​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 6 March 2017

சித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

யாம் கூறுகின்ற நங்கையை, மணக்கவேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும், என்றும் எண்ணலாம். ஆனாலும்கூட விதியில் எது இடம்பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்மவினைகள், எத்தனையோ சிக்கலான கர்மவினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும்கூட, மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படித்தான் என்றாலும், களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறுவிதமான திருமணங்கள் பொய்த்து போவதும், பல்வேறு திருமணங்கள் புறத்தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம்.

2 comments:

  1. ஐயா வணக்கம். .
    திரு.ஹனுமத்தாசன் ஐயாவின் நாடி சொல்லும் கதைகள் போன்று திரு. கணேசன் ஐயா அவர்களிடம் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் இருந்தால் பதிவிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete