அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
யாம் பலமுறை கூறியிருக்கிறோம், நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும், எமக்கும், சேய்கள்தான். ஆனாலும்கூட இறைவனுக்கும், மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும், மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று, தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம், அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும்கூட, தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமா பாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும், தன்முனைப்பும், தீவிர பாசமும், ஆசையும், பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனைகாலம் இருந்தாலும், இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.
திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteவீட்டில் வழிபட குரு அகத்தியர் திருஉருவ படம் வேண்டும். தயவு செய்து பதிவிறக்க லிங்க் தாருங்கள்.
மிக்க நன்றி,
இரா.சாமிராஜன்
வணக்கம் திரு சாமிராஜன் அவர்களே. தங்கள் ஈமெயில் தொடர்பை agnilingamarunachalam@gmail.com க்கு அனுப்பிவைக்கவும். என்னிடம் உள்ள நான் உபயோகிக்கிற படத்தை அனுப்பி வைக்கிறேன்.
Deleteதிரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
Deleteகுரு அகத்தியர் திருஉருவ படம் கிடைக்கப்பெற்று, ஆசிர்வதிக்கப்பெற்றேன்.
தங்கள் சேவை மெ(மே)ன்மேலும் சிறக்க குரு அகத்தியர் அருள் தர வேண்டுகிறேன்.
மிக்க நன்றி
இரா.சாமிராஜன்.
Please follow this link
ReplyDeletehttps://drive.google.com/open?id=0B10OjrXcMx0iV3o2WkREel9EcFU
திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
Deleteஎன் ஈமெயில்-க்கு மட்டும் அனுப்பி இருந்தால், எனக்கு அல்லது என் நட்பு/உறவினர்கள் வட்டத்துக்கு மட்டும் தான் உபயோகமாக இருந்திருக்கும். சித்தன் அருளை வாசிக்கும் அனைவருக்கும் பயன் பெற கூகிள் டிரைவ்-ல் பதிவேற்றியதற்கு நன்றி.
குரு அகத்தியரை வழிபட்டு, அவருடைய வழிகாட்டுதல் படி நடந்து, எல்லாரும் எல்லையில்லா சுகத்தைப்பெற்று வாழ அவர் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.
மிக்க நன்றி
இரா.சாமிராஜன்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete