​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 22 March 2017

சித்தன் அருள் - 620 - ஒரு தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.சாமிராஜன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த ஒரு தகவலை, கீழே, உங்கள் பார்வைக்காக தருகிறேன், விருப்பம் உள்ளவர்கள் சென்று கலந்து கொள்ளலாம்.

தகவல்:-

இன்று ரைட்மந்த்ரா தளத்தை வாசிக்கும் பொழுது இந்த தகவல் பார்த்தேன். நம் தள வாசகர்களுக்கு பயன் பெறலாம் என்று தங்களுக்கு அனுப்புகிறேன். 

அகத்தியர் லோபாமுத்ரா, கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும் சித்தர் ஹோமம் அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன்(23-03-2017) அன்று நடைபெற உள்ளது. 

http://rightmantra.com/?p=29604 அதில் அழைப்பிதழும் உண்டு. அந்த அழைப்பிதழை தாங்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.

காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.

குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefGGOn8uPEg_3I3tQ8FP7aM4mQ2QSLpMpMY4YvhTeaOFQKGQ/viewform?embedded=true

கோவில் முகவரி : பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில், காலா ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-90.

அறுபடை வீடு முருகன் கோவில் பற்றி அறிய http://rightmantra.com/?p=26840

மிக்க நன்றி அய்யா 
இரா.சாமிராஜன்

6 comments:

 1. திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  பெருவாரியான மக்களுக்கு சென்றடைய தனி பதிவாக பதித்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
  எல்லோரும், எல்லா சுகங்களை பெற்று வாழ குரு அகத்தியரின் பாத கமலங்களில் பணிவோமாக.

  மிக்க நன்றி அய்யா,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete

 2. திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  சென்ற ஆண்டு பொங்கலுக்கு "அகத்தியப் பெருமானின் ப்ராஜெக்ட்" பற்றிய பதிவு (https://siththanarul.blogspot.kr/2016/01/268.html) போட்டு இருந்தீங்க. அந்த ப்ராஜெக்ட் இன்னும் நடை முறையில் உள்ளதா? வேறு மாவட்டத்தில் ஆரம்பிக்க குரு அகத்தியர் அனுமதி தந்தாரா? அல்லது வேறு மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளதா? அந்த மந்திரம் அடங்கிய DVD அல்லது பதிவிறக்க லிங்க் மற்றும் இந்த செய்தி குறித்து மேலும் தகவல்கள் இருந்தால் தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளகிறேன்.

  மிக்க நன்றி அய்யா
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
  Replies
  1. Vanakkam Samirajan Avl,

   That project has come to an end and no further instructions/order has come. As and when some instruction come, we hope to notify it through this blog.

   Delete
  2. அடுத்த உத்தரவுக்காக காத்திருப்போம்.

   மிக்க நன்றி அய்யா,
   இரா.சாமிராஜன்

   Delete
 3. மிகவும் நல்ல செய்தி எனக்கும் பங்குபெற ஆசிய இருக்கிறது ஆனால் சுழல் இடம் தரவில்லை . ஓம் அகதீசியாய நமஹா !

  ReplyDelete
 4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete