூட தன் மனைவி இவ்வாறு என்பதைக்கூட ஓர் இளவரசி எப்படி இருப்பாள் என்று யூகித்துக் கொள்க.

குருவே மிக்க மகிழ்ச்சி அன்னை லோப முத்திரை ஒரு இளவரசி என்று கூறிவிட்டீர்கள் அவர்களுடைய உண்மையான ஓவியம் அவர் உருவத்தை ஒத்த சிலை இங்கு எங்காவது உள்ளதா அதை நாங்கள் தரிசிக்க விரும்புகின்றோம்.

அப்பனே இவையன்றி கூற காசியிலே இருக்கின்றது என்பேன்

ஆனாலும் இவை தன் நல் முறைகளாக பின்பு யானே அழைத்துச் செல்கின்றேன் அவ்விடத்திற்கு.

மிக்க மகிழ்ச்சி குருவே அன்னை லோபமுத்திரை தேவியைப் பற்றி குறிப்பிட்டீர்கள் உங்களுடைய உண்மையான ரூபமும் எங்கு உள்ளது அதை பற்றியும் கூறுங்கள் தரிசிக்க விரும்புகின்றோம்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இதுவும் யாருக்கும் தெரியாது என்பேன்.

யானும் இளவரசன் அப்பனே அப்பொழுது யூகித்துக் கொள்ளுங்கள். நீங்கள்.

அழகானவனே யானும் கூட.

குருவே மிக்க மகிழ்ச்சி ஆனால் இங்கு நாங்கள் அகத்தியர் என்று காணும் எதுவும் முரணாக உள்ளது

அப்பனே சித்தர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனிதர்கள் கொண்டனர் பொய்யான மனிதர்கள்.

அப்பனே எவ்வாறு என்பதை கூட யானும் ஓர் பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்பேன்.

அப்பனே நல் விதமாக பழைய புத்தகங்களையும் யான் படித்தேன் என்பேன்.
தன் மனைவி லோபமுத்ராவும் படிப்பில் சிறந்தவள் என்பேன்.

அப்பொழுது பாருங்கள் அப்பனே இவ்வாறு என்பதை கூட எந்தனக்கும் அருள்கள் அப்பனே இவையன்றி கூற அப்பனே நல்ல விதமாகவே மனிதர்களின் செய்கைகளால் அனைத்தும் மாறி விட்டது.
இவ்வுலகில்.

அப்பனே யான் எங்கெங்கு சென்றேன் என்றெல்லாம் வருங்காலத்தில் உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பனே எவ்வாறு என்பதைக்கூட யானும் விரும்பினேன் லோபமுத்ராவை. விரும்பித்தான் மணம் செய்தேன். அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள்.

குருவே மிக்க சந்தோஷங்கள் நீங்கள் பயன்படுத்திய உங்கள் கைகளால் ஸ்பரிசம் அடைந்த பொருள்களை நாங்கள் தரிசனம் செய்ய இயலுமா??

அப்பனே இருக்கின்றது என்பேன் காண்பிக்கின்றேன். செண்பகா தேவி(குற்றாலமலை) அருவியிடம் இருக்கின்றது அதையும் பொறுத்திருந்தால் காண்பிப்பேன் யான்.

இந்த பதில்கள் அனைத்தும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா அன்று குருநாதர் உரைத்திருந்தார்.

அதன் பிறகு அகத்தியர் அடியவர்களுக்கு அன்னை லோபமுத்ரா தேவியின் உண்மையான உருவம் காசியில் எங்கு இருக்கின்றது என்று அன்னை லோபமுத்ரையின் உண்மை ரூபத்தை காண பெரு ஆவல் மிகுதியால் கேள்விகள்  தொடங்கி குருநாதர் அகத்தியரிடம் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்...

குருநாதர் அகத்தியரும் நிச்சயமாக யான் உங்களுக்கு காண்பிக்கின்றேன் அதற்கான நேரமும் காலமும் வரட்டும் என்று உரைத்து இருந்தார்.

சிவராத்திரி நெருங்கி வரும் முன்பு திரு ஜானகிராமன் அய்யாவிற்கு ஜீவநாடியில் சில உத்தரவுகள் கொடுத்தார்  காசி செல்ல வேண்டும் என்று உத்தரவு வந்தது.
 
இதனிடையே மீண்டும் குருநாதரிடம் கேள்வி எழுப்பப்பட்டது குருவே இம்முறை காசி யாத்திரையில் அன்னை லோபமுத்திரை தாயார் எப்படி இருப்பார்கள் என்ற உண்மை ரூபத்தை நீங்கள் காசியில் உள்ளது என்று கூறியிருந்தீர்கள் அதனால் இந்த முறை எங்களுக்கு தரிசனம் வேண்டும் என்று முறையிட்டு கேள்விகளை எழுப்பினர்

நிச்சயம் எவ்வாறு என்பதைக்கூட யான் சொல்வேன் என்பேன் அப்பனே பொறுத்திருக இவை என்று கூற விக்டோரியா எனும் பேரழகியை எவை என்று எதனை என்று நிரூபிக்க விக்டோரியா ராணியின் அவ்வாறுதான் லோபமுத்திரையும் கூட.

குருவே நாங்கள் நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டும் உங்களுடைய அனுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்

நிச்சயம் உண்டு என்பதையும் கூட எவ்வாறு என்பதை கூட எவை என்று கூற இவை என்று கூறும் அளவிற்கு கூட அவ்வாறே இருப்பாள் என்பேன் லோபமுத்ராவும்.  

குருவே காசியில் என்று உரைத்து விட்டீர்கள் ஆனால் காசியில் எந்த?? இடத்தில் உள்ளது அன்னை லோபமுத்திரையின் திரு உருவம்

அப்பனே எவை என்று கூற உங்களுக்கு நிச்சயமாய் தெரிய வைப்பேன் என்பேன் அப்பனே போகும் வழியிலே சொல்கின்றேன் பொறுத்திருக அப்பனே.

காசியில் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் தரிசனம் செய்துவிட்டு கங்கைக்கரையில் குருநாதரிடம் கேள்விகளை கேட்டபொழுது

குருவே அன்னை லோபமுத்ரா தேவியோடு உங்களைப் பற்றியும் உங்கள் உண்மை உருவத்தை பற்றியும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்

அப்பனே இவையன்றி கூற யான் சொல்லிவிட்டேன் அப்பனே லோபமுத்ரா தேவியோடு இவைதன்  ஆனாலும் என்னை பற்றியும் கூறுகின்றேன் அப்பனே. மீண்டும் மீண்டும் வாருங்கள் யான் சொல்கின்றேன்.

அகத்தியர் அடியவர்களும் குருநாதரை விடவில்லை விடாபிடியாக மன்னிக்க வேண்டும் குருவே உங்களைப் பற்றி நாங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

அப்பனே இவையன்றி கூற அப்பனே எதனை என்று எதற்காக நீங்கள் சென்று கொண்டே இருங்கள் ஒரு அழகானவன் தோன்றுவான் அது யான்தான் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற அப்பனே இதையன்றி கூற யான் சொல்லிவிட்டேன் அப்பனே ஒவ்வொன்றாக முதலில் தாய் பற்றி கூறி விட்டேன் ஆனாலும் அப்பனே அவை என்று கூற உங்களால் அதைப்போன்று வரையுமாறு யானே கூறுகின்றேன் வரைந்து பின் கூறுங்கள் பின் என்னைப்பற்றி கூறுகின்றேன்.

குருவின் சித்தம் எங்கள் சித்தம் என்று அன்னை லோபமுத்திரை தேவியின் தரிசனம் காண விரும்புகிறோம் அருள் புரிய வேண்டும்

அப்பனே இவை என்று கூற பின் அறியாது சிலருக்கு மேற்கை நோக்கி சரியாக பின் சமமான வழிகள் கூறுவதற்கு இணங்க இதனையே மேற்கோள் காட்டி காட்டினால் உண்டு உண்டு என்பதற்கிணங்க இப்பொழுதும் கூட அப்பனே இருக்கின்றது அங்கே இருக்கின்றது அப்பனே நீங்கள் கண்டுபிடிக்க நன்று என்பேன்.

குருவே எங்கள் அறிவிற்கு எட்டவில்லை நீங்களே கூறி விடுங்கள்

இவை எதனையும் என்று அறிவதற்கு அறிவதற்குள் அப்பனே சொல்லி விடுகின்றேன்

""காசி விசாலாட்சி"""

காசி விசாலாட்சியின் ரூபமே லோபமுத்ரையின் ரூபம். இவையன்றி என்று கூற அப்பனே முதலில் யான் கூறியவற்றை கண்டு வாருங்கள் பின் என்னை பற்றி யான் உரைக்கின்றேன்.
 
அப்பனே யானும் இளமைதானப்பா!!! அழகானவனப்பா!!!

குருவே !! நீங்கள் செல்லும் வழியில்  எதிரில் அழகாக ஒருவன் தென்படுவான் அதன் யான் தானப்பா என்று கூறியிருந்தீர்கள்  இந்தகாசி நகரத்தில் எந்த இடத்தில் நீங்கள் அதுபோன்று வருவீர்கள்??

அப்பனே எதற்கு வரச்சொன்னேன் என்றால் அப்பனே அப்பனே இவையன்றி கூற இது எவை என்று ஈசனின் கோட்டை அதுமட்டுமில்லாமல் என் லோபமுத்ரா வின்  கோட்டைதான் அதனால் இங்கேயேதான் யான் காட்சி அளிப்பேன் என்பேன்.
 
அப்பனே இவையன்றி கூற இன்றைய பொழுதில் அப்பனே விசாலாட்சி க்கு அப்பனே சக்திகள் அதிகம் என்பேன் அதுமட்டுமில்லாமல் அமாவாசை திதி ஆகவும் என்று உள்ளது என் பேர் அதனால் அப்பனே இன்றே சென்று தரிசனம் செய்யுங்கள் என்பேன் அவள்தனை பாருங்கள்  என்பேன் அப்பனே. சக்தி பீடங்களுக்கு அமாவாசை திதிகளில் சக்திகள் அதிகம் என்பேன் நினைத்தது எளிதில் நிறைவேறும் என்பேன் அப்பனே.

முதலில் அன்னையை தரிசனம் செய்யுங்கள் என்னைப்பற்றி வரும் காலங்களில் விரிவாக உரைக்கின்றேன் எந்தனுக்கு எப்பொழுது மனது வருகின்றதோ அப்பொழுது யான் உரைக்கின்றேன் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் பொறுத்திருக.

தாயின் தரிசனத்தை சுட்டிக்காட்டிய குருநாதருக்கு நன்றி செலுத்திவிட்டு கூடிய விரைவில் குருநாதரை பற்றியும் உண்மையான ரூபத்தை பற்றியும் விரைவில் நமக்கு எடுத்துரைக்க குரு அருள் புரிய வேண்டுமென்று நாம் மனதார பிரார்த்தனை செய்வோம்.

குருவே புண்ணிய ஷேத்திரங்கள் மிகுதியாக அனைத்தும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது நாங்கள் தியானம் செய்வது இது போன்ற தலங்களில் எப்படி செய்வது உதாரணத்திற்கு திருவண்ணாமலை ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது நாங்கள் மேற்கை நோக்கி மலையை நோக்கி தியானம் செய்யலாமா அல்லது கிழக்கு நோக்கி செய்ய வேண்டுமா

அப்பனே இவையெல்லாம் யார் சொன்னது எந்த திசையில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் பக்தியே இதில் முக்கியம் என்பேன் அப்பனே.
குருவே தியானம் செய்யும் பொழுது எதைநோக்கி தியானம் செய்வது இறைவன் புகைப்படங்கள் அல்லது கண்மூடி செய்யலாமா??

அப்பனே இவை என்று கூற அப்பனே நல் விதமாக தீபம் ஏற்றி அவ் தீபத்தின்  ஜோதியை பார்த்து நல் விதமாக மனதிலே நிறுத்தினாலே போதுமானது இறைவன் சுலபமாகவே கண்ணுக்கு தென்படுவான் என்பேன் அதனால் பின் அவ் ஒளியை பாருங்கள் போதுமானது என்பேன்.

அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் ஆசிகள் என்பேன் மீண்டும் வந்து வாக்குகள் உரைகின்றேன்

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்ததைப்போல அடியவர்கள் அனைவரும் காசி விசாலாட்சி தேவியை தரிசனம் செய்ய சென்று பார்த்தால்.... அம்மாளின் திருவுருவம் வெள்ளி கவசத்தில் தரிசனம் விசாலாட்சி  அம்மையின் முகத்தில் விக்டோரியா ராணியின் முகச்சாயல் இருந்தது.. குருநாதர் அன்னை லோபமுத்ரா இப்படிதான் இருப்பார் என்று உரைத்ததை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டு குருநாதரின் உத்தரவு படி ஓவியமாக வரைய முயற்சிக்கள் அடியவர்கள் எடுத்து வருகின்றனர் .

மீண்டும் நாம் அனைவரும் சேர்ந்து நல்முறையாய் குருநாதரிடம் பிராத்தனைகள் செய்து வேண்டுதல் வைப்போம்... கூடிய விரைவில் குருநாதரின் உண்மை ரூபத்தை காட்டி தர வேண்டும் என்று நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம்...இந்த உலகத்தில் நம் அம்மையும் அப்பனும் ஆன அகத்தியர் லோபமுத்ரா தேவியின் உண்மையான உருவத்தை நாமும் தரிசனம் செய்து உலகிற்கும்  வெளிப்படுத்துவோம்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

22 comments:


  1. Namashivaya
    Namashivaya
    Namashivaya in

    ReplyDelete

  2. Namashivaya
    Namashivaya
    Namashivaya

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் சிவாய நமஹ

    ReplyDelete
  5. ஈசன் சித்தம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அருமை ஐயா... நற்பவி! நற்பவி! நற்பவி!

    ReplyDelete
  8. En Thayin Anbu Alavatra Anbu , prabanja Alavirkku Uyarnthu nirkiradhu, En thayin porattam pillaigalukkaga...Kannil neer vazhigiradhu. En thayin anbu Nallavan kettavan parpathe illai. Annaiyin anbinal mattume manudam vellum.- Sri Renuka Devi Thaye thiruvadigal potri potri potri -Ravi

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ஓம் சிவாய நமஹ

    ReplyDelete
  11. அகத்தீசாய நம🙏🙇‍♂️ நன்றி அய்யா

    ReplyDelete
  12. NEED TO RESUME ENGLISH GNANABOOMI,ITS NOT WORKING.HOW CAN ONE FETCH OLD ARTICLE?

    ReplyDelete
  13. குழப்பம் ஏற்பட்டுள்ளது . Article 963 ஒருதடவை படிக்க வேண்டும் அனைவரும். அதில் ஒரு ஓவியர் ஒரு வருடம் அகத்தியர் வழிகாட்டுதல் படி வரையப்பட்ட ஓவியம் போட்டு இருந்தீர்கள்.எது உண்மை ? எது பொய் ? ஏன் எங்களை குழப்ப வேண்டும் குருநாதரே. பின் ஏன் 963 article போட்டீர்கள்.... பதில் தேவை .ஒரு வருடம் அகத்தியர் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி வரைந்த ஓவியம் எப்படி பொய் ஆகும்? ஏன் இந்த குழப்பம்? பதில் தேவை.. பத்மநாபன் கோவிலில் அகத்தியர் உருவம் பொய்யா? விளக்கம் தேவை

    ReplyDelete
    Replies
    1. எங்கலுக்கும் குழப்பம் ஐயா.. Please clarify

      Delete
  14. முன்னர் இட்ட வாக்குகள் இப்போது உள்ள வாக்குகள் இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை. .

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் குழப்பம் ஐயா

      Delete
  15. அத் தொகுப்பில் "சரி! இங்கு ஏதோ ஒரு உண்மையை அவர் மறைக்கிறார். அது என்னவென்று கூறுங்களேன்!" போடபட்டுள்ளது. இதுவாகத்தான் இருக்குமோ

    ReplyDelete
  16. அத் தொகுப்பில் "சரி! இங்கு ஏதோ ஒரு உண்மையை அவர் மறைக்கிறார். அது என்னவென்று கூறுங்களேன்!" போடபட்டுள்ளது. இதுவாகத்தான் இருக்குமோ

    ReplyDelete
  17. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏 அய்யன் தான் இப்பதிவகளை நமக்கு தந்துள்ளார்....there is a reason behind everything. Like he says everytime அதை புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா,..so ask him and wait u will get answer from someone somewhere...

    ReplyDelete
    Replies
    1. ஆரம்ப காலத்தில் அகத்தியர் ராஜா மாதிரி கோலத்தில் இருந்தவர். லோபமுத்ரா தாயாரை மணந்து கும்பமுனி உருவம் எடுத்து நாம் தற்போது பார்க்கும் உருவத்தில் தான் இருக்கின்றார். அகத்தியர் பற்றிய தகவல் உண்மை.

      Delete
  18. Translation:
    https://drive.google.com/file/d/1JNIOb9xWYijhsoAea52sqJ3ztkshJ8VT/view?usp=sharing

    ReplyDelete