அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இப்பொழுது எதை யாங்கள் கூறவருகிறோம் என்றால், "சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும், வாழ்வு நன்றாக இருக்கும். இறைவனருளால் என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக இல்லையே" என்று இங்கு வந்துபோகின்ற மனிதர்கள் எண்ணுவது எதைக் குறிக்கிறது? என்றால், அறியாமையைக் குறிக்கிறது. ஏனென்றால் லோகாய வாழ்விலே ஒருவனுக்கு எத்தனை செல்வத்தைத் தந்தாலும், எத்தனை மாளிகைகளைத் தந்தாலும், எத்தனை கோடி, கோடியாக தனத்தைத் தந்தாலும், அவன் விரும்புகின்ற எந்த விஷயத்தைத் தந்தாலும், அது பதவியோ, அவன் ஆசைப்படுகின்ற பெண்களோ அல்லது நிறைய தங்கமோ எதைத் தந்தாலும்கூட ஒரு மனிதனால் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ இயலாது. தொடர்ந்து ஒருவன் செய்கின்ற பக்தியும், தொண்டும், தான் நேர்மையான வழியில் சேர்த்த செல்வத்தை, பிறருக்கு பயன்படுமாறு அள்ளி, அள்ளி, அள்ளி, அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் ஒருவனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல, சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்துகொண்டேயிருப்பதே சுகம். இழக்க, இழக்கத்தான் மனிதன் பெறுகிறான் என்பதை மனிதன் மறந்துவிடக்கூடாது. எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ, நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் கொடுக்கிறானோ, தன்னையே எப்பொழுது இழக்கிறானோ, அப்பொழுதுதான் அவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். அதை விட்டு "எனக்கு இந்த செல்வம் வேண்டும், எனக்கு இந்தவகையான வசதியான வாழ்வு வேண்டும்" என்று இறைவனை நோக்கி வேண்டுவதால் பயனொன்றுமில்லை. ஒருவேளை, இவையெல்லாம் இறைவன் தரலாம். ஆனால் ஒரு மனிதன் கேட்கின்ற லௌகீக விஷயங்களால், லௌகீக வசதிகளால் சில காலமோ அல்லது சில நாழிகையோ வேண்டுமானால் அவன் சுகமாக, நிம்மதியாக இருக்கலாம் அல்லது அப்படி இருப்பதுபோல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படலாம். நிரந்தர நிம்மதியும், நிரந்தர சந்தோஷமும், பற்றற்ற தன்மையும், யோகாசனத்தால் தன் தேகத்தை வஜ்ரமாக ஆக்கி வைத்துக் கொள்வதிலும், சுவாசப் பயிற்சியை தடையற்று செய்து சுவாசத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்வதும், பிறகு தன்னிடம் இருப்பவற்றையெல்லாம் தேவையான மனிதர்களுக்கு தேவையான பொழுது, அவன் வாயைத் திறந்து கேட்கும் முன்னே, குறிப்பறிந்து தருவதும், அப்படி தந்துவிட்ட பிறகு, எவன் பெற்றானோ அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொள்ளாமல், அஃதாவது ஒருவனுக்கு ஒரு உதவியை செய்யவேண்டியது. பிறகு, நான் உனக்கு இந்த உதவியை செய்திருக்கிறேன், செய்திருக்கிறேன் என்பதுபோல் அவனுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பது, இதுபோன்ற உதவியை செய்வதற்கு ஒரு மனிதன் செய்யாமலேயே இருக்கலாம். எனவே உதவியை செய்துவிட்டு பிரதிபலன் எதிர்பார்ப்பதுகூட அந்த உதவிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தியதுபோல் ஆகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் வழங்கிக்கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும், ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்றுமட்டும்தான் இறைவன் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.
திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteஇன்று ரைட்மந்த்ரா தளத்தை வாசிக்கும் பொழுது இந்த தகவல் பார்த்தேன். நம் தள வாசகர்களுக்கு பயன் பெறலாம் என்று தங்களுக்கு அனுப்புகிறேன். தங்கள் ஈமெயில் முகவரி தெரியாத காரணத்தினால் இங்கயே கமெண்ட் செய்கிறேன்.
----------------------------
அகத்தியர் லோபாமுத்ரா, கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும் சித்தர் ஹோமம் அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன்(23-03-2017) அன்று நடைபெற உள்ளது.
http://rightmantra.com/?p=29604 அதில் அழைப்பிதழும் உண்டு. அந்த அழைப்பிதழை தாங்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்துக்கொள்ளலாம்.
---------------------------
காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.
குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefGGOn8uPEg_3I3tQ8FP7aM4mQ2QSLpMpMY4YvhTeaOFQKGQ/viewform?embedded=true
கோவில் முகவரி : பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில், காலா ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-90.
அறுபடை வீடு முருகன் கோவில் பற்றி அறிய http://rightmantra.com/?p=26840
மிக்க நன்றி அய்யா
இரா.சாமிராஜன்
Alive or not doesn't matter! Still Sundarji guiding us! Let's pray the Guru for his soul to rest in peace http://rightmantra.com/?p=29604
Deleteஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete